சினிமா செய்திகள்
வலிமை பட ஷூட்டிங்கில் ஜிம் பாய்ஸால் ஏற்பட்ட சர்ச்சை!


சமீப காலமாக முக்கிய ஹீரோக்களின் படப்பிடிப்பு தளங்களில், ஹீரோக்களுக்கு ஜிம் பாய்ஸ்கள் பயன்படுத்துகின்றனர்.
இப்படி வலிமை பட ஷூட்டிங்கின் போது அஜித்துக்கு ஜிம் பாய்ஸாக இருந்தவர்கள் செய்த சில விஷயங்களால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
அஜித் தன்னுடன் பணியாற்றும் நபர்களுக்கு மிகவும் எளிமையானவர். இதற்குப் பல சம்பவங்கள் செய்திகளாக வெளியாகியுள்ளனர். ஷூட்டிங்கில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுடனும் மிகவும் அன்பாகப் பழகுவார்.
ஆனால் வலிமை பட ஷூட்டிங்கில் அவருடன் நடித்து துணை நடிகர்கள், அஜித் குமாரை சந்தித்துப் பேசச் சென்ற போது உங்களை எல்லாம் கிட்டவே விடக் கூடாது என்று மிகவும் கீழ்த்தரமாக நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பொதுவாக பெரும் நடிகர்கள் நடிக்கும் படத்தில், உடன் நடிக்கும் நடிகர்கள் அவர்களது குடும்பத்தை அழைத்துக்கொண்டு வந்து படம் எடுத்துக்கொள்வார்கள். அப்படி ஒரு சூழலில் ஒரு சிறு நடிகருக்கு இப்படி ஒரு சம்பவம் அவமானத்தை அளித்துள்ளது.
இந்த சம்பவம் அஜித்துக்குத் தெரிந்து நடந்ததா, தெரியாமல் நடந்ததா என்று தெரியவில்லை. இதை அறிந்தால் அஜித் அடுத்த படத்திலிருந்து ஜிம் பாய்ஸ்களை பயன்படுத்த மாட்டார் என்று தகவல்கள் கூறுகின்றன.
சினிமா செய்திகள்
மது போதையில் தகராறு..? சண்டையிடும் நடிகர் விஷ்ணு விஷாலின் சிசிடிவி வீடியோ – உண்மை என்ன??


தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஷ்ணு விஷால், தான் குடியிருக்கும் அடுக்கு மாடி குடியிருப்பில் மற்றவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் பரபரப்பு சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
‘வெண்ணிலா கபடிக்குழு’ திரைப்படம் மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமானவர் விஷ்ணு விஷால். சினிமாவுக்கு வருவதற்கு முன்னர் தமிழ்நாடு சார்பில் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிவர் விஷ்ணு விஷால். சினிமாவுக்கு வந்து சாதித்ததால் கிரிக்கெட் வாழ்க்கையை கைவிட்டார். தொடர்ச்சியாக பல வெற்றிப் படங்களில் நடித்த விஷ்ணு விஷாலுக்கு கடைசியாக ‘ராட்சசன்’ திரைப்படம் மாபெரும் வெற்றியாக அமைந்தது. அதிலிருந்து பல்வேறு படங்களில் அவர் பிஸியாக நடித்து வருகிறார்.
அதே நேரத்தில் விஷ்ணு விஷாலின் தனிப்பட்ட வாழ்க்கை மோசமாகவே இருந்துள்ளது. கடந்த 2010 ஆம் ஆண்டு ரஜினி நட்ராஜ் என்பவரை விஷ்ணு விஷால் திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட மனக் கசப்பு காரணமாக 2018 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர். அதையடுத்து பிரபல பாட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவிடம் காதலில் விழுந்தார் விஷ்ணு. இருவருக்கும் 2020 ஆம் ஆண்டு எங்கேஜ்மென்ட் முடிந்துள்ளது.
சொந்த வாழ்க்கைப் பிரச்சனை காரணமாக நடுவில் சில ஆண்டுகள் குடி போதைக்கு அடிமையாகியுள்ளார் விஷ்ணு. ஆனால், அதிலிருந்து மீண்டு வந்து தன் உடலை ரெடி செய்து, சினிமாவிலும் ஜெயித்துக் காட்டினார்.
இந்நிலையில் தற்போது அவர் குறித்தான இன்னொருப் பிரச்சனை பூதாகரமாகியுள்ளது. சென்னை, கோட்டூர்புரத்தில் இருக்கும் அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வருகிறார் விஷ்ணு. அங்கு அவர் அடிக்கடி குடித்துவிட்டு தகராறில் ஈடுபடுவதாக அடுக்கு மாடி குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் காவல் துறைக்குப் புகார் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து அடுக்கு மாடி குடியிருப்புக்குச் சென்ற போலீஸ், விஷ்ணுவிடம் விசாரணை நடத்தியுள்ளது. அப்போது விஷ்ணு போலீஸிடமும், குடியிருப்பைச் சேர்ந்தவர்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுபடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்நிலையில் விஷ்ணு, தன் ட்விட்டர் பக்கத்தில், ‘நீங்கள் தினமும் மது அருந்திக் கொண்டிருந்தால், 6 பேக் என்பது உடனடியாக வந்து விடாது. மிகத் தீவிரமான டயட் மற்றும் மது குடிக்காமல் வெகு நாட்கள் இருக்க வேண்டும். இந்த லாஜிக் சிலருக்குப் புரியாது’ என்று நடந்த சம்பவத்துக்கு சூசகமாக விளக்கம் கொடுத்துள்ளார். இந்தப் பிரச்சனை குறித்து போலீஸ் தொடர்ந்து விசாரணை செய்து வருகிறது.
சினிமா செய்திகள்
பட்டித்தொட்டியெல்லாம் பட்டைய கிளப்பிய ‘குட்டி ஸ்டோரி’ பாடலின் வீடியோ ரிலீஸ்; அடிச்சுத்தூக்கும் வைரல்!


