வணிகம்
கடன் பங்குகள் வெளியிட்டு ரூ.1000 கோடி நிதி திரட்டும் தமிழக அரசு!


தமிழ்நாடு அரசு மொத்தம் 1000 கோடி ரூபாய் மதிப்பிற்குப் பங்குகள் வடிவிலான 6.33% தமிழ்நாடு மாநில வளர்ச்சிக் கடன் 2030, ஏலத்தின் மூலம் மறு வெளியீடு செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது.
இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால், மும்பையில் உள்ள தன் தலைமை அலுவலகத்தில் டிசம்பர் 15-ம் தேதி நடக்க உளது.
போட்டி ஏலக் கேட்புகள் முற்பகல் 10:30 மணியிலிருந்து 11:30 மணிக்குள்ளாகவும் போட்டியற்ற ஏலக் கேட்புகள் முற்பகல் 10:30 மணியிலிருந்து 11:00 மணிக்குள்ளாகவும் ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவையில் மின்னணு வடிவத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
வணிகம்
பெட்ரோல் மீதான வரியை குறைத்த மேற்கு வங்கம்.. தமிழக அரசும் செய்யுமா?


பெட்ரோல் விலை சில மாநிலங்களில் 100 ரூபாயைக் கடந்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் 100 ரூபாயை நெருங்கி வருகிறது. இந்நிலையில் மேற்கு வங்கம் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை 1 ரூபாய் வரை குறைத்து அறிவித்துள்ளது.
இந்த வரி குறைப்பால் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பாதிக்கப்பட்டு வரும் மக்கள் பெரும் அளவில் பயன் பெறுவார்கள். பெட்ரோல் மீதான வரியில் மத்திய அரசுக்கு 32.90 ரூபாயும், மாநில அரசுக்கு 18.46 ரூபாயும் வரி வருவாயாகக் கிடைக்கிறது என்று மேற்கு வங்க நிதி அமைச்சர் அமித் மித்ரா தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தைத் தொடர்ந்து, விரைவில் தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் பெட்ரோல், டீசல் மீதான வரி குறைப்பு வரலாம் என்று எதிர்பார்க்கலாம்.
ஒருவேலைத் தமிழக அரசு இந்த வரி குறைப்பை அறிவித்தால், கண்டிப்பாக இது அதிமுகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கும் இது உதவும் என்று கூறப்படுகிறது.
இன்று சென்னையில் பெட்ரொல் விலை லிட்டர் ஒன்றுக்கு 92.59 ரூபாய் என்றும், டீசல் லிட்டர் 85.98 ரூபாய் என்றும் விற்பனை செய்யப்படுகிறது.
ஆட்டோமொபைல்
டெஸ்லாவுக்கு போட்டியா? 2025-ம் ஆண்டு முதல் எலக்ட்ரிக் கார் மட்டுமே.. ஜாகுவார் அதிரடி அறிவிப்பு!


உலகின் ஆடம்பர எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனம் டெஸ்லா. ஜாகுவா அண்ட் லேண்ட் ரோவர் டாடா குழுமத்துக்குச் சொந்தமான ஒரு ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனம்.
உலகம் முழுவதும் இப்போது எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. எனவே மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன.
இந்நிலையில் 2025-ம் ஆண்டுக்குள் 6 புதிய எலக்ட்ரிக் வாகனங்களை ஜாகுவார் லேண்ட் ரோவர் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் 2030-ம் ஆண்டுக்குள் எலக்ட்ரிக் கார் விற்பனையில் பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்த ஜாகுவார் முடிவு செய்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜாகுவாரின் இந்த அறிவிப்பால், டெஸ்லா நிறுவனத்தின் ஐரோப்பிய, இந்திய சந்தைகளில் கடும் போட்டி எழும் என்பதில் சந்தேகம் இல்லை.
வணிகம்
உலகின் 1 சதவீத வாகனங்கள் உள்ள இந்தியாவில் 11 சதவீத விபத்துகள் ஏற்படுகின்றன: உலக வங்கி


இந்தியாவில் உலகின் 1 சதவீத வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளது என்று உலக வங்கி கூறியுள்ளது.
உலகின் 1 சதவீத வாகனங்கள் மட்டுமே இந்தியாவில் இருந்தாலும், உலகளவில் 11 சதவீத விபத்துகள் நடக்கும் நாடாக இந்தியா உள்ளது என்று அதிர்ச்சி தகவலை உலக வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் 75 சதவீதம் குறைவான வருவாய் உள்ள குடும்பங்களில் யாருக்காவது விபத்து ஏற்பட்டால், அவர்களது குடும்ப வருவாமனம் மேலும் குறைந்துவிடுகிறது என்றும் உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.
-
இந்தியா1 day ago
மின்னல் வேகத்தில் பரவும் உருமாறிய கொரோனா; 10 மாநிலங்களுக்கு வல்லுநர் குழுவை அனுப்பிய மத்திய அரசு!
-
சினிமா செய்திகள்2 days ago
13 ஆண்டுகளுக்குப் பின் சினிமாவுக்கு வரும் இயக்குநர்… வடிவேலுவுக்கு அழைப்பு..!
-
வேலைவாய்ப்பு2 days ago
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலைவாய்ப்பு!
-
சினிமா செய்திகள்2 days ago
தேசிய அளவிலான துப்பாக்கிச்சுடுதல் போட்டி… வெறித்தனமாக பயிற்சி செய்யும் ‘தல’ அஜித்!