பர்சனல் பைனான்ஸ்
மகிழ்ச்சி.. புதிய வருமான வரி முறை கீழ் இந்த 10 வருமானங்களுக்கு வரி விலக்கு உண்டு!


அடுத்த நிதி ஆண்டு முதல் வருமான வரி செலுத்துபவர்கள் புதிய வருமான வரி முறையைத் தேர்வு செய்தால், பழைய வருமான வரி முறையில் உள்ள 70 வரி விலக்குகளைப் பெற முடியாது. இது பட்ஜெட் அறிவிப்பின் போது பலருக்கும் ஏமாற்றமாக இருந்தது.
எனவே இங்கு புதிய வருமான வரியின் கீழ் அடுத்த நிதியாண்டு முதல் எந்த வருமானத்திற்கு எல்லா வரி விலக்குகளைப் பெறலாம் என்பதில் 10-ஐ இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.
ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி
ஈபிஎப் என அழைக்கப்படும், வருங்கால வைப்பு நிதி கணக்கைத் தொடர்ந்து 5 ஆண்டுகள் வரை பயன்படுத்திய பிறகு எடுக்கும் பணத்திற்கு வரி விலக்கு பெற முடியும்.
பொது வருங்கால வைப்பு நிதி
பிபிஎப் கணக்கில் ஆண்டு தோறும் வரவு வைக்கப்படும் வட்டி தொகைக்கு புதிய வருமான வரி முறையின் கீழ் வரி விலக்கு பெறலாம்.
என்பிஎஸ் – தேசிய பென்ஷன் திட்டம்
தேசிய பென்ஷன் திட்டத்தில் முதலீடு செய்த பணத்தை முதிர்வு காலம் பிறகு திரும்பப் பெறும் போது அல்லது இடையில் வெளியேறும் போது 40 சதவீதம் வரை தொகைக்கு வரி விலக்கு பெறலாம். என்பிஎஸ் திட்டத்தில் உள்ள பணத்தில் சொற்பமான தொகையை மட்டும் வெளியில் எடுக்கும் போது 25 சதவீதம் வரையிலான முதலீட்டாளரின் பங்களிப்புக்கு வரி விலக்கு கிடைக்கும்.
பணிபுரியும் நிறுவனத்தின் சார்பாக ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியிலிருந்து வழங்கப்படும் 10 சதவீத பங்களிப்புக்குத் தொடர்ந்து வரி விலக்கு பெறலாம்.
எல்ஐசி – ஆயுள் காப்பீடு திட்டம்
வருமான வரி சட்டப் பிரிவு 10-ன் கீழ், வரி விலக்கு அளிக்கும் ஆயுள் காப்பீடு திட்டங்களின் முதிர்வு போனஸ் அல்லது சரண்டர் தொகைக்கு வரி விலக்கு பெறலாம். முதிர்வு தொகைக்கு எப்போதும் போல வரி விலக்கு உண்டு.
செல்வ மகள் திட்டம் – சுகன்யா சம்ரிதி யோஜனா
செல்வ மகள் திட்டம் என அழைக்கப்படும் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தின் முதிர்வு தொகை மற்றும் வட்டி தொகைக்கு வரி விலக்கு கிடைக்கும்.
பயணப்படி
ஊழியர்களுக்கு வழங்கப்படும் பயணப்படிகளுக்கு வரி இல்லை.
அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டம்
அஞ்சல் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு வைத்துள்ள தொகைக்கு ஆண்டு தோறும் வழங்கப்படும் வட்டி தொகைக்கு ரூ.3,500 வரை வரி விலக்கு தொடர்ந்து கிடைக்கும்.
உதவித்தொகை
படிப்பு செலவிற்காக வழங்கப்படும், ஸ்காலர்ஷிப் என அழைக்கப்படும் உதவித் தொகைக்கு வருமான வரி சட்டப் பிரிவு 10 (16) கீழ் வரி விலக்கு உண்டு.
கிராஜூவிட்டி
ஒரு நிறுவனத்தில் 5 ஆண்டுகள் அல்லது அதற்கு அதிகமாகத் தொடர்ந்து பணியாற்றிய பிறகு வழங்கப்படும் கிராஜூவிட்டி வரி விலக்கு வழங்கப்படும்.
விடுப்பு
ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்த பிறகு வெளியேறும் போது, அல்லது ஓய்வு பெறும் போது, பே லீவ் என்பதன் கீழ் மிச்சம் உள்ள நாட்களுக்குப் பணம் பெறும் போது 3 லட்சம் ரூபாய் வரையிலான தொகைக்கு வரி விலக்கு பெறலாம்.
பர்சனல் பைனான்ஸ்
திடீர் பணத் தேவையா? வேகமாகக் கடன் பெற 6 வழிகள்!


திடீர் பணத் தேவை என்பது யாருக்கு வேண்டும் என்றாலும் வரலாம். எனவே ஒவ்வொருவரும் குறைந்தது தங்களது 6 மாத சம்பளத்துக்கு இணையான தொகையைச் சேமிப்பில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆனால் இது பலரும் செய்வதில்லை. இப்படி சேமிப்பு இல்லாத போது, அவசரக் காலத்தில் மருத்துவம் அல்லது பிற செலவுகளுக்குப் பணம் வேண்டும் என்றால் கடன் பெறுவது என்பது முக்கியமான ஒன்று. எனவே அவசரக் காலத்தில் வேகமாகக் கடன் அளிக்கும் திட்டங்களை இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.
பிக்சட் டெபாசிட் எதிரான கடன்
பிக்சட் டெபாசிட்டில் சேமித்து வந்தால், அதில் உள்ள தொகையில் 90 முதல் 95 சதவீத தொகையைக் கடனாகப் பெற முடியும். வங்கிகள் இந்த திட்டத்தின் கீழ் கடன் பெறும் போது பிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்துடன் 2 சதவீதம் கூடுதலாக வட்டியை வசூலிக்கின்றன.
தங்க நகைக் கடன்
தனிநபர் கடன் திட்டங்களுடன் ஒப்பிடும் போது வீட்டில் தங்க இருந்தால், சில மணி நேரங்களில் வங்கிகளில் கடன் பெற முடியும். தனிநபர் கடனை விட வட்டி விகிதமும் குறைவு. எனவே தன் இந்தியாவின் தென் மாநிலங்களில் தங்கம் வாங்குவதை ஒரு சேமிப்பாக் கருதுகின்றனர்.
பங்குகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்டு எதிரான கடன் திட்டங்கள்
பங்குச்சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து வந்தால், அதில் உள்ள தொகையில் 50 சதவீதம் வரை கடனாக சில நிறுவனங்கள் அளிக்கின்றன. தனிநபர் கடனுக்கு இணையான வட்டி விகிதம் வசூலிக்கப்படும்.
முன் அங்கீகரிக்கப்பட்ட தனிநபர் கடன்கள்
அவசர காலத்தில் அதிக கடன் பெறும் ஒரு திட்டமாக முன் அங்கீகரிக்கப்பட்ட தனிநபர் கடன் திட்டம் உள்ளது. சம்பள வங்கி கணக்கு வைத்துள்ளவர்களுக்கான கடன் திட்டமாக இது உள்ளது.
கிரெடிட் கார்டு எதிரான கடன் திட்டங்கள்
சில கிரெடிட் கார்டு நிறுவனங்கள், சரியாக கிரெடிட் கார்டு கடனை செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இன்ஸ்டண்ட் கடனை வழங்குகின்றன. ஆனால் இந்த திட்டத்துக்குத் தனிநபர் கடன் திட்டத்தை விட கூடுதல் வட்டி வசூலிக்கப்படுகிறது. கிரெடிட் கார்டு வரம்பிற்குள் கடன் பெறும் போது கூடுதலாக ஜிஎஸ்டி 18 சதவீதமும் செலுத்த வேண்டி வரும்.
இன்சூரன்ஸ் திட்டங்கள் எதிரான கடன்
எண்டொவ்மெண்ட் இன்சூரன்ஸ் பாலிசிகள் எடுத்து இருந்தால், 3 அல்லது 5 வருடங்கள் தொடர்ந்து ப்ரீமியம் தொகையைச் செலுத்திய பிறகு, அதில் உள்ள தொகையில் 80 முதல் 90 சதவீதம் வரை கடனாகப் பெறலாம். தங்க நகைக் கடனுக்கு நிகரான வட்டி விகிதம் வசூலிக்கப்படும்.
பர்சனல் பைனான்ஸ்
புதிய வேலை கிடைத்துவிட்டதா? Notice period முடிவதற்குள் அங்கு செல்ல வேண்டுமா? இதோ உங்களுக்கு அதிர்ச்சி செய்தி!


ஒரு நிறுவனத்தில் பணிபுரியப் பிடிக்காமல் வேறு வேலைக்குச் செல்ல ராஜிமா செய்தால் notice period-ல் சில காலம் வேலை செய்ய வேண்டி வரும் அது ஒரு மாதம் முதல் 3 மாதங்கள் வரை இருக்கும். அது வேலை செய்யும் நிறுவனம் மற்றும் பணியில் இருக்கும் பொறுப்புகளைப் பொருத்து மாறும்.
இதில் என்ன அதிர்ச்சி செய்தால், இப்படி notice period-ஐ முடிக்காமல் முன்பு எல்லாம் வேறு பணிக்கு ஈசியா சென்றுவிடுவார்கள். ஆனால் இனி வரும் காலங்களில் notice period-ஐ முடிக்காமல் வேறு வேலைக்குச் செல்லும் போது செலுத்த வேண்டிய தொகைக்கு, 18 சதவீதம் ஜிஎஸ்டி சேர்த்துச் செலுத்த வேண்டும்.
குஜராத் அத்தாரிட்டி ஆப் அட்வான்ஸ் ரூலிங் படி, notice period-ஐ முடிக்காமல் வேறு வேலைக்கு செல்ல வேண்டும் என்றால், அதற்காகப் பிடிக்கப்படும் பணத்தில் 18 சதவீதம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். இது ஊழியர்களின் சம்பள நிலுவைத் தொகையிலிருந்து பிடித்தம் செய்யப்படும்.
எனவே வேறு வேலை கிடைத்துவிட்டது என்ற காரணத்துக்காக notice period-ஐ முடிக்காமல் செல்ல விரும்பும் ஊழியர்களுக்கு இது அதிர்ச்சி அடையும் செய்தியாக அமைந்துள்ளது.
பர்சனல் பைனான்ஸ்
பங்குச்சந்தைக்கு மீண்டும் வரும் ஒரு ‘இந்தியன் ரயில்வேஸ்’ நிறுவனம்!


ஐஆர்சிடிசி தொடர்ந்து மீண்டும் ஒரு இந்தியன் ரயில்வே நிறுவனம் ஐபிஓ மூலம் பங்குச்சந்தைக்கு வருகிறது. பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் நீண்ட காலமாகக் காத்திருந்த இந்தியன் ரயில்வே ஃபினான்ஸ் காப்ர்பேஷன் நிறுவனம், ஐபிஓ மூலம் அடுத்த வாரம் பங்குகளை வெளியிடுகிறது. எனவே இந்தியன் ரயில்வே ஃபினான்ஸ் காப்ர்பேஷன் ஐபிஓ பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.
இந்தியன் ரயில்வே ஃபினான்ஸ் காப்ர்பேஷன் ஐபிஓ வெளியீட்டுத் தேதி
இந்தியன் ரயில்வே ஃபினான்ஸ் காப்ர்பேஷன் பங்குகள் ஐபிஓ மூலம் ஜனவரி 18-ம் தேதி திங்கட்கிழமை வெளியிடப்படுகிறது. ஜனவரி 18 முதல் 20-ம் தேதி வரை இந்தியன் ரயில்வே ஃபினான்ஸ் காப்ர்பேஷன் பங்குகளை பொது வெளியீட்டுக்கு முன்பு வாங்கலாம்.
இந்தியன் ரயில்வே ஃபினான்ஸ் காப்ர்பேஷன் ஐபிஓ பங்கின் விலை எவ்வளவு?
இந்தியன் ரயில்வே ஃபினான்ஸ் காப்ர்பேஷன் ஐபிஓ பங்கின் விலை 25 முதல் 26 ரூபாய் வரையில் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியன் ரயில்வே ஃபினான்ஸ் காப்ர்பேஷன் ஐபிஓவில் எவ்வளவு பங்குகளை வாங்க வேண்டும்?
இந்தியன் ரயில்வே ஃபினான்ஸ் காப்ர்பேஷன் ஐபிஓவில் குறைந்தது 575 பங்குகள் ஒரு லாட் என மட்டுமே வாங்க முடியும். மும்பை பங்குச்சந்தை, தேசிய பங்குச்சந்தை என இரண்டிலுமே பங்குகள் பட்டியலிடப்படும். அதிகபட்சம் 13 லாட் வரை வாங்க முடியும்.
இந்தியன் ரயில்வே ஃபினான்ஸ் காப்ர்பேஷன் ஐபிஓ – பலங்கள்
1) இந்திய ரயில்வே வளர்ச்சி திட்டமிடலில் முக்கிய பங்கு
2) சிறந்த கடன் மதிப்பீடு(AAA)
3) கடன் செலவு
4) வலுவான நிதி செயல்திறன்
5) சிறந்த சொத்து-பொறுப்பு மேலாண்மை
6) அனுபவம் வாய்ந்த நிர்வாக குழு
எவ்வளவு நிதி
ஐபிஓ மூலம் 4600 கோடி ரூபாய் நிதியை இந்தியன் ரயில்வே ஃபினான்ஸ் காப்ர்பேஷன் திரட்ட உள்ளது.
-
வேலைவாய்ப்பு1 day ago
யுபிஎஸ்சி-யில் வேலைவாய்ப்பு!
-
சினிமா செய்திகள்1 day ago
பொங்கலில் அதிக வசூல் எடுத்தது ‘மாஸ்டர்’, ‘ஈஸ்வரன்’ இல்ல… இதுதாங்க!
-
விமர்சனம்2 days ago
ஈஸ்வரன் சிம்பு கம்பேக்குக்கு உதவினாரா? – ஈஸ்வரன் விமர்சனம்
-
விமர்சனம்1 day ago
விவசாயிகளுக்கு ஆப்பு அடிக்க முயன்றிருக்கிறார் ஜெயம் ரவி… பூமி விமர்சனம்