ஆட்டோமொபைல்
டெஸ்லாவுக்கு போட்டியா? 2025-ம் ஆண்டு முதல் எலக்ட்ரிக் கார் மட்டுமே.. ஜாகுவார் அதிரடி அறிவிப்பு!


உலகின் ஆடம்பர எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனம் டெஸ்லா. ஜாகுவா அண்ட் லேண்ட் ரோவர் டாடா குழுமத்துக்குச் சொந்தமான ஒரு ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனம்.
உலகம் முழுவதும் இப்போது எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. எனவே மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன.
இந்நிலையில் 2025-ம் ஆண்டுக்குள் 6 புதிய எலக்ட்ரிக் வாகனங்களை ஜாகுவார் லேண்ட் ரோவர் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் 2030-ம் ஆண்டுக்குள் எலக்ட்ரிக் கார் விற்பனையில் பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்த ஜாகுவார் முடிவு செய்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜாகுவாரின் இந்த அறிவிப்பால், டெஸ்லா நிறுவனத்தின் ஐரோப்பிய, இந்திய சந்தைகளில் கடும் போட்டி எழும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஆட்டோமொபைல்
கர்நாடகாவில் டெஸ்லா எலக்ட்ரிக் கார் தொழிற்சாலை.. கர்நாடகா முதல்வர் அறிவிப்பு!


கர்நாடகாவில் டெஸ்லா எலக்ட்ரிக் கார் தொழிற்சாலை விரைவில் அமைக்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் எடியுரப்பா அறிவித்துள்ளார்.
சென்ற மாதம் பெங்களூருவில் டெஸ்லா இந்தியா மோட்டார்ஸ் & எனர்ஜி பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம் பதிவு செய்யப்பட்டது.
டெஸ்லா இந்தியாவின் இயக்குநர்களாக தனேஜா, வெங்கட் ரங்கம் ஸ்ரீராம் மற்றும் டேவிட் ஜான் ஃபைன்ஸ்டீன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆடம்பர எலக்ட்ரிக் கார் நிறுவனமான டெஸ்லா உலகின் நம்பர் 1 ஆடம்பர எலக்ட்ரிக் கார் நிறுவனமாக உள்ளது. அதன் நிறுவனர் எலன் மஸ்க் உலகி நம்பர் 1 கோடீஸ்வரராக உருவாகியுள்ளார்.
ஆட்டோமொபைல்
ஆட்டோமொபைல் துறைக்கு ஆச்சர்யம் கொடுத்த பட்ஜெட்.. வாகன ஸ்கிராப்பேஜ் கொள்கையால் என்ன பலன்?


மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தாண்டு பட்ஜெட் அறிவிப்பின் போது ஆட்டோமொபைல் துறைகளுக்கு பெரிதும் உதவ கூடிய ஸ்க்ராப்பேஜ் குறித்து அறிவித்தார்.
ஏற்கனவே பொருளாதார மந்த நிலையால் மிகவும் பாதிக்கப்பட்ட இந்திய ஆட்டோமொபைல் துறை கொரோனா காலத்தில் மொத்தமாக முடங்கி விட்டது என்றே கூறலாம். வாகனங்கள் விற்பனை பாதிக்கப்பட்டதால் நிறைய தொழிற்சாலைகளில் உற்பத்தியும் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் தான் இவற்றுக்கு பதில் நடவடிக்கையாக வாகன ஸ்கிராப்பேஜ் கொள்கை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை சோதனை:
அதன்படி, இனி 20 ஆண்டுகள் பழமை வாய்ந்த கார் போன்ற பயணிகள் வாகனங்களும், 15 ஆண்டுகள் பழமை வாய்ந்த லாரி உள்ளிட்ட வர்த்தக வாகனங்களும் ஃபிட்னஸ் சோதனை செய்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு ஃபிட்னஸ் சோதனைக்கும் சுமார் 40 ஆயிரம் வரை செலவு ஆக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.ஃபிட்னஸ் சோதனையில் தேர்ச்சி பெற்ற வாகனங்களுக்கு அதற்கான சான்றிதழ் வழங்கப்படும். இந்த ஃபிட்னஸ் சான்றிதழ் ஐந்து ஆண்டுகளுக்கு பொருந்த கூடியது. அதேநேரம் கூடுதலாக பசுமை வரியும் விதிக்கப்படும். சாலை வரியில் இருந்து 10 முதல் 25 சதவிகிதம் பசுமை வாரியாக வசூலிக்கப்படும். ஆனால் நகரத்திற்கு நகரம் இது மாறுபடும்.
டெல்லி உள்ளிட்ட அதிக காற்று மாசுபாடு இருக்க கூடிய பகுதிகளில் 50 சதவிகிதம் வரை வசூலிக்கப்படவும் வாய்ப்புள்ளது. ஸ்கிராப்பேஜ் கொள்கையின் கீழ், இந்தியாவில் தற்போது இயங்கி கொண்டிருக்கும் 20 ஆண்டுகள் பழமையான 50 லட்சம் வாகனங்களும், 15 ஆண்டுகள் பழமை வாய்ந்த 34 லட்சம் வாகனங்களும் அகற்றப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன. மேலும் இதன் மூலம் வாகன மாசுபாடு 25 சதவீதம் வரை குறைகிறது . ஸ்கிராப் செய்யப்பட்ட வாகனங்கள் மறுசுழற்சி செய்யப்பட்ட பின்னர் மூலப்பொருட்களை வழங்கும் திறனைக் கொண்டுள்ளன.
சலுகை வழங்கும் அரசு:
ஒருவேளை வாகனம் ஃபிட்னஸ் சோதனையில் தோல்வியடைந்தால் அதன் பதிவு ரத்து செய்யப்படும். அவ்வாறு ரத்து செய்யப்பட்ட வாகனத்தை சாலையில் ஓட்டுவதும் சட்டப்படி குற்றமாகும். அதேசமயம் Voluntary Vehicle Scrappage Policy படி, பழைய வாகனங்களை நொறுக்கி அகற்றிவிட்டு புதிய வாகனங்களை வாங்கினால் இதற்கு தேவையான சில நிதி மற்றும் வரிச் சலுகைகளை அரசே வழங்கும். இதன் மற்றொரு பயன்பாடு, நகர்ப்புற மாசு அளவைக் குறைப்பதற்கும், வாகன விற்பனையை ஊக்குவிப்பதற்கும் உதவும். இதன் மூலம் நுகர்வோர்கள் பழைய வாகனங்களை மாற்றிவிட்டு புதிய வாகனங்கள் வாங்க உந்து சக்தி கிடைக்கிறது. மேலும் பழைய வாகனங்கள் சாலைகளில் இருந்து அகற்றப்படும் போது காற்று மாசு நீங்குவதால் சுற்றுச்சூழலுக்கும் உகந்ததாக அமையும்.
2022, ஏப்ரல் 1 முதல் இது நடைமுறைக்கு வர உள்ளது. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஏற்கனவே ஒரு ஸ்கிராப்பேஜ் கொள்கை திட்டத்தை அரசாங்கத்திற்கு ஆய்விற்காக அனுப்பியுள்ளார். இது தொடர்பான விரிவான விவரங்களை மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டின் போது வாகன ஸ்க்ராப்பேஜ் கொள்கை குறித்த அறிவிப்புகள் வெளியானவுடன் ஆட்டோ மொபைல் துறை சார்ந்த பங்கு வர்த்தகம் அதிகரித்துள்ளததும் குறிப்பிடத்தக்கது.
ஆட்டோமொபைல்
2 சக்கரம் வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் இல்லையா? 3 மாதம் ஓட்டுநர் உரிமம் இடைநீக்கம்!


