Connect with us

பர்சனல் ஃபினாஸ்

உங்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்டில் இந்த குறியீடு உள்ளதா? அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?

Published

on

கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் பல வண்ணங்களில் ஒவ்வொன்று தனிச் சிறப்புகளுடன் வாடிக்கையாளர்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்படுகிறது. அதிலும் அடிப்படை கார்டுகள் முதல் பிரீமியம் கார்டுகள் என ஒவ்வொன்றுக்கும் தனி ஆண்டுக் கட்டணங்களும் உள்ளன என்பது எல்லாம் அனைவருக்கும் தெரியும்.

ஆனால் அன்மை காலமாக வருகின்ற புதிய கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளில் வைபை போன்ற குறியீடுகளுடன் வருவதைக் கவனித்துள்ளீர்களா? அது எதற்காக எனத் தெரியுமா?

உங்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்டில் வைபை போன்ற இந்தக் குறியீடு இருந்தால் அதற்குத் தொடர்பற்ற அம்சம் என்று அர்த்தம் ஆகும். எனவே இந்த அம்சம் உள்ள கார்டினை பிஓஎஸ் இயந்திரம் மீது டேப் (வைத்து எடுத்தால்) செய்தால் போதும் பரிவர்த்தனை முடிந்துவிடும்.

இந்தக் கண்டக்ட் லெஸ் கார்டுகளில் பிஓஎஸ் இயந்திரங்கள் அருகாமை கொண்டு செல்லும் போது தகவல் தொடர்புகொள்ளக் கூடிய அம்சம் உள்ளது. ஆனாலும் இந்தக் கார்டுகளைப் பிஓஎஸ் இயந்திரத்தின் 1 முதல் 2 இஞ்ச் அருகில் கொண்டு செல்லும் போது மட்டுமே பரிவர்த்தனை நடக்கும்.

விசா இந்தப் புதிய தொழில்னுட்ப சேவையினை வளர்ந்த ஆடுகளில் முழுமையாக வழங்கி வருகிறது. இந்தியாவில் தற்போது தான் இந்தச் சேவை பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நன்மைகள்

1) பிஓஎஸ் இயந்திரங்களில் ஸ்வைப் செய்வது போன்று இல்லாமல் இந்தக் கார்டுகளை வைத்து எடுத்துவிட்டாலே பரிவர்த்தனை செய்துவிடலாம்.
2) கார்டை யார் கையிலும் அளிக்க வேண்டும் என்ற அவசிய இல்லை.
3) சிரிய தொகை பரிமாற்றத்திற்குக் கடவுச்சொல் உள்ளிட வேண்டும் என்ற அவசியம் இல்லை.

அபாயம்

இந்தக் கர்டுகளைப் பயன்படுத்தும் போது நிறைய அபாயங்கள் உள்ளது. உதாரணத்திற்குக் கூட்டமான இடங்களில் பிஓஎஸ் இயந்திரத்துடன் ஒருவர் வந்து யாருக்கும் தெரியாமல் குறைந்த விலை பரிவர்த்தனை செய்ய முடியும். பிக்பாக்கெட்கள் அதிகம் நடைபெற வாய்ப்புகள் உள்ளது. இந்தத் தொழில்நுட்பம் இந்தியாவிற்குப் புதிது என்பதால் அதிகம் பயன்பாட்டிற்கு வரும் போது தான் இதில் உள்ள சிக்கல்கள் எல்லாம் வெளிவரும்.

Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment moderation is enabled. Your comment may take some time to appear.

பர்சனல் ஃபினாஸ்

எச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி… கடன்களை மறுசீரமைப்பு செய்வது எப்படி?

Published

on

ஆர்பிஐ அறிவுறுத்திய கடன் தவணை ஒத்திவைப்பு, 2020 ஆகஸ்ட் 31-ம் தேதியுடன் முடிவடைந்தது. அதை அடுத்து 6 மாதங்கள் வரை வங்கி வாடிக்கையாளர்கள் கடன் தவணையைத் திருப்பி செழுத்த தடை பெற்றதல், வட்டிக்கு வட்டி போன்றவை உண்டு. எனவே அதை மறுகட்டமைப்பு செய்து, தவணை காலத்தை நீட்டிக்க வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே எஸ்பிஐ வங்கி தங்களது கடன் திட்டங்கள் மீதான மறுசீரமைப்புக்கான அறிவிப்பை வெளியிட்ட நிலையில், அதற்கான அறிவிப்பை இந்தியாவின் மிகப் பெரிய தனியார் வங்கி நிறுவனமான எச்டிஎப்சி வெளியிட்டுள்ளது. எச்டிஎப்சி வாடிக்கையாளர்கள் எப்படி தங்களது கிரெடிட் கார்டு திட்டங்கள் முதல் கடன் திட்டங்கள் வரை அனைத்தை மறுகட்டமைப்பு செய்வது என்று இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

