வணிகம்
ஜிஎஸ்டி வரி நன்மையினை நுகர்வோருக்கு அளிக்காத நெஸ்ட்லே.. 100 கோடி லாபம் ஈட்டி மோசடி!

கார்ப்ரேட் நிறுவனங்கள் முறைகேடாக அதிக லாபத்தினை ஈட்டுகின்றனவா என்று விசாரிக்கும் அமைப்பான டிஜிஏபி செய்த விசாரணையில் நெஸ்ட்லே இந்தியா நிறுவனம் ஜிஎஸ்டி மூலம் பெற்ற நன்மைகளை வாடிக்கையாளர்களுக்கு அளிக்காமல் 100 கோடி ரூபாய் வரை லாபம் ஈட்டியதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
நெஸ்ட்லே இந்தியா மேகி, நெஸ்கபே காபி, சாக்லேட், கிட்கேட், மஜ்ச், மில்கிபார், பால் பொருட்கள் மற்றும் தக்காளி கெட்சப் உள்ளிட்டவையினைத் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதில் பல பொருட்களின் விலையினை ஜிஎஸ்டி விதிகளின் படி 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் நெஸ்ட்லே குறைத்து இருக்க வேண்டும். அதனைக் குறைக்காததே தற்போதைய சிக்கலுக்கான காரணம் ஆகும்.
நெஸ்ட்லே ஜிஎஸ்டி நன்மைகளை நுகர்வோருக்கு அளிக்கவில்லை என்று புகார்கள் வந்ததை அடுத்து டிஜிஏபி அமைப்பு கணக்குப் புத்தகங்களை ஆய்வு செய்ததில் 100 கோடி ரூபாய் முறைகேடாக லாபம் ஈட்டியது தெரியவந்துள்ளது.
ஆனால் அரசு ஜிஎஸ்டிக்கு வித்துள்ள விதிகள் தெளிவாக இல்லை என்று நெஸ்ட்லே உட்படப் பல நிறுவனங்கள் விமர்சித்தும் வருகின்றன.
இதற்கிடையில் நெஸ்ட்லே இந்தியா மீது அபராதம் விதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. அபராதம் விதிக்கப்பட்டால் அதனை எதிர்த்து வழக்கு தொடருவோம் என்று நெஸ்ட்லே தரப்பில் இருந்து வந்த தகவல்கள் கூறுகின்றன.
வணிகம்
எஸ்பிஐ வாடிக்கையாளரா நீங்கள்; இதோ உங்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கி நிறுவனமான எஸ்பிஐ என அழைக்கப்படும் பாரத ஸ்டேட் வங்கி, இந்த ஆண்டில் மட்டும் 8வது முறையாக தங்களது கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தைக் குறைத்து அறிவித்துள்ளது.
எஸ்பிஐ வங்கி கடன் திட்டங்கள் மீதான MCLR வட்டி விகிதம் 8 சதவீதத்திலிருந்து 0.10 சதவீதம் குறைத்து 7.90 சதவீதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் எஸ்பிஐ வங்கியில் வீட்டுக் கடன் மற்றும் பிற சில்லறை கடன் பெற்றுள்ளவர்களுக்கு மாத தவணை குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.
வணிகம்
5% ஜிஎஸ்டி 6 சதவீதமாக உயர்த்த வாய்ப்பு; எந்த பொருட்கள் விலை எல்லாம் உயரும்!

ஜிஎஸ்டி குழு 5 சதவீத ஜிஎஸ்டி வரியை 6 சதவீதமாக உயர்த்த மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக பிஸ்னஸ் ஸ்டாண்டர்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
மத்திய அரசு இந்த வரி உயர்வுக்கு ஒப்புதல் அளித்தால், மாதத்துக்கு 1000 கோடி ரூபாய் கூடுதல் மறைமுக வரி வருவாய் கிடைக்கும்.
ஜிஎஸ்டி அறிமுகம் செய்த பிறகும் வரும் காலங்களில் வரி விகிதம் குறைக்கப்படும் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் அதை தற்போது மத்திய அரசு உயர்த்துவதாக வரும் செய்திகள் மக்களை அதிர்ச்சிக்குள் ஆக்கியுள்ளது.
5 சதவீத ஜிஎஸ்டி வரி விகிதத்தில் மக்களின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, காலணிகள் போன்றவை தான் உள்ளன.
இதனை உயர்த்தும் போது சாமானிய மக்கள் பெரும் அளவில் பாதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வணிகம்
ஏர்டெல் மொபைல் கட்டணங்கள் டிசம்பர் 3 முதல் 42% வரை உயர்வு! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி…!

பார்தி ஏர்டெல் நிறுவனம் டிசம்பர் 3-ம் தேதி முதல் தங்களது ப்ரீபெய்ட் ரீசார்ஜ் கட்டணங்கள் உயரும் என்று தெரிவித்துள்ளது.
வோடாஃபொண் ஐடியா கட்டண உயர்வு அறிவிப்பைத் தொடர்ந்து ஏர்டெல் நிறுவனமும் தங்களது கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
இதனால் பார்தி ஏர்டெல்லின் புதிய ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணங்கள் முன்பு இருந்ததை விட 42 சதவீதம் வரை அதிகரிக்கும்.
ஒரு நாளைக்குக் குறைந்தது 50 பைசா முதல் 2.85 ரூபாய் வரை பார்தி ஏர்டெல் வாடிக்கையாளர்களின் செலவுகள் அதிகரிக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.
இந்த 42 சதவீத கட்டண உயர்வு அன்லிமிட்டெட் திட்டங்கள் பயன்படுத்துபவர்களுக்கு அதிகளவில் இருக்கும்.
-
தினபலன்2 days ago
உங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (09/12/2019)
-
சினிமா செய்திகள்3 days ago
பெண்களை மதிப்பவன் தான் பாதுகாப்பான நாயகன்; தெலுங்கானா என்கவுண்டருக்கு ஆதரவாக நயன்தாரா!
-
தினபலன்3 days ago
உங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (08/12/2019)
-
தினபலன்21 hours ago
உங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (10/12/2019)