Connect with us

வார பலன்

உங்கள் ராசிக்கான செப்டம்பர் 01 முதல் 07 வரையிலான வாரபலன்!

weekly prediction, வாரபலன்

மேஷம் (அஸ்வினி, பரணி,  கார்த்திகை 1ம் பாதம்)

நண்பர்களையும் உறவினர்களையும் அன்பினாலும் பாசத்தினாலும் வீழ்த்தும் மேஷ ராசி அன்பர்களே, இந்த வாரம் மனோதைரியம் கூடும். எல்லா வகையிலும் சுகம் உண்டாகும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பண வரத்து திருப்திகரமாக இருக்கும். சிறிய அளவில் வயிறு கோளாறு உண்டாகலாம். தூக்கம் குறையும். எதிர் பாலினத்தாரின் நட்பு கிடைக்கும்.

தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சாதகமாக நடக்கும். ஆர்டர்கள்  பெறுவதில் இருந்த சிக்கல்கள் தீரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும்.  மற்றவர்கள் மூலம் உதவி கிடைக்கும். காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும்

குடும்பத்தில் சுகமும், நிம்மதியும் இருக்கும். குடும்பத்திற்கு  அதிகப்படியான வருமானமும் கிடைக்கும். மகிழ்ச்சி இருக்கும். நீண்ட நாட்களாக  இருந்த குடும்பம் தொடர்பான பிரச்சனைகள் சாதகமாக முடியும். கணவன், மனைவிக்கிடையே  சகஜ நிலை காணப்படும். கருத்து வேற்றுமை நீங்கும்.

பெண்கள் எதிலும் மிகவும் கவனமாக  ஈடுபடுவது நன்மை தரும். திட்டமிட்டு செயல்படுவது வெற்றிக்கு உதவும். பயணங்களால் செலவு ஏற்படும். துணிச்சலுடன் எதிலும் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள்.

மாணவர்களுக்கு கல்வியில் உயர்வு உண்டாகும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தைரியம் ஏற்படும். போட்டிகளில் பங்கு பெற ஆர்வம் உண்டாகும்.  

பரிகாரம்: முடிந்த போதெல்லாம், குருவை வழிபடவும். 

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)

“எருதொடு மாறேல்” என்ற கூற்றுப்படி – எடுத்த காரியத்தையும், கொடுத்த வாக்கையும் காப்பாற்றும் ரிஷப ராசி அன்பர்களே, இந்த வாரம் எப்போதும் பரபரப்பாக காணப்படுவீர்கள். எதிர்ப்புகள் விலகும். பணவரத்து அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆடை ஆபரண சேர்க்கை இருக்கும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள்  திட்டமிட்டு செயலாற்றுவது வளர்ச்சிக்கு உதவும். வாடிக்கையாளர்களிடம்   சாதூர்யமாக பேச வேண்டி இருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு செயல்திறன் அதிகரிக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியும், குதூகலமும் ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். குழந்தைகள்  உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சி தரும்.

பெண்களுக்கு எதிர்காலத்துக்கு உதவக்கூடிய விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். மனதில் வீண்குழப்பம் உண்டாகும்.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண அனுபவ பூர்வமான அறிவு கைகொடுக்கும். தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற நன்கு படிக்க வேண்டி இருக்கும். ஆசிரியர்கள் சக மாணவர்களின்  ஆதரவும் கிடைக்கும்.

பரிகாரம் : தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வரவும். 

அதிர்ஷ்ட கிழமைகள்: சனி, ஞாயிறு

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்  திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பக்கும், மரியாதை கொடுக்கும் மிதுன ராசி அன்பர்களே, இந்த வாரம் யாருக்கும் வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. மனதில் இருக்கும் கவலைகளை வெளிக்காட்டாமல் சிரித்த முகத்துடன் அனைவரிடமும் பழகுவீர்கள். காரிய தடங்கல்கள் உண்டாகி நீங்கும்.  நற்பலன்கள் உண்டாகும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு  இருப்பவர்களுக்கு கீழ்நிலையில் உள்ளவர்களால் லாபம்  கிடைக்க பெறுவீர்கள். சரக்குகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது நல்லது.  

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு துணிச்சல் அதிகரிக்கும். எதை பற்றியும் கவலைப்படாமல் வேலையில்  வேகம் காட்டுவீர்கள். முக்கிய முடிவுகள் எடுக்கும் போது அவசரப்படாமல் இருப்பது நல்லது.

குடும்பத்தில் இருப்பவர்களின் நடவடிக்கை டென்ஷனை ஏற்படுத்தலாம். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். சுப காரியம் நடக்கும்.

பெண்களுக்கு தடைபட்ட காரியங்களில் இருந்த தடைகள் நீங்கி சாதகமாக நடந்து  முடியும். எந்த ஒரு வேலையில் ஈடுபட்டாலும் அதுபற்றி ஒருமுறைக்கு பலமுறை யோசித்தபின் ஈடுபடுவது நல்லது. துணிச்சல் அதிகரிக்கும்.

மாணவர்கள் உயர்கல்வி தொடர்பான சந்தேகங்களை மற்றவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வீர்கள்.  கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். விளையாட்டில் கவனம் செலுத்துவீர்கள்.

பரிகாரம்: பார்வதி தேவியை வழிபட்டுச் சிறப்படையுங்கள். முடிந்தவர்கள் தகுதியானவர்களிடம் தீட்சை பெற்று மந்திர ஜபம் செய்து வரவும். 

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

எதிலும் துடிப்புடனும், ஈடுபாட்டுடனும் ஈடுபடும் கடக இராசி அன்பர்களே, இந்த வாரம்எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் மற்றவர்களின் விமர்சனத்திற்கு ஆளாக வேண்டி வரும். எதிர்த்து  செயல்பட்டவர்கள் அடங்கி விடுவார்கள். பணவரத்தும், எதிர்பார்த்த படி இருக்கும். எதிர்பாலினத்தாரின் நட்பும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும்.

தொழில் வியாபாரம்  சிறப்படையும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள். வியாபார வளர்ச்சிக்கு இருந்த தடைகள் நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள்  எந்த ஒரு வேலையையும் செய்து முடிப்பதில் வேகம் காட்டுவார்கள். சக ஊழியர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழிலில் இருந்த மெத்தன போக்கு மாறும். 

குடும்பத்தில் இருப்பவர்களுடன் தன்மையாக பேசுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே  ஒற்றுமை குறைவு ஏற்படலாம் குடும்பத்தில் இருந்த சிறுசிறு பிரச்சனைகள் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே  விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும்.

பெண்கள் துணிச்சலுடன் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள். பணவரத்து திருப்தி தரும். வாக்கு வாதத்தை தவிர்ப்பது நன்மைதரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

மாணவர்கள் கவனமாக படிப்பது வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு:   உயர்கல்வி கற்க தேவையான பணவசதி கிடைக்கும். கூடுதலாக கவனம் செலுத்தி படிப்பது வெற்றிக்கு உதவும். 

பரிகாரம் : முருகப் பெருமானை வழிபட்டு வரவும். கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்வது நலம் தரும். 

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள் 

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

அதிகாரமும் தோரணையும் மிக்க சிம்ம ராசி அன்பர்களே, இந்த வாரம் அவசரமாக எதையும் செய்ய தோன்றும். துணிச்சலுடன் எதிலும் ஈடுபடுவீர்கள்.  சாமர்த்தியமான பேச்சின் மூலம் எல்லா அனுகூலமும் கிடைக்க பெறும். ஆனால் வீண்வாக்குவாதத்தால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. ஏற்ற தாழ்வு பார்க்காமல் எல்லோரிடமும் சமமாக பழகுவீர்கள். 

தொழில் வியாபாரத்தில்  இருந்த போட்டிகள் விலகும். பணியாட்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும்.  சரக்குகளை பாதுகாப்பாக வைப்பது நல்லது.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது. வீண் அலைச்சலும் கூடுதல் உழைப்பும் இருக்கும்.

குடும்பத்திற்கு தேவையான  பொருட்கள் வாங்குவதன் மூலம் செலவு உண்டாகும். சகோதரர்கள் மூலம் உதவி கிடைக்கும். உறவினர்கள் வருகை இருக்கும் அதே நேரத்தில் அவர்களுடன் வாக்குவாதம் செய்வதை  தவிர்ப்பது நல்லது.

பெண்கள் மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் தேவையற்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரலாம். கவனம் தேவை.

மாணவர்களுக்கு கல்வி, விளையாட்டில் இருக்கும் போட்டிகள் நீங்கும். கல்வி பற்றிய கவலை அதிகரிக்கும். திடமான மனதுடன் படிப்பது வெற்றியை தரும்

பரிகாரம் : முடிந்தால் திங்களூர் சென்று தரிசனம் செய்து விட்டு வரவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

எப்போதும் எதை பற்றியாவது சிந்தித்துக் கொண்டே இருக்கும் கன்னி ராசி அன்பர்களே, இந்த வாரம் உடல் நலம் சீரடையும். மற்றவர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கும். சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படும் உயர்ந்த குணம் மேலோங்கும். எதையும் ஆராய்ந்து அதன் பிறகே அதில் ஈடுபடும் மனநிலை உண்டாகும். ஆன்மிக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும்.

தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். புதிய ஆர்டர்கள் பெறவும், வாடிக்கையாளர்களை திருப்தி செய்யவும் அலைய வேண்டி இருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள்  மற்றவர்களுக்காக பொறுப்புகள் ஏற்கும் போது மிகவும் கவனமாக  இருப்பது வீண்பழி ஏற்படாமல் தடுக்கப்படும்

குடும்பத்தில் கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது.  வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகள் மூலம் மனகவலை ஏற்படலாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அவ்வப்போது வாக்கு வாதங்கள் உண்டாகலாம்.

பெண்கள் சாமர்த்தியமான பேச்சின் மூலம் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வாக்குவாதங்கள் அடுத்தவர் பற்றிய விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது.

மாணவர்கள் மிகவும் கவனமாக எதிலும் ஈடுபடுவது நல்லது. கல்வியை பற்றிய கவலை நீங்கும். திட்டமிட்டபடி பாடங்களை படித்து கூடுதல் மதிப்பெண்  பெறுவீர்கள். உயர்கல்விக்காக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன்தரும்.

பரிகாரம்: சனிபகவானை வழிபட்டு வரவும். முடிந்தால் ஒருமுறை திருநள்ளாறு சென்று வரவும். “நள்ளாறா என நம் வினை நாசமே’ என்கிறது தேவாரம். இதை மறவாதீர்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி.   

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம்  பாதம்)

மற்றவர்கள் கூறும் குறைகளை பற்றி கவலைப்படாமல் நினைத்ததை செய்து முடிக்கும் ஆற்றலுடைய துலாராசி அன்பர்களே, இந்த வாரம் வாக்கு வன்மையால் எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.  புத்தி சாதூரியத்துடன் காரியங்களை செய்து மற்றவர்களின் பாராட்டை பெறுவீர்கள். எதிர்பார்த்த பணம் வரலாம். எதிர்ப்புகள் விலகும். வயிறு சம்பந்தமான தொல்லைகள் வரலாம். எந்த காரியம் செய்தாலும் தாமதம் உண்டாகும். எல்லாவற்றிலும் ஒரு பயம் ஏற்படும்.

தொழில் வியாபாரம் தொடர்பான  காரியங்களில் இழுபறியான நிலை காணப்படும். திட்டமிட்டு  செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் கூடுதல் லாபம் பெற முடியும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள்  மேல் அதிகாரிகள் கொடுத்த வேலைகளை  கவனமாக செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள்.  செயல் திறமை அதிகரிக்கும். வாக்குவன்மையால் லாபம் அதிகரிக்கும்.

குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும்.  திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தை சாதகமான பலன் தரும். கணவன், மனைவிக்கிடையே சந்தோஷம் நிலவும்.  பிள்ளைகளுக்காக செய்யும் பணிகள் திருப்தி தரும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் இருந்த தகராறுகள் நீங்கும்.

பெண்களுக்கு மனக்குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும். தொலைதூர தகவல்கள்  நல்ல தகவல்களாக வரும்.

மாணவர்கள் எதிர்கால கல்வி தொடர்பாக அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்த்து  தீர ஆலோசித்து எதிலும் ஈடுபடவும்,

பரிகாரம் : அறுபடை முருகன் கோவிலுக்கு ஏதேனும் ஒன்றுக்கு தரிசனம் செய்து விட்டு வரவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

வார்த்தைகளை அளந்து பேசுவது போல செலவு செய்வதிலும் சிக்கனத்தை கடைபிடிக்கும் விருச்சிக ராசி அன்பர்களே, இந்த வாரம் வீண் வாக்குவாதங்கள், அதன்மூலம் பிறரிடத்தில் பகை போன்றவை உண்டாகலாம். மனோ தைரியம் அதிகரிக்கும். செலவுக்கு ஏற்ற வரவும் இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்களது பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது.

தொழில் வியாபாரம் தொடர்பான  பணிகளில் தாமதம் ஏற்படும். வியாபாரம் தொடர்பான கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு  அதிகரிக்கும். எந்திரங்களை இயக்குபவர்கள் கவனமாக இருப்பது நல்லது.

குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு அதனால் நிம்மதி குறையலாம். வாழ்க்கை துணையின் பேச்சை கேட்டு  நடக்க வேண்டி இருக்கும். மற்றவர்கள் மூலம் டென்ஷன் உண்டாகலாம். கணவன் மனைவிக்கிடையே கோபத்தை விட்டுவிட்டு இதமாக பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும்.

பெண்களுக்கு நீங்கள் செய்யும் காரியங்களுக்கு எல்லா தரப்பினரிடம் இருந்தும் ஆதரவு கிடைக்கும். நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள். 

மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். கடினமான காரியங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். கல்வி பற்றிய கவலை அதிகரிக்கும். 

பரிகாரம் : ஸ்ரீரங்கம் சென்று ஸ்ரீசக்கரத்தாழ்வாரை தரிசனம் செய்து வர நன்மைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

எதிலும் அப்பாவியாக இருக்கும் தனுசு ராசி அன்பர்களே, இந்த வாரம் தேவையற்ற  குற்றச்சாட்டுக்கு ஆளாகலாம். எனவே எதிலும் மிகவும் கவனத்துடன் ஈடுபடுவது நல்லது. அடுத்தவர்களை அனுசரித்து போய் காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத செலவு ஏற்படும். சிந்தித்து செயல்படுவது நன்மை தரும்.

தொழில் வியாபாரம் முன்னேற்றமடையும். போட்டிகள் குறையும்.  தொழில் தொடர்பான தகராறுகள் நீங்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கப்பெறுவீர்கள்.  கடன் பிரச்சனை தீரும்.

உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டாகும். நீண்ட தூர பயணங்களால் காரிய அனுகூலம்  உண்டாகும். சக பணியாளர்கள் மூலம் உதவியும் கிடைக்க பெறுவீர்கள்.

குடும்பத்திற்கு தேவையான பொருட்களை  வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். இதனால் வாழ்க்கையில்  சந்தோஷம் அதிகரிக்கும். துக்கமும், துன்பமும் நீங்கும். சில்லறை சண்டைகளும், பூசல்களும் இருக்கும்.

பெண்களுக்கு மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கும் சந்திப்பு உண்டாகும். வீண் செலவும் ஏற்படலாம். கோபத்தை குறைப்பது நல்லது. நம்பிக்கையுடன் காரியங்களில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள்.

மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பாராத தடை, தாமதம் உண்டாகலாம். சிறிய வேலையும் செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். 

பரிகாரம் : முடிந்தால் திருப்பதி சென்று பெருமாளை தரிசனம் செய்து விட்டு வரவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

எந்த காரியத்தையும் தீர ஆலோசித்து செய்யும் அதே நேரத்தில் அதில் உள்ள லாப நஷ்டங்களையும் அறிந்து அதற்கேற்றவாறு செயல்படும் மகர ராசி அன்பர்களே, இந்த வாரம் நீண்ட தூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும். உங்களை விட உங்களை சுற்றி இருக்கும் மற்றவர்கள் பயன்படும் விதமாக திறமையை பயன்படுத்துவீர்கள். காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள்.

தொழில் வியாபாரத்தில் மந்தமான போக்கு காணப்பட்டாலும் பணவரத்து  குறைவு இருக்காது. தொழில் கூட்டாளிகளுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமையும், வீண் அலைச்சலும் உண்டாகும். கவனமாக  வேலைகளை செய்யாவிட்டால் மேல் அதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரிடலாம்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன்  சில்லறை சண்டைகள் உண்டாகலாம் கவனம் தேவை.  கணவன், மனைவிக் கிடையே மனவருத்தம் ஏற்படும் நிலை உருவாகலாம். பின் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளுடன்  பேசும் போது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

பெண்களுக்கு மற்றவர்கள்  உதவி கிடைப்பதன் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். மனக்குழப்பம் நீங்கி தெளிவான சிந்தனை உண்டாகும். இழு பறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும்.

மாணவர்களுக்கு விளையாட்டுகளில் ஆர்வம்  உண்டாகும். அதே நேரத்தில் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது வெற்றிக்கு உதவும். கல்வி தொடர்பான பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். 

பரிகாரம் : பைரவரை வழிபட்டு வரவும். தேய்பிறை அஷ்டமி திதியை “பைரவாஷ்டமி’ என்று கூறுவார்கள். அன்று பைரவரை வழிபட்டு வர சிறப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதம்)

எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அதற்கேற்றவாறு காரியங்களை செய்யும் குணமுடைய கும்பராசி அன்பர்களே, இந்த வாரம்காரிய தாமதம் உண்டாகலாம். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். வீண் வாக்குவாதத்தால் பகை உண்டாகலாம். பயணத்தில் தடங்கல், வீண் செலவு போன்றவை ஏற்படும்.  எனினும் நன்மைகள் உண்டாகும். பணவரத்து இருக்கும். வாகன யோகம் உண்டு. 

தொழில் வியாபாரம் முன்னேற்றம் அடையும். புதிய தொழில் அல்லது வியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும். 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அடுத்தவர்களுக்கான பொறுப்புகளை ஏற்கும் போது எச்சரிக்கை தேவை. 

குடும்பத்தில் இருப்பவர்களுடன்  அனுசரித்து செல்வது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம்.  பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்கள் மூலம் அலுகூலம் உண்டாகும்

பெண்கள் எந்த காரியத்திலும் அவசரம் காட்ட வேண்டாம். நிதானமாக செய்தால் வெற்றி நிச்சயம். 

மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம்  உண்டாகும். எதிர்கால கல்வி தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். திறமை வெளிப்படும். தன்னம்பிக்கையுடன் பாடங்களை படித்து கூடுதல் மதிப்பெண் பெற முயற்சி மேற்கொள்வீர்கள்.

பரிகாரம் : தினமும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று சிவதரிசனம் செய்து வரவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி 

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

நட்புக்கும், பாசத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கும் மீன ராசி அன்பர்களே, இந்த வாரம் பணவரத்து இருக்கும். கவுரவம், அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த உதவிகள்  மற்றவர்கள் மூலம் கிடைக்கும். வெற்றி என்ற இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். மனக்கவலை நீங்கி எதிலும் தெளிவான முடிவு எடுப்பீர்கள். பணவரத்து கூடும். 

தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி அவற்றை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.  வியாபாரம் தொடர்பான பயணங்கள் லாபம் தருவதாக இருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள்  நிர்வாக திறமை வெளிப்படும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

குடும்பத்தில் உற்சாகம் இருக்கும். மற்றவர்கள்  உங்களை அனுசரித்து செல்வார்கள். கணவன், மனைவிக் கிடையே மகிழ்ச்சியான நிலை காணப்படும். அன்பு அதிகரிக்கும். மருத்துவ செலவு ஏற்படலாம். பேச்சின் இனிமை சாதூரியத்தால் எளிதில் காரியங்கள் கைகூடும். குடும்பத்தில் இருப்பவர்களின் நலனுக்காக  செலவு செய்ய வேண்டி இருக்கும்.

பெண்களுக்கு அடுத்தவர்களின் செயல்களால் கோபம் உண்டாகலாம். கொடுத்த கடனை திரும்ப பெறுவதில் முழுமூச்சுடன் செயல்படுவீர்கள்.

மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். திறமை வெளிப்படும். சக மாணவர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். 

பரிகாரம்: முடிந்த போதெல்லாம் துர்க்கையம்மனை வழிபடவும். நவகிரகப் பிரதட்சிணம் செய்யுங்கள்; நன்மைகள் பெருகும். 

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

வார பலன்

உங்கள் ராசிக்கான இந்த வார பலன்கள்! (பிப்ரவரி 17 முதல் 23 வரை)

Published

on

weekly prediction, வாரபலன்

வாரபலன்

மேஷம்:

புத்தியை சாதூரியமாக கையாலத்தெரிந்த  மேஷ ராசி அன்பர்களே, இந்த வாரம் எடுக்கும் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். மற்றவர்களுடன் இருந்த விரோதம் மறைந்து நட்பு ஏற்படும். வீண்செலவு குறையும். எதிலும் ஒரு  வேகத்தை உண்டாக்கும். நல்லதா? கெட்டதா? என்று யோசிக்க தோன்றாத மனநிலை உண்டாகும்.

தொழில் வியாபாரம் மந்தமாக இருந்தாலும் பணவரத்து திருப்தி தரும். கடன்களை அடைப்பதில் வேகம் காட்டுவீர்கள். 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது வேலையை கண்டு மேல்  அதிகாரிகள் திருப்தியடைவார்கள்.

குடும்பத்தில் இருந்த இறுக்கமான நிலை மாறும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம்  கவனம் தேவை. பிள்ளைகள் விஷயத்தில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. நண்பர்கள், உறவினர்களிடம் பக்குவமாக  பேசுவது நன்மை தரும்.

பெண்களுக்கு எந்த காரியத்திலும் சாதகமான பலன் பெற வாக்குவாதங் களை தவிர்ப்பது நல்லது. பயணங்களின் போது  கவனம் தேவை.

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற அதிக ஈடுபாட்டுடன் படிப்பது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம்.

பரிகாரம்: பழனி முருகனை வணங்க வாழ்க்கை வளம்பெறும். மனஅமைதி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன்

 

****************************************************************************************************************

ரிஷபம்:

எதையும் பயமில்லாமல் எதிர்கொள்ளும்  ரிஷப ராசி அன்பர்களே, இந்த வாரம் எடுக்கும் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். மற்றவர்களுடன் இருந்த விரோதம் மறைந்து நட்பு ஏற்படும். வீண்செலவு குறையும். எதிலும் ஒரு  வேகத்தை உண்டாக்கும். நல்லதா? கெட்டதா? என்று யோசிக்க தோன்றாத மனநிலை உண்டாகும்.

தொழில் வியாபாரம் வழக்கம்போல் நடக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள்  இருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகளை அனுசரித்து  செல்வது நல்லது. 

குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவது  நன்மை தரும். பிள்ளைகளுக்காக சில பணிகளை கவனிக்க வேண்டி இருக்கும். அவர்களை அன்புடன் நடத்துவது நல்லது.

பெண்களுக்கு நீங்கள் எடுக்கும் முயற்சி களில் சாதகமான பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணவரத்து திருப்தி தரும்.

மாணவர்களுக்கு எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்ல பலன் தரும். 

பரிகாரம்:  ஆஞ்சநேயரை வெண்ணெய் சாற்றி வணங்கி தீபம் ஏற்றி வர எல்லா கஷ்டங்களும் நீங்கும். பொருளாதாரம் மேம்படும் தைரியம் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி

 

****************************************************************************************************************

மிதுனம்:

பாசத்திற்காக அடங்கி போகும் மிதுன ராசி அன்பர்களே, இந்த வாரம் மனதில் இருந்த கவலை நீங்கி தைரியம் உண்டாகும். எதிலும் லாபத்தை பார்க்க முடியும். எல்லா நன்மையும் உண்டாகி உடல் ஆரோக்கியம் பெறும். வாக்கு வன்மையால் எந்த காரியத்தையும் சுலபமாக செய்து முடிப்பீர்கள்.

தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் பெற கடினமாக பணியாற்ற வேண்டி இருக்கும். புதிய ஆர்டர்கள்  கிடைப்பதில் தாமதம் உண்டாகும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். முயற்சிகள் எதிர்பார்த்த பலன் தராமல்  போகலாம். வீண் அலைச்சல் உண்டாகலாம்.

குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை ஆலோசனை செய்யாமல் தானாக எதையும் செய்வது உங்களுக்கு மன  வருத்தத்தை தரலாம். கணவன், மனைவிக்கிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம் கவனம் தேவை. பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நல்லது.

பெண்களுக்கு எதிலும் முழு கவனத்துடன் ஈடுபடுவது நன்மையை தரும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது நடவடிக்கைகள் பெற்றோருக்கு திருப்தியை தரும்.

பரிகாரம்:  நவகிரகத்தில் சுக்கிரனை பூஜிக்க வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி

****************************************************************************************************************

கடகம்:

பிறருக்கு உதவும் குணம் கொண்ட கடக ராசி அன்பர்களே,உங்களுக்கு தேவையான உதவி அடுத்தவரிடம் இருந்து கிடைப்பது அரிது. இந்த வாரம் பணதேவை உண்டாகும். இடமாற்றம் ஏற்படலாம்.  ஆடை அணிகலன் வாங்குவதன் மூலம் செலவு உண்டாகும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். வாகன யோகம் கிடைக்கும். எழுத்துவகையில் எதிலும் சிக்காமல் கவனமாக இருப்பது நல்லது. 

தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். முக்கிய  நபர்களின் ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களின் பணம் சம்பாதிக்கும் திறமை அதிகரிக்கும். மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை  திறமையுடன் செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள்.

குடும்பத்தில் இருந்த டென்ஷன் நீங்கும் கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். குழந்தைகளின் எதிர்காலம்  பற்றிய சிந்தனை அதிகரிக்கும். நண்பர்களால் தேவையான உதவி கிடைக்கும்.

பெண்களுக்கு எந்த தடைகளையும் தாண்டி எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். மனதில் மகிழ்சி உண்டாகும்.

மாணவர்களுக்கு மற்றவர்களுடன் பழகும் போது கவனமாக இருப்பது நல்லது. கல்வி பற்றிய மனக்கவலை ஏற்பட்டு விலகும்.

பரிகாரம்: ஸ்ரீவில்லிபுத்தூரில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ ஆண்டாள் சமேத ஸ்ரீ ரங்கமன்னாரை வணங்கி வர எல்லா பிரச்சனைகளும் தீரும். செல்வ செழிப்பும், ஆரோக்கியமும் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி

****************************************************************************************************************

சிம்மம்:

பாதியில் கிடந்த வேலையை எடுத்து முடிக்கும் திறன் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே, இந்த வாரம் மறைமுக எதிர்ப்புகள் குறையும். எடுத்த காரியத்தில் ஏற்பட்ட தடை, தாமதம் நீங்கும். உடல் ஆரோக்கியம் பெறும். வழக்குகள், தகராறுகளில் சாதகமான பலன்  கிடைக்கும். எந்த ஒரு விஷயத்திலும் மிகவும் அக்கறை காட்டுவீர்கள். அதேவேளையில் கடுமையான முயற்சிகளும் தேவை. 

தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற சூழ்நிலைகள் ஏதுவாக இருக்கும். செலவை  குறைப்பதன் மூலம் பணத் தட்டுப்பாடு குறையலாம். பேச்சில் கடுமையை காட்டாமல் இருப்பது நன்மை தரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி புரியும் இடங்களில் எச்சரிக்கையுடன்  இருப்பது நல்லது. குறிப்பாக எந்திரங்களை இயக்கும் போது கவனம் தேவை. மேலிடத்தின் மூலமாக நடக்க வேண்டிய காரியங்களில் தாமதம் ஏற்படலாம். 

குடும்பத்தில் குதூகலமான சுப பலன்கள் ஏற்படும். கணவன், மனைவிக் கிடையே பந்தபாசம் அதிகரிக்கும்.  குழந்தைகளின் மூலம் மனமகிழும் படியான சூழ்நிலை உருவாகும். நண்பர்கள் உறவினர்களுடன் கவனமாக பேசி பழகுவது நல்லது

பெண்களுக்கு மனதில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். முன்கோபத்தை குறைப்பது நன்மையை தரும்.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்ப்புகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.

பரிகாரம்: ஸ்ரீராகவேந்திரரை வணங்க எல்லா பிரச்சனைகளும் தீரும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி

****************************************************************************************************************

கன்னி:

கொடுத்த வேலையை முடிக்கும் திறன் கொண்ட கன்னி ராசி அன்பரகளே, நீங்கள் உங்கள் வேலையை செய்து முடிப்பதில் ஆர்வம் காட்ட மாட்டீர்கள். இந்த வாரம் மனதில் உத்வேகம் உருவாகி உயர்வான செயல்களைச் செய்வீர்கள். நிலுவையில் இருந்த பணம் உங்களுக்கு திரும்ப கிடைக்கும் கடன் சுமைகள் நீங்கி நிம்மதியான வாழ்க்கை முறைகள் உண்டாகும்.

தொழில் வியாபாரம் தொடர்பாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். இதனை பயன்படுத்திக் கொண்டால் உங்கள் வியாபாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் தேவையில்லாத வாக்கு வாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.

குடும்பத்தில் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்துடன் ஆலயங்களுக்குச் சென்று வருவீர்கள். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது உங்களுக்கு மனதிற்கு நிம்மதி கொடுக்கும்.

பெண்களுக்கு தேவையான பண வரவு எதிர்பார்த்த நேரத்தில் கிடைக்கும்.

மாணவர்களுக்கு  கல்வி தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். மனதில் இருந்த கவலை நீங்கும்.

பரிகாரம்: மேல் மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி அன்னையை தரிசித்து வருவதுஉடல் ஆரோக்கியத்தை தரும். எதிர்பார்த்த காரியம் தாமதமாக முடியும். ஆனால் நல்ல பலனை தரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன்

****************************************************************************************************************

துலாம்:

அடுத்தவர்களை வேலைவாங்கும் திறன் கொண்ட துலா ராசி அன்பர்களே, இந்த வாரம் எந்த ஒரு காரியத்தையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து அதிகரிக்கும். அடுத்தவர்களிடம் பொறுப்புக்களை ஒப்படைக்காமல் நேரடியாக செய்வது நன்மை தரும்.

தொழில் வியாபாரத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை தீரும். அரசு மூலம் நடக்க வேண்டிய பணிகளில்  இருந்த தொய்வு நீங்கும். 

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதியபதவிகள் கிடைக்கும். மரியாதை அந்தஸ்து ஆகியவை உயரும். எதையும்  செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் இருக்கும். பெரியோர்கள் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். கணவன்,  மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் சந்தோஷம் கூடும். உல்லாச பயணங்கள் செல்ல நேரலாம்.

பெண்களுக்கு திறமை வெளிப்படும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். மனதில் தைரியம் உண்டாகும்.

மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டிகள் நீங்கும். எதிர்பார்த்த வெற்றிக்கு கூடுதல் முயற்சி பலன் அளிக்கும்.

பரிகாரம்:  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரை வணங்கி வர துன்பங்கள் விலகும். மனநிம்மதி குடும்பத்தில் குதூகலம் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்

****************************************************************************************************************

விருச்சிகம்:

சுற்றியுள்ள் அனைத்து இடமும் சுத்தமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே, இந்த வாரம்.எதிலும் தன்னம்பிக்கையுடன் ஈடுபட்டு காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். புதிய தொடர்புகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். முக்கிய நபர்களின் அறிமுகமும் நட்பும் கிடைக்க பெறுவீர்கள். எதிர்பார்த்தபடி எல்லாம் நடந்தாலும் மற்றவர்கள்  தவறாக புரிந்து கொள்ள நேரலாம் கவனம் தேவை. 

தொழில் வியாபாரம் தொடர்பாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரம் தொடர்பானவழக்கு விவகாரங்களை  தள்ளி போடுவது நல்லது. எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் பணத்தேவை ஏற்படும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகள் உங்களுக்கு  உறுதுணையாக இருப்பார்கள்.

குடும்பத்தில் ஏதாவது வீண் விவகாரங்கள் ஏற்பட்டு நீங்கும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை  உண்டாகலாம். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். பிள்ளைகளுக்காக கூடுதலாக பாடுபட வேண்டி இருக்கும். சகோதரர்களிடம் கவனமாக பேசுவது நல்லது. 

பெண்களுக்கு பணவரத்து கூடும். ஏற்கனவே செய்த ஒரு காரியத்தின் பலன் இப்போது கிடைக்கும். திடீர் மனவருத்தம்  ஏற்படலாம்.

மாணவர்களுக்கு: மற்றவர்களை திருப்தியடையச் செய்யும் வகையில் உங்களது செயல்கள் இருக்கும். கல்வியில் ஆர்வம் உண்டாகும்.

பரிகாரம்:  உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பரிக்கல் லட்சுமி நரசிம்ம பெருமாளை வணங்கி வர எதிர்ப்புகள் நீங்கும். தொழிற்போட்டிகள் குறையும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன்,சனி

****************************************************************************************************************

தனுசு:

எடுத்த காரியங்களில் தயக்கம் கொள்ளாமல் அதை தீர்வுகண்டு வெற்றி காணும் தனுசு ராசி அன்பர்களே, இந்த வாரம் சமூகத்தில் உயர்ந்தவர்கள் மத்தியில் புதியதொரு மரியாதையும் வரவேற்பும் உங்களுக்கு கிடைக்கப்பெறும. தாயின் உடல்நலத்தில்  சிறு சிறு தொந்தரவுகள் உண்டாகி நல்ல பராமரிப்பின் காரணமாய் உடல் நலம் பெறும். பூர்வ புண்ணி சொத்துக்களும் அதனால் வரக்கூடிய தனலாபங்களும் உங்கள் தகுதியை உயர்த்தும். வெகுகாலம் தீராத பிரச்னைகள் மனதுக்கு சந்தோஷம் தரும் தீர்வை தரும். 

தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும் அரசாங்கம் தொடர்பான பணிகளில் சாதகமான போக்கு  காணப்படும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் கூடும். திறமை வெளிப்படும். வேலை தேடுபவர்களுக்கு வேலை  கிடைக்கும்.

குடும்பத்தை விட்டு பிரிந்து சென்ற வர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம்  அதிகரிக்கும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். விருந்தினர்கள் வருகை இருக்கும்.  மரியாதையும் அந்தஸ்தும் கூடும்.

பெண்களுக்கு விடா முயற்சியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பணவரத்து திருப்திதரும்.

மாணவர்களுக்கு எதிலும் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது நல்லது. கல்வியில் வெற்றிபெற கூடுதல் கவனம் தேவை.

பரிகாரம்: குல தெய்வத்தை பூஜை போட்டு வணங்க குடும்ப பிரச்சனை, தொழிற்பிரச்சனை கல்வியில் தடை போன்றவை விலகும். எதிலும் நன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி

****************************************************************************************************************

மகரம்:

அனைத்து துறையிலும் ஆர்வம் மிகுந்தவராக திகலும் மகர ராசி அன்பர்களே, உங்களுக்கு தெய்வீக  ஈடுபாடும் இருக்கும். இந்த வாரம் அறிவுத்திறன் அதிகரிக்கும். சாதூரியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்க பெறுவீர்கள். பணவரத்து அதிகரிக்கும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. கலைகளில் ஆர்வம் பிறக்கும். வீண் ஆசைகள் தோன்றலாம்.  மனதை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. சின்ன விஷயங்களில் மன நிறைவு உண்டாகும்.

தொழில் வியாபாரத்தில் லாபம் குறையும். பணவரத்து சீராக இருக்கும். ஆர்டர்கள் வருவது தாமதப்படும்.  வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. போட்டிகள் குறையும்.

உத்தியோகத்தில்  இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படும். சக ஊழியர்களிடம் இருந்த மன வருத்தங்கள் நீங்கும்.  மேல் அதிகாரிகள் சொன்ன வேலையை செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கை துணையின் பேச்சை கேட்டு செயல்பட வேண்டி இருக்கும்.  கணவன், மனைவிக்கிடையே வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நல்லது. உறவினர்கள், நண்பர்கள் மூலம் கிடைக்கும் உதவி தாமதப்படும்.

பெண்களுக்கு கூடுதலாக செய்யும் முயற்சிகள் மூலம் விரும்பியபடி காரியத்தை செய்து முடிப்பீர்கள். உடல்  ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் நீங்கும். எதிலும் முழு முயற்சியுடன் ஈடுபடுவீர்கள்.

பரிகாரம்:  திருச்செந்தூர் முருகனை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். காரிய வெற்றி கிடைக்கும். எதிர்ப்புகள் விலகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், சனி

****************************************************************************************************************

கும்பம்:

எதையும் செயல்படுத்துவதற்கு முன்பு யோசித்து செயல்படகூடிய கும்ப ராசி அன்பர்களே, இந்த வாரம் எல்லா காரியங்களும் சுமூகமாக நடந்து முடியும். மனத்துணிவு உண்டாகும். எதையும் வேகமாக செய்து முடிப்பீர்கள். செலவு அதிகரிக்கும். தடை தாமதம் விலகும். மற்றவர்கள் விஷயத்தில் கவனம் செலுத்துவதை தவிர்ப்பது நல்லது.

தொழில் வியாபாரத்தில் இருந்த முட்டு கட்டைகள் நீங்கும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம்.  பணவரத்து திருப்தி தரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். அதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்க  பெறுவீர்கள். உத்தியோகம் தொடர்பான இடமாற்றம் ஏற்படலாம்.

குடும்பத்தில் இருப்பவர்கள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. கணவன்,  மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. குழந்தைகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள்.

பெண்களுக்கு சாதூரியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தேடி வரலாம்.

மாணவர்களுக்கு எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்ல பலன் தரும்.

பரிகாரம்: நவகிரகத்தில் குருபகவானுக்கு முல்லை மலர் சாற்றி நெற் தீபம் ஏற்றி வர எல்லா கஷ்டங்களும் நீங்கும். பொருளாதார மேம்பாடு உண்டாகும்

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி.

****************************************************************************************************************

மீனம்:

உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மீன ராசி அன்பர்களே, நீங்கள் நேர்மைக்காக பாடுபடுவீர்கள். இந்த வாரம் .எதிர்பார்த்த பணவரத்து தாமதப்படலாம். வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். எனவே கவனமாக எதிலும் ஈடுபடுவது நல்லது. தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். எந்த காரியத்தையும் ஆராய்ந்து பார்த்து செய்வது நல்லது.

தொழில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பழைய பாக்கிகள் வசூலாக நிதிநிலை உயரும். கடன் பிரச்சனைகள்  குறையும். தொழில் போட்டிகள் விலகும். வேலை தேடுபவர்களுக்கு உத்தியோகம் கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுகமான எதிர்ப்புகள் விலகும்.

குடும்பத்தில் இருந்த கஷ்டங்கள் நீங்கும். குதூகலம் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.  பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். தொல்லைகள் நீங்கும்.

பெண்களுக்கு எதையும் எளிதாக செய்து முடிக்கும் திறமை உண்டாகும். பயணங்கள் வெற்றியை தரும்.

மாணவர்களுக்கு மனதில் இருந்த வீண் பயம் அகலும். கல்வியில் வெற்றி பெற பாடுபடுவீர்கள். 

பரிகாரம்: விநாயக பெருமானுக்கு அருகம்புல் மாலை சாற்றி அர்ச்சனை செய்து வர குடும்ப கஷ்டங்கள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் மேன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன்,சனி

*************************************************************************************************************************

 

Continue Reading

வார பலன்

உங்கள் ராசிக்கான இந்த வார பலன்கள்! (பிப்ரவரி 10 முதல் 16 வரை)

Published

on

weekly prediction, வாரபலன்

மேஷம்:

உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் மேஷ ராசியினரே இந்த வாரம் விருப்பங்கள் கைகூடும். பயன்தரும் காரியங்களில் ஈடுபடுவீர்கள்.  காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனதில் தைரியம் உண்டாகும். பண வரத்து குறையும். வாழ்க்கை துணையின் உடல்நலத்தில் கவனம் தேவை.

குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த மனகுழப்பங்கள் தீரும். எதிலும் தெளிவான சிந்தனை இருக்கும். குழந்தைகள் பற்றிய கவலை உண்டாகும். அவர்களின் நலனுக்காக பாடுபடுவீர்கள். உறவினர் மூலம் நன்மை உண்டாகலாம். 

தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும் என்ற தன்னம்பிக்கை ஏற்படும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. 

உத்தியோகஸ்தர்கள் முன்னேற்றம் காண்பார்கள். வேலை பற்றிய கவலை நீங்கும். நிர்வாகத்தின் ஆதரவும் இருக்கும்.

பெண்களுக்கு எந்த ஒரு வேலைக்காக வும் கூடுதலாக அலைய வேண்டி இருக்கும். பயணம் செய்யும் போது கவனம் தேவை.

மாணவர்களுக்கு  கல்வியில் முன்னேற்றம் காண  திட்டமிட்டு படித்து வெற்றி பெறுவீர்கள். மன மகிழ்ச்சி ஏற்படும் சம்பவங்கள் நிகழும்.

பரிகாரம்: சப்த கன்னியரை வழிபாடு நடத்தி வாருங்கள். நினைத்த காரியங்கள் கை கூடும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்

*******************************************************************************************

ரிஷபம்:

குடும்பத்தில் அதிக பற்றுடன் நடந்து கொள்ளும் ரிஷப ராசியினரே இந்த வாரம் எல்லா வகையிலும் நல்லதே நடக்கும். பணவரத்து கூடும். எதிர்ப்புகள் விலகும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த காரியத்தை மீண்டும் செய்து முடிக்க முயற்சிகள் மேற்கொள்வீர்கள். வெளியூர் தகவல்கள் சாதகமானதாக இருக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்கள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து  செல்வது நல்லது. குழந்தைகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். 

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னருடன் அனுசரித்து செல்வது நல்லது. வியாபார போட்டிகள் குறையும். எல்லா துறைகளிலும் லாபம் கிடைக்கும். 

உத்தியோகஸ் தர்களுக்கு வேலையில் முன்னேற்றம் ஏற்படும். மேல் அதிகாரிகள் மூலம் நன்மை கிடைக்க பெறுவீர்கள்.

பெண்களுக்கு எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவதும் நன்மை தரும்.

மாணவர்களுக்கு  கல்வியில் நாட்டம் உண்டாகும். போட்டிகள் நீங்கும். சக மாணவர்களுடன்  இருந்த மனகசப்பு மாறும்.

பரிகாரம்: காகத்திற்கு அன்னமிட்டு வாருங்கள். முன்னோர் வழிபாடு செய்யுங்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், சனி

*******************************************************************************************

மிதுனம்:

தீர்க்கமான முடிவுகளை எடுக்க நினைக்கும் மிதுன ராசியினரே இந்த வாரம் வீண்குழப்பம் ஏற்படும். எனவே எதைப்பற்றியும்  அதிகம் யோசித்து மனதை குழப்பிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. பண வரத்து இருந்த போதிலும், எதிர்பாராத செலவும் வந்து சேரும். அடுத்தவர்களுக் காக உதவி செய்வது மற்றும் அவர்களுக் காக  பரிந்து பேசுவது போன்றவற்றை செய் யும் போது கவனம் தேவை. இல்லையெனில் வீணான அவச்சொல் வாங்க நேரிடும்..

குடும்பத்தில் இருப்பவர்களுடன் கவன மாக பேசுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைக ளின் கல்வி தொடர்பான  விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது. வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது. 

தொழில் வியாபாரம் விறுவிறுப்படை யும். கடந்த காலங்களில் இருந்த மந்த நிலை மாறும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு இருப்பது போல் உணர்வார்கள். மேல் அதிகாரிகள் உங்கள் செயல்களில் குறை காணலாம் கவனமாக இருப்பது நல்லது. சக ஊழியர்களுக்கும் உங்களுக்கும் கருத்து வேறுபாடுகள் வரலாம்.

பெண்களுக்கு எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். வீண் அலைச்சல் உண்டாகும்.

மாணவர்களுக்கு  எதிலும் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது நல்லது. கல்வியில் வெற்றிபெற கூடுதல் கவனம் தேவை.

பரிகாரம்: கந்தர் அனுபூதி படித்து முருகனை வணங்க மனக்குழப்பம் நீங்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய்

 

*******************************************************************************************

கடகம்:

உதவி செய்தவர்களை என்றும் மறக்காத  கடக ராசியினரே இந்த வாரம் உங்கள் செல்வாக்கு உயரும். வருமானம் கூடும். வார இறுதியில் காரிய தடைகள் நீங்கும். திட்டமிட்டபடி எல்லாம் நடக்கும். ஆடம்பரமான பொருட்களை வாங்க தூண்டும். கடன் தொல்லை குறையும்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபப்படாமல் நிதானமாக பேசி அனுசரித்து செல்வது நல்லது. சகோதரர் வகையில் உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாக லாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன், மனைவிக் கிடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள்.

தொழில் வியாபாரம் வேகம் பிடிக்கும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். தொழில் வியாபாரம் பற்றி மனதில் இருந்த கவலை நீங்கி தைரியம் உண்டாகும். 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு குறைந்து மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். பணவரத்தும் திருப்தியாக இருக்கும். எல்லாவற்றிலும் முன்னேற்றம் காணப்படும். அலுவலகத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் அகலும்.

பெண்களுக்கு எதிலும் மெத்தன போக்கு காணப்படும். வீண் அலைச்சல் ஏற்படலாம்.  கோபத்தை குறைப்பது நன்மை தரும்.

மாணவர்களுக்கு  கல்வி தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். மனதில் இருந்த கவலை நீங்கும்.

பரிகாரம்: மகாலட்சுமி அஷ்டோத்ரம் படித்து வாருங்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி

 

*************************************************************************************

சிம்மம்:

எந்த காரியத்திலும் லாப நோக்கத்துடனேயே செயல்படும் சிம்ம ராசியினரே. இந்த வாரம்  நல்ல பலன்களைப் பெறுவதில் சிரமம் இருக்காது. வீணாக மனதை உறுத்திக் கொண்டிருந்த கவலை நீங்கும். எவ்வளவு திறமையுடன்  செயல்பட்டாலும் காரிய தடங்கலை ஏற்படுத்தும். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனம் தேவை. பயணத்தினால் வீண் செலவும், அலைச்சலும் உண்டாகும்.

குடும்பத்தில் உறவினர் வருகை இருக்கும். தேவையற்ற வீண் பேச்சுக் களை  குறைப்பதன் மூலம் குடும்பத்தில் அமைதி ஏற்படும். வாழ்க்கை துணையின் ஆதரவு உண்டு.பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடலாம். வார தொடக்கத்தில் கோபத்தை தவிர்த்து பேசுவது நல்லது.

தொழில் வியாபாரம் தொடர்பான செலவுகள்  அதிகரிக்கும். எதிலும் ஒரு முறைக்கு மறுமுறை யோசித்து முடிவெடுப்பது நல்லது. 

உத்தியோகஸ் தர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வேலைக்கு முயற்சி செய்பவர் களுக்கு  வேலை கிடைக்கலாம்.

பெண்களுக்கு எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுப்பதில் தாமதம் உண்டாகும். கவனமாக வேலைகளை செய்வது நல்லது. பணவரத்து தாமதமாகலாம்.

மாணவர்களுக்கு  கல்வியில் முன்னேற்றமடைய கவனமுடன் படிப்பது நல்லது. எதிலும் நிதானம் தேவை.

பரிகாரம்: தினமும் காலை காகத்திற்கு சாதம் வைத்து முன்னோர்களை நினைத்து வணங்கி வருவது நன்மை தரும்

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், சனி

*************************************************************************************

கன்னி:

எடுத்த காரியங்களை துரிதமாக நிறைவேற்றத் துடிக்கும் கன்னி ராசியினரே இந்த காலகட்டத்தில் பணப் பற்றாக்குறை நீங்கும். மற்றவர்களால் குற்றம் சாட்டப்படும் சூழ்நிலை உருவாகலாம் கவனம் தேவை.  எதிர்பாராத செலவு உண்டாகும். கொடுத்த வாக்கை காப்பாற்றும் கடும் முயற்சிக்குப் பின் வெற்றி கிடைக்கும். வீடு, வாகனம் போன்றவற்றை புதுப்பிக்கும் பணியில் ஈடுபடுவீர்கள். மனோ தைரியம் அதிகரிக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது.  கணவன், மனைவிக் கிடையில் வாக்கு வாதங்கள் ஏற்படலாம். கவனம் தேவை. அக்கம் பக்கத்தினருடன் சில்லறை சண்டைகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை வரலாம்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் ஆக்கபூர்வமான செயல் களை மேற்கொண்டு வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பார்கள். தொழில் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடலாம். வியாபாரத்திற்கென்று புதிதாக இடம் வாங்குவீர்கள். 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு குறைவால் மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் ஏற்படும். எதிர்பார்த்த பணி இடமாற்றம் கிடைக்கும்.

பெண்களுக்கு எதைபற்றியும் அதிகம் யோசித்து மனதை குழப்பிக் கொள்ளாமல் இருப்பது நன்மை தரும். வரவும் செலவும் சரியாக இருக்கும்.

மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் உண்டாகும். பாடங்களை கவனமாக படிப்பது முன்னேற்றத்துக்கு உதவும்.

பரிகாரம்: நவகிரகத்தில் உள்ள புத பகவானுக்கு விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்

*******************************************************************************************

துலாம்:

கடல் பிரயாணங்களை அதிகம் விரும்பும் துலா ராசியினரே, இந்த வாரம் தடைகள் நீங்கும்.  எதிர்ப்புகள் விலகும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பண வரத்து எதிர் பார்த்தது போல் இருக்கும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கலாம். பாதியில் நின்ற காரியங்களை தொடர்ந்து செய்து முடிப்பீர்கள். திடீர் குழப்பம் ஏற்படலாம். தீ, எந்திரம் ஆகியவற்றை கையாளும்போது கவனம் தேவை.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. கணவன் மனைவிக்கிடையே மன மகிழ்ச்சி ஏற்பட அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளின் கல்வி யில் கவனம் செலுத்துவது நன்மையை தரும். வழக்கு விவகாரங் களில்  ஈடு படாமல் தவிர்ப்பது நல்லது.

தொழில் வியாபாரம் நன்றாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் வேகம் இருக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சுணக்க நிலை மாறும். பணவரத்து இருக்கும். 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலையில் கவனமாக இருப்பது நல்லது. வேறு வேலைக்கு முயற்சி செய்பவர்கள் சிறிது காலம் தள்ளிப் போடுவது சிறந்தது.

பெண்களுக்கு எந்த  வேலையையும் எளிதாக செய்து விடுவீர்கள். முயற்சிகள் வெற்றி பெறும்.

மாணவர்களுக்கு  கல்வி பற்றிய கவலை குறையும். அதிக மதிப்பெண் எடுக்க ஆர்வமாக படிப்பீர்கள். 

பரிகாரம்: அம்மனுக்கு மல்லிகைப் பூ சூடி நமஸ்காரம் செய்யுங்கள். வேண்டியது கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய்

*************************************************************************************

விருச்சிகம்:

உடன் பிறந்தவர்களுக்காக உதவத் துடிக்கும் விருச்சிக ராசியினரே இந்த காலகட்டத்தில்  நன்மை உண்டாகும். தனலாபம் ஏற்படும். அடுத்தவர்களுக்கு உதவுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். எதிர்பாலினத்தாரால் செலவு  ஏற்படும். கோபத்தால் சில்லறை சண்டைகள் ஏற்படலாம். பணவரத்து கூடும். காரிய அனுகூலம் உண்டாகும்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் அனு சரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே தேவையற்ற மன வருத்தம் உண்டாகலாம் கவனம் தேவை. மருத்துவம் தொடர்பான செலவும் ஏற் படலாம். ஆயுதம், நெருப்பு ஆகிய வற்றை கையாளும்போது கவனமாக இருப்பது நல்லது.

தொழில் வியாபாரம் செய்பவர்கள் பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் வேகம் காண்பிப்பார்கள்.   எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைக்கும்.  

உத்தியோகத்தில் கூடுதல் பணிச்சுமையை ஏற்க வேண்டி இருக்கும். மேலதிகாரிகளிடம் உங்களது கருத்துக்களை தெரிவிக்கும்போது கவனமாக பேசுவது நல்லது. பணி நிமித்தமாக பயணங்கள் ஏற்படலாம்.

பெண்களுக்கு எந்த ஒரு காரியத்தை செய்யும் முன்பும் அதை எப்படி செய்வது என்ற மன தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நன்மை தரும். 

மாணவர்களுக்கு  கல்வி பற்றிய கவலை விலகும். விளையாட்டு போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். விடுமுறையில் மகிழ்ச்சியான பொழுது போக்கில் ஈடுபடுவீர்கள்.

பரிகாரம்: சிவன் கோவிலுக்குச் சென்று அபிஷேகத்திற்கு தயிர் வாங்கிக் கொடுங்கள். பிரச்சனைகள் தீரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய்

*************************************************************************************

தனுசு:

உழைத்து உயர வேண்டும் என்ற எண்ணமுடைய  தனுசு ராசியினரே. இந்த காலகட்டத்தில் நெருக்கடியான பிரச்சனைகள் நீங்கும்.  பணவரத்து அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.   பயணங்களும் அவற்றால் நன்மைகளும் உண்டாகும். சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபடுவீர்கள். மற்றவர்கள் மேல் இரக்கம் ஏற்படும். நீண்டநாட்களாக  இருந்த பிரச்சனைகள் தீரும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். கணவன்-மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து பேசுவது நல்லது. எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம். திட்டமிட்டு செயல்படுவது நல்லது.

தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி விறுவிறுப்படையும். வசூலாக வேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பான பிரச்சனைகள் தீரும். 

உத்தியோகம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுகமான எதிர்ப்புகள் விலகும்.

பெண்களுக்கு எந்த ஒரு காரியத்தை யும் செய்து முடிக்க கூடுதல்நேரம் உழைக்க வேண்டி இருக்கும். பணவரத்து எதிர் பார்த்தபடி இருக்கும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

மாணவர்களுக்கு  கல்விக்கு தேவையான புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்குவது பற்றிய கவலை நீங்கும். படிப்பில் ஆர்வம் உண்டாகும். 

பரிகாரம்: ஸ்ரீ சாஸ்தா வழிபாடு செய்து வர காரியங்களில் இருந்த வந்த தடைகள் தீரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்

*******************************************************************************************

மகரம்:

மற்றவர்கள் மேல் இரக்க குணமுடைய மகர ராசியினரே இந்த காலகட்டத்தில் எதிலும் தன்னம்பிக்கையுடன் ஈடுபட்டு காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். புதிய தொடர்புகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். முக்கிய நபர்களின் அறிமுகமும் நட்பும் கிடைக்க பெறுவீர்கள். எதிர்பார்த்தபடி எல்லாம் நடந்தாலும் மற்றவர்கள்  தவறாக புரிந்து கொள்ள நேரலாம் கவனம் தேவை.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். கணவன்-மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து பேசுவது நல்லது. எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம். திட்டமிட்டு செயல்படுவது நல்லது. உறவினர்களுடன் தேவையற்ற வாக்குவாதம் உண்டாகலாம். வாகனங்களால் செலவும் ஏற்படும். நண்பர்களிடம் இருந்து பிரிவு உடல்சோர்வு உண்டாகலாம். 

தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். பார்ட்னர்கள் ஒத்துழைப்புடன் வியாபாரத்தை விரிவாக்கம் செய்ய முற்படுவீர்கள். ஏற்றுமதி சம்பந்தமான துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

உத்தியோகம் தொடர்பான பயணங்கள்  செல்ல நேரலாம். உத்தியோகஸ்தர்கள் புத்தி சாதூரியத்தால் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பார்கள்.

பெண்களுக்கு எந்த ஒரு காரியத்தை யும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும்.

மாணவர்களுக்கு  கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நன்மை தரும். கவனமாக அடுத்தவர்களிடம் பழகுவது நல்லது.

பரிகாரம்: ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை மனதால் துதித்து வழிபட எல்லாப் பிரச்சினைகளும் தீரும்

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி

*************************************************************************************

கும்பம்:

உறவினர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும்  கும்ப ராசியினரே இந்த வாரம் வாக்கு வன்மையால் ஆதாயம் உண்டாகும். தைரியம் அதிகரிக்கும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். காரிய வெற்றி ஏற்படும். பணவரத்து கூடும். எதிர்பாலினத்தாருடன் பழகும்போது கவனம் தேவை. எதிர்ப்புகள் குறையும்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்த்து சாதாரணமாக பேசுவது நல்லது. வாழ்க்கை துணையுடன் இருந்த மனஸ்தாபங்கள்  வார மத்தியில் விலகும். நண்பர்கள், உறவினர்கள் வருகை இருக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள்  சாதகமாக நடந்து முடியும். வியாபார போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். தொழில் விரிவாக்கத்திற்கு தேவையான பண உதவிகள் கிடைக்கும். 

உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளின் உதவிகள் கிடைக்கும்.

பெண்களுக்கு எந்த ஒரு காரியத்தையும் திறம்பட செய்து முடிப்பீர்கள். தொலை தூர தகவல்கள் நல்ல தகவலாக வரும். பயணம் செல்ல நேரலாம்.

மாணவர்களுக்கு  கல்வியில் இருந்த  மெத்தன போக்கு மாறும். புத்தகம் நோட்டுகளை இரவல் கொடுக்கும் போது கவனம் தேவை.

பரிகாரம்: திருவருட்பா படியுங்கள். ஏழை பிராமணருக்கு உதவுங்கள். குடும்பத்தில் இருக்கும் சிக்கல்கள் தீரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன்

*************************************************************************************

மீனம்:

கற்ற வித்தையை சரியாக பயன்படுத்த துடிக்கும் மீன ராசியினரே  இந்த வாரம் எண்ணிய காரியம் ஈடேறும். காரிய அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத சந்திப்புகள் ஏற்படலாம். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும்.  தன்னம்பிக்கை உண்டாகும். எப்படிப்பட்ட சிக்கல்களை யும் தீர்க்கும் வல்லமை ஏற்படும். அடுத்தவருக்கு உதவி செய்து அதன் மூலம் மதிப்பு உயரும். அவசரப்படாமல் எதையும் செய்வது நல்லது.

குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் தாமதப் படும். வார இறுதியில் வாழ்க்கை துணைக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடை யில் அன்பு அதிகரிக்கும். சிற்றின்ப செலவுகள் கூடும். அக்கம், பக்கத்தினரி டம் கவனமாக பேசுவதும் வாக்கு வாதத்தை தவிர்ப்பதும் நல்லது.

தொழில் வியாபாரத்தில் இருந்த மெத்தன போக்கு நீங்கி வேகம் பிடிக்கும். தொழில் விஷயமாக வெளியூர் செல்ல நேரலாம். எதிர்பார்த்த ஆர்டர் கிடைக்க இருந்து வந்த தாமதம் நீங்கும். 

உத்தியோகஸ் தர்களுக்கு வேலையில் நாட்டம் உண்டாகும்.  ஆனால் வேலையில் கவனமாக இருப்பது நல்லது.

பெண்களுக்கு எந்த ஒரு செயலை செய்யும் முன்பும் அதில் இருக்கும் நல்லது கெட்டதை ஆராய்ந்து பார்த்த பின் அதில் ஈடுபடுவது நல்லது. பணவரத்து திருப்தி தரும்.

மாணவர்களுக்கு  கல்வியில் எதிர்பார்த்த  வெற்றி கிடைக்கும். ஆர்வமுடன் பாடங்களை படிப்பீர்கள்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை தியானம் செய்து வழிபட நன்மைகள் வாழ்வில் ஏற்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்

*************************************************************************************

Continue Reading

வார பலன்

உங்கள் ராசிக்கான இந்த வார பலன்கள்! (பிப்ரவரி 03 முதல் 09 வரை)

weekly prediction, வாரபலன்

வார பலன்

மேஷம்:

காரியத்தில் கண்ணும் கருத்துமாக இருக்கும் மேஷ ராசி அன்பர்களே, இந்த வாரம் உங்கள் பேச்சிற்கும் அடையாளம் கிடைக்கும். சிறிய சிறிய செலவுகள் வந்து பயமுறுத்தினாலும் அதை சமாளித்து விடுவீர்கள்.  தைரியமாக எதையும் எதிர் கொள்வீர்கள்.

குடும்ப உறவினர்களால் வீண் அலைச்சல் உண்டாகலாம் கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். மன வலிமை அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும்

தொழில் செய்பவர்கள் லாபகரமான முதலீடுகளில் யாரையும் நம்பவேண்டாம். உங்கள் மீது யார் மிகுந்த அன்பு வைத்திருக்கிறார்களோ அவர்களை நம்பவும். நல்ல நண்பர்களின் மூலம் பல நன்மைகளைப் பெறுவீர்கள்.

உத்யோகஸ்தர்களுக்கு வாகனம், இயந்திரங்கள் பயன்படுத்தும்போதும் கவனம் தேவை. வேலை செய்யும் இடத்தினில் நல்ல மதிப்பு கிடைக்கும். உங்களுக்கு பணி இட மாறுதல், பணி உயர்வு கிடைக்கும். பணம், நகை சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை. . 

பெண்களுக்கு பிள்ளைகள் படிப்பில் கவனம் தேவை. பிள்ளைகளுடன் தேவையற்ற வீண் வாதங்களில் ஈடுபடாதீர்கள். உடல்நிலையில் சீரான நிலை இருந்தாலும் கவனம் தேவை. கணவன் மனைவி உறவில் மிகுந்த எச்சரிக்கை தேவை

மாணவ மணிகள் படிப்பில் சாதனைகள் புரியலாம், ஆனால் சோம்பல் கூடவே கூடாது. எதிர்காலத்திற்கு தேவையான முதலீடுகளை வீட்டிலுள்ளவர்களிடம் ஆலோசித்து செய்யவும்

பரிகாரம்: சிவனை வணங்கி வருவது மன அமைதியை தரும். கடன் தொல்லை குறையும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், சனி

******************************************************************************

ரிஷபம்:

எளிதில் எந்த காரியத்திலும் திருப்தியடையாத ரிஷப ராசி அன்பர்களே, இந்த வாரம் முயற்சி செய்த அளவுக்கு வெற்றி, ஆனால் நினைத்த இடத்திற்கு வரத்தடைகள் என அனைத்தும் இனி மாறும். முயற்சிகளை இருமடங்காக்குங்கள், வெற்றிகள் உங்களைத் தேடி வரும் காலமிது. உங்கள் பொன்னான நேரத்தை அடுத்தவருக்காக வீணாக்காதீர்கள். அடுத்தவரை பற்றி பேசாவிட்டாலும் நீங்கள் கூறியதாக சிலர் பற்ற வைக்க கூடும்.

குடும்பம் பற்றிய கவலைகள் ஏற்பட்டாலும் அவை நீங்குவதுடன் உடல் ஆரோக்கியமும் அடையும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. மனதில் பக்தி உண்டாகும்.

தொழில் செய்யும் இடத்தில் தர்க்கம் கூடாது. மேலதிகாரிகள் பளு கொடுக்கலாம். எதையும் செய்யும் திறமை உங்களிடம் இருப்பதை உணருங்கள். பாராட்டுகளும், பரிசுகளும் குவியும்.

உத்யோகஸ்தர்களுக்கு வேலை செய்யும் இடத்தினில் மேலதிகாரிளுடன் வாக்குவாதம் ஏற்படலாம். உங்களுக்கு கீழ் பணிபுரிபவர்களிடம் மென்மையை கடைபிடியுங்கள். நல்ல பெயர் கிடைக்கும். பணி மாற்றம் கிடைக்கும். புதிய இடத்தில் பணிச்சுமை ஏற்படலாம். புன்முறுவலுடன் ஏற்றுக் கொண்டு பணியினை செவ்வனே செய்யுங்கள்

பெண்களுக்கு குழந்தைகள் நலன் சிறக்கும். பிள்ளைகள் நன்றாக படிப்பர். அவ்வப்போது நோய்கள் வந்து மருத்துவம் பார்த்து சரியாகும். கணவன்மனைவியிடையே கருத்து மோதல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. பேச்சிலும் செயலிலும் கவனம் தேவை

மாணவமணிகள் மிகுந்த எச்சரிகையுடன் படிக்க வேண்டும். படிப்பில் மந்த நிலை ஏற்படலாம். தங்களது முழு திறனையும் பயன்படுத்தினால் வெற்றி நிச்சயம்

பரிகாரம்: வில்வ இலையைப் பறித்து சிவனுக்கு அர்ச்சனைக்குக் கொடுக்கவும்

அதிர்ஷ்ட கிழமைகள்: சனி, திங்கள்.

******************************************************************************

மிதுனம்:

மற்றவர்களிடத்தில் உள்ள குறையை பெரிது படுத்தாத மிதுன ராசி அன்பர்களே, இந்த வாரம் எந்த இடத்திற்கு சென்றாலும் ஏதாவது ஒரு தடங்கல் வந்து கொண்டே இருந்த நிலைமை மாறும். சொன்னால் சொன்ன நேரத்தில் உங்களால் இனி செல்ல முடியும்.

குடும்பத்தில் நல்ல நல்ல விஷயங்கள், விஷேசங்கள் நடக்கும். உங்கள் தைரியத்திற்கு இறைவனை வேண்டுங்கள். பிள்ளைகளின் மேல் கவனம் வைக்க வேண்டும். முன்னோர்களை அமாவாசை தோறும் வழிபடவும்.

தொழில் செய்பவர்கள் புதிய முதலீடுகள் செய்யும் போது கவனம் தேவை. அனுபவமிக்கவர்களுடன் கலந்து ஆலோசித்து முதலீடு செய்வது நலம். உங்கள் முயற்சி வீண் போகாது.

உத்யோகஸ்தர்களுக்கு உங்களுக்கு பணியிடத்தினில் அங்கீகாரம் கிடைக்கும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படலாம். . 

மாணவர்களுக்கு படிப்பில் கவனம் தேவை. எச்சரிக்கையுடன் நேரத்தை வீணாக்காமல் படிக்கவும். வெற்றி நிச்சயம். குறுக்கு வழிகளை நாடக்கூடாது. அவமானம் ஏற்படலாம்

பெண்களுக்கு உடல்நிலையில் கவனம் தேவை. மருத்துவத்திற்கு என சேமிக்க பழகுங்கள். திடீர் செலவுகள் வந்து கடுப்பேற்றலாம். கவனம். வாழ்க்கைத்துணையுடன் அமைதியை கடைபிடியுங்கள்

பரிகாரம்: தினம்தோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று வலம் வருவது.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி

******************************************************************************

கடகம்:

எளிதில் கோபப்படாத கடக ராசி அன்பர்களே, இந்த வாரம் எதிர்பார்த்திருந்த தனலாபம், தேக ஆரோக்கியத்தில் நன்மை, தாயார் தாய் வழி உறவினர்களுடன் இருந்த சுமூக நிலைமை என அனைத்து நல்ல பலன்களும் அப்படியே நடக்கும்.

குடும்பத்தில் அமைதி எற்படும். கணவர், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். பிள்ளைகளிடம் அன்பு அதிகரிக்கும். அவர்களது நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

தொழில் செய்பவர்கள் லாபகரமான தொழில்களில் முதலீடு செய்யுங்கள். எதிர்காலத்திற்கு சேமித்து வைக்கும் நேரமிது. வீண் ஆடம்பர செலவுகள், தேவையற்ற வீண் பேச்சுகள் ஆகியவற்றை குறையுங்கள். 

உத்யோகஸ்தர்களுக்கு வேலை செய்யும் இடத்தினில் நல்ல பெயர் கிடைக்கும். சிலருக்கு உத்தியோக உயர்வு கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு பொன்னான காலமிது

மாணவர்கள் கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிறிது முயற்சி தேவை

பெண்களுக்கு வீடு, மனை வாகனம் வாங்கும் யோகம் அமையும். தாயார், தாய்வழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் ஏற்பட்டு மறையும். முன்னோர்கள் வழிபாடு மிகவும் முக்கியமானது என்பதை உணர்ந்து அதை செய்ய மறவாதீர்கள்

பரிகாரம்: அம்பாளை தீபம் ஏற்றி வழிபட, வயதான தம்பதிகளிடம் ஆசீர்வாதம் பெற எல்லா காரியங்களிலும் நன்மை உண்டாகும் செய்   தொழில் சிறக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி

******************************************************************************

சிம்மம்:

முன், பின் யோசிக்காமல் பேச்சுகளை பேசி விடும் சிம்ம ராசி அன்பர்களே, இந்த வாரம் வீடு, மனை வாங்க தடை, சுபகாரியம் செய்வதற்கு தடை, நற்செயல்கள் எது செய்வதற்கும் இருந்து வந்த தடைகள் நீங்கும். தாயாருடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும்.

குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.  வாகனம் வாங்கும் அல்லது புதுப்பிக்கும் பணியில் ஈடுபடுவீர்கள். பயணம் மூலம் சாதகமான பலன் கிடைக்கும்.

தொழில் செய்பவர்கள் யாருக்கும் கடன் கொடுக்கும் முன் எச்சரிக்கை தேவை. நன்கு விசாரித்து எதையும் செய்யவும். எங்கும் பயணம் செய்யும் முன் மிகுந்த முன்னேற்பாடுடன் செல்லவும்.

உத்யோகஸ்தர்களுக்கு வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு முக்கியத்துவம் தரப்படும். உங்கள் பேச்சு எடுபடும். முக்கியஸ்தர்களின் பழக்கம் ஏற்படும். பணியிட மாற்றம் ஏற்படலாம். சிலருக்கு வேலையே மாறலாம்

பெண்களுக்கு கணவன் மனையின் உறவில் நல்ல முன்னேற்றம் உண்டு. கொஞ்சம் கோபத்தை குறைத்து கொள்வது நல்லது

மாணவர்கள் நண்பர்களிடத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டிய நேரமிது

பரிகாரம்: அருகிலிருக்கும் ஏதேனும் ஒரு கோவிலுக்குச் சந்தணம், குங்குமம் கொடுத்து  வழிபடவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: சனி, செவ்வாய்

******************************************************************************

கன்னி:

எல்லோரையும் அனுசரித்து செல்லும் கன்னி ராசி அன்பர்களே, இந்த வாரம் இனியாவது வாக்கு கொடுப்பதற்கு முன் யோசித்து கொடுக்கவும். தைரியம் பிரகாசிக்கும். எனவே எந்த முடிவையும் சட்டென்று முடிவெடுங்கள். நல்ல விஷயங்களை தள்ளிப் போட வேண்டாம். வீடு, மனை, ஆடை, ஆபரணங்கள் போனற விஷயங்களில் அவசரம் வேண்டாம்.

குடும்ப உறுப்பினர்களுக்கு தேவையான துணி போன்றவைகளை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேற்றுமை குறையும்.

தொழிலில் லாபகரமான முதலீடுகளில் முதலீடு செய்ய தகுதியானவர்களின் ஆலோசனைகளை பெற்று செய்யவும். தூங்கப்போகும் முன் வீண் கற்பனைகள், சந்தேகங்கள் கூடவே கூடாது.

உத்யோகஸ்தர்களுக்கு பணி செய்யும் இடத்தினில் எச்சரிக்கை தேவை. சிலருக்கு பணியின் காரணமாக வெளிநாடு அயலூர் செல்ல வேண்டி வரலாம்

மாணவர்களுக்கு புத்தம் புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். படிப்பில் முன்னேற்றம் இருக்கும். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள்.

பெண்களுக்கு வாழ்க்கைத்துணையுடன் உறவு சிறக்கும். நண்பர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். எதிரிகளை வீழ்த்த வியூகம் அமைப்பீர்கள். வழக்கு வியாஜ்ஜியங்களில் உங்கள் பக்கம் வெற்றி கிடைக்கும். தந்தையாருடன் உறவு பிரகாசிக்கும். பிதுரார்ஜித சொத்துக்கள் உங்களை வந்து அடையும்.

பரிகாரம்: பெருமாள் கோவிலுக்கு சென்று வலம் வரவும்எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி

******************************************************************************

துலாம்:

நேரத்தை வீணடிக்காத துலா ராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களது யோசனைகளை அலுவலகத்திலும், குடும்பத்திலும் மதிப்பார்கள். உங்களது மேலான யோசனைகளை சொல்ல தயாராகுங்கள். சொன்ன வாக்கை காப்பாற்ற முடியாமல் தவித்த நிலையும் மாறப் போகிறது.

குடும்பத்தில் உங்களை பற்றி யாராவது வீண் அவதூறு பேசினால் கண்டுகொள்ளாமல் ஒதுங்கி விடுவது நல்லது. விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ருசியான உணவை உண்பீர்கள்.

தொழில் செய்பவர்கள் உங்கள் வியாபாராத்தை பெருக்கும் காலமிது. மிகவும் லாபகரமான முதலீடுகள் செய்வீர்கள். தூங்கப் போகும் முன் எந்த விதமான யோசனைகளும் வேண்டாம். ஏதேனும் பயணம் செய்ய நேர்ந்தால் சரியாக திட்டமிடவும்.

உத்யோகஸ்தர்களுக்கு நினைத்த இடத்தில் நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் அங்கீகரிக்கப்படுவீர்கள்

பெண்களுக்கு தாயார் தாய்வழி உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் குறையும். வீடு, மனை, வாகனம் யோகம் அமையும். நெடுநாளாக இந்த விஷயத்தில் இருந்த வந்த சுணக்க நிலை மாறும்.

மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. பாடங்களை படிப்பதில் கூடுதல் கவனமும், ஆசிரியர்களிடத்தில் பேசும்போது நிதானமும் தேவை. 

பரிகாரம்: புதன்கிழமைதோறூம் ஸ்ரீஹயக்ரீவ வழிபாடு மேற்கொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்

******************************************************************************

விருச்சிகம்:

திறமையான பேச்சுத்திறனுடைய விருச்சிக ராசி அன்பர்களே, இந்த வாரம் நீங்கள் மிகவும் ஜாக்கிரதையாகவும், பொறுப்பாகவும் செயல்படவேண்டும். தங்கள் உடல்நிலை சிறப்பான முன்னேற்றம் அடையும். இருந்தாலும் அவ்வப்போது சிற்சில அசௌகரியங்கள் வந்து போகலாம் 

குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே தேவையில்லாத ஒரு விஷயத்தால் கருத்து வேற்றுமை உண்டாகலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. பிள்ளைகளால் திடீர் செலவு உண்டாகலாம்

தொழில் செய்பவர்கள் முதலீடுகள் செய்யும்போது மனைவியின் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். தூங்கப் போகும் போது தேவையற்ற வீண் குழப்பங்களை களையுங்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலையில் கவனமாக இருப்பது நல்லது. சக ஊழியர்களிடம் பேசும் போதும் கவனமுடன் பேசவும். தேவையில்லாதவற்றை பேச வேண்டாம்.

பெண்களுக்கு நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் மிகுந்த கவனம் தேவை. வாழ்க்கைத்துணைக்கு சந்தேகம் ஏற்படும்படி நடந்து கொள்வதை தவிருங்கள். தந்தையாருடன் தர்க்கம் கூடவே கூடாது. நண்பர்களின் மீது கோபம் கொள்வதையும் தவிர்க்கவும்

மாணவர்களுக்கு படிப்பில் மிகுந்த கவனம் தேவை. மிகுந்த நிதானமாக எந்த காரியத்தையும் செய்ய வேண்டும். வார்த்தைகளில் நிதானம் தேவை. தேவை இல்லாத இடங்களில் கருத்து கூற முயல வேண்டாம்

பரிகாரம்: சிவனை வழிபட்டால் பாவம் நீங்கி பிரகாசமான எதிர்காலம் அமையும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய்

******************************************************************************

தனுசு:

உள்ளது உள்ளபடி பேசும் பழக்கமுடைய தனுசு ராசி அன்பர்களே, இந்த வாரம் தூக்கத்திற்கு ஆசைப்படாமல் உழைத்தீர்களென்றால் வெற்றி நிச்சயம். உங்கள் வாக்கு வன்மை கூடும். உங்கள் பேச்சிற்கு மதிப்பு கிடைக்கும்.

குடும்பத்தில் திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். விருந்தினர்கள் வருகையால் செலவு கூடும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வது நல்லது.

தொழில் செய்பவர்கள் லாபகரமான முதலீடுகள் செய்ய தயங்க வேண்டாம். எந்த முதலீடுகளையுமே குறுகிய காலம் செய்யாமல் நீண்ட காலமாக செய்யுங்கள். தாய் தந்தையரை வணங்கி எந்த காரியத்தையும் ஆரம்பித்தால் வெற்றியே.

உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மேலிடம் கொடுக்கும் அனைத்து வேலைகளையும் திறமையாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள்.

பெண்களுக்கு வாழ்க்கைத்துணையுடன் தூரதேச பிரயாணங்கள் செய்யும் சூழ்நிலைகள் வரலாம். நண்பர்கள், உறவினர்களிடம் கவனம் தேவை. நல்லவர்கள் யார் கெட்டவர்கள் யார் என்றே தெரியாமல் நீங்கள் பழக வேண்டி வரலாம்

மாணவர்களுக்கு படிப்பில் கவனம் தேவை. சின்ன சின்ன இடையூறுகளை களைந்தால் உங்கள் சாதனைகளை பார்க்கலாம்

பரிகாரம்: முடிந்தவரை பெருமாள் ஆலயத்தை வலம் வந்தால் நல்லது.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி

******************************************************************************

மகரம்:

தித்திப்பு சுவையை அதிகம் விரும்பக் கூடிய மகர ராசி அன்பர்களே, இந்த வாரம் உங்கள் முரட்டுதனத்தை விட்டுவிட்டு சற்று இறங்கி வாருங்கள். உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். வாகனம், இயந்திரங்கள், நீர்நிலைகளில் கவனம் தேவை. சோம்பல் கூடவே கூடாது.

குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வதன்மூலம் அமைதி ஏற்படும். விருந்தினர்கள் வருகை இருக்கும். உறவினர்கள், நண்பர்களிடம் கோபத்தை காண்பிக்காமல் பேசுவது நல்லது

தொழில் செய்பவர்களுக்கு நண்பர்கள் உதவிகள் செய்வர். லாபகரமான முதலீடுகள் செய்வீர்கள். சிலர் வெளிநாடு பயணங்கள் செல்வீர்கள்.

உத்யோகஸ்தர்களுக்கு வேலை செய்யும் இடத்தினில் நல்ல பெயர் கிடைக்கும். சிலருக்கு அவார்டுகள் கிடைக்கலாம்

பெண்களுக்கு வாழ்க்கைத்துணையுடன் உரசல்கள் எழலாம். விட்டு கொடுத்து, அனுசரித்து போங்கள். வாகனங்களை கையாளும்போது கவனம் தேவை. வேகம் கூடவே கூடாது. தந்தையாருடன் உறவு பிரகாசிக்கும்

மாணவர்களுக்கு படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனம் தேவை. மற்றவருக்கு சொல்லி சொல்லி கொடுப்பதை விடுத்து நீங்கள் நன்று படியுங்கள்

பரிகாரம்: மாரியம்மனை ஞாயிற்றுக் கிழமைகளில் தீபம் ஏற்றி வழிபட எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். கடன் பிரச்சனை நீங்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, ஞாயிறு

******************************************************************************

கும்பம்:

அதிக சுத்தத்தை விரும்பக் கூடிய கும்ப ராசி அன்பர்களே, இந்த வாரம் தந்தையாருடன் நல்ல இணக்கமான சூழ்நிலை நிலவும். மிகுந்த பொருட்செலவில் சுபவிரயங்கள், எடுத்த காரியங்களில் தடை, எதுவுமே நேர்மாறாக இருப்பது என கடந்த காலங்களை மிகுந்த சிரமத்துடன் கழித்தீர்களல்லவா, இனி வரும்காலம் மிகவும் நல்லகாலம். உங்கள் பேச்சை நீங்களே கேட்காமல் இருந்து வந்த நிலைமை மாறும்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்த்து சாதாரணமாக பேசுவது நல்லது. வாழ்க்கை துணையுடன் இருந்த மனஸ்தாபங்கள்  விலகும். நண்பர்கள், உறவினர்கள் வருகை இருக்கும்.

தொழில் செய்யும் இடத்தில் இடமாற்றம், பணி பளு வரலாம். எதிர்கொள்ள தயாராகுங்கள். மிகுந்த சாமர்த்தியசாலியான நீங்கள் அனைத்தையும் தவிடுபொடியாக்குவீர்கள்.

உத்யோகஸ்தர்களுக்கு வேலை செய்யும் இடங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். பண விஷயங்களில் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யவும். தேவையற்ற வீண் குழப்பங்கள், கற்பனைகள் வேண்டாம்

பெண்கள் தேவையற்ற வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். யாரைப் பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டாம். தந்தையார் உடல்நிலை முன்னேற்றம் ஏற்படும். தந்தையுடன் கருத்து பரிமாற்றம் செய்யும் போது கவனம் தேவை

மாணாவர்களுக்கு படிப்பில் கவனம் தேவை. மிகவும் எச்சரிக்கையுடன் படித்தால் சாதனைகள் புரிய வாய்ப்புண்டு்

பரிகாரம்: அறுபடை வீடு முருகனை தரிசித்து தீபம் ஏற்றி வழிபட இழுபறி யான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். வாழ்க்கை  வளம் பெறும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்

******************************************************************************

மீனம்:

அலைச்சல் அதிகமாக இருந்தாலும் புத்துணர்வுடன் இருக்கக் கூடிய மீன ராசி அன்பர்களே, இந்த வாரம் தடைபட்டிருந்த திருமணம், தடை பட்டிருந்த கல்வி, என தடையாக இருந்த அனைத்து காரியங்களும் தடைகள் விலகி ஒன்றன் பின் ஒன்றாக சிறப்பாக நடக்கும்.

குடும்பத்தில் நடைபெறும் சில விஷயங்கள் உங்கள் கோபத்தை தூண்டலாம். எனவே வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் மிகவும் கவனமாக பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும்.

தொழில் செய்பவர்கள் எங்கு முதலீடு செய்வது என்பதனை தகுந்த ஆலோசகரிடம் ஆலோசனை பெற்று செய்யுங்கள். நீங்களாகவே எதிலும் முயற்சி செய்து பார்த்தல் கூடாது. 

உத்யோகஸ்தர்களுக்கு வேலைசார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு வெளிநாட்டு பயணங்கள் கிடைக்க கூடும். வேலை இடமாற்றம், பதவிஉயர்வு ஏற்படும். சம்பள உயர்வும் கிடைக்கும்

பெண்கள் சிறிய நோய் என்றாலும் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. மருத்துவம் சார்ந்த செலவுகள் காத்திருக்கின்றன. கவனம் தேவை. கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். இருந்தாலும் விட்டு கொடுத்து போவது நல்லது. திருமணத்தடை நீங்கி திருமணம் இனிதே நடைபெறும்

மாணவர்கள் விளையாட்டில் சிறந்து விளங்குவீர்கள். புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

பரிகாரம்: அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று வியாழக்கிழமைதோறும் வலம் வரவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், சனி

******************************************************************************

 

Continue Reading




தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam
தமிழ் பஞ்சாங்கம்24 hours ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம்! (22/02/2020)

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தமிழ் பஞ்சாங்கம்1 day ago

உங்கள் ராசிக்கான இன்றைய ராசிபலன் (22/02/2020)

வீடியோ செய்திகள்1 day ago

திருமண வரவேற்பில் பங்கேற்ற அஜீத்குமாரின் வைரல் வீடியோ

வீடியோ செய்திகள்1 day ago

இந்தி, சமஸ்கிருதத்தை பின்னுக்கு தள்ளி தமிழுக்கு முதலிடம் | Tamil articles in Wikipedia

வேலை வாய்ப்பு1 day ago

மதுரை கரூவூலத் துறையில் வேலை!

வீடியோ செய்திகள்1 day ago

சிஏஏ எவ்வளவு குழப்பத்தை விளைவிக்கிறது தெரியுமா? சீமான் ஆவேசம்!

வீடியோ செய்திகள்1 day ago

நாக்குல ஆபரேஷன் பண்ணதுனாலதான் பேசுறேன்

வீடியோ செய்திகள்1 day ago

அரசு ஆஸ்பத்திரிக்குள் புகுந்த தீவிரவாதிகள் ….! அதிரடி மாக்ட்ரில்

வீடியோ செய்திகள்1 day ago

குத்துச் சண்டை வீரராக நடிகர் ஆர்யா…கடும் உடற்பயிற்சியில் ஈடுபடும் வைரல் வீடியோ

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam
தமிழ் பஞ்சாங்கம்2 days ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம்! (21/02/2020)

வேலை வாய்ப்பு3 months ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா7 months ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா6 months ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு6 months ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா7 months ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

வேலை வாய்ப்பு6 months ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலை வாய்ப்பு6 months ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு7 months ago

கனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி!

சினிமா செய்திகள்6 months ago

நடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு!

சினிமா செய்திகள்7 months ago

நீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் தர்ஷன் காதலி!

வீடியோ செய்திகள்1 day ago

திருமண வரவேற்பில் பங்கேற்ற அஜீத்குமாரின் வைரல் வீடியோ

வீடியோ செய்திகள்1 day ago

இந்தி, சமஸ்கிருதத்தை பின்னுக்கு தள்ளி தமிழுக்கு முதலிடம் | Tamil articles in Wikipedia

வீடியோ செய்திகள்1 day ago

சிஏஏ எவ்வளவு குழப்பத்தை விளைவிக்கிறது தெரியுமா? சீமான் ஆவேசம்!

வீடியோ செய்திகள்1 day ago

நாக்குல ஆபரேஷன் பண்ணதுனாலதான் பேசுறேன்

வீடியோ செய்திகள்1 day ago

அரசு ஆஸ்பத்திரிக்குள் புகுந்த தீவிரவாதிகள் ….! அதிரடி மாக்ட்ரில்

வீடியோ செய்திகள்1 day ago

குத்துச் சண்டை வீரராக நடிகர் ஆர்யா…கடும் உடற்பயிற்சியில் ஈடுபடும் வைரல் வீடியோ

வீடியோ செய்திகள்2 days ago

நடுவானில் நேருக்கு நேர் மோதிக் கொண்ட இரு விமானங்கள்

வீடியோ செய்திகள்2 days ago

அவிநாசியில் கோர விபத்து நிகழ்ந்தது எப்படி?

வீடியோ செய்திகள்2 days ago

பொதுத்தேர்வில் காப்பி அடிப்பது எப்படி.? ஐடியா கொடுத்த பள்ளி முதல்வர்

வீடியோ செய்திகள்2 days ago

டெல்லி கண்காட்சியில் சிற்றுண்டி சாப்பிட்டு, வாத்தியம் இசைத்து ரசித்த பிரதமர் மோடி!

Trending