வணிகம்
நவம்பர் 27 முதல் டிபிஎஸ் வங்கியாக மாறும் லஷ்மி விலாஸ் வங்கி.. கட்டுப்பாடுகள் நீக்கம்.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!


நவம்பர் 27-ம் தேதி முதல் லஷ்மி விலாஸ் வங்கி டிபிஎஸ் வங்கியுடன் இணைக்கப்படுவதாக ஆர்பிஐ அறிவித்துள்ளது.
லஷ்மி விலாஸ் வங்கி டிபிஎஸ் வங்கியுடன் இணைக்கப்படுவதால், நவம்பர் 27-ம் தேதி பணம் எடுக்க இருந்து 25 ஆயிரம் ரூபாய் என்ற கட்டுப்பாடுகளும் நீக்கப்பட உள்ளது.
லஷ்மி விலாஸ் வங்கியை டிபிஎஸ் வங்கியுடன் இணைக்க நேற்று மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் வழங்கியது. அதைத் தொடர்ந்து இரண்டு வங்கிகளையும் நவம்பர் 27-ம்தேதி முதல் இணைந்து செயல்பட ஆர்பிஐ அனுமதி வழங்கியுள்ளது.
இந்திய வங்கிகள் வரலாற்றில் முதல் முறையாக வெளிநாட்டு வங்கியுடன், இந்திய வங்கி இணைக்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே லஷ்மி விலாஸ் வங்கி விற்பது குறித்து விவாதிக்கப்பட்டு வந்தது. அப்பொதி வங்கியின் நிதி நிலைமை நன்றாகவும் இருந்தது. ஆனால் அப்போது விற்க ஆர்பிஐ அனுமதி வழங்கவில்லை.
இப்போது வங்கியைத் திவால் ஆகும் நிலைக்குத் தள்ளி, நிதி பற்றாக்குறையில் உள்ள வங்கியை அடிமாட்டு விலைக்கு டிபிஎஸ் வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் லஷ்மி விலாஸ் வங்கியில் மூலதனத்தை அதிகரிப்பதற்கான பணிகளிலும் ஆர்பிஐ ஈடுபட்டு வருகிறது.
எது எப்படியோ, தங்களது வங்கி கணக்கில் உள்ள பணத்தை இனி எந்த கட்டுப்பாடுகள் இன்றியும் எடுக்கலாம் என்பதில் லஷ்மி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
டிபிஎஸ் வங்கி, சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
வணிகம்
உஷார்.. நாளை முதல் 4 நாட்களுக்கு இந்த நகரங்களில் எல்லாம் வங்கிகள் விடுமுறை!


ஏப்ரல் 13 முதல் 16-ம் தேதி வரையில் பல்வேறு நகரங்களில் வங்கிகள் விடுமுறையில் இருக்கும் என்று ஆர்பிஐ காலண்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்கள் விழாக்கள் கொண்டாடப்படும் நகரங்களைப் பொருத்து மாறும்.
ஏப்ரல் 13-ம் தேதி எந்த நகரங்களில் எல்லாம் வங்கிகளுக்கு விடுமுறை?
குடி படுவா / தெலுங்கு புத்தாண்டு தினம் / உகாதி விழா / சஜிபு நோங்மபன்பா (சீராபா) / முதல் நவராத்திரி / பைசாக்கி போன்ற விழாக்கள் காரணமாக பெலாப்பூர், பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், இம்பால், ஜம்மு, மும்பை, நாக்பூர், பனாஜி, ஸ்ரீநகர் உள்ளிட்ட நகரங்களில் வங்கிகள் ஏப்ரல் 13-ம் தேதி விடுமுறையில் இருக்கும்.
ஏப்ரல் 14-ம் தேதி எந்த நகரங்களில் எல்லாம் வங்கிகளுக்கு விடுமுறை?
டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஜெயந்தி / தமிழ் புத்தாண்டு தினம் / விஷு / பிஜூ விழா / செயிரோபா / போஹாக் பிஹு போன்ற விழாக்களுக்காக, அகர்தலா, அகமதாபாத், பெலாப்பூர், பெங்களூரு, புவனேஸ்வர், சண்டிகர், சென்னை, டெஹ்ராடூன், காங்டாக், குவஹாத்தி, ஹைதராபாத், இம்பால், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொச்சி, கொல்கத்தா, லக்னோ, மும்பை, டெல்லி, நாக்பூர், நாக்பூர் , திருவனந்தபுரம் உள்ளிட்ட நகரங்களில் வங்கிகள் ஏப்ரல் 14-ம் தேதி விடுமுறையில் இருக்கும்.
ஏப்ரல் 15-ம் தேதி எந்த நகரங்களில் எல்லாம் வங்கிகளுக்கு விடுமுறை?
இமாச்சல தினம் / பெங்காலி புத்தாண்டு தினம் / போஹாக் பிஹு / சர்ஹுல் போன்ற விழாக்களுக்காக, அகர்தலா, குவஹாத்தி, கொல்கத்தா, ராஞ்சி மற்றும் சிம்லா உள்ளிட்ட நகரங்களில் வங்கிகள் ஏப்ரல் 15-ம் தேதி விடுமுறையில் இருக்கும்.
ஏப்ரல் 16-ம் தேதி எந்த நகரங்களில் எல்லாம் வங்கிகளுக்கு விடுமுறை?
போஹாக் பிஹு விழா காரணமாக குவஹாத்தியில் ஏப்ரல் 16-ம் தேதி வங்கிகள் விடுமுறையில் இருக்கும்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள வங்கி விடுமுறை நாட்கள், மாநிலங்கள் மற்றும் நகரங்களைப் பொருத்து மாறும்.
வணிகம்
டிசிஎஸ் நிகர லாபம் 14.8% அதிகரிப்பு.. வருவாய் 43,705 கோடியாக அதிகரிப்பு!


டிசிஎஸ் நிகர லாபம் தொடர்ந்து மூன்றாவது காலாண்டாக அதிகரித்துள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய ஐடி நிறுவனமான டிசிஎஸ் நிகர லாபம் 4-ம் காலாண்டில் 14.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. வருவாய் 43,705 கோடியாக உயர்ந்துள்ளது.
சென்ற நிதியாண்டின் 3-ம் காலாண்டில் டிசிஎஸ் நிறுவனத்தின் வருவாய் 42,015 கோடி ரூபாயாக இருந்தது. அதுவே ஜனவரி முதல் மார்ச் வரையிலான 4-ம் காலாண்டில் 43,705 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
அதே கால கட்டத்தில் நிகர லாபம் 8,701 கோடி ரூபாயிலிருந்து 9,246 கோடி ரூபாயாக உயர்ந்தது. வரிக்கு முந்தைய வருவாய் 11,184 கோடி ரூபாயிலிருந்து 11,734 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
4-ம் காலாண்டில் டிசிஎஸ் நிறுவனம் 19,388 நபர்களை பணிக்கு எடுத்துள்ளது. சென்ற நிதியாண்டில் மொத்தமாக 40,100 பேரை பணிக்கு எடுத்துள்ளது. சென்ற காலாண்டில் 7.2 சதவீத ஊழியர்கள் டிசிஎஸ் நிறுவனத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.
துறை சார்ந்த வளர்ச்சி
வங்கி மற்றும் நிதி (5.4%), உற்பத்தி (4.6%), ரீடெயில் (3.5%), தொலைத்தொடர்பு மற்றும் மீடியா (0.9%), பிற துறைகள் (3.9%)
டிசிஎஸ் பங்குகள்
இன்றைய சந்தை நேர முடிவில், டிசிஎஸ் நிறுவனப் பங்குகள் 2.43 சதவீதம் என 80.75 புள்ளிகள் சரிந்து, 3,241.45 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது. டிசிஎஸ் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்களுக்குப் பங்குக்கு 15 ரூபாய் டிவிடண்ட் வழங்கப்பட்டுள்ளது.
வணிகம்
முக்கிய அறிவிப்பு.. 14 மணி நேரத்துக்கு RTGS சேவை வேலை செய்யாது!


RTGS (Real Time Gross Settlement) ஆன்லைன் பரிவர்த்தனை 14 மணி நேரத்துக்கு வேலை செய்யாது என்ற முக்கிய அறிவிப்பை ஆர்பிஐ வெளியிட்டுள்ளது.
RTGS என்பது ஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்கு, “நிகழ் நேரத்தில்” பணத்தை இடமாற்றம் செய்யும் முறை. குறைந்தபட்சம் 2 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரையில் RTGS மூலம் பணம் பரிவர்த்தனை செய்ய முடியும்.
காலை 7 மணி முதல் 6 மணி வரை நடைபெற்று வந்த RTGS பணம் பரிவத்தனை சேவை, 2019 ஆகஸ்ட் முதல் 24 மணி நேரமும் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது.
ஏப்ரல் 18-ம் தேதி RTGS பணம் பரிவர்த்தனை சேவைக்கான தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் பணிகள் நடைபெறுகிறது. 00:00 மணி முதல் மதியம் 14:00 வரை RTGS சேவை செயல்படாது. அதாவது ஏப்ரல் 17 நள்ளிரவு 12 மணி முதல் ஏப்ரல் 18-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணி வரை RTGS பணம் பரிவர்த்தனை சேவை செயல்படாது.
NEFT பணம் பரிவர்த்தனை சேவையில் எப்போதும் போல இயங்கும்.
-
தமிழ்நாடு1 day ago
தமிழகத்தில் நாளை முதல் ஊரடங்கா? பெரும் பரபரப்பு
-
இந்தியா2 days ago
முழு லாக்டவுன் அச்சம்: மாநிலத்தை விட்டு வெளியேறும் புலம்பெயர் தொழிலாளர்கள்!
-
வேலைவாய்ப்பு2 days ago
வ.ஊ.சிதம்பரனார் துறைமுகத்தில் வேலைவாய்ப்பு!
-
சினிமா செய்திகள்2 days ago
வெளிநாடுகளிலும் வசூல் மழை பொழியும் ‘கர்ணன்’- எவ்வளவு தெரியுமா?