1) ரிசர்வ் வங்கியால் அங்கீரக்கப்பட்ட மறுசீரமைப்பு திட்டம் என்ன?

கோவிட்-10 தொற்றுநோயால் உருவாகியுள்ள பொருளாதார வீழ்ச்சியை நிவர்த்தி செய்வதற்கான தீர்மான திட்டங்களை செயலடுத்த வங்கிகள் மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி ஒரு கட்டமைப்பை வழங்கியுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்குக் கணிசமான நிதி அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்டமைப்பு மற்றும் ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்டு, கோவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் கடன்களை மறுசீரமைப்பிற்கான கொள்கையை உங்கள் வங்கி வடிவமைத்துள்ளது.

2) மறுசீரமைப்புக்குத் தகுதியானவர் யார்?

அ) ஸ்டாண்டர்டு என வகைப்படுத்தப்பட்ட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள், ஆனால் 2020 மார்ச் 1 நிலவரப்படி வங்கியுடன் 30 நாட்களுக்கு மேல் தவணை பக்கி ஏதும் இல்லை மேலும் இன்றுவரை அனைத்து கடன்கள் / வசதிகளிலும் முறையாக உள்ளவர்கள் மறுசீரமைப்பிற்குத் தகுதியுடையவர்களாகக் கருதப்படுவார்கள்.

ஆ) கோவி-19 தொற்று நோயால் வாடிக்கையாளர் குறைவான வருமானம் / வருமான இழப்பு அல்லது பணப்புழக்கங்கள் போன்றவற்றில் நிதி ரீதியாக பாதிக்கப்பட்டு இருக்க வேண்டும்.

இ) கொவிட்-19 தாக்கத்தின் காரணமாகப் பணப்புழக்கத்தின் வீழ்ச்சியைக் காட்டும் ஆவணங்கள் / தகவல்கள் வங்கி அடிப்படையில் வருமானக் குறைப்பு மற்றும் அதன் நிதி பாதிப்பு ஆகியவற்றை மதிப்பாய்வு செய்யும். மறுசீரமைப்பை வழங்குவதற்கு முன்,, வழங்கப்பட்ட ஆவணங்களை மறூசீரமைக்கபப்ட்ட ஈஎம்ஐ-களின் அடிப்படையில் செலுத்த வாடிக்கையாளரின் நம்பாத்தனமையை வங்கி மதிப்பீடு செய்யும். நம்பத்தன்மையைக் கணக்கீடுகளைத் தவிர, வாடிக்கையாளரின் திரும்பிச் செலுத்தும் தடப் பதிவு மற்றும் வாடிக்கையாளர் முன்கூட்டியே தடைக்காலத்தை பெறும்போது அளித்த பதில்களும் மறுசீரமைப்பு முடிவில் காரணியாக இருக்கும்.

3) எனது கடனில் மறுசீரமைப்பு நன்மையை எவ்வாறு பெறுவது?

விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து தொடர்புடைய விவரங்களைச் சமர்ப்பிக்க விண்ணப்ப இணைப்புக்காக வங்கியின் வலைத்தளத்தைப் பார்வையிடலாம். மாற்றாக நீங்கள் உங்கள் RM-ஐ தொடர்பு கொள்ளலாம். பயன்பாட்டிற்கான இணைப்பு விரைவில் புதுப்பிக்கப்படும்.

4) எனக்குக் கிடைக்கக் கூடிய மறுசீரமைப்பு விருப்பங்கள் யாவை?

உங்கள் மாதாந்திர ஈஎம்ஐ திருப்பிச் செலுத்தும் சுமையை எளிதாக்கக் கடனின் மீதமுள்ள காலம் அதிகபட்சம் 24 மாதங்களுக்கு நீட்டிக்கப்படலாம்.

5) மறுசீரமைப்பு நன்மை பெற நான் ஏதேனும் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டுமா?

உங்கள் வேலைவாய்ப்பு அல்லது வணிகத்தின் தற்போதைய நிலை குறித்த விவரங்களை வழங்கும் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வங்கி கோருகிறது. சம்பளம் வாங்குவார்களுக்கு – சம்பள சீட்டுகள் மற்றும் வங்கி அறிக்கை தேவைப்படலாம். சுயதொழில் செய்பவர்கள் / நிறுவனங்களுக்கு – வங்கி அறிக்கை, ஜிஎஸ்டி வருமானம், வருமான வரி வருமானம், உதயம் சான்றிதழ் போன்றவை தேவைப்படலாம். ஆன்லைன் மறுசீரமைப்பு பயன்பாட்டிற்காக வங்கியின் வலைத்தளத்தைப் பார்வையிடலாம், அது விரைவில் புதுப்பிக்கப்படும்.

6) மறுசீரமைப்பு தொகுப்பைத் தேர்ந்தெடுப்பது எனது சிபில் ஸ்கோரில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

ஆர்பிஐ ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களின் படி, நீங்கள் கடன் மறுசீரமைப்பு செய்துள்ளீர்கள் என்று தெரிவிக்கப்படும். எனவே சிபில் ஸ்கோரில் மாற்றம் ஏற்படும். ஆனால் அதனால் பெரிய பாதிப்பு ஏதும் இருக்காது.

7) எனது கடனை மறுசீரமைத்தால் செயலாக்கக் கட்டணம் அல்லது கட்டணங்கள் ஏதும் உண்டா?

உங்கள் கடனை மறுசீரமைக்க நீங்கள் தேர்வு செய்தால் வங்கி கட்டணம் வசூலிக்கலாம்.

8) நான் வங்கியில் பல கடன்களைப் பற்றுள்ளேன். ஒவ்வொரு கடனுக்கு தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டுமா?

மறுசீரமைப்புக்கு விண்ணப்பிக்கும் போது, ஒரே விண்ணப்பத்தில் அனைத்து கடன்களை குறிப்பிடுவதற்கான வசதிகள் இருக்கும். நீங்கள் அளிக்கும் விருப்பத்தை வைத்து வங்கி முடிவை எடுக்கும்.

9) கிரெடிட் கார்டு கடன் திட்டங்களுக்கு மட்டும் தனியாக மறுசீரமைப்பு கிடைக்குமா?

கிரெடிட் கார்டு மூலம் கடன் பெற்று இருந்தாலும் மறுசீரமைப்பைப் பெறலாம்.

10) கிரெடிட் கார்டு ஜம்போ லோன் பெற்று இருந்தாலும் மறுசீரமைப்பு செய்ய முடியுமா?

கிரெடிட் கார்டு ஜம்போ லோன் பெற்று இருந்தாலும் மறுசீரமைப்பு செய்யலாம்.

11) மறுசீரமைப்பு பெற குறைந்தபட்ச நிலுவைத் தேவை உள்ளதா?

மறுசீரமைப்பு பெற குறைந்தது 25,000 ரூபாய் வரை கடன் செலுத்த வேண்டி இருக்க வேண்டும்.

12) சுய தொழில் / சிறு தொழில் நிறுவனங்களுக்காகக் கடன் பெற்று இருந்தாலும் மறுசீரமைப்பு பெற முடியுமா?

சுய தொழில் / சிறு தொழில் நிறுவனங்களுக்காகக் கடன் பெற்று இருந்தால், அவர்களுக்கான சிறப்பு மறுசீரமைப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்கீழ் மறுசீரமைப்பு பெறலாம். அப்போது : https://udyamregistration.gov.in/Government-ofIndia/Ministry-of-MSME/online-registration.htm என்ற இணைப்பில் பதிவு செய்திருக்க வேண்டும்.

13) கடன் தவணை தடை பெறவில்லை என்றாலும் கடன் திட்டத்தை மறுசீரமைப்பு செய்ய முடியுமா?

மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், வங்கியின் அனைத்து வாடிக்கையாளரும் தகுதியுடையவர்கள் தான். எனவே கடன் தவணை தடை பெறவில்லை என்றாலும் மறுசீரமைப்பு பெறலாம்.

Continue Reading

பர்சனல் ஃபினாஸ்

எஸ்பிஐ வங்கியில் கடன் வாங்கியுள்ளீர்களா? இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு!

Published

on

வீட்டுக் கடன், வாகன கடன் உள்ளிட்ட சில்லறை கடன்களைச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை, 2 ஆண்டுகள் வரை நீட்டத்துக்கொள்ளாம் என்று எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.

எஸ்பிஐ வங்கியில் வீட்டுக் கடன், தனிநபர் கடன், வாகன உள்ளிட்ட பல்வேறு சில்லறை கடன்களைப் பெற்று இருந்து, கோவிட்-19 ஊரடங்கால் அதை செலுத்த முடியாமல் போயிருந்தால், அதைத் திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசம் 2 ஆண்டுகள் வரை நீட்டித்து வழங்க எஸ்பிஐ முடிவு செய்துள்ளது.

2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 1-ம் தேதிக்குள், எஸ்பிஐ வங்கியில் கடன் பெற்று அதற்கான தவணையை தவறாமல் ஒவ்வொரு மாதமும் கட்டி வந்து இருந்தால், எஸ்பிஐ வங்கி இந்த கடன் தவணையைத் தவறாமல் திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீடித்து வழங்கும்.

இந்த 2 ஆண்டு கடன் மறூசீரமிப்பு நீட்டிப்பு திட்டத்தைத் தேர்ந்தெடுத்தால், வாடிக்கையாளரின் கடன் திட்டத்தின் மீது 0.35 சதவீதம் கூடுதல் வட்டி விகிதம் விதிக்கப்படும்.

எஸ்பிஐ வங்கியின் இந்த கடன் மறு சீரமைப்பு திட்டத்தைப் பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் முதலில், எஸ்பிஐ வங்கி இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். பின்னர் சம்மந்தப்பட்ட வங்கி கிளையை அணுகி தவணை கால அவகாசத்தை நீட்டித்துக்கொள்ளலாம்.

எஸ்பிஐ வங்கியை தொடர்ந்து, ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎப்சி வங்கிகளும் கடன் மறுசீரமைப்பு அறிவிப்பை வெளியிட வாய்ப்புகள் உள்ளது.

எஸ்பிஐ வங்கியின் கடன் மறு சீரமைப்பு திட்டத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

எஸ்பிஐ வங்கியின் https://sbi.co.in/ இணையப் பக்கத்திற்குச் சென்று, கடன் மறுசீரமைப்புக்கான தகுதியை அறிந்துகொள்வதற்கான தெரிவை கிளிக் செய்ய வேண்டும்.

பின்னர் உங்கள் கடன் கணக்கு எண்ணை உள்ளிட வேண்டும். அதன் பிறகு ஒரு முறை கடவுச்சொல் அந்த கடன் திட்டத்துடன் தொடர்புடைய மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும். அதை உள்ளிட்ட பிறகு நீங்கள் பெற்ற கடனுக்கான மறுசீரமைப்புக்கான கோரிக்கை ஏற்கப்படும்.

எஸ்பிஐ வங்கி கடன் மறுசீரமைப்பு கோரிக்கையை எப்போது வரை அளிக்க முடியும்?

எஸ்பிஐ வங்கியில் கடன் பெற்று, அதைச் சரியாகத் தவணை தவறாமல் செலுத்தி வரும் வாடிக்கையாளர்கள், 24.12.2020-ம் தேதிக்குள் கடன் மறுசீரமைப்புக்கான கோரிக்கையை வைக்கலாம்.

ஒன்றுக்கு மேற்பட்ட கடன் பெற்று இருந்தாலும் மறுசீரமைப்பு பெற முடியுமா?

எஸ்பிஐ வங்கியின் ஒன்றுக்கு மேற்பட்ட சில்லறை கடன்களைப் பெற்று இருந்தாலும், எல்லா கடனுக்கான தவணை காலத்தையும் மறு சீரமைப்பு செய்து நீட்டிக்க முடியும்.

எத்தனை நாட்களில் கடன் தவணை மறுசீரமைக்கப்படும்?

கடன் மறுசீரமைப்பு செய்யக் கோரிக்கை வைக்கும் வாடிக்கையாளர்களின் விண்ணப்பத்தை, எஸ்பிஐ வங்கி 7 முதல் 10 நாட்களில் பரிசீலனை செய்து அனுமதியளிக்கும்.

