Connect with us

வணிகம்

நீங்களும் சூப்பர் மார்க்கெட்டில் ‘பை’-க்கு கூடுதல் கட்டணம் செலுத்துகிறீர்களா?

Published

on

ஹரியானாவில் ஃபியூச்சர் ரீடெயில் குழுமத்திற்குச் சொந்தமான பிக் பஜார் சூப்பர் மார்க்கெட்டில் பொருட்களை வாங்கிய பால்தேவ் ராஜ், அந்த பொருட்களை கொண்டு செல்ல பை கேட்ட போது 18 ரூபாய் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பால்தேவ், எதற்காகக் கூடுதல் கட்டணம் வசூலித்தீர்கள் என்று கேட்ட போது, அதற்கு பிக் பஜார் ஊழியர்கள் அவரிடம் மிக மோசமாக நடத்தப்பட்டுள்ளார்.

அதை பொருத்துக் கொள்ளாத முடியாத பால்தேவ், நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார். வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது வாடிக்கையாளரின் அனுமதியுடன் தான் பைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது. நாங்கள் பையை வணிக ரீதீயாக விற்பனை செய்வதில்லை என்று கூறப்பட்டது.

ஆனால், கடை முழுவதும் எந்த இடத்திலும் பைக்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிடவில்லை. கடைசியாகப் பொருட்களுக்குப் பணத்தைச் செலுத்தும்போது பைக்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறுவது எந்த வகையில் நியாயம் என்று பால்தேவ் தரப்பிலிருந்து கூறப்பட்டது.

கடைசியாக பிக்பஜார் நிறுவனம் செய்தது தவறு. அதுவும், கூடுதல் கட்டணம் வசூலித்த பிறகு வாடிக்கையாளருக்குத் தகுந்த மரியாதை அளிக்காததும் தவறு. எனவே பால் தேவிடமிருந்து வசூலிக்கப்பட்ட பைக்கான கட்டணம் 18 ரூபாய், வாடிக்கையாளரிடம் மோசமாக நடந்துகொண்டதற்காகவும், அதனால் ஏற்பட்ட மன உலைச்சலுக்காக 1000 ரூபாய், இந்த வழக்குக்கு வாடிக்கையாளர் செய்த செலவு 500 ரூபாயைத் திருப்பி அளிக்க வேண்டும் என்றும், நுகர்வோர் சட்ட உதவி கணக்குக்கு 10 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எனவே, அடுத்த முறை இதுபோன்ற சூப்பர் மார்க்கெட்டுக்கு செல்லும் போது கவனமாக இருங்கள்.

Advertisement

இந்தியா

FastTag என்றால் என்ன? டிசம்பர் 1-ம் தேதிக்குள் இதை ஏன் நீங்கள் கண்டிப்பாக தெரிந்துக்கொள்ள வேண்டும்?

Published

on

ஜிஎஸ்டி வந்தது முதல் நாடு முழவதிலும் உள்ள முக்கிய நகரங்களில் உள்ள Toll-Wayகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பது தொடர் கதையாக உள்ளது.

இதனால் ஏற்படும் டிஃபாக்-ஐ குறைக்க மத்திய அரசு வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல் அனைத்து வாகனங்களிலும் FastTag கட்டாயம் இருக்க வேண்டும் உத்தரவிட்டுள்ளது.

வாகனங்களில் FastTag இருந்தால் Toll-Wayகளில் வரிசையிலில் நிற்காமல் ரேடியோ ஃபீரிக்வன்சி மூலம் என்ன வாகனம் வருகிறது என்று கண்டறிந்து, அந்த வாகனத்திற்கான கட்டணம் நேரடியாக வங்கி கணக்கிலிருந்து செலுத்தப்பட்டு நொடியில் Toll-Way-ஐ கடந்து செல்ல முடியும்.

வங்கி கணக்கு வேண்டாம் என்றால் அதற்கான பிரத்யேக கார்டில் ப்ரீபெய்டாக ரீசார்ஜ் செய்தும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

FastTag-ஐ வாங்குவது எப்படி?

FastTag-ஐ பேடிஎம் மற்றும் பிற ஏஜெண்ட்கள் மூலமாக வாங்க முடியும்.

உங்கள் வாகனத்திற்கு FastTag வாங்க தேவையான ஆவணங்கள் என்னென்ன?

