வணிகம்
பிஸ்கேட் விலையை உயர்த்தும் பார்லே, பிரிட்டானியா; வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

இந்திய பொருளாதார மந்த நிலை, நுகர்வோர் வங்கும் சக்தி குறைவு என்று செய்திகள் வெளியாகி வருகின்றன. மறுபக்கம் பார்லே, பிரிட்டானியா உள்ளிட்ட பிஸ்கேட் நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளின் விலையை உயர்த்த உள்ளதாக அதிர்ச்சியான தகவல்கள் கிடைத்துள்ளன.
கோதுமை மாவு, எண்ணெய் மற்றும் சர்க்கரை விலை உயர்வே இந்த பிஸ்கேட் விலை உயர்வுக்கான முடிவு என்று கூறப்படுகிறது.
பார்லே நிறுவனம் தங்களது பிஸ்கேட் தயாரிப்புகளின் விலையை 5 முதல் 6 சதவீதம் வரை உயர்த்த வாய்ப்புள்ளது. பிரிட்டானியா நிறுவனம் 3 சதவீதம் வாஇ விலை உயர்த்த முடிவு செய்துள்ளது.
சில பிஸ்கேட் பாக்கெட்களில் இரண்டு நிறுவனங்களும் எடையை குறைத்து விலையை சரி செய்யவும் முடிவு செய்துள்ளன.
அதுமட்டுமல்லாமல் பார்லே நிறுவனம் 10,000 நபர்களை பணிநீக்கம் செய்து, ஆட்குறைப்பு செய்ய உள்ளதாகவும், இதற்கு காரணம் ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு ஏற்பட்ட விற்பனை தான் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்பம்
இந்தியாவின் திட்டத்தை அமெரிக்காவிற்குப் பரிந்துரைத்த கூகுள்!

பணப் பரிவர்த்தனை செய்வதற்காக, இந்தியாவில் கடந்த மூன்று ஆண்டுகளாக வழங்கப்பட்டு வரும் யூபிஐ போன்ற ஒரு சேவையை அமெரிக்காவில் அறிமுகம் செய்யுமாறு சுந்தர் பிச்சை தலைமையிலான கூகுள் நிறுவனம் அமெரிக்க ஃபெடரல் சிரர்வ் வங்கியிடம் கோரிக்கை வைத்துள்ளது.
இந்தியாவில் யூபிஐ மூலம் பணம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்பட்டதால், கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவின் ஜிடிபியில் 19 சதவீதம் வரை பங்கு வகிப்பதாகக் கூகுள் தெரிவித்துள்ளது.
2016-ம் ஆண்டு வரை இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த ரகுராம் ராஜனின் பதவிக் காலம் முடியும் முன்பு, அவரால் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு எளிமையான பண பரிவர்த்தனை சேவையே யூபிஐ திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த யூபிஐ சேவையைப் பயன்படுத்தித் தான் கூகுள் பே செயல்பட்டு வருகிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
வணிகம்
உலகின் 100 சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் நிர்மலா சீதாராமன்!

பிரபல ஃபோர்ப்ஸ் இதழ் ஒவ்வொரு ஆண்டும் உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த பட்டியலில் டாப் 10 இடத்திற்குள் நிர்மலா சீதாராமன் இடம்பெற்றுள்ளார்.
ஃபோர்ப்ஸ் உலகின் டாப் 100 சக்தி வாய்ந்த பெண்கள் 2019 பட்டியலில் , சிறந்த பொருளாதார நிர்வாகி என்பதற்காக நிர்மலா சீதாராமனுக்கு 34வது இடம் அளிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து ராணி எலிசபெத் இந்த பட்டியலில் 40வது இடத்தில் உள்ளார்.
எச்சில் டெக்னாலஜிஸ் துணைத் தலைவரான ரோஷினி நாடார் 54வது இடத்தை பிடித்துள்ளார். பையோகான் நிறுவனத் தலைவரான கிரண் மசாமுதார் ஷா 65வது இடத்தையும், துபாயைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் லேண்ட்மார்க் குழுமத்தின் தலைவரான ரேனுகா ஜகத்யானி 96வது இடத்திலும் உள்ளார்.
வணிகம்
நெஸ்ட்லே நிறுவனம் மீது ரூ.90 கோடி அபராதம்; எதற்குத் தெரியுமா?

இந்தியாவில் ஜிஎஸ்டி வரி ஆட்சி முறை 2017 ஜூலை மாதம் முதல் நடைபெற்று வருகிறது.
ஜிஎஸ்டி வரி முறை அமலுக்கு வந்த பிறகு, அதன் மூலம் நிறுவனங்கள் பெற்ற நன்மையை நிறுவனங்களுக்கு அளிக்க வேண்டும் என்று அரசு கூறியிறுந்தது.
ஆனால் அதன்படி நெஸ்ட்லே நிறுவனம் செயல்படவில்லை என்று காரணத்திற்காக, தேசிய ஜிஎஸ்டி இலாப எதிர்ப்பு ஆணையம் 90 ரூபாய் கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள நெஸ்ட்லே நிறுவனம் நாங்கள் அதிகபட்ச விலையைக் குறைத்து வாடிக்கையாளர்களுக்கான நன்மைகளை அளித்தோம் என்று கூறியுள்ளது.
நெஸ்ட்லே நிறுவனம் ஜிஎஸ்டி நன்மைகளை வழங்கியதாகக் கூறப்படும் வழிமுறைகள் நியாயமற்ற, தன்னிச்சையான மற்றும் சட்டவிரோதமாக உள்ளது என்று
தேசிய ஜிஎஸ்டி இலாப எதிர்ப்பு ஆணையம் கூறிவருகிறது.