கடனை மறுசீரமைக்கச் செயலாக்கக் கட்டணம் உண்டா?

இல்லை. கடனை மறுசீரமைக்கச் செயலாக்கக் கட்டணம் ஏதுமில்லை.

Continue Reading

பர்சனல் ஃபினாஸ்

சேமிப்பு கணக்குகளுக்கு அதிக வட்டி விகித லாபம் அளிக்கும் வங்கிகள்!

Published

on

மக்கள் பொதுவாகக் கையில் பணத்தை வைத்துக்கொள்வதை விட, வங்கி சேமிப்பு கணக்குகளில் பணத்தை வைப்பதைப் பாதுகாப்பாக இருக்க வேண்டு என்று நினைக்கின்றனர்.

அதிலும், திறமையானவர்கள் அதிக வட்டி விகிதம் அளிக்கும் சேமிப்பு கணக்குகளில் பணத்தை டெபாசிட் செய்து வைப்பார்கள். பொதுத் துறை வங்கிகளுடன் ஒப்பிடும் போது தனியார் வங்கிகளில் அதிக வட்டி விகித லாபம் அளிக்கப்படும். அதுமட்டுமல்லாமல் தனியார் வங்கிகள் எல்லா நன்மைகளையும் பெற அதிக குறைந்தபட்ச இருப்பு தொடை தேவை. அதுவே பொதுத்துறை வங்கி சேமிப்பு கணக்குகள் என்றால் குறைந்தபட்ச இருப்புத் தொகை இருந்தால் போதும்.

எனவே, சேமிப்பு கணக்குகளில் வைக்கும் பணத்திற்கு அதிக வட்டி விகித லாபம் வழங்கும், பொதுத் துறை வங்கிகள் பட்டியலை இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

ஐடிபிஐ வங்கி

ஐடிபிஐ வங்கி 25 லட்சம் ரூபாய் வரையில் சேமிப்பு கணக்கில் வைக்கும் போது 3.1 சதவீத வட்டி விகித லாபம் அளிக்கும். இது 25 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகச் சேமிப்பு கணக்கில் பணம் வைத்து இருந்தால் 3.6 சதவீத லாபம் பெற முடியும்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தங்களது சேமிப்பு கணக்கில் வைத்துள்ள பணத்திற்கு அதிகபட்சமாக 3.1 சதவீத லாபத்தை வழங்குகிறது.

பஞ்சாப் & சிண்ட் வங்கி

பஞ்சாப் & சிண்ட் வங்கியின் சேமிப்பு கணக்கில் 20 லட்சம் ரூபாய் வரை இருப்பு வைத்து இருந்தால் 3.1 சதவீத லாபம் கிடைக்கும். 20 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக இருப்பு வைத்து இருந்தால் 3.5 சதவீத லாபம் கிடைக்கும்.

பாங்க் ஆப் இந்தியா

பாங்க் ஆப் இந்தியா வங்கி சேமிப்பு கணக்குகளில் இருப்பு வைத்துள்ள பணத்திற்கு 3 சதவீத லாபம் வழங்கப்படும்.

யூனியன் வங்கி

யூனியன் வங்கி சேமிப்பு கணக்குகளில் இருப்பு வைத்துள்ள பணத்திற்கு 3 சதவீத லாபம் வழங்கப்படும்

Continue Reading
வேலை வாய்ப்பு11 months ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா1 year ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா1 year ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு1 year ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா1 year ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

சினிமா செய்திகள்2 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

தமிழ்நாடு5 months ago

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

கிரிக்கெட்3 weeks ago

பந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சினிமா செய்திகள்4 weeks ago

தேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ!

வீடியோ செய்திகள்2 months ago

காதலை வித்தியாசமாகத் தெரிவிக்க தீ மூட்டிக்கொண்ட காதலன்! (வீடியோ உள்ளே)

வீடியோ2 months ago

சூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்!

வீடியோ செய்திகள்7 months ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு

வீடியோ செய்திகள்7 months ago

சாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு

வீடியோ செய்திகள்7 months ago

கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? – சிறப்பு தொகுப்பு

வீடியோ செய்திகள்7 months ago

கோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi

வீடியோ செய்திகள்7 months ago

லாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு

வீடியோ செய்திகள்7 months ago

நானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி

Trending

%d bloggers like this: