வணிகம்
எஸ்பிஐ வங்கியில் இன்று முதல் அமலுக்கு வந்த புதிய ஏடிஎம் விதிமுறைகள்!


எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையங்களில் தினசர் பணம் எடுக்கும் வரம்பினை 40,000 ரூபாயில் இருந்து 20,000 ரூபாயாக இன்று (அக்டோபர் 31) முதல் குறைத்துள்ளனர்.
1. கிளாஸிக் மற்றும் மேஸ்ட்ரோ டெபிட் கார்டுகளில் இருந்து பணம் எடுக்கும் வரம்பினை மட்டும் எஸ்பிஐ வங்கி 2018 அக்டோபர் 31-ம் தேதி முதல் குறைத்துள்ளது.
2. இதுவே எஸ்பிஐ ஏடிஎம் மையங்களில் இருந்து அதிகப்படியான பணம் எடுக்க வேண்டு என்றால் உயர் மதிப்பு டெபிட் கார்டுகளைப் பெற வேண்டும்.
3. ரொக்க பணம் பரிவர்த்தனையினைக் குறைத்து டிஜிட்டல் பரிவர்த்தனையினை ஊக்குவிக்கும் ஒரு கட்ட நடவடிக்கை இது என்றும் எஸ்பிஐ வங்கியில் இருந்து செய்தி சுருள் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
4. மேலும் ஏடிஎம் மையங்களில் மோசடி நடைபெறும் போது ஏற்படும் இழப்புகளைக் குறைக்கவே இந்த முடிவு என்றும் தெரிவித்துள்ளனர்.
வணிகம்
தொடர்ந்து அதிகரிக்கும் தங்கம் விலை( 22/04/2021)!


இன்று காலை (22/04/2021) சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 26 ரூபாய் அதிகரித்து 4,537 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 208 ரூபாய் அதிகரித்து 35,600 ரூபாயாக அதிகரித்துள்ளது.
சுத்த தங்கமான 24 காரட் தங்கம் விலை கிராமுக்கு 4896 ரூபாய் என விற்கப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது கிராமுக்கு ரூ.1.60 பைசா குறைந்தது, 75.70 ரூபாயாக உள்ளது. கிலோ வெள்ளி 75,700 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தினசரி தங்கம் விலை நிலவரம்.
பர்சனல் பைனான்ஸ்
மகிழ்ச்சி.. இனி ஏடிஎம் மையங்களில் ‘கூகுள் பே, பேடிஎம்’ பயன்படுத்தியும் பணம் எடுக்கலாம்!


நீண்ட காலமாகக் கூறப்பட்டு வந்த யுபிஐ செயலிகள் மூலம் ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கலாம் என்ற சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே கூகுள் பே, பேடிஎம், பிம், அமேசான் பே, போன் பே செயலிகள் மூலமாகப் பணம் எடுக்க முடியும்.
யுபிஐ செயலிகள் மூலமாக ஏடிஎம் நிலையங்களில் பணம் எடுக்கும் முறையை, NCR கார்ப்ரேஷன் அறிமுகம் செய்துள்ளது. இதை “Interoperable Cardless Cash Withdrawal –ICCW”. என்று கூறுகின்றனர்.
யுபிஐ செயலிகள் மூலமாக ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பது எப்படி?
1) யுபிஐ செயலிகள் மூலமாக ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க கூகுள் பே, பேடிஎம், பிம், அமேசான் பே, போன் பே என ஏதேனும் ஒரு யுபிஐ செயலி உங்கள் மொபைல் போனில் இருக்க வேண்டும்.
2) அந்த செயலிகள் உங்கள் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும்.
3) யுபிஐ செயலிகளில் உள்ள QR குறியீடு ஸ்கான் செய்யும் முறை மூலமாக, ஏடிஎம் இயந்திரங்களில் உள்ள QR குறியீட்டை ஸ்கான் செய்த பிறகு எவ்வளவு பனம் தேவை என்று உள்ளிட வேண்டும்.
4) பணத்தை உள்ளிட்ட பிறகு, 4 அல்லது 6 இலக்க யுபிஐ பின் எண்ணை உள்ளிட்டால், வங்கி கணக்கிலிருந்து பணம் பிடிக்கப்பட்டு, ஏடிஎம் மூலம் பணம் விநியோகிக்கப்படும்.
யுபிஐ செயலிகள் மூலமாக ஏடிஎம் மையங்களில் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 5 ஆயிரம் ரூபாய் வரையில் மட்டுமே பணம் எடுக்க முடியும்.
வணிகம்
நகை வாங்க சரியான நேரம் (20/04/2021)!


இன்று காலை (20/04/2021) சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 45 ரூபாய் குறைந்து 4,450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 360 ரூபாய் அதிகரித்து 35,600 ரூபாயாக அதிகரித்துள்ளது.
சுத்த தங்கமான 24 காரட் தங்கம் விலை கிராமுக்கு 4809 ரூபாய் என விற்கப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது கிராமுக்கு ரூ.1.40 பைசா குறைந்தது, 73.60 ரூபாயாக உள்ளது. கிலோ வெள்ளி 73,600 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தினசரி தங்கம் விலை நிலவரம்.
-
தமிழ்நாடு2 days ago
இந்தியாவில் பரவும் மும்முறை உருமாறிய கொரோனா: மருத்துவர்கள் எச்சரிக்கை!
-
கிரிக்கெட்2 days ago
45 ரன்களில் 5 விக்கெட்டுக்கள்: தீபக் சஹார் அபார பந்துவீச்சு!
-
தமிழ் பஞ்சாங்கம்2 days ago
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (22/04/2021)
-
வணிகம்1 day ago
தொடர்ந்து அதிகரிக்கும் தங்கம் விலை( 22/04/2021)!