சினிமா செய்திகள்
‘பள்ளிப்படிப்பை பாதியில் விட்டேனா’ ட்விட்டரில் பொளந்து கட்டிய நடிகர் சித்தார்த்..!


நடிகர் சித்தார்த் பள்ளிப்படிப்பை பாதியில் விட்டவர் என்ற விமர்சனத்துக்கு எதிராக ட்விட்டரில் சித்தார்த் தனது படிப்பு விவரங்களை வெளியிட்டு ட்ரெண்ட் ஆகி வருகிறார்.
நடிகர் சித்தார்த் ட்விட்டரில் தொடர்ந்து விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார். சமீபத்தில் கைது செய்யப்பட்ட சூழலியல் ஆர்வலர் திஷா ரவியின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் டூல்கிட் குறித்தும் ட்வீட் செய்திருந்தார். மேலும், டெல்லி போலீஸ் கேவலமானவர்கள் என்றும் குறிப்பிடிருந்த சித்தார்த்-ஐ ட்விட்டர்வாசி ஒருவர் ‘பள்ளிப்படிப்பை பாதியில் விட்டவர் சித்தார்த். அடிப்படையற்ற விஷயங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்’ எனப் பதிவிட்டார்.
If you want to go watch a movie with friends, you message all of them which movie, what time and where to assemble before heading there…. This is what may be called a #Toolkit. The ugly version of this is what IT cells do. Stop the bullshit. #ShameOnDelhiPolice
— Siddharth (@Actor_Siddharth) February 14, 2021
Who is this person ? A school drop out may be ? I see him writing baseless stuff mostly provocative in nature . pic.twitter.com/80TCImSr6B
— Karuna Gopal (@KarunaGopal1) February 17, 2021
உடனடியாக அந்த ட்விட்டர்வாசியின் அத்தனை அக்கப்போர்களையும் விடாமல் எடுத்துப் பதிவு செய்யத் தொடங்கிவிட்டார் சித்தார்த். அந்த ட்விட்டர்வாசி ‘மோடியின் பொய்களையும் வாந்திகளையும் பரப்புபவர்’ எனக் குறிப்பிட்டுள்ளார் சித்தார்த். அந்த ட்விட்டர்வாசியும் தொடர்ந்து பொய்ப் புகார்களாக சித்தார்த் மேல் அடுக்க சித்தார்த் சளைக்காமல் அத்தனைக்கும் பதில் சொல்லிக் கொண்டே இருக்க நெட்டிசன்கள் பலரும் அந்த ட்விட்டர்வாசிக்கு எதிராக திரும்பி விமர்சித்து வருகின்றனர்.
This lady badgered me for months to attend her panel discussion at ISB in 2009, which I did, along with @JP_LOKSATTA. Back then too I was a Post Graduate and I spoke my mind. She however sold both her integrity and her memory to her master. Now spreads Modi lies and vomit. https://t.co/M9SHNqvRxy
— Siddharth (@Actor_Siddharth) February 17, 2021
நடிகர் சித்தார்த் ஒரு முதுகலை பட்டதாரி என்று சித்தார்த் ட்வீட் செய்வதற்கு முன்பே கமென்ட்களில் நெட்டிசன்கள் சித்தார்த்தை பெருமை பேசத் தொடங்கிவிட்டனர்.
சினிமா செய்திகள்
பிரபாஸ் நடித்து வரும் ‘சலார்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!


பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடித்த ’பாகுபலி’ மற்றும் ’பாகுபலி 2’ ஆகிய திரைப்படங்கள் இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் சூப்பர் ஹிட்டானது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் அவருடைய அடுத்தடுத்த படங்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் தற்போது அவர் ’ராதேஷ்யாம்’ ‘சலார் மற்றும் ஆதி புருஷ்’ ஆகிய மூன்று படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபாஸ் ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ள இந்த படத்திற்கு ரவி பஸ்ரூர் என்பவர் இசையமைத்துள்ளார் என்பதும் இந்த திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
𝐑𝐞𝐛𝐞𝐥𝐥𝐢𝐧𝐠 Worldwide #Salaar On 𝐀𝐩𝐫𝐢𝐥 𝟏𝟒, 𝟐𝟎𝟐𝟐 💥
We can't wait to celebrate with you all 🔥#Salaar14Apr22#Prabhas @prashanth_neel @VKiragandur @hombalefilms @shrutihaasan @BasrurRavi @bhuvangowda84 pic.twitter.com/BmWzzbOy1s
— Prashanth Neel (@prashanth_neel) February 28, 2021
சினிமா செய்திகள்
அம்மாவாக போகும் சிம்பு, தனுஷ் பட நடிகை: வைரல் புகைப்படம்


சிம்பு மற்றும் தனுஷ் படங்களில் நாயகியாக நடித்த நடிகை விரைவில் அம்மாவாக போகும் தகவலை மகிழ்ச்சியுடன் ரசிகர்களுக்கு பகிர்ந்து உள்ளார் என்பதும் இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது,
சிம்பு நடித்த ’ஒஸ்தி’ மற்றும் தனுஷ் நடித்த ’மயக்கம் என்ன’ ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் ஒரே நேரத்தில் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை ரிச்சா கங்கோயாபாத். இந்த படங்களை அடுத்து ஒரு சில தெலுங்கு படங்களில் மட்டும் நடித்து விட்டு மேல்படிப்புக்காக வெளிநாடு சென்றார் என்பதும் அங்கேயே ஜோ லங்கொல்லா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது
We've been keeping a LITTLE secret 🤫
Joe and I are so excited to finally share with everyone….
BABY LANGELLA COMING THIS JUNE!
Our hearts are so full of happiness and gratitude 🌺. We can't wait to meet our little bundle of joy! 👶🏻💖🤰🏻 pic.twitter.com/bSmO6GyUFo
— Richa Langella (Gangopadhyay) (@richyricha) February 28, 2021
சினிமா செய்திகள்
மகன் விஜய்யிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.ஏ.சி!


நடிகர் விஜய்க்கும் அவரது தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் கடந்த சில நாட்களாக மோதல் போக்கு நிலவி வந்தது. குறிப்பாக சந்திரசேகரின் அரசியல் நிலைப்பாடுகளை விஜய் வெளிப்படையாக கண்டித்து அறிக்கை வெளியிட்டார். இதனால் குடும்பத்தில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து ஊடகங்களுக்குப் பேட்டி கொடுத்த சந்திரசேகர், ‘நான் விஜய்யை எச்சரிக்கின்றேன்’ என்றால்லாம் பன்ச் அடித்தார்.
இதனால் விஜய் ரசிகர்களும் அவர் மீது கொதிப்பில் இருந்தனர். இந்நிலையில் அவர் விஜய்யிடம் மனிப்பு கேட்டு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வந்துள்ளது.
இருவருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக பேச்சுவார்த்தை ஏதும் கிடையாது என்றும் விஜய்யின் தாயார் ஷோபா கூறியிருந்தார். சில மாதங்களுக்கு முன்பு விஜய் பெயரில் அரசியல் கட்சியை சந்திர சேகர் தொடங்கினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அடுத்த சில நாட்களில் தனக்கும் இந்த கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், தனது ரசிகர்கள் தந்தை சந்திர சேகர் தொடங்கிய கட்சியில் சேரக்கூடாதும் என்றும் கூறி விஜய் அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக மகனுக்கும் தனக்கும் இடையே நிலவி வரும் மோதல் போக்கை முடிவுக்கு கொண்டுவர சந்திரசேகர் விரும்பியுள்ளார். இதன் காரணமாக மகனிடம் மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது இன்னும் ஒரே மாதத்தில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. இந்த தேர்தலில் நேரடி அரசியலில் குதிக்கலாம் என்கிற முடிவில் எஸ்.ஏ.சி இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் தான் இந்த மன்னிப்பு கேட்கும் விவகாரம் குறித்தான தகவலும் வந்துள்ளது.
-
சினிமா செய்திகள்2 days ago
நயன்தாரா படத்தில் நாயகி ஆனார் ‘செல்லம்மா’ பட பாடகி: ஹீரோ யார் தெரியுமா?
-
ஆரோக்கியம்1 day ago
பாலக்கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!
-
தமிழ்நாடு2 days ago
முதல்வர் வேட்பாளர் நான் தான்: கமல் அறிவிப்பால் சரத்குமார் அதிர்ச்சியா?
-
தமிழ்நாடு2 days ago
மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா: தேர்தலிலும் போட்டி!