இரண்டு சக்கர வாகனம் ஓட்டும் போது, ஹெல்மெட் அணியவில்லை என்றால் ஓட்டுநர் உரிமம் 2 மாதம் இடைநீக்கம் செய்யப்படும் என்று கர்நாடக போக்குவரத்துத் துறை அதிரடி உத்தரவிட்டுள்ளது.
பொதுவாக இரண்டு சக்கர வாகனத்தில் செல்லும் போது 4 வயதுக்கு அதிகம் உள்ளவர்கள் அனைவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம்.
ஆனால், இரண்டு சக்கரம் வாகனங்களில் செல்லும் போது, குறிப்பாகப் பள்ளி நேரங்களில் பெற்றோர் மட்டும் ஹெல்மெட் அணிந்தும், கூட வரும் மாணவர்கள் ஹெல்மெட் இல்லாமல் வருவதையும் பார்த்து இருப்போம்.
அது மட்டுமல்லாமல், இரண்டு சக்கரம் வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதிமுறையைப் பின்பற்றாதவர்களையும் அதிகளவில் பார்த்து இருப்போம்.
இப்படி ஹெல்மெட் அணியாமல் பயணிப்பவர்களுக்குக் கடிவாளம் போடும் வகையில், கர்நாடக போக்குவரத்து காவல் துறை அதிரடி உத்தரவு ஒன்றை விதித்துள்ளது. அதன் படி ஹெல்மெட் அணியாமல் செல்லும் வாகனங்கள் பிடிபட்டால், அந்த வாகனத்தை ஓட்டி வருபவர்களின் வாகன உரிமம் 3 மாதங்கள் வரை இடை நீக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகன போக்குவரத்து விதிகளின் படி, இரண்டு சக்கரம் வாகனத்தில் செல்லும் போது வாகனம் ஓட்டுபவர் மட்டுமல்லாமல், வாகனத்தில் உட்கார்ந்து பயணிப்பவர்களும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கிரிக்கெட்2 days ago
‘நீ என்னனை கைவிட்டுட்ட இஷாந்த்!’- கடைசி டெஸ்டில் தோனியின் அவலநிலை; வெளிவந்த ரகசியம்
-
கிரிக்கெட்2 days ago
இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட்: 4 விக்கெட்டுக்களை இழந்து இங்கிலாந்து திணறல்
-
டிவி2 days ago
‘சித்தி-2 சீரியலில் என்னுடைய கதாபாத்திரத்தில் நடிப்பது யார்?’- பதிலளித்த ராதிகா!
-
டிவி2 days ago
தொடங்குகிறது பிக்பாஸ் தமிழ் சீசன் 5… எப்போது முதல் தெரியுமா?