Connect with us

சினிமா செய்திகள்

ஐஷ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா இருவரும் மருத்துவமனையில் அனுமதி!

Published

on

நடிகை ஐஷ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா பச்சன் இருவரும் நேற்று இருவரும் மும்பையில் உள்ள நானன்வதி மருத்துவமனையில் நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஜூலை 11-ம் தேதி நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அமிதாப் பச்சனை தொடர்ந்து அவரது மகன் அபேஷேக் பச்சன், மருமகள் ஐஷ்வர்யா ராய் பச்சன், பேத்தி ஆராத்யா உள்ளிட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அமிதாப் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஐஷ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா இருவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு ஐஷ்வர்யா ராய் உடல் நிலை சீராக இல்லை, எனவே மும்பையில் உள்ள நானன்வதி மருத்துவமனையில் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டார் என்று பிடிஐ தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஐஷ்வர்யா ராய் உடன் அவரது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு இருந்த மகள் ஆராத்யாவுக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

சினிமா செய்திகள்

சூரரைப்போற்று படம் அக்டோபர் 30 அமேசான் பிரைமில் வெளியாகுமா?

Published

on

சூர்யா நடிப்பில், கொரோனாவுக்கு முன்பே வெளியாக தயாராகி வந்த சூரரைப்போற்று திரைப்படம், கொரோனாவால் தள்ளிப்போனது, இந்நிலையில் அமேசான் பிரைமில் அக்டோபர் 30-ம் தேதி வெளியாக வாய்ப்பில்லை என்று தகவல்கள் கூறுகின்றன.

சில மாதங்களுக்கு முன்பு, ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் குஞ்சன் சக்சேனா என்ற திரைப்படம் வெளியானது. அதில் ஏர் போர்ஸில் முதன் முதலாக சேர்ந்த பெண் அதிகாரிக்கு நேர்ந்த பாலியல் ரீதியான பாகுபாடு போன்ற காட்சிகள் இடம்பெற்றன.

அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஏர் போஸ்ர்ஸ், இப்படி எங்கள் அனுமதியில்லாமல் இந்த காட்சிகள் எல்லாம் படமாக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பியுள்ளது.

சூரரைப்போற்று திரைப்படமும் ஏர் போர்சில் இருந்து வெளியேறி, குறைந்த விலை விமான நிறுவனம் தொடங்குவது போன்ற முக்கிய கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். அதனால் எங்கு இந்த படத்தை வெளியிடும் போது இந்தியன் ஏர் போர்ஸ் நோட்டீஸ் அனுப்பிவிடுமோ என்று பயந்து, அமேசான் பிரைம் நிறுவனம் படக்குழுவினரிடம் இந்தியன் ஏர் போர்சிடம் இருந்து படத்தை வெளியிட அனுமதி சான்றிதழ் ஒன்றை கேட்டுள்ளது.

அதற்கு படக்குழுவினர் முயற்சி செய்தாலும், அதற்கு ஏர்போர்ஸ் அவ்வளவு எளிதாக அனுமதி வழங்காது என்று கூறப்படுகிறது. எனவேதான் சூரரைப்போற்று படம் குறித்த விளம்பரங்கள் எதையும் அமேசான் பிரைம் வெளியிடாமல் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அக்டோபர் 30-ம் தேதிக்குள் அனுமதியுடன் படக்குழுவினர் வந்தால் அமேசான் பிரைம் சூரரைப்போற்று திரைப்படம் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளது.

இதுவரை அமேசானில் நேரடியாக வெளியான அனைத்து படங்களும் தோல்வியையே தழுவியுள்ளன. எனவே இந்த படமாவது அமேசான் பிரைமில் வெளியாகி வெற்றி பெறுமா என்று பார்த்தால், அதற்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

சினிமா செய்திகள்

விஜய் சேதுபதி குடும்பத்திற்கு மிரட்டல் விடுத்த நபர் மீது நடவடிக்கை.. அமைச்சர் பாண்டிய ராஜன் அதிரடி!

Published

on

நடிகர் விஜய் சேதுபதியின் குடும்பத்தினர் மற்றும் பெண் குழந்தை பற்றி, ஆபாசமாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பாண்டிய ராஜன் உறுதியளித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில், விஜய் சேதுபதி நடிக்க இருக்கும் 800 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகியது.

இந்த படம் குறித்த அறிவிப்பு வெளிவந்ததிலிருந்தே, தமிழின பற்றாளர்கள் மற்றும் இலங்கை தமிழர்கள் எதிர்த்து வந்தனர். ஆனால், ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் வரை பிரச்சினை ஆகவில்லை. ஆனால் ஃபர்ஸ்ட் லுக் வெளியான பிறகு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. செய்தி தொலைக்காட்சிகளில் விவாதமாகவே இந்த விவகாரம் வந்தது.

அரசியல் தலைவர்கள், திரைப்பட பிரபலங்கள் என பலரும் விஜய் சேதுபதியை அந்த படத்திலிருந்து விலகுமாறும் கோரிக்கை வைத்தனர். அதே நேரம் சில நடிகர், நடிகைகள் அவருக்கு ஆதரவாகவும் பேசினர்.

அதே நேரம் சமூக வலைத்தளத்தில் ஆசாமி ஒருவர், விஜய் சேதுபதி குடும்பத்தினர் மற்றும் அவரது பெண் குழந்தை பற்றி ஆபாசமாகப் பதிவிட்டு இருந்தார். அதை பார்த்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, நடிகை ரோகிணி உள்ளிட்டவர்கள் சம்மந்தப்பட்ட நபரை கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.

இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பாண்டிய ராஜன், “விஜய் சேதுபதியை 800 படத்தில் நடிக்க வேண்டாம் என்று அதிமுகவும் கேட்டுக்கொண்டது. அவரும் தற்போது விலகியுள்ளார். அவரது குடும்பத்திற்கு ஆபாச கொலை மிரட்டல் விடுத்துள்ள ரவுடி கைது செய்யப்படுவார். அவர் சமூக வலைத்தள ரவுடி தான். கண்டிப்பாகச் சம்மந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

இதே போன்று அண்மையில், தோனியின் மகள் மீதும் ஆபாச மிரட்டல் விடுத்த நபர், குஜராத்தில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

சினிமா செய்திகள்

மாஸ்டர் டிரெய்லர் அப்டேட்.. எப்போ தெரியுமா?

Published

on

மாஸ்டர் திரைப்படம் கொரோனா காரணமாக 2021 பொங்கலன்று திரை அரங்குகளில் வெளியிடலாம் என்று கூறப்பட்டு வருகிறது.

எனவே தீபாவளிக்கு மாஸ்டர் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் அப்போது வரை கொரோனா பிரச்சினை தொடர்ந்தால் என்ன செய்வது என்றும், படத்தின் ரிலீஸ் தேதி உறுதியான பிறகு தான் டிரெய்லர் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரெய்லருடன் சேர்த்துப் படத்தின் ரிலீஸ் தேதி எப்போது என்ற அறிவிப்பும் வருமாம். புதுச்சேரி உள்ளிட்ட சில மாநிலங்களில் திரை அரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இன்னும் திறக்கவில்லை. தீபாவளிக்கு முன்பு தமிழகத்தில் திரை அரங்குகள் திறக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

அப்படித் திறந்தாலும், கொரோனா தொற்று பாதுகாப்பு கருதி, சிறிய படங்கள் மட்டுமே திரை அரங்குகளில் வெளியிட அதிக வாய்ப்புகள் உள்ளன. அப்படி திரைப்படங்கள் வெளியான பிறகு வரும் சிக்கல்கள் போன்றவற்றுக்குத் தீர்வு காணப்பட்ட பிறகு மாஸ்டர் வெளியாகும்.

சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் அக்டோபர் 30-ம் தேதி, ஓடிடியில் வெளியாவது உறுதி. இப்படி ஓடிடியில் வெளியான, வெளியாகிய திரைப்படங்கள் எந்த காரணத்தைக் கொண்டு திரை அரங்குகளில் வெளியிடப்படாது என்று திரை அரங்கு உரிமையாளர்கள் சங்கங்கள் உறுதியாக உள்ளன.

ஆனால் விஜய் ரசிகர்கள், ஏப்ரல் மாதம் வெளியாக இருந்த மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு தள்ளிப்போனாலும் பரவாயில்லை. தீபாவளிக்கு டிரெய்லர் வெளியாகினால் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்ப்பில் உள்ளனர்.

தமிழ் திரைப்பட ரசிகர்கள், டிரெய்லர் வெளியானாலே அது ஏதாவது ஹாலிவுட் பட காப்பியா என்றும் கண்டு பிடித்துவிடுவார்கள். அதுமட்டுமல்லாமல் இதுதான் கதை என்று சமூக வலைத்தளங்களில் பரவி விடும். எனவே படம் வெளியாகும் சில நாட்களுக்கு முன்பு டிரெய்லரை வெளியிட அதிக வாய்ப்புகள் உள்ளது என்று கூறப்படுகிறது.

ஆனால் லோகேஷ் கணகராஜ் திரைப்படத்தின் கதைகளை அவ்வளவு எளிதில் கண்டு பிடிக்க வாய்ப்பும் இல்லை.

Continue Reading
சினிமா செய்திகள்41 mins ago

சூரரைப்போற்று படம் அக்டோபர் 30 அமேசான் பிரைமில் வெளியாகுமா?

வேலை வாய்ப்பு2 hours ago

புவி விஞ்ஞானி தேர்வு மையத்தில் வேலைவாய்ப்பு!

வேலை வாய்ப்பு2 hours ago

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலை வாய்ப்பு3 hours ago

கப்பல் தளத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்3 hours ago

அதிர்ச்சி.. காற்று மாசு காரணமாக இறந்த 1.16 லட்சம் குழந்தைகள்!

வேலை வாய்ப்பு3 hours ago

இந்திய உருக்கு ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வேலை வாய்ப்பு4 hours ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

வேலை வாய்ப்பு5 hours ago

எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிட்டெட் வேலைவாய்ப்பு!

இந்தியா5 hours ago

பாஜக வெற்றி பெற்றால் பீகாரில் கொரோனா தடுப்பூசி இலவசம்.. தமிழகத்தின் நிலை என்ன?

வேலை வாய்ப்பு5 hours ago

வேளாண் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

வேலை வாய்ப்பு12 months ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா1 year ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா1 year ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு1 year ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா1 year ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

சினிமா செய்திகள்2 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு6 months ago

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

கிரிக்கெட்1 month ago

பந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சினிமா செய்திகள்2 months ago

தேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ!

வீடியோ செய்திகள்2 months ago

காதலை வித்தியாசமாகத் தெரிவிக்க தீ மூட்டிக்கொண்ட காதலன்! (வீடியோ உள்ளே)

வீடியோ3 months ago

சூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்!

வீடியோ செய்திகள்7 months ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு

வீடியோ செய்திகள்7 months ago

சாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு

வீடியோ செய்திகள்7 months ago

கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? – சிறப்பு தொகுப்பு

வீடியோ செய்திகள்7 months ago

கோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi

வீடியோ செய்திகள்7 months ago

லாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு

வீடியோ செய்திகள்7 months ago

நானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி

Trending

%d bloggers like this: