Connect with us

வார பலன்

உங்கள் ராசிக்கான இந்த வாரபலன் (செப்டம்பர் 8 முதல் 14 வரை)

weekly prediction, வாரபலன்

மேஷம்:

என்றும் உழைக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்ட மேஷ ராசி அன்பர்களே இந்த வாரம் அலைச்சல் அதிகமாக இருக்கும். பிள்ளைகள் வழியில் மருத்துவ செலவுகள் வரலாம். வருமானம் நல்லபடியாக இருப்பதால் செலவுகளை சமாளிக்கலாம். சிலருக்கு ஓய்வில்லாமல் உழைக்க நேரலாம்.  சிலருக்கு எதிர்பார்த்த உதவிகள் தள்ளிப்போகலாம்.

தொழில்துறையினர் அபிவிருத்திக்கான முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். நிலுவையிலுருந்த பணம் கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது.

உத்தியோகத்தில் வேலை பார்த்து வரும் இடங்களில் சக பணியாளர்களால் தொந்தரவு இருந்து கொண்டு தான் இருக்கும். வீண் விவாதங்கள் வேண்டாம்.

குடும்ப வருமானம் திருப்திகரமாக இருக்கும். செலவுகள் அனைத்தும் கட்டுக்கடங்கியிருக்கும். மூத்த சகோதரர்களுடன் ஏதாவது பிரச்சினை இருந்தால் இப்போது சரியாகி விடும். பழைய வாகனத்தை கொடுத்து விட்டு புதிய வாகனங்களை வாங்க வாய்ப்புள்ளது.

பெண்மணிகளுக்கு மனதில் உற்சாகம் கரைபுரண்டோடும். நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். சிலருக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும்.

மாணவர்கள் மேற்கல்வி படித்து முடித்து வேலைக்கு  தேடும் மாணவ மணிகளுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. அதுவும் எதிர்பார்த்த சம்பளத்துடன் கிடைக்கும்.

பரிகாரம்:அருகிலிருக்கும் அம்பாளை தரிசியுங்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள்,  வெள்ளி.

*********************************************************************************************************************************

ரிஷபம்

தனது வாழ்வில் எதையும் எதிர்கொள்ளும் ரிஷப ராசி அன்பர்களே இந்த வாரம்  முக்கிய முடிவுகளை தாராளமாக எடுக்கலாம்.  திருமண பேச்சு வார்த்தை வெற்றி தரும்.  முன்பு எடுத்த முடிவுகள் தவறில்லை என்று அனைவராலும் புகழப் படுவீர்கள். சிலருக்கு வெளிநாடு போகும் கனவு நிறைவேறும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள். மனதில் மகிழ்ச்சி நிலவும்.

தொழிலில் உற்சாகமாக அனைத்து விசயங்களும் நடந்தேறும். சிலர் உங்களுக்கு பகைமை காட்டினாலும் நீங்கள் அதைப் பொருட்படுத்த மாட்டீர்கள்.

உத்தியோகத்தை பொறுத்தவரை மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். உடன் பணிபுரிபவரை அனுசரித்து நடப்பது சிறந்தது. எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும்.

குடும்பத்தில் பிள்ளைகள் விசயத்தில் பிரச்சினைகளை சந்திக்க நேரலாம். அதனால் கணவன் – மனைவிக்கிடையே பிரச்சினைகள் எழக்கூடும். பேசித் தீர்த்துக் கொள்வது நல்லது. உங்கள் பேச்சை மற்றவர்கள் கேட்க வில்லையே என்ற ஆதங்கள் உங்கள் மனதில் ஏற்படும்.

பெண்கள் அலுவலகத்திற்கு சென்று வரும் போது கவனமாக இருக்கவும். குடும்ப சூழ்நிலையிலும் கவனமாக இருக்கவும். அசதி இருக்கும்.

மாணவர்களுக்கு படிப்பில் மனம் லயிக்காது. எளிமையான பாடங்களைக் கூட படிக்க மிகவும் சிரமப் பட வேண்டியிருக்கும்

பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல் சாற்றி வழிபடவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: சனி,  செவ்வாய்

*********************************************************************************************************************************

மிதுனம்

எதையும் தைரியமாக எதிர்கொள்ளும் மிதுன ராசி அன்பர்களே இந்த வாரம் நிம்மதி பெருமூச்சுவிடும்படியாக இருக்கும். பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். நீங்கள் வீடு, நிலம் போன்றவை விற்காமல் பெரும் கஷ்டப் பட்டவர்கள் எல்லோருக்கும் பாடு தீர்ந்தது. பங்காளிப் பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்து நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள்.

தொழிலில், வியாபாரிகள் அதிக வருமானத்தை எதிர்பார்க்கலாம். உங்கள் திறமையை காட்டி இவருக்கு நிகர் எவருமிலர் என்ற பேர் எடுப்பீர்கள்.

உத்யோகத்தில் இருந்து வந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு தள்ளிப் போவது போல் இருந்தாலும் இறுதியில் கிடைத்து விடும்.

குடும்பத்தில் அவ்வப்போது சில பிரச்சினைகள் வரக் கூடும். மூத்த சகோதரர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார். கணவண் – மனைவியரிடேயே பரஸ்பர அன்யோன்யம் நிலவும். பிள்ளைகள் வழியில் மிகப் பெரிய மகிழ்ச்சியை காண்பீர்கள். உடல் உபாதைகளால் அவஸ்தைகள் வரலாம்.

மாணவ மணிகளுக்கு எதிர்பார்த்த கல்வி உதவித் தொகை கிட்டும். பேச்சு, கட்டுரை போன்ற போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.

பரிகாரம்: திருப்பதி ஏழுமலையானை வணங்கவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி

*********************************************************************************************************************************

கடகம்

வயதில் மூத்தவர்களை கடைசி வரை பார்த்துக்கொள்ளும் கடக ராசி அன்பர்களே இந்த வாரம் பொருளாதார நிலை தாராளமாகவே இருந்து வரும். சிலருக்கு வீடு, நிலம் போன்றவை வாங்கும் யோகமும் உண்டு. உடலில் இருந்து வந்த பிரச்சினைகள் சரியாகும்.  கேட்ட இடங்களில் இருந்து பணம் கைக்கு வந்து சேரும். மனதில் எப்போதும் சந்தோஷம் குடி கொண்டிருக்கும்.

தொழிலில் புதிய முயற்சிகளில் இருந்து வந்த தொய்வு நிலை படிப்படியாகச் சரியாகிவிடும். பணியாளர்களிடம் கோபத்தை காட்ட வேண்டாம். அது உங்களுக்கு நல்லதல்ல.

உத்தியோகத்தில் வேலை பார்த்து வரும் அன்பர்களுக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும். சிலர் வேலைக்காக குடும்பத்தை விட்டு பிரிந்திருந்தால் இப்போது குடும்பத்துடன் இணைவீர்கள்.

குடும்பத்தை பொறுத்தவரை நல்ல முன்னேற்றமான வாரம். அனைவரும் சேர்ந்து சுற்றுலா செல்வீர்கள். குடும்பத்தில் அனைவருக்கும் தேவையானவற்றை செய்து மகிழ்ச்சி அடைவீர்கள்.தொழிலதிபர்கள் உற்பத்தி நல்லபடி இருக்கும். வருமானம் திருப்தியாக இருக்கும்.

பெண்கள் குடும்பத்தில் ஒற்றுமை நிலவ பாடுபடுவீர்கள். சிலரால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கலாம். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகலாம்.

மாணவமணிகள் அரசு சம்மந்தப்பட்ட பணிகளுக்காக நீங்கள் தேர்வுகள் எதுவும் எழுதியிருந்தால் அதில் வெற்றி கிடைக்கும். மனதிற்குரிய சம்பவங்கள் நடக்கக் கூடும்.

பரிகாரம்: அம்பாளை ராகு காலத்தில் வழிபடுங்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி

*********************************************************************************************************************************

சிம்மம்

தனது முடிவில் வைராக்கியமாக இருக்கும் சிம்ம ராசி அன்பர்களே இந்த வாரம் அனைவரிடமும் அனுசரித்து செல்வது நல்லதை உங்களுக்கு அமைத்து தரும். நிதி நிலைமையில் மாற்றம் ஏற்பட்டாலும் அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது. நெருங்கிய நண்பர் ஒருவருடன் பகை ஏற்படக்கூடும். திருமண வயதிலுள்ள மனதிற்கு ஏற்ற வரன் அமையும்.

தொழிலைப்  வரையில் சக பாகஸ்தர்களினால் வீண் பிரச்சினைகல் ஏற்படக்கூடும். இருப்பினும் எதிர்பார்த்த முன்னேற்றம் இருப்பதால் வெற்றிகரமாகவே அமையும்.

உத்தியோகத்தில் வேலைபார்த்து வரும் இடத்தில் தங்களுக்கு எதிராக செயல்பட்டு வந்தவர்களின் பலம் குறைந்து தங்கள் கை ஓங்கி நிற்கும். மற்றவர்கலின் ஆதரவும் கிட்டும்.

குடும்பத்தில் அனைவரிடமும்  அன்பாக பழகுவீர்கள். தாய் தந்தையரின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும்.  குடும்பத்தில் இருக்கும் மூத்தோர் கூட உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் புரிதல் உண்டு

பெண்மணிகளுக்கு மன உறுதி அதிகரிக்கும். கற்பனையான பயத்தை மனதில் கொண்டு செல்ல வேண்டாம். தைரியமாக இருங்கள்

மாணவர்கள் முழு மனதுடன் படிப்பில் ஆர்வம் காட்டுவது நல்லது. எதிர்பார்த்த கல்விக் கடன் கிடைக்கும்.  ஆசிரியரிடம் இருந்து நற்பெயர் எடுப்பீர்கள்.

பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்

*********************************************************************************************************************************

கன்னி

பெரியவர்களை மதிக்கும் குணம் கொண்ட கன்னி ராசி அன்பர்களே இந்த வாரம் முற்பகுதியில் இருந்த சூழ்நிலை பிற்பகுதியில் இருக்காது. ஆரோக்கியத்திலும் அவ்வப்போது குறைகள் ஏற்படலாம். தக்க நேரத்தில் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது. கடவுள் பக்தி அதிகரிக்கும். வருமானம் திருப்திகரமாக இருப்பதால் செலவுகளை நீங்களே சமாளித்து விடுவீர்கள். சொத்து சம்மந்தமான பிரச்சினை கவலையளிக்கும்.

தொழிலை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அதிருப்தியான வாரமே. பொறுமையாக இருப்பது மிக அவசியம்.

உத்தியோகஸ்த்தர்களுக்கு   அலுவலகத்தில் கடின உழைப்பு இருக்கக் கூடும். சக ஊழியர்களிடம் எல்லை மீறி பழகாமலிருப்பது நல்லது.

குடும்பத்தில் தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதனால் பிரச்சினைகள் எழ வாய்ப்புள்ளது. குழந்தைகளின் கல்வி விஷயமொன்று கவலையளிக்கும். சில விசயங்களை அனுசரித்து செல்வது நல்லது.

பெண்மணிகள் கோபத்தைக் குறைத்துக் கொள்வது பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க உதவும். வேலையில் நிம்மதி இருக்கும்.

மாணவர்கள் எழுதியிருக்கும் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். மேற்படிப்பிற்கான உதவித் தொகையும் கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள்.

பரிகாரம்: சூர்யபகவானுக்கு சிவப்புநிற வஸ்திரம் சாற்றுங்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: சனி, ஞாயிறு.

*********************************************************************************************************************************

துலாம்

மற்றவர்களுக்கு ஆதரவாக இருக்கும் துலா ராசி அன்பர்களே இந்த வாரம் முன்ஜாக்கிரதையுடன் நடந்து கொள்ள வேண்டிய வாரம். உடல் நிலை தொடர்ந்து பாதிப்பைத் தரலாம். மருத்துவ செலவு தொடர்ந்து தொல்லையைத் தரலாம். சிலர் நெருங்கிய நண்பர்களால் நீதி மன்றம் வரை செல்ல நேரலாம். முக்கிய பணிகள் இருப்பின் அதை சற்று தள்ளிப் போடுதல் உத்தமம். கவனம் தேவை.

தொழிலில் நன்மை அளிக்கக் கூடிய வாரமாகவே இருக்கும். புதிய விஸ்தரிப்புத் திட்டங்கள் இப்போதைக்கு வேண்டாம். கொடுக்கல் வாங்கலில் எந்த பிரச்சினைகளும் வராது.

உத்யோகத்தில் மேலதிகாரிகளின்  பாராட்டு கிடைக்கும். வெகுமதியும் கிடைக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் உங்களுக்கு கிடைக்கும்..

குடும்பத்தில் திருமண வயதிலுள்ள அன்பர்களுக்கு திருமண ஏற்பாடுகள் கை கூடும். கணவன் –  மனைவியரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதனால் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் எழக் கூடும். வார்த்தைகளில் கவனமாக இருக்கவும்.

பெண்கள் பயணங்களின் போது கவனம் தேவை.  குடும்பத்தில் மனநிம்மதி குறைந்தே காணப்படும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

மாணவர்களுக்கு தாய் தந்தையர் சொல்வதில் நாட்டம் இருக்காது.  தாங்கள் சிரமப்படும் போது நண்பர்களின் உதவி தக்க தருணத்தில் கிடைக்கும். ரகசியங்களை காப்பாற்றுங்கள்.

பரிகாரம்: ராகு காலத்தில் துர்கைஅம்மனுக்கு விளக்கேற்றி வாருங்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன்கிழமை, சனிக்கிழமை.

*********************************************************************************************************************************

விருச்சிகம்

தனது பதிவிகளை பாதுகாக்க போராடும் விருச்சிக ராசி அன்பர்களே இந்த வாரம்  தாங்களே எதிர்பாராத வகையில் செலவுகள் வரலாம்.  ஆனால் பொருளாதார நிலையில் எந்த வித மாற்றமும் இருக்காது. திருமண முயற்சிகளில் ஈடுபட்டால் கைகூடும். வரும் வரன்களை ஏற்றுக் கொண்டால் எதிர்காலம் திட்டமிட்டபடி நடந்தேறும்.

தொழிலதிபர்களுக்கு நன்மையளிக்கக்கூடிய வாரமாக இது இருக்கும். எதிர்பார்த்த வருமானத்தில் சற்று குறைவாக இருக்குமே தவிர பயம் வேண்டாம்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில்லாதவர்களுக்கு வேலை நல்லபடியாக கிடைத்து விடும். சிலருக்கு ஊதிய உயர்வு கிடைக்கும். அனுகூலமான வாரமாகவே அமையும்.

குடும்பத்தில் யாரேனும் பிரிந்து சென்றிருந்தால் அவர்கள் இப்பொழுது குடும்பத்தை நாடி வருவார்கள். திருடு போகவும் வாய்ப்புள்ளது கவனமாக இருந்து கொள்ளுங்கள். யாரையும் மனது நோகும் படி பேச வேண்டாம். தாயாரின் உடல் நலத்தில் அக்கறையுடன் நடந்து கொள்வது அவசியம்.

பெண்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும். அதனால் உடலில் அசதி அதிகமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.

மாணவ மணிகள் தீய நண்பர்களின் சகவாசத்தை அறவே தவிர்த்தல் நலம்.  மற்றபடி படிப்பில் பாதிப்பு எதுவும் வராது.

பரிகாரம்: முன்னோர் வழிபாடு செய்யுங்கள். காகத்திற்கு அன்னமிடுங்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், சனிக்கிழமை

*********************************************************************************************************************************

தனுசு

எதையும் கவனத்துடன் செய்ய நினைக்கும் தனுசு ராசி அன்பர்களே இந்த வாரம் செல்வாக்கு மிகுந்த வாரம்.  மனதிற்கு நிம்மதிக்கு குறைவிருக்காது. திருமண வயதிலுள்ளவர்களுக்கு நல்ல ஊதியத்துடன் கூடிய வரன்கள் கிடைத்து திருமண ஏற்பாடுகள் வெகுவிரைவில் நடந்தேறும். சுபச் செலவுகளினால் பணம் செலவாகும்.

தொழிலில் நீங்கல் கொடிகட்டிப் பறக்கப் போகிறீர்கள். தொழிலாளர்களும் உங்களுக்கு சாதகமாகவே இருப்பார்கள். உற்சாகமான வாரம்

உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் நற்பெயர் கிடைக்கும். அதன் காரணமாக பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவற்றை எதிர்பார்க்கலாம். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

குடும்பத்தில் அசையா சொத்துகளினால் நல்ல லாபம் கிடைக்கும். பணமில்லையே எப்படி என்றாலும் ஏதாவது ஒரு வகையில் உங்களுக்கு சொத்து கிடைத்தே தீரும். நீங்கள் விரும்பும் படியும் அது இருக்கும். மற்றவர்கள் உங்களை பெரிதாக நினைத்து உங்கல் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். கேட்ட இடத்தில் கடன்கள் கிடைக்கும்.

பெண்களுக்கு வேலைக்குச் செல்லும் வேலையில் திருப்திகரமான சூழ்நிலை நிலவும்.  பெண்கள் சிலர் சுற்றுலா சென்று வருவீர்கள்.

மாணவமணிகள் வெளிநாடு சென்று மேற்கல்வி பயில வேண்டுமென்று முயற்சி செய்து வருபவர்களுக்கு அதில் சிறுசிறு தடங்கல்கள் வரக் கூடும்.

பரிகாரம்: சுப்ரமணியருக்கு நெய்தீபம் ஏற்றுங்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்

*********************************************************************************************************************************

மகரம்

வேலைகளை உறிதுயுடன் செய்ய நினைக்கும் மகர ராசி அன்பர்களே இந்த வாரம் ஆரோக்கியத்தில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. அவ்வப்போது வயிறு சம்மந்தமான உபாதைகள் ஏற்பட்டு தொல்லை கொடுக்கும். நெருப்பு சம்மந்தமான பொருள்களை கையாளும் போது கவனமாக இருக்கவும்.

தொழிலில் விற்பனை அதிகரிக்கும். ஏற்றுமதி – இறக்குமதி தொழில் செய்பவருக்கு அனுகூலமான வாரமாகவே இருக்கும்.

உத்தியோகத்தில் சிலர் வெளிநாடு செல்ல வாய்ப்பு  உருவாகும். உடன்பணிபுரிபவர்களுக்கு ஒத்துழைப்பு நீங்கள் கொடுப்பீர்கள்.  சிலரது மறைமுக சூழ்ச்சி உங்களுக்கு பாதிப்பை உண்டாக்கலாம்.

குடும்பத்தில் முக்கிய முடிவுகளை துணிந்து எடுப்பீர்கள். அனைவராலும் பாராட்டப் படுவீர்கள். வெகு காலமாக வீட்டிற்கு வராத உறவினர்கள் உங்கள் இல்லத்திற்கு வருவார்கள். அது மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கும். தெய்வ பக்தி அதிகரிக்கும்.

பெண்மணிகளுக்கு ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வீட்டிற்குத் தேவையான உப கரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். சிலருக்கு பணியில் நிம்மதி இருக்காது.

மாணவர்கள் ஞாபக சக்தியும், கிரகிப்புத் திறனும் அதிகமாக இருக்கும். அதனால் படிப்பில் மனம் சிறந்து விளங்கும். போட்டிகளில் வெற்றி கிட்டும்.

பரிகாரம்: பெருமாளுக்கு துளசி மாலை சாற்றுங்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, ஞாயிறு

*********************************************************************************************************************************

கும்பம்

யாரிடமும் பாசமாக பழகும் கும்ப ராசி அன்பர்களே இந்த வாரம் எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைத்து சில கடன் பிரச்சினைகளை தீர்ப்பீர்கள்.

தொழில் அபிவிருத்திக்காக பணத்தை இப்போது செலவு செய்ய வேண்டாம். தகுந்த நேரம் வாய்க்கும் போது பார்த்துக் கொள்ளலாம்.  நிலுவையிலிருக்கும் பணம் வந்து சேரும்.

உத்தியோகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு இடமாற்றம் வருமேயானால் அதை மறுக்காமல் ஏற்றுக் கொள்ளுங்கள். அது உங்கள் வருங்காலத்திற்கு ஏற்றது.

குடும்பத்தில் மற்றவர்கள் உங்கள் பேச்சை கேட்கவில்லையே என்ற கவலை மேலோங்கும். புதிய வண்டி, வாகனம் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தை சற்று தள்ளிப் போடுங்கள். எதிர்காலத்தைப் பற்றிய கவலை இருந்து கொண்டிருக்கும்.

பெண்கள் எதிலும் சற்று கவனமாக நடந்து கொள்வது நல்லது. வேலைக்குச் செல்பவர்களுக்கு உடன் பணிபுரிபவர்களால் ஏற்பட்டு வந்த தொல்லை அகலும்.

எதிலும் பயம் வேண்டாம். தொழில்ரீதியான படிப்பை தேர்ந்தெடுத்து படிப்பவர்கள் மிகவும் பாடுபட்டு படிக்க நேரிடும்.

பரிகாரம்: வீட்டில் தினமும் சஷ்டி கவசத்தை ஒலிக்கச் செய்து கேட்டு வாருங்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், சனி.

