சினிமா செய்திகள்
பட வாய்ப்புப் பெற்ற ‘பிக்பாஸ்’ சுரேஷ் சக்கரவர்த்தி- பிரபல இயக்குநர் உடன் இணைந்தார்!


பிக்பாஸ் சுரேஷ் சக்கரவர்த்தி பிரபல இயக்குநர் ஒருவரின் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
நடிகர் அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடிக்கும் படம் ஒன்றில் முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் சுரேஷ் சக்கரவர்த்தி நடிக்கிறார். கைதி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் நடிகர் அர்ஜுன் தாஸ். கைதி படத்தில் சிறிது நேரமே திரையில் தோன்றினாலும் தனது குரலால் ரசிகர்களை வளைத்துப் போட்டுவிட்டார் அர்ஜுன் தாஸ். அதன் பின்னர் கைதி படத்தை இயக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜே அடுத்து தளபதி விஜய்-ன் மாஸ்டர் படத்தை இயக்க அதிலும் முக்கிய துணை கதாபாத்திரத்தில் நடித்து தனது ரசிகர்கள் வட்டத்தை பெரிதுபடுத்தி உள்ளார்.
தற்போது அர்ஜுன் தாஸ் ஹீரோ ஆக புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அர்ஜுன் தாஸை ஹீரோவாகக் கொண்டு இயக்குநர் வசந்தபாலன் தான் படம் தயாரிக்க உள்ளார். இயக்குநர் வசந்தபாலன் புதிதாக அர்பன் பாய்ஸ் என்னும் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி உள்ளார். அந்த நிறுவனத்தின் முதல் படத்திலேயே ஹீரோ ஆகியுள்ளார் அர்ஜுன் தாஸ்.
இந்தப் படத்தில் தனக்குக் கிடைத்துள்ள வாய்ப்பு குறித்து சுரேஷ் சக்கரவர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.
View this post on Instagram
சினிமா செய்திகள்
பிரபாஸ் நடித்து வரும் ‘சலார்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!


பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடித்த ’பாகுபலி’ மற்றும் ’பாகுபலி 2’ ஆகிய திரைப்படங்கள் இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் சூப்பர் ஹிட்டானது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் அவருடைய அடுத்தடுத்த படங்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் தற்போது அவர் ’ராதேஷ்யாம்’ ‘சலார் மற்றும் ஆதி புருஷ்’ ஆகிய மூன்று படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபாஸ் ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ள இந்த படத்திற்கு ரவி பஸ்ரூர் என்பவர் இசையமைத்துள்ளார் என்பதும் இந்த திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
𝐑𝐞𝐛𝐞𝐥𝐥𝐢𝐧𝐠 Worldwide #Salaar On 𝐀𝐩𝐫𝐢𝐥 𝟏𝟒, 𝟐𝟎𝟐𝟐 💥
We can't wait to celebrate with you all 🔥#Salaar14Apr22#Prabhas @prashanth_neel @VKiragandur @hombalefilms @shrutihaasan @BasrurRavi @bhuvangowda84 pic.twitter.com/BmWzzbOy1s
— Prashanth Neel (@prashanth_neel) February 28, 2021
சினிமா செய்திகள்
அம்மாவாக போகும் சிம்பு, தனுஷ் பட நடிகை: வைரல் புகைப்படம்


சிம்பு மற்றும் தனுஷ் படங்களில் நாயகியாக நடித்த நடிகை விரைவில் அம்மாவாக போகும் தகவலை மகிழ்ச்சியுடன் ரசிகர்களுக்கு பகிர்ந்து உள்ளார் என்பதும் இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது,
சிம்பு நடித்த ’ஒஸ்தி’ மற்றும் தனுஷ் நடித்த ’மயக்கம் என்ன’ ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் ஒரே நேரத்தில் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை ரிச்சா கங்கோயாபாத். இந்த படங்களை அடுத்து ஒரு சில தெலுங்கு படங்களில் மட்டும் நடித்து விட்டு மேல்படிப்புக்காக வெளிநாடு சென்றார் என்பதும் அங்கேயே ஜோ லங்கொல்லா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது
We've been keeping a LITTLE secret 🤫
Joe and I are so excited to finally share with everyone….
BABY LANGELLA COMING THIS JUNE!
Our hearts are so full of happiness and gratitude 🌺. We can't wait to meet our little bundle of joy! 👶🏻💖🤰🏻 pic.twitter.com/bSmO6GyUFo
— Richa Langella (Gangopadhyay) (@richyricha) February 28, 2021
சினிமா செய்திகள்
மகன் விஜய்யிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.ஏ.சி!


நடிகர் விஜய்க்கும் அவரது தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் கடந்த சில நாட்களாக மோதல் போக்கு நிலவி வந்தது. குறிப்பாக சந்திரசேகரின் அரசியல் நிலைப்பாடுகளை விஜய் வெளிப்படையாக கண்டித்து அறிக்கை வெளியிட்டார். இதனால் குடும்பத்தில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து ஊடகங்களுக்குப் பேட்டி கொடுத்த சந்திரசேகர், ‘நான் விஜய்யை எச்சரிக்கின்றேன்’ என்றால்லாம் பன்ச் அடித்தார்.
இதனால் விஜய் ரசிகர்களும் அவர் மீது கொதிப்பில் இருந்தனர். இந்நிலையில் அவர் விஜய்யிடம் மனிப்பு கேட்டு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வந்துள்ளது.
இருவருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக பேச்சுவார்த்தை ஏதும் கிடையாது என்றும் விஜய்யின் தாயார் ஷோபா கூறியிருந்தார். சில மாதங்களுக்கு முன்பு விஜய் பெயரில் அரசியல் கட்சியை சந்திர சேகர் தொடங்கினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அடுத்த சில நாட்களில் தனக்கும் இந்த கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், தனது ரசிகர்கள் தந்தை சந்திர சேகர் தொடங்கிய கட்சியில் சேரக்கூடாதும் என்றும் கூறி விஜய் அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக மகனுக்கும் தனக்கும் இடையே நிலவி வரும் மோதல் போக்கை முடிவுக்கு கொண்டுவர சந்திரசேகர் விரும்பியுள்ளார். இதன் காரணமாக மகனிடம் மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது இன்னும் ஒரே மாதத்தில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. இந்த தேர்தலில் நேரடி அரசியலில் குதிக்கலாம் என்கிற முடிவில் எஸ்.ஏ.சி இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் தான் இந்த மன்னிப்பு கேட்கும் விவகாரம் குறித்தான தகவலும் வந்துள்ளது.
-
சினிமா செய்திகள்1 day ago
நயன்தாரா படத்தில் நாயகி ஆனார் ‘செல்லம்மா’ பட பாடகி: ஹீரோ யார் தெரியுமா?
-
தமிழ் பஞ்சாங்கம்2 days ago
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (27/02/2021)
-
ஆரோக்கியம்1 day ago
பாலக்கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!
-
தமிழ்நாடு1 day ago
முதல்வர் வேட்பாளர் நான் தான்: கமல் அறிவிப்பால் சரத்குமார் அதிர்ச்சியா?