Connect with us

வார பலன்

உங்கள் ராசிக்கான இந்த வாரபலன்கள் (ஜூன் 29 முதல் ஜூலை 5 வரை)

Published

on

weekly prediction, வாரபலன், weekly horoscope

மேஷம் (அஸ்வினி, பரணி,  கார்த்திகை 1ம் பாதம்)

யாரிடமும்  கோபமாக பேசாமல் பணிவுடன் நடந்துக்கொள்ளும்  மேஷ ராசி அன்பர்களே, இந்த வாரம் தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். சகோதரர்கள் மூலம்  நன்மை உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி  இருக்கும். டிசம்பர் வரை வாகனங்களை  ஓட்டி செல்லும் போது கவனம் தேவை..

தொழில், வியாபாரம் தொடர்பான விவகாரங்களில் தாமதம் ஏற்படலாம். புதிய ஆர்டர்கள் கிடைப்பதற்கு அலைய வேண்டி இருக்கும். 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கிடையே சுமூக உறவு இருக்க விட்டு கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகள் கல்வியில் அக்கறை காட்டுவீர்கள்.

பெண்களுக்கு மனத்துணிவு அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி  திருப்திகரமாக இருக்கும். காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும்.

மாணவர்களுக்கு  கூடுதல் கவனம் செலுத்தி பாடங்களை படிப்பது நல்லது. விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் போது கவனம் தேவை. 

பரிகாரம் : அறுபடை முருகன் கோவிலுக்கு ஏதேனும் ஒன்றுக்கு அடிக்கடி தரிசனம் செய்து விட்டு வரவும். “சுப்பிரமணிய புஜங்கம்” பாராயணம் செய்யவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன்

************************************************************************************************

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)

உன்னிப்பாக காரியங்களில் கவனமாக  இருக்கும் ரிஷப ராசி அன்பர்களே, இந்த வாரம் எந்த காரியத்தையும் செய்து முடிப்பதில்  தாமதம் ஏற்படும். பகைவர்களால்  ஏற்படும் சிறு தொல்லைகளை  சமாளிக்க வேண்டி இருக்கும். புதிய நண்பர்களுடன் பழகும்போது கவனம் தேவை.

தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். அலுவலக பணிகள் மூலம் டென்ஷன்  உண்டாகும். கவனமாக பேசுவது நல்லது.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. ஆனாலும் குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். கணவன், மனைவிக்கிடையில் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனம் தேவை. அக்கம் பக்கத்தினருடன் சில்லறை சண்டைகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை வரலாம்.

பெண்களுக்கு  அடுத்தவர்களின் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. தெய்வபக்தி அதிகரிக்கும். 

மாணவர்களுக்கு  கல்வியை பற்றி டென்ஷன் ஏற்பட்டு நீங்கும். பாடங்களை ஒருமுறைக்கு  இருமுறை படித்து புரிந்து கொள்வது நல்லது. 

பரிகாரம்:  அஷ்டலட்சுமிகளையும் வணங்கி வர மனோதைரியம் கூடும். “கோளறு திருப்பதிகத்தை’ அன்றாடம் பாராயணம் செய்வதால் பணகஷ்டம் குறையும். குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும். 

அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி

************************************************************************************************

மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை,  புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

எப்படிபட்ட சூழ்நிலைகளையும் எதிர்கொள்ளும்  மிதுன ராசி அன்பர்களே இந்த வாரம் ஆக்கப்பூர்வமான யோசனைகள்  தோன்றினாலும் அதை செயல்படுத்துவதில் தாமதம் உண்டாகும். பேச்சை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது.  மற்றவர்களுடன்  கருத்து வேற்றுமை ஏற்படாமல் கவனமாக  இருப்பது நல்லது.  

தொழில் வியாபாரம் மந்தமாக காணப் பட்டாலும் பழைய பாக்கிகளை  வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள்.  ஆர்டர் தொடர்பான காரியங்களில் தாமதம் இருக்கும். 

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வேலைபளு இருக்கும். சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து போவது நன்மைதரும். பிள்ளைகளின் நலனில் அக்கறை தேவை.

பெண்களுக்கு வீண் பேச்சை குறைப்பது நல்லது. எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகலாம்.

மாணவர்களுக்கு அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் கவனம் தேவை.  பாடங்களை படிப்பதில் தீவிரம் காட்டுவீர்கள்.

பரிகாரம்: பெருமாளை வணங்கிவர முன்ஜென்ம பாவம் நீங்கும். திருமணமாகாத வர்களுக்கு திருமணம் கைகூடும். ’ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமம்’ அன்றாடம் பாராயணம் செய்வதால் நன்மைகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்

************************************************************************************************

கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

தனது பேச்சால் அனைவரையும் வசீகரிக்கும்  கடக ராசி அன்பர்களே இந்த வாரம் எதிர்ப்புகள் விலகும்.  பணவரத்து திருப்தி தருவதாக இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். வாகனங்களை  ஓட்டி செல்லும் போது கவனம் தேவை. பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது அவசியம். தனிமையாக இருக்க நினைப்பீர்கள்.

தொழில் வியாபாரம்  சுமாராக நடக்கும்.  ஆர்டர்கள் கிடைத்தாலும்  சரக்குகள் அனுப்புவது  தாமதமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூல்  ஆனாலும் எதிர்பார்த்தபடி இருப்பது சிரமம். 

உத்தியோகத்தில்  இருப்பவர்கள் மிகவும் கவனமாக  பணிகளை  மேற்கொள்வது நல்லது. பதவி உயர்வு, நிலுவையில் உள்ள பணம் வருவது  தாமதப்படும்.

குடும்பத்தில் ஏதேனும் குழப்பம் ஏற்படலாம். கணவன் மனைவிக் கிடையே  கருத்து வேற்றுமை வந்து நீங்கும். உறவினர்களிடம் நிதானமாக  பேசுவது நல்லது.  பிள்ளைகளை அனுசரித்து செல்வது நன்மை தரும். 

பெண்களுக்கு எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.  பயணங்களின் போது உடமைகளை  கவனமாக  பார்த்துக் கொள்வது நல்லது. 

மாணவர்களுக்கு சக மாணவர்களுடன் இருந்த மனவருத்தம்  நீங்கும். பாடங்கள் படிப்பதில் இருந்த தடைகள் நீங்கி ஆர்வமாக படிப்பீர்கள். 

பரிகாரம்: பிரத்தியங்கரா தேவியை  அர்ச்சனை செய்து வணங்கிவர எல்லா கஷ்டமும் நீங்கும். எதிர்ப்புகள்  அகலும். தினசரி 108 முறையாவது “ராம’ நாமத்தை ஜபிக்கவும். தமிழிலோ, வட மொழியிலோ ”சுந்தர காண்டம்” பாராயணம் செய்வது அதிக நன்மை தரும்.

அதிர்ஷ்டகிழமைகள்: திங்கள், செவ்வாய்

************************************************************************************************

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் 1ம் பாதம்)

எதையும் தைரியமாக எதிர்கொள்ளும்  சிம்ம ராசி அன்பர்களே, இந்த வாரம் களைப்பு, பித்தநோய் உண்டாகலாம். வீண்கவலை இருக்கும்.  மற்றவர்கள் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. வெளி வட்டார தொடர்புகளில்  கவனம் தேவை. 

தொழில் வியாபாரம் தொடர்பான  அலைச்சல் அதிகரிக்கும். வாடிக்கையாளர் களை  அனுசரித்து செல்வது நல்லது.  பழைய பாக்கிகளை  வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். எடுத்த வேலையை செய்து முடிப்பதற்குள் பல தடங்கல்கள் உண்டாகும்.

குடும்பத்தில் இருப்பவர்களால் டென்ஷன்  உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையில் கருத்து வேற்றுமை வராமல் இருக்க மனம்விட்டு பேசுவது நல்லது.  பிள்ளைகள்  நலனில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.  எதிலும் திருப்தி இல்லாதது போல் தோன்றும்.

பெண்களுக்கு:  எடுத்த காரியத்தை செய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை.

மாணவர்களுக்கு:  கல்வியில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.

பரிகாரம்:  சரபேஸ்வரரை வணங்க காரிய தடை நீங்கும். மன அமைதி கிடைக்கும். த்ரியம்பகம் என்று ஆரம்பிக்கும் ம்ருத்யுஞ்சய மந்திரத்தை பாராயணம் செய்யவும்.

அதிர்ஷ்டகிழமைகள்: ஞாயிறு, திங்கள்

************************************************************************************************

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

யாரிடமும் கோபடாமல் அமைதியாக தனது காரியங்களை சாதித்துக்கொள்ளும் கன்னி ராசி அன்பர்களே, இந்த வாரம் சுபச் செலவுகள் உண்டாகும். மற்றவர்களால் மனகஷ்டம் ஏற்படும்.  அடுத்தவர்கள் கடனுக்கு பொறுப் பேற்காமல் இருப்பது நல்லது.  எந்த ஒரு காரியமும் மந்தமாக நடக்கும். எதிர்ப்பு களை சமாளிக்க வேண்டி இருக்கும். 

தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் வராவிட்டாலும், சுமாராக வரும். ஆனால் புதிய ஆர்டர்கள் வந்து சேரும். தொழில் தொடர்பான செலவு கூடும். 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறிய வேலைக்கும் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது  நல்லது. அவர்களின் நலனுக் காக  செலவு செய்ய வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையில்  திடீர் இடை வெளி ஏற்படலாம். பிள்ளைகள் அறிவு திறன் கண்டு ஆனந்தப்படுவீர்கள். அவர்க ளுக்காக செலவு செய்யவும் நேரிடும்.

பெண்களுக்கு எதிர்பாராத செலவுகள் உண்டாகும். காரியதாமதம் ஏற்படும். வீண்கவலை இருக்கும்.

மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் பெற மிகவும் கவனமாக படிக்க வேண்டி இருக்கும். 

பரிகாரம்:  லக்ஷ்மி நரசிம்மரை தரிசித்து வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கூடும். “புருஷசூக்தம்” பாராயணம் செய்யவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி

************************************************************************************************

துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம்  பாதம்)

யாரிடம் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்பதை அரிந்துக்கொண்ட  துலா ராசி அன்பர்களே, இந்த வாரம் பணவரத்து அதிகப்படும் அதே நேரத்தில் வீண்செலவு உண்டாகும். சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும்  அதை செய்ய முடியாத  சூழ்நிலை வரும். எதிலும் ஈடுபடாமல் ஒதுங்கி சென்றாலும் மற்றவர்கள் விடாமல் வம்புக்கு இழுப்பார்கள். எனவே  கவனமாக இருப்பது நல்லது.  நீண்ட நாட்களாக  இழுபறி யாக இருந்த சில காரியங்கள் நடந்து முடியும்.

தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். புதிய ஆர்டர்கள் எதிர்பார்த்த படி கிடைக்கும்.  வாக்கு வன்மையால் வாடிக்கை யாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள். 

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக  தள்ளிப்போன பதவி உயர்வு வர வேண்டிய பணம் வந்து சேரலாம்.

குடும்பத்தில் எதிர்பார்த்த சுமுகமான சூழ்நிலை காணப்படும்.   கணவன், மனைவி இருவரும் சேர்ந்து  எடுக்கும் முடிவுகள்  நல்ல பலன் தருவதாக இருக்கும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும்.

பெண்களுக்கு கடன் தொடர்பான பிரச்சனைகள் தீரும். பணவரத்து கூடும். மன குழப்பம் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

மாணவர்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் மற்றவர் மனதில் இடம் பிடிப்பீர்கள். 

பரிகாரம்: நவகிரகத்தில் சுக்கிரனுக்கு தீபம் ஏற்றி வணங்க குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். மனமகிழ்ச்சி ஏற்படும். முடிந்தவரை “ராமராம” மந்திரஜெபம் பாராயணம் செய்யவும். ஐந்தெழுத்து மந்திரத்தை அவ்வப்போது ஓதுதலும் நன்மையே.

அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி

************************************************************************************************

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

எதையும் புரிந்துகொள்ளாமல் உடனே தனது கோபத்தை வெளிபடுத்தும் விருச்சிக ராசி அன்பர்களே, இந்த வாரம் எடுத்த காரியத்தை செய்துமுடிப்பதில் இழுபறியான நிலை காணப்படும். சாதாரணமாக பேசினாலும் மற்றவர்கள் அதில் குறை காண்பார்கள்.  வாகனங்களில் செல்லும் போதும், ஆயுதங்களை கையாளும் போதும் கவனம் அவசியம். எண்ணியதை செய்து முடிக்க முடியாமல் தடங்கலை உண்டாக்கும். பணவரத்து கூடும். 

தொழில், வியாபாரத்தில் சிக்கல்கள் தீர பாடுபடுவீர்கள். புதிய ஆர்டர் பிடிக்க அதிகம் அலையவேண்டி இருக்கும். 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே  இடைவெளி குறைய மனம் விட்டு பேசுவது நல்லது. பிள்ளைகள் எதிர்கால நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும். 

பெண்களுக்கு உங்களது செயல்களில் மற்றவர்குறை காண நேரலாம். தெய்வ பக்தி அதிகரிக்கும். பயணம் செல்ல நேரலாம். 

மாணவர்களுக்கு செயல் திறமை அதிகரிக்கும்.  கல்வியில் வெற்றி பெறுவதை  குறிக்கோளாக கொண்டு செயல்படுவீர்கள். 

பரிகாரம்:  மாரியம்மனை தீபம் ஏற்றி வணங்க எல்லா பிரச்சனைகளும் தீரும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். காரிய தடங்கல் நீங்கும். ஸ்ரீ துர்கா ஸகஸ்ரநாமம் மற்றும் ஸ்ரீ துர்கா ஸூக்தம் சொல்வது நன்மையைத் தரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய்

************************************************************************************************

தனுசு (மூலம், பூராடம்,  உத்திராடம் 1ம் பாதம்)

தனது கவலைகளை தோரனைகளால் மறைத்துக்கொள்ளும்  தனுசு ராசி அன்பர்களே, இந்த வாரம் பணவரத்து திருப்திதரும். எதிர்பாராத திருப்பம் உண்டாகும். சிந்தித்து செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். பயணங்களின் போதும் வாகனங்களை ஓட்டி செல்லும் போதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.  புதியநபர்களின் அறிமுகம் கிடைக்கும்.  அவர்களிடம் கவனமாக பழகுவது நல்லது.

தொழில் வியாபாரம் மந்தமாக காணப்பட்டாலும் வருமானம் வழக்கம் போல் இருக்கும். வாடிக்கையாளர்களிடம்  அனுசரித்து நிதானமாக நடந்து கொள்வது  வியாபாரம் நன்கு நடக்க உதவும். 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்ட மிட்டு செய்யும் காரியங்கள் நல்ல பலன் தரும்.

குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். உறவினர்க ளுடன்  அனுசரித்து செல்வதும், வாக்கு வாதத்தை தவிர்ப்பதும் நல்லது.  பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது நல்லது.   

பெண்களுக்கு எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். 

மாணவர்களுக்கு சக மாணவர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. கவனத்தை சிதறவிடாமல் படிப்பது அவசியம். 

பரிகாரம்: தேவாரம், திருவாசகம் படித்து சிவனை வணங்குவது நன்மையை தரும். தடைபட்ட காரியம் தடைநீங்கி நடக்கும். ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி அஷ்டகம் சொல்வது நன்மையைத் தரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி

************************************************************************************************

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

அமைதியின் மறுவுருமாக திகழும்  மகர ராசி அன்பர்களே, இந்த வாரம் சுபச் செலவுகள் செலவுகள் ஏற்படும்.   எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில்  தாமதம் ஏற்படும்.  கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடு பட வேண்டி இருக்கும். மற்றவர்களின்  பிரச்சனை களுக்கு வலியசென்று உதவிகள் செய்வதை தவிர்ப்பது நல்லது. விருப்பம் இல்லாத இடமாற்றம் உண்டாகலாம்.

தொழில் வியாபாரம் முன்னேற்றம் காண மிகவும் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.   பார்ட்னர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்தபடி பணிகள் முடியாமல் மனசங்கடத்திற்கு ஆளாக நேரிடும்.

குடும்பத்தில் இருப்பவர்களின் தேவை களை பூர்த்தி செய்ய பாடுபடுவீர்கள். கணவன், மனைவிக் கிடையே வெளியில் சொல்ல முடியாத மனக்குறைகள் வரலாம்.  பிள்ளைகள்  கல்வி மற்றும் அவர்கள் எதிர் காலம் பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும். 

பெண்களுக்கு விருப்பம் இல்லாமல் பயணம் செல்ல நேரிடலாம். வீண் மன சங்கடத்திற்கு  ஆளாகலாம். எதிலும் கவனம் தேவை. 

மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். பாடங்கள் எளிமையாக தோன்றினாலும் கவனமாக படிப்பது அவசியம்.

பரிகாரம்: “அபிராமி அந்தாதி’யில் சில பாடல்களையாவது அன்றாடம் பாராயணம் செய்வது மிக, மிக நன்மை தரும். 

அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி

************************************************************************************************

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதம்)

உள்ளதை உள்ளபடி கூறும் கும்ப ராசி அன்பர்களே, இந்த வாரம் குறிக்கோளற்ற  பயணங்கள் அதன் மூலம் அலைச்சல், உடல்நலக் கேடு போன்றவை ஏற்படலாம். எனவே  திட்டமிட்டு  எதையும்  செய்வது நல்லது.  மனதில் வீண்கவலைகள் உண்டாகக் கூடும். அடுத்தவரை  நம்பி எதையும்  ஒப்படைப்பதை  தவிர்ப்பது நல்லது.  சுபசெலவுகள் ஏற்படும்.

தொழில் வியாபாரம் திட்டமிட்டபடி  நடந்தாலும் சற்று நிதானமாக இருக்கும்.  சரக்குகளை  வாடிக்கையாளர்களுக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்படலாம். போட்டிகள் தலைதூக்கும். 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலான வேலை பளுவால் உடல் சோர்வடைவார்கள்.

குடும்பத்தில் இறுக்கமான சூழ்நிலை காணப்படும். மனதில் இருப்பதை வெளியில் சொல்லாமல் செய்கையில் காட்டுவார்கள்.  கணவன், மனைவிக்கிடையில் இணக்கமான போக்கு காண்பது சிரமம். 

பெண்களுக்கு வீண்கவலைகள், எதிர்பாராத அலைச்சல் ஏற்படலாம்.  எதையும் திட்டமிட்டு செய்வது நன்மை தரும். 

மாணவர்களுக்கு கல்வி பற்றிய பயம் ஏற்பட்டு நீங்கும். தெளிவாக பாடங்களை படிப்பது நல்லது.  

பரிகாரம்:  விநாயக பெருமானை தேங்காய் உடைத்து தீபம் ஏற்றி வணங்கி வர வீண் அலைச்சல் குறையும். காரிய தடை நீங்கும். கல்வி அறிவு அதிகரிக்கும். “சனி அஷ்டகம்’ பாராயணம் செய்யலாம். 

அதிர்ஷ்ட கிழமைகள்: சனி, ஞாயிறு

************************************************************************************************

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

செயல்களில் வேகத்தை க் காட்டும் மீன ராசி அன்பர்களே, இந்த வாரம் நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும். நீண்ட நாட்களாக வாங்க திட்டமிட்ட வாகனம் சொத்து மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.  பயணங்கள் சாதகமான  பலன் தருவதாக இருக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டமும் கிடைக்கலாம். உடல் ஆரோக்யம் உண்டாகும். தெய்வ பக்தி அதிகரிக்கும்.

தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும்.  வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிகள் மேற்கொள்வீர்கள். 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு குறைந்து மன மகிழ்ச்சியடைவார்கள். மேல் அதிகாரிகளின் உதவியும், ஆலோசனையும் கிடைக்கும். புதிய வேலைக்கான முயற்சிகளில் சாதகமான போக்கு காணப்படும்.

குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் வருகை அதனால் நன்மையும் இருக்கும். கணவன், மனைவிக் கிடையில் நெருக்கம் அதிகரிக்கும்.  பிள்ளைகளின் அறிவுதிறன் அதிகரிக்கும். ஆனால் அவர்களது உடல்நலத்தில் கவனம் தேவை.

பெண்களுக்கு பயணங்களின் மூலம் நன்மை உண்டாகும். முயற்சிகள் நல்ல பலன் தரும். பணவரத்து திருப்தி தரும். 

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். கஷ்டமாக தோன்றிய பாடங்களை எளிதாக படித்து முடிப்பீர்கள். 

பரிகாரம்: முருகனை வணங்கிவர எல்லா நன்மைகளும் உண்டாகும். தேவையான நேரத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.  நவக்கிரக துதி சொல்லவும். 

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்

************************************************************************************************

வார பலன்

உங்களுக்கான இந்த வார ராசிபலன்கள் (ஜூலை 13 முதல் 19 வரை)

Published

on

weekly prediction, வாரபலன், weekly horoscope

வாரபலன்

மேஷம்:

எதையும் கவனத்துடன் செயல்படும் மேஷ ராசி அன்பர்களே! இந்த வாரம் நினைத்த காரியத்தை செய்து முடிக்கும் சூழ்நிலை உருவாகும். பணவசதி கூடும். தெய்வ சிந்தனை அதிகரிக்கும். வாழ்க்கையில் இருந்த அதிருப்தி நீங்கி பிடிப்பு உண்டாகும்.எதிர்பார்த்த தகவல் வரும். இடமாற்றம் உண்டாகலாம். எதிர்பாராத திடீர் செலவு ஏற்படும்.

தொழில் வியாபாரம் விருத்தியடையும்.  தடைபட்ட நிதி உதவி கிடைக்கும்.  ஏற்கனவே  வரவேண்டி இருந்து  வராமல் நின்ற ஆர்டர்கள் வந்து சேரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களின் வேலைபளு, வீண் அலைச்சல் குறையும்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் இணக்கமான போக்கு காணப்படும்.  கணவன் மனைவிக்கிடையில் இருந்த  மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகளின் எதிர்கால நலன் குறித்து கவலை உண்டாகலாம்.

பெண்களுக்கு தடைபட்ட காரியங்களில் இருந்த தடைநீங்கி சாதகமாக நடக்கும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும்.  

மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த  வெற்றி கிடைக்கும். ஆர்வமுடன் பாடங்களை படிப்பீர்கள்.

பரிகாரம்:  தினமும் பெருமாளை வணங்க வறுமை நீங்கி வாழ்வு வளம் பெறும். பகை விலகும். எதிர்ப்புகள் அகலும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்

ரிஷபம்:

முற்போக்கு சிந்தனையைக் கொண்ட  ரிஷப ராசி அன்பர்களே!  இந்த வாரம் எதிலும் மிகவும் கவனமாக ஈடுபடுவது நல்லது. பேச்சின் இனிமை, சாதுர்யம் இவற்றால் எடுத்த காரியங்கள் சாதகமாக முடிய உதவும். காரியங்களில் தாமதம் உண்டாகலாம் அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.

தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். எதிர்பார்த்த பணவரத்து இருந்தாலும் வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும். போட்டிகள் தொல்லை தராமல் இருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான  அலைச்சல் குறையும்.

குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே திடீர் பூசல்கள் ஏற்பட்டு சரியாகும். குடும்பச் செலவுகள் கூடும். குடும்பம் பற்றிய கவலைகள் உண்டாகும். உறவினர்கள், நண்பர்களிடம் பேசும்போது நிதானமாக பேசுவது நன்மை தரும். நெருப்பு ஆயுதங்களை பயன்படுத்தும் போது மிகவும் எச்சரிக்கை தேவை.

பெண்களது காரியங்களுக்கு இருந்த எதிர்ப்புகள் விலகும். பணவரத்து திருப்தி தரும். மனகுழப்பம் நீங்கும்.

மாணவர்களுக்கு பாடங்கள் படிக்க வேண்டுமே என்ற கவலைகுறையும்.  சக மாணவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

பரிகாரம்: மஞ்சள் சாமந்திபூவை சிவனுக்கு அர்ப்பணித்து வழிபட நினைத்த காரியங்கள் நடந்தேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், சனி

************************************************************************

மிதுனம்:

உழைப்பை உறுதியாக எண்ணும்  மிதுன ராசி அன்பர்களே! இந்த வாரம் எல்லா காரியங்களும் அனுகூலமாகும். முக்கிய நபர்களின் சந்திப்பும் அவர்களால் உதவியும் கிடைக்கும்.  உடல் ஆரோக்கியம் பெறும். மனதில் தைரியம் கூடும். சுய நம்பிக்கை உண்டாகும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும்.

தொழில் வியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய ஆர்டர்கள் வருவது அதிகரிக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடுமையான வேலை இருக்கும். உத்தியோகம் காரணமாக வெளியில் தங்க நேரிடும். அலுவலகத்தில் அனுசரித்து செல்வது நல்லது.

குடும்பத்தில் பாதியில் நின்ற வீடுகட்டும் பணியை மீண்டும் தொடருவீர்கள். சிலர் புதிய வீட்டிற்கு குடிபுகுவார்கள். கணவன் மனைவிக்கிடையில் திடீரென்று கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகள் கல்வியில் முன்னேற்றம் அடைய தேவையான உதவிகளை செய்வீர்கள். வழக்குகளில் நல்ல தீர்ப்பு வரும்.

பெண்களுக்கு பணவரத்து திருப்தி தரும். வெளியூர் பயணம் செல்ல நேரலாம். தோழிகளுடன்  சுமுகமாக பேசி பழகுவது நல்லது.

மாணவர்களுக்கு சாமர்த்தியமான செயல்களால் மற்றவர் மனதில் இடம் பிடிப்பீர்கள்.  பாடங்களில் கவனம் செலுத்துவது  அதிகரிக்கும்.

பரிகாரம்: ஆஞ்சநேயரை வெண்ணெய் சாற்றி வழிபட நன்மைகள் சேரும். வாக்குவாதங்கள் நீங்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்

கடகம்:

ஏழைகளின் குணம் அறிந்து நடக்கும் கடக ராசி அன்பர்களே!இந்த வாரம் தடைகள் நீங்கும். எதிர்ப்புகள் விலகும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பண வரத்து எதிர் பார்த்தது போல் இருக்கும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கலாம். பாதியில் நின்ற காரியங்களை தொடர்ந்து செய்து முடிப்பீர்கள். திடீர் குழப்பம் ஏற்படலாம். தீ, எந்திரம் ஆகியவற்றை கையாளும்போது கவனம் தேவை.

தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். பார்ட்னர்கள் ஒத்துழைப்புடன் வியாபாரத்தை விரிவாக்கம் செய்ய முற்படுவீர்கள். ஏற்றுமதி சம்பந்தமான துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிசுமை குறைந்து காணப்படுவார்கள். வேலை திறமைக்கு பாராட்டு கிடைக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குடும்பத்தினருக்காக பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள்  நடக்கும். வாழ்க்கையில் புதிய முன்னேற்றம் ஏற்படும்.

பெண்களுக்கு வீண்செலவு குறையும். பயணங்கள் செல்ல நேரிடலாம். திறமையான செயல்கள் மூலம் எடுத்த காரியம் சாதகமாக நடந்து முடியும்.

மாணவர்களுக்கு கல்வியில் இருந்த முன்னேற்றத்திற்கு  இருந்த  முட்டுக் கட்டைகள் விலகும். சக மாணவர்களின் ஒத்துழைப்பு இருக்கும்

பரிகாரம்: சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது துன்பங்களை போக்கும். மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி

************************************************************************

சிம்மம்:

ஆடம்பர பொருள்களின் நாட்டம் கொண்ட  சிம்ம ராசி அன்பர்களே! இந்த வாரம் காரிய அனுகூலம் உண்டாகும். மனோதிடம் அதிகரிக்கும். பயன் தரும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். செல்வம் சேரும். வாகனம் வாங்க எடுத்த முயற்சி கைகூடும். பயணங்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். 

தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். வரவேண்டிய பணம் தாமதமாக வரும். சரக்குகள் வருவதும் புதிய ஆர்டர்கள் கிடைப்பதும் எதிர்பார்த்ததை விட குறைவாக இருக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான அலைச்சல்களும் ஏற்படும். கவனமாக இருப்பது அவசியம்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கும். அந்தஸ்து உயரும். நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும்.

குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த மனகுழப்பங்கள் தீரும். எதிலும் தெளிவான சிந்தனை இருக்கும். குழந்தைகள் பற்றிய கவலை உண்டாகும். அவர்களின் நலனுக்காக பாடுபடுவீர்கள். உறவினர் மூலம் நன்மை உண்டாகலாம்.

பெண்களுக்கு காரிய அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். திடீர் பணதேவை உண்டாகலாம்.

மாணவர்களுக்கு  கல்வியில் வேகம் காணப்படும். சக மாணவர்களிடம் சுமுகமாக அனுசரித்துபோவது நல்லது.

பரிகாரம்:  முருகனுக்கு அரளிப்பூ சாற்றி வணங்க எல்லா தடைகளும் விலகும். காரிய வெற்றி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன்

***********************************************************

கன்னி:

எதையும் துணிவுடன் எதிர்கொள்ளும்  கன்னி ராசி அன்பர்களே! நீங்கள் மற்றவர்களுக்கு உதவி செய்வதில் தயங்காதவர். இந்த வாரம் செலவு அதிகரிக்கும். பயணங்கள் மூலம் வீண் அலைச்சலும், காரிய தாமதமும் உண்டாகும். நன்மை ஏற்படும். புதிய நட்புகள் கிடைக்கும். எடுத்த காரியங்கள் கை கூடும். அடுத்தவர் செயல்களுக்கு பொறுப்பேற்காமல் தவிர்ப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

தொழில், வியாபாரம் மூலம் லாபம் அதிகம் வரும். வாக்குவன்மையால் தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும்.  கடன் வசதி கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு  வேலை சுமை குறையும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். கடினமாக காரியங்களையும், திறமையாக செய்து முடிப்பீர்கள்

குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கி ஒற்றுமை உண்டாகும்.  பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பது மனதிருப்தியை தரும். உறவினர் நண்பர்களிடம் நற்பெயர் எடுப்பீர்கள்

பெண்களுக்கு மற்றவர்களுக்கு உதவி செய்வதால் வீண் அலைச்சல் உண்டாகலாம். காரிய வெற்றி பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். விளையாட்டுகளில் ஈடுபாடு அதிகரிக்கும்.

பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடுவது கஷ்டங்களை போக்கும். மனதில் தைரியம் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி

************************************************************************

துலாம்:

சிந்தனைய சிதர விடாமல்  இருக்கும்  துலா ராசி அன்பர்களே! இந்த வாரம் எல்லா வகையிலும் நன்மை உண்டாக்கும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்து மதிப்பு கிடைக்க பெறுவீர்கள். உடல் உழைப்பு அதிகரிக்கும். குறிக்கோளற்ற பயணங்கள் உண்டாகும். விழிப்புடன் இருப்பது நல்லது. சுப செலவுகள் உண்டாகும். கையிருப்பு கரையும். ஆன்மீக யாத்திரைகள் சென்று வருவீர்கள்.

தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். முன்னேற்றம் காணப்படும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். தொழில் விரிவாக்கத்திற்கான பண உதவி கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்பட்டாலும் எடுத்த வேலையை  எப்பாடுபட்டாவது செய்து விடுவீர்கள். புதிய வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு சாதகமான பலன்தரும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியான கொண் டாட்டங்கள் இருக்கும். குடும்ப சுகம் பூரணமாக கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே திருப்தியான நிலை காணப்படும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சுப காரியங்களில் குடும்பத்தினருடன் கலந்து கொள்வீர்கள். வாய்க்கு ருசியான இனிப்பு மற்றும் உணவு கிடைக்கும்.

பெண்களுக்கு மனகுழப்பம் நீங்கி எதிலும் தெளிவான முடிவு எடுக்கும் மனநிலை ஏற்படும். காரிய தடைகள் விலகும். எதிர்பார்த்த பணம் வரலாம்

மாணவர்களுக்கு தொழிற்கல்வி கற்பதில் ஆர்வம் உண்டாகும். திட்டமிட்டு படிப்பது எதிர்காலத்திற்கு உதவும்.  திறமையுடன்  காரியங்களை செய்வீர்கள்.

பரிகாரம்: ஸ்ரீமஹாலக்ஷ்மி காயத்ரி சொல்லி தினமும் லக்ஷ்மியை வணங்கி வர கடன் பிரச்சனை குறையும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி

********************************************************************

விருச்சிகம்:

வளிமையான மணம் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே! இந்த வாரம் பணவரத்து அதிகரிக்கும். மன குழப்பம் உண்டாகலாம். எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்லது. காரிய தடைகள் விலகும். பயணங்கள் மூலம் நன்மை கிடைக்கும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொலைதூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நல்லதாக இருக்கும். 

தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இருந்த தடைகள் விலகும்.  போட்டிகள் குறையும்,  புதிய ஆர்டர்கள் பெறுவதற்கான தடைகள் நீங்கும்

உத்தியோகத்தில் இருப்பவர்கள் எளிதாக பணிகளை செய்து முடிப்பார்கள்.  மேல் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

குடும்பத்தில் திடீர் பிரச்சனை தலைதூக்கி பின்னர் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும்.  பிள்ளைகளால் செலவும் ஏற்படும். உறவினர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும்.

பெண்களது ஆலோசனை கேட்டு குடும்பத்தில் இருப்பவர்கள் செயல்படுவார்கள். ஆன்மீக நாட்டம் உண்டாகும். வீண் அலைச்சல் ஏற்படலாம்.

மாணவர்களுக்கு  தொழில்நுட்ப கல்வியில் ஆர்வம் உண்டாகும். புதிய வகுப்புகளில் சேர முயற்சிகள் மேற்கொள்வீர்கள்.

பரிகாரம்: ருத்ர ஜெபம் செய்வதும் குருவுக்கு கொண்ட கடலை நிவேதனம் செய்து வணங்குவதும் வருமானத்தை உயர்த்தும். மன அமைதி கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன்,சனி

******************************************************************************

தனுசு:

மற்றவர்களை ஆறுதல் படுத்தும் குணம் கொண்ட தனுசு ராசி அன்பர்களே! இந்த வாரம்  வீண் செலவுகள் குறையும். பணவரத்து அதிகரிக்கும். காரியங்களில் இருந்து வந்த தாமதம் அகலும்.  மிகவும் வேண்டியவரை பிரிய நேரிடும். கண்மூடித்தனமாக எதையும் செய்யாமல் யோசித்து செய்வது நல்லது. இருக்கும் இடத்தை விட்டு வெளியேற வேண்டி இருக்கும்.

தொழில் வியாபாரத்தில் பார்ட்னர்கள் மூலம் நன்மை உண்டாகும். வியாபாரத்திற்கு தேவையான நிதி உதவியும் கிடைக்கலாம். .

உத்தியோகத்தில் இருப்பவர்கள் எளிதாக பணிகளை செய்யும் படியிருக்கும். தற்காலிக பதவி உயர்வு கூடுதல் பொறுப்புகள் கிடைக்க பெறலாம்.

குடும்பத்தில் இருப்பவர்களுக்கு இருந்து வந்த நோய் நீங்கும். அவர்களது நலனில் அக்கறை காட்டுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். பிள்ளைகளிடம் கவனமாக எதையும் எடுத்து சொல்வது நல்லது. பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனை தீரும்.

பெண்களுக்கு மனக்குழப்பம் தீரும். தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும்.

மாணவர்களுக்கு பாடங்கள் படிப்பது எதிர்பார்த்ததுபோல் எளிமையாக இல்லாமல் கடினமாக இருக்கலாம். கூடுதல் முயற்சி வெற்றிக்கு உதவும்.

பரிகாரம்: விநாயக பெருமானை தீபம் ஏற்றி வழிபட காரியங்கள் கைகூடும். மன கஷ்டம் நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்

மகரம்:

எப்போதும் சுறுசுறுப்புடன் திகழும் மகரம் ராசி அன்பர்களே! இந்த வாரம் பணவரவு கூடும். செய்யும் காரியத்தில் மனதிருப்தி கிடைக்கும். அடுத்தவர்களுக்காக  எந்த பொறுப் பையும் ஏற்காமல் இருப்பது நல்லது.  மற்றவர்களுக்காக  வீண் அலைச்சல், செலவு செய்ய வேண்டி இருக்கும்.

தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். கடன் பிரச்சனை தீரும். ஆர்டர் பிடிப்பதில் இருந்த கஷ்டம் குறையும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி தொடர்பான கஷ்டங்கள் குறையும்.

குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். புதிய வீடு வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். சிலர் பழைய வீட்டை புதுப்பிப்பார்கள். வாகனம் மூலம் ஆதாயம் உண்டாகும். பிள்ளைகள் சந்தோஷமாக காணப்படுவார்கள். குடும்பத்தினருடன் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேரிடலாம். குடும்பம் சார்ந்த விஷயங்களில் கலந்துரையாடும் போது வார்த்தைகளை கோர்த்து பேசுவது நன்மை தரும்.

பெண்கள் மற்றவர்களிடம் கவனமாக பேசுவது கருத்து வேற்றுமை வராமல் தடுக்கும். வீண் அலைச்சல் குறையும்.

மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும். விளையாட்டு போட்டிகளில்  பங்கேற்கும் போது கவனம் தேவை. 

பரிகாரம்: சிவபெருமானை வில்வத்தால் அர்ச்சனை செய்து வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். காரிய வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி.

.

கும்பம்:

எப்போதும் புன்னகையுடன் இருக்கும் கும்ப ராசி அன்பர்களே! நீங்கள் உதவிக்கரம் நீட்டுவதில் ஆர்வம் மிக்கவர். இந்த வாரம். தன்னம்பிக்கை வளரும். பணவரவு திருப்தி தரும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும். வாக்கு வன்மை அதிகரிக்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். ஆனாலும் தேவையற்ற வீண் பேச்சுகளை தவிர்ப்பது நல்லது.  அறிவுத்திறன் அதிகரிக்கும். பெயருக்கும், புகழுக்கும் பங்கம் வரலாம். 

தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி விறுவிறுப்படையும். வசூலாக வேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பான பிரச்சனைகள் தீரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு குறைந்து வீண் அலைச்சலும் குறையும். ஆனால் பணியை பற்றிய  சிந்தனை அதிகரிக்கும்.

குடும்பத்தில் பாதியில் நின்ற வீடுகட்டும் பணியை மீண்டும் தொடருவீர்கள். சிலர் புதிய வீட்டிற்கு குடிபுகுவார்கள். கணவன் மனைவிக்கிடையில் திடீரென்று கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகள் கல்வியில் முன்னேற்றம் அடைய தேவையான உதவிகளை செய்வீர்கள். வழக்குகளில் நல்ல தீர்ப்பு வரும்.

பெண்களுக்கு திறமையான பேச்சின் மூலம் காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பயணங்கள் மூலம் அலைச்சல் உண்டாகலாம்.

மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் சாதகமாக பலன் தரும். எதிலும் வேகமாக செயலாற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.

பரிகாரம்: அம்மன் கோயிலுக்கு சென்று தீபம் ஏற்றி வழிபட துன்பங்கள் விலகும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், சனி

மீனம்:

பிறர் கூறுவதற்கு மதிப்பளிக்கும் மீன ராசி அன்பர்களே! இந்த வாரம் .வீண் வாக்குவாதங்கள் அகலும். மனதில் உற்சாகம் ஏற்படும். ஆனாலும் வீண் பகை உண்டாகலாம். நண்பர்களிடம் இருந்து பிரிய வேண்டி இருக்கும். கவுரவ பங்கம் ஏற்படாமல் கவனமாக செயல்படுவது நல்லது. 

தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க எடுக்கும் முயற்சிகளில் சாதகமான நிலை காணப்படும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது பணிகளை சிறப்பாகச் செய்து மேலிடத்தில் பாராட்டு பெறுவார்கள்.

குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி சுமுகமான நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம்.

பெண்களுக்கு கடிதம் மூலம் வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும். வர வேண்டிய பணம் வந்து சேரும். கஷ்டங்கள் குறையும்.

மாணவர்கள் மிக கவனமாக பாடங்களை படித்து கூடுதல் மதிப்பெண் பெற முயற்சி செய்வீர்கள்.  தேவையான உதவிகள் கிடைக்கும்.

பரிகாரம்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியை வணங்கி வருவது எல்லா நன்மைகளையும் தரும். மனோதிடம் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், சனி.

************************************************************************

Continue Reading

வார பலன்

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (07/07/2020)

Published

on

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil

07-07-2020

செவ்வாய்கிழமை

 

மேஷம்:

இன்று கணவன், மனைவிக்கிடையில் மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகள் தொடர்பான காரியங்களை செய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும். உங்களது செயல்களுக்கு இருந்த முட்டுகட்டைகள் விலகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரத்து கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

ரிஷபம்:

இன்று மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். கல்வியில் வெற்றி பெற தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. காரிய தடை, தாமதம், வீண் அலைச்சல் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

மிதுனம்:

இன்று உடல் ஆரோக்கியம் உண்டாகும். குடும்ப பிரச்சனை தீரும். பிரச்சனை என்று வரும் போது அதில் சிக்காமல் சாமர்த்தியமாக நழுவுவது நல்லது. மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத செலவு ஏற்படும். 

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா

அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6

கடகம்:

இன்று மற்றவர்களுடன்  வாக்குவாதங்களை தவிர்ப்பதால் பகை ஏற்படாமல் இருக்கும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டு கிடைப்பது அரிது. சிலரது எதிர்பாராத பேச்சு மனவருத்தத்தை தரலாம் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

சிம்மம்:

இன்று தொழில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கும் போது தீர ஆலோசித்தபின் முடிவு எடுப்பது நல்லது.  உத்தியோகத்தில்  இருப்பவர்கள் மேல் அதிகாரிகள், சக ஊழியர்களின் கருத்துக்கு மாற்று கருத்து சொல்லாமல்  இருப்பது நன்மை தரும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

கன்னி:

இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் கருத்து மோதல் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே  இருந்த பூசல்கள் சரியாகும். பிள்ளைகளுக்கு தேவையன பொருட்களை வாங்குவது மற்றும் அவர்களது நலனுக்காக பாடுபட வேண்டியும் இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

துலாம்:

இன்று உங்களது கருத்துக்கு சிலர் மாற்று கருத்து கூறலாம். எதிர்த்து பேசாமல் அமைதியாக இருப்பது நல்லது. மாணவர்கள் எவ்வளவு திறமையாக படித்தாலும் பாடங்கள் கடினமானவை போல தோன்றும். மனதை தளரவிடாமல் படிப்பது வெற்றியை தரும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

விருச்சிகம்:

இன்று எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. செல்வம் சேரும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். சின்ன விஷயங்களுக்கு கூட அதிகம் உணர்ச்சிவசப்படாமல் இருப்பது நல்லது. 

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

தனுசு:

இன்று அடுத்தவருடன் ஏற்படும் பிரச்சனைகளிலும் வாக்குவாதத்திலும்  வெற்றியே கிடைக்கும். பணவரத்தும் கூடும். ஆனால் எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் அடுத்தவரை  நம்புவதிலும் எச்சரிக்கை தேவை. 

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

மகரம்:

இன்று உங்களுக்கு மிகவும் வேண்டியவர் உங்களை விட்டு விலகி செல்லலாம். மாற்று மதத்தினரின் உதவி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு இருக்கும். போட்டிகள் குறையும் 

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

கும்பம்:

இன்று புதிய முயற்சிகளில் ஈடுபட தோன்றும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் செய்யும் பணிகள் திருப்திகரமாக நடந்து முடியும். எதிர்பார்த்த இடமாற்றம் வரலாம். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்து செல்வது மனதுக்கு இதமாக இருக்கும். 

அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

மீனம்:

இன்று கணவன், மனைவிக்கிடையே சிறிய வாக்குவாதம் ஏற்படலாம். பிள்ளைகள் உங்களை புரிந்து கொண்டு நடப்பது மனதுக்கு நிம்மதியை தரும்.  சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். அடுத்தவரை நம்பி பொறுப்புகளை  ஒப்படைப்பதில் கவனம் தேவை. 

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

Continue Reading

வார பலன்

உங்கள் ராசிக்கான இந்த வார பலன்கள் (ஜூலை 6 முதல் 12 வரை)

Published

on

weekly prediction, வாரபலன், weekly horoscope

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

புத்தி சாதுரியத்தால்  புகழையும், செல்வத்தையும் பெறும் மேஷ ராசிக்காரர்களே, இந்த வாரம் சுபகாரியங்களில் கலந்து கொள்ள நேரலாம். பணம் வரவு நன்றாக இருக்கும். இழுபறியாக இருந்தவை சாதகமாக முடியக்கூடும். தேவையற்ற கவலைகள் நீங்கும். உங்களை பற்றி விமர்சனம் செய்து வந்தவர்கள் அதனை விட்டு விடுவார்கள்.

தொழிலில் வியாபாரங்கள் கைகூடா விட்டாலும் அதற்கான விதையை இப்போது ஊன்ற  வேண்டி வரும். பெற்றோர் நலம் கவனிக்கப்பட வேண்டும். மக்கள் நலனிற்கு எந்த குறைபாடும் இருக்காது.

உத்யோகஸ்தர்களுக்கு தேவையான பணவரவு இருக்கும். எல்லா காரியங்களும் அனுகூலமாக நடக்கும். மன கவலை நீங்கி நிம்மதி உண்டாகும்.

குடும்பத்தில் இருந்து வந்த சோதனைகள் அனைத்தும் மாறும்.குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். உறவினர்களிடம் இருந்து வந்த கருத்து மோதல்கள் மறையும். சில்லறை சண்டைகள் ஏற்படலாம். எச்சரிக்கை அவசியம்.

பெண்களுக்கு சில முக்கியமான காரியங்களை கூடுதலாக கவனம் செலுத்துவதன் மூலமும் அதிக உழைப்பினாலும் செய்து முடிப்பீர்கள். வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய கூடுதல் நேரம் ஒதுக்கி படிப்பது நல்லது. கல்வி தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கும்.

பரிகாரம்: விரதம் இருந்து முருகனை கந்தசஷ்டி படித்து வழிபடுவது எல்லா நன்மைகளையும் தரும். அலைச்சலை தவிர்க்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், சனி

************************************************************************************************

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)

சொன்ன சொல்லை காப்பாற்றும் குணமுடைய ரிஷப ராசியினரே, இந்த வாரம் தைரியமாக எதையும் செய்ய தோன்றும். உங்களது செயல்களால் உங்களுக்கு  மற்றவர்களிடம் இருந்து பாராட்டு கிடைக்கும். விருந்து, கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். எதிலும் தயக்கமோ, பயமோ இல்லாமல் ஈடுபடுவீர்கள். தந்தை மூலம் உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் வருமானம் இருக்கும். சகோதரர்களுக்குள் ஒற்றுமை குறையும்.

தொழில், வியாபாரத்தில் முழு கவனத்தையும் செலுத்துவீர்கள். எதிர்பார்த்த  பணம் கைக்கு வந்து சேரும். அரசாங்கம் மூலமாக நடக்க வேண்டிய காரியங்களும் நடக்கும். 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் தடங்கலின்றி எதையும் செய்து முடிப்பார்கள். பணி தொடர்பான பயணங்கள் இருக்கும்.

குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே  நெருக்கம் அதிகரிக்கும். வாழ்க்கை  துணையின்  மூலம் ஆதாயம் உண்டாகும். குடும்பத்துடன் புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்வீர்கள். தந்தை வழி உறவினர்களுடன் இருந்து வந்த மனக்கிலேசம் அகலும். ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும். உங்களது பொருட்களின் மீது கவனம் தேவை. சாதுரியமான செயல்களால் லாபம் உண்டாகும்.

பெண்களுக்கு எதிலும் தயக்கமோ, பயமோ இல்லாமல் ஈடுபட்டு சிறப்பாக செய்வீர்கள். பெரியவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் தடங்கல் இன்றி நன்றாக படிப்பீர்கள். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் மூலம் கல்விக்கான உதவிகள் கிடைக்கும்.

பரிகாரம்: மகாலட்சுமியை பூஜை செய்து வழிபட பண தட்டுப்பாடு நீங்கும். குழப்பங்கள் தீரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி

************************************************************************************************

மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்)

எளிதில் யாருடனும் நண்பராகும் திறமை பெற்ற மிதுன ராசியினரே இந்த வாரம் நீண்ட நாட்களாக இருந்து வந்த வீண் மனக்கவலை நீங்கும். எந்த ஒரு காரியத்திலும் எதிர்பார்த்த வெற்றி தாமதமாக கிடைக்கும். ஒதுங்கி இருந்தால் கூட வலுக்கட்டாயமாக எதிலாவது ஈடுபட சுற்றமும், நட்பும் தூண்டுவார்கள். கவனமாக அதை தவிர்ப்பது நல்லது. எதிலும் கவனமாக இருப்பது நல்லது. வீண் அலைச்சல் செலவு ஏற்படலாம். பயணங்களின் போது  எச்சரிக்கை தேவை.

தொழில், வியாபாரத்தில் இருந்து வந்த மந்த நிலை மாறும். வருமானம் வந்து சேரும். புதிய முயற்சிகள்  காலதாமதமாக முடியும். வாடிக்கையாளர்களிடம்  வாக்கு வாதத்தை  தவிர்த்து அனுசரித்து பேசுவது நல்லது. 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணியை  கவனிக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகளிடமும் சக பணியாளர்களிடமும் அனுசரித்து செல்வது நல்லது.

குடும்பத்தில் அமைதி ஏற்பட குடும்ப உறுப்பினர்களிடம் நிதானமாக பேசுவதும் வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நல்லது. விருந்தினர்கள் வருகையும் அதனால் செலவும் உண்டாகலாம். வழக்குகளை தள்ளி போடுவதும் பேசி தீர்த்துக் கொள்வதும் நல்லது. ஆயுதம், தீ ஆகியவற்றில் கவனம் தேவை.

பெண்களுக்கு அடுத்தவர்கள் பேச்சை கேட்டு எதிலும் ஈடுபடாமல் இருப்பது நன்மை தரும். வீண் அலைச்சலும், செலவும் உண்டாகலாம் கவனம் தேவை.

மாணவர்களுக்கு உயர் கல்வி பற்றிய எண்ணம் அதிகரிக்கும். கூடுதல் மதிப்பெண் பெற படிப்பில் வேகம் காட்டுவீர்கள்.

பரிகாரம்: பெருமாளை வணங்கி வர கடன் பிரச்சனை தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி

************************************************************************************************

கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

கவலைகளை வெளிக்காட்டாமல் எப்போதும் சிரித்த  முகத்துடன் காணப்படும் கடக ராசிக்காரர்களே,  இந்த வாரம் சுணங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பெறும். எதிர்பார்த்த  காரியங்களை  வெற்றிகரமாக செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வாக்கு நாணயம் உண்டாகும். முக்கிய நபர்கள் நட்பு கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். அடுத்தவரை பற்றி எந்த பேச்சும் பேசாமல் இருப்பது நல்லது.

தொழில், வியாபாரம் தொடர்பாக கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். உழைத்த உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும். பயணங்கள் செல்ல நேரிடலாம். தொழில், வியாபாரம் பற்றிய விஷயங்களில் நேரடி கவனம் தேவை. தேவையான பணம் தக்க நேரத்தில் கிடைக்கும். 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக எதையும் செய்வது நல்லது. வீண் அலைச்சல் வேலை பளு ஆகியவை இருக்கும். உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். 

குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை தோன்றி மறையும். ஆனாலும் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளுக்காக பாடுபட வேண்டி இருக்கும். ஒரு நல்ல குறிக்கோளுக்காக புண்ணிய பயணம் செய்ய வேண்டி இருக்கும். ஆடம்பர பொருட்கள், வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதன் மூலம் செலவு உண்டாகும்.

பெண்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். அடுத்தவரை பற்றி எந்த பேச்சும் பேசாமல் இருப்பது நல்லது.

மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் நேரடியாக கவனம் செலுத்துவது நல்லது. பாடங்களில் சந்தேகங்களை  உடனுக்குடன் போக்கிக் கொள்ள ஆசிரியர் உதவி கிடைக்கும்.

பரிகாரம்: சிவன் கோயிலுக்கு  சென்று சிவன், அம்பாளை நெய் தீபம் ஏற்றி வழிபடுவது மன குழப்பத்தை நீக்கும். தெளிவான முடிவுகள் எடுக்க உதவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி

************************************************************************************************

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

துணிச்சலாக எதையும் செய்து வெற்றி  பெறும் சிம்ம ராசியினரே இந்த வாரம் வீண் அலைச்சல் காரிய தடை ஆகியவை அகலும். தடை நீங்கி காரியங்கள்  நடந்து முடியும். அலைச்சல் ஏற்பட்டாலும் எடுத்த முயற்சி கைகூடும். தேவையான வசதிகள்  உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி  இருக்கும்.  சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். உடல் சோர்வும், மன குழப்பமும் நீங்கும். செலவு கட்டுக்குள் இருக்கும்.

தொழில், வியாபாரம் எதிர்பார்த்தபடி நடக்கும். கூட்டு தொழிலில் இருப்பவர்கள் கவனமாக எதையும் செய்வது நன்மையை தரும். தேவையான பண உதவியும் கிடைக்கும். 

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படலாம் முடிவில் எதிர்பார்த்தபடி காரியம் முடியும். சக ஊழியர்கள் ஆதரவும் இருக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். கணவன், மனைவி இருவரும் மனம் விட்டு பேசுவது நல்லது. குடும்ப விஷயங்களை  அடுத்தவரிடம் கூறி ஆலோசனை கேட்பதை தவிர்ப்பது நன்மை தரும். குழந்தைகள் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர், நண்பர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது.

பெண்களுக்கு உடல் சோர்வும் திடீர் கவலைகளும் ஏற்பட்டு நீங்கும். பணவரத்து திருப்தி தரும். மதிப்பும், மரியாதையும் கூடும்.

மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள். சக மாணவர்கள் ஆதரவும் இருக்கும்.

பரிகாரம்: சிவனை வணங்குவதன் மூலம் எல்லா நன்மைகளும் உண்டாகும். தடைகள் நீங்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி

************************************************************************************************

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்)

வாக்கு நாணயம் தவறாமலும்  உண்மைக்காக பாடுபடும் குணமும் உடைய கன்னி ராசியினரே இந்த வாரம் சுணங்கி கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பெறுவதோடு மட்டுமல்லாமல் மனதில் புது திட்டங்கள் உருவாகும். புதிய தொடர்புகளால் நன்மை உண்டாகும். வீண் பகை, மன சஞ்சலம், தேவையற்ற செலவு ஆகியன அகலும். மன சஞ்சலம் தீரும். பகைகள் தொல்லை தராமல் இருக்கும்.

தொழில் மூலம் உண்டாகும் செலவுகள் குறையும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். ஆனால் அவர்களிடம் திறமையாக பேசி தக்க வைத்துக் கொள்வது நல்லது. வியாபாரம் தொழில் போன்றவற்றை விரிவாக்கம் செய்ய புது திட்டங்களை பற்றி ஆலோசனை செய்வீர்கள். 

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். புது தொழிலில் முதலீடு  செய்யும் போது கவனம் தேவை.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குழந்தைகளின் முன்னேற்றத்தில் ஆர்வம் காட்டுவது நல்லது. நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் கூறும் கருத்துகளுக்கு எதிர்த்து பேசுவதை விட்டுவிட்டு நிதானமாக உங்கள் கருத்தை சொல்வது நன்மை தரும்.

பெண்களுக்கு கடன் பிரச்சனைகள் குறையும். புதிய எண்ணங்கள் உண்டாகும். புது நபர்களின் நட்பும் கிடைக்கலாம்.

மாணவர்கள் வீண் விவாதங்களை தவிர்த்து கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது முன்னேற்றத்திற்கு உதவும்.

பரிகாரம்: விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்து வர எதிர்ப்புகள் அகலும். செல்வம் சேரும். மன நிம்மதி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி

************************************************************************************************

துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்)

நடக்காது என்று எதையும் நினைக்காமல் எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்ற துடிப்புடைய துலா ராசியினரே இந்த வாரம் சுபகாரியங்களில் இருந்து வந்த தடங்கல்கள் நீங்கும். ஆனாலும் எதையும் ஒரு முறைக்கு பலமுறை ஆலோசித்து செய்வது நல்லது, மனம் நிலை கொள்ளாமல் ஏதாவது சிந்தித்து கொண்டே இருக்கும். புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது. உடல் ஆரோக்கியம் பெறும்.

தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். தேவையான சரக்குகள் கையிருப்பில் இருக்கும். புது நபர்கள் கூறும் வியாபாரம் தொடர்பான விஷயங்களில் முடிவு எடுக்கும் போது கவனமாக இருப்பது நல்லது. 

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவிகள், அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கும். உங்களது பணி திறமையால் மேல் அதிகாரிகள் திருப்தி அடைவார்கள்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபமாக பேசும் சூழ்நிலை ஏற்படும். கவனமாக இருப்பது நல்லது. மனைவி குழந்தைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. வயிறு தொடர்பான நோய் வந்து நீங்கும்.

பெண்களுக்கு சதா எதையாவது யோசித்துக் கொண்டே இருப்பீர்கள். எந்த காரியத்திலும் முடிவு எடுக்கும்  முன்பு தீர ஆலோசிப்பது நல்லது.

மாணவர்களுக்கு கல்வியை பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். பாடங்களை படிக்கும் போது மனதை ஒருமுகபடுத்தி படிப்பது நல்லது.

பரிகாரம்: சுமங்கலி பூஜை செய்து சுக்கிர பகவானுக்கு அர்ச்சனை செய்ய குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். பொருள் சேர்க்கை உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி

************************************************************************************************

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

மற்றவர்களை அறிந்து அவர்களுக்கேற்ப நடந்து கொண்டு காரியம் சாதிக்கும் திறமை உடைய விருச்சிக ராசியினரே இந்த வாரம் சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியவெற்றி உண்டாகும். எந்த ஒரு வேலையிலும் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். உங்களுடன் பக்கபலமாக ஒருவர் இருந்து தேவையான உதவிகளைச் செய்வார். நண்பர்கள் மூலம் புதிய வசதிகள் கிடைக்க பெறுவீர்கள்.

தொழில், வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும். புதிய ஆர்டர்கள் வருவதில் இருந்த தடைகள் விலகும். தேவையான பணவசதி கிடைக்கும். 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். புதிய பொறுப்புகளும் அதனால் வருமானமும் இருக்கும். எதிர்ப்புகள் அகலும்.

குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். பூமி மூலம் லாபம் கிடைக்கும் சகோதரர்களால் நன்மை உண்டாகும். வாழ்க்கை துணைக்கு தேவையான வசதிகள் செய்து தருவீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.  எல்லா வகையிலும் நன்மையும் மகிழ்ச்சியும் கிடைக்கும்.

பெண்களுக்கு திறமையான பேச்சின் மூலம் காரியவெற்றி உண்டாகும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். மனமகிழ்ச்சி உண்டாகும். சிறப்பாக செயல்படுவீர்கள்.

பரிகாரம்: விரதம் இருந்து நவகிரகத்தில் செவ்வாய் பகவானுக்கு தீபம் ஏற்றி வழிபட எல்லா நன்மையும் உண்டாகும். உடல் ஆரோக்கியம் கூடும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், சனி

************************************************************************************************

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

சோம்பல் இல்லாமல் சுறுசுறுப்புடன் இருக்கும் தனுசு ராசியினரே இந்த வாரம் எதிர்பார்த்த காரியங்கள் மனதுக்கு திருப்தி அளிக்கும் விதத்தில் நடந்து முடியும். கடன் சுமை குறையும். எதிர்ப்புகள்  அகலும். எதையும் ஒரு முறைக்கு பலமுறை  யோசித்து செய்ய தோன்றும். யாருக்காவது உத்திரவாதம் தரும்போது கவனமாக  இருப்பது நல்லது. சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும்.

தொழில், வியாபாரத்தில் கடினமான முயற்சிக்கு பிறகு எதிர்பார்த்த லாபம் வந்து சேரும். போட்டிகள் குறையும். புதிய வாடிக்கையாளர்களால் திருப்தி ஏற்படும்.  கடன் தொல்லைகள் குறையும். 

