Connect with us

சினிமா செய்திகள்

பிகில் டீசர் எப்போது? அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட அட்லி!

Published

on

பிகில் திரைப்படத்தின் இசை வியாழக்கிழமை வெளியானது.

அதில் பேசிய பிகில் திரைப்படத்தின் இயக்குனர் அட்லி, தெறி-ஐ விட இரண்டு மடங்கு சிறப்பான படம் மெர்சல், அதை விட மூன்று மடங்கு மிக சிறப்பான படமாக பிகில் உருவாகியுள்ளது.

பிகில் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் விதமாக டீசர் உருவாகி வருவதாகவும், 2019 அக்டோபர் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.

சினிமா செய்திகள்

அஜித்தின் வலிமை ஷூட்டிங் தொடுங்குவது எப்போது? எப்போது வெளியாகும்?

Published

on

நேர்கொண்ட பார்வை திரைப்படத்தைத் தொடர்ந்து அஜித் மீண்டும் எச்.விநோத் உடன் இணைந்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் டிசம்பர் 13-ம் தேதி முதல் தொடங்குகிறது. அஜித் இதில் போலீஸ் வேடத்தில் நடிப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

வலிமை திரைப்படம் 2020 தீபாவளிக்கு வெளியாகும்.

தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தை அடுத்து மீண்டும் அஜித்தை வைத்துக் காவல் துறை மையமான கதையையே எச்.விநோத் கூறியுள்ளார்.

இந்த திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார். சாட்டிலைட் உரிமை ஜீ நிறுவனம் பெற்றுள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளிலும் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது.

Continue Reading

சினிமா செய்திகள்

பெண்களை மதிப்பவன் தான் பாதுகாப்பான நாயகன்; தெலுங்கானா என்கவுண்டருக்கு ஆதரவாக நயன்தாரா!

Published

on

தெலுங்கானா மாநிலத்தில் 27 வயது கால் நடை மருத்துவரான திஷா (பெயர் மாற்றம்) பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இந்த குற்றவாளிகளைக் கைது செய்த காவல் துறை என்கவுட்டர் செய்தது.

என்கவுட்டரில் ஈடுபட்ட காவலர்களுக்கு உலகம் முழுவதும் பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகிறனர். தற்போது நயன்தாரா இந்த என்கவுண்டருக்கு ஆதரவாக நயன்தாராவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நயன்தாரா வெளியிட்டுள்ள அறிக்கையில், “சரியான நேரத்தில் வழங்கப்படும் நீதிக்கு இணையில்லை. இந்த கூற்று இன்று உன்மையாகியிருக்கிறது. உண்மையான நாயகர்களால் தெலுங்கானா காவல் அதிகாரிகள் நீதியை நிலைநாட்டியிருக்கிறார்கள். காட்டுமிராண்டிகளின் ஈனத்தனமான சட்டத்திற்குப் புறம்பாகப் பெண் மீது காட்டப்பட்ட வன்முறைக்கு எதிராகத் தீர்க்கமான பதிலளித்துள்ளார்கள்.

பெண்களின் முன்னேற்றத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்வது நம் கடமை. இந்த நடவடிக்கை என்பது மிக சரியாக வழங்கப்பட்ட நீதி. இதுவே நியாயமான நடவடிக்கை என அழுத்திச் சொல்வேன்.

நாட்டில் உள்ள பெண்கள் அனைவரும் இந்த நாளை, தேதியை பெண்களுக்குச் சரியான நியாயம் கிடைத்த நாளாகக் குறித்து வைத்துக் கொள்ளலாம். பெண்களுக்கு இது சற்றே ஆறுதல். அவர்களுக்கு எதிராக வன்புணர்வு செய்யும் காட்டுமிராண்டிகளுக்கு இந்த நடவடிக்கை சற்றேனும் பயன்தரும்.

மனிதம் என்பது அனைவரிடத்தும் சரிசமமாக மரியாதை தருவது, அன்பு செலுத்துவதும், இரக்கம் செலுத்துவதும் ஆகும். நீதி கிடைத்திருக்கும் இத்தருணம் மகிழ்ச்சியே என்றாலும், நாம் நம் குழந்தைகளுக்குப் பெண் பாதுகாப்பு குறித்து கல்வியைக் கற்றுக்கொடுக்க வேண்டியது அவசியம். குறிப்பாய் நம் ஆண் குழந்தைகளுக்குப் பெண்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று கற்று தர வேண்டும். பெண்களை மதிப்பவன் தான் பாதுகாப்பான நாயகன் என்பதை அவர்கள் மனதில் பதிய வைக்க வேண்டும்.

எதிர்கால உலகைப் பெண் மீதான வன்முறைக்கு எதிரான, அன்பான உலகாக மாற்ற வேண்டியது நம் கடமை. அப்போது தான் நாம் நிம்மதியான பெருமூச்சுடன் அன்பை அனைவரிடத்தும் பகிர்ந்துகொள்ள முடியும்.” என்று அறிக்கையில் நயன்தார குறிப்பிட்டு இருந்தார்.

Continue Reading

சினிமா செய்திகள்

திரையரங்கில் ஓடிக்கொண்டு இருக்கும் போதே ‘கைதி’ ஹாட்ஸ்டாரில் வெளியாக காரணம் என்ன?

Published

on

தீபாவளிக்கு வெளியான கைதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல், 30 நாட்களைக் கடந்தும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் 30 நாள் முடிவில் கைதி திரைப்படம் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது இது திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் பெறும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

படம் திரையரங்கு வெளியான ஒரு மாதத்தில் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளத்தில் படங்கள் வெளியானால், மக்கள் எப்படி திரையரங்குகளுக்கு வருவார்கள். சில வாரங்களில் ஆன்லைனைல் வந்துவிடும் என்று திரையரங்குகளுக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்துவிடும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் புலம்புகிறார்கள்.

மறுபக்கம் திரையரங்குகளில் படம் வெளியான அன்றே தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட தளங்களில் படங்கள் வெளியாகி து தயாரிப்பாளரைப் பெறும் அளவில் பாதிக்கிறது. 2 அல்லது 3 வாரங்களுக்கு மேல் திரையரங்குகள் மூலம் கிடைக்கும் வருவாய் பெரிய அளவில் இல்லை. எனவே இப்படி ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களுக்குப் படத்தை 30 நாட்களில் ஒளிபரப்ப அனுமதியளிக்கிறோம். சில படங்கள் திரையரங்குகளில் 1 முதல் 2 வாரங்கள் மட்டுமே ஓடுகின்றன. எனவே இந்த முடிவை நாங்கள் எடுப்பதை தவிர வேறு வழியில்லை என்று பட தயாரிப்பாளர்கள் கூறுகிறார்கள்.

இப்படி சில வாரங்களில் படங்கள் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களுக்கு வழங்கப்படும் என்றால் வரும் காலங்களில் தற்போது தயாரிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 60 சதவீத டிக்கெட் கட்டணத்தை, 50 சதவீதமாக நாங்கள் குறைப்போம் என்று திரையரங்க உரிமையாளர்கள் போர்க்கொடி எடுத்துள்ளனர்.

எனவே அடுத்து வெளியாக உள்ள திரைப்படங்கள் ஆன்லைன் தளங்களில் எத்தனை நாட்களில் வெளியாகும் என்று தெரிந்த பின்பே திரையரங்கு உரிமையாளர்கள் படத்தை திரையிடுவார்கள் என்று கூறப்படுகிறது.

சமீபத்தில் இதே போன்று தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படமும் அமேசான் பிரைமில் 30 நாட்களில் வெளியானது குறிப்பிடத்தகக்து.

Continue Reading
கிரிக்கெட்8 hours ago

#INDvsWI : 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்13 hours ago

உங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (09/12/2019)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam
தினபலன்13 hours ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (09-12-2019)

இந்தியா16 hours ago

காதலுக்கு கண் இல்லைதான்; அதற்கென்று ரயிலில் இப்படியே மோசமாக நடந்துகொள்வது?

தமிழ்நாடு17 hours ago

உள்ளாட்சி தேர்தல் 2019: நாளை தொடங்கும் வேட்புமனு தாக்கல்!

சினிமா செய்திகள்18 hours ago

அஜித்தின் வலிமை ஷூட்டிங் தொடுங்குவது எப்போது? எப்போது வெளியாகும்?

வீடியோ செய்திகள்21 hours ago

முதல் லெட்டருக்கே செருப்படி தான்…!

வைரல் செய்திகள்22 hours ago

மீன், மட்டன் விலையை தொட்டது வெங்காயம், முருங்கை விலை: மக்கள் வேதனை

வைரல் செய்திகள்22 hours ago

அரசுப் பேருந்து மோதியதில் பிச்சைக்காரர் பலி

வீடியோ செய்திகள்22 hours ago

சென்னையில் வெங்காயம் விலை சற்று குறைந்தது

வேலை வாய்ப்பு4 weeks ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா5 months ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா3 months ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு4 months ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா5 months ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

வேலை வாய்ப்பு3 months ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலை வாய்ப்பு4 months ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு5 months ago

கனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி!

சினிமா செய்திகள்3 months ago

நடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு!

சினிமா செய்திகள்5 months ago

நீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் தர்ஷன் காதலி!

இந்தியா16 hours ago

காதலுக்கு கண் இல்லைதான்; அதற்கென்று ரயிலில் இப்படியே மோசமாக நடந்துகொள்வது?

வீடியோ செய்திகள்21 hours ago

முதல் லெட்டருக்கே செருப்படி தான்…!

வைரல் செய்திகள்22 hours ago

மீன், மட்டன் விலையை தொட்டது வெங்காயம், முருங்கை விலை: மக்கள் வேதனை

வைரல் செய்திகள்22 hours ago

அரசுப் பேருந்து மோதியதில் பிச்சைக்காரர் பலி

வீடியோ செய்திகள்22 hours ago

சென்னையில் வெங்காயம் விலை சற்று குறைந்தது

வீடியோ செய்திகள்22 hours ago

ஏழுமலையான் கோவிலில் லட்டு தயாரிக்கும் இடத்தில் தீ விபத்து

வீடியோ செய்திகள்22 hours ago

கீரிப்பிள்ளைகளை செல்லமாக வளர்க்கும் முதியவர்…!

வீடியோ செய்திகள்3 days ago

தெலங்கானா என்கவுன்டர் : பெண்களின் கருத்து என்ன?

வீடியோ செய்திகள்3 days ago

குற்றவாளிகளை என்கவுன்ட்டர் செய்தது மகிழ்ச்சி: நிர்பயாவின் தாய்

வீடியோ செய்திகள்5 days ago

பெண்ணின் வயிற்றுக்குள் இருந்த 759 நீர்க்கட்டிகளை அகற்றி மருத்துவர்கள் சாதனை

Trending