தொழில்நுட்பம்
உஷார்.. ஜியோ பெயரில் போலி ஆஃபர் எஸ்எஸ்எஸ், வாட்ஸ்ஆப் பகிர்வுகள்!

நற்செய்தி! கொரோனா வைரஸ் காரணமாக ஜியோ மற்றும் பேஸ்புக் இணைந்து உங்களுக்கு 6 மாதங்களுக்கு 25 ஜிபி தரவு இலவசமாக வழங்குகிறது என்று உங்களுக்கு எஸ்எஸ்எஸ் அல்லது வாட்ஸ்ஆப் தகவல் வந்ததா? அப்படியானால், உங்களுக்கு ஒரு ஷாக் செய்தி காத்திருக்கிறது. ஆம், உங்கள் போனை சைபர் மோசடியாளர்கள் தாக்க முயல்கிறார்கள் என்று அர்த்தம்.
உடனே பயப்பட வேண்டாம். இப்படி உங்களுக்கு எஸ்எம்எஸ் வந்தால், தயவு செய்து அதில் உள்ள இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம். உங்கள் போனில் உள்ள தரவுகளைத் திருட விரும்புபவர்கள் இது போன்ற போலி சலுகைகளுக்கான அறிவிப்புகளைப் பரப்புவார்கள்.
இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்த, ஜியோ நிறுவனத்தின் பத்திரிக்கை தொடர்பாளர், “நாங்கள் அவ்வப்போது வாடிக்கையாளர்களுக்கு, இது போன்ற போலி எஸ்.எம்.எஸ் போன்றவற்றை நம்ப வேண்டாம் என்று தகவல் தெரிவித்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
பொதுவாக இந்த எஸ்எம்எஸ் இந்திய மொபைல் எண்களில் இருந்து வருகிறது. அதில் வரும் இணைப்பை கிளிக் செய்தால், சலுகையைப் பெறச் செயலி ஒன்று பதிவிறக்க வேண்டும் என்ற கோரிக்கை வருகிறது. அதன் மூலமாகவே பல சைபர் குற்ற மோசடிகள் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.
தொழில்நுட்பம்
வெறுக்கத்தக்கப் பேச்சுகளுக்குத் தடை.. YouTube-ல் கூகுள் செய்துள்ள இந்த மாற்றம் பற்றித் தெரியுமா?


YouTube, Facebook போன்ற சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி மிக வேகமாக உள்ளது. அதே நேரம் பல வெறுக்கத்தக்கப் பேச்சுகளும் வருவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
சென்ற ஆண்டு அமெரிக்காவில் காவல் அதிகாரி ஒருவர் கறுப்பினத்தை ஒருவரைக் கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
உடனே உலகம் முழுவதும் இந்த சம்பவத்துக்கு எதிராக “Black Lives Matter” போராட்டங்கள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து வெள்ளை இனத்தவர்களை ஆதரிப்பவர்கள் “white lives matter” என்றும் சமூக வலைத்தளங்களில் பிரச்சாரங்களைச் செய்து வருகிறன.


LAS VEGAS, NV – JANUARY 05: A Google logo is shown on a screen during a keynote address by CEO of Huawei Consumer Business Group Richard Yu at CES 2017 at The Venetian Las Vegas on January 5, 2017 in Las Vegas, Nevada. CES, the world’s largest annual consumer technology trade show, runs through January 8 and features 3,800 exhibitors showing off their latest products and services to more than 165,000 attendees. (Photo by Ethan Miller/Getty Images)
எனவே அது குறித்து நடவடிக்கை எடுக்க விரும்பிய கூகுள், YouTube-ல் வெறுக்கத்தக்கப் பேச்சுகளுக்குத் தடை விதித்துள்ளது. குறிப்பிட்ட சில வெறுக்கத்தக்கப் பேச்சுக்களுக்கான keywords என்று அழைக்கப்படும் குறிச்சொற்களைப் பயன்படுத்தி இருந்தால், அந்த வீடியோக்களுக்கான விளம்பரங்கள் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இதுபோல, ஆபாச வீடியோக்கள் இருந்தால், அவற்றுக்கான விளம்பரங்களை YouTube நீக்கியது. அதே போன்ற ஒரு முடிவை இப்போது கூகுள் நிறுவனம் மீண்டும் எடுத்துள்ளது.
தொழில்நுட்பம்
வாட்ஸ்அப் வழங்கும் இரண்டு புது அப்டேட்ஸ்… விரைவில் அறிமுகம்!


