சினிமா செய்திகள்
ஜோதிகாவின் கருத்தில் உறுதியாகவே இருக்கிறோம்.. சூர்யா அறிக்கை!


தஞ்சை பெரிய கோவில் பற்றி ஜோதிகா பேசியது கடந்த சில நாட்களாகச் சர்ச்சையாகி வரும் நிலையில், அவரது கணவர் சூர்யா காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சூர்யா வெளியிட்ட அறிக்கையில், “மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதாக இல்லை எஙிற கருத்து சமூக ஊடக விவாதங்களுக்கு அப்படியே பொருந்தும். ஒரு விருது வழங்கும் விழாவில் எப்போதோ ஜோதிகா அவர்கள் பேசியது, இப்போது ஊடகங்களில் செய்தியாகவும், சமூக ஊடகங்களில் விவாதமாகவும் மாறி இருக்கிறது.
‘கோவில்களைப் போலவே பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் உயர்வாகக் கருத வேண்டும்’ என்கிற கருத்தை ஜோதிகா வலியுறுத்தியதை, ‘சிலர்’ குற்றமாகப் பார்க்கிறார்கள். இதே கருத்தை விவேகானந்தர் போன்ற ஆன்மீகப் பெரியவர்களே சொல்லிருக்கிறார்கள். ‘மக்களுக்கு உதவினால், அது கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கை’ என்பது ‘திருமூலர்’ காலத்துச் சிந்தனை. நல்லோர் சிந்தனைகளைப் படிக்காத, காதுகொடுத்துக் கேட்காதவர்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லை.
பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் இறைவன் உறையும் இடமாகக் கருத வேண்டும் என்கிற கருத்தை, எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் வரவாகவே செய்கின்றனர். ‘கொரோனா தொற்று’ காரணமாக இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்திலும், எங்களுக்குக் கிடைத்த பேராதரவு நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் அளித்தது.
அறிஞர்கள், ஆன்மீகப் பெரியவர்களின் எண்ணங்களைப் பின்பற்றி வெளிப்படுத்திய அந்தக் கருத்தில் நாங்கள் உறுதியாகவே இருக்கிறோம். ‘மதங்களைக் கடந்து மனிதமே முக்கியம்’ எனக்கள் பிள்ளைகளுக்கும் சொல்லித்தர விரும்புகிறோம். தவறான நோக்கத்தோடு, தரக்குறைவாகச் சிலர் அவதூறு பரப்பும் போதெல்லாம், நல்லோர்கள், நண்பர்கள், ரசிகர்கள் எங்களுக்குத் துணை நிற்கிறார்கள். முகமறியாத எத்தனையோ பேர் எங்கள் சார்பாக அதில் அளிக்கிறார்கள். ஊடகங்கள் சரியான விதத்தில் இச்சர்ச்சையைக் கையாண்டன. ‘நல்ல எண்ணங்களை விதைத்து நல்ல செயல்களை அறுவடை செய்ய முடியும்’ என்கிற நம்பிக்கையை இவர்களே துளிர்க்கச் செய்கிறார்கள். எங்களுக்கு உறுதுணையாக நிற்கும் அனைவருக்கும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள்.” என்று சூர்யா குறிப்பிட்டு இருந்தார்.
மேலும் இதே போன்று, பொன்மகள் வந்தாள் திரைப்பட ரிலீஸ் சர்ச்சைகளுக்கும் தீர்வு கண்டு சூர்யா அறிக்கையை வெளியிடுவார் என்று நம்புவோமாக.
ஜோதிகா பேசியது அயோக்கியத்தனமா? அப்படி என்ன சொல்லிட்டாங்க ஜோதிகா?
சினிமா செய்திகள்
நடிகர் செந்தில் குடும்பத்தினர்களுக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி


தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகர்களில் ஒருவராகிய செந்தில் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. அப்பாவி பொதுமக்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் அரசியல்வாதிகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனை அடுத்து செந்தில் மற்றும் அவரது குடும்பத்தினர் விரைவில் கொரோனாவில் இருந்து குணமாக வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சினிமா செய்திகள்
#Vijay65 – வெளியான மாஸ் அப்டேட்!


தளபதி விஜய் நடிக்கும் 65வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்துக்கு இன்னும் பெயர் வைக்கப்படாத காரணத்தால் ‘விஜய் 65’ என்று அழைத்து வருகிறார்கள். ‘கோலமாவு கோகிலா’ மூலம் தமிழ்த் திரைக்கு இயக்குநராக அறிமுகமான நெல்சன் திலீப்குமார், ‘விஜய் 65’ படத்தை இயக்குகிறார். அவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்கி முடித்துள்ள ‘டாக்டர்’ படம் இன்னும் ரிலீஸ் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒரு சில வாரங்களில் டாக்டர் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
2022-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ள இந்தப் படத்தில், விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிப்பதாகவும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில், பிரபல நகைச்சுவை நடிகர் யோகி பாபு இந்த படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் படத்தில் பூஜா ஹெக்டேவுக்கு ரூபாய் 3 கோடி சம்பளம் என்று கூறப்படுகிறது. தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் இவருக்கு அங்கேயே ஒன்றரை கோடி முதல் இரண்டு கோடி ரூபாய் வரை மட்டுமே சம்பளம் தரப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழில் மார்க்கெட்டே இல்லாத பூஜாவிற்கு ரூபாய் மூன்று கோடி சம்பளமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அடுத்த ஆண்டு வரை பூஜாவின் கால்சீட் நிரம்பி இருந்ததாகவும், அவற்றை மாற்றி அமைப்பதற்காக அதிக தொகையை பூஜா கேட்டதாகவும் அதற்கு தயாரிப்பு தரப்பு ஒப்புக்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜார்ஜியா நாட்டில் விஜய்65 படத்தின் படப்பிடிப்புத் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இந்த மாத இறுதியில் பூஜா, படக்குழுவினருடன் கலந்து கொள்கிறாராம்.
சினிமா செய்திகள்
பார்த்திபன் – ஏ.ஆர்.ரகுமான் இணைந்த புதிய படம்!


தமிழ் சினிமாவில் புதுப் புது முயற்சிகளை செய்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தைத் தக்க வைத்திருப்பவர் இயக்குநர் மற்றும் நடிகர் பார்த்திபன்.
அவர் கடைசியாக ‘ஒத்த செருப்பு’ என்னும் படத்தை இயக்கி நடித்திருந்தார். அந்தப் படத்தில் அவர் மட்டும் தான் நடித்திருப்பார். அது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.
இந்நிலையில் அடுத்ததாக, ‘இரவின் நிழல்’ என்னும் படத்தை எடுக்கிறார் பார்த்திபன். இந்தப் படத்தை ஒரே ஷாட்டில் எடுத்து முடிக்கப் பார்த்திபன் முயன்றுள்ளார்.
இந்நிலையில் இப்போது இந்த படத்துக்கு இசையமைக்க உள்ளதை ஏ ஆர் ரகுமான் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது தெரிவித்துள்ளார். இதைக் குறிப்பிட்டு டிவீட் செய்த பார்த்திபன் இரவின் மடியில் படத்தில் 3 பாடல்கள் முடிந்துள்ளதாகவும், இன்னும் ஒரு ப்ரோமோஷன் பாடலுக்கு இசையமைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுவரை ரகுமானும் பார்த்திபனும் இணைந்து ஒரு திரைப்படத்தில் வேலை செய்ததே இல்லை. இதுவரை முதல் முறை ஆகும். இதனால் ரசிகர்கள் மத்தியில் ‘இரவின் நிழல்’ குறித்தான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
-
தமிழ்நாடு23 hours ago
தமிழகத்தில் நாளை முதல் ஊரடங்கா? பெரும் பரபரப்பு
-
இந்தியா2 days ago
முழு லாக்டவுன் அச்சம்: மாநிலத்தை விட்டு வெளியேறும் புலம்பெயர் தொழிலாளர்கள்!
-
வேலைவாய்ப்பு2 days ago
வ.ஊ.சிதம்பரனார் துறைமுகத்தில் வேலைவாய்ப்பு!
-
சினிமா செய்திகள்2 days ago
வெளிநாடுகளிலும் வசூல் மழை பொழியும் ‘கர்ணன்’- எவ்வளவு தெரியுமா?