சினிமா
பிகில் பட ஆடியோ வெளியீட்டுக்கு புதிய போஸ்டர் வெளியீடு…

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் படத்தின் விஜய் தன்னுடைய கையில் விஜய் நிற்பது போன்ற ஆடியோ வெளியீட்டுக்கான புதிய போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. தீ பிடித்த புட்பால்கள் சூழ கைலி மற்றும் தன்னுடைய புட் பால் டீம் டீ-சர்ட்டுடன் மாஸாக நிற்கிறார் விஜய்.
பிகில் படத்தின் ஆடியோ வெளியீடு செப்.19ம் தேதி சென்னையில் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. அந்த நிகழ்ச்சி சன் டிவியில் செப்.22ம் தேதி அதாவது ஞாயிறு மாலை 6:30க்கு ஒளிபரப்பாகிறது.
இதற்கிடையே விஜய் ஆடியோ வெளியீட்டுக்கு வரும் ரசிகர்கள் பேனர், கட்-அவுட் ஏதும் வைக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளார். சமீபத்தில் பள்ளிகரணையில் அதிமுக நிர்வாகி வைத்த பேனரால் சுபஸ்ரீ என்ற இளம் பெண் உயிரிழந்ததை தொடர்ந்து அரசியல் கட்சியினர், நடிகர்கள் உட்பட பலரும் பேனர், கட்-அட் வைக்க கூடாது என உத்தரவிட்டுள்ளனர்.
அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக விஜய் நடிக்கின்றார். இதில் நயன்தாரா, யோகி பாபு, ஜாகி ஜெராப், கதிர் மற்றும் விவேக் ஆகியோர் நடித்துள்ளனர். இசை ஏ.ஆர்.ரஹ்மான். இரட்டை வேடத்தில் புட் பால் கோச்சாக விஜய் நடித்துள்ள இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சினிமா செய்திகள்
அஜித்தின் வலிமை ஷூட்டிங் தொடுங்குவது எப்போது? எப்போது வெளியாகும்?

நேர்கொண்ட பார்வை திரைப்படத்தைத் தொடர்ந்து அஜித் மீண்டும் எச்.விநோத் உடன் இணைந்துள்ளார்.
இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் டிசம்பர் 13-ம் தேதி முதல் தொடங்குகிறது. அஜித் இதில் போலீஸ் வேடத்தில் நடிப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.
வலிமை திரைப்படம் 2020 தீபாவளிக்கு வெளியாகும்.
தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தை அடுத்து மீண்டும் அஜித்தை வைத்துக் காவல் துறை மையமான கதையையே எச்.விநோத் கூறியுள்ளார்.
இந்த திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார். சாட்டிலைட் உரிமை ஜீ நிறுவனம் பெற்றுள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளிலும் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது.
சினிமா செய்திகள்
பெண்களை மதிப்பவன் தான் பாதுகாப்பான நாயகன்; தெலுங்கானா என்கவுண்டருக்கு ஆதரவாக நயன்தாரா!

தெலுங்கானா மாநிலத்தில் 27 வயது கால் நடை மருத்துவரான திஷா (பெயர் மாற்றம்) பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இந்த குற்றவாளிகளைக் கைது செய்த காவல் துறை என்கவுட்டர் செய்தது.
என்கவுட்டரில் ஈடுபட்ட காவலர்களுக்கு உலகம் முழுவதும் பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகிறனர். தற்போது நயன்தாரா இந்த என்கவுண்டருக்கு ஆதரவாக நயன்தாராவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நயன்தாரா வெளியிட்டுள்ள அறிக்கையில், “சரியான நேரத்தில் வழங்கப்படும் நீதிக்கு இணையில்லை. இந்த கூற்று இன்று உன்மையாகியிருக்கிறது. உண்மையான நாயகர்களால் தெலுங்கானா காவல் அதிகாரிகள் நீதியை நிலைநாட்டியிருக்கிறார்கள். காட்டுமிராண்டிகளின் ஈனத்தனமான சட்டத்திற்குப் புறம்பாகப் பெண் மீது காட்டப்பட்ட வன்முறைக்கு எதிராகத் தீர்க்கமான பதிலளித்துள்ளார்கள்.
பெண்களின் முன்னேற்றத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்வது நம் கடமை. இந்த நடவடிக்கை என்பது மிக சரியாக வழங்கப்பட்ட நீதி. இதுவே நியாயமான நடவடிக்கை என அழுத்திச் சொல்வேன்.
நாட்டில் உள்ள பெண்கள் அனைவரும் இந்த நாளை, தேதியை பெண்களுக்குச் சரியான நியாயம் கிடைத்த நாளாகக் குறித்து வைத்துக் கொள்ளலாம். பெண்களுக்கு இது சற்றே ஆறுதல். அவர்களுக்கு எதிராக வன்புணர்வு செய்யும் காட்டுமிராண்டிகளுக்கு இந்த நடவடிக்கை சற்றேனும் பயன்தரும்.
மனிதம் என்பது அனைவரிடத்தும் சரிசமமாக மரியாதை தருவது, அன்பு செலுத்துவதும், இரக்கம் செலுத்துவதும் ஆகும். நீதி கிடைத்திருக்கும் இத்தருணம் மகிழ்ச்சியே என்றாலும், நாம் நம் குழந்தைகளுக்குப் பெண் பாதுகாப்பு குறித்து கல்வியைக் கற்றுக்கொடுக்க வேண்டியது அவசியம். குறிப்பாய் நம் ஆண் குழந்தைகளுக்குப் பெண்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று கற்று தர வேண்டும். பெண்களை மதிப்பவன் தான் பாதுகாப்பான நாயகன் என்பதை அவர்கள் மனதில் பதிய வைக்க வேண்டும்.
எதிர்கால உலகைப் பெண் மீதான வன்முறைக்கு எதிரான, அன்பான உலகாக மாற்ற வேண்டியது நம் கடமை. அப்போது தான் நாம் நிம்மதியான பெருமூச்சுடன் அன்பை அனைவரிடத்தும் பகிர்ந்துகொள்ள முடியும்.” என்று அறிக்கையில் நயன்தார குறிப்பிட்டு இருந்தார்.
வீடியோ
ரஜினிகாந்த்தின் தர்பார் திரைப்படப் பாடல்கள் – வீடியோ!

ரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் திரைப்படம் தர்பார். ஏற்கனவே இந்த படத்தின் சும்மா கிழி பாடல் வெளியாகி ரசிகர்களிடையில் பெரும் வரவேற்பைப் பெற்றது. மறுபக்கம் அந்த பாடல், ஐயப்பன் பக்தி பாடல் போல உள்ளது என்று விமர்சனத்துக்குள்ளானது.
இந்நிலையில் தர்பார் படத்தின் பிற பாடல்கள் அனைத்தும் வெளியாகியுள்ளன.
அவற்றை இங்கு வீடியோ வடிவில் கேட்டு மகிழுங்கள்.
-
தினபலன்3 days ago
உங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (07/12/2019)
-
சினிமா செய்திகள்1 day ago
பெண்களை மதிப்பவன் தான் பாதுகாப்பான நாயகன்; தெலுங்கானா என்கவுண்டருக்கு ஆதரவாக நயன்தாரா!
-
தினபலன்2 days ago
உங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (08/12/2019)
-
தமிழ் பஞ்சாங்கம்2 days ago
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (08-12-2019)