வாட்ஸ்அப் செயலியில் இரண்டு புது வித அப்டேட்களை அளிப்பதாக ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.
வாட்ஸ்அப் பயனாளர்கள் இனி தங்களது ஃபேஸ்புக் கணக்கை லாக்-அவுட் செய்வது போலவே வாட்ஸ்அப் கணக்கையும் லாக் அவுட் செய்து கொள்ளலாம். இத்தகையை வசதியைத் தான் வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு விரைவில் புழக்கத்துக்குக் கொண்டு வர உள்ளது ஃபேஸ்புக். இனி வரும் காலங்களில் பயனாளர்கள் தங்களது வாட்ஸ்அப் கணக்கை நீக்க ஏதுவாக இருக்காது.
வாட்ஸ்அப் கணக்கை நீக்குவதற்கு பதிலாக அதிலிருந்து பயனாளர்கள் லாக் அவுட் செய்து கொள்ளலாம். இதேபோல், விரைவில் ஒரே கணக்கை நான்கு சாதனங்களில் இணைத்துக் கொள்வதற்கு ஏதுவான வசதியையும் பயனாளர்களுக்கு வழங்குகிறது வாட்ஸ்அப். தொலைபேசியின் மூலமாக மட்டும் இல்லாமல் தொலைபேசி இல்லாத போது வேறு சாதனங்களின் வழியாகவும் வாட்ஸ்அப் செயலியை பயனாளர்களால் பயன்படுத்த முடியும்.
இந்த புது ஆப்ஷன் பயனாளர்களுக்குக் கூடுதல் ப்ரைவசியைத் தரும் என ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தொழில்நுட்பம்
ஏலத்துக்கு வந்த ‘ஆப்பிள்’ ஸ்டீவ் ஜாப்ஸ்-ன் வேலை விண்ணப்பக் கடிதம்..!


ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் எழுதிய வேலை விண்ணப்பக் கடிதம் ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப உலகில் புரட்சி ஏற்படுத்தியவர் ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ். இவர் கடந்த 2011-ம் ஆண்டு புற்றுநோயின் பாதிப்பின் காரணமாக காலமானார். ஸ்டீவ் ஜாப்ஸ் கடந்த 1973-ம் ஆண்டு தனக்கு வேலை வேண்டி கைப்பட எழுதிய வேலை விண்ணப்பக் கடிதம் தற்போது ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டீவ் காப்ஸ் எழுதிய வேறொரு கடிதம் ஒன்று கடந்த 2018-ம் ஆண்டு ஏலம் விடப்பட்டது. அப்போது அந்தக் கடிதத்தை ஐரோப்பாவைச் சேர்ந்த நபர் ஒருவர் 75 ஆயிரம் அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் எடுத்தார். தற்போது ஏலத்துக்கு வந்துள்ள கடிதம் ஆன்லைனில் ஏலம் விடப்பட்டுள்ளது.
இந்த ஏலம் பிபரவரி 24-ம் தேதி முதல் மார்ச் 24-ம் தேதி வரையில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்துக்கு வந்துள்ள கடிதத்தில் ஸ்டீவ் ஜாப்ஸ் தான் ஆங்கில இலக்கியத்தில் பட்டப்படிப்பு படித்துள்ளதாகவும் தனக்கு கனிணி, கால்குலேட்டர் உபயோகப்படுத்தத் தெரியும் என்றும் டிசைன் தொழில்நுட்ப அறிவு உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
-
தமிழ்நாடு1 day ago
தமிழகத்தில் நாளை முதல் ஊரடங்கா? பெரும் பரபரப்பு
-
இந்தியா2 days ago
முழு லாக்டவுன் அச்சம்: மாநிலத்தை விட்டு வெளியேறும் புலம்பெயர் தொழிலாளர்கள்!
-
வேலைவாய்ப்பு2 days ago
வ.ஊ.சிதம்பரனார் துறைமுகத்தில் வேலைவாய்ப்பு!
-
சினிமா செய்திகள்2 days ago
வெளிநாடுகளிலும் வசூல் மழை பொழியும் ‘கர்ணன்’- எவ்வளவு தெரியுமா?