*********************************************************************************************************************************

மீனம்

எதையும் தைரியமாக எதிர்கொள்ளும் மீன ராசி அன்பர்களே இந்த வாரம்உடனிருப்பவர்கள் உங்களை இழிவுபடுத்துவார்கள் அதைப் பொருட்படுத்தாமல் உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களிடம் பழகும் போது சற்று ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. யாருடனும் எதையும் கலந்து ஆலோசிக்க வேண்டாம்.

குடும்பத்தில் கணவன் –  மனைவியரிடையே சிறுசிறு பிரச்சினைகள் வரலாம். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து நடப்பது மனநிம்மதியைத் தரும். குடும்ப ஒற்றுமைக்கு பாடுபடுவீர்கள்.

பெண்கள் கோபத்தை கட்டுப்படுத்தவும். குடும்ப நிர்வாகத்தில் உள்ள பெண்களுக்கு உற்சாகமான வாரமாகவே அமையும். கவலை தேவையில்லை.

மாணவர்கள் படிப்பில் இருந்து வரும் முன்னேற்றம் அப்படியே இருக்கும். அதனால் எழுதிய தேர்வுகளில் நல்ல மதிப்பெண் கிடைக்கும். ஆசிரியர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

பரிகாரம்: சூரிய பகவானுக்கு விளக்கேற்றுங்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய்

*********************************************************************************************************************************

வார பலன்

உங்கள் ராசிக்கான இந்த வார பலன்கள் டிசம்பர் 08 முதல் 14 வரை )

weekly prediction, வாரபலன்

வாரபலன்

மேஷம்:

சந்தோஷமான மனநிலை ஏற்படப் போகின்ற மேஷ ராசி அன்பர்களே! நீங்கள் சூழ்நிலைக் கேற்றவாறு செயல்படுவதில் வல்லவர். இந்த வாரம் பணவரத்து திருப்திகரமாக இருக்கும். வாக்கு வன்மை ஏற்படும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பலவகை யோகம் உண்டாகும். புண்ணிய ஸ்தலங்களை தரிசிக்கும் எண்ணம் ஏற்படும். சிலர் யாத்திரை செல்வார்கள். அடுத்தவர்கள் உதவி கிடைக்கும்.

குடும்ப விஷயத்தில் அந்நிய நபர்களின் தலையீட்டை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து செல்வது மன அமைதியை தரும். வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. பிள்ளைகளிடம் அன்பாக பேசுவது நன்மை தரும்.

தொழிலில் உங்கள் வியாபாரத்தை விருத்தி செய்து கொள்வீர்கள். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்கு புதிய பதவி கூடுதல் பொறுப்புகள் கிடைக்கலாம். கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். அலுவலகத்தில் அடுத்தவர்களால் திடீர் பிரச்சனை தலை தூக்கலாம். உங்களது கருத்துக்கு மாற்று கருத்து உண்டாகலாம்.

பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. சேமிப்புகள் செய்யும் முன் தகுந்த ஆலோசனை பெறவும்.
மாணவர்களுக்கு கல்வியை பற்றிய கவலை உண்டாகும். தடையை தாண்டி முன்னேற முயற்சிப்பீர்கள்.

பரிகாரம்: நந்தீஸ்வரரை நெய் தீபம் ஏற்றி வணங்க கடன் சுமை குறையும். தொழில் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி
*****************************************************************************
ரிஷபம்:

காலத்தின் அருமையை புரிந்து செயல்படும் ரிஷப ராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு நன்மையே நடக்கும். பணவரத்து இருக்கும். எதிர்ப்புகள் விலகும். தடைபட்ட காரியங்களை மீண்டும் செய்து முடிக்க தேவையான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். மனதில் புதிய உற்சாகமும், தைரியமும் உண்டாகும்.

குடும்பத்தில் அமைதி குறையலாம். நிதானமாக பேசி பழகுவது நல்லது. கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நன்மை தரும். பிள்ளைகள் மீது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொருட்களை பாதுகாப்பாக வைப்பது அவசியம்.

தொழிலில் நேர்மையை கடைபிடிக்கும் மீன ராசிஅன்பர்களே! இந்த வாரம். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக நடந்து முடியும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். தந்தை மூலம் செலவு உண்டாகலாம். வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையான பேச்சால் வெற்றி பெறுவார்கள். வாகன யோகம் உண்டாகும். எந்த ஒரு காரியத்திலும் சரியான முடிவுக்கு வர முடியாமல் தடுமாற்றம் உண்டாகும். மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாத நிலை உண்டாகி அவர்களுடன் பகை ஏற்படலாம். சாமர்த்தியமாக எதையும் சமாளிக்கும் துணிச்சல் வரும். பணவரத்து திருப்தி தரும். எதிர்ப்புகள் குறையும்.

பெண்களுக்கு எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவல்களாக வந்து சேரும். டென்ஷன் குறையும்.

மாணவர்களுக்கு எதிர்கால நலன் கருதி எந்த காரியத்தையும் செய்வது நன்மை தரும்.
பரிகாரம்: நவக்கிரகத்தில் சுக்கிர பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வணங்க உடல் ஆரோக்கியம் பெறும். வேலை பளு குறையும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி
********************************************************************************
மிதுனம்:

திறமையாக செயல்பட்டு உன்னத நிலைக்கு உயரத்துடிக்கும் மிதுன ராசி அன்பர்களே! இந்த வாரம் மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். வீண் கவலை நீங்கும். தடைபட்ட காரியங்களில் தடை நீங்கி சாதகமாக நடந்து முடியும். வழக்கு விவகாரங்களில் சாதகமான நிலை காணப்படும்.

குடும்பத்தில் இருந்த டென்ஷன் குறைந்து சந்தோஷமான நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சியான உறவு நிலவும். பிள்ளைகளின் நடத்தை மனதுக்கு நிம்மதியை தரும்

தொழில் வியாபாரம் சிக்கல்கள் நீங்கி நன்கு நடைபெறும். கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் எவ்வளவு உழைத்தாலும் எதிர்பார்த்த பலன் கிடைப்பதில் தாமதம் உண்டாகும்.

பெண்களுக்கு எந்த நிலையிலும் மனம் தளராது காரியங்கள் செய்வது வெற்றியை தரும். வாக்குறுதிகளை தவிர்க்கவும்.

மாணவர்களுக்கு கல்வி பற்றிய மனசஞ்சாரம் நீங்கி நிம்மதி உண்டாகும். பெரியோர் பாராட்டு கிடைக்கும்.

பரிகாரம்: ஸ்ரீரங்கநாதரை தரிசித்து வணங்க முன்ஜென்ம பாவம் தீரும். குடும்ப கஷ்டம் தீரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்
********************************************************************************
கடகம்:

கொடுத்த வாக்கை நிறைவேற்ற கடைசி வரை போராடும் கடக ராசி அன்பர்களே! இந்த வாரம் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடக்கலாம். உடல் ஆரோக்கியம் ஏற்படும். எதிர் பாலினத்தாரால் லாபம் கிடைக்கக் கூடும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய நேரிடும். பணவரத்து கூடும். வீண் அலைச்சல் திடீர் கோபம் உண்டாகலாம். காரிய வெற்றி உண்டாகும். மதிப்பும், அந்தஸ்தும் உயரும்.

குடும்பத்தில் இருந்த பிரச்சனை தீரும். ஆனால் வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பம் சம்பந்தப்பட்ட காரியங்கள் சரிவர நடக்காமல் தடைதாமதம் ஏற்படலாம். பிள்ளைகள் நலனுக்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னர்களை அனுசரித்து செல்வது வியாபார வளர்ச்சிக்கு உதவும். தொழில் தொடர்பான அலைச்சல் உண்டாகலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஏற்கனவே செய்த வேலைகளுக்கு இப்போது பாராட்டும் பண உதவியும் கிடைக்க பெறலாம்.

பெண்களுக்கு எந்த முயற்சியிலும் சாதகமான பலன் கிடைப்பதில் தாமதமாகும். மனகவலை ஏற்படலாம்.
மாணவர்களுக்கு கல்விக்காக செலவு உண்டாகும். கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும்.

பரிகாரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளை தரிசித்து வணங்க முன்ஜென்ம பாவம் தீரும். குடும்ப கஷ்டம் தீரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்
************************************************************************************
சிம்மம்:

தந்தையின் மீது அதிக பற்று கொண்ட சிம்ம ராசி அன்பர்களே, இந்த வாரம் மனதில் சிறு சஞ்சலம் ஏற்பட்டு மறையும். தன்னம்பிக்கையை அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும். நல்லது எது கெட்டது எது என்று பிரித்து பார்த்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில திருப்பங்களால் காரிய வெற்றி கிடைக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்களால் ஏதாவது மனம் நோகும் படியான நிலை உருவாகலாம். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளின் கல்வியில் கவனம் தேவை. கெட்டகனவுகள் தோன்றும். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் உங்களை விட்டு விலகி செல்லலாம். மனதில் நிலையான எண்ணம் இருக்காது. பணநெருக்கடி குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் போட்டியை சந்திக்க வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களிடம் கடுமையான பேச்சை தவிர்ப்பது நல்லது. லாபம் எதிர்பார்த்ததை விட குறையலாம். பழைய பாக்கிகள் வசூலாகும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. எந்த இக்கட்டான சூழ்நிலையையும் மன உறுதியுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள். எதிர்ப்புகள் நீங்கும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனை குறையும். எந்த ஒரு காரியமும் சாதகமாக முடியும். விருப்பமானவர்களுடன் சந்திப்பு ஏற்படும்.

பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். பயணங்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். எச்சரிக்கையாக பேசுவது நல்லது.

மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். ஆர்வமுடன் பாடங்களை படிப்பீர்கள்.

பரிகாரம்: கனகராதா ஸ்தோத்திரம் படித்து லட்சுமியை வணங்க எல்லா நலன்களும் உண்டாகும். காரிய அனுகூலம் கிடைக்கும்

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்
************************************************************************************
கன்னி:

சாமர்த்திய பேச்சுகளால் அனைவரையும் கவரும் கன்னி ராசி அன்பர்களே! இந்த வாரம் வீண்செலவு குறையும். மனதில் இருந்த கவலைகள் நீங்கி நிம்மதி உண்டாகும். வர வேண்டிய பணம் வந்துசேரும். சாமர்த்தியமான பேச்சினால் காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். அலைச்சல் ஏற்படலாம். அடிக்கடி கனவுகள் வரக்கூடும்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். கணவன் மனைவிக்கிடையில் மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நல்ல பலன் தரும். பிள்ளைகளை தட்டி கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உறவினர் நண்பர்களிடம் டென்ஷன் இல்லாமல் போவது நல்லது.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் மிகவும் சாமர்த்தியமாக செயல்படுவது நன்மை தரும். தொழில் போட்டிகள் உண்டாகலாம். அனுசரித்து செல்வது முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் குறிக்கோளற்ற வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும்.
பெண்களுக்கு திறமையான பேச்சின் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். காரிய தடைகள் நீங்கும். மனதில் இருந்த சோர்வு நீங்கி உற்சாகம் உண்டாகும். எதிர்பார்த்த தகவல் சாதகமாக வரும்.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்ற மடைய முழு முயற்சியுடன் படிப்பீர்கள். சக மாணவர்கள் மத்தியில் மதிப்பு உயரும்.

பரிகாரம்: சிதம்பரம் நடராஜ பெருமானை பூஜித்து வணங்கி வர எல்லா பிரச்சனைகளும் நல்ல முடிவுக்கு வரும். மன அமைதி கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்
***********************************************************************************
துலாம்:

தனது நேர்மையான செயலால் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் துலா ராசி அன்பர்களே! இந்த வாரம் எதிலும் லாபம் கிடைக்கும். காரியங்கள் வெற்றிகரமாக நடக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். வீண்கவலை நீங்கும். ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். துணிச்சலாக எதிலும் ஈடுபடுவீர்கள்

குடும்பத்தில் ஒற்றுமைகாணப்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி கிடைக்கும். உறவினர்கள், நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கலாம். ஆர்டர்கள் மற்றும் பொருட்கள் சப்ளை செய்வதில் கவனம் தேவை. பணவரத்து தாமதப்படலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணி சுமையை ஏற்க வேண்டி இருக்கும். முக்கிய பொறுப்பு கிடைக்கலாம். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

பெண்களுக்கு புத்திசாதூரியம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரலாம். பிரச்சனைகள் குறையும். குடும்பத்தில் இருப்பவர்களின் செய்கைகள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கும். பிள்ளைகளுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.

மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் பற்றி இருந்த டென்ஷன் நீங்கும். புதிய நட்புகள் மூலம் உதவி கிடைக்கும்.

பரிகாரம்: பிரத்தியங்கரா தேவியை வணங்கி வர எதிர்ப்புகள் அகலும். துன்பங்கள் நீங்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி
************************************************************************************
விருச்சிகம்:

கண் முன்னே இருக்கும் அநியாயங்களை தாங்கிக் கொள்ள முடியாத விருச்சிக ராசி அன்பர்களே! இந்த வாரம் பணதேவை உண்டாகும். இடமாற்றம் ஏற்படலாம். ஆடை அணிகலன் வாங்குவதன் மூலம் செலவு உண்டாகும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். வாகன யோகம் கிடைக்கும். எழுத்துவகையில் எதிலும் சிக்காமல் கவனமாக இருப்பது நல்லது.

குடும்பத்தில் கலகலப்பு குறையும். எதிலும் வெறுப்பும் திடீர் கோபமும் வரலாம். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் சொல்வதை கேட்டு நிதானமாக பேசுவது நல்லது. பேச்சின் இனிமை சாதுர்யம் இவற்றால் எடுத்த காரியங்கள் சாதகமாக முடிய உதவும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.

தொழில் வியாபாரத்தில் திடீர் தடைகள் ஏற்பட்டு நீங்கும். வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பங்குதாரர்களுடன் இருந்து வந்த நீண்ட நாள் பிரச்சனைகள் ஒரு சுமூக முடிவிற்கு வரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பான பலன் கிடைக்க பெறுவார்கள். புதிய பொறுப்புகள் சேரும். வேலை தேடியவர்களுக்கு வேலை கிடைக்கும். தேவையற்ற வீண் வாக்குவாதம் ஏற்படும். மற்றவர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும். நண்பர்களிடம் பகை ஏற்படலாம். பிடிவாதத்தை விட்டு விடுவது காரிய வெற்றிக்கு உதவும். வீண் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக நேரிடலாம்.

பெண்களுக்கு மன குழப்பம் நீங்கி தெளிவான சிந்தனை மேலோங்கும். பயணங்கள் வெற்றியை தரும்.
மாணவர்களுக்கு: எதிர்கால கல்வி பற்றி எடுத்த முடிவுகள் மனதிருப்தியை அளிக்கும். அலைச்சல் அதிகரிக்கும்.

பரிகாரம்: பெருமாளை தரிசித்து அர்ச்சனை செய்ய எல்லா நலனும் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி
*************************************************************************************
தனுசு:

தன் மீதுள்ள நியாயத்திற்காக போராடும் தனுசு ராசி அன்பர்களே! இந்த வாரம் சுபகாரியங்களில் கலந்து கொள்ள நேரலாம். பணம் வரவு நன்றாக இருக்கும். இழுபறியாக இருந்தவை சாதகமாக முடியக்கூடும். தேவையற்ற கவலைகள் நீங்கும். உங்களை பற்றி விமர்சனம் செய்து வந்தவர்கள் அதனை விட்டு விடுவார்கள்.

குடும்பத்தில் காணாமல் போன சந்தோஷம் மீண்டும் வரும். கணவன் மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். வராது என்று நினைத்த பொருள் வந்து சேரலாம். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த கருத்து மோதல்கள் மறையும்.

தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை காணப்படும். வியாபார நிமித்தமாக பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். போட்டிகள் குறையும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் தடுமாற்றம் உண்டாகும். எந்த வேலையை முதலில் கவனிப்பது என்று குழப்பம் வரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்திசாதுரியத்தால் அலுவலக வேலைகளை திறமையாக செய்து முடித்து மதிப்பும் மரியாதையும் கிடைக்க பெறுவீர்கள்.

பெண்களுக்கு மனத்திருப்தியுடன் காரியங்களை செய்து முடிப்பீர்கள். பணவரத்து கூடும்.

மாணவர்கள் புத்தி சாதூரியத்தால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். மற்றவர்களின் பாராட்டும் கிடைக்கும்.
பரிகாரம்: விநாயக பெருமானை வணங்கி வர எல்லா காரியங்களும் தடை நீங்கி சாதகமான பலன் தரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்
*************************************************************************************
மகரம்:

மனதிருப்தியுடன் அனைத்து காரியங்களையும் செய்து முடிக்கும் மகர ராசி அன்பர்களே! இந்த வாரம் விருப்பங்கள் கைகூடும். பயன்தரும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனதில் தைரியம் உண்டாகும். பண வரத்து குறையும். வாழ்க்கை துணையின் உடல்நலத்தில் கவனம் தேவை.

குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும் உறவு பலப்படும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கப்பெறுவீர்கள். அவர்களது கல்வியில் முன்னேற்றம் காணப்படும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும்.

தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடந்தாலும் எதிர்பார்த்த லாபம் குறைய லாம். வியாபாரம் தொடர்பான பணம் பரிவர்த்தனையில் கவனம் தேவை.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். மேலிடத்திலிருந்து உங்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கலாம். பணி நிமித்தமாக வெளியூர் சென்று தங்க வேண்டி வரலாம்.

பெண்களுக்கு வாக்கு வன்மையால் காரியங்கள் வெற்றி பெறும். ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும்.
மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும்.

பரிகாரம்: விரதம் இருந்து முருகனை வணங்கி வர காரிய தடைகள் நீங்கும்

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், சனி
*************************************************************************************
கும்பம்:

நேர்மைக்கென பெயர் கொண்டுள்ள கும்ப ராசி அன்பர்களே! இந்த வாரம் மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்கும். பயணங்கள் ஏற்படும். பூர்வ புண்ணி சொத்துக்களும் அதனால் வரக்கூடிய தனலாபங்களும் உங்கள் தகுதியை உயர்த்தும்.

குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். வீடு, வாகனங்கள் புதுப்பிக்க அல்லது புதிதாக வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். அதில் சாதகமான பலன் கிடைக்கும்.

தொழில் வியாபாரம் முன்னேற்றம் காணப்படும். லாபம் எதிர்பார்த்தபடி இருக்கும். புதிய வாடிக்கையாளர்கள் ஏற்படுவதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் சக

ஊழியர்களிடம் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது.
பெண்கள் பயன்தராத முயற்சிகளை கைவிட்டு எந்த ஒரு வேலையையும் ஆராய்ந்து செயல்படுவது வெற்றியை தரும்.

மாணவர்கள் கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். பெற்றோர் சொல்படி கேட்டு நடப்பீர்கள்.

பரிகாரம்: வைத்தீஸ்வரன் கோயில் வைத்திய நாதஸ்வாமி, முத்துக்குமரனை வணங்கி வர உடல் ஆரோக்கியம் உண்டாகும். எதிர்ப்புகள் விலகும்

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், சனி
*************************************************************************************
மீனம்:

தங்களுக்கு மேல் உள்ளவர்கள் மேல் அதிக மதிப்பு மரியாதை கொண்டுள்ள மீன ராசி அன்பர்களே! இந்த வாரம் சமூகத்தில் உயர்ந்தவர்கள் மத்தியில் புதியதொரு மரியாதையும் வரவேற்பும் உங்களுக்கு கிடைக்கப்பெறும. தாயின் உடல்நலத்தில் சிறு சிறு தொந்தரவுகள் உண்டாகி நல்ல பராமரிப்பின் காரணமாய் உடல் நலம் பெறும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் சந்தோஷம் உண்டாகும்.

தொழில் வியாபாரம் மூலம் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தொழில் வியாபார வளர்ச்சிக்கு தேவையான ஆதரவு கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு குறைந்து உற்சாகமாக காணப்படுவார்கள். எடுத்த காரியம் வெற்றி பெறுவதால் மேல் அதிகாரிகளி டம் பாராட்டு கிடைக்கும்.
பெண்கள் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. காரியங்களை செய்து முடிப்பதில் கடினமான நிலை காணப்படும்.

மாணவர்கள் யாருக்கும் உத்திரவாதம் அளிக்காமல் இருப்பது நல்லது. கல்வியில் கூடுதல் கவனம் தேவை.

பரிகாரம்: ஸ்ரீரங்கம் ரங்கநாதரை வணங்கி வர காரிய வெற்றி உண்டாகும். செல்வ சேர்க்கை ஏற்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்
*************************************************************************************

Continue Reading

வார பலன்

உங்கள் ராசிக்கான இந்த வார பலன்கள் டிசம்பர் 01 முதல் 07 வரை )

weekly prediction, வாரபலன்

வாரபலன்

மேஷம்:

திட்டமிட்டபடி வாழ்க்கையை வாழ ஆசைப்படும் மேஷ ராசியினரே இந்த வாரம் பணவரத்து அதிகமாகி பொருளாதாரம் ஓங்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும். கட்டுப்பாடற்ற சுதந்திர எண்ணம் உண்டாகும். சில்லறை விஷயங்களில் மனநிறைவு ஏற்படும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். சுப காரியங்கள் நடக்கலாம். சகோதரர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். கணவன் மனைவிக் கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சந்தோஷமாக காணப்படுவார்கள். குழந்தைகள் மூலம் பெருமை கிடைக்கும்.

தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இருந்த தடைகள் விலகும். போட்டிகள் குறையும், புதிய ஆர்டர்கள் பெறுவதற்கான தடைகள் நீங்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு குறைந்து மன மகிழ்ச்சியடைவார்கள். மேல் அதிகாரிகளின் உதவியும், ஆலோசனையும் கிடைக்கும். புதிய வேலைக்கான முயற்சிகளில் சாதகமான போக்கு காணப்படும்.

பெண்களுக்கு: நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு வேலை வார இறுதியில் நடந்து முடியும். உடல் ஆரோக்யத்தில் கவனம் தேவை.

மாணவர்களுக்கு: தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற எடுக்கும் முயற்சிகள் கைகூடும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்: முருகனுக்கு முல்லை மலர் அர்ப்பணித்து வணங்க பிள்ளைகள் வழியிலான பிரச்சனைகள் தீரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய்
*************************************************************************************
ரிஷபம்:

திறமையாக செயலாற்றத் தெரிந்தும் அதனால் எந்த பயனுமடையாத ரிஷப ராசியினரே இந்த வாரம் எதிலும் அவசரப்படாமல் நிதானமாக முடிவு எடுப்பது நன்மை தரும். உடல் ஆரோக்கியம் ஏற்படும். மனதில் இருந்த குழப்பம், கவலை நீங்கும். தைரியம் உண்டாகும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியும், உற்சாகமும் காணப்படும். கணவன், மனைவிக் கிடையில் இருந்த பிரச்சனைகள் தீரும். பிள்ளைகள் பற்றிய கவலைகள் நீங்கும். உறவினர் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

தொழில் வியாபாரம் தொடர்பாக இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். ஆக்கப்பூர்வமான யோசனைகள் தோன்றும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றமான பலன் காண்பார்கள். புதிய வேலை பற்றிய சிந்தனை அதிகரிக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கலாம்.

பெண்களுக்கு பணவரத்து அதிகமாகி பொருளாதாரம் ஓங்கும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சின்ன விஷ யங்களில் கூட கவனமாக செய்வீர்கள்.
மாணவர்களுக்கு: தேர்வு முடிவுகள் பற்றி இருந்த டென்ஷன் நீங்கும். புதிய நட்புகள் மூலம் உதவி கிடைக்கும்

பரிகாரம்: மகாலட்சுமிக்கு ரோஜா இதழால் அர்ச்சனை செய்து பூஜித்து வாருங்கள். நன்மைகள் நடக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி
*************************************************************************************
மிதுனம்:

மிடுக்கான நடைபோட்டு அனைவரையும் மிரள வைக்கும் மிதுன ராசியினரே இந்தவாரம் பொருள் வரவும் சேமிக்க வேண்டும் என்ற எண்ணமும் கிடைக்கும். நண்பர்கள் மூலம் தக்க தருணத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வெளியூர் பயணங் களால் வீண் அலைச்சலும் செலவும் ஏற்படலாம்.

குடும்பத்தில் மன நிறைவு ஏற்படும் வகையில் எல்லாம் நடக்கும். வாழ்க்கை துணையால் நன்மை உண்டாகும். குழந்øதைகளுக்காக பாடுபடுவீர்கள். விருந்தினர் வருகை இருக்கும். உறவினர், நண்பர்களுடன் திடீர் கருத்து வேற்றுமை உண்டாகலாம். நிதானம் தேவை.

தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். பணவரத்து எதிர்பார்த்த அளவு இல்லாவிட்டாலும் தேவை பூர்த்தியாகும். புதிய ஆர்டர்கள் பற்றி உடனடியாக முடிவு எடுக்க முடியாமல் தடுமாற்றமான நிலை உண்டாகலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் பக்குவமாக செயல்படுவது நல்லது. சக பணியாளர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.

பெண்களுக்கு: பணவரத்து அதிகரிக்கும். எந்த ஒரு காரியமும் லாபகரமாய் நடந்து முடியும். செயல் திறன் கூடும்.

மாணவர்களுக்கு: தேர்வுகள் பற்றிய பயம் நீங்கும். கல்வியில் முன்னேற்றம் காணப் படும்.

பரிகாரம்: அருகிலுள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று துளசி மாலை சாற்றி வழிபடுங்கள். நினைத்தது நிறைவேறும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன்
*************************************************************************************
கடகம்:

பொறுப்புகளை அதிகம் உணர்ந்து செயல்படும் கடகராசியினரே உங்களுக்கு அவ்வப்போது செய்வது சரிதானா என்ற தயக்கம் ஏற்படும். இந்த வாரம் எந்த ஒரு காரியத்தையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து அதிகரிக்கும். அடுத்தவர்களிடம் பொறுப்புக்களை ஒப்படைக்காமல் நேரடியாக செய்வது நன்மை தரும்.

குடும்பத்தில் மனம் மகிழும்படியான நிகழ்ச்சி நடக்கும். வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் அதிகரிக்கும். சிலர் அதற்கான முயற்சியில் ஈடுபடுவார்கள். கணவன், மனைவிக்கிடையே ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்யம் உண்டாகும்.

தொழில் வியாபாரம் எதிர்பார்த்த வளர்ச்சி பெறும் பழைய பாக்கிகள் வசூலாகும். நீண்ட நாட்களாக நடந்து முடியாத காரிய ஒன்று நடக்கும்.

உத்தியோகத்தில் இருப்ப வர்களுக்கு புதிய பதவி தேடிவரும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும்.

பெண்களுக்கு பணவரத்து திருப்தி கரமாக இருக்கும். பயணங்களின் போது பொருட்களின் மீது கவனம் தேவை. எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படலாம்.

மாணவர்களுக்கு தொழிற்கல்வி கற்பதில் ஆர்வம் உண்டாகும். திட்டமிட்டு படிப்பது எதிர்காலத்திற்கு உதவும். திறமையுடன் காரியங்களை செய்வீர்கள்.

பரிகாரம்: அம்மனுக்கு எலுமிச்சையில் மாலை அணிவிக்க தடைகள் விலகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள்
*************************************************************************************
சிம்மம்:

பிறவியிலேயே அதிக கோபம் வரக் கூடிய சிம்ம ராசியினரே, இந்த வாரம் பணம் சம்பாதிக்கும் திறமை அதிகமாகும். தடை பட்டு வந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

குடும்பத்தில் மனைவி குழந்தைகளுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். உறவினர் கள் நண்பர்கள் உதவ முன்வந்தாலும் உதவி தாமதமாக கிடைக்கும். சகோதரர் களால் மனவருத்தம் உண்டாகும்படி யான சம்பவம் நேரலாம் கவனம் தேவை.

தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். பொருட்களை வெளியூருக்கு அனுப்பும்போது அனைத்து விதமான அத்தாட்சிகளை கவனமாக வைத்திருக்க வேண்டும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் துணிச்சலாக வேலைகளை செய்து வெற்றி பெறுவார்கள். சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளால் நன்மையும் உண்டாகும்.

பெண்களுக்கு: பணவரத்து திருப்தி தரும். வெளியூர் பயணம் செல்ல நேரலாம். தோழிகளுடன் சுமுகமாக பேசி பழகுவது நல்லது.

மாணவர்களுக்கு: நட்பு வட்டத்தில் இருப்பவர்களுடன் கவனமாக பேசி பழகுவது நல்லது. பாடங்கள் படிப்பதில் ஆர்வம் உண்டாகும்.

பரிகாரம்: சிவபுராணம் படித்து சிவனுக்கு மாலை வாங்கி சாற்றுங்கள் துன்பங்கள் பறந்தோடும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள்
*************************************************************************************
கன்னி:

தெளிவான சிந்தனையுடன் உயரத்துடிக்கும் கன்னிராசியினரே இந்த வாரம் எந்த ஒரு விஷயத்தையும் கவனமுடன் கையாள்வது நல்லது. எல்லா காரியங்களிலும் அனுகூலம் கிடைக்கும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை ஏற்படும். எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலாக செய்து வெற்றி பெறுவீர்கள்.

குடும்பத்தில் வாக்குவாதத்தையும், கோபத்தையும் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கை துணையுடன் அனுசரித்து செய்வது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. விருந்தினர்கள் வந்து செல்வார்கள்.

தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதையும் செய்து முடிப்பதில் துணிச்சல் உண்டாகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். எதிர்பாராத இடமாற்றம் ஏற்படலாம்.

பெண்களுக்கு பயணங்கள் செல்ல நேரிடலாம். எடுத்த வேலையை செய்து முடிக்க காலதாமதமாகலாம். வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

மாணவர்களுக்கு நிதானத்தை கடை பிடிப்பது வெற்றிக்கு உதவும். பாடங்களை கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்லது.

பரிகாரம்: பெருமாள் கோவிலில் நெய் விளக்கேற்றி வழிபட துன்பங்கள் பறந்தோடும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன்
*************************************************************************************
துலாம்:

பிரச்சினைகளை சமநிலையில் வைத்து பார்த்து பதிலளிக்கும் துலா ராசியினரே! நீங்கள் தீர்க்கமான எண்ணமுடையவர்கள் இந்த வாரம் பணவரவு திருப்தி தரும். ஆனால் வீண் செலவுகளை தவிர்ப்பது நன்மை தரும். எந்த ஒரு வேலையையும் செய்யும் முன் அதில் உள்ள நல்லது கெட்டதை ஆராய்ந்து செய்வது நல்லது. பயன் தராத முயற்சிகளை தவிர்ப்பது நன்மை தரும்.

குடும்பத்தில் வார இறுதியில் மகிழ்ச்சி கூடும். குழந்தைகளால் மனசஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். வார இறுதியில் வாழ்க்கை துணையின் மூலம் அனுகூலம் உண்டாகும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. நினைத்ததை சாதிக்கும் மனவலிமை உண்டாகும்.

தொழில் வியாபாரம் முன்னேற்றம் காண புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்க கூடிய சூழ்நிலை காணப்படும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயந்து வேலை செய்ய வேண்டி இருக்கும். உழைப்பு அதிகரிக்கும். உங்கள் உழைப்பிற்கான அங்கீகாரம் இல்லாமல் போகலாம்.

பெண்களுக்கு: பயன்தராத முயற்சி களை கைவிட்டு எந்த ஒரு வேலையையும் ஆராய்ந்து செயல்படுவது வெற்றியை தரும்.

மாணவர்களுக்கு படிக்காமல் விட்ட பாடங்களை படிப்பதில் கவனம் செலுத்து வீர்கள். சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபடுவீர்கள்.

பரிகாரம்: பெருமாள் கோவிலில் இருக்கும் நந்தவனத்தில் துளசி செடியை நடுங்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி
*************************************************************************************
விருச்சிகம்:

தனக்குண்டான குணத்தை மாற்ற விரும்பாத விருச்சிக ராசியினரே நீங்கள் தன்னம்பிக்கை மிக்கவர். இந்த வாரம் நன்மைகள் கிடைக்கும். காரியதடை தாமதம் நீங்கும். வழக்கு விவகாரங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். எதிர்ப்புகள் விலகும். பொருளாதாரம் உயரும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். தாமதமான காரியங்கள் வேகம் பிடிக்கும். வீண்கவலை விலகும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும்.

குடும்பத்தில் வார மத்தியில் வீண் குழப்பம் ஏற்பட்டு வார இறுதியில் நீங்கும். புத்திசாதூர்யத்தால் எல்லாவற்றையும் சமாளித்து வெற்றி காண்பீர்கள். வாழ்க்கை துணையுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடக்கவில்லையே என்ற எண்ணம் ஏற்பட்டு நீங்கும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும்.

தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற சூழ்நிலைகள் ஏதுவாக இருக்கும். செலவை குறைப்பதன் மூலம் பணத் தட்டுப்பாடு குறையலாம். பேச்சில் கடுமையை காட்டாமல் இருப்பது நன்மை தரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையி லும் முழு கவனத்துடன் ஈடுபடுவது நல்லது.

பெண்களுக்கு: புதிதாக செய்யும் காரியங்களில் கவனம் தேவை. இனிமையான வார்த்தைகளால் பேசுவதன் மூலம் மற்றவர் மத்தியில் மதிப்பு கூடும்.

மாணவர்களுக்கு: படிப்பில் கவனம் செலுத்துவீர்கள். மேற்படிப்பு படிக்கும் ஆர்வம் உண்டாகும். கல்விக்கு தேவையான உதவிகள் கிடைக்கும்.

பரிகாரம்: திருவானைக்கோவில் சிவனை வணங்கி வர வெற்றிகள் குவியும்

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய்
*************************************************************************************
தனுசு:

நேர்மைக்கு முக்கியத்துவம் அளிக்கும் தனுசு ராசியினரே இந்த வாரம் எல்லா விதத்திலும் நன்மை உண்டாகும். எதையும் செய்து முடிக்கும் துணிச்சல் அதிகரிக்கும். கிரக சேர்க்கைகள் எதிலும் வெற்றியும் சந்தோஷத்தையும் தரும். பணம் வருவது அதிகரிக்கும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகளில் தீர்வு கிடைக்கும்.

குடும்பத்தில் வாழ்க்கை துணை மூலம் மகிழ்ச்சி உண்டாகும். வார இறுதியில் உஷ்ண சம்பந்தமான நோய்வரக்கூடும். எச்சரிக்கையாக இருப்பதன் மூலம் அதை தடுக்கலாம். பிள்ளைகள் மனம் மகிழும் படி நடந்து கொள்வார்கள். வீண் விவ காரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.

தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆனால் பணவரத்து திருப்திகரமாக இருக்கும். வாடிக்கையாளர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பது நன்மை தரும். வியாபார ஸ்தலத்திற்காக புதியதாக இடம் வாங்குவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாதுரியமான பேச்சால் மேல் அதிகாரிகளின் கட்டளைகளை நிறைவேற்றி பாராட்டு பெறுவார்கள். நீண்ட நாட்களாக நின்ற பதவி உயர்வு உங்களை தேடி வரலாம்.

பெண்களுக்கு: புதிய நட்புகள் கிடைக்கும். கவனதடுமாற்றம் உண்டாகலாம் எச்சரிக்கை தேவை.
மாணவர்களுக்கு: பல தடைகளையும் தாண்டி கல்வியை கற்று வெற்றி பெறுவீர்கள். அடுத்தவர்களால் ஏற்பட்ட தொல்லை நீங்கும்.

பரிகாரம்: ஏழை பிராமணருக்கு உதவுங்கள். முடிந்தால் தங்கம் தானம் கொடுக்கலாம்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்
*************************************************************************************
மகரம்:

புத்திசாலித்தனமாக காரியங்களை நடத்திக் காட்டும் மகர ராசியினரே இந்த வாரம் வாக்கு வன்மையால் காரிய அனுகூலம் உண்டாகும். ஆனால் மனதில் ஏதாவது சஞ்சலம் இருந்து கொண்டே இருக்கும். திடீர் பணதேவை ஏற்படலாம். தேவையான நேரத்தில் மற்றவர்களின் உதவி கிடைக்கும். புதிய சொத்து வாங்குவதில் கவனம் செல்லும்.

குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கை துணையின் பேச்சை கேட்டு செயல்பட வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையே வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நல்லது. உறவினர்கள், நண்பர்கள் மூலம் கிடைக்கும் உதவி தாமதப்படும்.

தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக நடக்கும். நயமாக பேசுவதன் மூலம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேன்மை அடைவார்கள். மேல் அதிகாரி களின் ஆதரவும் கிடைக்கும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பும் இருக்கும்.
பெண்களுக்கு புத்தி கூர்மையுடன் செயல்பட்டு காரியங்களை வெற்றி கரமாக செய்து முடிப்பீர்கள். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது.

மாணவர்களுக்கு பாடங்களில் இருந்த சந்தேகம் நீங்கும். உற்சாகமாக படிப்பீர்கள். சக மாணவர்களிடம் பழகும் போது கவனம் தேவை.

பரிகாரம்: சனீஸ்வர பகவானுக்கு எள் தீபம் போட்டு வணங்க பிரச்சனைகள் அகலும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, சனி
*************************************************************************************
கும்பம்:

எந்த விசயத்திலும் தயக்க குணமுடைய கும்பராசியினரே, இந்த வாரம் விரும்பாத இடமாற்றம் உண்டாகலாம். குறிக்கோள் இன்றி வீணாக அலைய நேரிடும். செலவும் அதிகரிக்கும். சகோதரர்கள் மூலம் நன்மை உண்டாகும். மனோதைரியம் கூடும். புதிய நட்பு கிடைக்கும். எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நன்மைதரும்.

குடும்பத்தில் வீண் பிரச்சனை ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கை துணையின் செயல்கள் உங்களுக்கு அதிருப்தி ஏற்படும் விதத் தில் இருக்கலாம். அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பது ஆறுதலை தரும்.

தொழில் வியாபாரம் முன்னேற்றம் காணப்படும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் எளிதாக பணிகளை செய்து முடிப்பார்கள். மேல் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

பெண்களுக்கு: பேச்சு திறமையால் காரியங்களை எளிதாக செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். சின்ன விஷயங்கள் கூட மன நிறைவு தரும்படி நடக்கும்.

மாணவர்களுக்கு: பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களை அவ்வப்போது போக்கிக் கொள்வது நல்லது. திட்டமிட்டு செயலாற்றுவது முனனேற்றத்திற்கு உதவும்.

பரிகாரம்: அம்பாளுடன் கூடிய சிவ பெருமான் கோவிலுக்குச் சென்று வர மனதில் சந்தோஷம் பிறக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, சனி
*******************************************************************************************
மீனம்:

பிரமிப்புடன் எடுக்கும் காரியங்களை சுலபமாக கையாளும் மீன ராசியினரே நீங்கள் ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டவர். இந்த வாரம் பணவரத்து திருப்திகரமாக இருக்கும். எதிர்ப்புகள் நீங்கும். புதிய தொடர்புகள் உண்டாகும். பெண்கள் மூலம் நன்மை உண்டாகும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.

குடும்பத்தில் வீண் பிரச்சனைகள் தலைதூக்கும். அவற்றை லாவகமாக கையாண்டு சமாளிப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே பழைய விஷயங் களை பேசாமல் இருப்பதன் மூலம் ஒற்றுமை இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும்.
தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். பணியாட்கள் மூலம் நன்மை ஏற்படும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களிடம் நன் மதிப்பை பெறுவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்க பெறுவார்கள். தொழில், வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். வாகனங்கள் மூலம் லாபம் கிடைக்கும். சரக்குகளை வெளியூர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை.

பெண்களுக்கு: மறைமுக எதிர்ப்புகள் விலகும். எதிரிகளும் நண்பராவார்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை.

மாணவர்களுக்கு: பாடங்களை படிக்கும் போது மிகுந்த கவனத்துடன் படிப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

பரிகாரம்: சித்தர்கள் வசிக்கும் ஜீவ சமாதிக்கு சென்று வழிபட்டு தியானம் செய்யுங்கள். அவர்கள் அருள் கிட்டும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்
*******************************************************************************************

Continue Reading

வார பலன்

உங்கள் ராசிக்கான இந்த வார பலன்கள் நவம்பர் 24 முதல் 30 வரை )

weekly prediction, வாரபலன்

வாரபலன்

மேஷம்:

தலைமை தாங்கி துணிச்சலுடன் எதையும் செய்யும் ஆற்றல் பெற்ற மேஷ ராசியினரே இந்த வாரம் செலவு அதிகரிக்கும். அதே நேரத்தில் உடல் ஆரோக்கியம் உண்டாகும். மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். அஷ்டமத்து சனியால் வாகனங்களில் செல்லும் போதும் ஆயுதங்களை கையாளும் போதும் கூடுதல் கவனம் தேவை. முன் கோபம் ஏற்பட்டு அதனால் வீண் தகராறு ஏற்படலாம். நிதானமாக செயல்படுவது நல்லது.

கணவன், மனைவிக்கிடையே சிற்சில பிரச்சினைகள் தலை தூக்கலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

தொழில் வியாபாரம் ஏற்றமும், இறக்கமுமின்றி சுமூகமாக சென்று கொண்டிருக்கும். தொழிலாளர்கள் பிரச்சினையை தீர்த்து வைப்பீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உன்னதமான வாய்ப்புகள் வந்து கதவைத் தட்டும். வாய்ப்புகளைத் தவறாமல் பயன் படுத்திக் கொள்ளுங்கள்.
பெண்களுக்கு துணிச்சலுடன் எந்தக் காரியத்தையும் நடத்தி முடிப்பீர்கள். சில காரணங்களால் வெளியூர் பயணம் தடைபடலாம்.

மாணவர்களுக்கு கல்வியில் இருந்த சிக்கல்கள் தீரும். ஆசிரியர்களின் ஆலோசனை கூடுதல் மதிப்பெண் பெற உதவும்.

பரிகாரம்: அம்மனுக்கு அர்ச்சனை செய்து வணங்க கஷ்டங்கள் நீங்கி சுகம் உண்டாகும். வாழ்க்கை வளம் பெறும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன்

****************************************************
ரிஷபம்:

வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு முன்னேறும் தன்மை உடைய ரிஷப ராசியினரே இந்த வாரம் திடீர் டென்ஷன் உண்டாகும். நண்பர்கள், உறவினர்களிடம் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். நீண்ட நாட்களாக வாங்க வேண்டும் என்று எண்ணிய பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். எதிலும் அவசரம் காண்பிப்பதை தவிர்ப்பது நல்லது.

கணவன், மனைவி ஒற்றுமையாக இருந்து பிரச்சினைகளை களைவீர்கள். உறவினர்கள் இல்லத்திற்கு வந்து செல்வார்கள்.

தொழில் வியாபாரத்தில் இருந்த சுணக்கங்கள் மாறி நன்மை உண்டாகும். தேக்கமடைந்த பொருள்களை விற்றுத் தீர்க்கும் நிலை ஏற்படும். அதனால் மனதில் மகிழ்ச்சி ஏற்படும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான பாதையை தேர்ந்தெடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் வாய்க்கும்.

பெண்களுக்கு திட்டமிட்டு காரியத்தை நடத்தினால் சுலபமாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவுவதற்கு முயற்சி செய்வீர்கள்.

மாணவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். தேவையானவை அனைத்தும் கிடைக்கப் பெறுவதால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.

பரிகாரம்: அம்மனுக்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்து வழிபட கஷ்டங்கள் நீங்கி சுகம் உண்டாகும். வாழ்க்கை வளம் பெறும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி

*******************************************************
மிதுனம்:

கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் திறமை உடைய மிதுன ராசியினரே, இந்த வாரம் மறைந்திருந்தாலும் இணைந்திருப்பதும் நட்பு இருப்பதும் உங்களுக்கு சாதகமான அமைப்பைக் காட்டுகிறது. வழக்கு சம்பந்தமான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். பார்ப்பதன் மூலம் பயணங்கள் நெல்ல நேரிடலாம். மனதிருப்தியுடன் செயலாற்றுவீர்கள். புத்திசாதூரியம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் மதிப்பு கூடும் பாராட்டு கிடைக்கும். உடல்சோர்வு உண்டாகும். மாத இறுதியில் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள்.

கணவன், மனைவிக்கிடையே திடீர் பூசல்கள் ஏற்பட்டு சரியாகும். குடும்பச் செலவுகள் கூடும். குடும்பம் பற்றிய கவலைகள் உண்டாகும். உறவினர்கள், நண்பர்களிடம் பேசும்போது நிதானமாக பேசுவது நன்மை தரும். நெருப்பு ஆயுதங்களை பயன்படுத்தும் போது மிகவும் எச்சரிக்கை தேவை.

தொழிலில் இருந்த சிக்கல்கள் களையப் பெறுவீர்கள். கூட்டு தொழிலில் இருந்த பிரச்சினைகளும் முடிவுக்கு வரும். வாடிக்கையாளர்களிடம் இருந்த நற்பெயரை தக்க வைத்துக் கொள்வீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக வேலை காரணமாக வெளியூர் செல்ல நேரலாம். ஊதிய உயர்வு கிடைக்கலாம்.

பெண்களுக்கு முன்னுக்குப் பின் முரணான பேச்சுகளை பேசுபவர்கள் இடத்தில் இருந்து விலகி விடுவீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சை மீற மாட்டார்கள்.

மாணவர்களுக்கு நிகழ்ச்சிகளில் பங்கு பெற வேண்டும் என்ற எண்ணம் அதிகமாகும். அதற்கு எப்பொழுதும் தயாராக இருப்பீர்கள்.

பரிகாரம்: சிவபெருமானையும், நந்தீஸ்வரரையும் வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். குழப்பம் தீரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி

************************************************************
கடகம்:

வாக்கு திறமையும் எளிதில் கோபம் அடையாத குணமும் கொண்ட கடக ராசியினரே இந்த வாரம் காரிய அனுகூலம் உண்டாகும். எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடிக்க தேவையான உதவிகள் கிடைக்கும். சுய நம்பிக்கை அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும். எந்த பிரச்சனையும் எதிர்கொள்ளும் தைரியம் உண்டாகும். மனதை கவலை கொள்ளச் செய்த பிரச்சனைகளில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்பட்டு சாதகமான பலன் கிடைக்க பெறலாம். எதிலும் கூடுதல் கவனமுடன் இருப்பது நல்லது.

குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை நிலவும். தூரத்திலிருந்து வரும் செய்திகள் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். பங்காளிகள் பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.

தொழில் வியாபாரத்தில் நல்ல அபிவிருத்தி உண்டாகும். முன்னேற்றமான பாதையை உங்களுக்கு பங்குதாரர்கள் காண்பிப்பார்கள். உணவு உண்ணக் கூட நேரமில்லாமல் ஓயாது உழைக்க வேண்டி வரலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் தங்கு தடையின்றி கிடைக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும்.

பெண்களுக்கு சில முக்கிய முடிவுகள் எடுப்பதில் பின்னடைவு ஏற்பட்டு பின்பு சரியாகும், தொய்வின்றி வேலைகளைச் செய்வீர்கள்.

மாணவர்களுக்கு எந்த காரியத்திலும் நிதானமாக முடிவுகளை எடுப்பது சிறந்தது. பெற்றோர்களின் அறிவுரைகளை கேட்டு நடந்து கொள்ளுங்கள்.

பரிகாரம்: பைரவரை வணங்க திருமண தடை நீங்கும். செல்வம் சேரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய்

*************************************************************
சிம்மம்:

வாழ்க்கையில் உயர்ந்த இடத்தை அடைய வேண்டும் என்று லட்சியத்து டன் இருக்கும் சிம்மராசியினரே நீங்கள் எதிலும் முதலாவதாக இருப்பீர்கள். இந்த வாரம் வேகத்தை விட்டு விவேகமாக செயல்படுவது வெற்றியை தரும். பணவரத்து எதிர் பார்த்ததைவிட குறையும். நினைத்ததற்கு மாறாக காரியங்கள் நடக்கலாம் கவனம் தேவை. மற்றவர்களிடம் உங்கள் கருத்துக்களை கூறும்போது அவர்கள் தவறாக அதை புரிந்து கொள்ளலாம்.

குடும்பத்தில் கலகலப்பு உண்டாகும். பிரிந்து சென்றவர்கள் உங்களை நாடி வரக் கூடும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் மனம் மகிழும் காரியங்கள் நடக்கும்.

தொழில் வியாபாரம் நல்ல படியாக நடைபெறும். தீவிர நடவடிக்கைகள் எடுத்து வெற்றி காண்பீர்கள். தொழிலுக்கு தேவையான உபகரணங்கள் வாங்கும் போது கவனம் தேவை.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிலுவையில் இருந்த பணம் கைக்கு வந்து சேரும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
பெண்களுக்கு இழுபறியாக இருந்த வேலைகள் சாதகமாக நடந்து முடியும். மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்கும்.

மாணவர்களுக்கு திட்டமிட்டு படிப்பது சுலபமாக தெரியும். நண்பர்களுடம் வெளியில் செல்ல நேரலாம்.

பரிகாரம்: மாரியம்மனை ஞாயிற்றுக் கிழமையில் அர்ச்சனை செய்து வணங்க எல்லா துன்பமும் நீங்கும். மனநிம்மதி கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள்

*******************************************************************
கன்னி:

சாதுர்யமாக பேசி சகல காரியங்களை யும் சாதிக்கும்திறமை உள்ள கன்னி ராசியினரே இந்த வாரம் உங்களுக்கு எதிர்ப்புகள் அகலும். பகை விலகி எதிலும் வெற்றி கிடைக்கும். தகராறுகள் வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். நன்மை தீமை களை பற்றி கவலைப்படாமல் எதையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள்.

குடும்பத்தில் அமைதியை சிலர் எடுக்கும் முயற்சிகள் உங்களுக்கு தெரிய வரும். பிள்ளைகள் உங்கள் மனதை புரிந்து நடந்து கொள்வார்கள்.

தொழில் சுமாராகவே நடைபெறும். சில வில்லங்கங்களை சமாளிக்க சட்ட பிரச்சினைகள் வரை செல்ல நேரிடலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகத்தில் சில வாக்கு வாதங்கள் ஏற்படலாம். கவனமாக செயலில் இறங்கவும்.

பெண்களுக்கு எடுத்த வேலையை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பெரியோர் மூலம் அனுகூலம் உண்டாகும். பணவரத்து திருப்தி தரும்.

மாணவர்களுக்கு பொது சிந்தனைகள் ஏற்படும். ஆசிரியர்கள் உங்களை பாராட்டுவார்கள். தீவிரமாக படிப்பீர்கள்.

பரிகாரம்: விநாயகருக்கு விளக்கேற்றி வழிபட கடன் பிரச்சனைகள் தீரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், சனி

**************************************************************************
துலாம்:

காந்தம் இழுப்பது போல் எவரையும் தம்பால் இழுத்துக்கொள்ளும் சக்தி படைத்த துலா ராசியினரே இந்த வாரம் எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

பெண்கள் மூலம் லாபம் கிடைக்க செய்யும். உடல் ஆரோக்யம் உண்டாகும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும். அலைச்சல் இருக்கும். பணவரவும் இருப்பதுடன் பயணங்கள் செல்லவும் நேரலாம்.

குடும்பத்தில் முடிக்க முடியாத பிரச்சனைகளை சுலபமாக உங்களால் சமாளிக்க முடியும். சிலர் கூறுவதை தவிர்க்க முடியாமல் வேறு வழியின்றி ஆமோதிக்கக் கூடும்,

தொழில் வியாபாரத்தில் சுமாரான போக்கு காணப்படும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வாக்கு வன்மையால் நல்ல சூழ்நிலை நிலவும். பிரச்சினைகள் அறவே நீங்கப் பெறுவீர்கள்.

பெண்களுக்கு எதிர்பாராத செலவு உண்டாகும். அடுத்தவர்களிடம் பழகுவதில் கவனம் தேவை. பணவரத்து தாமதப்படும்.

மாணவர்களுக்கு உயர்ந்த சிந்தனை ஏற்படும். அனைவரிடமும் பாராட்டு பெறும் வகையில் நடந்து கொள்வீர்கள். பரிசும் கிடைக்கும்.

பரிகாரம்: விநாயக பெருமானை 21 முறை வலம் வர வெற்றி உண்டாகும். நன்மைகள் நடக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி
****************************************************************************
விருச்சிகம்:

திட்டமிட்டு செயலாற்றுவதில் வல்லவரான விருச்சிக ராசியினரே, இந்த காலகட்டத்தில் வெளியூர் பயணங்கள் செல்ல நேரலாம். வரவேண்டிய நிலுவையில் உள்ள பணம் வந்து சேரும். தந்தை மூலம் நன்மை உண்டாகும். எந்த ஒரு காரியத்திலும் தெளிவான முடிவினை எடுப்பீர்கள். மனதில் இருந்த வீண்கவலைகள் நீங்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் இருந்த முட்டுக்கட்டைகள் நீங்கும்.

குடும்பத்தில் உறவுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள். அவர்கள் உங்கள் வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுத்து முடிவுகளை எடுப்பார்கள்.

தொழில் வியாபாரத்தில் திடீர் செலவுகளால் மன அழுத்தம் உண்டாகும். அதை சமாளிக்க தேவையான நிதி உதவிகள் பெற பலரிடம் அலைய வேண்டியதிருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்களது திறமை வெளிப்படும். அனைவரும் மனமுவந்து பாராட்டு தருவார்கள்.

பெண்களுக்கு பிரயாணங்கள் செய்ய வேண்டி வரலாம். எந்தக் காரியங்கள் செய்யும் போது யோசித்து செய்யவும்.
மாணவர்களுக்கு முன்னேற்றமான கால கட்டமாக அமையும். தீவிரமாக முயற்சி செய்து நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

பரிகாரம்: பெருமாளுக்கு வெண் தாமரையால் அர்ச்சனை செய்து மொச்சை சுண்டல் நைவேத்தியம் செய்து வழிபட வாழ்வில் வளம் பெறும். குடும்ப ஒற்றுமை உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், சனி

***************************************************************************
தனுசு:

தொலை நோக்கு பார்வையும் உயர்ந்த எண்ணங்களும் உடைய தனுசு ராசியினரே நீங்கள் எதிலும் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். இந்த வாரம் ஏதாவது ஒரு கவலை மனதில் இருக்கும். எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. மற்றவர்கள் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்கு பாடுபட வேண்டி இருக்கும்.

குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகளிடம் கவனமாக பேசுவது நல்லது. உறவினர்கள் வருகை இருக்கும். சொத்துக்கள் வாங்க எடுக்கும் முயற்சிகள் தாமதப்படும்.

தொழில் வியாபாரத்தில் திடீர் பண வரவு இருக்கும். நீங்கள் எதிர்பார்க்காத இடத்தில் இருந்து பண வரவுகள் இருக்கும். அது உங்களுக்கு ஆச்சரியைத் தரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் இரவு – பகல் பாராமல் உழைக்க வேண்டி இருக்கும். கவலை தோய்ந்த முகத்துடன் காணப் படுவீர்கள்.

பெண்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டு மறையும். ஓயாமல் குடும்பத்திற்காக உழைக்க வேண்டி வரலாம்
மாணவர்களுக்கு பெற்றோர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது சிறந்தது.

பரிகாரம்: அம்பாளுக்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்து ஆராதனை செய்யுங்கள். வெற்றி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்,
****************************************************************************
மகரம்:

சொந்த உழைப்பினால் உயரும் திறமை உடைய மகர ராசியினரே, உங்க ளுக்கு பிறரின் உதவிகள் கிடைக்கும். இந்த வாரம் செய்வது ஆக்கபூர்வமான யோசனை களைதரும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர் கள். சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி காண்பீர்கள். புதிய விஷயங் களை அறிந்து கொள்வதில் ஆர்வம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும்.

குடும்பத்தில் எல்லோரையும் அனுசரித்து செல்வது உங்கள் வெற்றிக்கு உதவும். தேவையான உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கப் பெறுவீர்கள்.

தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான சூழ்நிலையை எதிர்பார்க்கலாம். சிறு வியாபாரிகள் கூட லாபத்தை அடைவார்கள். எதிர்பாராத பணவரவு இருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறிது முன்னேற்றத்தை அலுவலகத்தில் எதிர்பார்க்கலாம். திடீர் வேலை மாற்றம் ஏற்படலாம்.

பெண்களுக்கு உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை பேசிவிட நேரலாம். அமைதியாக இருங்கள். தியானம் செய்யுங்கள்.

மாணவர்களுக்கு சிறப்பான பாராட்டையும், உதவியையும் பெறக் கூடியசூழ்நிலைகள் உள்ளன. தீவிரமாக பாடங்களும் படிப்பீர்கள்.

பரிகாரம்: அம்மன் வழிபாடு வெற்றியை உண்டாக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், சனி

****************************************************************************
கும்பம்:

மனத்துணிவும், எதையும் செய்து முடிக்கும் ஆற்றலும் அதிகம் பெற்ற கும்பராசியினரே, இந்த வாரம் வீண்கவலை ஏற்பட்டு நீங்கும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் வேகம் காட்டுவீர்கள். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். அதே நேரத்தில் எதிர்பாராத செலவும் ஏற்படும். உடமைகளை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது.

குடும்பத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலை மாறி மகிழ்ச்சியான நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையில் அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பளிப்பார்கள். உறவினர்களுடன் சுமுக உறவு இருந்தாலும் அவர்களால் கிடைக்கும் உதவி தாமதப்படும்.

தொழில் வியாபாரம் தொடர்பான பிரச்சனைகள் தீர்ந்து விடும். தடைகள் பல கடந்து செயல் முறையில் வெற்றி காண்பீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர்ந்த நிலைக்கு வருவார்கள். உழைப்புக்கு பலன் கிடைக்கும். உங்கள் மீதான மதிப்பு உயரும்.

பெண்களுக்கு சின்ன சின்ன பிரச்சனைகள் குடும்பத்தில் ஏற்படும். மனதில் அமைதி இருக்காது.

மாணவர்களுக்கு மன வலிமை ஏற்படும். ஆசிரியர்களின் பாராட்டையும், நட்பையும் பெறுவீர்கள். சக மாணவர்களிடம் பழகும் போது கவனம் தேவை.

பரிகாரம்: சனி பகவானை வணங்கி காகத்திற்கு எள்சாதம் வைப்பது உடல் ஆரோக்கியத்தை தரும். கஷ்டங்கள் குறையும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், சனி

****************************************************************************
மீனம்:

சிக்கனம் வீட்டை காக்கும் என்பதை நன்கு உணர்ந்து எதிலும் ஆடம்பரம் காட்டாமல் அமைதியாக இருக்கும் மீன ராசியினரே, இந்த வாரம் சிறப்பான பலன்களைப் பெறப் போகிறீர்கள். அறிவுத்திறன் அதிகரிக்கும். சாதூரியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்க பெறுவீர்கள். பணவரத்து அதிகரிக்கும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. இசை நாட்டியம் போன்ற கலைகளில் ஆர்வம் பிறக்கும். வீண் ஆசைகள் தோன்றலாம். மனதை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. சின்ன விஷயங்களில் மன நிறைவு உண்டாகும்.

குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள், எதிர்ப்புகள் தீரும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் உங்களுக்கு பெருமை உண்டாகும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

தொழிலாளர்களுக்கு ஏற்படும் தேவைகளை உடனுக்குடன் தீர்த்து வைப்பீர்கள். தொழிலில் லாபத்தில் குறைவிராது.

உத்தியோகஸ்தர்களுக்கு சின்ன சின்ன பிரச்சனைகள் கூட மிகப் பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தலாம். கவனமாக இருக்கவும்.

பெண்களுக்கு உடல்நிலை சற்று தடுமாறலாம். நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். இடுப்பு, கை, கால் போன்ற உபாதைகள் ஏற்பட்டு நீங்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படும். எதிர்கால கல்வி பற்றிய சிந்தனை மேலோங்கும்.

பரிகாரம்: குலதெய்வத்தை வணங்க எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி

****************************************************************************

Continue Reading




Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்2 hours ago

உங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (11/12/2019)

வேலை வாய்ப்பு11 hours ago

தஞ்சாவூர் மாவட்ட ஆவின்பால் கூட்டுறவு சங்கத்தில் வேலை!

வீடியோ செய்திகள்11 hours ago

பெட்ரோல் பங்கில், தொடர்ந்து அளவு குறைத்து ஏமாற்றியதால் வாடிக்கையாளர்கள் போராட்டம்

வீடியோ செய்திகள்11 hours ago

படங்கள் இல்லாதனால Web Series பண்ண வந்துட்டேனா?

வீடியோ செய்திகள்12 hours ago

“காசு வேண்டாம்.. ஆசி போதும்”- சென்னை டிராபிக்கை சரிசெய்யும் மூதாட்டியின் சேவை

வீடியோ செய்திகள்12 hours ago

கடலூரில் ரூ.25-க்கு ஒரு கிலோ வெங்காயம்: முண்டியடிக்கும் மக்கள்

வீடியோ செய்திகள்12 hours ago

ஷாருக் கான் மனைவிக்கு உதவும் வீடியோ இணையத்தில் வைரல்

Keerthi Suresh - Rajinikanth - Thalaivar 168
சினிமா செய்திகள்18 hours ago

#Thalaivar168: ரஜினிகாந்த் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்!

வணிகம்19 hours ago

எஸ்பிஐ வாடிக்கையாளரா நீங்கள்; இதோ உங்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

வணிகம்19 hours ago

5% ஜிஎஸ்டி 6 சதவீதமாக உயர்த்த வாய்ப்பு; எந்த பொருட்கள் விலை எல்லாம் உயரும்!

வேலை வாய்ப்பு4 weeks ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா5 months ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா3 months ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு4 months ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா5 months ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

வேலை வாய்ப்பு3 months ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலை வாய்ப்பு4 months ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு5 months ago

கனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி!

சினிமா செய்திகள்4 months ago

நடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு!

சினிமா செய்திகள்5 months ago

நீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் தர்ஷன் காதலி!

வீடியோ செய்திகள்11 hours ago

பெட்ரோல் பங்கில், தொடர்ந்து அளவு குறைத்து ஏமாற்றியதால் வாடிக்கையாளர்கள் போராட்டம்

வீடியோ செய்திகள்11 hours ago

படங்கள் இல்லாதனால Web Series பண்ண வந்துட்டேனா?

வீடியோ செய்திகள்12 hours ago

“காசு வேண்டாம்.. ஆசி போதும்”- சென்னை டிராபிக்கை சரிசெய்யும் மூதாட்டியின் சேவை

வீடியோ செய்திகள்12 hours ago

கடலூரில் ரூ.25-க்கு ஒரு கிலோ வெங்காயம்: முண்டியடிக்கும் மக்கள்

வீடியோ செய்திகள்12 hours ago

ஷாருக் கான் மனைவிக்கு உதவும் வீடியோ இணையத்தில் வைரல்

இந்தியா2 days ago

காதலுக்கு கண் இல்லைதான்; அதற்கென்று ரயிலில் இப்படியே மோசமாக நடந்துகொள்வது?

வீடியோ செய்திகள்2 days ago

முதல் லெட்டருக்கே செருப்படி தான்…!

வைரல் செய்திகள்2 days ago

மீன், மட்டன் விலையை தொட்டது வெங்காயம், முருங்கை விலை: மக்கள் வேதனை

வைரல் செய்திகள்2 days ago

அரசுப் பேருந்து மோதியதில் பிச்சைக்காரர் பலி

வீடியோ செய்திகள்2 days ago

சென்னையில் வெங்காயம் விலை சற்று குறைந்தது

Trending