பர்சனல் பைனான்ஸ்
புதிய வேலை கிடைத்துவிட்டதா? Notice period முடிவதற்குள் அங்கு செல்ல வேண்டுமா? இதோ உங்களுக்கு அதிர்ச்சி செய்தி!


ஒரு நிறுவனத்தில் பணிபுரியப் பிடிக்காமல் வேறு வேலைக்குச் செல்ல ராஜிமா செய்தால் notice period-ல் சில காலம் வேலை செய்ய வேண்டி வரும் அது ஒரு மாதம் முதல் 3 மாதங்கள் வரை இருக்கும். அது வேலை செய்யும் நிறுவனம் மற்றும் பணியில் இருக்கும் பொறுப்புகளைப் பொருத்து மாறும்.
இதில் என்ன அதிர்ச்சி செய்தால், இப்படி notice period-ஐ முடிக்காமல் முன்பு எல்லாம் வேறு பணிக்கு ஈசியா சென்றுவிடுவார்கள். ஆனால் இனி வரும் காலங்களில் notice period-ஐ முடிக்காமல் வேறு வேலைக்குச் செல்லும் போது செலுத்த வேண்டிய தொகைக்கு, 18 சதவீதம் ஜிஎஸ்டி சேர்த்துச் செலுத்த வேண்டும்.
குஜராத் அத்தாரிட்டி ஆப் அட்வான்ஸ் ரூலிங் படி, notice period-ஐ முடிக்காமல் வேறு வேலைக்கு செல்ல வேண்டும் என்றால், அதற்காகப் பிடிக்கப்படும் பணத்தில் 18 சதவீதம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். இது ஊழியர்களின் சம்பள நிலுவைத் தொகையிலிருந்து பிடித்தம் செய்யப்படும்.
எனவே வேறு வேலை கிடைத்துவிட்டது என்ற காரணத்துக்காக notice period-ஐ முடிக்காமல் செல்ல விரும்பும் ஊழியர்களுக்கு இது அதிர்ச்சி அடையும் செய்தியாக அமைந்துள்ளது.
பர்சனல் பைனான்ஸ்
அதிர்ச்சி.. செல்வ மகள் திட்டம், பிபிஎப் உள்ளிட்ட சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதம் அதிரடி குறைப்பு!


செல்வ மகள் திட்டம், பிபிஎப் உள்ளிட்ட சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதத்தை மத்திய அரசு அதிரடியாகக் குறைத்து அறிவித்துள்ளது சேமிப்பாளர்கள் இடையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்கு
அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்கில் இருப்பு வைத்திருந்த பணத்திற்கு மார்ச் 31-ம் தேதி வரை ஆண்டுக்கு 4 சதவீத வட்டி விகிதம் வழங்கப்பட்டது. ஆனால் ஏப்ரல் மாதம் முதல் அது 3.5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
டைம் டெபாசிட் திட்டம்
ஒரு வருட டைம் டெபாசிட் திட்டத்தின் வட்டி விகிதம் 5.5 சதவீதத்திலிருந்த 0.10 சதவீதம் குறைத்து 4.4 சதவீதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2 வருட டைம் டெபாசி திட்டத்தின் வட்டி விதம் 5.5 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. 3 வருட டைம் டெபாசிட் திட்டம் மீதான வட்டி விகிதம் 5.5 சதவீதத்திலிருந்து 5.1 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. 5 வருட டைம் டெபாடி திட்டம் மீதான வட்டி விகிதம் 6.7 சதவீதத்தில் இருந்து 5.8 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
5 வருட தொடர் வைப்பு நிதி திட்டம்
ரெக்கரிங் டெபாசிட் என அழைக்கப்படும் 5 வருடம் தொடர் வைப்பு நிதி திட்டத்தின் வட்டி விகிதம் 5.8 சதவீதத்திலிருந்து 5.3 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
மூத்த குடிமக்களுக்கனா சேமிப்பு திட்டம்
மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டத்தின் வட்டி விகிதம் 7. 4 சதவீதத்திலிருந்து 6.5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
மாத வருமான கணக்கு
மாத வருமான கணக்கின் வட்டி விகிதம் 6.6 சதவீதத்திலிருந்து 5.7 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
தேசிய சேமிப்பு பத்திரம்
தேசிய சேமிப்பு பத்திரம் திட்டத்தின் வட்டி விகிதம் 6.8 சதவீதத்திலிருந்து 5.9 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
பிபிஎப்
பிபிஎப் என அழைக்கப்படும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் வட்டி விகிதம் 7.1 சதவீதத்திலிருந்து 6.4 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
கிசான் விகாஸ் பத்ரா
கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தின் வட்டி விகிதம் 6.9 சதவீதத்திலிருந்து 6.2 சதவீதமாகக் குறைத்துள்ளனர். முதிர்வு காலமும் 124 மாதத்திலிருந்து 138 மாதங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
செல்வ மகள் திட்டம்
சுகன்யா சம்ரிதி யோஜனா என அழைக்கப்படும் செல்வ மகள் திட்டத்தின் வட்டி விகிதம் 7.6 சதவீதத்திலிருந்து 6.9 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
வட்டி விகிதம் குறைப்பு விதிகள்
சிறு சேமிப்பு திட்டங்கள் மீதான வட்டி விகிதம் ஒவ்வொரு காலாண்டுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்படும். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த வட்டி விகிதம் 2021-2022 நிதி ஆண்டின் முதல் காலாண்டுக்கானது ஆகும். அதாவது ஏப்ரல் முதல் ஜூன் வரையில் மாறாது.
பர்சனல் பைனான்ஸ்
செல்வ மகள் திட்டம் v/s பிபிஎப் | பெண் குழந்தைகளுக்கு ஏற்ற முதலீட்டு திட்டம் எது?


பிபிஎப் – பொது வருங்கால வைப்பு நிதி



செல்வ மகள் திட்டம் – சுகன்யா சம்ரிதி யோஜனா


பிபிஎப் – செல்வ மகள் திட்டம் இரண்டில் சிறந்தது எது?
பர்சனல் பைனான்ஸ்
நெருங்கிவிட்டது மார்ச் 31.. உங்கள் குடும்ப உறுப்பினர்கள் உதவியுடன் வரியை சேமிப்பது எப்படி?


வரி செலுத்துவது இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவரின் கடமையாக இருந்தாலும், அதை சேமிக்கவும் வழிகள் உண்டு. அரசும் வரியை சேமிப்பை ஊக்குவிப்பதற்கான பல்வேறு விலக்குகளை அளிக்கிறது.
இந்த வரி விலக்குகளை முறையாக நாம் திட்டமிடுவதன் மூலம் பெற்று, வரியை சேமிக்கலாம். வருமான வரி சட்டப்பிரிவு 80சி கீழ் பிபிஎப், பங்குச்சந்தை சார்ந்த சேமிப்பு திட்டங்கள், ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி, காப்பீடு போன்ற திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் வரியை சேமிக்கலாம்.
மார்ச் 31-ம் தேதி நெருங்கி வரும் நிலையில், நிதியாண்டும் முடிகிறது. எனவே நடப்பு நிதியாண்டின் வருமானத்திலிருந்து நாம் செலுத்த வேண்டிய வரியை குடும்ப உறுப்பினர்கள் உதவியுடன் எப்படி சேமிப்பது என்று இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.
கடன் மற்றும் முதலீடுகள்
1) நீங்கள் கொடுக்கும் பணத்தை அல்லது பரிசு தொகையை, உங்கள் மனைவி பிபிஎப் அல்லது பிற வருமான வரி விலக்கு அளிக்கும் திட்டங்களில் முதலீடு செய்து இருந்தால் அதற்கு வரி விலக்கு பெறலாம்.
2) மனைவிக்கு வட்டி இல்லா கடன் வழங்கி அதன் மூலம் வரி வருவாயைக் குறைக்கலாம்.
3) கணவன் வருமானத்தை மனைவிக்குப் பிரித்து வழங்குவதன் மூலமாக வரி வருவாயைக் குறைக்கலாம்.
குழந்தைகளின் கல்வி
1) உங்கள் பிள்ளைகளின் பெயரில் கல்வி கடன் பெற்று இருந்தால் வருமான வரி சட்டப்பிரிவு 80இ கீழ் 8 வருடங்களுக்கு வட்டி தொகையை வரி சேமிப்பாகப் பெறலாம்.
2) பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு வட்டி இல்லா கடன் வழங்குவதன் மூலமாகவும் வரியை குறைக்கலாம்.
பெற்றோர்களுக்கு வீட்டு வாடகை செலுத்துதல்
பெற்றோர்களுடன் சொந்த வீட்டில் வசித்து வந்தால், உங்களது பெற்றோருக்கு வாடகை அளித்து, அதன் மூலமாகவும் வருமான வரியை குறைக்கலாம். இப்படி செய்யும் போது அதற்கு வீட்டு வாடகை ரசீது, வீட்டு வாடகை ஒப்பந்தம் போன்ற ஆவணங்கள் தேவைப்படும்.
குடும்பத்திற்காக முதலீடு செய்வது
1) பிபிஎப், யூலிப்ஸ், மியூச்சுவல் ஃபண்டு, காப்பீடு திட்டங்களில் பெற்றோர்கள், மனைவி, குழந்தைகள் பெயர்களில் முதலீடு செய்து அதற்கு வரி விலக்கு பெற முடியும்.
2) பிள்ளைகளுக்குச் சேமிப்பு கணக்கு திறந்து கொடுப்பதன் மூலம் வருமான வரி சட்டப்பிரிவு 10(32 கீழ்) அதில் வரும் வட்டி வருவாயில் ஆண்டுக்கு 1,500 ரூபாய் வரை வரி விலக்கு பெற முடியும்.
-
தமிழ்நாடு1 day ago
தமிழகத்தில் நாளை முதல் ஊரடங்கா? பெரும் பரபரப்பு
-
இந்தியா2 days ago
முழு லாக்டவுன் அச்சம்: மாநிலத்தை விட்டு வெளியேறும் புலம்பெயர் தொழிலாளர்கள்!
-
சினிமா செய்திகள்2 days ago
வெளிநாடுகளிலும் வசூல் மழை பொழியும் ‘கர்ணன்’- எவ்வளவு தெரியுமா?
-
கிரிக்கெட்2 days ago
IPL – கலக்கல் ராப் சாங் வெளியிட்ட ‘யுனிவர்ஸ் பாஸ்’ கிறிஸ் கெய்ல்!