சினிமா செய்திகள்
மாஸ்டர் படத்தில் ‘பிக்பாஸ் தமிழ் 4’ போட்டியாளர்… ரசிகர்களுக்கு அதிர்ச்சி சர்ப்ரைஸ்!


பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர் ஒருவர் மாஸ்ட்அர் படத்தில் இடம் பெற்றிருந்தது ரசிகர்களுக்கு ஷாக்கிங் சர்ப்ரைஸ் ஆக அமைந்திருந்தது.
பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் முதல் வாரத்திலேயே பிரபலமானவர் அனிதா சம்பத். முன்னதாகவே சன் செய்தியாளராக இன்ஸ்டாகிராம் வைரல் நாயகியாக அனிதா சம்பத் உலா வந்து கொண்டிருந்தார். செய்தியாளர் தோற்றத்திலேயே பல முன்னணி படங்களில் நடித்துள்ளார் அனிதா சம்பத். நடிகர் சூர்யா உடன் காப்பான் படத்தில் பேட்டி எடுக்க வரும் செய்தியாளர் வேடம் அனிதாவுக்கு சிறப்பாய் அமைந்திருந்தது.
இந்த சூழலில் யாருமே எதிர்பார்க்காத வகையில் செய்தியாளராகவே சிறப்புத் தோற்றத்தில் அனிதா சம்பத் மாஸ்டர் படத்தில் தோன்றி உள்ளார். படம் வெளியாவது வரையில் தனது பங்கு திரையில் வருமா என்பதே உறுதி இல்லாத சூழலில் அனிதாவுக்கு அவரது குடும்பத்தாருக்குமே இது சர்ப்ரைஸ் தான் என்றே கூறப்படுகிறது. கூடுதலாக மாஸ்டர் திரைப்படத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் யூடுயூப் பிரபலங்கள் பலருக்கும் சிறு சிறு கதாபாத்திரங்களை அளித்தும் ஊக்கப்படுத்தி உள்ளார்.
சினிமா செய்திகள்
மேக்அப்-க்காக தயாரிப்பாளர்களை நஷ்டப்படுத்தும் நயன்தாரா, ஆண்ட்ரியா- புலம்பும் தயாரிப்பாளர்


நடிகைகள் நயன்தாரா, ஆண்ட்ரியா போன்ற நடிகைகளுக்கான மேக்அப் செலவுகள் தயாரிப்பாளர்களைக் கூடுதலாக நஷ்டப்படுத்துவதாக நடிகரும் தயாரிப்பாளருமான கே.ராஜன் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் படம் ஒன்றிந் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு நடிகரும் தயாரிப்பாளருமான கே.ராஜன் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “நடிகைகள் நயன்தாரா மற்றும் ஆண்ட்ரியா போன்றோர் எல்லாம் மேக் அப் போட்டுக்கொள்ள மும்பையில் இருந்து தான் மேக்அப் நிபுணர்கள் வர வைக்கப்பட வேண்டும் என அழுத்தமாக இருக்கிறார்கள்.
இதனால் அந்த செலவையும் தயாரிப்பாளரே ஏற்க வேண்டியதாக உள்ளது. மேக்அப் மட்டுமில்லை அந்த மேக்அப் நிபுணர்கள் வந்து போகும் செலவு, தங்கும் செலவு, உணவு என அவர்களுக்கு மட்டுமே ஒரு நாளைக்கு சுமார் 1.50 லட்சம் ரூபாய் ஒரு தயாரிப்பாளருக்கு செலவாகும். இதில் நடிகைகளுக்கான செலவு தனி. இதேபோலத் தான் சில நடிகர்களும் தேவையில்லாத ஆடம்பர செலவுகளை தருவார்கள்.
தமிழ் சினிமாவின் முன்னணியில் இருக்கும் நடிகர்கள், நடிகைகள் எல்லாம் இந்த கொரோனா காலகட்டத்தில் தங்களது ஊதியங்களையும் ஆடம்பர செலவுகளையும் குறைத்துக் கொண்டால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படாமல் இருக்கும்” என்றார்.
சினிமா செய்திகள்
சர்வதேச அளவில் தளபதி விஜயின் ‘மாஸ்டர்’ புதிய சாதனை..!


நடிகர் விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் சர்வதேச தளத்தில் புதிதாக ஒரு சாதனையைப் படைத்துள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருந்தாலும் 50 சதவிகித இருக்கைகள் உடனான திரை அரங்கங்களில் வெளியாகியும் தமிழகத்தில் பெரும் வசூல் சாதனையைப் படைத்துள்ளது மாஸ்டர். தமிழகத்தில் மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் புதிய சாதனையை மாஸ்டர் திரைப்படம் புரிந்துள்ளது.
இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகள் பலவற்றிலும் மாஸ்டர் படம் வெளியானது. இதில் சவுதி அரேபியாவில் வெறும் 5 நாட்களில் திரை அரங்கங்களுக்கு வந்து சுமார் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மாஸ்டர் படத்தை பார்த்துச் சென்றுள்ளனர். சவுதி அரேபியாவில் எந்தவொரு இந்திய திரைப்படத்துக்கும் இந்த மாதிரி கூட்டம் அலைமோதுவது இல்லையாம்.
அதனால், சவுதி அரேபியாவிலேயே அதிக மக்களால் குறைந்த நாட்களில் பார்க்கப்பட்ட ஒரே இந்தியத் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது மாஸ்டர் திரைப்படம்.
சினிமா செய்திகள்
வெளிய வந்த அடுத்த நாள் புதுப்படத்துக்கான பூஜை… பிஸியான பிக்பாஸ் ஆரி


பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற அடுத்த நாளே புது படம் ஒன்றுக்கான பூஜையை முடித்து படப்பிடிப்புகளில் இறங்கிவிட்டார் பிக்பாஸ் ஆரி அர்ஜுனன்.
பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமடைந்துவிட்டார் ஆரி. பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போதே 3 படங்களுக்கான போஸ்டர், ஃபர்ஸ்ட் லுக், டைட்டிள் வெளியீடு என கலக்கிக் கொண்டிருந்தார். தற்போது உற்சாகமாக வெளியில் வந்ததும் அடுத்த படத்துக்கான பூஜையை போட்டு படப்பிடிப்பை தொடங்கி உள்ளார்.
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடன் இணை இயக்குநராகப் பணியாற்றிய அபின் என்பவர் ஆரி படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் களம் இறங்க உள்ளார். இந்தப் படத்துக்கான பெயர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. சீரியல்களில் இருந்து சினிமாவுக்குப் பயணித்த வித்யா பிரதீப் இந்தப் படத்தில் ஆரிக்கு ஜோடி ஆகியுள்ளார். இந்தப் படத்தில் ஒரு போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் ஆரி.
படத்துக்கு இசை ஸ்டெர்லின் நித்யா மற்றும் தயாரிப்பு ஷெளரியா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம். ஆரிக்கு அடுத்தடுத்து எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான், பகவான், அலேகா ஆகிய மூன்று படங்கள் வெளியீட்டுக்கு வரிசையாகக் காத்திருக்கின்றன.
#ShauryaProductions #AbinFilmFactory Maiden Venture Started *ing #BigBoss4Tamil #TitleWinner @Aariarujunan Dir by @abindirector #AariArjunanAsCOP @Vidya_actress #SterlinNithya #PVKarthik #Kamalanathan @Lyricist_Vivek #ArulSiddarth #ShakthiSaravanan #Viswanathan @onlynikil pic.twitter.com/zy0cHeJqud
— Nikil Murukan (@onlynikil) January 19, 2021