Connect with us

வார பலன்

உங்கள் ராசிக்கான இந்த வாரபலன்கள் (செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 4 வரை)

Published

on

weekly prediction, வாரபலன், weekly horoscope

மேஷம்:

மற்றவர்களுக்கு முன் உதாரணமாக செயல்படும் மேஷ ராசி அன்பர்களே!. இந்த வாரம் ஆக்கப்பூர்வமான யோசனைகள்  தோன்றினாலும் அதை செயல்படுத்துவதில் தாமதம் உண்டாகும். பேச்சை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது.  மற்றவர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது.  

தொழில் வியாபாரம் மந்தமாக காணப்பட்டாலும் பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம்  காட்டுவீர்கள். ஆர்டர் தொடர்பான காரியங்களில் தாமதம் இருக்கும். 

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வேலைப்பளு இருக்கும். சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.

குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் வருகை இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து  செல்வது நல்லது.  பிள்ளைகளின் முன்னேற்றத்தில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.

பெண்களுக்கு திடீர் செலவு உண்டாகலாம். காரியங்களில் தடை தாமதம் ஏற்படலாம் கவனம் தேவை.

மாணவர்களுக்கு அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் கவனம் தேவை.  பாடங்களை படிப்பதில் தீவிரம் காட்டுவீர்கள்.

பரிகாரம்: ஸ்ரீநரஸிம்மரை வணங்கி வர முன்ஜென்ம பாவம் நீங்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி

ரிஷபம்:

தன்நம்பிக்கையுடனும்,  உறுதியுடணும் வாழ ஆசைப்படும் ரிஷப ராசி அன்பர்களே!. இந்த வாரம் எந்த காரியத்தையும் செய்து முடிப்பதில்  தாமதம் ஏற்படும். பகைவர்களால் ஏற்படும் சிறு தொல்லைகளை சமாளிக்க வேண்டி இருக்கும்.  புதிய நண்பர்களுடன் பழகும்போது கவனம் தேவை.

தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும். 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும்.  அலுவலக பணிகள் மூலம் டென்ஷன்  உண்டாகும். கவனமாக பேசுவது நல்லது.

குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கும். குழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டங்களை செயல்படுத்துவீர்கள். புதிதாக வீடு – மனை வாங்குவதற்கான வேலைகளைத் தொடங்குவீர்கள்.

பெண்களுக்கு மற்றவர்களின் பொறுப்புகளை ஏற்பதை தவிர்ப்பது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகலாம். 

மாணவர்களுக்கு கல்வியை பற்றி டென்ஷன் ஏற்பட்டு நீங்கும். பாடங்களை ஒருமுறைக்கு இருமுறை படித்து புரிந்து கொள்வது நல்லது.

பரிகாரம்:  முருகனை வணங்கி வர மனோதைரியம் கூடும். பணகஷ்டம் குறையும். குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும். 

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி

மிதுனம்

கண்ணியத்துடன் நடந்து கொள்ளும் மிதுன ராசி அன்பர்களே! இந்த வாரம் தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். சகோதரர்கள் மூலம்  நன்மை உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி  இருக்கும். வாகனங்களை  ஓட்டி செல்லும் போது கவனம் தேவை.

தொழில், வியாபாரம் தொடர்பான விவகாரங்களில் தாமதம் ஏற்படலாம். புதிய ஆர்டர்கள் கிடைப்பதற்கு அலைய வேண்டி இருக்கும். 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும்.

குடும்பத்தில் இருந்து வந்த மனம் நோகும்படியான சூழ்நிலைகள் மாறும். ஆனாலும் அனைத்து விஷயங்களிலும் நீங்கள் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே  எதிர்பாராத மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் பற்றிய கவலை உண்டாகும். நிதானமாக செய்யும் செயல்கள் வெற்றியை தரும்.     

பெண்களுக்கு எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை.

மாணவர்களுக்கு மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது முன்னேற்றத்திற்கு உதவும்.

பரிகாரம்: ஐயப்பனை வணங்கி வர எல்லா பிரச்சனைகளிலும் நல்ல தீர்வு கிடைக்கும். கஷ்டங்கள் நீங்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி

கடகம்:

மற்றவர்கள் கஷ்டத்தை தாங்கிக் கொள்ள முடியாத கடக ராசி அன்பர்களே! இந்த வாரம் கிரக சூழ்நிலை உங்களுக்கு நல்ல பலனை அள்ளித்தரும் நிலையில் இருக்கிறது. நீண்ட நாட்களாக இருந்து வந்த உடல் உபாதை மறையும். எல்லாவற்றிலும் இருந்து வந்த மனகவலை நீங்கும். வாகனத்தில் செல்லும் போது எச்சரிக்கை தேவை. தாயின் உடல்நிலையில் கவனம் அவசியம்.  திட்டமிட்டபடி காரியங்களை செய்ய முடியாமல் தடங்கல்கள் ஏற்படலாம். 

தொழில் வியாபாரத்தில் பணவரத்து இருக்கும். பாக்கிகள் வசூலாகும்.  எந்த ஒரு வேலையை செய்வதாய் இருந்தாலும் தகுந்த முன்னேற்பாடுகள் தேவை. 

உத்தியோகத்தில்  இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உழைப்புக்கு ஏற்ற பலன் தாமதமாக கிடைக்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கிடையே சுமூக உறவு இருக்க விட்டு கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகள் கல்வியில் அக்கறை காட்டுவீர்கள்.

பெண்களுக்கு மனத்துணிவு அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி  திருப்திகரமாக இருக்கும். காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும்.

மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் முழுமூச்சுடன் ஈடுபடுவீர்கள். உங்களது பொருட்களின் மீது கூடுதல் கவனம் இருப்பது நல்லது.

பரிகாரம்: நவகிரகத்தில் சூரியனுக்கு கோதுமையை கட்டி நெய் தீபம் ஏற்றி வழிபட செல்வம் சேரும். கல்வியில் வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன்

சிம்மம்:

குறைகளை பெரிதுபடுத்தாத சிம்ம ராசி அன்பர்களே! இந்த வாரம் வீணாக மனதை உறுத்திக் கொண்டிருந்த கவலை நீங்கும். எவ்வளவு திறமையுடன்  செயல்பட்டாலும் காரிய தடங்கல் ஏற்படும். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனம் தேவை. பயணத்தினால் வீண் செலவும், அலைச்சலும் உண்டாகும். 

தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இழுபறியான நிலை காணப்படும். புதிய ஆர்டர்கள் தொடர்பாக அலையும்படி இருந்தாலும் சாதகமாக முடியும். பணவரத்து திருப்தி தரும். 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான பணிகளில் முழுமூச்சுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பார்கள். பயணங்களின் போது உடமைகளை கவனமாக பாதுகாப்பாக வைப்பது நல்லது.

குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே  இருந்த மனவருத்தம்  நீங்கும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். 

பெண்களுக்கு காரியங்களில் இருந்த பின்னடைவு நீங்கும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள்.

பரிகாரம்: மஹாலக்ஷ்மிக்கு தேங்காய் தீபம் ஏற்றி வழிபடுவது காரிய தடைகளை போக்கும். நன்மை கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி

கன்னி:

எதிர்காலத்திற்கு தேவையானவற்றை சேர்த்து வைப்பதில் திறமை கொண்ட கன்னி ராசி அன்பர்களே! இந்த வாரம் எல்லாவகையிலும் நல்லதே நடக்கும். அனுகூலமான பலன் கிடைக்கும். பணவரத்து அதிகரிக்கும். எதிர்ப்புகள் விலகும்.  நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். விரும்பிய காரியங்களை செய்து சாதகமான பலன் கிடைக்க பெறுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். 

தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள்  சாதகமாக நடந்து முடியும். வியாபார போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். தொழில் விரிவாக்கத்திற்கு தேவையான பண உதவிகள் கிடைக்கும். 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்க பெறுவார்கள். பணி நிமித்தமாக வெளிநாடு செல்ல வேண்டி வரும்.

குடும்பத்தில் நிம்மதி காணப்படும். விருந்து நிகழ்ச்சியில் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகளின் செயல்களால் பெருமை அடைவீர்கள். 

பெண்களுக்கு  உதவி கேட்டு உங்களை நாடி வருபவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வீர்கள். திடீர் செலவு உண்டாகலாம்.

மாணவர்களுக்கு மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கல்வியில் திருப்தி உண்டாகும். மாணவர்களுக்கு மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கல்வியில் திருப்தி உண்டாகும்.

பரிகாரம்: விநாயகருக்கு நெய் தீபம் ஏற்றி வணங்கி வர கஷ்டங்கள் நீங்கும். ஆரோக்கியம் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன்,சனி

துலாம்:

இருப்பதை வைத்து சந்தோஷபடக்கூடிய துலா ராசி அன்ப்ர்களே! இந்த வாரம் பேச்சின் இனிமையால் காரியம் கைகூடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். 

தொழில் வியாபாரம் திருப்தியாக நடக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. 

உத்தியோகத்தில் இருப்பவர்கள்  அலுவலக வேலையாக அலைய வேண்டி இருக்கும். புதிய பொறுப்புகள் சிலருக்கு கிடைக்கலாம். வெளிநாடு முயற்சிப்பவர்களுக்கு அனுகூலம் கிடைக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையில் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனம் தேவை. அக்கம் பக்கத்தினருடன் சில்லறை சண்டைகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை வரலாம்.

பெண்களுக்கு  அடுத்தவர்களின் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. தெய்வபக்தி அதிகரிக்கும்.

மாணவர்களுக்கு  கல்வி பற்றிய கவலை குறையும். அதிக மதிப்பெண் எடுக்க ஆர்வமாக படிப்பீர்கள்.

பரிகாரம்: அம்பாளுக்கு முல்லை மலர் அர்ப்பணித்து வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். 

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன்,சனி

விருச்சிகம்:

குருபக்தியுடைய விருச்சிக ராசி அன்பர்களே! இந்த வாரம் வீடு – மனை – வாகனம் சம்பந்தமான காரியங்களில் எதிர்பார்த்த பலன்கள் கிட்டும். எதிர்பார்த்தபடி எதுவும் நடக்காமல் இழுபறியாக இருக்கும். மனமகிழும்படியாக எல்லாம் நடந்து முடியும்.

தொழில் வியாபாரம் நன்றாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் வேகம் இருக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சுணக்க நிலை மாறும். பணவரத்து இருக்கும். 

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். உங்களுக்கு நற்பெயர் கிடைப்பதில் எந்த இடையூறும் இருக்காது.

 குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். உங்கள் சொல்படி பிள்ளைகள் நடந்து கொள்வது மனதுக்கு இதமளிக்கும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் உங்களை நாடி வருவார்கள்.

பெண்களுக்கு நிதானமாக பேசுவது நன்மை தரும். பணவரத்து திருப்தி தரும்.  எதிர்பார்த்த தகவல்கள் வரும்.

மாணவர்களுக்கு சக மாணவர்களுடன் பழகும் போது கவனம் தேவை.  பாடங்கள் எளிமையாக தோன்றும்.  

பரிகாரம்: திருப்புகழ் பாராயணம் செய்து வர கந்தன் அருளால் கண்டபிணி நீங்கும். குடும்ப கஷ்டம் தீரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி

தனுசு:

தெளிவான முடிவை எடுப்பதில் திறமை வாய்ந்த தனுசு ராசி அன்பர்களே! இந்த வாரம் வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும். பயணங்கள் மூலம் லாபம் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும் படியான காரியங்கள் நடக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். மனோ தைரியம் அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும்.

தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். தொழில் தொடர்பான விஷயங்கள் அனுகூலமாக நடக்கும். 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து போவது நன்மை தரும். பிள்ளைகளின் நலனில் அக்கறை தேவை.

பெண்களுக்கு வீண் பேச்சை குறைப்பது நல்லது. எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகலாம்.

மாணவர்களுக்கு சகமாணவர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. கல்வியில் அதிக கவனம் தேவை.

பரிகாரம்: மகாலட்சுமியை வணங்க  கடன் பிரச்சனை தீரும். மன நிம்மதி கிடைக்கும். 

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், சனி

மகரம்:

சத்தியம் தவறாத மகர ராசி அன்பர்களே! இந்த வாரம் முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவலாக வரும்.   விருப்பங்கள்  கைகூடும். நண்பர்கள் மத்தியில் மரியாதையும், அந்தஸ்தும் உயரும்.  மற்றவர்களிடம் பேசும்போது கோபத்தை குறைத்து பேசுவது நல்லது. பணவரத்து இருக்கும்.

தொழில் வியாபாரம் முன்னேற்றம் காண புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்க கூடிய சூழ்நிலை காணப்படும். 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பார்கள். புதிய பதவி அல்லது பொறுப்புகள் கிடைக்கும்.

குடும்பத்தில் சகஜ நிலை காணப்படும். உறவினர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். குடும்பத்தினருடன் ஆன்மிக பயணம் செல்லும் நிலை உருவாகும்.  மற்றவர்கள் ஆலோசனை கேட்டு உங்களை நாடி வருவார்கள். உங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள்.

பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கூடுதல் கவனத்துடன் செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். 

மாணவர்களுக்கு  புத்திசாதூரியம் வெளிப்படும். கல்வியில் இருந்த  தொய்வு நீங்கும்.

பரிகாரம்:  சிவனுக்கு பாலபிஷேகம் செய்து வணங்க கஷ்டங்கள் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். 

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், சனி.

கும்பம்:

எளிதில் கோபப் படக்கூடிய கும்ப ராசி அன்பர்களே! இந்த வாரம் எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். அடுத்தவர்களுக்கு உதவுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். எதிர்பாலினத்தாரால் செலவு  ஏற்படும். கோபத்தால் சில்லறை சண்டைகள் ஏற்படலாம். பணவரத்து கூடும். காரிய அனுகூலம் உண்டாகும்.

தொழில் வியாபாரம் தொடர்பான  விஷயங்கள்  சாதகமாக  நடக்கும். நயமாக பேசுவதன் மூலம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. வேலை பார்க்கும் இடத்தில் பொருள்களை கவனமாக பாதுகாப்பாக வைப்பது நல்லது.

குடும்பத்தில் சந்தோஷமான நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே  இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் மனம் மகிழும் படி தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். விருப்பங்கள் கைகூடும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வது நன்மை தரும்.  

பெண்களுக்கு மனம் மகிழும்படியான காரியங்கள் நடக்கும். ஆன்மிக நாட்டம் ஏற்படும்.

மாணவர்களுக்கு கல்வியில்  முன்னேற்றம் காண்பீர்கள். நண்பர்கள்  மத்தியில் மதிப்பு கூடும்.

பரிகாரம்:  தினமும் முருகனை கந்த சஷ்டி கவசம் சொல்லி வணங்க பிரச்சனைகள் குறையும். காரிய வெற்றி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி.

மீனம் :

சிக்கன நடவடிக்கைகளில் காரியத்தை செயல்படுத்தும் மீன ராசி அன்பர்களே! இந்த வாரம் எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடித்து விடுவீர்கள். சுப செலவுகள் ஏற்படும். வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம்.  திட்டமிடுவதில் பின்னடைவு ஏற்படும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். பெரியோர் நேசம் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும்.

தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும் என்ற தன்னம்பிக்கை ஏற்படும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி வரும். அலுவலக வேலைகள் உடனே முடியாமல் இழுபறியாக இருக்கும். நல்ல பெயர் கிடைக்கப் பெறுவீர்கள்.

குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு திருப்தி தரும். உறவினர்கள் – நண்பர்கள் மூலம் நன்மை நடக்கும்.

பெண்களுக்கு பணவரத்து எதிர்பார்த்த படி இருக்கும். எடுத்த காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.

மாணவர்களுக்கு  கூடுதல் கவனம் செலுத்தி பாடங்களை படிப்பது நல்லது. விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் போது கவனம் தேவை.

பரிகாரம்: அம்மனுக்கு அரளிப்பூ அர்ப்பணித்து அர்ச்சனை செய்து வணங்க எல்லா காரியங்களும் கைகூடும். எதிர்ப்புகள் நீங்கும். 

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்

வார பலன்

உங்கள் ராசிக்கான இந்த வார பலன்கள் (அக்டோபர் 25 முதல் நவம்பர் 1 வரை)

Published

on

weekly prediction, வாரபலன், weekly horoscope

மேஷம்:

சொந்த முயற்சியாலும், மனதுணிவுடனும் செயல்பட்டு வாழ்க்கையில் முன்னேறும் மேஷ ராசி  அன்பர்களே, நீங்கள் தைரியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். இந்த வாரம் சில காரியங்களில் அவசரமாக செயல்படத் தோன்றும். நிதானத்தை கடைபிடிப்பது வெற்றிக்கு வழிவகுக்கும். பேச்சில் கோபம் தெரியாவிட்டாலும் அழுத்தம் இருக்கும். சில சிக்கலான பிரச்சனைகளில் சுமுகமான முடிவை காண முற்படுவீர்கள். மனதடுமாற்றம் ஏற்படலாம். வாகனங்களில்  செல்லும் போது கவனம் தேவை.

தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். பணவரத்து எதிர்பார்த்த அளவு இல்லாவிட்டாலும் தேவை பூர்த்தியாகும். புதிய ஆர்டர்கள்  பற்றி உடனடியாக முடிவு எடுக்க முடியாமல் தடுமாற்றமான நிலை உண்டாகலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலையில் கவனமாக இருப்பது நல்லது. வேறு வேலைக்கு முயற்சி செய்பவர்கள் சிறிது காலம் தள்ளிப் போடுவது சிறந்தது.

குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை தலைதூக்கலாம். எல்லோரையும் அனுசரித்து செல்வது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே  திடீர் கருத்து வேற்றுமை உண்டாகலாம் கவனம் தேவை. பிள்ளைகளிடம் அன்பாக பழகுவது நன்மை தரும். உறவினர் வகையில் மனவருத்தம் ஏற்படலாம். குடும்பத்தில் சுபகாரியங்களுக்கான ஏற்பாடுகள் நிம்மதியைத் தரும்.

பெண்கள் சிக்கலான விஷயங்களை கூட சுமுகமாக முடித்து விடுவீர்கள். மனதடுமாற்றம் இல்லாமல் நிதானமாக செயல்படுவது நன்மைதரும்.  

மாணவர்களுக்கு கல்விக்கு தேவையான புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்குவது பற்றிய கவலை நீங்கும். படிப்பில் ஆர்வம் உண்டாகும். 

பரிகாரம்: முருகனுக்கு பால் பாயாசம் நிவேதனம் செய்து வணங்கி வர பல நாட்களாக இழுபறியான காரியம் வெற்றிகரமாக முடியும். மனகவலை நீங்கும். 

ரிஷபம்:

இனிய சுபாவமும், மென்மையான பேச்சும் உடைய ரிஷப ராசி அன்பர்களே, நீங்கள் கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும் என நினைப்பவர்.  இந்த வாரம் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். ஆனால் அடுத்தவர்களுக்கு உதவி செய்ய போய் வில்லங்கம் ஏற்படலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது. மனதில் ஏதாவது குறை இருக்கும். புதிய நபர்கள் எதிர்பாலினத்தவர் ஆகியோருடன் பேசும் போது கவனமாக பேசி பழகுவது நல்லது. விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டி வரலாம்.

தொழில் வியாபாரம் செய்பவர்கள் பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் வேகம் காண்பிப்பீர்கள். போட்டிகள் விலகும். எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைக்கும்.  

உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீண்ட நாட்களாக இருந்த இழுபறியான காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணி நிமித்தமாக அலைச்சல் இருக்கும்.

குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். குழந்தைகள் மூலம் மனநிம்மதி கிடைக்கும். உறவினர்கள், நண்பர்களிடம் இருந்த மனகசப்பு மாறும்.  குடும்பத்தில் சுப நிகழ்வுகள் இருக்கும். 

பெண்கள் எதைபற்றியாவது நினைத்து கவலைபடுவீர்கள். வாக்குறுதிகள் கொடுக்கும் போது கவனம் தேவை.  விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள்.

மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற திட்டமிட்டு படிக்க முற்படுவீர்கள். சக மாணவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். 

பரிகாரம்: அம்மனை வணங்க எல்லா காரியங்களும் நல்லபடியாக நடக்கும் 

மிதுனம்:

காலம் தாழ்த்தாமல் எதையும் உடனுக்குடன் செய்து முடிக்க வேண்டும் என்ற வேகம் கொண்ட மிதுன ராசி அன்பர்களே, நீங்கள் எடுக்கும் முடிவு மிகவும் ஆராய்ந்து எடுக்கப்பட்டதாக இருக்கும். இந்த வாரம் திடீர் கோபம் ஏற்படலாம். நெருக்கடி நிலை காணப்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தள்ளி போடுவது நன்மை தரும். பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படலாம். ஆனாலும் பணப் புழக்கம் திருப்தியாக இருக்கும். 

தொழில் வியாபாரம் வழக்கம் போல் நடக்கும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து பேசுவது நல்லது. லாபம் குறைவது போல் இருந்தாலும் பணவரத்து திருப்தி தரும். 

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு வீணாகும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. சக பணியாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். 

குடும்பத்தில் இருப்பவர்களிடம் கோபமாக பேசுவதை தவிர்த்து இதமாக பேசுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நன்மை தரும்.  குழந்தைகள் எதிர்கால நலன் பற்றி சிந்திப்பீர்கள். உங்களது உடமைகளை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும்.

பெண்களுக்கு எந்த காரியத்திலும் நெருக்கடியான நிலை உண்டாகும். வீண் அலைச்சல் ஏற்படும். பணவரத்து திருப்தி தரும். 

மாணவர்களுக்கு பாடங்களை படிக்க வேண்டிய கட்டாயம் உண்டாகும். ஆசிரியர் மற்றும் சக மாணவர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. 

பரிகாரம்: பள்ளிகொண்ட பெருமாள் இருக்கும் ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது சிறந்தது.

கடகம்:

அன்பும் பாசமும் கருணையும் ஒருங்கே அமையப் பெற்ற கடக ராசி அன்பர்களே, நீங்கள் மனசாட்சிக்கு பயந்து நடப்பவர்கள். இந்த வாரம் உடல் அசதி ஏற்படலாம். மனதில் ஏதாவது கவலை  இருந்து கொண்டே இருக்கும். திட்டமிட்டு செயலாற்றுவதில் பின்னடைவு ஏற்படலாம். பக்தியில் நாட்டம் அதிகரிக்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் சில்லறை சண்டைகள் உண்டாகலாம். பயணங்களில் தடங்கல் ஏற்படலாம். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் உறுதியாக இருப்பீர்கள்.

தொழில் வியாபாரம் தொடர்பான சிக்கல்கள் தீரும். பணவரத்து திருப்தி தரும். வாடிக்கையாளர்களுக்கு உத்தரவாதங்கள்  தரும்போது கவனமாக இருப்பது நல்லது.  

உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு இருப்பது போல் உணர்வார்கள். மேல் அதிகாரிகள் உங்கள் செயல்களில் குறை காணலாம் கவனமாக இருப்பது நல்லது. சக ஊழியர்களுக்கும் உங்களுக்கும் கருத்து வேறுபாடுகள் வரலாம்.

குடும்பத்தில் சில்லறை சண்டைகள் உண்டாகலாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும்.  பிள்ளைகளின் படிப்பில் அக்கறை காட்டுவது நல்லது. சுபநிகழ்ச்சிகளுக்கு இருந்து வந்த தடைகள் அகலும். 

பெண்களுக்கு காரியங்களில் பின்னடைவு ஏற்படலாம். மற்றவர்களிடம்  சில்லறை சண்டைகள் ஏற்படாமல் இருக்க கவனமாக பேசி பழகுவது நல்லது. 

மாணவர்களுக்கு  கல்வியில் இருந்த  மெத்தன போக்கு மாறும். புத்தகம் நோட்டுகளை இரவல் கொடுக்கும் போது கவனம் தேவை.

பரிகாரம்: அங்காள பரமேஸ்வரியை வேப்பிலை கொடுத்து வணங்க பிரச்சனைகள் சுமுகமாக முடியும். 

சிம்மம்:

மற்றவர்களிடம் இருந்து மாறுபட்டு தனித் தன்மையுடன் செயலாற்றும் குணமுடைய சிம்ம ராசி அன்பர்களே, நீங்கள் எப்போதும் சுறுசுறுப்புடன் பணியாற்றுபவர்கள்.  இந்த வாரம் உடல்நிலை தேறும். செலவு கட்டுக்குள் இருக்கும். காரிய தடைகள் நீங்கும். தொட்டதெல்லாம் துலங்கும். தந்தையாரின்  நலனில் அக்கறை தேவை.  கொடுக்கல் வாங்கலில் கவனமாக செயல்படுவது நல்லது.

தொழில் வியாபாரத்தில்  மெத்தன போக்கு காணப்பட்டாலும் பணவரத்து நன்றாக இருக்கும். சரக்குகளை கவனமாக கையாள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும். 

உத்தியோகம் தொடர்பான இடமாற்றம் உண்டாகலாம். கேட்ட பதவி உயர்வு கிட்டும். வெளிநாடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல முன்னேற்றம் காணப்படும். 

குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே இருந்த பூசல்கள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். உறவினர்களுக்காக விருப்பம் இல்லாத காரியத்தில் தலையிட வேண்டி இருக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் ஏற்படும். 

பெண்களுக்கு  தடைபட்ட காரியங்கள் நடந்து முடியும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பணவரத்து குறையலாம்.

மாணவர்களுக்கு  கல்வியில் நாட்டம் உண்டாகும். போட்டிகள் நீங்கும். சக மாணவர்களுடன்  இருந்த மனகசப்பு மாறும்.

பரிகாரம்: நந்தீஸ்வரரையும், சிவபெருமானையும் வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். 

கன்னி:

எதையும் ஒருமுறை பார்த்தாலே அதை பற்றி கிரகித்துக் கொள்ளும் திறமை உடைய கன்னி ராசி அன்பர்களே, நீங்கள் உழைத்து உயர வேண்டும் என விரும்புபவர்கள். இந்த வாரம், நெருக்கடியான பிரச்சனைகள் நீங்கும்.  பணவரத்து அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.  மற்றவர்கள் மேல் இரக்கம் ஏற்படும். நீண்டநாட்களாக  இருந்த பிரச்சனைகள் தீரும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும்.

தொழில் வியாபாரம் முன்னேற்றமாக நடக்கும். லாபம் அதிகரிக்கும். பல வழிகளிலும் பண வரத்து இருக்கும். பயணங்களும் அவற்றால் நன்மைகளும் உண்டாகும். சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபடுவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு குறைவால் மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் ஏற்படும். எதிர்பார்த்த பணி இடமாற்றம் கிடைக்கும்.

குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் பெருமை சேரும். உறவினர்கள் மத்தியில்  மதிப்பும், மரியாதையும் கூடும். சுபச் செலவுகள் அதிகரிக்கும்.

பெண்கள் திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடித்து மன நிம்மதி அடைவீர்கள். பணவரத்து அதிகரிக்கும். மற்றவர்கள் மேல் இரக்கம் உண்டாகும். 

மாணவர்கள்  கல்வியில் முன்னேற்றம் காண  திட்டமிட்டு படித்து வெற்றி பெறுவீர்கள். மன மகிழ்ச்சி ஏற்படும் சம்பவங்கள் நிகழும்.

பரிகாரம்: ஐயப்பனுக்கு அபிஷேகத்திற்கு நெய் வாங்கிக் கொடுத்து வணங்கி வர சகல தோஷங்களும் நீங்கும். 

துலாம்:

காரியத்தை கச்சிதமாக முடிக்கும் திறமையும், சாதித்தே தீர வேண்டும் என்ற பிடிவாதமும் கொண்ட துலா ராசி அன்பர்களே, நீங்கள் எந்த காரியத்தை கச்சிதமாக முடிக்கும் திறன் கொண்டவர்கள். இந்த வாரம் தடைபட்ட காரியங்கள் தடைநீங்கி நன்றாக நடந்து முடியும். வாக்குவன்மையால் நன்மைகள்  ஏற்படும். தெய்வ சிந்தனை அதிகரிக்கும். பண பிரச்சனை நீங்கும். நண்பர்கள் மூலம்  உதவிகள் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும்.

தொழில் வியாபாரம் எதிர்பார்த்த வளர்ச்சி பெறும். பழைய பாக்கிகள் வசூலாகும். நீண்ட நாட்களாக நடந்து முடியாத காரியம் ஒன்று நடக்கும். 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாக திறமை வெளிப்படும். மேல் அதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். சக ஊழியர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். 

குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே  விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை அதிகரிக்கும். பிள்ளைகள் எதிர்காலத்திற்காக சில பணிகளை மேற்கொள்வீர்கள். நண்பர்களால் இருந்து வந்த மனக்கிலேசங்கள் அகலும்.

பெண்களுக்கு கொடுக்கல் வாங்கலில் இருந்த சிக்கல்கள் தீரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். இழுபறியாக இருந்த காரியம் நன்கு நடந்து முடியும்.

மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். மற்றவர் பாராட்டும் கிடைக்கும்.

பரிகாரம்: கனகதாரா ஸ்தோத்திரம் சொல்லி மகாலட்சுமியை வணங்க கடன் பிரச்சனை தீரும். 

விருச்சிகம்:

நியாயத்தின் பக்கம் நிற்கும் விருச்சிக ராசி அன்பர்களே, நீங்கள் அநியாயத்தை எதிர்க்கும் குணமுடையவர். இந்த வாரம் பேச்சு திறமையால் காரிய வெற்றிகள் உண்டாகும். போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சின்ன விஷயங்களால் மன நிறைவு உண்டாகும். மற்றவர்களால் அமைதியின்மை உண்டாகலாம். அடுத்தவர் பேச்சை கேட்பதை குறைப்பது நல்லது.

தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கி விருத்தியடையும். பொருட்களை வெளியூருக்கு அனுப்பும்போது கவனம் தேவை. 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பார்க்கும் இடத்தில் கவனமுடன் பழகுவது நல்லது. 

குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். கணவன்-மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து பேசுவது நல்லது. எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம். திட்டமிட்டு செயல்படுவது நல்லது. உறவினர்களுடன் தேவையற்ற வாக்குவாதம் உண்டாகலாம். வாகனங்களால் செலவும் ஏற்படும். நண்பர்களிடம் இருந்து பிரிவு உடல்சோர்வு உண்டாகலாம். 

பெண்கள் பேச்சு திறமையால் காரியங்களை எளிதாக செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். சின்ன விஷயங்கள் கூட மன நிறைவு தரும்படி நடக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை நீங்கி முன்னேற்றம் உண்டாகும். போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

பரிகாரம்: முருகனுக்கு பரிகார பூஜை செய்வதும் சனி பகவானுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபடுவதும் கஷ்டங்களை போக்கி மனதில் நிம்மதியை தரும்.

தனுசு:

யாருடைய அதிகாரத்துக்கும் கட்டுப் படாமல் தனித்தன்மையுடன் விளங்கும்  தனுசு ராசி  அன்பர்களே, நீங்கள் நேர்மைக்கு முக்கியத்துவம் அளிப்பவர்கள். இந்த வாரம் எல்லா விதத்திலும் நன்மை உண்டாகும். எதையும் செய்து முடிக்கும் துணிச்சல் அதிகரிக்கும். எதிலும் வெற்றியும் சந்தோஷத்தையும் தரும். பணம் வருவது அதிகரிக்கும். எதிர்ப்புகள் அகலும். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் நன்மை உண்டாகும். தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும். துணிச்சலாக முயற்சிகள் மேற் கொண்டு வியாபாரத்தை விரிவு படுத்துவீர்கள். 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள்.  மேல் அதிகாரிகளால் நன்மை ஏற்படும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகளில் தீர்வு கிடைக்கும்.

குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள்.

பெண்கள் காரியங்களை துணிச்சலாக செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். எதிர்ப்புகள் விலகும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் நடந்து முடியும்.

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற துணிச்சலாக முயற்சிகளை மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக நடக்கும்.

பரிகாரம்: ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி அர்ச்சனை செய்து வணங்க வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் தைரியம் அதிகரிக்கும்.

விருச்சிகம்:

பார்த்தால் கடுமையானவர் போல் தோற்றமளிக்கும் விருச்சிகராசி  அன்பர்களே, நீங்கள் பழகினால் இனிமையானவர். எதிலும் சரியாக செயல்படுபவர். இந்த வாரம் எதையும் யோசித்து செய்வது நன்மை தரும். கோபமாக பேசுவதை தவிர்த்து நிதானமாக பேசி செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். எந்த விஷயத்திலும் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வீண் குற்றச்சாட்டிற்கு ஆளாகலாம். கவனம் தேவை.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசி அனுசரித்து செல்வது நன்மை தரும். எதிர்பார்த்த பணம் தாமதப்படலாம். 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணங்கள் செல்லும்போதும், வாகனங்களில் செல்லும்போதும் கவனம் தேவை. வேலை செய்யும் இடத்தில் மன வருத்தம் ஏற்படும்படியான சூழ்நிலை உருவாகலாம். எச்சரிக்கை தேவை. 

குடும்பத்தில் ஏதாவது ஒரு வகையில் திடீர் சச்சரவுகள் தோன்றலாம். அதற்கு இடம் கொடுக்காமல் நடந்து கொள்வது நன்மை தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொருட்களை கவனமாக பார்த்துக்கொள்வது நல்லது. பணவிஷயத்தில் கூடுமானவரை அடுத்தவரை நம்புவதை தவிர்ப்பது நல்லது.

பெண்கள் கோபத்தை தவிர்த்து நிதானமாக பேசுவது காரிய வெற்றிக்கு உதவும். யோசித்து செய்யும் வேலைகள் சாதகமாக  முடியும்.

மாணவர்கள் திட்டமிட்டு பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். எதிலும் அவசரம் காட்டாமல் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

பரிகாரம்: விநாயக பெருமானை தீபம் ஏற்றி அருகம்புல்லால் அர்ச்சனை செய்து வணங்க எல்லா துன்பங்களும் நீங்கும். 

தனுசு:

தன்னலம் கருதாமல் பிறர் நலத்தை மனதில் கொண்டு செயல்படும் தனுசு ராசி அன்பர்களே, நீங்கள் அனைவரையும் அனுசரித்து செல்லக் கூடியவர். இந்த வாரம் உங்கள் அறிவுத் திறமை கூடும். சில முக்கிய முடிவுகள் என்பதன் மூலம் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். இனிமையான பேச்சின் மூலம் எதிலும் வெற்றி காண்பீர்கள். வீண் குற்றச்சாட்டிற்கு ஆளாக நேரிடலாம். கவனமாக இருப்பது நல்லது. மற்றவர்களின் செய்கையால் கோபம் ஏற்படலாம். நிதானம் தேவை.

தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் தராவிட்டாலும் வருமானத்திற்கு குறைவு இருக்காது. தொழில் விரிவாக்கம் செய்யும் திட்டத்தை தள்ளி போடுவது நல்லது. 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மற்ற விஷயங்களில் தலையிடாமல் இருப்பது வீண் பிரச்சனை வராமல் தடுக்கும்.

குடும்பத்தில் பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் குறையும்.  அதன் மூலம் வருமானம் கிடைக்கும். பிள்ளைகள் ஒற்றுமையுடன் இருப்பார்கள். புத்திசாதூர்யம் அதிகரிக்கும். வெளியூரில் இருந்து வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும். கணவன்-மனைவிக்கிடையே எதையும் மனம் விட்டு பேசி அதன் பிறகு செய்வது நன்மை தரும். குடும்பத்தில் அமைதி உண்டாக கோபத்தை குறைப்பது நல்லது.

பெண்கள் அறிவுபூர்வமாக செயல் பட்டு சில முக்கிய முடிவு எடுப்பதன் மூலம் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்த காரியம் நிறைவேறும். அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது.

மாணவர்களுக்கு எதிர்காலத்தை பற்றிய எண்ணம் உண்டாகும். மேல் படிப்பு பற்றிய சிந்தனையில் ஈடுபடுவீர்கள். சக மாணவர்களின் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி இருப்பது நல்லது.

பரிகாரம்: முருகனை வணங்க எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். கடன் பிரச்சனை தீரும்.

மகரம்:

எதிர்காலத்தை மனதில் கொண்டு செயல்பட்டு வரும் மகர ராசி அன்பர்களே, நீங்கள் காலத்தை  வீணாக்க மாட்டீர்கள். இந்த வாரம் பொருள் சேர்க்கை உண்டாகும். சுப நிகழ்ச்சிகளுக்கு பஞ்சமிருக்காது. விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். இட மாற்றம் ஏற்படும். எடுத்த காரியம் தாமதப்படுகிறதே என்ற கவலை உண்டாகும். இரவில் நீண்ட நேரம் கண் விழிக்க வேண்டி வரலாம் கவனம் தேவை.

குடும்பத்தில் இருப்பவர்களால் இருந்த மனவருத்தம் நீங்கும். வாழ்க்கை துணையின் உடல் நிலையில் கவனம் தேவை. வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதன் மூலம் செலவு கூடும். விருந்தினர் வருகை இருக்கும். புதிய முடிவுகள் எடுப்பதில் தயக்கம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் உண்டாகலாம். பிள்ளைகள் வழியில் செலவு உண்டாகலாம். பண விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.  

தொழில் வியாபாரம் எதிர்பார்த்ததை விட அதிகமான லாபம் தரும். ஆனால் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் எப்போதும் பிசியாக காணப்படுவார்கள். செலவுகள் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கடன் விவகாரங்களில் கொடுக்கல் வாங்கலிலும் எச்சரிக்கை தேவை. பொறுப்புகள் கூடும்.

பெண்கள் பயணங்கள் செல்ல நேரிடலாம். எடுத்த வேலையை செய்து முடிக்க காலதாமதமாகலாம். வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது நல்லது. பொறுப்புகள் அதிகரிக்கும்.

பரிகாரம்: தினம்தோறூம் அருகிலிருக்கும் முருகன் கோவிலுக்குச் சென்று வலம் வருவது நல்லது.

கும்பம்:

நியாயமுள்ளவர்களுக்காகவும் நலிந்தவர்களுக்காகவும் பாடுபடும் குணமுடைய கும்பராசி  அன்பர்களே, இந்த வாரம் பணவரத்து இருக்கும். எடுத்த முடிவை செயல்படுத்தும் முன் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசிப்பது நல்லது. எந்த ஒரு காரியத்திலும் அவசர முடிவு எடுக்க தூண்டும். வீண் வாக்குவாதங்களால் பகையை  வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. 

தொழிலில் வீண் அலைச்சலுக்கு பிறகே எந்த ஒரு காரியமும் நடந்து முடியும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் தங்கள் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் தாமதமாக வந்து சேரும். 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரி சொல்லிய ஒரு வேலையை முடிக்க அலைந்து திரிய வேண்டி இருக்கும். சக பணியாளர்களிடம் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது.

குடும்பத்தில் விருந்தினர் வருகையால் திடீர் செலவுகள் ஏற்படலாம். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள குடும்பத்தினருடன் வெளியிடங்களுக்கு செல்ல வேண்டி இருக்கலாம். வெளிவட்டார பழக்க வழக்கங்களை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே  பழைய விஷயம் ஒன்றால் வாக்குவாதம் ஏற்பட்டு சரியாகும்.ஆயுதம், நெருப்பு இவற்றை கையாளும் போதும் வாகனங்களில் செல்லும் போதும் கவனம் தேவை..

பெண்கள் எந்த காரியத்திலும் அவசர முடிவு எடுக்காமல் இருப்பதும் வீண் வாக்குவாதங்களை  தவிர்ப்பதும் நல்லது.

மாணவர்கள் வீண் அலைச்சலை தவிர்ப்பதும், பாடங்களில் சந்தேகம் நீங்கி படிப்பதும் முன்னேற்றத்திற்கு உதவும்.

பரிகாரம்: செவ்வாய் கிழமை முருகன் கோவிலுக்குச் சென்று வருவது நல்ல பலன் தரும்.

மீனம்:

பிறர் குற்றங்களை எளிதில் மன்னிக்கும் குணமுடைய மீன ராசி அன்பர்களே, இந்த வாரம் திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடிப்பீர்கள். பணவரத்து தாமதப்பட்டாலும் கையில் இருப்பு இருக்கும். வேளை தவறி சாப்பிட வேண்டி இருக்கும். முக்கியமான பணிகள் தாமதமாக நடக்கும். வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி சென்று விடுவது நல்லது. மற்றவர்களுக்கு உதவும் போது கவனமாக இருப்பது நல்லது.

தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கடின உழைப்புக்குப்பின் முனனேற்றம் அடைவார்கள். எதிர்பார்த்த ஆர்டர் வந்து சேரும். வாடிக்கையாளர்களை திருப்தி செய்ய கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவார்கள்.உடல் ஆரோக்கியம் அடையும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும் படியான நிகழ்ச்சிகள் நடக்கும். 

குடும்பத்தில் பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அவர்களின் நலனுக்காக பாடுபடுவீர்கள். கணவன், மனைவிக்கிøடேய நெருக்கம் உண்டாகும். சகோதரர்கள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். மனதில் துணிச்சல் ஏற்படும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும்.

பெண்களுக்கு முக்கியமான  வேலைகளில் தாமதம் உண்டாகும். வீண் பிரச்சனைகளை கண்டால் ஒதுங்கி சென்று விடுவது நல்லது.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணகூடுதலாக உழைக்க  வேண்டி இருக்கும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

பரிகாரம்: ஸ்ரீரங்கம் ரங்கநாதரை வணங்குவதால் வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகும்.

 

Continue Reading

வார பலன்

உங்கள் ராசிக்கான இந்த வார பலன்கள் (அக்டோபர் 19 முதல் 25 வரை)

Published

on

weekly prediction, வாரபலன், weekly horoscope

மேஷம்:

மனதில் நிம்மதி வேண்டி தவிக்கும் மேஷ ராசி அன்பர்களே! இந்த வாரம் குடும்ப வருமானம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது. இதனால் பொருளாதார நிலையும் சுமாராக இருக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு  மேலதிகாரியிடம் நற்பெயர் கிடைக்கும். இதுநாள்வரை தங்களுக்கு தடைப்பட்டிருந்த பதவி உயர்வு இப்போது கிடைப்பதற்கு சிறந்த சாத்தியக்கூறு உள்ளது. அதனால்  மனதில் நிம்மதி ஏற்படும். சக பணியாளர்கள் உங்களைக் கண்டு பொறாமைப் படுவார்கள்.

தொழில், வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளின் போது மிகவும் நிதானமாக பேசுவது நன்மை தரும். எதிர்பார்த்த பணம் தாமதப்படும். புதிய ஆர்டர்கள் கிடைக்க அலைய  வேண்டி இருக்கும்.

குடும்பச் சூழ்நிலை ஓரளவே மனநிம்மதியை தரும். பிரிந்த கணவன்  மனைவியர் ஒன்று சேர்வதற்கு வாய்ப்பு உள்ளது. அவர்களிடையே பரஸ்பர அந்நியோன்யம் அதிகரித்து காணப்படும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான பேச்சுவார்த்தைகளில்  ஈடுபடுவீர்கள். உற்றார் உறவினர் தங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். இதுவரை தடைப்பட்டுவந்த திருமணம் இப்போது நடக்கும். நீதிமன்ற வழக்குகளில் இழுபறி நிலை  நீடிக்கும்.

பெண்கள் அடுத்தவர் ஆச்சரிய படும் வகையில் சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவார்கள். புதிய நட்பு மூலம் மகிழ்ச்சி கிடைக்கும்.

மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் காணப்படும். விளையாட்டு மற்றும் பொழுது போக்குகளில் ஆர்வம் உண்டாகும்.

பரிகாரம்: தினமும் முருகனை வணங்கி கந்தர் அனுபூதி சொல்லி வாருங்கள்.

