Connect with us

சினிமா செய்திகள்

நீச்சல் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலம்… அசத்திய நடிகர் மாதவனின் மகன்..!

Published

on

நடிகர் மாதவன் மகன் வேதாந்த் சர்வதேச நீச்சல் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலம் பதக்கம் வென்று அசத்தி உள்ளார்.

நடிகர் மாதவனின் மகன் வேதாந்த். இவர் மிகச்சிறந்த நீச்சல் வீரர். தொடர்ந்து தேசிய, சர்வதேச நீச்சல் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளைக் குவித்து வருகிறார். சமீபத்தில் ஐரோப்பாவில் உள்ள லத்வியா நாட்டில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டார் வேதாந்த் மாதவன்.

இந்தப் போட்டியில் இந்தியாவுக்காக வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார் வேதாந்த். 15 வயதான வேதாந்த் பதக்கம் வென்றதற்கு பல தரப்பினரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து நடிகர் மாதவனும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து பெருமை தெரிவித்துள்ளார்.

இந்தப் போட்டியில் இந்தியாவுக்கு 1 தங்கம் மற்றும் 2 வெண்கலம் பதக்கங்கள் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

A post shared by R. Madhavan (@actormaddy)

Advertisement

சினிமா செய்திகள்

செய்தியாளர் சந்திப்பில் அனைவருக்கும் நன்றி கூறிய விவேக் மனைவி!

Published

on

By

நடிகர் விவேக் அவர்களுக்கு நேற்று முன்தினம் மாரடைப்பு ஏற்பட்டு நேற்று காலமான நிலையில் அவருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்ய தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இதனை அடுத்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அவருடைய உடல் 78 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யப்பட்டது.

இந்த நிலையில் சற்று முன் விவேக்கின் மனைவி அருள்செல்வி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தனது கணவருக்கு மத்திய மாநில அரசுகள் கொடுத்த கௌரவத்திற்கு நன்றி என்றும் குறிப்பாக மாநில அரசு, அரசு மரியாதையுடன் எனது கணவருக்கு இறுதி சடங்கு செய்ய ஏற்பாடு செய்தமைக்கு நன்றி என்றும் தெரிவித்தார்.

மேலும் காவல்துறை சகோதரர்கள் ஆரம்பத்திலிருந்து கடைசிவரை பாதுகாப்பு அளித்தார்கள் என்றும் அவர்களுக்கு எனது நன்றி என்றும் தெரிவித்தார். மேலும் ஊடகத்துறையினர் அனைவருக்கும் நன்றி என தெரிவித்த அவர், நேற்றைய எனது கணவரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட அவருடைய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்தார். இந்த பேட்டியின் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

Continue Reading

சினிமா செய்திகள்

நடிகர் அதர்வா முரளிக்கு கொரோனா; வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார்!

Published

on

By

தமிழ் திரையுலகில் ஏற்கனவே ஒரு சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் ஒரு சிலருக்கு கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர் என்பதையும் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி தமிழ் திரையுலகை ஹீரோக்களில் ஒருவரான அதர்வா முரளிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தன்னுடைய வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல் வெளிவந்துள்ளது.

இதுகுறித்து நடிகர் அதர்வா முரளி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: எனக்கு கடந்த சில நாட்களாக கொரோனா அறிகுறி இருந்ததை அடுத்து கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன். பரிசோதனையின் முடிவில் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து நான் வீட்டில் என்னை நானே தனிமை படுத்துக்கொண்டேன். மருத்துவர்களின் அறிவுரைப்படி கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி வருகிறேன், விரைவில் நான் குணம் ஆகி விடுவேன் என்று நம்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா காரணமாக அதர்வா நடிக்க வேண்டிய திரைப்படங்களின் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

Continue Reading

சினிமா செய்திகள்

ஒரு திரைப்படத்தை இயக்க இருந்தாரா விவேக்: இதுவரை வெளிவராத தகவல்!

Published

on

By

மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் ஒரு திரைப்படத்தை இயக்க இருந்தார் என்ற புதிய தகவல் வெளிவந்து கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அஜித் நடித்த விஸ்வாசம் உள்பட பல வெற்றிப் படங்களை தயாரித்த சத்யஜோதி நிறுவனத்தின் உரிமையாளர் தியாகராஜன் அவர்கள் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

பத்மஸ்ரீ திரு.விவேக்கின் மறைவு நாம் அனைவரையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் ஒரு நல்ல மனிதர், சமூக ஆர்வலர் நகைச்சுவையாளர், பகுத்தறிவாளர், மட்டுமல்லாது எதிர்கால ஒரு சிறந்த இயக்குநரையும் நாம் இழந்துவிட்டோம். ஆம், கடந்த ஒரு மாத காலமாக எங்கள் சத்யஜோதி நிறுவனத்திற்கு வந்து எங்களது தயாரிப்பில் தான் அவருடைய முதல் படத்தை இயக்க வேண்டும் என்று விருப்பப்பட்டு, பலமுறை ஆலோசனைகளிலும் ஈடுபட்டு, படத்திற்கான முன்னேற்பாடுகளையும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து கொண்டிருக்கும் தருவாயில், அவர் மறைந்த செய்தி எங்களை மிகுந்த வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

அவர் ஒரு சிறந்த இயக்குனர் என்ற மற்றொரு பரிணாமத்தை நம்மிடையே காண்பிக்கும் முன்பே இறைவனடி சேர்ந்தது நமது துரதிர்ஷ்டமே. அவருடைய ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக்கொள்கிறோம்’ என்று தெரிவித்துள்ளது. இதனை அடுத்து ஒரு நல்ல நகைச்சுவை நடிகரை மட்டுமின்றி ஒரு சிறந்த இயக்குனரையும் நாம் இழந்து விட்டோம் என்பது தெரியவருகிறது.

Continue Reading
தமிழ்நாடு2 hours ago

தமிழகத்தில் ஊரடங்கு: தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு

வேலைவாய்ப்பு3 hours ago

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 hours ago

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 hours ago

தேசிய தாவர சுகாதார மேலாண்மை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 hours ago

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு4 hours ago

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு4 hours ago

ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

கிரிக்கெட்5 hours ago

டாஸ் வென்ற பெங்களூர் பேட்டிங்: தொடர் வெற்றி பெறுவாரா கோஹ்லி?

கிரிக்கெட்6 hours ago

நேற்றைய போட்டியில் நடராஜன் களமிறக்கப்படாதது ஏன்? விவிஎஸ் லட்சுமண் விளக்கம்!

தமிழ்நாடு6 hours ago

நடிகர் விவேக் மரணத்திற்கு தடுப்பூசி காரணமா? சீமான் விளக்கம்

வேலைவாய்ப்பு1 year ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா2 years ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா2 years ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு2 years ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா2 years ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

சினிமா செய்திகள்3 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

சினிமா3 years ago

நடிகை அமலா பால் முதல் முறையாகப் பிகினி உடையில் கவர்ச்சி போட்டோ!

வீடியோ3 months ago

ஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ!

வீடியோ3 months ago

ஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்!

வீடியோ3 months ago

பூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ!

வீடியோ3 months ago

ஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ!

Tughlaq Durbar Teaser Poster
வீடியோ3 months ago

விஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்!

வீடியோ3 months ago

விக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்!

வீடியோ3 months ago

2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்!

வீடியோ4 months ago

சிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ!

சினிமா செய்திகள்4 months ago

இன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்!

கேலரி4 months ago

சஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி!

Trending