Connect with us

வார பலன்

உங்களுக்கான இந்த வார ராசிபலன்கள் (2021, மார்ச் 21 முதல் மார்ச் 27 வரை)

Published

on

weekly prediction, வாரபலன், weekly horoscope

மேஷம் (அஸ்வினி, பரணி,  கார்த்திகை 1ம் பாதம்)

எதிலும் துணிவுடன் முடிவு எடுக்கும்  குணமுள்ள மேஷராசி அன்பர்களே, நீங்கள் பயமின்றி எந்த காரியத்திலும் இறங்கலாம். இந்த  வாரம் அவசரமாக எதையும் செய்ய தோன்றும்.  துணிச்சலுடன் எதிலும் ஈடுபடுவீர்கள்.  சாமர்த்தியமான பேச்சின் மூலம் எல்லா அனுகூலமும் கிடைக்க பெறும். ஆனால்  வீண்வாக்குவாதத்தால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. 

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் திட்டமிட்டு  செயல்படுத்துவது வளர்ச்சிக்கு உதவும்.  வாடிக்கையாளர்களிடம்  சாதூர்யமாக பேச வேண்டி இருக்கும். உத்தியோகத்தில்  இருப்பவர்களுக்கு துணிச்சல் அதிகரிக்கும். எதை பற்றியும் கவலைப்படாமல் வேலையில்  வேகம் காட்டுவீர்கள். முக்கிய முடிவுகள்  எடுக்கும் போது அவசரப்படாமல் இருப்பது நல்லது.  

குடும்பத்தில் இருப்பவர்களுடன்  தன்மையாக பேசுவது நல்லது. கணவன்,  மனைவிக்கிடையே  ஒற்றுமை குறைவு ஏற்படலாம் கவனம் தேவை.  பிள்ளைகளுக்காக செய்யும்  வேலைகளில் தடை ஏற்படலாம். கலைத்துறையினருக்கு நன்மைகள் நடக்கும் காலகட்டம். 

பெண்களுக்கு எந்த காரியத்திலும் அவசரம் காட்ட தோன்றும். நிதானமாக செய்தால் வெற்றி நிச்சயம். வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது  நல்லது.  

மாணவர்களுக்கு எதிர்கால கல்வி தொடர்பாக அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்த்து  தீர ஆலோசித்து எதிலும் ஈடுபடவும்,

பரிகாரம்: முருகனை வணங்கி வர எல்லா பிரச்சனைகளிலும் சுமூக முடிவு ஏற்படும். காரிய தடைகள் நீங்கும்.

————————————————————————————————-

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)

லட்சியத்தில் உறுதியான ரிஷப ராசி அன்பர்களே நீங்கள் அவசரப்படுவதை தவிர்ப்பது நன்மை தரும். இந்த வாரம் வீண் செலவும்,  அலைச்சலும் உண்டாகலாம். எதிர்பாராத இடமாற்றம்  ஏற்படலாம்.  தேவையற்ற  குற்றச்சாட்டுக்கு ஆளாகலாம். எனவே  எதிலும் மிகவும் கவனத்துடன் ஈடுபடுவது நல்லது.  

தொழில் வியாபாரம்  தொடர்பான  பணிகளில் தாமதம் ஏற்படும்.  வியாபாரம் தொடர்பான கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகத்தில்  இருப்பவர்கள் அடுத்தவர்களுக்கான பொறுப்புகளை ஏற்கும் போது எச்சரிக்கை தேவை.   

கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது.  வாழ்க்கை துணையின் உடல்  ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகள் மூலம் மனகவலை  ஏற்படலாம். பெண்களுக்கு மற்றவர்களுக்கு உதவி செய்யபோய்  தேவையற்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரலாம். கவனம் தேவை.  

மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பாராத தடை, தாமதம் உண்டாகலாம்.  சிறிய வேலையும் செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.  கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும். 

பரிகாரம்:  பெருமாள் கோவிலில் உள்ள தாயாரை பூஜித்து வணங்கி வர காரியங்கள் சாதகமாக முடியும்.  கடன் பிரச்சனை தீரும்.  

————————————————————————————————-

மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்  திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

அபார அறிவாற்றலும், ஆராய்ச்சி நோக்குடன் எதையும் பார்த்து செய்யும் குணமுடைய  மிதுனராசி அன்பர்களே, இந்த வாரம் எல்லாவிதமான முன்னேற்றத்தையும் தரும். வாகனங்களால் லாபம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். மனதில் இருந்த குழப்பம் நீங்கும். புதிய நண்பர்களின் நட்பு கிடைக்கும். நீண்ட  தூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும். 

தொழில் வியாபாரம்  முன்னேற்றம் அடையும். புதிய தொழில்  அல்லது வியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு செயல்திறன் அதிகரிக்கும்.   

குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். திருமணம்  தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் காணப்படும்.  குடும்ப உறுப்பினர்கள் மத்தியில்   மகிழ்ச்சி நிலவும், கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் உண்டாகும். 

பெண்களுக்கு மனக்குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும்.    தொலைதூர தகவல்கள்  நல்ல தகவல்களாக வரும். 

மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். கடினமான காரியங்களையும்  எளிதாக செய்து முடிப்பீர்கள்.

பரிகாரம்: வியாழக்கிழமையில் ஸ்ரீ ஆஞ்சநேயரை வெண்ணெய் சாற்றி தீபம் ஏற்றி வணங்க காரிய தடை நீங்கும். 

————————————————————————————————-

கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

எதிலும் நேர்மையும், வளைந்து கொடுக்காத உறுதியான கொள்கையும் தலைமைப் பண்பும் உடைய கடக ராசி அன்பர்களே, இந்த வாரம் மனதில் இருந்த குழப்பம் நீங்கி திருப்தி நிலவும்.  பணவரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். பயணங்கள் செல்ல நேரிடலாம். வாக்கு  வன்மையால் எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.  

தொழில் வியாபாரத்தில்  இருந்த போட்டிகள்  விலகும். பணியாட்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும்.  சரக்குகளை  பாதுகாப்பாக வைப்பது நல்லது.  உத்தியோகத்தில்  இருப்பவர்களுக்கு உழைப்பு  அதிகரிக்கும்.  எந்திரங்களை இயக்குபவர்கள் கவனமாக இருப்பது  நல்லது. 

குடும்பத்தில் மகிழ்ச்சியும், குதூகலமும் ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் ஒற்றுமை யுடன் செயல்படுவார்கள். கணவன்,  மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். குழந்தைகள்  உங்கள் சொல்படி நடப்பது  மனதுக்கு  மகிழ்ச்சி தரும். 

பெண்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.  

மாணவர்களுக்கு கல்வி,  விளையாட்டில் இருக்கும் போட்டிகள் நீங்கும்.  

பரிகாரம்: காஞ்சி காமாட்சியை பூஜித்து வணங்கி வர மனகுழப்பம் நீங்கும். காரிய வெற்றி கிடைக்கும்.

————————————————————————————————-

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

எந்த சூழ்நிலையிலும்  தன்னம்பிக்கையுடன் செயல்படும் சிம்ம ராசி அன்பர்களே இந்த வாரம் தடைபட்டு வந்த காரியங்கள் தடை நீங்கி சாதகமாக நடந்து முடியும்.  முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அதனால் நன்மை உண்டாகும். பணம் சம்பாதிக்கும் திறமை  அதிகப்படும்.  உடல் நலம் சீரடையும்.  மற்றவர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கும்.  

தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சாதகமாக நடக்கும். ஆர்டர்கள்   பெறுவதில் இருந்த சிக்கல்கள்  தீரும்.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும்.  மற்றவர்கள் மூலம்  உதவி  கிடைக்கும். 

குடும்பத்திற்கு தேவையான பொருட்களை  வாங்கி மகிழ்வீர்கள்.  கணவன், மனைவிக்கிடையில் இருந்த கருத்து  வேற்றுமை நீங்கும். இதனால் வாழ்க்கையில்  சந்தோஷம் அதிகரிக்கும்.   பிள்ளைகளால் கவுரவம் அந்தஸ்து உயரும். துக்கமும்,  துன்பமும் நீங்கும்.   

பெண்களுக்கு தடைபட்ட காரியங்களில் இருந்த தடைநீங்கி சாதகமாக நடந்து  முடியும்.  

மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம்  உண்டாகும். எதிர்கால கல்வி தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். திறமை வெளிப்படும்.

பரிகாரம்: சிவனை வணங்க எல்லா பிரச்சனைகளும் தீரும். மனகவலை அகலும்.

————————————————————————————————-

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

எப்போதும் எதை பற்றியாவது சிந்தித்துக் கொண்டே இருக்கும் உழைப்பின் மகத்துவத்தை உலகிற்கு சொல்லும் கன்னி ராசியினரே இந்த வாரம் நிம்மதியும், சுகமும் அதிகமாகும்.  புண்ணிய தலங்களுக்கு யாத்திரை செல்ல வேண்டி  வரலாம்.  பணவரத்து திருப்திகரமாக  இருக்கும். பலவகையிலும் பிறர் உதவி கிடைக்க பெறுவீர்கள். புத்திசாதூர்யம்  அதிகரிக்கும்.   யாருக்கும் வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. 

தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். புதிய ஆர்டர்கள் பெறவும், வாடிக்கையாளர்களை திருப்தி செய்யவும் அலைய வேண்டி  இருக்கும்.    உத்தியோகத்தில் இருப்பவர்கள்  மற்றவர்களுக்காக பொறுப்புகள் ஏற்கும் போது மிகவும் கவனமாக  இருப்பது வீண்பழி   ஏற்படாமல் தடுக்கப்படும்.   அனுபவபூர்வ மான அறிவுதிறன் கூடும்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன்  அனுசரித்து செல்வது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம்.   பிள்ளை களுக்காக செலவு செய்ய நேரிடும்.  உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். 

பெண்களுக்கு மற்றவர்கள்  உதவி கிடைப்பதன் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். 

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண அனுபவ பூர்வமான அறிவு கைகொடுக்கும்.

பரிகாரம்: ஸ்ரீ ரங்கம் ரங்கநாதரை பூஜித்து வணங்கி வர குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் உண்டாகும். வீண் அலைச்சல் குறையும்.  காரிய தடை நீங்கும்.

————————————————————————————————-

துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம்  பாதம்)

மற்றவர்கள் கூறும் குறைகளை பற்றி கவலைப்படாமல் நினைத்ததை செய்து முடிக்கும் ஆற்றலுடைய துலாராசி அன்பர்களே இந்த வாரம் எதிலும் மிகவும் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருப்பது நல்லது. திடீர்  உடல்நல பாதிப்பு உண்டாகலாம். மனம் நிலை கொள்ளாமல் தவிக்கும் நிலை வரலாம்.   கவுரவம், அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த உதவிகள்  மற்றவர்கள் மூலம் கிடைக்கும். 

தொழில் வியாபாரத்தில் மந்தமான  போக்கு காணப்பட்டாலும் பணவரத்து  குறைவு இருக்காது.  தொழில்  கூட்டாளிகளுடன்  அனுசரித்து  செல்வது நன்மைதரும்.   உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது.    வீண் அலைச்சலும் கூடுதல்  உழைப்பும் இருக்கும். 

குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு அதனால் நிம்மதி குறையலாம். வாழ்க்கை துணையின் பேச்சை கேட்டு  நடக்க வேண்டி இருக்கும்.   

பெண்களுக்கு கவுரவம் அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த உதவிகள்  கிடைக்கும்.  

மாணவர்களுக்கு கவனமாக படிப்பது வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது.  

பரிகாரம்: குல தெய்வத்தை  பூஜித்து வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். மனவருத்தம் நீங்கும்.  

————————————————————————————————-

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

வார்த்தைகளை அளந்து பேசுவது போல செலவு செய்வதிலும் சிக்கனத்தை கடைபிடிக்கும் விருச்சிக ராசி அன்பர்களே இந்த வாரம் மனோதைரியம் அதிகரிக்கும். எல்லாகாரியங்களும் சாதகமாக நடந்து   முடியும். எல்லா இடங்களிலும் மரியாதையும், கவுரவமும் அதிகரிக்கும். எல்லாதரப்பினரிடம் இருந்தும்  ஆதரவு கிடைக்கும்.   நன்மை தீமைகளை பற்றி கவலைப் படாமல் தலை நிமிர்ந்து நடப்பார்கள். 

தொழில் வியாபாரம்  முன்னேற்ற மடையும்.  போட்டிகள் குறையும்.  தொழில் தொடர்பான தகராறுகள் நீங்கும். எதிர்பார்த்த லாபம்  கிடைக்க பெறுவீர்கள்.  கடன் பிரச்சனை தீரும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள்  நிர்வாக திறமை வெளிப்படும். மேல் அதிகாரிகளின்  ஆதரவு கிடைக்கும். எழுத்து தொழிலில் இருப்பவர்கள் முன்னேற்றம் அடைவார்கள். 

குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும்.  திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தை சாதகமான பலன் தரும்.  கணவன்,  மனைவிக்கிடையே சந்தோஷம் நிலவும்.  பிள்ளைகளுக்காக  செய்யும் பணிகள் திருப்தி தரும்.    அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன்  இருந்த தகராறுகள் நீங்கும்.  

பெண்களுக்கு நீங்கள் செய்யும் காரியங்களுக்கு எல்லா தரப்பினரிடம் இருந்தும்  ஆதரவு கிடைக்கும். நன்மை தீமைகளை பற்றி  கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள். 

மாணவர்களுக்கு  கல்வி தொடர்பான பிரச்சனைகள்  நீங்கும். திறமை வெளிப் படும். சக மாணவர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை  நீங்கும்.

பரிகாரம்: செவ்வாய்கிழமை விரதம் இருந்து முருகனை வழிபட மனகஷ்டம் நீங்கும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

————————————————————————————————-

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

தொலைநோக்கு சிந்தனை உடைய   அதே நேரத்தில் எதைப்பற்றியும் கவலைப்படாமல்  செயலாற்றும்  தனுசு ராசி அன்பர்களே,  இந்த வாரம் எதிர்ப்புகள் நீங்கும். பகைகள் விலகும். அடுத்தவர்களால்  இருந்த பிரச்சனைகள் சரியாகும். பணவரத்து  எதிர்பார்த்தபடி இருக்கும். எல்லாவசதிகளும் கிடைக்கும். தர்மசிந்தனை அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள்  கிடைக்க பெறுவீர்கள்.  

தொழில் வியாபாரம்  சிறப்படையும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள்.   வியாபார வளர்ச்சிக்கு இருந்த தடைகள் நீங்கும். பழைய  பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் பதவிஉயர்வு உண்டாகும். நீண்ட தூர  பயணங்களால் காரிய அனுகூலம்  உண்டாகும். சக பணியாளர்கள் மூலம் உதவியும் கிடைக்க பெறுவீர்கள். 

குடும்பத்தில் உற்சாகம் இருக்கும். மற்றவர்கள்  உங்களை அனுசரித்து செல்வார்கள்.  கணவன், மனைவிக் கிடையே மகிழ்ச்சியான நிலை  காணப்படும். பிள்ளைகள்  துணையால் மருத்துவ செலவு ஏற்படலாம். பேச்சின் இனிமை சாதூரியத்தால் எளிதில் காரியங்கள் கைகூடும். 

பெண்களுக்கு எதிர்காலத்துக்கு உதவக்கூடிய விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும்.  

மாணவர்களுக்கு கல்வியில் உயர்வு உண்டாகும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தைரியம் ஏற்படும். போட்டிகளில் பங்கு பெற ஆர்வம்  உண்டாகும்.   

பரிகாரம்: ஸ்ரீ ராகவேந்திரரை வியாழக் கிழமையில் வணங்கி வழிபட காரிய வெற்றி உண்டாகும். குடும்பத்தில் அமைதி ஏற்படும்.  

————————————————————————————————-

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

எந்த காரியத்தையும் தீர ஆலோசித்து செய்யும் அதே நேரத்தில் அதில் உள்ள லாப நஷ்டங்களையும் அறிந்து அதற்கேற்றவாறு  செயல்படும் மகர ராசியினரே இந்த வாரம் மனகுழப்பம் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். மற்றவர்களிடம் பழகும் போது  கவனமாக இருப்பது நல்லது. சமூகத்தில் கவுரவம் அந்தஸ்து அதிகரிக்கும். 

தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி அவற்றை வெற்றிகரமாக  செய்து முடிப்பீர்கள்.  வியாபாரம்  தொடர்பான பயணங்கள் லாபம் தருவதாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள்  மேல் அதிகாரிகள் கொடுத்த வேலைகளை   கவனமாக செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள்.  செயல் திறமை அதிகரிக்கும். 

குடும்பத்தில் சுகமும், நிம்மதியும் இருக்கும். குடும்பத்திற்கு  அதிகப்படி யான வருமானமும் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே   சகஜ நிலை காணப்படும். குழந்தைகள்  திறமையை கண்டு அவர்களை பாராட்டுவீர்கள். உறவினர் வருகை இருக்கும். யாரிடம் பேசும்  போதும்  நிதானமாக பேசுவது நன்மை தரும். 

பெண்களுக்கு எதிலும்  மிகவும் கவனமாக  ஈடுபடுவது நன்மை தரும். திட்டமிட்டு செயல்படுவது வெற்றிக்கு உதவும். 

மாணவர்களுக்கு  உயர்கல்வி தொடர்பான சந்தேகங்களை மற்றவர் களிடம் கேட்டு தெரிந்து கொள்வீர்கள்.  

பரிகாரம்: திருப்பதி வெங்கடா ஜலபதியை வணங்கி வர எல்லா பிரச்சனை களும் தீரும்.  மனதிருப்தி ஏற்படும்.  

————————————————————————————————-

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதம்)

எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அதற்கேற்றவாறு காரியங்களை செய்யும் குணமுடைய கும்பராசி அன்பர்களே இந்த வாரம் பணவரத்து  அதிகரிக்கும். அதே நேரத்தில் செலவும் கூடும்.  எதிர்பார்த்த உதவிகள்  கிடைக்கும்.  துணிச்சல் உண்டாகும்.  எதை பற்றியும்  முன்பின் யோசிக்காமல் செயல்களில் இறங்கி  விடுவீர்கள். தேவையற்ற இடமாற்றம் உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு  இருப்பவர்களுக்கு   கீழ்நிலையில்  உள்ளவர்களால் லாபம்  கிடைக்க பெறுவீர்கள்.  சரக்குகளை  பாதுகாப்பாக வைத்துக் கொள்வது நல்லது.  உத்தியோகத்தில் இருப்பவர்கள்  எந்த ஒரு வேலையையும் செய்து முடிப்பதில் வேகம்  காட்டுவார்கள். சக ஊழியர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். 

குடும்பத்திற்கு தேவையான  பொருட்கள் வாங்குவதன்  மூலம் செலவு உண்டாகும். சகோதரர்கள் மூலம் உதவி கிடைக்கும். உறவினர்கள்  வருகை இருக்கும் அதே நேரத்தில் அவர்களுடன் வாக்குவாதம் செய்வதை  தவிர்ப்பது நல்லது.  கணவன், மனைவிக்கிடையே   மனம்விட்டு பேசுவதன் மூலம்  கருத்து வேற்றுமை வருவதை தவிர்க்கலாம். பிள்ளைகளிம் அனுசரணையாக நடந்து கொள்வது  நன்மைதரும். 

பெண்களுக்கு  துணிச்சலுடன் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள். பணவரத்து திருப்தி தரும். வாக்கு வாதத்தை தவிர்ப்பது நன்மைதரும்.   

மாணவர்களுக்கு மிகவும் கவனமாக எதிலும் ஈடுபடுவது நல்லது. கல்வியை பற்றிய கவலை நீங்கும்.  

பரிகாரம்: சனி பகவானை சனிக்கிழமையில்  நல்லெண்ணெய்தீபம் ஏற்றி வழிபட உடல் ஆரோக்கியம்  உண்டாகும். கஷ்டங்கள் குறையும்.

————————————————————————————————-

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

உண்மையாகவும், நேர்மையாகவும் நடக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக உடைய மீன ராசி அன்பர்களே இந்த வாரம் வீண் மனகுழப்பம்  ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களுக்கு உதவபோய் வீண் பிரச்சனையில் சிக்கி கொள்ளலாம். ஆன்மிக எண்ணம்  ஏற்படும். விருப்பமான நபரை  சந்திப்பதன் மூலம் மனதுக்கு மகிழ்ச்சி ஏற்படலாம். 

தொழில் வியாபாரம் தொடர்பான  காரியங்களில் இழுபறியான நிலை காணப்படும். திட்டமிட்டு  செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில்   கூடுதல் லாபம் பெற முடியும். உத்தி யோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமையும், வீண் அலைச்சலும் உண்டாகும். கவனமாக   வேலைகளை செய்யாவிட்டால்  மேல் அதிகாரிகளின்  அதிருப்திக்கு ஆளாக நேரிடலாம். 

குடும்பத்தில் இருப்பவர்களுடன்  சில்லறை சண்டைகள் உண்டாகலாம் கவனம் தேவை.  கணவன், மனைவிக் கிடையே  மனவருத்தம்  ஏற்படும் நிலை உருவாகலாம். பிள்ளைகளுடன்  பேசும் போது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. அக்கம்பக்கத்தில் இருப்பவர் களுடன்  அனுசரித்து செல்வது நல்லது. 

பெண்களுக்கு மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கும் சந்திப்பு உண்டாகும். வீண் செலவும் ஏற்படலாம். கோபத்தை குறைப்பது நல்லது.  

மாணவர்களுக்கு விளையாட்டுகளில் ஆர்வம்  உண்டாகும். அதே நேரத்தில் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது வெற்றிக்கு உதவும்.

பரிகாரம்: நவகிரகத்தில் குருபகவானுக்கு  நெய்தீபம் ஏற்றி முல்லை மலர் சாற்றி  வழிபடுவது செல்வ சேர்க்கையை தரும். கல்வியில்   வெற்றி கிடைக்கும்.

————————————————————————————————-

 

வார பலன்

உங்களுக்கான இந்த வார ராசிபலன்கள் (09/05/2021 முதல் 15/05/2021 வரை)

Published

on

weekly prediction, வாரபலன், weekly horoscope

மேஷம் (அஸ்வினி, பரணி,  கார்த்திகை 1ம் பாதம்)

இந்த வாரம் தெய்வபக்தி அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். கவனமாக பேசுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத ஏற்பட்ட சிக்கல்கள் தீரும். பொருட்கள் சப்ளை செய்வதில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணி சுமையை ஏற்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் ஏதாவது மனம் நோகும்படியான நிலை உருவாகலாம். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். பயணங்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். கலைத்துறையினருக்கு வீண் அலைச்சல், காரிய தாமதம் போன்றவை ஏற்படலாம். அரசியல்வாதிகள் கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனை தீரும். மாணவர்களுக்கு  கல்விக்காக செலவு உண்டாகும். கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்

பரிகாரம்: முருகனுக்கு தீபம் ஏற்றி வணங்கவும். பொருளாதார பிரச்சனைகள் அகலும்.

********************************************************

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)

இந்த வாரம் நீண்ட நாட்களாக இருந்த காரிய தடைகள் நீங்கும். மனதில் இருந்த குழப்பம் நீங்கும். சாமர்த்தியமான பேச்சு கை கொடுக்கும். தொழில் வியாபார சிக்கல்கள் நீங்கி லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்கு புதிய பதவி கிடைக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். பெண்களுக்கு திறமையான பேச்சின் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். காரிய தடைகள் நீங்கும். கலைத்துறையினருக்கு வாக்குவன்மையால் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்ககும். தடைபட்ட காரியங்கள் நல்லபடியாக நடக்கும். அரசியல்வாதிகள் எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பணம் சம்பாதிக்கும்  திறமை அதிகப்படும். மாணவர்கள்  கல்வியில் முன்னேற்றமடைய முழு முயற்சியுடன் படிப்பீர்கள். 

 

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன், வெள்ளி

பரிகாரம்:  அம்மனுக்கு அர்ச்சனை செய்து வணங்கவும். குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும்.

********************************************

மிதுனம் (மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

இந்த வாரம் துணிச்சலான சில முடிவுகளை எடுப்பதன் மூலம் நன்மைகள் உண்டாகும். மனதில் மகிழ்ச்சியான எண்ணங்கள்  தோன்றும். திடீரென்று அவசர முடிவை எடுக்க வேண்டியிருக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த தடை நீங்கி பணவரத்து கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உறவினர்கள் மூலம் அடிக்கடி மனக்கவலை ஏற்படும். பெண்களுக்கு மனக்குறைகள் நீங்கி மனதில் நம்பிக்கை உண்டாகும். பணவரத்தும் கூடும். கலைத்துறையினருக்கு மனத்துணிவு அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி  திருப்திகரமாக இருக்கும். அரசியல்வாதிகளுக்கு இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு: கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிக்க வேண்டி இருக்கும்.

 

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி

பரிகாரம்: ஸ்ரீரங்கநாதரை தரிசித்து வணங்கி வரவும்.  மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

 

*******************************************************

கடகம் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

இந்த வாரம் முடங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பெறும். செய்யும் காரியங்களால்  பெருமை ஏற்படும். தொழில் வியாபாரத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படும். வியாபார நிமித்தமாக பயணங்கள் செல்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள்  திறமையான பேச்சால் வெற்றி பெறுவார்கள். வாகனயோகம் உண்டாகும். குடும்பத்தில் சந்தோஷமான  சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும் உறவு பலப்படும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கப் பெறுவீர்கள். பெண்களுக்கு புத்தி சாதூரியம் அதிகரிக்கும் எதிர்பார்த்த பணம் வந்து சேரலாம். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். ஆர்வமுடன் பாடங்களை படிப்பீர்கள். கலைத்துறையினருக்கு கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான  முயற்சிகள் சாதகமான பலன் தரும். அரசியல்வாதிகள் கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். 

 

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி

பரிகாரம்: அம்மன் கோயிலுக்கு சென்று தீபம் ஏற்றி வழிபடவும்.  உத்தியோகத்தில் மேன்மை உண்டாகும்.

******************************************************

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

இந்த வாரம் திடீர் மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். சுபச் செலவு ஏற்படும். முயற்சிகளில் தடை ஏற்பட்டாலும் அனைத்தையும் தகர்ப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் போட்டியை சந்திக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிரத்தையாக பணிகளை மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் கலகலப்பு அதிகரிக்கும். எதிலும் சந்தோஷம் நிம்மதி வரும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பெண்களுக்கு எந்த முயற்சியிலும் சாதகமான பலன் கிடைப்பதில் இருந்து வந்த சுணக்க நிலை நீங்கும். கலைத்துறையினருக்கு கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான  முயற்சிகள் சாதகமான பலன் தரும். அரசியல்வாதிகள் கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது.  மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். மாணவர்களுக்கு கல்வியை பற்றிய கவலை நீங்கும். தடையை தாண்டி முன்னேற முயற்சிப்பீர்கள். 

 

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள், வியாழன்

பரிகாரம்:  சிவபெருமானை வில்வத்தால் அர்ச்சனை செய்யவும்.  மனதிலிருக்கும் குறைகள் நீங்கும்.

*********************************************************

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

இந்த வாரம் வீண் வாக்குவாதங்கள் அகலும். எந்த காரியத்திலும் முயற்சி செய்தால் வெற்றி பெறலாம். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். தேங்கி இருந்த சரக்குகள் விற்பனையாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பான  பலன்  கிடைக்கப்பெறுவார்கள். குடும்பத்தில் காணாமல் போன சந்தோஷம் மீண்டும் வரும். கணவன் மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும். பெண்கள்  வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. காரியங்களை  செய்து முடிப்பதில் கடினமான நிலை காணப்படும். கலைத்துறையினருக்கு கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான  முயற்சிகள் சாதகமான பலன் தரும். அரசியல்வாதிகள் கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது.  மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும். 

 

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய்

பரிகாரம்:  பெருமாளை வணங்கவும்.  திட்டமிட்ட காரியங்கள் தொய்வின்றி நடக்கும்.

*****************************************************************

துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம்  பாதம்)

இந்த வாரம் மனதில் உறுதி பிறக்கும். எடுத்த முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பாலினத்தாரால் நன்மை உண்டாகும். தொழிலில் முக்கிய முடிவுகள் எடுப்பதில் இருந்த தடுமாற்றம் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீண்ட நேரம் பணியாற்ற வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் அகலும். கணவன், மனைவிக்கிடையே இருந்த பிணக்குகள் நீங்கும். பெண்களுக்கு எதிர்பார்த்த காரியங்கள் நடந்து முடியும். செலவு அதிகாரிக்கும். கலைத்துறையினர் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது. சக கலைஞர்களிடம் அனுசரித்து போவது நன்மைதரும். அரசியல்வாதிகள் வீண் பேச்சை குறைப்பது நல்லது. எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகலாம். மாணவர்களுக்கு கவன தடுமாற்றம் ஏற்படாமல் பாடங்களை படிப்பது நல்லது. 

 

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி

பரிகாரம்: ஸ்ரீமஹாலக்ஷ்மி காயத்ரி சொல்லி லக்ஷ்மியை வணங்கி வரவும். சுணங்கிக் கிடந்த காரியங்கள் மீண்டும் வேகம் பெறும்.

*********************************************************************

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம்,அனுஷம், கேட்டை)

இந்த வாரம் வீண் வாக்குவாதங்கள் உண்டாகலாம். மனதில் உற்சாகம் ஏற்படும். வீண் பகை உண்டாகலாம். தீ, ஆயுதங்களை கையாளும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் தேவையற்ற இடர்பாடுகள் அகலும். பார்ட்னர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குறிக்கோளற்ற வீண் அலைச்சல், கூடுதல் உழைப்பும் இருக்கும். குடும்பத்தில் ஏதாவது சில்லறை சண்டைகள் ஏற்படலாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பெண்களுக்கு  சமையல் செய்யும்போது கவனம் தேவை. எதிலும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது. கலைத்துறையினருக்கு வாகனங்களை ஓட்டி செல்லும் போது கவனம் தேவை. அரசியல்வாதிகள் மேலிடத்தை அனுசரித்து செல்வது நல்லது. எடுத்த வேலையை செய்து முடிப்பதற்குள் பல தடங்கல்கள் உண்டாகும். மாணவர்களுக்கு இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தும் போது கவனம் தேவை. 

 

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி

பரிகாரம்:  முருகனுக்கு அரளிப்பூ சாற்றி வணங்கவும். மனதில் அமைதி ஏற்படும்.

***********************************************

தனுசு (மூலம், பூராடம்,  உத்திராடம் 1ம் பாதம்)

இந்த வாரம் தன்னம்பிக்கை வளரும். பணவரவு திருப்தி தரும். வாக்குவன்மை அதிகரிக்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறும். இதுவரை இருந்த தொய்வு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி தேடிவரும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். பணி நிமித்தமாக வெளியூர் செல்ல வேண்டி இருக்கலாம். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். கணவன், மனைவிக்கிடையே திருப்தியான உறவு காணப்படும். பெண்கள் திட்டமிட்டப்படி எதையும் செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினருக்கு எதிர்பாராத செலவுகள் உண்டாகும். காரியதாமதம் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு மற்றவர்களால் மனகஷ்டம் ஏற்படும். அடுத்தவர்கள் கடமைக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது. எந்த ஒரு காரியமும் மந்தமாக நடக்கும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும்.

 

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி

பரிகாரம்: மஞ்சள் சாமந்திபூவை சிவனுக்கு அர்ப்பணித்து வழிபட்டு வரவும்.  சோதனைகளை தகர்த்து சாதனைகளை புரிய முடியும்.

****************************************************************************

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

இந்த வாரம் வீண் செலவு ஏற்படும். காரியங்களில் தாமதம் உண்டாகும். உடற்சோர்வு மன சோர்வு வரலாம். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆனால் எதிர்பார்த்த லாபம் அதிகமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். எதிர்நோக்கியிருந்த பதவி உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த நிம்மதி இல்லாத சூழ்நிலை மாறும். தம்பதிகளிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. பெண்களுக்கு எந்த ஒரு காரியத்தையும் செய்யும் முன் தீர ஆலோசனை செய்வது நல்லது. கலைத்துறையினருக்கு வெளிநாடு வாய்ப்புகள் வந்து சேரும். எதிர்பார்த்த தனவரவு கிட்டும். அரசியல்வாதிகளுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். பயணங்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். மாணவர்களுக்கு  கல்வியில் முன்னேற்றமடைய கடின உழைப்பு தேவை. 

பரிகாரம்: ஆஞ்சநேயரை வெண்ணெய் சாற்றி வழிபட்டு வரவும், 

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி

************************************************************************

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதம்)

இந்த வாரம் எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்து மதிப்பு கிடைக்க பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் போட்டிகளை சந்திக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமான பணிகளை செய்யவேண்டி இருக்கும். வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்கு செல்லலாமா என்று கூட தோன்றலாம். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன், மனைவிக்கிடையே பாசம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த மன பினக்குகள் மறையும். பெண்களுக்கு அடுத்தவர்கள் பொறுப்புகளை ஏற்காமல் தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்கு வீண்பழி உண்டாகலாம். வேலைகளில் எதிர்பாராத சிக்கலை சந்திப்பீர்கள். அரசியல்வாதிகள் கூடுதல் பணி சுமையை ஏற்க வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது அவசியம். 

 

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி

பரிகாரம்: விஷ்ணு சகஸ்ரநாமம் படித்து பெருமாளை வழிபடவும்.  குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.

***************************************************

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

இந்த வாரம் மனோதிடம் அதிகரிக்கும். பயன் தரும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வாகனம் வாங்க எடுத்த முயற்சி கைகூடும். தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். பெண்களுக்கு மனதில் துணிச்சல் அதிகரிக்கும். திட்டமிட்டபடி செயலாற்றி காரிய அனுகூலம் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். வராது என்று நினைத்த பொருள் வந்து சேரலாம். அரசியல்வாதிகளுக்கு மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். தனலாபம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு  பாடங்களை படிப்பது வேகம் பெறும். கல்வியில் வெற்றி பெறுவீர்கள்.

 

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்

பரிகாரம்: விநாயக பெருமானை தீபம் ஏற்றி வழிபட காரியங்கள் கைகூடும். மனதில் இருக்கும் சஞ்சலங்கள் அகலும்.

s*****************************************************

Continue Reading

வார பலன்

உங்களுக்கான இந்த வார ராசிபலன் (2021, மே 02 முதல் 08 வரை)

Published

on

weekly prediction, வாரபலன், weekly horoscope

மேஷம்:

இந்த வாரம் நினைத்த காரியங்களில் தடங்கல் ஏற்படலாம். உடல் ஆரோக்கியம் உண்டாகும். பூமி, வீடு தொடர்பான பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு வரும். சகோதரர்களுடன் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். கோபம், படபடப்பு குறையும். எதிர்பாராத செலவு உண்டாகலாம். அவ்வப்போது  மனதில் குழப்பம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் சிக்கல் சரியாகும். பணவரத்து சேரும். உத்தியோகஸ்தர்கள் அலுவலக பொறுப்புகளை கவனமாக செய்வது நல்லது.  இயந்திரங்களில் பணி புரிபவர்கள் ஆயுதங்களை கையாள்பவர்கள் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். குடும்பத்தில் இருப்பவர்களது பேச்சுக்கு எதிர்த்து பேசுவதை தவிர்ப்பது நன்மை தரும். தாயின் உடல்நிலையில் கவனம் தேவை. பெண்களுக்கு கோபம், படபடப்பு குறையும். கலைத்துறையினருக்கு மற்றவர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். அரசியல்வாதிகளுக்கு திடீர் செலவு உண்டாகலாம். மாணவர்களுக்கு  உயர்கல்வி படிப்பவர்களுக்கு திடீர் பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். வாகனங்கள் மூலம் செலவு உண்டாகும்

 

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி; 

பரிகாரம்: செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை அம்மனை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். வீண் அலைச்சல் குறையும்.

******************************************************************************************************************************************

ரிஷபம்:

இந்த வாரம் கோபமான பேச்சு, டென்ஷன் குறையும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் இருந்த தாமதம் நீங்கும். சகோதரர் வழியில் நன்மை உண்டாகும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பணியாளர்கள் மூலம் நன்மை கிடைக்க பெறுவார்கள். லாபம் கூடும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் பரபரப்பு நீங்கி அமைதியாக பணிகளை கவனிப்பார்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த சங்கடங்கள் தீரும். பிள்ளைகள் கல்வி பற்றிய கவலை நீங்கும். பெண்களுக்கு எடுத்த காரியத்தை எப்படியும் முடித்து விட வேண்டும் என்பதில் மன உறுதி காணப்படும். கலைத்துறையினர் கொடுக்கல், வாங்கல் விவகாரங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. அரசியல்வாதிகள் மேலிடத்துடன் அனுசரனையாக செல்வீர்கள். மாணவர்களுக்கு  கல்வியில் முன்னேற்றம் காண எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மனகுழப்பம் நீங்கி படிப்பில் கவனம் செலுத்துவீர்கள்.

 

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி

பரிகாரம்:  நவகிரகத்தில் சுக்கிரனை பூஜிக்க வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

******************************************************************************************************************************************

மிதுனம்:

இந்த வாரம் திடீர் கோபம் உண்டானாலும் சமாளித்து விடுவீர்கள். எடுத்த காரியம் உடனே முடியவில்லையே என்ற டென்ஷன் இருக்கும். வீண் பழி வர வாய்ப்பு உள்ளதால் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருப்பது  அவசியம். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வாடிக்கையாளர்களுடன் வாக்குவாதம் போன்றவை உண்டாகலாம். பழைய பாக்கி வசூலாவதில் தாமதம் உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் கெடுபிடிகளை சந்திக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் திடீர் பிரச்சனைகள் தலைதூக்கலாம். வீட்டில் உள்ள பொருட்களை கவனமாக பாதுகாப்பது நல்லது. பெண்களுக்கு எப்படிப்பட்ட சிக்கலையும் சமாளிக்கும் மனபக்குவம் உண்டாகும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசியல்வாதிகள் எந்த சூழ்நிலையிலும் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு எப்படி பாடங்களை படித்து முடிப்பது என்ற டென்ஷன் உண்டாகும். காரிய தடை, தாமதம் உண்டாகலாம்.

 

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி

பரிகாரம்: ஸ்ரீ ரங்கமன்னாரை வணங்கி வர எல்லா பிரச்சனைகளும் தீரும். செல்வ செழிப்பும், ஆரோக்கியமும் உண்டாகும்.

******************************************************************************************************************************************

கடகம்:

இந்த வாரம் அடுத்தவர் குற்றச்சாட்டுகளில் இருந்து சாமர்த்தியமாக விடுபடுவீர்கள். திடீர் மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.  பணதேவை ஏற்பட்டாலும் அதை திறமையாக சமாளித்து விடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டாலும் அதை சமாளித்து முன்னேறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளில் அலட்சியம் காட்டாமல் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை காணப்பட்டாலும் குடும்ப உறுப்பினர்களுக்காக மருத்துவ செலவு செய்ய வேண்டி இருக்கலாம். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகளை அவர்களின் போக்கிலேயே விட்டு பிடிப்பது நன்மை தரும். பெண்களுக்கு மற்றவர்களால் ஏற்படும்  தொல்லைகளில் சிக்காமல் இருக்க கவனமாக செயல்படுவது நல்லது. கலைத்துறையினர் சிக்கனத்தைக் கடைபிடிப்பது நன்மை தரும். அரசியல்வாதிகளுக்கு சுணங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பெறும். மாணவர்களுக்கு  கல்வியில் மெத்தன போக்கு காணப்படும். மிகவும் கவனமாக படிப்பது கல்வியில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.

 

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி

பரிகாரம்: அருள்மிகு ஆதிபராசக்தி அன்னையை தரிசித்து வருவது உடல் ஆரோக்கியத்தை தரும். எதிர்பார்த்த காரியம் தாமதமாக முடியும். ஆனால் நல்ல பலனை தரும்.

******************************************************************************************************************************************

சிம்மம்:

இந்த வாரம் சுபச் செலவு ஏற்பட்டாலும் அதை சமாளிக்கும் விதத்தில் வரவும் இருக்கும். பயணங்கள் மூலம் அலைச்சல் அதிருப்தி உண்டாகலாம். கனவுகளால் தொல்லை ஏற்படலாம். சரியான நேரத்தில் தூங்க முடியாத சூழ்நிலை உருவாகும். உஷ்ண சம்பந்தமான நோய் உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் பணத் தேவை ஏற்படலாம். கடன் விவகாரங்களில் கவனமாக செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஓய்வு இல்லாமல்  பணியாற்ற  வேண்டி இருக்கும். இயந்திரம், நெருப்பு, ஆயுதத்தை பயன்படுத்துவோர் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் உருவாகலாம். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டாலும் சரியாகிவிடும். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் உண்டாகலாம்.  பெண்களுக்கு மற்றவர்களின் வேலைகளுக்காக அலைய நேரிடும். கலைத்துறையினருக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அரசியல்வாதிகள் தங்கள் பணிகளை சரியான நேரத்தில் செய்வது நன்மதிப்பை உண்டாக்கும். மாணவர்களுக்கு  கல்வியை தவிர மற்றவைகளில் கவனத்தை சிதற விடலாம். வாகனங்களில்  செல்லும் போதும் எச்சரிக்கையாக செல்வது நல்லது.

 

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி

பரிகாரம்:  ஸ்ரீநரசிம்மரை வணங்கி வர துன்பங்கள் விலகும். மனநிம்மதி குடும்பத்தில் குதூகலம் உண்டாகும்.

******************************************************************************************************************************************

கன்னி:

இந்த வாரம் எல்லாவற்றிலும் சாதகமான பலனே கிடைக்கும். பொருளாதார முன்னேற்றம் பணவரவில் திருப்தி ஆகியவை இருக்கும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி வேகம் பிடிக்கும். லாபம் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறன் அதிகரிக்கும். மேல் அதிகாரிகளின் பாராட்டும், பதவி உயர்வும் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் மூலம் பெருமை ஏற்படும். உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் உண்டாகும். திருமணம் தொடர்பான பேச்சுகள் சாதகமாக முடியும்.  வீடு, வாகனம் வாங்குவது அல்லது புதுப்பிப்பதில் நாட்டம் அதிகரிக்கும். பெண்களுக்கு  எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினருக்கு பண புழக்கம் திருப்திதரும். அரசியல்துறையினருக்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கும். மாணவர்களுக்கு  கல்வி பற்றிய கவலை நீங்கும். பாடங்கள் படிப்பதில் வேகம் காட்டுவீர்கள். பாராட்டு கிடைக்கலாம்.

 

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி

பரிகாரம்:  வினாயகரை வணங்கி வர எதிர்ப்புகள் நீங்கும். தொழிற்போட்டிகள் குறையும்.

******************************************************************************************************************************************

துலாம்:

இந்த வாரம் தொடக்கத்தில் காரியங்கள் தடைபட்டாலும் பின்னர் நன்றாக நடந்து முடியும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் செல்ல நேரலாம். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சல் ஆர்டர் கிடைப்பதில் தாமதம் போன்றவை ஏற்பட்டாலும், தொழில் வியாபாரம் சீராக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு, கூடுதல்  பொறுப்புகள் உண்டாகலாம். அதிக உழைப்பின் பேரில் வேலைகளை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருப்பவர்கள் அனுசரித்து செல்வதன் மூலம் எல்லா பிரச்சனைகளும் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும். உறவினர்கள், அக்கம் பக்கத்தினரிடம் வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. பெண்களுக்கு எடுத்த காரியம் தடைபட்டு பின்னர் நல்லபடியாக நடந்து முடியும். கலைத்துறையினர் மனதில் எதைபற்றியாவது சிந்தித்த வண்ணம் இருப்பீர்கள். அரசியல்வாதிகள் நற்பெயர் எடுப்பீர்கள். மாணவர்களுக்கு  கல்வியில் சீரான போக்கு காணப்படும். கூடுதல் மதிப்பெண் பெற மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றிபெறும்.

 

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன், வெள்ளி

பரிகாரம்: குல தெய்வத்தை வணங்க குடும்ப பிரச்சனை, தொழிற்பிரச்சனை கல்வியில் தடை போன்றவை விலகும். எதிலும் நன்மை உண்டாகும்.

******************************************************************************************************************************************

விருச்சிகம்:

இந்த வாரம் நல்ல பலன்கள் உண்டாகும். தந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகளில் சாதகமான  நிலை காணப்படும். தானதர்மம் செய்யவும்  ஆன்மிக பணிகளில் ஈடுபடவும்  தோன்றும். நீண்ட தூர பயணங்கள் செல்ல நேரலாம். பயணத்தின் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் நிதானமான போக்கு காணப்படும். வியாபார போட்டிகள் இருந்தாலும் அதனால் பாதிப்பு இருக்காது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது. எதிர்பாராத இடமாற்றம் சிலருக்கு உத்தியோக மாற்றம் உண்டாகலாம். குடும்பத்தில் எதிர்பாராத செலவு உண்டாகும். குடும்பத்தினரின் செயல்பாடுகள் மனதுக்கு திருப்தி அளிப்பதாக இருக்கும். உறவினர்களிடம் பக்குவமாக பேசுவது நல்லது. வழக்குகளில் மெத்தன போக்கு காணப்படும். பெண்களுக்கு  எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். கலைத்துறையினர் பயணங்களால் அலைச்சல் உண்டாகும். அரசியல்வாதிகள் மனதில் ஒருவித கவலை இருக்கும். மாணவர்களுக்கு  தடைகளை தாண்டி கல்வியை கற்க செய்யும் முயற்சி வெற்றி பெறும். சிறப்பாக  படித்து முடிப்பீர்கள்.

 

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வெள்ளி

பரிகாரம்:  முருகனை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். காரிய வெற்றி கிடைக்கும். எதிர்ப்புகள் விலகும்.

******************************************************************************************************************************************

தனுசு:

இந்த வாரம் வீண் அலைச்சல் குறையும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடங்கல் ஏற்பட்டு நீங்கும். தேவையற்ற மனக்கவலை உண்டாகும். வழக்கு விவகாரங்களில் தாமதமான போக்கு காணப்படும். நிர்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரலாம். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கல் ஏற்பட்டு பின்னர் சரியாகும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும்போது கவனம் தேவை. உத்தியோகத்தில் சரியாக முடிக்க வேண்டுமே என்ற கவலை உண்டாகும். சக ஊழியர்களிடம் கவனமாக பேசுவது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் பழி ஏற்பட வாய்ப்பு உண்டு. எதிர்பாராத செலவு உண்டாகும். குடும்பத்தில் சிறு சிறு மனஸ்தாபங்கள் வரலாம். ஆயுதங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை. பெண்களுக்கு தேவையற்ற சில காரியங்களை செய்ய வேண்டி இருந்தாலும் அதன் மூலம் நன்மை உண்டாகும். கலைத்துறையினருக்கு பணவரத்து திருப்தி தரும். அரசியல்வாதிகளுக்கு தேவையான உதவி கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண வேண்டும் என்ற ஆர்வம் உண்டாகும். விளையாட்டு போட்டிகளில் திறமை வெளிப்படும்.

 

அதிர்ஷ்ட கிழமைகள்:  வியாழன், வெள்ளி

பரிகாரம்: நவகிரகத்தில் குருபகவானுக்கு முல்லை மலர் சாற்றி நெற் தீபம் ஏற்றி வர எல்லா கஷ்டங்களும் நீங்கும். பொருளாதார மேம்பாடு உண்டாகும்.

******************************************************************************************************************************************

மகரம்:

இந்த வாரம் பணவரத்து சீராக இருக்கும். வேலைப் பளு காரணமாக நேரம் தவறி உணவு உண்ண வேண்டி இருக்கும். வயிறு தொடர்பான கோளாறுகள் ஏற்பட்டு நீங்கும். கை, கால் வலி, உடல் சோர்வு உண்டாகலாம். அக்கம்பக்கத்தினரிடம் சில்லறை சண்டைகள் ஏற்பட்டு சரியாகும். கவுரவம் பாதிக்கும்படியான சூழ்நிலை வரலாம். தொழில் வியாபாரத்தில் பார்ட்னர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்கள் மேல்அதிகாரிகளுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். இயந்திரங்கள், ஆயுதங்கள், நெருப்பு ஆகியவற்றை கையாளும் தொழிலாளர்கள் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களால் திடீர் பிரச்சனைகள் அதனால் வாக்குவாதம் போன்றவை உண்டாகும். குடும்பத்தில் கருத்து வேற்று ஏற்படலாம். விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. சிலர் குடும்பத்தை விட்டு பிரிந்து வெளியில் தங்க நேரலாம். பெண்களுக்கு  வீண் அலைச்சல், வேலை பளு ஆகியவை அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மை தரும். அரசியல்வாதிகள் எடுத்த வேலையை முடிப்பதில் சிரமம் ஏற்படலாம். மாணவர்களுக்கு  அடுத்தவரை பற்றிய விமர்சனங்கள், கிண்டல், கேலி பேச்சு போன்றவற்றை தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது.

 

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன், வெள்ளி;

பரிகாரம்: விநாயக பெருமானுக்கு அருகம்புல் மாலை சாற்றி அர்ச்சனை செய்து வர குடும்ப கஷ்டங்கள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் மேன்மை உண்டாகும்.

******************************************************************************************************************************************

கும்பம்:

இந்த வாரம் தடைபட்ட காரியங்களில் இருந்த தடை நீங்கி நன்றாக நடந்து முடியும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சிக்கல் தீரும். எதிர்த்து செயல்பட்டவர்கள் விலகி சென்று விடுவார்கள். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பொருளாதார நிலை உயரும். தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். போட்டிகள் குறையும். பணவரத்து திருப்தி தரும். கடன் பிரச்சனை கட்டுக்குள் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் உழைப்புக்கு ஏற்ற நல்ல பலன் கிடைக்கும். மேல் அதிகாரிகள் ஒத்துழைப்பும் இருக்கும். குடும்பத்தில் உங்களுக்கு எதிராக பிரச்சனையை உண்டாக்கியவர்கள் தானாகவே அடங்கி விடுவார்கள். வீட்டில் சுப காரியம் நடக்கும். திருமண காரியங்களில் சாதகமான போக்க காணப்படும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். மதிப்பு கூடும். பெண்களுக்கு எந்த ஒரு சின்ன வேலைக்காகவும் மிகவும் பாடுபட வேண்டி இருக்கும். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும் அரசியல்வாதிகள் தங்கள் பயணங்களின் போது கவனம் தேவை. மாணவர்களுக்கு சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டு படிப்பது நல்லது. வகுப்பில் கவனத்தை சிதற விடாமல் பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும்.

 

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்; 

பரிகாரம்:  வியாழக்கிழமையில் ஆஞ்சநேயரை வெண்ணெய் சாற்றி வணங்கி தீபம் ஏற்றி வர எல்லா கஷ்டங்களும் நீங்கும். பொருளாதாரம் மேம்படும் தைரியம் உண்டாகும்.

******************************************************************************************************************************************

மீனம்:

இந்த வாரம் தேவையற்ற மன சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சனை வராமல் தடுக்கலாம். சிறிய விஷயத்துக்கு கூட கோபம் வரலாம். கட்டுப்படுத்துவது நன்மை தரும். திடீர் பண தேவை உண்டாகலாம். தொழில் வியாபாரம் தொடர்பான வீண் அலைச்சல் ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. எதிர்பார்த்த பணம் கைக்கு வருவதில் தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாகம் பற்றி யாருடனும் விமர்சனம் செய்யாமல் இருப்பது நல்லது. பதவி உயர்வு, சம்பள உயர்வு தாமதப்படலாம். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகள் உங்களுக்கு டென்ஷன் தருவதாக இருக்கலாம். மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நல்ல பலன் தரும். பிள்ளைகளிடம் அனுசரித்து செல்வதும் அவர்கள் போக்கில் விட்டு பிடிப்பதும் நல்லது. பெண்களுக்கு கோபத்தை கட்டுப் படுத்துவதும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நன்மை தரும். கலைத்துறையினர் வீண் செலவை தடுக்க திட்டமிட்டு செயல்படுவது நல்லது. அரசியல்வாதிகள் கொண்ட கொள்கையில் மாறாமல் இருப்பது நல்லது. மாணவர்களுக்கு  சக மாணவர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். மிகவும் பொறுமையுடனும், கவனமாக வும் பாடங்களை படிப்பது அவசியம்.

 

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி;

பரிகாரம்: சித்தர்களை வணங்க எல்லா பிரச்சனைகளும் தீரும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.

******************************************************************************************************************************************

 

Continue Reading

வார பலன்

உங்களுக்கான இந்த வார ராசிபலன் (2021, ஏப்ரல் 25 முதல் மே 01 வரை)

Published

on

weekly prediction, வாரபலன், weekly horoscope

மேஷம் (அஸ்வினி, பரணி,  கார்த்திகை 1ம் பாதம்)

இந்த வாரம் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறலாம். தடைகள் அனைத்தையும் தகர்ப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்து ந்த மந்த நிலை மாறும். பணவரவு நிதானமாக இருக்கும். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற முடியும். மற்றவர்கள் உங்கள் மேல் கொண்டிருந்த கோபம் அகலும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். புதிய தொழில் ஆரம்பிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அவசரப்படாமல் நிதானமாக பணிகளை கவனிப்பது நல்லது. கடுமையான பணிச்சுமை ஏற்படும். குடும்பத்தில் சிறுசிறு மனவருத்தங்கள் ஏற்படும் வகையில் சூழ்நிலை இருக்கும். பொருட்களை கவனமாக பாதுகாப்பது நல்லது. பெண்களுக்கு எந்த வாக்குறுதியையும் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்கு கோபத்தை குறைப்பது நன்மை தரும். அரசியல்வாதிகள் மேலிடத்துடன் இணக்கமான சூழலை கடைபிடிப்பது நல்லது. மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைவீர்கள். 

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்

பரிகாரம்: குமரனை கந்த சஷ்டி கவசம் சொல்லி வணங்கி வர அனைத்து நலன்களும் வளங்களும் உண்டாகும்.

***********************************************************************************

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதம்,  ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)

இந்த வாரம் தேவையற்ற வீண் படபடப்பு ஏற்படலாம். நண்பர்கள், உறவினர்களிடம் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். நீண்ட நாட்களாக  வாங்க வேண்டும் என்று எண்ணிய பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். எதிலும் நிதானத்தையும் பொறுமையையும் கடைபிடிப்பது நன்மை தரும். தொழில் வியாபாரம் தொடர்பாக இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். ஆக்கப்பூர்வமான யோசனைகள் தோன்றும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டு காரியங்களை செய்து எதிர்பார்த்த வெற்றியை அடைவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் உண்டாகும். சுபச் செலவுகள் உண்டாகும். வாகனங்களை இயக்கும் போது நிதானம் தேவை. பெண்கள் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது  நல்லது. கலைத்டுறையினருக்கு பொருள் சேர்க்கை உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு தேவையற்ற வீண் குழப்பம் ஏற்படலாம். மாணவர்களுக்கு திட்டமிட்டு பாடங்களை படிப்பது கல்வியில் வெற்றிக்கு உதவும். 

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி 

பரிகாரம்: மஹாலக்ஷ்மி அஷ்டகம் சொல்லி மஹாலக்ஷ்மியை வணங்கி வருவது பொருளாதார நிலையை உயர்த்தும்.

************************************************************************************************

மிதுனம் (மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை,  புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

இந்த வாரம் வீண் மனக்கவலை நீங்கும். கனவு தொல்லைகள் உண்டாகும். பணவரத்து திருப்தி தரும். நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். ஆடம்பர செலவுகள் ஏற்படும். கோபத்தை கட்டுப்படுத்துவது நன்மை தரும். தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். வியாபார செலவுகள் அதிகரிக்கும். தொழிலை விரிவுபடுத்துவதற்கான செயலில் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். அதன் மூலம் களைப்பு ஏற்படலாம். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி எல்லோரும் உங்களது வார்த்தைக்கு மதிப்பு தருவார்கள். ஆனால் யாரிடமும் நிதானமாக பேசுவது நல்லது. பெண்களுக்கு சுபச்செலவு கூடும். சேமிக்கும் பழக்கம் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு எதிர்பார்க்கும் வாய்ப்புகள் வந்து சேரும். அரசியல்வாதிகள் மனதில் போட்டு வைத்திருந்த திட்டங்கள் அனைத்தையும் சரியான முறையில் செய்ய முடியும். மாணவர்களுக்கு உயர்கல்வி பற்றிய கவலை நீங்கும். ஆனால் கல்வியில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். 

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வியாழன் 

பரிகாரம்: நரிசிமம்ருக்கு பானகம் நிவேதனம் செய்து சேவித்து வர மனகுழப்பம் நீங்கும். செல்வ நிலை உயரும்.

*******************************************************************************

கடகம் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

இந்த வாரம் எல்லா முயற்சிகளும், காரியங்களும் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். கடினமான வேலைகளையும் எளிதாக செய்து முடிக்கும் திறமை உண்டாகும். மனதில் இருந்த தயக்கம், பயம் நீங்கும். வெளியூர், வெளிநாடு பயணங்கள் செல்ல எடுக்கும் முயற்சிகள் சாதகமான முடியும். தொழில் வியாபாரம் முன்னேற்றமடையும். லாபம் அதிகரிக்கும். தேவையான பண உதவியும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் கூடுதல் பொறுப்புகளும் கிடைக்கும். வர வேண்டிய பணம் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். சுப காரியங்கள் நடக்கலாம். சகோதரர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். சந்தோஷமாக காணப்படுவார்கள். குழந்தைகள் மூலம் பெருமை கிடைக்கும். பெண்களுக்கு எந்த  வேலையையும்  எளிதாக செய்து விடுவீர்கள். கலைத்துறையினர் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். அரசியல்வாதிகளுக்கு புதிய நண்பர்கள் பழக்கமாவார்கள். மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மை தரும். திறமை வெளிப்படும். 

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்

பரிகாரம்: பிரத்தியங்கரா தேவியை வணங்கி வர எதிர்ப்புகள்  விலகும். மனோ தைரியம் அதிகரிக்கும்.

****************************************************************************

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் 1ம் பாதம்)

இந்த வாரம் எடுக்கும் செயல்கள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். காரியங்களில் இருந்து வந்த  தடை தாமதம் நீங்கும். புதிய வீடு வாகன சேர்க்கை உண்டாகும். மனதில் இருந்த குழப்பங்களுக்கு விடை கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும். பழைய பாக்கிகள் வசூலாகும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், வேலை பளுவும் ஏற்படலாம். வார்த்தைகளில் நிதானம் அவசியம். குடும்பத்தில் இருப்பவர்களுடன்  அனுசரித்து செல்வது நல்லது.  கணவன், மனைவிக்கிடையே விட்டுக் கொடுத்து செல்வது நன்மை தரும். குடும்பத்திற்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பெண்களுக்கு மற்றவர்களின் ஆலோசனைகளை கேட்டு எதிலும் ஈடுபடுவது நல்லது. கலைத்துறையினருக்கு பண தேவை உண்டாகும்.  அரசியல்வாதிகள் மனதில் இருந்து வந்த கலக்கம் நீங்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய பயத்தை விலக்கி விட்டு ஆர்வமாக படிப்பது வெற்றிக்கு உதவும். விளையாட்டுப் போட்டிகளில் பரிசுகள் கிடைக்கும். 

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்

பரிகாரம்: சிவனுக்கு பன்னீர் அபிஷேகம் செய்து வணங்கி வர காரிய தடைகள் நீங்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். 

***********************************************************************************

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

இந்த வாரம் பொருள் வரத்து அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மற்றவர்களால் கைவிடப்பட்ட காரியத்தை செய்து முடிப்பீர்கள். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் அனுகூலமாக நடந்து முடியும். தொழில் வியாபாரத்திற்கு தேவையான பண உதவி கிடைக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய ஆர்டர்கள்  கிடைப்பதில் சாதகமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பமில்லாத இடமாற்றம் உண்டாகலாம். குடும்பத்தில் இருந்த சண்டைகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். திருமணம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் கைகூடும். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. பெண்களுக்கு எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினருக்கு மற்றவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு மேல்மட்டத்தில் இருக்கும் நபர்களுடன் பழக்க வழக்கம் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மந்தநிலை மாறும். சுறுசுறுப்பாக பாடங்களை படிப்பீர்கள். சக மாணவர்கள் மூலம் உதவி கிடைக்கும். 

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி

பரிகாரம்: பைரவரை வணங்கி வர எல்லா நலன்களும் உண்டாகும். வாழ்வில்  சுபிட்சம் ஏற்படும். 

***********************************************************************

துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம்  பாதம்)

இந்த வாரம் சுபநிகழ்ச்சிகள் தங்கு தடையின்றி நடக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்களில் வேகம் பிறக்கும். பணவரத்து அதிகரித்தாலும் கைக்கு கிடைப்பதில் தாமதம் ஏற்படும். எந்த  ஒரு வேலையை செய்யும் போதும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. வீடு, வாகனம் மூலம் செலவுகள் ஏற்படலாம். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் புத்தி சாதூரியத்தால் முன்னேற்றம் காண்பீர்கள்.  சரக்குகளை அனுப்பும் போது கூடுதல் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிர்பந்தமாக இடமாற்றம் அல்லது பணிமாற்றம் இருக்கலாம். உழைப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் குறையும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வதன்மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர் மூலம் உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு எந்த ஒரு வேலையை செய்யும் போதும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. கலைத்துறையினருக்கு செலவு அதிகரிக்கும். அரசியல்வாதிகள் மேலிடத்துடன் இணக்கம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய சிந்தனை அதிகரிக்கும். திட்டமிட்டபடி பாடங்களை படிப்பதில் கவனம் செலுத்துவீர்கள். 

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன், வெள்ளி 

பரிகாரம்: குல தெய்வத்தை வணங்கி வர குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். காரிய அனுவலம் உண்டாகும்.

*********************************************************************************************

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

இந்த வாரம் எந்த காரியத்தை செய்தாலும் இருந்து வந்த தடை தாமதம் நீங்கும். பணவரத்து அதிகரிக்கும். உடல் சோர்வு நீங்கும். வீண் பிரச்சனைகள் அகலும். நண்பர்கள் உறவினர்களுடன் நீடித்து வந்த மனவருத்தம் நீங்கும். பயணங்கள் செல்ல நேரிடும். கூட்டு தொழில் அல்லது வியாபாரம்  செய்பவர்கள்  கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் உண்டாகும். வேலைப் பளு கூடும். குடும்பத்தில் அடுத்தவர்களால் ஏதேனும் குழப்பம் உண்டாகலாம்.  கணவன், மனைவிக்கிடையே  ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது.  வார்த்தைகளை  கையாளும் போது கவனம் தேவை.  வாகனங்கள் ஓட்டும் போது எச்சரிக்கையாக இருப்பதும் நல்லது.  பெண்களுக்கு உறவினர்களிடம் பேசும் போது கவனமாக பேசுவது நல்லது.  கலைத்துறையினர் வாக்கு சாதுர்யத்தால் சில காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். அரசியல்வாதிகள் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக யோசித்து செயல்பட்டால் காரியங்களை சாதித்துக் கொள்ளலாம். மாணவர்களுக்கு  கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது.  பெரியோர் சொல்படி நடப்பது வெற்றிக்கு உதவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்

பரிகாரம்: அம்மனை வணங்கி வர பிரச்சனைகள் தீரும். பொருள் சேர்க்கை ஏற்படும். மனஅமைதி கிடைக்கும். 

******************************************************************

தனுசு (மூலம், பூராடம்,  உத்திராடம் 1ம் பாதம்)

இந்த வாரம் எல்லா காரியங்களிலும் அதிக முயற்சி மூலம் வெற்றி கிடைக்கும். பணவரத்து அதிகரிக்கும். கடன் பிரச்சனை தீரும். தகராறு, வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும்.  நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும்.  கவுரவம் அதிகரிக்கும். மறைமுக நோய் நீங்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். பண பிரச்சனை தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப் பளு குறையும். முயற்சிகள் காலதாமதமாக பலன் கொடுக்கும். எதை பற்றியும்  கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். திருமண காரியங்கள் கைகூடும். பெண்களுக்கு எதிர்ப்புகள் விலகும். தடைபட்ட காரியம் நடந்து முடியும். கலைத்துறையினருக்கு பணவரத்து திருப்தி தரும். அரசியல்வாதிகள் வாக்கு வன்மை அதிகரிக்கும். பேசி சில காரியங்களைச் சாதிக்க முற்படுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டிகள் குறையும். எதை பற்றியும் கவலைப்படாமல் காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்

பரிகாரம்: நவக்கிரஹ குரு பகவானை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். பண பிரச்சனை தீரும். குடும்ப நன்மை ஏற்படும்.  

****************************************************************************

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம்,  திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

இந்த வாரம் வாக்கு வன்மையால்  காரிய அனுகூலம் உண்டாகும். ஆனால் மனதில் ஏதாவது சஞ்சலம்  இருந்து கொண்டே இருக்கும்.  திடீர் பணதேவை ஏற்படலாம்.  தேவையான நேரத்தில் மற்றவர்களின் உதவி கிடைக்கும். புதிய சொத்து வாங்குவதில் கவனம் செல்லும். தொழில் வியாபாரம் முன்னேற்றமடைய  தேவையான உதவிகள் கிடைக்கும். திறமையான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள்  சொல்வதை செய்வதன் மூலம் நன்மை கிடைக்க பெறுவார்கள். குடும்பத்தில் அமைதி ஏற்படும். குடும்பத்தினருக்கு தேவையான பொருட்கள் வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். பெண்களுக்கு புதிதாக செய்யும் காரியங்களில் கவனம் தேவை. கலைத்துறையினருக்கு இனிமையான வார்த்தைகளால் பேசுவதன் மூலம் மற்றவர் மத்தியில் மதிப்பு கூடும். அரசியல்வாதிகளுக்கு பணம் சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக நடந்து முடியும். தனது பேச்சுத் திறமையால் சில காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். மாணவர்களுக்கு  ஆசிரியர்  சொல்படி பாடங்களை படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற்று வெற்றி பெற உதவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி

பரிகாரம்: சனி பகவானை வணங்கி வர கஷ்டங்கள் குறையும். வேலை பளு குறையும். 

************************************************************************

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதம்)

இந்த வாரம் சுபச் செலவு அதிகரிக்கும். அடுத்தவர் மூலம் மனசங்கடம் உண்டாகும். வாகனங்கள் பயன்படுத்தும் போது கவனம் தேவை.  சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கை தரம் உயரும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கும். உங்களது பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் அடுத்தவரை நம்பி பொறுப்புக்களை ஒப்படைப்பதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களின் ஒத்துழைப்பால் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பெண்களுக்கு அடுத்தவருக்கு உதவி செய்யும் போது கவனம் தேவை. வீண் மன சங்கடம் ஏற்படலாம். கலைத்துறையினருக்கு பணவரத்து திருப்தி தரும். அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தில் இருந்து மனதிற்கு இனிமையான செய்திகள் வந்து சேரும். மாணவர்களுக்கு: பாடங்களை படிக்கும் போது மிகுந்த கவனத்துடன்  படிப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி

பரிகாரம்: விநாயக பெருமானுக்கு தேங்காய் உடைத்து வழிபட எல்லா சிக்கல்களும் தீரும். முயற்சிகள் சாதகமான பலன் தரும். 

********************************************************************

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

இந்த வாரம் எதையும் சாதிக்கும் திறமையும், சாமர்த்தியமும் அதிகமாகும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். எதிர்ப்புகள் விலகும். புதிய நண்பர்கள் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். மரியாதை கூடும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும்.  தன்னம்பிக்கையுடன் செயலாற்றுவீர்கள். தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். தேவையான பண உதவியும் கிடைக்கும். கடன் தொல்லை குறையும். தொழில் போட்டிகள் நீங்கும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். குடும்பத்தில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமை உண்டாகும். உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும். பெண்களுக்கு மனோ தைரியம் கூடும். கலைத்துறையினர் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றி காண்பீர்கள். அரசியல்துறையினருக்கு நிம்மதியான காலமாக இருக்கும். வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். மாணவர்களுக்கு: கல்வியில் இருந்த போட்டிகள்  குறையும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். மனதில் நம்பிக்கை உண்டாகும். 

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்

பரிகாரம்: ஆஞ்சநேயருக்கு வியாழக்கிழமையில் வெண்ணெய் சாற்றி வணங்க உடல் ஆரோக்கியம் உண்டாகும். குடும்ப பிரச்சனைகள் தீரும்.  

 

********************************************************************

 

Continue Reading
தினபலன், நல்லநேரம், ராசிபலன், horoscpe, nalla nerm, today google time
தினபலன்3 days ago

இன்றைய தினபலன் | நல்ல நேரம் (12/05/2021)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்3 days ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (12/05/2021)

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்3 days ago

உங்களுக்கான இன்றைய ராசிபலன்கள் (12/05/2021)

சினிமா செய்திகள்3 days ago

பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் காலமானார் – திரையுலகினர் அதிர்ச்சி!!!

தமிழ்நாடு3 days ago

Lockdown: ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அளித்தது தமிழக அரசு!

தமிழ்நாடு3 days ago

முதலமைச்சரின் 4 செயலாளர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு!

தமிழ்நாடு3 days ago

2021ல் சட்டசபை சபாநாயகர்; 2016ல் காவலர்களால் வெளியேற்றப்பட்டவர் – அப்பாவு குறித்த வைரல் வீடியோ!

தமிழ்நாடு3 days ago

‘சரக்கு அடிச்சா கொரோனா பறந்துடும்..’- உளறும் குடிமகன்கள்; வைரல் வீடியோ

தமிழ்நாடு3 days ago

ட்ரோன் மூலம் கொரோனா விழிப்புணர்வு; மைலாப்பூரில் போலீஸ் புதிய முயற்சி!

தமிழ்நாடு3 days ago

ஞாயிற்றுகிழமையும் ரேசன் கடை உண்டு: தமிழக அரசு அறிவிப்பு!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா2 years ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா2 years ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு2 years ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா2 years ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா3 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

சினிமா செய்திகள்3 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

சினிமா3 years ago

நடிகை அமலா பால் முதல் முறையாகப் பிகினி உடையில் கவர்ச்சி போட்டோ!

வீடியோ4 months ago

ஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ!

வீடியோ4 months ago

ஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்!

வீடியோ4 months ago

பூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ!

வீடியோ4 months ago

ஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ!

Tughlaq Durbar Teaser Poster
வீடியோ4 months ago

விஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்!

வீடியோ4 months ago

விக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்!

வீடியோ4 months ago

2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்!

வீடியோ4 months ago

சிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ!

சினிமா செய்திகள்4 months ago

இன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்!

கேலரி5 months ago

சஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி!

Trending