*****************************************************************************************

ரிஷபம்:

என்றைக்குமே குடும்பத்திற்காக உழைக்கும் ரிஷப ராசி அன்பர்களே! இந்த வாரம் குடும்ப வருமானம் நல்லபடி இருக்கும். இருப்பினும் செலவுகள் இவ்வாரம் சற்று அதிகரித்து காணப்படும்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் கடினஉழைப்பு ஏற்படும். தற்போது கல்லூரி படிப்பை முடித்து உள்ளவர்கள் கடுமையாக முயற்சித்தாள் மட்டுமே வேலை  கிடைக்கும். நேரத்திற்கு உணவருந்த முடியாமல் கூட போகலாம்.

தொழில், வியாபாரம் தொடர்பாக புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். அதனால் நன்மை உண்டாகும். உங்கள் கீழ் பணியாற்றுபவர்கள் சிறப்பாக பணிபுரிந்து உங்கள் நிலையை  உயரச் செய்வார்கள்.

குடும்பத்தில் குழந்தைகள் கல்வி சம்பந்தப்பட்ட விஷயத்திற்கு நீங்கள் செலவு  செய்யவேண்டியிருக்கும். உறவினர்களுக்கும் அல்லது நண்பர்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டால் அவற்றை முன் நின்று தீர்த்து வைப்பீர்கள். கணவன் மனைவியிடையே கருத்து  ஒற்றுமை ஏற்படக்கூடும். நீதிமன்றத்தில் தங்கள் மீது வழக்குகள் ஏதாவது இருப்பின் அது இப்போது தங்களுக்கு சாதகமாக மாறும்.

கல்லூரி படிப்பை முடித்து இருக்கும் மாணவர்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூ மூலம் நல்ல வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. அதன் காரணமாக தற்போது இருந்து  வரும் ஊரிலிருந்து வேறொரு ஊருக்கு மாற வேண்டி இருக்கும்.

பெண்களுக்கு பொறுமை மிகவும் அவசியம். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் பெண்களுக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும். மாமியார் மருமகள் உறவு  பிரச்சினையின்றி இருக்கும். மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

பரிகாரம்: சிவபெருமானை தினமும் வலம் வரவும். கோளறு பதிகம் படியுங்கள்.

*****************************************************************************************

மிதுனம்:

பணவரவை அதிகம் எதிர்பார்க்கும் மிதுன  ராசி அன்பர்களே! இந்த வாரம் குடும்பத்தில்  எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு இருக்குமா என்றால் சந்தேகம் தான். வீண் செலவுகள் எதுவும் இந்த வாரம் ஏற்படுவதற்கு இல்லை.

உத்தியோகஸ்தர்களைப் பொறுத்த வரை வேலைக்கு விண்ணப்பித்து இதுவரை தகவல் வரவில்லையே என மனம் வருந்தி வந்தவர்க்கு நற்செய்தி காத்துள்ளது. தற்போது பணியில் இருந்து வருபவர்களுக்கு  பதவி உயர்வு ஒன்று. இந்த வாரத்தில் கிடைக்க சிறந்த வாய்ப்பு உள்ளது.

தொழிலில் எதிர்பார்த்த அளவிற்கு இலாபம் கிடைப்பது மனநிறைவைத் தரும். பண பரிமாற்றம் செய்ய வேண்டி இருந்தால் வாரத்தின் பிற்பகுதியில் செய்யவும்.  வியாபாரம் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருவீர்கள். அதற்காக கடன் வாங்க முயற்சிக்க வேண்டாம் அது கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம்.

குடும்பத்தில் நிம்மதியான சூழல்  நிலவும். புதிய வீடு அல்லது நிலம் வாங்க வேண்டும் என்ற விருப்பம் இருப்பின் அதற்கான முயற்சிகளை இவ்வாரம் மேற்கொள்ளலாம். அதில் வெற்றி கிடைக்கும். திருமண  முயற்சிகளில்  அவசரப்படவேண்டாம். எதையும் சற்று தீர ஆராய்ந்து பார்த்து பின்பு முடிவு எடுக்கவும். கணவன் மனைவியிடையே அன்னியோனியம் குறைந்து காணப்படும்.

பெண்களுக்கு திடீர் கோபங்கள் உண்டாகலாம். நிதானமாக இருப்பது நல்லது. புத்திசாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள்.

மாணவர்களுக்கு திறமையாக செயல்பட்டு கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். கூடுதல் நேரம் படிக்க வேண்டி இருக்கும்.

பரிகாரம்: தினமும் விஷ்ணு சகஸ்ரநாமம் படியுங்கள். பெருமாளுக்கு துளசி அணிவியுங்கள்.

***************************************************************************************

கடகம்:

எதிலும் பொறுமையுடன் இருக்கும் கடக ராசி அன்பர்களே! இந்த வாரம் குடும்பத்தில் சற்று பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம். எடுத்தோம் கவிழ்த்தோம் என அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். வெளியிடங்களுக்குச்  செல்லும் போதும் பயணங்கள் மேற்கொள்ளும் போதும் தங்கள் பணம் உடமைகள் பத்திரமாக பார்த்துக் கொள்ளவும்.

உத்தியோகத்தில்  இருப்பவர்களுக்கு வேலை சுமை அதிகரிப்பதுடன் அலைச்சலும் அதனால் சோர்வும் உண்டாகும். மனதில் நிம்மதி இருக்காது. பிறரிடம் பேசிக் கொண்டிருக்கும் தருணத்தில்  தாங்களே எதிர்பாராமல் கோபப்பட்டு விடுவீர்கள். அதை தவிர்த்திடுங்கள். நிதி நிலையில் மாற்றம் இருக்காது என்றாலும் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும்.

தொழில், வியாபாரம் தொடர்பான பயணங்கள் அதனால் அலைச்சல்  ஏற்படலாம். வியாபார  விரிவாக்கம் தொடர்பான  பணிகளில் இடையூறுகள் ஏற்படலாம். பழைய பாக்கிகள்  வசூலில் தாமதமான நிலை காணப்படும்.

குடும்பத்தில் சில பொருள்கள் களவு போக வாய்ப்பு உள்ளது. அன்பர்கள் சிலர்  தங்களின் குலதெய்வ வழிபாட்டினை மேல் கொள் மேற்கொள்வதற்கு சாதகமாக கிரக நிலைகள் அமைந்துள்ளன.

பெண்கள் முன் பின் யோசிக்காமல் பேசுவதை தவிர்ப்பது நல்லது. செலவு கூடும். முயற்சிகளில்  சாதகமான பலன் கிடைக்கும்.

மாணவர்களுக்கு: கல்வியில் வெற்றி பெற கூடுதல் கவனம்  செலுத்தி படிப்பது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகும். சகமாணவர்களிடம் கவனமாக பேசுவது நல்லது.

பரிகாரம்: தினமும் அஷ்ட லட்சுமியை வணங்கி வாருங்கள். தாமரை மலர் கொண்டு பூஜியுங்கள்.

****************************************************************************************

சிம்மம்:

சிறப்பான குடும்ப சூழ்நிலையை விரும்பும் சிம்ம ராசி அன்பர்களே! இந்த வாரம் அன்பர்கள் இவ்வாரம் பிறருக்கு கடன் கொடுக்கவும் அல்லது ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். அதனால்  தங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும். தாயார் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டிருந்தால் இப்போது சரியாகிவிடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்பு கிடைக்க பெறுவார்கள். சக பணியாளர்கள் மூலம் நன்மை உண்டாகும். அலுவலகம் மூலம் வாகனம் கிடைக்கலாம். என்றோ செய்த  ஒரு வேலைக்கு இப்போது பாராட்டு கிடைக்கலாம்.

தொழில்துறையினருக்கு சக பாகஸ்தர்களினால் பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அவை பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தாது. விஸ்தரிப்பு திட்டங்களில் இந்த வாரம் இறங்க வேண்டாம். வியாபாரிகள் புதிய முயற்சிகள் எதிலும் இந்தவாரம் இறங்க வேண்டாம். பொறுமை அவசியம்.

குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை காணப்படும். அதற்கு காரணம் வீட்டில் ஏற்படும் சண்டை சச்சரவுகளும் எதிர்பாராத ஏமாற்றங்களுமே ஆகும். பொருளாதார நிலை சுமாராக இருக்கும். செலவுகள் ஏற்பட்டாலும் அதை சமாளித்து விட முடியும். வாடகை வீட்டிலிருந்து வரும் அன்பர்கள் சிலர் இப்போது வேறு வீடு  மாற வேண்டியிருக்கும்.

மாணவமணிகள் விடுமுறை நாட்களில் அதிகநேரம் வெயிலில் விளையாட வேண்டாம் ஏனெனில் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. தேவையற்ற விசயங்களில்  மனதை அலைய விட வேண்டாம். இந்த வாரம் ஏதாவது நற் பணிகளில் ஈடுபடுவீர்கள்.

பெண்மணிகள் குடும்ப நிர்வாகத்தை கவனித்து வரும் பெண்மணிகளுக்கு சுமாரான வாரம் இது. வேலைக்கு சென்று வரும் பெண்மணிகளும் அலுவலகத்தில் முன்னேற்றம் எதையும்  இந்த வாரம் எதிர்பார்க்க முடியாது. கவனமாக இருக்கவும்.

பரிகாரம்: சிவாலயத்திற்கு சென்று நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபடுங்கள்.

*****************************************************************************************

கன்னி:

பெரியோர் ஆசியும் மகான்களின் தரிசனமும் கிடைக்கப் பெறும் கன்னி ராசி அன்பர்களே! இந்த வாரம் வெளிநாடுகளில் வசித்து வரும் உறவினர்கள் இப்போது தங்கள் இல்லத்திற்கு வந்து செல்வதற்கு வாய்ப்பு உள்ளது. அதனால் மனதில் மகிழ்ச்சி ஏற்படும்.தாயாரின் உடல் நலம்  பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது கவனம் தேவை.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்து வருவது நல்லது. பணப் பொறுப்புகளில் உள்ளவர்கள் கூடுதல்  கவனத்தை செலுத்தி வருவது அவசியம்.எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி ஒன்று வரும்.

தொழிலில் புதிய விஸ்தரிப்பு திட்டங்களில் தடைகள் ஏற்படக்கூடும். ஆனாலும் தொழில் பாதிக்கப்படாது. தொழில் துறையினருக்கு நிலுவையிலிருந்த பணம் இப்போது கைக்கு  கிடைப்பது சந்தோசத்தை தரும்.

குடும்பத்தில் பண வரவிற்கு குறைவே இராது. சென்ற வாரம் ஏற்பட்ட செலவுகள் எதுவும் இந்த வாரம் இருக்காது. குடும்ப ரீதியாகவோ அல்லது தொழில் சம்பந்தமாக முக்கிய  முடிவுகள் ஏதேனும் எடுக்க வேண்டி இருந்தால் அவற்றை வாரத்தின் பிற்பகுதியில் எடுக்கலாம். சகோதரருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருந்தால் இப்போது சரியாகிவிடும்.

மாணவமணிகள்  தாங்கள் சிரமப்படும் தருணத்தில் சக மாணவர்களிடம் உதவி கிடைப்பது மன ஆறுதலை அளிக்கும். விளையாட்டுக்கள் போட்டிகளில் இவ்வாரம் நீங்கள் செல்ல  வேண்டாம்.

பெண்களுக்கு உற்சாகமான வாரம் இது வேலைக்கு சென்று வரும் பெண்கள் அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவை எதிர்பார்க்க முடியாது. அலுவலகத்தில் கடின உழைப்பு  ஏற்படும்

பரிகாரம்: புதன் கிழமைகளில் சீனிவாசப் பெருமாளுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடுங்கள்.

****************************************************************

துலாம்:

முடிவுகள் எடுக்கும் தருணத்தில் மனக்குழப்பம் ஏற்படும்  துலா ராசி அன்பர்களே! இந்த வாரம் ஆரோக்கிய குறைபாடுகள் அனைத்தும் இப்போது சரியாகிவிடும். அதனால் மன நிம்மதி பெறும். பண வரவிற்கு குறைவிராது. செலவுகள் ஏற்பட்டாலும் தங்களால் அதை  சமாளித்து விட முடியும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு வகையில் அலைச்சல், கூடுதல் செலவை சந்திப்பார்கள். வேறு ஒருவர் செய்த செயலுக்கு வீண் பழி ஏற்க வேண்டி இருக்கும். எனவே  கவனம் தேவை.

தொழிலில் உற்பத்தி சுமாராக இருக்கும். வருமானமும் எதிர்பார்த்த அளவிற்கு இருக்காது. புதிய முயற்சிகளில் இறங்குவதை சற்று தள்ளிப் போடவும். வியாபாரத்தில் முன்னேற்றம்  எதையும் இந்த வாரம் எதிர்பார்க்க முடியாது. எனவே பொறுமையாக இருந்து வருவது அவசியம்.

குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான வாய்ப்பு உண்டு. திருமண வயதில் உள்ள துலா ராசி அன்பர்களின் மனதிற்கு பிடித்த வரன் அமைந்து  திருமணம் நிச்சயிக்கப்படும். வழக்குகள் இந்த வாரம் முடிவுக்கு வரும். மொத்தத்தில் மகிழ்ச்சியான வாரம்.

மாணவமணிகள் பள்ளிக்கு வரும்போது மிகவும் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. அண்டை அயலாருடன் வீண் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். எனவே கூடியவரை  வீண்விவாதங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.

பெண்கள் மனதில் விரக்தி மனப்பான்மை ஏற்படக்கூடும். வேலை பார்த்து வரும் பெண்களுக்கு அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு ஏற்பட வாய்ப்புள்ளது. எக்காரணத்தைக்  கொண்டும் புதிய கடனை ஏற்க வேண்டாம்.

பரிகாரம்: தினமும் துர்காதேவியை வணங்கி வாருங்கள். துர்காஷ்டகம் படியுங்கள்.

******************************************************************************************

விருச்சிகம்:

தெளிவான முடிவுகளை கண்டிப்புடன் எடுக்கும் விருச்சிக ராசி அன்பர்களே! இந்த வாரம் குடும்ப வருமானம் நல்லபடி  இருந்து வரும் செலவுகள் அனைத்தும் இந்த வாரம் கட்டுக்கடங்கி இருக்கும். குழந்தைகளின் கல்வி முன்னேற்றம் தங்களுக்கு உற்சாகத்தை தரும். தக்க தருணத்தில் பிறருக்கு  தாங்கள் உதவுவது அவர்களது ஆசியும் பாராட்டுகளும் கிடைக்கப் பெறுவீர்கள்.

உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் முன்னேற்றம் எதையும் இந்த வாரத்தில் எதிர்பார்க்க முடியாது சிலருக்கு தாங்களே எதிர்பாராத வகையில் ஊர் மாற்றம்  ஏற்படக்கூடும். அதனால் தாங்கள் குடும்பத்தை விட்டுப் பிரிந்திருக்க நேரிடும்.

தொழில்  உற்பத்தி நல்லபடி இருக்கும். வருமானம் திருப்தி தரும். புதிய அபிவிருத்தித் திட்டங்கள் இவ்வாரம் தாராளமாக மேற்கொள்ளலாம் சக பாகஸ்தர்களுடன் நல்லிணக்கம்  ஏற்படும்.

குடும்பத்தில் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. உடன்பிறந்தவர்களின் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். நீண்ட நாளைய வழக்கு ஒன்று உங்களுக்கு சாதகமான தீர்ப்பை  கொண்டு வரும். குடும்ப பொறுப்புகளின் காரணமாக உழைப்பு வழக்கத்தைவிட சற்று அதிகரித்து காணப்படும். அதனால் மனதில் விரக்தி உண்டாகும்.

மாணவமணிகள் விளையாட்டுக்கள் போட்டிகளில் இவ்வாரம் கலந்து கொள்ள வேண்டாம். சிறுசிறு விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. வெளியிடங்களுக்கு தனியாக செல்ல வேண்டாம்.தேவையான அடிப்படை வசதிகள் தங்கு தடையின்றி கிடைக்கும்.

பெண்மணிகள் குடும்பத்தில் எதிலும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது அவசியம். வேலைக்கு சென்று வரும் பெண்கள் அலுவலகத்தில் அதி ஜாக்கிரதையாக இருந்து வருவது  நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துங்கள்.

பரிகாரம்: மஞ்சள் நிற பூக்களை கொண்டு குரு பகவானை வழிபடுங்கள்.

********************************************************************************************

தனுசு:

தொழிலில் உன்னத நிலையை அடைய விரும்பும் தனுசு ராசி அன்பர்களே! இந்த வாரம்  ஆரோக்கியத்தில் கவனமாக  இருந்து வருவது அவசியம். திருமண வயதில் உள்ள தனுசு ராசி அன்பர்களுக்கான வரன் தேடும் முயற்சி தடைகள் ஏற்பட்டு பின்பு சரியாகும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் இவ்வாரம் சற்று கவனமாக இருந்து வருவது நல்லது. தாங்கள் செய்த சிறு தவறை கூட சக ஊழியர்கள்  பெரிதுபடுத்தி காட்டுவார்கள். அது மேலிடத்தில் தங்கள் மீதுள்ள நல்ல அபிப்பிராயத்தை பாதிக்கக்கூடும்.

தொழிலில்  முன்னேற்றம் எதையும் இந்த வாரத்தில் எதிர்பார்க்க முடியாது. சற்று பொறுமையாக இருந்து வரவும் மற்றபடி தாங்கள் மேற்கொண்டு வரும் முயற்சிகளை தொடரவும்.

குடும்பத்தில் நெருங்கிய உறவினர்களிடமோ அல்லது குடும்ப நண்பர்களிடமும் கோபப்பட்டு பேசி வீண் பகையை வளர்த்துக் கொள்ளாதீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களிடம்  அனுசரனையாக நடந்து கொள்ளுங்கள். வேலை காரணமாக அல்லது வேறு காரணங்களுக்காகவோ கணவன்-மனைவியர் இவ்வாரம் பிரிந்திருக்க நேரிடும்.

மாணவமணிகள் விடுமுறை நாட்கள் முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் தருணத்தில் தங்கள் மனதினை முழுவதுமாக கல்வியில் செலுத்துவது அவசியம்.

பெண்கள் கடின உழைப்பு ஏற்படக்கூடும். எதிர்பார்த்த விசயங்கள் நடப்பது சற்று கடினமே. தேவையான பொருட்கள்  வாங்குவதற்கு செலவுகள் செய்ய வேண்டியிருக்கும்.

பரிகாரம்: நமசிவாய மந்திரத்தை நேரம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லி வாருங்கள்.

*********************************************************************************

மகரம்:

மந்திர வார்த்தைகளால் பிறர் மனதை கொள்ளையடிக்கும் மகர ராசி அன்பர்களே! இந்த வாரம் வேற்று மொழி பேசும் நபரால்  நன்மை உண்டாகும். புத்தி சாதுரியத்தால்  எதையும்  சமாளிப்பீர்கள்.  வீண் அலைச்சல் ஏற்படும். நீங்கள் நினைப்பது படி மற்றவர்கள் நடந்து கொள்ளாததால் டென்ஷன் ஏற்படலாம்.

உத்தியோகஸ்தர்களுக்கு நிறுவன மாற்றமோ அல்லது ஊர் மாற்றம் ஏற்படக்கூடும்.அதை மறுக்காமல் ஏற்றுக் கொள்ளுங்கள். நன்கு அறிமுகமான  நபர்கள் சிலர் தங்களுக்கு உதவுவார்கள்.

தொழிலில் புதிய அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதில் கவனம் தேவை.அவசர முடிவுகள் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் கவனம் தேவை. சக பாகஸ்தர்களிடம் வீண்  வாக்குவாதம் செய்ய வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காக அதிக செலவு செய்து மாற்றங்களை செய்வீர்கள்.

குடும்பத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலை நீங்கும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் வருமானம் வரும். சொன்ன சொல்லை எப்பாடு பட்டாவது காப்பாற்றுவீர்கள். ஒரு சில பணி  காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவது மூலமும்  விருந்தினர் வருகையாலும் செலவு உண்டாகும்.

மாணவமணிகள்  வெளிநாடு சென்று கல்வி பயில விண்ணப்பித்து காத்திருக்கும் மாணவமணிகளுக்கு நற்செய்தி ஒன்று இந்த வாரம் தேடி வரும். விசாவிற்கு விண்ணப்பித்திருந்தால்   அதுவும் கிடைப்பதற்கு சிறந்த வாய்ப்பு உள்ளது

பெண்களுக்கு செலவுகள் அதிகரிப்பதால் குடும்ப நிர்வாகம் செய்வதில் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். வேலைக்கு சென்று வரும் பெண்கள் சிலருக்கு பணி மாறுதல்  உண்டு. ஆனாலும் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.

பரிகாரம்: நவக்கிரகத்திற்கு தீபம் ஏற்றி வணங்கி வர சொத்து பிரச்சனை தீரும். குடும்ப குழப்பம் தீரும்.

*************************************************************************************

கும்பம்:

எந்த ஒரு விஷயத்தையும் தள்ளிப் போடாமல்  உடனே முடிவு காண துடிக்கும் குணமுடைய கும்ப ராசி அன்பர்களே, இந்த வாரம் தெளிவான  சிந்தனை தோன்றும். எந்த  காரியத்தையும் செய்யும் முன் ஆலோசனை செய்து அதில் ஈடுபட்டு வெற்றி  காண்பீர்கள். சாமர்த்தியமான உங்களது செயல் கண்டு மற்றவர்கள் ஆச்சரியப்படுவார்கள். முக்கிய  நபர்கள், அந்தஸ்தில் உயர்ந்தவர்கள் நட்பு கிடைக்கும். அதனால் கவுரவம் அதிகரிக்கும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தரும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் சிறு விஷயத்திற்கு கூட உணர்ச்சிவசப்பட்டு பேசுவதினால் பிரச்சினைகள் எழக் கூடும். பழைய கடன்களை முற்றிலுமாக அடைத்து மன நிம்மதி  பெறுவீர்கள். வருமானம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாதது மன வருத்தத்தை தரும். மொத்தத்தில் அதிருப்தியான வாரமிது.

தொழில்துறையினர் முன்னேற்றம் அதிகமாக லாபம் என அனைத்தையும் இந்த வாரம் எதிர்பார்க்கலாம். அவ்வப்போது மனச்சோர்வு ஏற்பட்டு மறையும். கொடுக்கல்-வாங்கலில் இந்த  வாரம் ஈடுபடவேண்டாம் அதனால் சில பிரச்சனைகள் ஏற்படக்கூடும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் போது அதிககவனம் தேவை.

குடும்பத்தில் உள்ளவர்களால் வருமானம் கிடைக்கலாம். கணவன், மனைவிக் கிடையே மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் குடும்ப முன்னேற்றமடைய உதவும். பிள்ளைகளின்  நலனின் அக்கறை காட்டுவீர்கள். திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தை  சாதகமாக முடியும்.

மேற்கல்வி பயில விரும்பும் மாணவ மாணவியருக்கு அதற்கான வாய்ப்புகள் தேடி வரும். அதை எதிர் கொள்வதன் மூலம் சிறந்த எதிர்காலம் காத்துள்ளது.  உங்களுக்கு நண்பர்களால் பிரச்சினை அதனால் மன நிம்மதி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

பெண்களுக்கு பிரச்சனையில்லாத வாரம் இது. பணிக்கு சென்று வரும் பெண்கள் அலுவலகத்தில் முன்னேற்றத்தை எதிர்பார்க்க முடியாது. கணவன் – மனைவியிடையே  அன்யோன்யம் அதிகரிக்கும்.

பரிகாரம்: பெருமாளுக்கு வெண் தாமரையால் அர்ச்சனை செய்து மொச்சை சுண்டல் நைவேத்தியம் செய்து வழிபட வாழ்வில் வளம் பெறும். குடும்ப ஒற்றுமை உண்டாகும்.

****************************************************************************************

மீனம்:

முன்கோபத்தை குறைத்து செயல்படுவதன் மூலம் அதிர்ஷ்ட பாதையில் முன்னேற்றங்கள் பல காணும் மீன ராசி அன்பர்களே, இந்த வாரம் வாழ்க்கை தரம் உயர எடுக்கும்  முயற்சிகள் கை கூடும். நெருக்க மானவர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள். முன்பின் யோசிக்காமல் எதையாவது பேசி விடுவீர்கள். இதனால் வீண் மனஸ்தாபங்கள்  ஏற்படலாம் கவனம் தேவை. வழக்கத்தை விட செலவு கூடும்.

உத்தியோகஸ்தர்களுக்கு நிறுவன மாற்றமோ அல்லது ஊர் மாற்றம் ஏற்படக்கூடும்.அதை மறுக்காமல் ஏற்றுக் கொள்ளுங்கள். நன்கு அறிமுகமான  நபர்கள் சிலர் தங்களுக்கு உதவுவார்கள்.

தொழில் உற்பத்தி அமோகமாக இருக்கும். வருமானம் தாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு கைக்கு கிடைப்பது நிம்மதியைத் தரும். ஏற்றுமதி இறக்குமதி துறையினருக்கும் அனுகூலமான  வாரமிது. வியாபாரத்திலும் நன்மை அளிக்கக்கூடிய வாரமாக இது அமையும். புது வாடிக்கையாளர்கள் மனதில் மகிழ்ச்சியை அளிப்பீர்கள்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே வீண் மன வருத்தம் ஏற்பட்டு நீங்கும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வதன்  மூலம் நன்மை உண்டாகும். உறவினர்களிடம் பேசும் போதும் அவர்களின் கேள்விகளுக்கு  பதில் சொல்லும் போதும் நிதானமாக இருப்பது நல்லது. உங்களது பொருட்களை பத்திரமாக  வைத்துக் கொள்வது நல்லது.

மாணவமணிகளுக்கு மனதில் ஏற்பட்டு வந்த சஞ்சலங்கள் விலகுவதால் படிப்பில் கவனம் திரும்பும். விடுமுறை நாட்களில் வெளியிடங்களுக்கு சென்று பொழுதைக் கழிப்பீர்கள். மகிழ்ச்சி உண்டாகும்.

பெண்கள் குடும்ப நிர்வாகத்தை ஏற்றுள்ள பெண் மணிகளுக்கு பொறுப்புகள் அதிகரித்து காணப்படும். வேலை பார்த்து வரும் பெண்மணிகளுக்கு அனுகூலமான வாரம் என்றே  சொல்ல வேண்டும். தொய்வின்றி வேலைகள் நடக்கும்.

பரிகாரம்: பெருமாளையும் தாயாரையும் வணங்கி வர வறுமை நீங்கும். கல்வியறிவு பெருகும்.

*******************************************************************************

Continue Reading

வார பலன்

உங்கள் ராசிக்கான இந்த வார பலன்கள் (அக்டோபர் 12 முதல் 18 வரை)

Published

on

weekly prediction, வாரபலன், weekly horoscope

மேஷம்:

இந்த வாரம் வழக்கு சம்பந்தமான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். பயணங்கள் செல்ல நேரிடலாம். மனதிருப்தியுடன் செயலாற்றுவீர்கள். புத்திசாதூரியம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் மதிப்பு கூடும் பாராட்டு கிடைக்கும். உடல்சோர்வு உண்டாகும். 

தொழில் வியாபாரம் முன்னேற்றம் காண புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். நல்ல செய்தி வந்து சேரும். நெடுநாட்களாக இருந்து வந்த கடன்கள் தீரும். 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பார்கள். புதிய பதவி அல்லது பொறுப்புகள் கிடைக்கும். வேலைகளை திட்டமிட்டு ஆரம்பிப்பது நல்லது. மேலிடத்திலிருந்த இருந்த மனக்கசப்புகள் நீங்கி உற்சாகம் பிறக்கும்.

குடும்பத்தில் நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்துடன் விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும். பெண்களுக்கு மனதிருப்தியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். 

மாணவர்களுக்கு பாடங்களை கவனமாக படித்து கூடுதல் மதிப்பெண் பெறுவீர்கள். பொறுப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய், வெள்ளி

பரிகாரம்: முடிந்த போதெல்லாம், குருவை வழிபடவும். 

ரிஷபம்:

இந்த வாரம் வீணாக மனதை உறுத்திக் கொண்டிருந்த கவலை நீங்கும். எவ்வளவு திறமையுடன் செயல்பட்டாலும் காரிய தடங்கலை ஏற்படுத்தும். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனம் தேவை. பயணத்தினால் வீண் செலவும், அலைச்சலும் உண்டாகும். 

தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும். விற்பனை அதிகரிக்கும். மட்டற்ற மகிழ்ச்சிகள் வந்து சேரும். பணவரவில் ஓட்டம் இருக்கும். 

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். புதிய கடன்கள் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் வரலாம். அரசல் புரசலாக தங்களை கேலி பேசியவர்கள் கூட தங்களது தவறான போக்கை மாற்றிக் கொள்வர். 

குடும்பத்தில் நிம்மதி காணப்படும். விருந்து நிகழ்ச்சியில் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். பெண்களுக்கு உதவி கேட்டு உங்களை நாடி வருபவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வீர்கள். 

மாணவர்களுக்கு சகமாணவர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. கல்வியில் அதிக கவனம் தேவை.  

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி

பரிகாரம் : தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வரவும். 

மிதுனம்:

இந்த வாரம் நீண்ட நாட்களாக இருந்து வந்த உடல் உபாதை மறையும். எல்லாவற்றிலும் இருந்து வந்த மனகவலை நீங்கும். திட்டமிட்டபடி காரியங்களை செய்ய முடியாமல் தடங்கல்கள் ஏற்படலாம். 

தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். நிலம் வீடு மனை வாகனம் ஆகியவற்றை வாங்குவதற்கு இருந்து வந்த தடைகள் அகலும். உடல் உபாதைகள் ஏதேனும் இருப்பின், இக்கால கட்டத்தில் தீரும். வீண் வழக்குகளிலிருந்து விடுபடுவீர்கள். அலைச்சல்களுடன் நடந்த செயல்கள் நல்லபடியாக முடிவடையும் 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவார்கள். மேல் அதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். 

குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். உங்கள் சொல்படி பிள்ளைகள் நடந்து கொள்வது மனதுக்கு இதமளிக்கும். பெண்களுக்கு நிதானமாக பேசுவது நன்மை தரும். எதிர்பார்த்த தகவல்கள் நல்லபடியாக வரும். 

மாணவர்களுக்கு சக மாணவர்களுடன் பழகும் போது கவனம் தேவை.  பாடங்கள் எளிமையாக தோன்றும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி

பரிகாரம்: பார்வதி தேவியை வழிபட்டுச் சிறப்படையுங்கள். முடிந்தவர்கள் தகுதியானவர்களிடம் தீட்சை பெற்று மந்திர ஜபம் செய்து வரவும். 

கடகம்:

இந்த வாரம் எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடித்து விடுவீர்கள். சுப செலவுகள் ஏற்படும். வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம்.  திட்டமிடுவதில் பின்னடைவு ஏற்படும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். பெரியோர் நேசம் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும். 

தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். வெளியில் கொடுத்திருந்த பணம் திரும்பவும் கை வந்து சேரும். சில நேரங்களில் யோசிக்காமல் பேசி வம்பில் மாட்டிக் கொள்ள நேரலாம். 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். 

குடும்பத்தில் சந்தோஷமான நிலை காணப்படும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் மனம் மகிழும் படி தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். விருப்பங்கள் கைகூடும். பெண்களுக்கு  ஆன்மிக நாட்டம் ஏற்படும். 

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி

பரிகாரம் : முருகப் பெருமானை வழிபட்டு வரவும். கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்வது நலம் தரும். 

சிம்மம்:

இந்த வாரம் எல்லாவகையிலும் நல்லதே நடக்கும். பணவரத்து அதிகரிக்கும். எதிர்ப்புகள் விலகும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். விரும்பிய காரியங்களை செய்து சாதகமான பலன் கிடைக்க பெறுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். 

தொழில் வியாபாரம் நன்றாக இருக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சுணக்க நிலை மாறும். தங்கள் ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். 

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். உங்களுக்கு நற்பெயர் கிடைப்பதில் எந்த இடையூறும் இருக்காது. தங்களின் பதவியால் சில ஆதாயங்கள் கிடைத்து, மகிழ்ச்சி உண்டாகும். இதன் மூலம் பொதுநலக் காரியங்களுக்குச் செலவு செய்வீர்கள். 

குடும்பத்தில் இருந்து வந்த மனம் நோகும்படியான சூழ்நிலைகள் மாறும். நிதானமாக செய்யும் செயல்கள் வெற்றியை தரும். பெண்களுக்கு எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். 

மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை குறையும். அதிக மதிப்பெண் எடுக்க ஆர்வமாக படிப்பீர்கள்.    

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி

பரிகாரம் : முடிந்தால் திங்களூர் சென்று தரிசனம் செய்து விட்டு வரவும்.

கன்னி:

இந்த வாரம் தீவிர உழைப்பும், அதிக முயற்சிகளுடனும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். அவரின் உச்ச பலத்தால் நல்ல பலன்களை பெறப் போகிறீர்கள். மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். மனகவலை குறையும். எல்லாவகையிலும் சாதகமான பலன் கிடைக்க பெறுவீர்கள். சுபச்செலவு உண்டாகலாம். திட்டமிட்டபடி பயணத்தில் நல்லது ஏற்படும். 

தொழில் வியாபாரம் தொடர்பான  விஷயங்கள்  சாதகமாக  நடக்கும். நயமாக பேசுவதன் மூலம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். புதிய காரியங்களை செய்ய துவங்குவதற்கு முன் நல்ல நேரம் காலம் பார்த்து செய்வது நல்லது. 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. வேலை பார்க்கும் இடத்தில் பொருள்களை கவனமாக பாதுகாப்பாக வைப்பது நல்லது. இருந்த பளு கொஞ்ச கொஞ்சமாகக் குறையும். அதில் இருந்து வந்த சுணக்க நிலையும் மாறும். 

குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகள் மகிழ்ச்சியடைய தேவையானவற்றை செய்வீர்கள். பெண்களுக்கு காரிய அனுகூலம் உண்டாகும். 

மாணவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படலாம். பாடங்களில் கவனம் செலுத்துவது குறைய கூடும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி

பரிகாரம்: சனிபகவானை வழிபட்டு வரவும். முடிந்தால் ஒருமுறை திருநள்ளாறு சென்று வரவும். “நள்ளாறா என நம் வினை நாசமே’ என்கிறது தேவாரம். இதை மறவாதீர்கள்.

துலாம்:

இந்த வாரம் பேச்சின் இனிமையால் காரியம் கைகூடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நல்ல யோகமான பலன்களைப் பெற போகிறீர்கள். 

தொழில் வியாபாரம் திருப்தியாக நடக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசுக்குச் செலுத்த வேண்டிய சொத்து வரி, வருமான வரி எதுவாக இருந்தாலும் தாமதிக்காமல் உடனே செலுத்திவிடுவது நல்லது. வங்கிக் காசோலைகளில் முன்னதாக கையெழுத்து போட்டு வைக்காதீர்கள். 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக வேலையாக அலைய வேண்டி இருக்கும். புதிய பொறுப்புகள் சிலருக்கு கிடைக்கலாம். 

குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். உறவினர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். குடும்பத்தினருடன் ஆன்மிக பயணம் செல்லும் நிலை உருவாகும்.  மற்றவர்கள் ஆலோசனை கேட்டு உங்களை நாடி வருவார்கள். பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். 

மாணவர்களுக்கு மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கல்வியில் திருப்தி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன், வெள்ளி

பரிகாரம் : அறுபடை முருகன் கோவிலுக்கு ஏதேனும் ஒன்றுக்கு தரிசனம் செய்து விட்டு வரவும்.

விருச்சிகம்:

இந்த வாரம் பணவரத்து அதிகரிக்கும். மனதில் ஏதாவது ஒரு கவலை உண்டாகும். சொத்துக்கள் சம்பந்தமான காரிய அனுகூலம் ஏற்படும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கக் கூடும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும்.

தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும் என்ற தன்னம்பிக்கை ஏற்படும். உங்களுக்கு சம்பந்தமில்லாத பிரச்சனைகளில் தலையிடுவதும் கத்து சொல்வதையும் தவிர்த்தல் நலம். முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். செலவுகளை திட்டமிட்டு செய்வது நல்லது. 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி வரும். அலுவலக வேலைகள் உடனே முடியும். நல்ல பெயர் கிடைக்கப் பெறுவீர்கள். 

குடும்பத்தில் வெளிநபர்களால் ஏதாவது குழப்பம் ஏற்படலாம். சொந்த விஷயங்களுக்கு அடுத்தவர் ஆலோசனைகளை கேட்பதை தவிர்ப்பது நல்லது. பெண்களுக்கு எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. 

மாணவர்களுக்கு  கல்வியில் மேன்மை அடைய கூடுதல்  கவனத்துடன்  படிப்பது அவசியம்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வெள்ளி

பரிகாரம் : ஸ்ரீரங்கம் சென்று ஸ்ரீசக்கரத்தாழ்வாரை தரிசனம் செய்து வர நன்மைகள் கிடைக்கும்.

தனுசு:

இந்த வாரம் வீடு – மனை – வாகனம் சம்பந்தமான காரியங்களில் எதிர்பார்த்த பலன்கள் கிட்டும். எதிர்பார்த்தபடி எதுவும் நடக்காமல் இழுபறியாக இருக்கும். மனமகிழும்படியாக எல்லாம் நடந்து முடியும். 

தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வெளிவட்டாரம் நன்றாக இருக்கும். பிரபலங்கள், வேற்று மொழிக்காரர்கள் உதவுவார்கள். உடல் நலம் பாதிக்கும். தைரியமாக சில காரியங்களை முடிப்பீர்கள். 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்க பெறுவார்கள். பணி நிமித்தமாக வெளிநாடு செல்ல வேண்டி வரும். 

குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு திருப்தி தரும். உறவினர்கள் – நண்பர்கள் மூலம் நன்மை நடக்கும். பெண்களுக்கு பணவரத்து எதிர்பார்த்த படி இருக்கும். 

மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள்.  

அதிர்ஷ்ட கிழமைகள்:  வியாழன், வெள்ளி

பரிகாரம் : முடிந்தால் திருப்பதி சென்று பெருமாளை தரிசனம் செய்து விட்டு வரவும்.

மகரம்:

இந்த வாரம் துணிச்சலாக காரியங்களில் ஈடுபடுவீர்கள் வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும். பயணங்கள் மூலம் லாபம் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும் படியான காரியங்கள் நடக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். மனோ தைரியம் அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும். 

தொழில் வியாபாரம் வாக்கு வன்மையால் சிறப்பாக நடக்கும். ஓரளவு நன்மைகள் வந்து சேரும். ஓரளவு சோதனைகளும் இருக்கும். முன்னோர்கள் வழிபாடு மிகவும் முக்கியம். எதிரிகளின் தொல்லைகள் குறையும். உங்கள் பக்கமுள்ள நியாயம் ஓங்கும். 

உத்தியோகம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம். புத்தி சாதூரியத்தால் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். 

குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். மனவருத்தம்  நீங்கும். பெண்களுக்கு காரியங்களில் இருந்த பின்னடைவு நீங்கும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். 

மாணவர்களுக்கு  புத்திசாதூரியம் வெளிப்படும். கல்வியில் இருந்த  தொய்வு நீங்கும்.  

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன், வெள்ளி;

பரிகாரம்: முடிந்த போதெல்லாம் துர்க்கையம்மனை வழிபடவும். நவகிரகப் பிரதட்சிணம் செய்யுங்கள்; நன்மைகள் பெருகும். 

 

கும்பம்:

இந்த வாரம் முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவலாக வரும். விருப்பங்கள்  கைகூடும். நண்பர்கள் மத்தியில் மரியாதையும், அந்தஸ்தும் உயரும்.  மற்றவர்களிடம் பேசும்போது கோபத்தை குறைத்து பேசுவது நல்லது. பணவரத்து இருக்கும். 

தொழில் வியாபாரத்தில் பணவரத்து இருக்கும். பாக்கிகள் வசூலாகும். இழுபறியான காரியங்கள் முடிவுக்கு வரும். தங்க நகை, ரத்தினங்கள் வாங்குவீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வங்கிக் கடனுதவி கிடைக்கும். 

உத்தியோகத்தில்  இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உழைப்புக்கு ஏற்ற பலன் தாமதமாக கிடைக்கும். 

குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் வருகை இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பெண்களுக்கு திடீர் செலவு உண்டாகலாம். காரியங்களில் தடை தாமதம் ஏற்படலாம் கவனம் தேவை. 

மாணவர்களுக்கு மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது முன்னேற்றத்திற்கு உதவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்; 

பரிகாரம் : பைரவரை வழிபட்டு வரவும். 

மீனம்:

இந்த வாரம் எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். அடுத்தவர்களுக்கு உதவுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். எதிர்பாலினத்தாரால் செலவு  ஏற்படும். கோபத்தால் சில்லறை சண்டைகள் ஏற்படலாம். பணவரத்து கூடும். காரிய அனுகூலம் உண்டாகும். 

தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இழுபறியான நிலை காணப்படும். பணவரத்து திருப்தி தரும். பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும். வீடு வாங்குவது, விற்பதிலிருந்த சிக்கல்கள் தீரும். தங்கள் பயணங்களில் கவனம் தேவை. சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். வழக்குகள் சாதகமாகும்.  

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான பணிகளில் முழுமூச்சுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பார்கள். பயணங்களின் போது உடமைகளை கவனமாக பாதுகாப்பாக வைப்பது நல்லது. 

குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். புதிதாக வீடு – மனை வாங்குவதற்கான வேலைகளைத் தொடங்குவீர்கள். பெண்களுக்கு மற்றவர்களின் பொறுப்புகளை ஏற்பதை தவிர்ப்பது நல்லது. 

மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் முழுமூச்சுடன் ஈடுபடுவீர்கள். உங்களது பொருட்களின் மீது கூடுதல் கவனம் இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி;

பரிகாரம் : தினமும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று சிவதரிசனம் செய்து வரவும்.

***************************************************************************************************

 

Continue Reading




Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்9 hours ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (27/10/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்9 hours ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (27/10/2020)

வீடியோ17 hours ago

சிம்புவின் ‘ஈஸ்வரன்’ ஸ்லிம்மாக மிரட்டும் போஸ்டர்!

வீடியோ18 hours ago

ஏர் ஓட்டுபவனும் ஏரோபிளைனில் போவான்.. சூரரைப் போற்று திரைப்பட டிரெய்லர்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 day ago

உங்கள் ராசிக்கான இந்த வார பலன்கள் (அக்டோபர் 25 முதல் நவம்பர் 1 வரை)

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்1 day ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (26/10/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்1 day ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (26/10/2020)

தமிழ்நாடு2 days ago

பெரம்பலூரில் கிடைத்தது டைனோசர் முட்டையா? ஆய்வு முடிவு சொல்வது என்ன?

உலகம்2 days ago

தனக்கும், தனது பணக்கார நண்பர்களுக்காகவும் தான் டிரம்ப் அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார்: பராக் ஒபாமா

தமிழ்நாடு2 days ago

முதல்வர் பழனிசாமிக்கு மாட்டு வண்டி பரிசு வழங்கிய அமைச்சர்!

வேலை வாய்ப்பு12 months ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா1 year ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா1 year ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு1 year ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா1 year ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

சினிமா செய்திகள்2 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு6 months ago

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

வீடியோ17 hours ago

சிம்புவின் ‘ஈஸ்வரன்’ ஸ்லிம்மாக மிரட்டும் போஸ்டர்!

வீடியோ18 hours ago

ஏர் ஓட்டுபவனும் ஏரோபிளைனில் போவான்.. சூரரைப் போற்று திரைப்பட டிரெய்லர்!

கிரிக்கெட்2 months ago

பந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சினிமா செய்திகள்2 months ago

தேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ!

வீடியோ செய்திகள்3 months ago

காதலை வித்தியாசமாகத் தெரிவிக்க தீ மூட்டிக்கொண்ட காதலன்! (வீடியோ உள்ளே)

வீடியோ3 months ago

சூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்!

வீடியோ செய்திகள்8 months ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு

வீடியோ செய்திகள்8 months ago

சாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு

வீடியோ செய்திகள்8 months ago

கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? – சிறப்பு தொகுப்பு

வீடியோ செய்திகள்8 months ago

கோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi

Trending

%d bloggers like this: