வணிகம்
2,800 ஊழியர்களை பணிக்கு எடுக்கும் வால்மார்ட்.. சென்னை இளைஞர்களுக்கு ஜாக்பாட்!


வால்மார்ட் லேப்ஸ் இந்தியா நிறுவனம் இந்தியாவில் 2,800 ஊழியர்களை பணிக்கு எடுக்க முடிவு செய்துள்ளது.
பெங்களூருவில் வால்மார்ட் நிறுவனத்தின் கீழ் 3,500 நபர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது கூடுதலாக 2,000 ஊழியர்களை பணிக்கு எடுக்க உள்ளது.
அதுமட்டுமல்லாமல், சென்னையில் புதியதாக வர்த்தகத்தைத் தொடங்க முடிவு செய்துள்ள வால்மார்ட், முதற்கட்டமாக 800 ஊழியர்களை பணிக்கு எடுக்கிறது.
அடுத்த இரண்டு வருடத்தில் சென்னையில் மட்டும் 2,000 ஊழியர்கள் பணிபுரியும் அளவில் வர்த்தகத்தை மேம்படுத்த வால்மார்ட் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
பர்சனல் பைனான்ஸ்
திடீர் பணத் தேவையா? வேகமாகக் கடன் பெற 6 வழிகள்!


திடீர் பணத் தேவை என்பது யாருக்கு வேண்டும் என்றாலும் வரலாம். எனவே ஒவ்வொருவரும் குறைந்தது தங்களது 6 மாத சம்பளத்துக்கு இணையான தொகையைச் சேமிப்பில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆனால் இது பலரும் செய்வதில்லை. இப்படி சேமிப்பு இல்லாத போது, அவசரக் காலத்தில் மருத்துவம் அல்லது பிற செலவுகளுக்குப் பணம் வேண்டும் என்றால் கடன் பெறுவது என்பது முக்கியமான ஒன்று. எனவே அவசரக் காலத்தில் வேகமாகக் கடன் அளிக்கும் திட்டங்களை இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.
பிக்சட் டெபாசிட் எதிரான கடன்
பிக்சட் டெபாசிட்டில் சேமித்து வந்தால், அதில் உள்ள தொகையில் 90 முதல் 95 சதவீத தொகையைக் கடனாகப் பெற முடியும். வங்கிகள் இந்த திட்டத்தின் கீழ் கடன் பெறும் போது பிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்துடன் 2 சதவீதம் கூடுதலாக வட்டியை வசூலிக்கின்றன.
தங்க நகைக் கடன்
தனிநபர் கடன் திட்டங்களுடன் ஒப்பிடும் போது வீட்டில் தங்க இருந்தால், சில மணி நேரங்களில் வங்கிகளில் கடன் பெற முடியும். தனிநபர் கடனை விட வட்டி விகிதமும் குறைவு. எனவே தன் இந்தியாவின் தென் மாநிலங்களில் தங்கம் வாங்குவதை ஒரு சேமிப்பாக் கருதுகின்றனர்.
பங்குகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்டு எதிரான கடன் திட்டங்கள்
பங்குச்சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து வந்தால், அதில் உள்ள தொகையில் 50 சதவீதம் வரை கடனாக சில நிறுவனங்கள் அளிக்கின்றன. தனிநபர் கடனுக்கு இணையான வட்டி விகிதம் வசூலிக்கப்படும்.
முன் அங்கீகரிக்கப்பட்ட தனிநபர் கடன்கள்
அவசர காலத்தில் அதிக கடன் பெறும் ஒரு திட்டமாக முன் அங்கீகரிக்கப்பட்ட தனிநபர் கடன் திட்டம் உள்ளது. சம்பள வங்கி கணக்கு வைத்துள்ளவர்களுக்கான கடன் திட்டமாக இது உள்ளது.
கிரெடிட் கார்டு எதிரான கடன் திட்டங்கள்
சில கிரெடிட் கார்டு நிறுவனங்கள், சரியாக கிரெடிட் கார்டு கடனை செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இன்ஸ்டண்ட் கடனை வழங்குகின்றன. ஆனால் இந்த திட்டத்துக்குத் தனிநபர் கடன் திட்டத்தை விட கூடுதல் வட்டி வசூலிக்கப்படுகிறது. கிரெடிட் கார்டு வரம்பிற்குள் கடன் பெறும் போது கூடுதலாக ஜிஎஸ்டி 18 சதவீதமும் செலுத்த வேண்டி வரும்.
இன்சூரன்ஸ் திட்டங்கள் எதிரான கடன்
எண்டொவ்மெண்ட் இன்சூரன்ஸ் பாலிசிகள் எடுத்து இருந்தால், 3 அல்லது 5 வருடங்கள் தொடர்ந்து ப்ரீமியம் தொகையைச் செலுத்திய பிறகு, அதில் உள்ள தொகையில் 80 முதல் 90 சதவீதம் வரை கடனாகப் பெறலாம். தங்க நகைக் கடனுக்கு நிகரான வட்டி விகிதம் வசூலிக்கப்படும்.
வணிகம்
பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட் 2021-2022!


2021-2022 நிதியாண்டுக்கான பட்ஜெட் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.
பட்ஜெட் கூட்டத்தின் முதல் அமர்வு ஜனவரி 29-ம் தேதி தொடங்கும். பிப்ரவரி 15-ம் தேதி வரை பட்ஜெட் கூட்டம் நடைபெறும்.
ஜனவரி 29-ம் தேதி நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடக்கி வைப்பார்.
பட்ஜெட் கூடத்தின் இரண்டாம் கட்டம் மார்ச்-8 முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெறும்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்வார்.
பர்சனல் பைனான்ஸ்
புதிய வேலை கிடைத்துவிட்டதா? Notice period முடிவதற்குள் அங்கு செல்ல வேண்டுமா? இதோ உங்களுக்கு அதிர்ச்சி செய்தி!


ஒரு நிறுவனத்தில் பணிபுரியப் பிடிக்காமல் வேறு வேலைக்குச் செல்ல ராஜிமா செய்தால் notice period-ல் சில காலம் வேலை செய்ய வேண்டி வரும் அது ஒரு மாதம் முதல் 3 மாதங்கள் வரை இருக்கும். அது வேலை செய்யும் நிறுவனம் மற்றும் பணியில் இருக்கும் பொறுப்புகளைப் பொருத்து மாறும்.
இதில் என்ன அதிர்ச்சி செய்தால், இப்படி notice period-ஐ முடிக்காமல் முன்பு எல்லாம் வேறு பணிக்கு ஈசியா சென்றுவிடுவார்கள். ஆனால் இனி வரும் காலங்களில் notice period-ஐ முடிக்காமல் வேறு வேலைக்குச் செல்லும் போது செலுத்த வேண்டிய தொகைக்கு, 18 சதவீதம் ஜிஎஸ்டி சேர்த்துச் செலுத்த வேண்டும்.
குஜராத் அத்தாரிட்டி ஆப் அட்வான்ஸ் ரூலிங் படி, notice period-ஐ முடிக்காமல் வேறு வேலைக்கு செல்ல வேண்டும் என்றால், அதற்காகப் பிடிக்கப்படும் பணத்தில் 18 சதவீதம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். இது ஊழியர்களின் சம்பள நிலுவைத் தொகையிலிருந்து பிடித்தம் செய்யப்படும்.
எனவே வேறு வேலை கிடைத்துவிட்டது என்ற காரணத்துக்காக notice period-ஐ முடிக்காமல் செல்ல விரும்பும் ஊழியர்களுக்கு இது அதிர்ச்சி அடையும் செய்தியாக அமைந்துள்ளது.