Connect with us

சினிமா செய்திகள்

தாய்மைக்குப் பின் ஹாட் போட்டோ வெளியிட்ட எமி ஜேக்சன்!

Published

on

2009-ம் ஆண்டு உலகி அழகி பட்டம் வென்ற எமி ஜெக்சன், 2010-ம் ஆண்டு மதராஸபட்டினம் திரைப்படம் மூலம் தமிழ் படங்களில் நடிக்க தொடங்கினார்.

பின்னர் தாண்டவம், 2.0, தங்க மகன் என பல்வேறு தமிழ் படங்களிலும் எமி ஜேக்சன் நடித்துள்ளார். 2019-ம் ஆண்டு ஜார்ஜ் பனாயோட்டோ என்பவரைத் திருமணம் செய்துகொண்ட எமி ஜேகசன் லண்டனில் வசித்து வருகிறார்.

இவர்களுக்கு இப்போது 1 வயதில் ஆண்டிரியாஸ் என்ற ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் எமி ஜேக்சன் ஹாட் போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அது ஒரு புத்தகத்திற்கு அளித்த புகைப்படம் போல உள்ளது.

இந்த லாக்டவுனை மேலும் மெருகூட்டவே நான் இந்த புகைப்படத்தை வெளியிட்டேன். 2020-ல் தன்னை முன்னிலைப் படுத்துவது இந்த நீலமான முடி தான் என்றும் எமி கூறியுள்ளார்.

எமி ஜேக்சனின் இந்த படத்தை பலர் வரவேற்று வரும் அதே நேரம், சிலர் ட்ரோல் செய்தும் வருகின்றனர். எமி ஒரு லண்டன் பெண்ணாக இருந்தாலும் தனது குடும்பத்துடன் தீபாவளி வாழ்த்து இவர் தெரிவித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகள்

மாஸ்டர் திரைப்படம் திரை அரங்குகளில் தான் வெளியாகும்; படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Published

on

மாஸ்டர் திரைப்படம் ஓடிடியில் வெளியாக வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டு வந்தது. அது குறித்து விளக்கம் அளித்துள்ள படக்குழு, மாஸ்டர் திரைப்படம் திரை அரங்குகளில் தான் முதலில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளனர்.

மாஸ்டர் படக்குழு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், “நாம் தொடர்ந்து பெருந்தொற்றுக்கு எதிராக போராடி வருகிறோம், எல்லோரும் பாதுகாப்பாகவும் சிறப்பாகவும் செயல்பட்டு வருகிறோம் என்று நம்புகிறோம்.

மாஸ்டர் படத்தை திரை அரங்குகளில் பார்வையாளர்கள் கொண்டாட உள்ள ஆர்வத்தை எங்களால் உணர முடிகிறது, புரிந்துகொள்ள முடிகிறது. உங்களை போலவே அந்த நாளுக்காக நாங்களும் காத்திருக்கிறோம்.

கடந்த சில நாட்களாக மாஸ்டர் திரைப்படம் பற்றி பல்வேறு வதந்திகள் உலாவி வருகின்றன. எங்களுக்கு பிரபல ஓடிடி சேவை வழங்குநரிடம் இருந்து பெரும் தொகைக்கு அழைப்பு வந்தது. ஆனால் திரை அரங்குகளில் வெளியிடவே நாங்கள் விரும்புகிறோம். நெருக்கடியில் உள்ள திரைத்துறை உயிர்பிழைக்க இது தேவையான ஒன்று,

இந்த சமயத்தில் திரை அரங்கு உரிமையாளர்கள் எங்களுடன் நின்று, தமிழ் திரை துறைக்கு ஆதரவு வழங்க வேண்டும். விரைவில் நல்ல செய்தியுடன் உங்களை சந்திக்க விரும்புகிறோம். பாதுகாப்பாக இருங்கள்.” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

Continue Reading

சினிமா செய்திகள்

‘மாஸ்டர்’ படத்தை வாங்கியது நெட்ஃபிளிக்ஸ்.. ஓடிடியில் நேரடியாக ரிலீஸ் ஆகுமா?

Published

on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்துள்ள படம் மாஸ்டர். அனிருத் இசையில் ஏற்கனவே வெளியான பாடல்கள், ரசிகர்களிடையில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

மாஸ்டர் படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருந்தது. ஆனால் மார்ச் மாதம் முதல் கோவிட்-19 தொற்று காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. திரை அரங்குகளும் மூடப்பட்டன. எனவே ரிலீஸ் ஆக தாமதமான படம் 2021 பொங்கலுக்குத் திரை அரங்கில் வெளியாக வாய்ப்புள்ளதாக் கூறப்படுகிறது.

ஆனால் திரை அரங்குகளில், தற்போது வரை 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 100 சதவீத இருக்கைகளுக்கும் அனுமதி கிடைத்தால்தான் நல்ல வசூல் கிடைக்கும் என்று மாஸ்டர் பட தயாரிப்பு நிறுவனம் நினைக்கிறது.

தீபாவளியின் போது வெளியான குறைந்த பட்ஜெட் திரைப்படங்கள் அனைத்தும், 50 சதவீத இருக்கைக்கு மட்டும் அனுமதி மற்றும் கொவிட்-19 தொற்று அச்சம் காரணமாக நடத்தையே சந்தித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மாஸ்டர், விஜய் நடித்த படம் என்பதால் திரை அரங்குகளில் வெளியானால் அவரது ரசிகர்களிடையில் நல்ல வரவேற்பு இருக்கும். ஆனாலும் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்தால் நன்றாக இருக்கும் என்று தயாரிப்பு நிறுவனம் எதிர்பார்க்கிறது.

சில இடங்களில் கொரோனா இரண்டாம் அலை உருவாகி வரும் நிலையில், பொங்கலுக்கு முன்பு திரை அரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்படுமா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.

மறுபக்கம் மாஸ்டர் திரைப்படத்தை, ஓடிடி நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ் பெரும் தொகை கொடுத்து நேரடியாக ரிலீஸ் செய்ய வாங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தயாரிப்பு நிறுவனம் தரப்பில் விசாரித்த போது திரை அரங்கில் வெளியிடுவதா? ஓடிடியில் வெளியிடுவதா என்ற குழப்பத்தில் உள்ளதாகவும், இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் கூறுகின்றனர்.

Continue Reading

சினிமா செய்திகள்

தனுஷ் ‘ராட்சசன்’ ராம்குமார் இணையும் படத்தின் டைட்டில் என்ன தெரியுமா?

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். தமிழ் மட்டுமல்லாமல் அவ்வப்போது இந்தி படங்களில் தனுஷ் நடித்து வருகிறார்.

தனுஷ் நடிப்பில் ஜகமே தந்திரம் படம் ரிலீஸ்க்கு தயாராக உள்ளது. இந்தியில் அற்றாங்கி ரே என்ற படத்திலும், தமிழில் கர்ணன் படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த படங்களை தொடர்ந்து சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தொடர்ந்து இரண்டு படத்தில் நடிக்க உள்ளார். அதில் ஒரு படத்தை கார்த்தில் நரேனும், மற்றொரு படத்தை ராட்சசன் பட இயக்குநர் ராம் குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் ராம்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்திற்கு வால் நட்சத்திரம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இது ஒரு சயிண்டிஃபிக் திரில்லர் கதை என்றும் தகவல்கள் கூறுகின்றன.

இவை மட்டுமல்லாமல் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவகர் இயக்கும் ஒரு படத்திலும் தனுஷ் நடிக்க உள்ளார்.

Continue Reading




Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்3 hours ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (29/11/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்3 hours ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (29/11/2020)

சினிமா செய்திகள்7 hours ago

மாஸ்டர் திரைப்படம் திரை அரங்குகளில் தான் வெளியாகும்; படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

கிரிக்கெட்10 hours ago

#AUSvsIND இந்திய அணி கிரிக்கெட் வீரர்களுக்கு 20% அபராதம் விதித்த ஐசிசி!

தமிழ்நாடு18 hours ago

5 ஆண்டுகளுக்குப் பிறகு பாலாற்றில் பெருக்கெடுத்த தண்ணீர்!

தமிழ்நாடு19 hours ago

இந்த மாதமே மீண்டும் ஒரு புயல்.. தாங்குமா சென்னை?

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்20 hours ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (28/11/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்1 day ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (28/11/2020)

தினபலன்1 day ago

இன்றைய தினபலன் | நல்ல நேரம் (28/11/2020)

கேலரி1 day ago

சணல் உடையில் வேதிகா.. வைரலாகி வரும் போட்டோ ஷூட்!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா1 year ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா1 year ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு1 year ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா1 year ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

சினிமா செய்திகள்2 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு7 months ago

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

வைரல் செய்திகள்1 day ago

மனிதர்களைப் போல ‘டீ’ வாங்கி குடிக்கும் யானை.. வைரல் வீடியோ!

வீடியோ2 weeks ago

சசி குமாரின் ‘எம்.ஜி.ஆர்.மகன்’ ட்ரெய்லர்!

வீடியோ2 weeks ago

வாத்தி யாரு? விஜய்யின் ‘மாஸ்டர்’ டீசர்!

வீடியோ3 weeks ago

சன் டிவியில் தீபாவளிக்கு நேரடியாக ரிலீஸ் ஆகும் ‘நாங்க ரொம்ப பிஸி’ டிரெய்லர்!

வீடியோ3 weeks ago

மீண்டும் ‘விக்ரம்’.. #கமல்ஹாசன்232 பட தலைப்பை அறிவித்த படக்குழு!

வீடியோ1 month ago

ஜீவா, அருள்நிதி சேர்ந்து கலக்கும்‘களத்தில் சந்திப்போம்’ பட டீசர்!

வீடியோ1 month ago

சிம்புவின் ‘ஈஸ்வரன்’ ஸ்லிம்மாக மிரட்டும் போஸ்டர்!

வீடியோ1 month ago

ஏர் ஓட்டுபவனும் ஏரோபிளைனில் போவான்.. சூரரைப் போற்று திரைப்பட டிரெய்லர்!

கிரிக்கெட்3 months ago

பந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சினிமா செய்திகள்3 months ago

தேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ!

Trending

%d bloggers like this: