வணிகம்
லட்சுமி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஓர் நற்செய்தி; ஆர்பிஐ எடுத்த அதிரடி முடிவு!


நிதி சிக்கலில் உள்ள லட்சுமி விலாஸ் வங்கியை மீட்க ஆர்பிஐ அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது. ஆர்பிஐ எடுத்துள்ள இந்த முடிவு லட்சுமி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தியாக அமைந்துள்ளது.
வரா கடன் அதிகரிப்பால், கரூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த லட்சுமி விலாஸ் வங்கிக்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்டது. அதில் உடனடியாக தலையிட்ட ஆர்பிஐ டிசம்பர் மாதம் வரை, லட்சுமி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்கள் ரூ.25,000 ரூபாய் வரை மட்டுமே பணம் பரிவர்த்தனை செய்ய முடியும் என்று அறிவித்தது.
லட்சுமி விலாஸ் வங்கி கிளைகளில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள், எங்கு வங்கி திவால் ஆகிவிடுமோ என்ற அச்சத்தில் வங்கி ஏடிஎம் மையங்களில் பணத்தை எடுக்க தொடங்கினர். வாடிக்கையாளர்கள் பயப்பட வேண்டாம் என்று ஆர்பிஐ அறிவுறுத்தி இருந்தது.
இருந்தாலும் லட்சுமி விலாஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் பயத்திலேயே உள்ளனர். அண்மையில் யெஸ் வங்கி கூட இதே போன்று நிதி பற்றாக்குறையில் சிக்கிய போது உடனே அதில் தலையிட்ட ஆர்பிஐ, வங்கியை மீட்டு இப்போது சரி செய்துள்ளது. அதே போன்ற ஒரு பிரச்சனைதான் லட்சுமி விலாஸ் வங்கிக்கும் ஏற்பட்டுள்ளது.
லட்சுமி விலாஸ் வங்கியின் நிதி பற்றாக்குறைக்கு வேகமாகத் தீர்வு காண வேண்டும் என்று நினைத்த ஆர்பிஐ, டிசிஎஸ் வங்கியுடன் லட்சுமி விலாஸ் வங்கியை ஒருங்கிணைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் டிபிஐஎல் மூலமாக, லட்சுமி விலாஸ் வங்கிக்கு 2500 கோடி ரூபாய் கூடுதல் மூலதனம் பெறவும் ஏற்பாடு செய்துள்ளது. ஆர்பிஐ எடுத்துள்ள இந்த முயற்சியால் விரைவில் லட்சுமி விலாஸ் வங்கியின் நிதிப் பற்றாக்குறைக்குத் தீர்வு ஏற்படும் என்று தெரிவித்துள்ளது.
வணிகம்
உலக பணக்காரர்கள் பட்டியலில் முன்னேற்றம்.. மீண்டும் அதிரடி காட்டும் முகேஷ் அம்பானி!


ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி உலக பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முன்னேற்றம் அடைந்து 10வது இடத்தை பிடித்துள்ளார்.
ஆசிய பணக்காரர்கள் பட்டியலிலும் இரண்டாம் இடத்திலிருந்து முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
உலக பணக்காரர்கள் பட்டியலில் 4வது இடம் வரை முன்னேறிய முகேஷ் அம்பானி சில காரணங்களால் 15வது இடத்துக்கு பின் தள்ளப்பட்டார். தற்போது அதில் முன்னேற்றம் அடைந்து 10வது இடத்தை பிடித்துள்ளார்.
உலக பணக்காரர்கள் பட்டியலில் எலன் மஸ்க்கை விட 7 பில்லியன் டாலர் அதிக செல்வ மதிப்புடன் முதல் இடத்தில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பிசோஸ் உள்ளார். எலன் மஸ்க் இரண்டா இடத்தில் உள்ளார். ஆனால் இது பெரிய வித்தியாசம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வணிகம்
பெட்ரோல் மீதான வரியை குறைத்த மேற்கு வங்கம்.. தமிழக அரசும் செய்யுமா?


பெட்ரோல் விலை சில மாநிலங்களில் 100 ரூபாயைக் கடந்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் 100 ரூபாயை நெருங்கி வருகிறது. இந்நிலையில் மேற்கு வங்கம் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை 1 ரூபாய் வரை குறைத்து அறிவித்துள்ளது.
இந்த வரி குறைப்பால் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பாதிக்கப்பட்டு வரும் மக்கள் பெரும் அளவில் பயன் பெறுவார்கள். பெட்ரோல் மீதான வரியில் மத்திய அரசுக்கு 32.90 ரூபாயும், மாநில அரசுக்கு 18.46 ரூபாயும் வரி வருவாயாகக் கிடைக்கிறது என்று மேற்கு வங்க நிதி அமைச்சர் அமித் மித்ரா தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தைத் தொடர்ந்து, விரைவில் தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் பெட்ரோல், டீசல் மீதான வரி குறைப்பு வரலாம் என்று எதிர்பார்க்கலாம்.
ஒருவேலைத் தமிழக அரசு இந்த வரி குறைப்பை அறிவித்தால், கண்டிப்பாக இது அதிமுகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கும் இது உதவும் என்று கூறப்படுகிறது.
இன்று சென்னையில் பெட்ரொல் விலை லிட்டர் ஒன்றுக்கு 92.59 ரூபாய் என்றும், டீசல் லிட்டர் 85.98 ரூபாய் என்றும் விற்பனை செய்யப்படுகிறது.
ஆட்டோமொபைல்
டெஸ்லாவுக்கு போட்டியா? 2025-ம் ஆண்டு முதல் எலக்ட்ரிக் கார் மட்டுமே.. ஜாகுவார் அதிரடி அறிவிப்பு!


உலகின் ஆடம்பர எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனம் டெஸ்லா. ஜாகுவா அண்ட் லேண்ட் ரோவர் டாடா குழுமத்துக்குச் சொந்தமான ஒரு ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனம்.
உலகம் முழுவதும் இப்போது எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. எனவே மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன.
இந்நிலையில் 2025-ம் ஆண்டுக்குள் 6 புதிய எலக்ட்ரிக் வாகனங்களை ஜாகுவார் லேண்ட் ரோவர் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் 2030-ம் ஆண்டுக்குள் எலக்ட்ரிக் கார் விற்பனையில் பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்த ஜாகுவார் முடிவு செய்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜாகுவாரின் இந்த அறிவிப்பால், டெஸ்லா நிறுவனத்தின் ஐரோப்பிய, இந்திய சந்தைகளில் கடும் போட்டி எழும் என்பதில் சந்தேகம் இல்லை.