1) வாகன பதிவு சான்றிதிழ்
2) வாகன உறிமையளரின் பாஸ்போர்ட் போட்டோ
3) வாகன உரிமையாளரின் முகவரி மற்றும் அடையாள ஆவணங்கள்

FastTag-ஐ வக்கி கணக்குடன் இணைப்பது எப்படி?

வங்கிகளில் FastTag-க்கு என சிறப்பு படிவங்கள் வழங்கப்படும். அந்த படிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்தால் FastTag வங்கி கணக்குடன் இணைக்கப்படும்.

FastTag ரீசார்ஜ் செய்வது எப்படி?

FastTag கணக்கு வழங்கியவர்களின் இணையதளம் மூலமாக டெபிட்/கிரெடிட்/ஆர்டிஜிஎஸ்/என்இஎஃப்டி, இணையதள வங்கி சேவை அல்லது பிம் யூபிஐ மூல்மாகவும் ரீசார்ஜ் செய்யலாம்.

FastTag வாங்க கட்டணம் எவ்வளவு?

முதல் முறைய FastTag வாங்கும் போது 200 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். மேலும் ரீஃபண்டபள் டெபாசிட் செலுத்த வெண்ட்டும். அது FastTag கணக்கை மூடும் போது திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.

Continue Reading

வணிகம்

ரூ.63,000 கோடிக்கு பாரத் பெட்ரோலியத்தை தனியாருக்கு விற்கும் மத்திய அரசு!

Published

on

மத்திய அமைச்சகம் இந்தியாவின் 2-ம் மிகப் பெரிய பெட்ரோலியம் நிறுவனமான பாரத் பெட்ரோலியத்தை தனியாருக்கு விற்க அனுமதியளித்துள்ளது.

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் மத்திய அரசுக்கு 53.3 சதவீத பங்குகள் உள்ளன. இந்த பங்குகளை 63,000 கோடிக்குத் தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அசாமில், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்திற்குச் சொந்தமாக உள்ள நுமலிகர் சுத்திகரிப்பு நிலையத்தில் மத்திய அரசுக்கு 61.7 சதவீத பங்குகள் உள்ளன.

இதை வேறு ஒரு தனியார் நிறுவனம் வாங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading

பர்சனல் ஃபினாஸ்

வாகனம் தொலைந்துவிட்டதா? உங்களிடம் இது இல்லையென்றால் இன்சூரன்ஸ் பணம் கிடைக்காது தெரியுமா?

Published

on

நம்மிடம் உள்ள பொருட்கள் திருடு போவது என்பது எப்போதாவது நடைபெறும் ஒன்று. அப்படி நாம் வைத்திருக்கும் கார் அல்லது இரண்டு சக்கர வாகனங்கள் தொலைந்து போனால், அதனுடைய அசல் சாவி இல்லாமல் இன்சூரன்ஸ் பணத்தைத் திரும்பப் பெற முடியாது என்று தெரியுமா உங்களுக்கு?

பொதுவாக இன்சூரன்ஸ் வாகன திருடு மற்றும் உரிமையாளர் கவனக் குறைவு என இரண்டுக்கும் நன்மை அளிக்கும். ஆனால் இது போன்ற சூழலில் இரண்டு அசல் சாவிகளையும் அளிக்கும் போது அது வாகன உரிமையாளர் எந்த ஒரு மோசடியிலும் ஈடுபடவில்லை என்பதை உறுதி செய்யக்கூடிய முக்கிய ஆதாரமாக இருக்கும்.

இப்படி சாவியை சமர்ப்பிக்கும் போது போலி சாவியையோ, பிற கார்களின் சாவியையோ சமர்ப்பித்தாலும் வாகன உரிமையாளருக்குச் சிக்கலை ஏற்படுத்தும்.

எனவே சரியான முறையில் வாகனங்களின் சாவியை கையாள்வது எப்படி? என இங்கு பார்ப்போம்.

1) பொதுவாக ஒரு சாவியை மட்டுமே பயன்படுத்துவது நம்முடைய பழக்கமாக இருக்கும். எனவே ஒரு சாவி தேய்ந்தோ? திருட்டோ அல்லது உடைந்து போனால் தான் நாம் இரண்டாம் சாவியை பயன்படுத்துவோம்.
2) சாவி உடைந்தோ, தேய்ந்து போனாலோ அதனையும் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் இன்சூரன்ஸ் கிடைப்பதில் சிக்கல் தான்.
3) ஒருவேலைச் சாவி தொலைந்து போனால் உடனே வாகனத்தின் பூட்டையே மாற்றுவது நல்லது என்று வல்லுநர்கள் ஆலோசனை வழங்குகின்றார்கள்.
4) இல்லை என்றால் சாவி தொலைந்துவிட்டது என்று காவல் நிலையத்தில் முதல் தரவு அறிக்கை பதிவு செய்ய வேண்டும். அதன்பின் டூப்ளிகேட் சாவிக்கு விண்ணப்பிக்கலாம். ஒருவேலை டூப்ளிகேட் சாவி வாங்கவில்லை என்றாலும் முதல் தரவு அறிக்கை போன்ற ஆவணங்கள் வாகனம் திருடு போகும் போது உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
சினிமா செய்திகள்49 mins ago

கமல் காலில் அறுவை சிகிச்சை; நோ அரசியல்; நோ சினிமா?

இந்தியா1 hour ago

FastTag என்றால் என்ன? டிசம்பர் 1-ம் தேதிக்குள் இதை ஏன் நீங்கள் கண்டிப்பாக தெரிந்துக்கொள்ள வேண்டும்?

வணிகம்2 hours ago

ரூ.63,000 கோடிக்கு பாரத் பெட்ரோலியத்தை தனியாருக்கு விற்கும் மத்திய அரசு!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்9 hours ago

உங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (22/11/2019)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam
தமிழ் பஞ்சாங்கம்9 hours ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (22/11/2019)

வேலை வாய்ப்பு17 hours ago

ஆவின் நிறுவனத்தில் வேலை!

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam
தமிழ் பஞ்சாங்கம்1 day ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (21/11/2019)

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்1 day ago

உங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (21/11/2019)

தொழில்நுட்பம்1 day ago

ஆண்ட்ராய்ட் போன் பாதுகாப்பில் ஓட்டை… உங்களுக்கு தெரியாமல் போட்டோ, வீடியோ எடுக்க கூடிய அபாயம்!

வேலை வாய்ப்பு2 days ago

தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் வேலை!

வேலை வாய்ப்பு1 week ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா4 months ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா3 months ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

இந்தியா4 months ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

தமிழ்நாடு3 months ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

வேலை வாய்ப்பு3 months ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலை வாய்ப்பு3 months ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு4 months ago

கனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி!

சினிமா செய்திகள்3 months ago

நடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு!

சினிமா செய்திகள்4 months ago

நீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் தர்ஷன் காதலி!

Uncategorized1 month ago

பெரிசு தனியா சிக்கிடுச்சு, செஞ்சிடலாமா? ‘பிகில் டிரெய்லர்’ வெறித்தனம்!!!

வீடியோ1 month ago

ஒரே நாளில் 26 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்ற கைதி டிரெய்லர்!

வீடியோ2 months ago

விஜய் சேதுபதி, சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள சைரா டிரெயலர்-2!

வீடியோ2 months ago

பிகில் ‘உனக்காக’ பாடல்!

வீடியோ3 months ago

பிகில் – வெறித்தனம் பாடல்!

Sangathamizhan Official Teaser | Vijay Sethupathi, Raashi Khanna | Vivek-Mervin | Vijay Chandar
வீடியோ3 months ago

சுதந்திர தின விழா சிறப்பாக வெளியாகியுள்ள விஜய்சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ டீசர்!

வீடியோ4 months ago

நேர்கொண்ட பார்வை படத்தின் ‘காலம்’ லிரிக்கல் வீடியோ ரிலீஸ்!

வீடியோ5 months ago

அண்ட் தி ஆஸ்கர் கோஸ் டூ டிரைலர் ரிலீஸ்!

வீடியோ5 months ago

தனுஷுடன் மோதும் விஜய்சேதுபதி!

வீடியோ5 months ago

கட்டுப்படுத்த முடியாத கோபத்தில் விக்ரமின் மகன் துருவ்… ‘ஆதித்யா வர்மா’ டீசர் ரிலீஸ்!

Trending