Connect with us

சினிமா செய்திகள்

‘மாஸ்டர்’ ரிலீஸாவதற்கு முன்னரே லீக் ஆகும் என ‘அன்றே கணித்த சூர்யா’!

Published

on

நாளை உலகம் முழுவதும் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம், சினிமா தியேட்டர்களில் ரிலீஸாகிறது. இந்நிலையில் மாஸ்டர் படத்தின் சுமார் ஒரு மணி நேர காட்சிகள், துண்டு துண்டாக நேற்று மாலை வாக்கில் கசிந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த படக்குழு, செய்வதறியாமல் தவித்து வருகிறது.

குறிப்பாக மாஸ்டர் படத்தை தயாரித்த எக்ஸ்.பி ஃபிலிம் கிரேயேட்டர்ஸ், ‘மாஸ்டர் படக்குழு, லீக் செய்யப்பட்ட வீடியோக்களை பகிரவோ, ஃபார்வர்டு செய்யவோ வேண்டாமென கேட்டுக் கொள்கிறது. உங்களிடம் அது போன்ற காட்சிகள் வரும் பட்சத்தில் [email protected] என்ற இணையதளம் மூலம் அதை எங்களிடம் பகிருங்கள். நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளது.

படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ‘கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டு காலம் கஷ்டபட்டு மாஸ்டரை உங்களிடம் எடுத்து வந்திருக்கிறோம். நீங்கள் தியேட்டரில் வந்து படத்தைப் பார்த்து மகிழ்வீர்கள் என்கிற நம்பிக்கை மட்டுமே எங்களுக்கு இருக்கிறது. உங்களிடம் படத்தின் கசியவிடப்பட்ட காட்சிகள் வந்தால், அதை பகிர வேண்டாம். நன்றி. இன்னும் ஒரே நாளில் மாஸ்டர் உங்களுடையதாக ஆகும்’ என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ‘அயன்’ படத்தில் சூர்யா நடித்த காட்சி ஒன்று, இந்த சூழலை மையப்படுத்தி வைரலாக பரவி வருகிறது. அயன் படத்தில், வெளிநாட்டிலிருந்து திருட்டு சிடி கடத்தி வரும் சூர்யா, பிரபுவிடம் காரில் அதைக் காண்பிப்பார். அந்த சிடி-யில், ‘மாஸ்டர் காப்பி’ என்று எழுதப்பட்டிருக்கும். அந்தக் காட்சியின் ஸ்கிரீன்ஷாட்டைப் பகிர்ந்த பலரும், ‘அன்றே கணித்தார் சூர்யா’ என்று டிரெண்ட் செய்து வருகின்றனர்.

கொரோனா காலக்கட்டத்தில் சூர்யா, படத்தில் நடித்தப் பல காட்சிகள் உண்மையாக மாறின. அதை முன்வைத்து தான், ‘அன்றே கணித்தார் சூர்யா’ என்னும் டெம்பிளேட் பிரபலமானது. தற்போது மாஸ்டர் பட சிக்கலுக்கும் அந்த டெம்பிளேட் செட்டாகியுள்ளது.

 

Advertisement

சினிமா செய்திகள்

சொந்தமா ஒரு சங்கத்தைத் தொடங்கி மனைவியை தலைவர் ஆக்கிய டி.ராஜேந்தர்!

Published

on

By

சினிமா துறையில் பன்முகம் கொண்ட நடிகர் டி ராஜேந்தர் தனக்குத் தானே ஒரு தயாரிப்பாளர்கள் சங்கத்தை உருவாக்கிக் கொண்டு அந்த சங்கத்துக்குத் தனது மனைவி உஷா ராஜேந்தரை தலைவராக நியமித்துள்ளார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பதவிக்காக டி ராஜேந்தர் போட்டியிட்டார். அதில் எழுந்த பல குழப்பங்களால் சங்கத்தை விட்டே வெளியேறி தனக்கென தனியாக ஒரு தயாரிப்பாளர்கள் சங்கத்தை உருவாக்கினார் டி ராஜேந்தர். அதன் பின்னர் அந்த சங்கத்தின் தலைவராகவும் செயல்பட்டு வந்தார்.

தற்போது திடீரென தனது மனைவி உஷா ராஜேந்தரை தான் ஆரம்பித்த புதிய தயாரிப்பாளர்கள் சங்கத்துக்குத் தலைவராக நியமித்துள்ளார் டி ராஜேந்தர். அந்த சங்கத்தில் தன்னை சிறப்பு ஆலோசகராவும் நியமித்துக் கொண்டார். மேலும் சங்கத்தின் தலைவரை அறிமுகப்படுத்தி இன்று செய்தியாளர்கள் சந்திப்புக்கும் ஏற்பாடு செய்திருந்தார் டி ராஜேந்தர்.

செய்தியாளர்கள் சந்திப்பில் சிம்புவின் திருமணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, “சிம்புவின் திருமணத்தை அந்த ஈஸ்வரன் கைகளிலேயே கொடுத்துவிட்டேன்” எனப் பதிலளித்தார் டி ராஜேந்தர்.

Continue Reading

சினிமா செய்திகள்

’அடாவடி அப்பா’ மொமென்ட்… நெகிழ்ச்சி உடன் ஷேர் செய்த நடிகர் விஜய் சேதுபதி!- வீடியோ

Published

on

By

நடிகர் விஜய் சேதுபதி தனது தந்தையின் தைரிய குணம் குறித்த ஒரு நிகழ்வை தனது ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

நடிகர் சமுத்திரகணி நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள படம் ‘ஏலே’. இந்தப் படத்தின் ப்ரோமோஷனுக்காக ‘அடாவடி அப்பா’ என்ற தலைப்பில் சில நிமிடங்கள் தனது அப்பாவின் அடாவடி மொமென்ட் குறித்து ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.

அந்த வீடியோவில் நடிகர் விஜய் சேதுபதி கூறுகையில், “சின்ன வயசுல ஒரு முற நாங்க குடும்பத்தோட குற்றாளம் போயிட்டு ரயில்ல சென்னை வந்திட்டு இருந்தோம். அப்போ ரிசர்வ் பண்ணாத பெட்டியில வரும் போது ஒரு ஆளு ரொம்ப சத்தம் போட்டு எல்லாருக்கும் இடைஞ்சல் பண்ணிட்டு இருந்தாரு. சுத்தி இருந்தவுங்க எல்லாம் ஏதோ ஒரு வகையில அடக்க முயற்சி செய்தும் அந்த ஆளு அமைதியாவே உட்காரல.

அப்போ பெர்த்-ல படுத்திட்டு இருந்த எங்க அப்பா வேகமா எழுந்து கால் வச்சு அந்த சத்தம் போட்டுக்கிட்டு இருந்தவரை எட்டி உதச்சிட்டு பேசாம படுத்துட்டாரு. அவமானம் தாங்காம அந்த நபர் பயங்கரமா கத்தி, மிரட்டல் எல்லாம் கொடுத்திட்டு அமைதியா போயிட்டாரு. சென்னை வந்ததும் எதுவும் செய்யாம அமைதியாவே போயிட்டார்’ என்றார்.

மேலும் விஜய் சேதுபதி கூறுகையில், “சென்னை வந்ததும் அந்த நபர் மிரட்டிய மாதிரி அப்பாவ எதும் செஞ்சிடுவாரோன்னு பயந்து எங்க அப்பாட்டையே கேட்டேன். அதுக்கு அவரு ‘இல்லப்பா, அவரோட கவுரவம் அந்த எடத்துல அடி வாங்கிருச்சுன்னு அந்த ஆளு கத்திட்டு இருந்தான். ஆனா அவன் ஒரு கோளைன்னு அவனுக்கே தெரியும்’ன்னு சொன்னார்” என்றார்.

அப்பாவிடம் இருந்து தான் இன்றைய வாழ்க்கையில் தான் மிகவும் தைரியமாக இருப்பதாகவும் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

Continue Reading

சினிமா செய்திகள்

‘அண்ணாத்த’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு… சர்ப்ரைஸ் கொடுத்த சன் பிக்சர்ஸ்..!

Published

on

By

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

அண்ணத்த திரைப்படம் வருகிற நவம்பர் 2021-க்கு நிச்சயம் வெளியாகும் என சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையை ஒட்டி அண்ணாத்த படம் வருகிற நவம்பர் 4-ம் தேதி திரை அரங்கங்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் சிறுத்தை சிவா இந்தப் படத்தை இயக்கி உள்ளார். டி.இமான் இந்தப் படத்துக்காக இசை அமைத்துள்ளார்.

இந்தப் படத்தில் நடிகைகள் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, குஷ்பூ, மீனா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

Continue Reading
இந்தியா11 mins ago

கொரோனா தடுப்பூசி பற்றி தவறாக வதந்தி பரப்பினால் குற்றவியல் நடவடிக்கை: மத்திய அரசு எச்சரிக்கை

சினிமா செய்திகள்19 mins ago

சொந்தமா ஒரு சங்கத்தைத் தொடங்கி மனைவியை தலைவர் ஆக்கிய டி.ராஜேந்தர்!

சினிமா செய்திகள்44 mins ago

’அடாவடி அப்பா’ மொமென்ட்… நெகிழ்ச்சி உடன் ஷேர் செய்த நடிகர் விஜய் சேதுபதி!- வீடியோ

டிவி2 hours ago

இனி 6 மணியா..? மீண்டும் போட்டோ ஷூட்டில் இறங்கிய நடிகை சிவானி நாராயணன்!

சினிமா செய்திகள்2 hours ago

‘அண்ணாத்த’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு… சர்ப்ரைஸ் கொடுத்த சன் பிக்சர்ஸ்..!

சினிமா செய்திகள்3 hours ago

தான் நடிக்கும் படத்தை மொத்தக் குடும்பத்துடன் இணைந்து தயாரிக்கும் கீர்த்தி சுரேஷ்..!

சினிமா செய்திகள்3 hours ago

புகைப்படம், பெயர் எதையும் பயன்படுத்த அனுமதி இல்லை… அப்பாவுக்கு நோட்டீஸ் அனுப்பிய தளபதி!

இந்தியா3 hours ago

ரூ.100, ரூ.10, ரூ.5 பழைய ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது? – ரிசர்வ் வங்கி விளக்கம்

தமிழ்நாடு3 hours ago

“அவர மதுர பக்கம் வரச் சொல்லுங்கப்பா..!”- ஸ்டாலினை எச்சரித்த செல்லூர் ராஜூ

தமிழ்நாடு3 hours ago

ஒருபுறம் 200 பேருக்கு திருமணம், மறுபுறம் நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ்.. துடிதுடித்த கர்ப்பிணி!

வேலைவாய்ப்பு1 year ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா2 years ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா1 year ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு1 year ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா2 years ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலைவாய்ப்பு1 year ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

சினிமா செய்திகள்2 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வேலைவாய்ப்பு1 year ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு9 months ago

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

வீடியோ2 days ago

ஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ!

வீடியோ2 weeks ago

ஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்!

வீடியோ2 weeks ago

பூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ!

வீடியோ2 weeks ago

ஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ!

Tughlaq Durbar Teaser Poster
வீடியோ2 weeks ago

விஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்!

வீடியோ2 weeks ago

விக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்!

வீடியோ2 weeks ago

2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்!

வீடியோ3 weeks ago

சிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ!

சினிமா செய்திகள்3 weeks ago

இன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்!

கேலரி1 month ago

சஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி!

Trending