தளபதி விஜய் நடிப்பில் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி மெகா ஹிட் அடித்த திரைப்படம் ‘மாஸ்டர்’. கொரோனா வைரஸ் காலக்கட்டத்தில் வெளியான மாஸ் திரைப்படமான மாஸ்டர் மூலம் தான் மீண்டும் திரையரங்குகளில் கூட்டம் அலை மோதிக் கொண்டிருக்கிறது. மாஸ்டர் வெளியாகி சுமார் இரண்டு வாரங்கள் கடந்து விட்டாலும், தியேட்டர்களில் கூட்டம் அள்ளுகிறது. இதனால் பல மாதங்களாக நட்டத்தில் ஓடி வந்த தியேட்டர்கள் மீண்டும் லாபம் ஈட்டத் தொடங்கி இருக்கின்றன.
இந்நிலையில் மாஸ்டர் படக்குழு, திரைட்டம் குறித்தான வீடியோக்களை ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் மாஸ்டர் சார்பில் முதன் முதலில் வெளியிடப்பட்ட பாடலான ‘குட்டி ஸ்டோரியின்’ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் பாடலில் செம ஹேண்ட்ஸமான விஜய், சிறிய பையன்களுக்கு மத்தியில் பாட்டு பாடி நடனமாடுவது பலரையும் கவர்ந்திருந்தது. இந்நிலையில் அதை இணையத்தில் வெளியிட்டு டிரெண்டாக்கி உள்ளது மாஸ்டர் படக்குழு. குட்டி ஸ்டோரி பாடல் வெளியாகி இன்னும் ஒரு நாள் கூட முழுதாக முடிவடையாத நிலையில், பல லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது.
பாடல் வீடியோ இதோ:
சினிமா செய்திகள்
அமீர் கான் படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகியதற்கான காரணம் என்ன?


நடிகர் விஜய் சேதுபதி இந்தியில் அடுத்தடுத்து 3 படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருந்தார். அதில் ஒன்று அமீர் கானுடன் நடிக்க இருந்த லால் சிங் சர்தார் திரைப்படம்.
கொரோனாவுக்கு முன்பே அந்த படத்தில் நடிக்க விஜய் சேதுபதி நடிக்க 20 நாட்கள் தேதிகள் ஒதுக்கி அளித்துள்ளார். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக அப்போது அது நடைபெறாமல் போனது.
அடுத்து மீண்டும் படப்பிடிப்புகள் தொடங்கிய போது, மீண்டும் 20 நாட்கள் கொடுத்துள்ளார். ஆனால் லடாக் எல்லையில் விஜய் சேதுபதி நடிக்கும் காட்சிகளை எடுக்க வேண்டி இருந்தது. அங்கு இந்தியா- சீனா எல்லை பிரச்சனை வர மிண்டும் படப்பிடிப்பு நடத்த முடியாமல் போனது.
பின்னல் படப்பிடிப்பை வெளிநாட்டில் எடுக்கத் திட்டமிட்டு அதற்கு 20 நாட்கள் தேதிகள் ஒதுக்கியுள்ளார், ஆனால் அதுவும் புதிய மற்றும் இரண்டாம் கட்ட கொரோனா காரணமாகத் தள்ளிப்போனது.
ஒரு படத்துக்கு எத்தனை முறைதான் தேதிகளை ஒதுக்குவது என்று நினைத்த விஜய் சேதுபதி, லால் சிங் சர்தார் திரைப்படத்திலிருந்து விலகியதாகக் கூறப்படுகிறது.