வணிகம்
ஜனவரி மாதம் முதல் டிவி மற்றும் பிற எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விலை உயரும்!
எல்ஜி நிறுவனம் தங்களது எலக்ட்ரிக் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் விலை 7 முதல் 8 சதவீதம் வரை உயரும் என்று தெரிவித்துள்ளது.


எல்.ஈ.டி டிவி மற்றும் பிரிட்ஜ் உள்ளிட்ட பிற எலக்ட்ரிக் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் விலை ஜனவரி மாதம் முதல் உயரும் என்று தகவல்கள் கூறுகின்றன.
எலக்ட்ரிக் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விலை உயர்வு குறித்து செய்தி வெளியிட்டுள்ள பிடிஐ, எல்.ஈ.டி டிவி, பிரிட்ஜ், ஏசி மற்றும் வாஷிங் மெஷின் போன்ற பொருட்களின் விலை ஜனவரி மாதம் முதல் 10 சதவீதம் வரை உயரும் என்று எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளது.
பானாசோனிக் இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தங்களது தயாரிப்புகளின் விலை 6 முதல் 7 சதவீதம் வரை விலை ஜனவரி மாதம் அதிகரிக்கும். மேலும் ஜூன் இறுதியில் 11 சதவீதமாக விலை அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
எல்ஜி நிறுவனம் தங்களது எலக்ட்ரிக் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் விலை 7 முதல் 8 சதவீதம் வரை உயரும் என்று தெரிவித்துள்ளது.
வணிகம்
தொடர்ந்து அதிகரிக்கும் தங்கம் விலை( 22/04/2021)!


இன்று காலை (22/04/2021) சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 26 ரூபாய் அதிகரித்து 4,537 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 208 ரூபாய் அதிகரித்து 35,600 ரூபாயாக அதிகரித்துள்ளது.
சுத்த தங்கமான 24 காரட் தங்கம் விலை கிராமுக்கு 4896 ரூபாய் என விற்கப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது கிராமுக்கு ரூ.1.60 பைசா குறைந்தது, 75.70 ரூபாயாக உள்ளது. கிலோ வெள்ளி 75,700 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தினசரி தங்கம் விலை நிலவரம்.
பர்சனல் பைனான்ஸ்
மகிழ்ச்சி.. இனி ஏடிஎம் மையங்களில் ‘கூகுள் பே, பேடிஎம்’ பயன்படுத்தியும் பணம் எடுக்கலாம்!


நீண்ட காலமாகக் கூறப்பட்டு வந்த யுபிஐ செயலிகள் மூலம் ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கலாம் என்ற சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே கூகுள் பே, பேடிஎம், பிம், அமேசான் பே, போன் பே செயலிகள் மூலமாகப் பணம் எடுக்க முடியும்.
யுபிஐ செயலிகள் மூலமாக ஏடிஎம் நிலையங்களில் பணம் எடுக்கும் முறையை, NCR கார்ப்ரேஷன் அறிமுகம் செய்துள்ளது. இதை “Interoperable Cardless Cash Withdrawal –ICCW”. என்று கூறுகின்றனர்.
யுபிஐ செயலிகள் மூலமாக ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பது எப்படி?
1) யுபிஐ செயலிகள் மூலமாக ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க கூகுள் பே, பேடிஎம், பிம், அமேசான் பே, போன் பே என ஏதேனும் ஒரு யுபிஐ செயலி உங்கள் மொபைல் போனில் இருக்க வேண்டும்.
2) அந்த செயலிகள் உங்கள் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும்.
3) யுபிஐ செயலிகளில் உள்ள QR குறியீடு ஸ்கான் செய்யும் முறை மூலமாக, ஏடிஎம் இயந்திரங்களில் உள்ள QR குறியீட்டை ஸ்கான் செய்த பிறகு எவ்வளவு பனம் தேவை என்று உள்ளிட வேண்டும்.
4) பணத்தை உள்ளிட்ட பிறகு, 4 அல்லது 6 இலக்க யுபிஐ பின் எண்ணை உள்ளிட்டால், வங்கி கணக்கிலிருந்து பணம் பிடிக்கப்பட்டு, ஏடிஎம் மூலம் பணம் விநியோகிக்கப்படும்.
யுபிஐ செயலிகள் மூலமாக ஏடிஎம் மையங்களில் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 5 ஆயிரம் ரூபாய் வரையில் மட்டுமே பணம் எடுக்க முடியும்.
வணிகம்
நகை வாங்க சரியான நேரம் (20/04/2021)!


இன்று காலை (20/04/2021) சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 45 ரூபாய் குறைந்து 4,450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 360 ரூபாய் அதிகரித்து 35,600 ரூபாயாக அதிகரித்துள்ளது.
சுத்த தங்கமான 24 காரட் தங்கம் விலை கிராமுக்கு 4809 ரூபாய் என விற்கப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது கிராமுக்கு ரூ.1.40 பைசா குறைந்தது, 73.60 ரூபாயாக உள்ளது. கிலோ வெள்ளி 73,600 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தினசரி தங்கம் விலை நிலவரம்.
-
தமிழ்நாடு2 days ago
கூடுதல் மதிப்பெண்களுகாக பொதுத்தேர்வு என்பது உண்மையா? பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
-
வேலைவாய்ப்பு2 days ago
தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்தில் வேலைவாய்ப்பு!
-
கிரிக்கெட்2 days ago
CSK உடையில் தளபதி விஜய் – வைரல் புகைப்படம்!
-
கிரிக்கெட்2 days ago
வெற்றி இலக்கை நெருங்கிவிட்ட ஐதராபாத்: பஞ்சாபிற்கு மீண்டும் தோல்வியா?