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பதவிகள் தாமதமாக கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல பலன் ஏற்படும்.

குடும்பத்தில் வாழ்க்கை துணையின் ஆலோசனை உங்கள் முன்னேற்றத்திற்கு உதவும். எதிர்பாராமல் ஏற்படும் குடும்ப செலவை சமாளிக்க தேவையான பண உதவியும் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான வசதிகள் கிடைக்கும். நண்பர்கள், உறவினர்கள் மூலம் தேவையான உதவிகளும் கிடைக்க பெறுவீர்கள்.

பெண்களுக்கு அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் போது கவனம் தேவை. எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது.

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற ஆசிரியர்களின் ஆலோசனையை கேட்டு பயன் பெறுவது நல்லது. முயற்சிகள் வெற்றி பெறும்.

பரிகாரம்: திருவாசகம் படித்து வர எல்லா பிரச்சனைகளும் தீரும். மனதில் அமைதி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி

************************************************************************************************

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள் திருவோணம் அவிட்டம் 1,2 பாதங்கள்)

பொது காரியங்களில் விருப்பம் உள்ள மகர ராசியினரே நீங்கள் திறமைசாலிகளாகவும் இருப்பீர்கள் இந்த வாரம் அறிவு திறன் கூடும். இனிமையான பேச்சின் மூலம் பலரது உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். செல்வம் சேரும். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான போக்கு காணப்படும். எதிர்ப்புகள் அகலும். உங்கள் செயல்களுக்கு இருந்த தடை நீங்கும்.

தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். பலவகை முன்னேற்றங்களும் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். தேவையான பண உதவியும் கிடைக்க பெறுவீர்கள். 

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதையும் சாதிக்கும் திறமையும் சாமர்த்தியமும் உண்டாகும்.

உடல் ஆரோக்கியத்தில்  கவனம் தேவை. தேவையற்ற இடமாற்றம் உண்டாகலாம். மற்றவர்களுக்காக பரிந்து பேசும் போதும் அவர்களுக்கு உதவிகள் செய்யும் போதும் கவனமாக இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் ஏற்படும்.

பெண்களுக்கு அறிவு திறமை அதிகரிக்கும். இனிமையான பேச்சின் மூலம் எதிலும் வெற்றி கிடைக்கும். தேவையான பண உதவியும் எதிர் பார்க்கலாம்.

மாணவர்கள் திறமையாக செயல்பட்டு பாராட்டுகள் கிடைக்க பெறுவீர்கள். கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.

பரிகாரம்: விநாயக பெருமாளை தீபம் ஏற்றி வழிபட்டு வர காரிய தடைகள் நீங்கும். எதிலும் நன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், சனி

************************************************************************************************

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதங்கள்)

எந்த காரியத்தையும் தீர ஆலோசித்து அதில் ஈடுபடும் குணமுடைய கும்ப ராசியினரே இந்த வாரம் எல்லா காரியங்களும் முன்னேற்றமாக நடக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். திறமை வெளிப்படும். பல வகையிலும் முன்னேற்றம் உண்டாகும். சொத்து தொடர்பான விஷயங்களில் இழுபறியான நிலை காணப்படும். இடமாற்றம் உண்டாகும். சுப செலவுகள் ஏற்படும்.

தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் தாமதபோக்கு காணப்படும். செலவும் அதிகரிக்கும் தேவையான பணவசதி கிடைக்கும். விரிவாக்கம் தொடர்பான முயற்சிகள் இழுபறியான நிலையில் இருந்து பின்னர் முடியும். 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணம் செல்ல வேண்டி இருக்கும் சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் தாமதப்படலாம். 

குடும்பத்தில் தீடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கிடையே எதையும் பேசி தெளிவுபடுத்திக் கொள்வது நன்மை தரும். குழந்தைகளுக்கான பொருட்களை வாங்குவீர்கள். எந்த ஒரு விஷயத்திலும் ஈடுபடும் முன்பு தயக்கம் ஏற்பட்டு பின்னர் தெளிவு உண்டாகும். 

பெண்களுக்கு இழுபறியாக இருந்த காரியங்கள் முடிவுக்குவரும். புதிய தொடர்புகளால் லாபம் கிடைக்க பெறுவீர்கள். இடமாற்றம் ஏற்படலாம்.

மாணவர்களுக்கு கல்விக்கான செலவு உண்டாகும். திறமை வெளிப்படும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். அதன் மூலம் நன்மை ஏற்படும்.

பரிகாரம்: ஆஞ்சனேயரை வழிபட்டு வருவதால் மனதில் துணிச்சல் உண்டாகும். எதிலும் வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், சனி

************************************************************************************************

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

நீதி, நேர்மை, உண்மை என்று எப்போதும் பாடுபடும் மீன ராசியினரே, நீங்கள் எதிர்ப்புகளை எளிதில் வெல்லுவீர்கள். இந்த வாரம் எந்த ஒரு சின்ன விஷயம் கூட லாபமாக நடந்து முடியும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும் அதனால் கவுரவம் உண்டாகும். பூமி, வாகனம் மூலம் ஆதாயம் உண்டாகும். பண வரத்து கூடும்.

தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்கும். வங்கியில் இருப்பு கூடும். வாங்கிய கடனை திருப்பி செலுத்தி மன நிம்மதி அடைவீர்கள். தொழில் தொடர்பான பயணங்கள் வெற்றி கிடைக்கும். 

உத்யோகத்தில் செயல் திறமை மூலம் கடினமான பணியையும் சிறப்பாக செய்து முடித்து மேல் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்க பெறுவீர்கள். அதிகாரம் செய்யும் பதவிகள் தேடிவரும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் உண்டாகும். சுபகாரியம் நடக்கும். திருமண முயற்சி மேற் கொண்டவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே சந்தோஷம் நிலவும். கஷ்டமில்லா சுக வாழ்க்கை இருக்கும். உறவினர்கள் நண்பர்கள் ஆதரவும் கிடைக்கும். நெடுநாளைய சங்கடம் தீரும்.

பெண்களுக்கு எல்லாவற்றிலும் லாபம் கிடைக்கும். மரியாதை அந்தஸ்து கூடும். எதிர்ப்புகள் விலகும். மன மகிழ்ச்சி உண்டாகும்.

மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் மதிப்பெண் கிடைக்க எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். ஆசிரியர்களின் பாராட்டும் கிடைக்கும்.

பரிகாரம்: குல தெய்வத்தை பூஜை செய்து வணங்க எல்லா காரியமும் வெற்றியாக முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி

************************************************************************************************

Continue Reading




இந்தியா1 hour ago

இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி.. எய்ம்ஸ் மருத்துவமனையில் மனிதர்கள் மீது சோதனை!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்10 hours ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (15/07/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்11 hours ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (15/07/2020)

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்1 day ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (14/07/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்1 day ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (14/07/2020)

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 days ago

உங்களுக்கான இந்த வார ராசிபலன்கள் (ஜூலை 13 முதல் 19 வரை)

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்2 days ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (13/07/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்2 days ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (13/07/2020)

டிவி3 days ago

சன் டிவியின் பிரபல சீரியல்கள் நிறுத்தம்; ரசிகர்கள் ஷாக்!

சினிமா செய்திகள்3 days ago

கொரோனா எதிரொலி.. அமிதாப்பச்சன் குடும்பத்தின் 4 பங்களாக்களுக்குச் சீல்!

வேலை வாய்ப்பு8 months ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா12 months ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா11 months ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு11 months ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா12 months ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலை வாய்ப்பு11 months ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலை வாய்ப்பு11 months ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு2 months ago

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

சினிமா செய்திகள்2 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வீடியோ செய்திகள்4 months ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு

வீடியோ செய்திகள்4 months ago

சாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு

வீடியோ செய்திகள்4 months ago

கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? – சிறப்பு தொகுப்பு

வீடியோ செய்திகள்4 months ago

கோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi

வீடியோ செய்திகள்4 months ago

லாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு

வீடியோ செய்திகள்4 months ago

நானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி

வீடியோ செய்திகள்4 months ago

ரஜினி குறித்து பேச ரூ 5 லட்சம் தரவேண்டும் – சரத்குமார்

வீடியோ செய்திகள்4 months ago

கொரானா வைரசை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக சீனா அறிவிப்பு

வீடியோ செய்திகள்4 months ago

எண்ணெய் கிணற்றில் விழுந்த நாய்க்குட்டி..தலைகீழாக தொங்கி நாய்க்குட்டியை காப்பாற்றிய சிறுவன்.

வீடியோ செய்திகள்4 months ago

கட்சி ஆரம்பிச்சிடலாமா? : வடிவேலு சரவெடி

Trending

%d bloggers like this: