Connect with us

வார பலன்

உங்கள் ராசிக்கான இந்த வார பலன்கள்! (பிப்ரவரி 17 முதல் 23 வரை)

Published

on

weekly prediction, வாரபலன்

வாரபலன்

மேஷம்:

புத்தியை சாதூரியமாக கையாலத்தெரிந்த  மேஷ ராசி அன்பர்களே, இந்த வாரம் எடுக்கும் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். மற்றவர்களுடன் இருந்த விரோதம் மறைந்து நட்பு ஏற்படும். வீண்செலவு குறையும். எதிலும் ஒரு  வேகத்தை உண்டாக்கும். நல்லதா? கெட்டதா? என்று யோசிக்க தோன்றாத மனநிலை உண்டாகும்.

தொழில் வியாபாரம் மந்தமாக இருந்தாலும் பணவரத்து திருப்தி தரும். கடன்களை அடைப்பதில் வேகம் காட்டுவீர்கள். 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது வேலையை கண்டு மேல்  அதிகாரிகள் திருப்தியடைவார்கள்.

குடும்பத்தில் இருந்த இறுக்கமான நிலை மாறும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம்  கவனம் தேவை. பிள்ளைகள் விஷயத்தில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. நண்பர்கள், உறவினர்களிடம் பக்குவமாக  பேசுவது நன்மை தரும்.

பெண்களுக்கு எந்த காரியத்திலும் சாதகமான பலன் பெற வாக்குவாதங் களை தவிர்ப்பது நல்லது. பயணங்களின் போது  கவனம் தேவை.

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற அதிக ஈடுபாட்டுடன் படிப்பது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம்.

பரிகாரம்: பழனி முருகனை வணங்க வாழ்க்கை வளம்பெறும். மனஅமைதி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன்

 

****************************************************************************************************************

ரிஷபம்:

எதையும் பயமில்லாமல் எதிர்கொள்ளும்  ரிஷப ராசி அன்பர்களே, இந்த வாரம் எடுக்கும் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். மற்றவர்களுடன் இருந்த விரோதம் மறைந்து நட்பு ஏற்படும். வீண்செலவு குறையும். எதிலும் ஒரு  வேகத்தை உண்டாக்கும். நல்லதா? கெட்டதா? என்று யோசிக்க தோன்றாத மனநிலை உண்டாகும்.

தொழில் வியாபாரம் வழக்கம்போல் நடக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள்  இருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகளை அனுசரித்து  செல்வது நல்லது. 

குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவது  நன்மை தரும். பிள்ளைகளுக்காக சில பணிகளை கவனிக்க வேண்டி இருக்கும். அவர்களை அன்புடன் நடத்துவது நல்லது.

பெண்களுக்கு நீங்கள் எடுக்கும் முயற்சி களில் சாதகமான பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணவரத்து திருப்தி தரும்.

மாணவர்களுக்கு எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்ல பலன் தரும். 

பரிகாரம்:  ஆஞ்சநேயரை வெண்ணெய் சாற்றி வணங்கி தீபம் ஏற்றி வர எல்லா கஷ்டங்களும் நீங்கும். பொருளாதாரம் மேம்படும் தைரியம் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி

 

****************************************************************************************************************

மிதுனம்:

பாசத்திற்காக அடங்கி போகும் மிதுன ராசி அன்பர்களே, இந்த வாரம் மனதில் இருந்த கவலை நீங்கி தைரியம் உண்டாகும். எதிலும் லாபத்தை பார்க்க முடியும். எல்லா நன்மையும் உண்டாகி உடல் ஆரோக்கியம் பெறும். வாக்கு வன்மையால் எந்த காரியத்தையும் சுலபமாக செய்து முடிப்பீர்கள்.

தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் பெற கடினமாக பணியாற்ற வேண்டி இருக்கும். புதிய ஆர்டர்கள்  கிடைப்பதில் தாமதம் உண்டாகும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். முயற்சிகள் எதிர்பார்த்த பலன் தராமல்  போகலாம். வீண் அலைச்சல் உண்டாகலாம்.

குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை ஆலோசனை செய்யாமல் தானாக எதையும் செய்வது உங்களுக்கு மன  வருத்தத்தை தரலாம். கணவன், மனைவிக்கிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம் கவனம் தேவை. பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நல்லது.

பெண்களுக்கு எதிலும் முழு கவனத்துடன் ஈடுபடுவது நன்மையை தரும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது நடவடிக்கைகள் பெற்றோருக்கு திருப்தியை தரும்.

பரிகாரம்:  நவகிரகத்தில் சுக்கிரனை பூஜிக்க வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி

****************************************************************************************************************

கடகம்:

பிறருக்கு உதவும் குணம் கொண்ட கடக ராசி அன்பர்களே,உங்களுக்கு தேவையான உதவி அடுத்தவரிடம் இருந்து கிடைப்பது அரிது. இந்த வாரம் பணதேவை உண்டாகும். இடமாற்றம் ஏற்படலாம்.  ஆடை அணிகலன் வாங்குவதன் மூலம் செலவு உண்டாகும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். வாகன யோகம் கிடைக்கும். எழுத்துவகையில் எதிலும் சிக்காமல் கவனமாக இருப்பது நல்லது. 

தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். முக்கிய  நபர்களின் ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களின் பணம் சம்பாதிக்கும் திறமை அதிகரிக்கும். மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை  திறமையுடன் செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள்.

குடும்பத்தில் இருந்த டென்ஷன் நீங்கும் கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். குழந்தைகளின் எதிர்காலம்  பற்றிய சிந்தனை அதிகரிக்கும். நண்பர்களால் தேவையான உதவி கிடைக்கும்.

பெண்களுக்கு எந்த தடைகளையும் தாண்டி எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். மனதில் மகிழ்சி உண்டாகும்.

மாணவர்களுக்கு மற்றவர்களுடன் பழகும் போது கவனமாக இருப்பது நல்லது. கல்வி பற்றிய மனக்கவலை ஏற்பட்டு விலகும்.

பரிகாரம்: ஸ்ரீவில்லிபுத்தூரில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ ஆண்டாள் சமேத ஸ்ரீ ரங்கமன்னாரை வணங்கி வர எல்லா பிரச்சனைகளும் தீரும். செல்வ செழிப்பும், ஆரோக்கியமும் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி

****************************************************************************************************************

சிம்மம்:

பாதியில் கிடந்த வேலையை எடுத்து முடிக்கும் திறன் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே, இந்த வாரம் மறைமுக எதிர்ப்புகள் குறையும். எடுத்த காரியத்தில் ஏற்பட்ட தடை, தாமதம் நீங்கும். உடல் ஆரோக்கியம் பெறும். வழக்குகள், தகராறுகளில் சாதகமான பலன்  கிடைக்கும். எந்த ஒரு விஷயத்திலும் மிகவும் அக்கறை காட்டுவீர்கள். அதேவேளையில் கடுமையான முயற்சிகளும் தேவை. 

தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற சூழ்நிலைகள் ஏதுவாக இருக்கும். செலவை  குறைப்பதன் மூலம் பணத் தட்டுப்பாடு குறையலாம். பேச்சில் கடுமையை காட்டாமல் இருப்பது நன்மை தரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி புரியும் இடங்களில் எச்சரிக்கையுடன்  இருப்பது நல்லது. குறிப்பாக எந்திரங்களை இயக்கும் போது கவனம் தேவை. மேலிடத்தின் மூலமாக நடக்க வேண்டிய காரியங்களில் தாமதம் ஏற்படலாம். 

குடும்பத்தில் குதூகலமான சுப பலன்கள் ஏற்படும். கணவன், மனைவிக் கிடையே பந்தபாசம் அதிகரிக்கும்.  குழந்தைகளின் மூலம் மனமகிழும் படியான சூழ்நிலை உருவாகும். நண்பர்கள் உறவினர்களுடன் கவனமாக பேசி பழகுவது நல்லது

பெண்களுக்கு மனதில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். முன்கோபத்தை குறைப்பது நன்மையை தரும்.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்ப்புகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.

பரிகாரம்: ஸ்ரீராகவேந்திரரை வணங்க எல்லா பிரச்சனைகளும் தீரும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி

****************************************************************************************************************

கன்னி:

கொடுத்த வேலையை முடிக்கும் திறன் கொண்ட கன்னி ராசி அன்பரகளே, நீங்கள் உங்கள் வேலையை செய்து முடிப்பதில் ஆர்வம் காட்ட மாட்டீர்கள். இந்த வாரம் மனதில் உத்வேகம் உருவாகி உயர்வான செயல்களைச் செய்வீர்கள். நிலுவையில் இருந்த பணம் உங்களுக்கு திரும்ப கிடைக்கும் கடன் சுமைகள் நீங்கி நிம்மதியான வாழ்க்கை முறைகள் உண்டாகும்.

தொழில் வியாபாரம் தொடர்பாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். இதனை பயன்படுத்திக் கொண்டால் உங்கள் வியாபாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் தேவையில்லாத வாக்கு வாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.

குடும்பத்தில் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்துடன் ஆலயங்களுக்குச் சென்று வருவீர்கள். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது உங்களுக்கு மனதிற்கு நிம்மதி கொடுக்கும்.

பெண்களுக்கு தேவையான பண வரவு எதிர்பார்த்த நேரத்தில் கிடைக்கும்.

மாணவர்களுக்கு  கல்வி தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். மனதில் இருந்த கவலை நீங்கும்.

பரிகாரம்: மேல் மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி அன்னையை தரிசித்து வருவதுஉடல் ஆரோக்கியத்தை தரும். எதிர்பார்த்த காரியம் தாமதமாக முடியும். ஆனால் நல்ல பலனை தரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன்

****************************************************************************************************************

துலாம்:

அடுத்தவர்களை வேலைவாங்கும் திறன் கொண்ட துலா ராசி அன்பர்களே, இந்த வாரம் எந்த ஒரு காரியத்தையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து அதிகரிக்கும். அடுத்தவர்களிடம் பொறுப்புக்களை ஒப்படைக்காமல் நேரடியாக செய்வது நன்மை தரும்.

தொழில் வியாபாரத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை தீரும். அரசு மூலம் நடக்க வேண்டிய பணிகளில்  இருந்த தொய்வு நீங்கும். 

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதியபதவிகள் கிடைக்கும். மரியாதை அந்தஸ்து ஆகியவை உயரும். எதையும்  செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் இருக்கும். பெரியோர்கள் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். கணவன்,  மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் சந்தோஷம் கூடும். உல்லாச பயணங்கள் செல்ல நேரலாம்.

பெண்களுக்கு திறமை வெளிப்படும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். மனதில் தைரியம் உண்டாகும்.

மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டிகள் நீங்கும். எதிர்பார்த்த வெற்றிக்கு கூடுதல் முயற்சி பலன் அளிக்கும்.

பரிகாரம்:  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரை வணங்கி வர துன்பங்கள் விலகும். மனநிம்மதி குடும்பத்தில் குதூகலம் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்

****************************************************************************************************************

விருச்சிகம்:

சுற்றியுள்ள் அனைத்து இடமும் சுத்தமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே, இந்த வாரம்.எதிலும் தன்னம்பிக்கையுடன் ஈடுபட்டு காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். புதிய தொடர்புகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். முக்கிய நபர்களின் அறிமுகமும் நட்பும் கிடைக்க பெறுவீர்கள். எதிர்பார்த்தபடி எல்லாம் நடந்தாலும் மற்றவர்கள்  தவறாக புரிந்து கொள்ள நேரலாம் கவனம் தேவை. 

தொழில் வியாபாரம் தொடர்பாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரம் தொடர்பானவழக்கு விவகாரங்களை  தள்ளி போடுவது நல்லது. எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் பணத்தேவை ஏற்படும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகள் உங்களுக்கு  உறுதுணையாக இருப்பார்கள்.

குடும்பத்தில் ஏதாவது வீண் விவகாரங்கள் ஏற்பட்டு நீங்கும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை  உண்டாகலாம். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். பிள்ளைகளுக்காக கூடுதலாக பாடுபட வேண்டி இருக்கும். சகோதரர்களிடம் கவனமாக பேசுவது நல்லது. 

பெண்களுக்கு பணவரத்து கூடும். ஏற்கனவே செய்த ஒரு காரியத்தின் பலன் இப்போது கிடைக்கும். திடீர் மனவருத்தம்  ஏற்படலாம்.

மாணவர்களுக்கு: மற்றவர்களை திருப்தியடையச் செய்யும் வகையில் உங்களது செயல்கள் இருக்கும். கல்வியில் ஆர்வம் உண்டாகும்.

பரிகாரம்:  உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பரிக்கல் லட்சுமி நரசிம்ம பெருமாளை வணங்கி வர எதிர்ப்புகள் நீங்கும். தொழிற்போட்டிகள் குறையும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன்,சனி

****************************************************************************************************************

தனுசு:

எடுத்த காரியங்களில் தயக்கம் கொள்ளாமல் அதை தீர்வுகண்டு வெற்றி காணும் தனுசு ராசி அன்பர்களே, இந்த வாரம் சமூகத்தில் உயர்ந்தவர்கள் மத்தியில் புதியதொரு மரியாதையும் வரவேற்பும் உங்களுக்கு கிடைக்கப்பெறும. தாயின் உடல்நலத்தில்  சிறு சிறு தொந்தரவுகள் உண்டாகி நல்ல பராமரிப்பின் காரணமாய் உடல் நலம் பெறும். பூர்வ புண்ணி சொத்துக்களும் அதனால் வரக்கூடிய தனலாபங்களும் உங்கள் தகுதியை உயர்த்தும். வெகுகாலம் தீராத பிரச்னைகள் மனதுக்கு சந்தோஷம் தரும் தீர்வை தரும். 

தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும் அரசாங்கம் தொடர்பான பணிகளில் சாதகமான போக்கு  காணப்படும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் கூடும். திறமை வெளிப்படும். வேலை தேடுபவர்களுக்கு வேலை  கிடைக்கும்.

குடும்பத்தை விட்டு பிரிந்து சென்ற வர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம்  அதிகரிக்கும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். விருந்தினர்கள் வருகை இருக்கும்.  மரியாதையும் அந்தஸ்தும் கூடும்.

பெண்களுக்கு விடா முயற்சியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பணவரத்து திருப்திதரும்.

மாணவர்களுக்கு எதிலும் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது நல்லது. கல்வியில் வெற்றிபெற கூடுதல் கவனம் தேவை.

பரிகாரம்: குல தெய்வத்தை பூஜை போட்டு வணங்க குடும்ப பிரச்சனை, தொழிற்பிரச்சனை கல்வியில் தடை போன்றவை விலகும். எதிலும் நன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி

****************************************************************************************************************

மகரம்:

அனைத்து துறையிலும் ஆர்வம் மிகுந்தவராக திகலும் மகர ராசி அன்பர்களே, உங்களுக்கு தெய்வீக  ஈடுபாடும் இருக்கும். இந்த வாரம் அறிவுத்திறன் அதிகரிக்கும். சாதூரியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்க பெறுவீர்கள். பணவரத்து அதிகரிக்கும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. கலைகளில் ஆர்வம் பிறக்கும். வீண் ஆசைகள் தோன்றலாம்.  மனதை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. சின்ன விஷயங்களில் மன நிறைவு உண்டாகும்.

தொழில் வியாபாரத்தில் லாபம் குறையும். பணவரத்து சீராக இருக்கும். ஆர்டர்கள் வருவது தாமதப்படும்.  வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. போட்டிகள் குறையும்.

உத்தியோகத்தில்  இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படும். சக ஊழியர்களிடம் இருந்த மன வருத்தங்கள் நீங்கும்.  மேல் அதிகாரிகள் சொன்ன வேலையை செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கை துணையின் பேச்சை கேட்டு செயல்பட வேண்டி இருக்கும்.  கணவன், மனைவிக்கிடையே வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நல்லது. உறவினர்கள், நண்பர்கள் மூலம் கிடைக்கும் உதவி தாமதப்படும்.

பெண்களுக்கு கூடுதலாக செய்யும் முயற்சிகள் மூலம் விரும்பியபடி காரியத்தை செய்து முடிப்பீர்கள். உடல்  ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் நீங்கும். எதிலும் முழு முயற்சியுடன் ஈடுபடுவீர்கள்.

பரிகாரம்:  திருச்செந்தூர் முருகனை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். காரிய வெற்றி கிடைக்கும். எதிர்ப்புகள் விலகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், சனி

****************************************************************************************************************

கும்பம்:

எதையும் செயல்படுத்துவதற்கு முன்பு யோசித்து செயல்படகூடிய கும்ப ராசி அன்பர்களே, இந்த வாரம் எல்லா காரியங்களும் சுமூகமாக நடந்து முடியும். மனத்துணிவு உண்டாகும். எதையும் வேகமாக செய்து முடிப்பீர்கள். செலவு அதிகரிக்கும். தடை தாமதம் விலகும். மற்றவர்கள் விஷயத்தில் கவனம் செலுத்துவதை தவிர்ப்பது நல்லது.

தொழில் வியாபாரத்தில் இருந்த முட்டு கட்டைகள் நீங்கும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம்.  பணவரத்து திருப்தி தரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். அதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்க  பெறுவீர்கள். உத்தியோகம் தொடர்பான இடமாற்றம் ஏற்படலாம்.

குடும்பத்தில் இருப்பவர்கள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. கணவன்,  மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. குழந்தைகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள்.

பெண்களுக்கு சாதூரியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தேடி வரலாம்.

மாணவர்களுக்கு எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்ல பலன் தரும்.

பரிகாரம்: நவகிரகத்தில் குருபகவானுக்கு முல்லை மலர் சாற்றி நெற் தீபம் ஏற்றி வர எல்லா கஷ்டங்களும் நீங்கும். பொருளாதார மேம்பாடு உண்டாகும்

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி.

****************************************************************************************************************

மீனம்:

உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மீன ராசி அன்பர்களே, நீங்கள் நேர்மைக்காக பாடுபடுவீர்கள். இந்த வாரம் .எதிர்பார்த்த பணவரத்து தாமதப்படலாம். வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். எனவே கவனமாக எதிலும் ஈடுபடுவது நல்லது. தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். எந்த காரியத்தையும் ஆராய்ந்து பார்த்து செய்வது நல்லது.

தொழில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பழைய பாக்கிகள் வசூலாக நிதிநிலை உயரும். கடன் பிரச்சனைகள்  குறையும். தொழில் போட்டிகள் விலகும். வேலை தேடுபவர்களுக்கு உத்தியோகம் கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுகமான எதிர்ப்புகள் விலகும்.

குடும்பத்தில் இருந்த கஷ்டங்கள் நீங்கும். குதூகலம் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.  பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். தொல்லைகள் நீங்கும்.

பெண்களுக்கு எதையும் எளிதாக செய்து முடிக்கும் திறமை உண்டாகும். பயணங்கள் வெற்றியை தரும்.

மாணவர்களுக்கு மனதில் இருந்த வீண் பயம் அகலும். கல்வியில் வெற்றி பெற பாடுபடுவீர்கள். 

பரிகாரம்: விநாயக பெருமானுக்கு அருகம்புல் மாலை சாற்றி அர்ச்சனை செய்து வர குடும்ப கஷ்டங்கள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் மேன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன்,சனி

*************************************************************************************************************************

 

வார பலன்

உங்கள் ராசிக்கான இந்த வார பலன்கள் (மார்ச் 22 முதல் 28 வரை)

Published

on

weekly prediction, வாரபலன்

வாரபலன்

மேஷம்:

கட்டுபாடு  இல்லாமல் சுதந்திரமாக செயலாற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்ட மேஷ ராசி அன்பர்களே, இந்த வாரம் திடீர் கோபம் டென்ஷன் ஏற்படலாம். கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. வீண் அலைச்சல், மனக்குழப்பம் உண்டாகலாம். எனினும் நன்மை ஏற்படும். பணவரத்து இருக்கும். இழுபறியான காரியங்கள் சாதகமாக முடியும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள்  அதிக உழைப்பின் மூலம் லாபம் கிடைக்க பெறுவார்கள். பொருளாதாரம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் சாதகமாக பலன் தரும்.

உத்தியோகத்தில் சரியாக முடிக்க வேண்டுமே என்ற கவலை உண்டாகும். சக ஊழியர்களிடம் கவனமாக பேசுவது நல்லது.

குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் பழி ஏற்பட வாய்ப்பு உண்டு. எதிர்பாராத செலவு உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு மனஸ்தாபங்கள் வரலாம்.  பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் தேவை. ஆயுதங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை.

பெண்களுக்கு கோபத்தை கட்டுப்படுத்துவதும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நன்மை தரும். வீண் செலவை தடுக்க திட்டமிட்டு செயல்படுவது நல்லது.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண வேண்டும் என்ற ஆர்வம் உண்டாகும். விளையாட்டு போட்டிகளில் திறமை வெளிப்படும்.

பரிகாரம்: விநாயக பெருமானை தீபம் ஏற்றி வணங்க கஷ்டங்கள் தீரும். வீண் அலைச்சல் குறையும். காரிய தடைகள் நீங்கும்

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன்,சனி

************************************************************************************************

ரிஷபம்:

அனைவரிடமும் இன்முகத்துடன் பழகும் குணம் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே, இந்த வாரம் பணவரத்து திருப்திகரமாக இருக்கும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை வெற்றிகரமாக செய்வீர்கள். ஆனால் தாமதமான பலனே கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக வந்து சேரும். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனமாக இருப்பது நல்லது. 

தொழில் வியாபாரம் தொடர்பான கடிதப் போக்குவரத்தால் அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரம் விரிவுபடுத்துவது தொடர்பான திட்டங்கள் தோன்றும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சல் காரியங்களில் இழுபறி என்ற நிலையை காண்பீர்கள். பேச்சை குறைத்து செயலில் ஈடுபடுவது நன்மையை தரும்..

குடும்பத்தில் இருப்பவர்களால் திடீர் பிரச்சனைகள் அதனால் வாக்குவாம் போன்றவை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்று ஏற்படலாம். விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. சிலர் குடும்பத்தை விட்டு பிரிந்து வெளியில் தங்க நேரலாம்.

பெண்களுக்கு எதிர்ப்புகள் நீங்கும். நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் மதிப்பெண் பெற எண்ணுங்கள். அதற்கான முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும்.

பரிகாரம்: ஸ்ரீருத்திரமூர்த்தியை வணங்கி வர எதிலும் வெற்றி கிடைக்கும். செயல்களில் வேகம் உண்டாகும். 

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி.

************************************************************************************************

மிதுனம்:

கடமை உணர்வுடன் திட்டமிட்டு செயலாற்றுவதில் வல்லவரான மிதுன ராசி அன்பர்களே, இந்த வாரம் எதிர்ப்புகள்  விலகும். தொல்லைகள் தீரும். வீண்கவலைகள் ஏற்பட்டு நீங்கும். கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது. பணவரத்து தாமதப்படும். வீண் ஆசைகள் உண்டாகலாம் கவனம் தேவை.

தொழில் வியாபாரத்தில் மெத்தன போக்கு காணப்பட்டாலும் தேவையான பண வரத்தும் இருக்கும். புதிய முயற்சிகளில் தாமதமான நிலை காணப்படும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாகம் பற்றி யாருடனும் விமர்சனம் செய்யாமல் இருப்பது நல்லது. பதவி உயர்வு, சம்பள உயர்வு தாமதப்படலாம்.

 குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே திடீர் வாக்குவாதங்கள் உண்டாகலாம்.  வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு வெளியே தங்க நேரிடலாம். வீண்செலவுகள்  ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

பெண்களுக்கு எண்ணிய காரியம் கை கூடும். வீண் அலைச்சல் குறையும் சிக்கலான பிரச்சனைகளில் நல்ல முடிவு கிடைக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கூடுதல் உழைப்பு தேவைப்படும். எதிர்பார்ப்புகளை குறைத்து இருப்பதை வைத்து முன்னேற முயற்சிப்பது நல்லது.

பரிகாரம்: சிவபெருமானை வணங்கி வருவது எதிர்பார்த்த காரியம் நடந்து முடியும். எதிலும் சாதகமான நிலை காணப்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், சனி

************************************************************************************************

கடகம்:

அடுத்தவர் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் கருத்துக்களை எடுத்து கூறும் திறமை பெற்ற கடக ராசி அன்பர்களே, இந்த வாரம் கவனம் தேவை. வீண் பிரச்சனையால் மனக்குழப்பம் ஏற்படலாம். பயணங்களில் தடங்கல் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடைகள் ஏற்படலாம். வழக்குகள் சம்பந்தமான விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கை அவசியம்.

தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். மருந்து, ரசாயனம் போன்ற தொழில்களில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையையும் கூடுதல் உழைப்பின் மூலம் செய்து முடிக்க வேண்டி இருக்கும்

குடும்பத்தில் கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன்  நிதானமாக பேசுவது குடும்ப அமைதியை தரும். நண்பர்கள், உறவினர்கள் விலகி செல்வது போல் இருக்கும். விட்டு பிடிப்பது நல்லது. குழந்தைகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவீர்கள்.

பெண்களுக்கு வீண் அலைச்சல், வேலை பளு ஆகியவை அதிகரிக்கும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மை தரும்.

மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கூறுவதை கேட்டு அதன்படி நடப்பதும்,  பாடங்களில் இருக்கும் சந்தேகங்களை உடனுக்குடன் கேட்டு தெரிந்து கொள்வதும் வெற்றிக்கு உதவும்.

பரிகாரம்:  ஆஞ்சனேயரை வெண்ணெய் சாற்றி வணங்க கஷ்டங்கள் தீரும். மனோ தைரியம் கூடும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி

************************************************************************************************

சிம்மம்:

போராட்டத்தைக் கண்டு அஞ்சாமல் எதிர்த்து நின்று வெற்றி பெறும் சிம்ம ராசி அன்பர்களே, இந்த வாரம் வீண் அலைச்சல் குறையும். சிக்கல்கள் தீரும். எண்ணிய காரியம் கைகூடும் குறிக்கோள் நிறைவேறும்.

தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள்  சாதூரியமான பேச்சின் மூலம் தங்களது வியாபாரத்தை லாபகரமாக செய்வார்கள். தேவையான பண உதவியும் கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிக உழைப்பும் அதற்கேற்ற பலனும் உண்டாகும். எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நன்மை தரும்

குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகள் உங்களுக்கு டென்ஷன் தருவதாக இருக்கலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நல்ல பலன் தரும். பிள்ளைகளிடம் அனுசரித்து செல்வதும் அவர்கள் போக்கில் விட்டு பிடிப்பதும் நல்லது.

பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். மாற்று கருத்துக்களை மற்றவர்களிடம் கூறாமல் இருப்பது நன்மை தரும்.

மாணவர்களுக்கு கல்வியில் மெத்தன போக்கு ஏற்படாமல் தீவிர கவனத்துடன் பாடங்களை படிப்பது வெற்றிக்கு வழி வகுக்கும்.

பரிகாரம்: திருவண்ணாமலை ஸ்ரீரமணமகரிஷியை வணங்க மன அமைதி கிடைக்கும். காரிய தடைகள் விலகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி

************************************************************************************************

கன்னி:

கலையார்வமும், எல்லோரையும் எளிதில் வசீகரிக்கும் திறமையும் கொண்ட கன்னி ராசி அன்பர்களே, இந்த வாரம் எல்லாவிதத்திலும் நன்மை உண்டாகும்.  எதையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். அந்நிய நபர்களிடம் கவனமாக இருப்பது நல்லது.

தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு வேகமாக இல்லாவிட்டாலும் நிதானமாக இருக்கும். பணவரத்து வரும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மற்றவர்களின் ஆலோச னையை கேட்டு  செயல்படுவதை தவிர்ப்பது நல்லது. மேல் அதிகாரிகள் மூலம் நன்மை உண்டாகும்.

குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். தெளிவான முடிவுகள் மூலம் நன்மை உண்டாகும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து எதையும் மனம்விட்டு பேசி செய்வது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். குடும்ப வருமானம் அதிகரிக்கும்.

பெண்களுக்கு வீண் கவலைகள் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்கள் ஆலோசனை களை ஏற்குமுன்  அதுபற்றி பரிசீலிப்பது நல்லது.

மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டி குறையும். எதையும் அவசரப்படாமல் நிதானமாக செய்வது நல்லது.

பரிகாரம்: ஸ்ரீதுர்க்கை அம்மனை ராகுகாலத்தில் அர்ச்சனை செய்து வழிபடுவது எல்லா பிரச்சனைகளையும் தீர்க்கும். எதிர்ப்புகள் அகலும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி

************************************************************************************************

துலாம்:

பக்குவமான அணுகுமுறையினால் எதிலும் சாதகமான பலனை பெறும் துலாம் ராசி அன்பர்களே, இந்த வாரம் இனிமையான பேச்சின் மூலம் சிக்கலான காரியங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். உங்கள் திறமையை கண்டு அடுத்தவர்கள் வியப்பார்கள். அலைச்சலை தவிர்ப்பதன் மூலம் களைப்பு ஏற்படாமல் தடுத்து கொள்ள முடியும். வேளை தவறி உணவு உண்ணாமல் பார்த்துக்கொள்வது நல்லது. பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். 

தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கல் ஏற்பட்டு பின்னர் சரியாகும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும்போது கவனம் தேவை.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதையும் ஆலோசித்து செய்வது நன்மைதரும். மேல் அதிகாரிகள் கூறுவதற்கு மாற்று கருத்துக்களை கூறாமல் இருப்பது நல்லது.

குடும்பத்தில் இருந்த  பிரச்சனைகள் நீங்கும். எதிர்பார்த்த தகவல் நல்ல தகவலாக இருக்கும். கணவன், மனைவி இருவரும் எந்த ஒரு முடிவையும் நிதானமாக யோசித்து எடுப்பது. நன்மை தரும். அவசரத்தை தவிர்ப்பது நல்லது. சகோதரர் வழியில் உதவியை எதிர்பார்க்கலாம்.

பெண்களுக்கு எந்த ஒரு சின்ன வேலைக்காகவும் மிகவும் பாடுபட வேண்டி இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும் பயணங்களின் போது கவனம் தேவை.

மாணவர்களுக்கு சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டு படிப்பது நல்லது. வகுப்பில் கவனத்தை சிதற விடாமல் பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும்.

பரிகாரம்: ஸ்ரீமகா கணபதியை பூஜித்து வழிபட்டு வர எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும். காரிய தடைகள் நீங்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன்

விருச்சிகம்:

உலக அனுபவ அறிவை பெற்றவரும், அடுத்தவரின் தராதரம் அறிந்து உதவிகள் செய்யக்கூடியவரான விருச்சிக ராசி அன்பர்களே, இந்த வாரம் முயற்சிகளில் வெற்றி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். மனதில் தெளிவு உண்டாகும். ஆக்கபூர்வமாக எதையும் செய்யும் எண்ணம் தோன்றும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. பணம் வரும் வாய்ப்பு உள்ளது.

தொழில் வியாபாரம் தொடர்பான வீண் அலைச்சல் ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. எதிர்பார்த்த பணம் கைக்கு வருவதில் தாமதம் ஏற்படலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான காரியங்களில் ஈடுபடும் போது அவசரப்படாமல் நிதானமாக செயல்படுவது காரிய வெற்றியை உண்டாக்கும். எளிதில் மற்றவர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்பட வாய்ப்பு உண்டு

குடும்பம் தொடர்பான கவலைகள் ஏற்படும். குடும்ப செலவை சமாளிக்க பணவரத்து இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனதில் ஆன்மீக எண்ணங்கள் ஏற்படும். வாழ்க்கை துணை மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பும்,  மரியாதையும் கூடும். 

பெண்களுக்கு தேவையற்ற சில காரியங்களை செய்ய வேண்டி இருந்தாலும் அதன் மூலம் நன்மை உண்டாகும். பணவரத்து திருப்தி தரும். தேவையான உதவி கிடைக்கும்.

மாணவர்களுக்கு எதிலும் நல்லது கெட்டதை யோசித்து அதன் பின்பு அந்த காரியத்தில் ஈடுபடுவது நன்மை தரும். கல்வியில் கூடுதல் கவனம் தேவை.

பரிகாரம்: ஸ்ரீ ஆஞ்சநேயரை வெண்ணெய் சாற்றி வணங்க மனதில் தைரியம் உண்டாகும். எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் ஏற்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி

************************************************************************************************

தனுசு:

கடின உழைப்பில் ஸ்திரமான வளர்ச்சியை பெறும் தனுசு ராசி அன்பர்களே, இந்த வாரம் பல வழிகளிலும் ஏற்பட்ட தொல்லைகள் குறையும். ஆனால் எந்த ஒரு வேலையிலும் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது நல்லது.

தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். போட்டிகள் குறையும். எதிர்பார்த்த ஆர்டர் வரும். பணவரத்து திருப்தி தரும். கடன் பிரச்சனை கட்டுக்குள் இருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். இயந்திரங்கள், ஆயுதங்கள், நெருப்பு ஆகியவற்றை கையாளும் தொழிலாளர்கள் கவனமாக இருப்பது நல்லது.. 

குடும்பத்தில் சுமூகமான நிலை காணப்படும். ஆனாலும் மனதில் குடும்பம் தொடர்பான கவலை, பிள்ளைகள் பற்றிய கவலை இருந்து வரும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது.

பெண்களுக்கு அடுத்தவர்கள் செயல்கள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம். எனவே  நிதானமாக செயல்படுவது நன்மையை தரும். எந்த பிரச்சனையையும் சமாளிக்கும் திறமை கூடும்

மாணவர்களுக்கு சக மாணவர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். மிகவும் பொறுமையுடனும், கவனமாகவும் பாடங்களை படிப்பது அவசியம்.

பரிகாரம்: ஸ்ரீசரஸ்வதி தேவதையை பூஜித்து வர அறிவு திறமை அதிகரிக்கும். கல்வியில் வெற்றி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், சனி.

************************************************************************************************மகரம்:

வாழ்க்கையில் பலவகை சோதனைகளையும், தடைகளையும் தகர்த்தெறியும் திறனுடைய மகர நக்ஷத்ர அன்பர்களே, இந்த வாரம் வாக்கு வன்மையால் எதையும் சாதகமாக செய்து முடிப்பீர்கள். திறமை அதிகரிக்கும். திட்டமிட்டபடி செயலாற்றுவதில் கவனம் செலுத்துவீர்கள். வாகனங்களில் செல்லும்போதும் பயணங்களின்போதும் எச்சரிக்கை தேவை.

தொழில் வியாபாரத்தில் பார்ட்னர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் உண்டாகும். குறிக்கோளை அடைவது லட்சியமாக கொண்டு செயல்படுவீர்கள். புதிய தொடர்புகள் மூலம் லாபம் கிடைக்கும்.

குடும்பத்தில் இருந்த  பிரச்சனைகள் குறையும். எதிர்பார்த்த காரியங்கள் நடக்கும். கணவன், மனைவிக்கிடையே  இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் கவனமும், அனுசரணையும் இருப்பது நல்லது. உறவினர், நண்பர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கி நெருக்கம் ஏற்படும்.

பெண்களுக்கு எதிலும் ஆக்கபூர்வமாக செய்து வெற்றி காண்பீர்கள். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும்.

மாணவர்களுக்கு எதையும் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசித்து செய்வது நன்மை தரும். கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள்.

பரிகாரம்: ஆதிபராசக்தியை வணங்கி வருவது எல்லா நன்மைகளையும் தரும். மனோதிடம் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்

************************************************************************************************

கும்பம்:

அசத்தலான நடை உடை பாவனையுடன் ஆடம்பரமாக வாழும் கும்ப ராசி அன்பர்களே, இந்த வாரம் நீண்ட நாட்களாக தடைபட்ட காரியத்தை செய்து முடிப்பீர்கள். மனதில் சஞ்சலம் ஏற்பட்டாலும் அதிர்ஷ்டம் உண்டாகும். விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இருந்தாலும் கொள்கைக்காக  பாடுபடுவீர்கள். அதிகம் பேசுவதை தவிர்ப்பது நல்லது. அடுத்தவர் சொல்வதை நம்பும் முன் அதைப்பற்றி ஆலோசனை செய்வது நல்லது.

தொழில் வியாபாரத்தில் வேகம் குறைந்தாலும் திருப்திகரமாக நடக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் கவனமுடன் செயல்படுவது நல்லது.  எதிர்பார்த்த ஆர்டர்கள், சரக்குகள் வருவதிலும் தாமதம் உண்டாகலாம் 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணங்களால் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகள் கூறுவதை மறுத்து பேசாமல் அனுசரித்து செல்வது நன்மையை தரும்..

குடும்பத்தில் கலகலப்பு உண்டாகும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.  குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும். அக்கம்பக்கத்தினரிடமும் உறவினர்கள், நண்பர்களிடம் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும்.

பெண்களுக்கு தொல்லைகள் குறையும். வீண் செலவுகள் உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

மாணவர்களுக்கு கூடுதலாக நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். தேவையான உதவிகள் கிடைக்கும்.

பரிகாரம்:  துர்க்கை அம்மனுக்கு ராகு காலத்தில் தீபம் ஏற்றி வழிபட கஷ்டம் நீங்கும். போட்டி, பொறாமை அகலும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன்,சனி

************************************************************************************************

மீனம்:

நியாயமான திட்டங்களுக்கு ஆதரவு அளித்து அடுத்தவர் மதிப்பை பெறும் மீன ராசி அன்பர்களே, இந்த வாரம் எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்து அதன் மூலம் நன்மதிப்பு பெறுவீர்கள்.  உடல் ஆரோக்கியம் உண்டாகும். பணவரத்து திருப்தி தரும். பயணங்கள் செல்ல நேரிடும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். சிலர் புதிய வாகனம் வாங்குவார்கள்.

தொழில் வியாபாரத்தில் மாற்றம் செய்ய எண்ணுவீர்கள். சிலர் புதிய தொழில் தொடங்க முற்படுவார்கள். அவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது.  வாடிக் கையாளர்களின் தேவைகளை சமாளித்து விடுவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களின் உழைப்புக்கு ஏற்ற நல்ல பலன் கிடைக்கும். மேல் அதிகாரிகள் ஒத்துழைப்பும் இருக்கும்..

குடும்பத்தில் உங்களுக்கு எதிராக பிரச்சனையை உண்டாக்கியவர்கள் தானாகவே அடங்கி விடுவார்கள். வீட்டில் சுப காரியம் நடக்கும். திருமண காரியங்களில் சாதகமான போக்க காணப்படும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். மதிப்பு கூடும்.

பெண்களுக்கு மனதில் தைரியம் உண்டாகும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. வீண்வாக்குவாதத்தை விட்டு நிதானமாக பேசுவது நன்மை தரும்

மாணவர்களுக்கு அடுத்தவரை பற்றிய விமர்சனங்கள், கிண்டல், கேலி பேச்சு போன்றவற்றை தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது.

பரிகாரம்: குலதெய்வத்தை பூஜை செய்து வணங்க சிக்கல்கள் தீரும். மன அமைதி, குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி

************************************************************************************************

Continue Reading

வார பலன்

உங்கள் ராசிக்கான இந்த வாரபலன்கள் (மார்ச் 15 முதல் 21 வரை)

Published

on

weekly prediction, வாரபலன்

மேஷம்:

கடினமான வேலைகளையும் மிகச் சுலபமாக செய்து முடிக்கும் திறன் கொண்ட
மேஷ ராசி அன்பர்களே, நீங்கள் எப்போதும் நியாயத்தின் பக்கம் இருக்க விரும்புபவர்கள். இந்த வாரம்  மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பாராத செலவு ஏற்படும்.  அலைச்சலால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாத நிலை ஏற்படலாம். பணவரவு இருக்கும். வாக்கு வன்மையால் காரிய அனுகூலம் ஏற்படும்.

குடும்ப உறுப்பினர்களிடம் இருந்த மனத்தாங்கல் நீங்கி மகிழ்ச்சியும், சகஜ நிலையும் காணப்படும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளிடம் பேசும் போது நிதானமாக பேசுவது நல்லது.

தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி கள் குறையும். புதிய ஆர்டர்கள் பெறுவ தில் சிந்தனை செலுத்துவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் பணியாற்றுவதால் உடல் சோர்வடைய நேரலாம். வேலை செய்யும் இடத்திலும் மேல் அதிகாரிகளிடமும் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பார்த்த பணி உயர்வு கிட்டும்.

பெண்களது செயல்களுக்கு பக்கபலமாக யாராவது இருப்பார்கள். திறமையான பேச்சின் மூலம் எதிலும் வெற்றி காண்பீர்கள். செலவுகளை குறைப்பது நன்மை தரும்..

மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டிகள்  குறையும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். மனதில் நம்பிக்கை உண்டாகும்.

பரிகாரம்: சுவாமி மலை முருகனை நினைத்து வணங்க குடும்ப பிரச்சனைகள் தீரும்.

அதிர்ஷ்ட கிழமைகள் : திங்கள், செவ்வாய்

*************************************************************************************

ரிஷபம்:

தனிப்பட்ட முறையில்  முடிவுகளை எடுக்க ஆசைப்படும்  ரிஷப ராசி அன்பர்களே, நீங்கள் உழைப்பதின் மூலம் முன்னுக்கு வர வேண்டும் என விரும்புபவர். இந்த வாரம்: தெளிவான  சிந்தனை தோன்றும். எந்த காரியத்தையும் செய்யும் முன் ஆலோசனை செய்து அதில் ஈடுபட்டு வெற்றி  காண்பீர்கள். சாமர்த்தியமான உங்களது செயல் கண்டு மற்றவர்கள் ஆச்சரியப்படுவார்கள். முக்கிய நபர்கள், அந்தஸ்தில் உயர்ந்தவர்கள் நட்பு கிடைக்கும். அதனால் கவுரவம் அதிகரிக்கும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தரும்.

குடும்ப உறுப்பினர்களுக்கு தேவையான துணி போன்றவைகளை வாங்குவீர்கள். கணவன், மனைவிக் கிடையே இருந்து வந்த கருத்து வேற்றுமை குறையும். உங்களை பற்றி யாராவது வீண் அவதூறு பேசினால் கண்டுகொள்ளாமல் ஒதுங்கி விடுவது நல்லது. விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ருசியான உணவை உண்பீர்கள்.

தொழில் வியாபாரத்தில் இருந்த  மந்தநிலை மாறும். புதிய ஆர்டர்கள்  வந்து சேரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகாரிகள் கூறிய வேலையை  செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். சகஊழியர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது.

பெண்களுக்கு  அடுத்தவர்களின் வேலைக்காக வீணாக  அலைய நேரிடும். மனோ தைரியம் அதிகரிக்கும். எதிலும் கூடுதல்  கவனத்துடன் செயல்படுவது நல்லது.

மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டிகள் குறையும். எதை பற்றியும் கவலைப்படாமல் காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.

பரிகாரம்: பெருமாள் கோவிலுள்ள தாயாரை வணங்கி வர செல்வங்கள் சேரும்.

அதிர்ஷ்ட கிழமைகள் : ஞாயிறு, வெள்ளி

*************************************************************************************

மிதுனம்:

தெளிவான சிந்தனையுடன் செயல்படும் மிதுன ராசி அன்பர்களே, நீங்கள் மனிதநேயத்திற்கு முக்கியத்துவம் அளிப்பவர். இந்த வாரம் வாழ்க்கைக்கு தேவையான புதிய வசதிகள் கிடைக்கும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.  புதிய ஆடை அணிகலன்கள் – ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். வீடு, மனை வாங்க திட்டமிடுவீர்கள். சிலர் புதிய வாகனம் வாங்குவார்கள். ஆனால் மனகுழப்பம் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. எடுக்கும் காரியம் சிறிது முயற்சிக்குப் பின் நடைபெறும்.

குடும்பத்தில் பிள்ளைகளால் நன்மை உண்டாகும். அவர்களால் சந்தோஷம் கிடைக்கும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு திறம்பட செயல்படுவீர்கள். உறவினர்கள் வருகை இருக்கும். வீடு, வாகனம் வாங்கும் முயற்சி சாதகமான பலன் தரும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வாகனங்கள் சேர்க்கை இருக்கும்.

தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கி விருத்தியடையும். பொருட்களை வெளியூருக்கு அனுப்பும்போது கவனம் தேவை.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் சம்பந்தப்பட்ட விஷயங் களை மற்றவர்களிடம் கூறாமல் இருப்பது நன்மை தரும். மேல் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது.

பெண்களுக்கு  உங்களது ஆலோசனை கேட்டு குடும்பத்தில் இருப்பவர்கள் செயல்படுவார்கள். ஆன்மீக நாட்டம் உண்டாகும். வீண் அலைச்சல் ஏற்படலாம்.

மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மந்தநிலை மாறும். சுறுசுறுப்பாக பாடங்களை படிப்பீர்கள். சக மாணவர்கள் மூலம் உதவி கிடைக்கும்.

பரிகாரம்: சத்ய நாராயண பூஜையை செய்து வர நன்மைகள் அதிக அளவில் நடக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள் : ஞாயிறு, புதன்

*************************************************************************************

கடகம்:

பொறுமையுடன் நடந்து அனைவரையும் கவரும்  கடக ராசி அன்பர்களே, இந்த வாரம் எண்ணிய எண்ணம் ஈடேறும். யாராவது உங்கள் வேலைகளைக் குறை கூறிக் கொண்டிருப்பார்கள். வீரியத்தைக் குறைத்துக் கொண்டு காரியத்தை பெரிதாக எண்ணுங்கள். திட்டமிட்டு செய்யக்கூடிய காரியங்கள் அனைத்தும் சாதகமாகும்.

குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி சுமுகமான நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம்.

தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். பண பிரச்சனை தீரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான பணிகளில் முழுமூச்சுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பார்கள். பயணங்களின் போது உடமைகளை கவனமாக பாதுகாப்பாக வைப்பது நல்லது.

பெண்களுக்கு  உதவி கேட்டு உங்களை நாடி வருபவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வீர்கள். திடீர் செலவு உண்டாகலாம்.

மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

பரிகாரம்: அம்மனை நினைத்து குங்கும அர்ச்சனை செய்ய சுப காரியங்கள் நடக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள் : ஞாயிறு, திங்கள்

*************************************************************************************

சிம்மம்:

சீரான நடவடிக்கைகளால் அனைவரிடமும் ஒரு சேர பாராட்டுப் பெறும் சிம்ம ராசி அன்பர்களே, இந்த வாரம் நினைத்த காரியங்கள் நடக்கும். நடக்கும் முறை வேறுபட்டாலும் முடிவு உங்களுக்குச் சாதகமாக இருக்கும். வீண் அலைச்சல் உண்டாகும். கவனம் தேவை.

கணவன், மனைவிக்கிடையே  இருந்த மனவருத்தம்  நீங்கும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்ப வர்களுக்கு கடன் பிரச்சனைகள் தீரும். போட்டிகள்  குறையும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்தவை நல்லபடியாக முடியும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் எளிதாக பணிகளை செய்யும் படியிருக்கும். தற்காலிக பதவி உயர்வு கூடுதல் பொறுப்புகள் கிடைக்க பெறலாம்.

பெண்களுக்கு  எடுத்த முடிவை நிறைவேற்றுவதில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். எதிர்பார்த்த உதவிகள் தாமதப்படும்.

மாணவர்களுக்கு கல்வியில் காணப்பட்ட மெத்தன போக்கு நீங்கி சுறுசுறுப்பாக பாடங்களை படிப்பீர்கள். பிடிவாதத்தை விடுவது நன்மை தரும்.

பரிகாரம்: பிரித்தியங்கார தேவிக்கு எலுமிச்சை மாலை சாற்றி விரதம் இருந்து வழிபடுங்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள் : ஞாயிறு, திங்கள்

*************************************************************************************கன்னி:

எதிரிகளையும் தன் வசம் செயல்பட வைக்கும் திறமை பெற்ற கன்னி ராசி அன்பர்களே, இந்த வாரம் திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடிப்பீர்கள். பணவரத்து தாமதப்பட்டாலும் கையில் இருப்பு இருக்கும். வேளை தவறி சாப்பிட வேண்டி இருக்கும். முக்கியமான பணிகள் தாமதமாக நடக்கும். வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி சென்று விடுவது நல்லது. மற்றவர்களுக்கு உதவும் போது கவனமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியம் அடையும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும் படியான நிகழ்ச்சிகள் நடக்கும்.

குடும்பத்தில் சந்தோஷமான நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே  இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் மனம் மகிழும் படி தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். விருப்பங்கள் கைகூடும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வது நன்மை தரும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் லாபம் கிடைக்கும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமை யாக உழைக்க வேண்டி இருக்கும். அதனால் களைப்பு ஏற்படலாம்.

பெண்களுக்கு  தடைபட்ட காரியங்களில் தடைநீங்கி சாதகமாக நடக்கும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தி பாடங்களை படிப்பது நல்லது.

பரிகாரம்: பெருமாள் கோவிலுக்கு சென்று துளசி மாலையை வாங்கிக் கொடுங்கள். பிரச்சினை தீரும்.

அதிர்ஷ்ட கிழமைகள் : ஞாயிறு, புதன்

*************************************************************************************

துலாம்:

அனைவரிடமும் பரிவுடன் நடந்து கொள்ளும் குணமுடைய துலா ராசி அன்பர்களே, நீங்கள் திடீரென்று உணர்ச்சி வசப்படக்கூடியவர். இந்த வாரம் சில குழப்பங்கள் நேர்ந்தாலும் இதுவரை நடக்காமல் இருந்த காரியத்தை சிறப்பாக செய்து முடித்து மனநிம்மதி அடைவீர்கள். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் நடந்து முடியும். முக்கிய நபர்கள் மூலம் எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும்.

குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு திருப்தி தரும். உறவினர்கள் – நண்பர்கள் மூலம் நன்மை நடக்கும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு புதிய ஆர்டர்கள் பெறுவதில் தாமதம் உண்டாகும். வரவு இருந்த போதிலும் வியாபாரம் தொடர்பாக திடீர் செலவு உண்டாகலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. புதிய பதவிகள் தொடர்பான விஷயங்கள் தாமதப்பட்டாலும் பொறுப்புகள் அதிகரிக்கும்.

பெண்களுக்கு  தடைபட்ட காரியங்கள் நடந்து முடியும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பணவரத்து குறையலாம்.

மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மை தரும். திறமை வெளிப்படும்.

பரிகாரம்: கனக தார ஸ்தோத்திரம் படியுங்கள் அல்லது காதால் கேளுங்கள். அஷ்ட லட்சுமியை வழிபடுங்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள் : ஞாயிறு, வெள்ளி

*************************************************************************************

விருச்சிகம்:

விட்டுக் கொடுத்து உதவிகளைப் பெறும் விருச்சிக ராசி அன்பர்களே, இந்த வாரம் எதிலும் கவனமாக  செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த  காரியங்களை  வெற்றிகரமாக செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வாக்கு நாணயம் உண்டாகும். முக்கிய நபர்கள் நட்பு கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். அடுத்தவரை பற்றி எந்த பேச்சும் பேசாமல் இருப்பது நல்லது

குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். உங்கள் சொல்படி பிள்ளைகள் நடந்து கொள்வது மனதுக்கு இதமளிக்கும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் உங்களை நாடி வருவார்கள்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வசூலாக வேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகும். வியாபாரத் தில் மன நிறைவு காண்பீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. வேலை பார்க்கும் இடத்தில் பொருள்களை கவனமாக பாதுகாப்பாக வைப்பது நல்லது.

பெண்களுக்கு  மனக்குழப்பம் தீரும். தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் தேவை. ஒரு முறைக்கு இருமுறை பாடங்களை படிப்பது நல்லது.

பரிகாரம்: ஸ்ரீ சரபேஸ்வரரை ராகு காலத்தில் தரிசித்து வாருங்கள் ஏராளமான நன்மைகள் நடக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள் : திங்கள், செவ்வாய்

*************************************************************************************

தனுசு:

நீங்கள் உங்களுக்கென்று ஒரு வட்டம் போட்டு அதில் வாழ ஆசைப்படும் தனுசு ராசி அன்பர்களே,  இந்த வாரம் பல வழியிலும் பணவரத்து இருக்கும். காரியத் தடைகள் நீங்கும். மற்றவர்களின் மீது இரக்கம் ஏற்பட்டு உதவிகள் செய்வீர்கள். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். பெரியோர்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். பெரும் புள்ளிகளின் அறிமுகம் கிடைக்கும்.

குடும்பத்தில் திடீர் பிரச்சனை தலைதூக்கி பின்னர் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும்.  பிள்ளைகளால் செலவும் ஏற்படும். உறவினர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கடுமையான உழைப்பிற்கு பின்  நல்ல பலன் பெறுவார்கள், போட்டிகள் விலகும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக அலைய வேண்டி இருக்கும். சக ஊழியர்களால் உதவியும் இருக்கும்.

பெண்களுக்கு அறிவுபூர்வமாக செயல் பட்டு சில முக்கிய முடிவு எடுப்பதன் மூலம் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்த காரியம் நிறைவேறும். அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது.

மாணவர்களுக்கு கல்வியில் திறமை அதிகரிக்கும். உங்களது செயல்களுக்கு பாராட்டு கிடைக்கும். மனதில் தைரியம் கூடும்.

பரிகாரம்: குரு பகவானுக்கு மஞ்சள் நிற மலர் சாற்றி வழிபட வெற்றிகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள் : ஞாயிறு, வியாழன்

*************************************************************************************

மகரம்:

நேர்மையை நோக்கி அதற்காக எந்த வித சங்கடங்களையும் தாங்கிக் கொள்ளும் மகர ராசி அன்பர்களே, இந்த வாரம் காரியம் துரிதமாக நடைபெறும். சில எதிர்பார்த்த காரியங்கள் நடந்து முடியவில்லை என்ற எண்ணம் மனதை வருத்திக் கொண்டிருக்கும். பணத்தட்டுப்பாடு ஏற்படுவதால் மிகவும் டென்ஷனாகி விடுவீர்கள். மனவலிமையை அதிகமாக்க தியானம் செய்யுங்கள். தீராத தலைவலியாக இருந்த காரியங்கள் இப்பொழுது சாதகமாகும்.

குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். உறவினர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். குடும்பத்தினருடன் ஆன்மிக பயணம் செல்லும் நிலை உருவாகும்.  மற்றவர்கள் ஆலோசனை கேட்டு உங்களை நாடி வருவார்கள். உங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கூடுதல் கவனம் செலுத்து வது நல்லது. வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். அதே நேரத் தில் சரக்குகளை அனுப்பும் போது கவனம் தேவை.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது வேலையை கண்டு மேல் அதிகாரிகள் திருப்தியடைவார்கள்.

பெண்களுக்கு அனுபவபூர்வமான அறிவைக்கொண்டு எதையும் சாதிப்பீர்கள். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மை தரும்.

மாணவர்களுக்கு கல்வியில் திறமை அதிகரிக்கும். விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும். ஆசிரியர் ஆதரவு கிடைக்கும்.

பரிகாரம்: ஊர் எல்லையில் இருக்கும் அம்மனை போற்றி வணங்குங்கள். தைரியம் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள் : ஞாயிறு, சனி

*************************************************************************************

கும்பம்:

எவர் மனதில் உள்ளதையும் எளிதில் அறிந்து கொள்ளும் கும்ப ராசி அன்பர்களே! இந்த வாரம் ஆக்க பூர்வமான யோசனைகளை செயல்படுத்தி எதிலும் வெற்றி காண்பீர்கள். தெளிவான மனநிலை இருக்கும். சாமர்த்தியமாக செயல்பட்டு சாதகமான பலன் பெறுவீர்கள்.  ஆனால் உங்களுக்கு எதிராக சிலர் செயல்படும் சூழ்நிலை இருப்பதால் கவனம் தேவை .

குடும்பத்தில் மரியாதை கூடும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு இருக்கும். கணவன், மனைவிக்கிடையில் மனம்விட்டு பேசி எடுக்கும் முக்கிய முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சற்று விழிப்புடன் இருப்பது நல்லது. பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்த்த பணம் கைக்குவர தாமதம் ஆகலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். சக ஊழியர்களுடன் கடுமையாக பேசாமல் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

பெண்களுக்கு இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும்.  கவுரவம் உயரும். மற்றவர்களிடம் நன்மதிப்பு உண்டாகும்.

மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சி உண்டாகும். விளையாட்டு மற்றும்  போட்டிகள் சாதகமாக  பலன் தரும். சகமாணவர்களின் ஒத்துழைப்பும் இருக்கும்

பரிகாரம்: சிவன் கோவிலில் இருக்கும் சனீஸ்வர பகவானை வணங்க மன தைரியம் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள் : ஞாயிறு, சனி

*************************************************************************************

மீனம்:

அனைவரின் முன்னிலையிலும் உற்சாகமாக நடந்து கொள்ளும் மீன ராசி அன்பர்களே,  இந்த வாரம் சில சங்கடங்கள் நேரலாம். கெட்ட கனவுகள் உண்டாகலாம். எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். உஷ்ணம் சம்பந்தமான நோய் ஏற்படலாம். எதிர்பார்த்த பணம் கைக்கு வர தாமதமாகும் அதனால் திடீர் பண நெருக்கடி வரலாம். இடம் பொருள் அறியாமல் பேசுவதால் அடுத்தவர்களிடம் மனஸ்தாபம் உண்டாகலாம்.

குடும்பத்தில் ஏதாவது ஒரு வகையில் திடீர் சச்சரவுகள் தோன்றலாம். அதற்கு இடம் கொடுக்காமல் நடந்து கொள்வது நன்மை தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொருட்களை கவனமாக பார்த்துக்கொள்வது நல்லது. பணவிஷயத்தில் கூடுமானவரை அடுத்தவரை நம்புவதை தவிர்ப்பது நல்லது.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சாமர்த்தியமாக செயல் பட்டு வெற்றி காண்பார்கள். ஆனால் மனதில் ஏதாவது குறை ஏற்படும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். முயற்சிகள் எதிர்பார்த்த பலன் தராமல் போகலாம். வீண் அலைச்சல் உண்டாகலாம்.

பெண்களுக்கு உங்களது ஆலோசனையை கேட்டு அதன்படி சிலர் நடந்து காரிய வெற்றி அடைவார்கள். தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

மாணவர்களுக்கு கல்வியில் மட்டும் கவனம் செலுத்துவது வெற்றிக்கு உதவும். சகமாணவர், நண்பர்கள் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்: ஸ்ரீ சுக்தம் பாராயணம் செய்யுங்கள். எடுத்த காரியத்தில் இருந்த தடைகள் விலகும்.

அதிர்ஷ்ட கிழமைகள் : ஞாயிறு, வியாழன்

*************************************************************************************

Continue Reading

வார பலன்

உங்கள் ராசிக்கான இந்த வாரபலன்கள் (மார்ச் 08 முதல் 14 வரை)

weekly prediction, வாரபலன்

மேஷம்:

எப்போதும் விழிப்புடன் இருக்கும் மேஷ ராசி அன்பர்களே, இந்த வாரம் மனதில் உற்சாகம் பிறக்கும். தடைபட்ட காரியங்களில் தடை நீங்கி சாதகமான பலன் கிடைக்கும். எதிலும் தயக்கம் காட்டமாட்டீர்கள். நீண்ட நாட்களாக தடைபட்ட காரியங்கள் வேகமெடுக்கும். கண்மூடித்தனமாக எதிலும் ஈடுபடாமல் யோசித்து செய்வது நல்லது. எந்த ஒரு விஷயத்தையும் தக்க ஆலோசனையுடன் செய்வது நன்மையைத் தரும்.

குடும்பத்தில் அமைதி காணப்படும். கணவன், மனைவிக்கிடையே சகஜநிலை இருக்கும். பிள்ளைகள் கல்வி தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. உறவினர்கள் வருகை இருக்கும்.

தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் அகலும். தடைப்பட்ட பண உதவி கிடைக்கும்.

உத்தியோகத்தில்  இருப்பவர்களுக்கு வேலை சுமை அதிகரிப்பதுடன் அலைச்சலும் அதனால் சோர்வும் உண்டாகும்.

பெண்களுக்கு  மற்றவர்களால் ஏற்படும் தொல்லைகளில் சிக்காமல் இருக்க கவனமாக  செயல்படுவது நல்லது.

மாணவர்களுக்கு கல்வியில்  மந்தமான நிலை மாற கூடுதல் கவனத்துடன்  பாடங்களை படிப்பது நன்மை தரும்.

பரிகாரம்:  சனிக்கிழமையில் ஆஞ்சநேயரை வெண்ணெய் சாற்றி வணங்கி தீபம் ஏற்றி வர எல்லா கஷ்டங்களும் நீங்கும். பொருளாதாரம் மேம்படும் தைரியம் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய்

**********************************************

ரிஷபம்:

அடுத்தவர் ஆலோசனை கேட்டு செயல்படுவது போல் தோன்றினாலும் உண்மையில் சிந்தித்து செயலாற்றும் ரிஷப ராசி அன்பர்களே, இந்த வாரம் இறுதியில் பணவரத்து கூடும். செயல்திறமை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு வேலையை செய்து முடிப்பீர்கள். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எண்ணிய காரியங்கள் கைகூடும் சூழ்நிலை உருவாகும்.

குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் தீர எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும்.  கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகள்  மீது பாசம் அதிகரிக்கும். அவர்களுடன் இனிமையான பேசி பொழுதை கழிப்பீர்கள்.

தொழில் வியாபாரத்தில் ஏற்றுமதி – இறக்குமதியில் இருப்பவர்கள் நல்ல லாபத்தைக் காண முடியும். சின்ன சின்ன விவகாரங்களைச் சந்திப்பீர்கள். 

உத்தியோகத்தில் இருப்பவர்களின் திறமை வெளிப்படும். மேல் அதிகாரிகளின் ஆதரவும் இருக்கும்.

பெண்களுக்கு இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும். வரவேண்டிய பணம் வந்து சேரும். செயல் திறமை அதிகரிக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில்  வெற்றிபெற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும்.

பரிகாரம்:  சஷ்டி கவசம் சொல்லி முருகனை வணங்க நோய் நீங்கும். மனகுழப்பம் தீரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி

 

**********************************************

மிதுனம்:

அடுத்தவர் கொடுத்த வேலையை எப்பாடுபட்டாவது செய்து முடிக்கும் மிதுன ராசி அன்பர்களே நீங்கள் உங்கள் வேலையை செய்து முடிப்பதில் ஆர்வம் காட்ட மாட்டீர்கள். இந்த வாரம் நல்ல பலன்கள் உண்டாகும். தந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகளில் சாதகமான  நிலை காணப்படும். தான தர்மம் செய்யவும் ஆன்மிக பணிகளில் ஈடுபடவும் தோன்றும். நீண்ட தூர பயணங்கள் செல்ல நேரலாம். பயணத்தின் போது கவனம் தேவை.

குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி நிம்மதியும் சந்தோஷமும் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல் சந்தோஷத்தை தரும். பயணங்கள் செல்லும் போது கவனம் தேவை. சகோதரர்களிடம்  கருத்து வேற்றுமை உண்டாகலாம்.

தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களுக்காக அலைய வேண்டி இருக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி வரும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு  மேல் அதிகாரிகளிடமிருந்த சங்கடங்கள் சரியாகும். புது தெம்புடம் வேலைகளைச் செய்வீர்கள்.

பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருளை வாங்கி மகிழ்வீர்கள்.

மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் தேவை. ஒரு முறைக்கு இருமுறை பாடங்களை படிப்பது நல்லது.

பரிகாரம்:  திருப்பாவை சொல்லி தாயாரை வணங்கி வர துன்பங்கள் விலகும். மனநிம்மதி குடும்பத்தில் குதூகலம் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், சனி

 

**********************************************

கடகம்:

இயல்பிலேயே மற்றவர்களை கவர்ந்திழுப்பதில் திறமை உடைய கடக ராசி அன்பர்களே இந்த வாரம் வாக்கு வன்மையால் எதையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். எதிர்ப்புகள் விலகும். உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் சாதகமாக நடந்து முடியும்.

குடும்பத்தில் இருப்பவர்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்படுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே  திடீர் மனவருத்தம் ஏற்படலாம். அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளின் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

தொழில் வியாபாரம் முன்னேற்றம் காணும். தொழில் வளர்ச்சிக்காக சில திட்டங்களை செயல்படுத்த முடிவெடுப்பீர்கள். பணவரத்து திருப்தி தரும். வியாபார ஸ்தலத்திற்காக புதியதாக இடம் வாங்குவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு செயல்திறமை கூடும். பயணங்களும் செல்ல நேரிடலாம். பணி நிமித்தமாக அலைய வேண்டியதிருக்கும்.

பெண்களுக்கு எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுப்பதில் தாமதம் உண்டாகும். கவனமாக வேலைகளை செய்வது நல்லது. பணவரத்து தாமதமாகலாம்.

மாணவர்களுக்கு சீரான கல்வி நாட்டம் இருக்கும். சிலருக்கு கவனமும், பக்குவமும் உண்டாகும். உங்களுக்கு சிலர் உந்துதலாக இருப்பார்கள்.

பரிகாரம்:  முருகனை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். காரிய வெற்றி கிடைக்கும். எதிர்ப்புகள் விலகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்

 

**********************************************

சிம்மம்:

சுத்தம், சுகாதாரம் சுகமான வாழ்க்கை என்பதில் கவனமாக இருக்கும் சிம்ம ராசி அன்பர்களே இந்த வாரம் எதிலும் முன்னேற்றம் காணப்படும். இஷ்டத்திற்கு விரோதமாக காரியங்கள் நடந்தாலும் முடிவு சாதகமாக இருக்கும். வீண் ஆசைகள் மனதில் தோன்றும். கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதும் நன்மை தரும்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் உண்டாகலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவது நல்லது. திடீர் செலவு ஏற்படலாம்.

தொழில், வியாபாரம் சுமாராக நடக்கும் பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் இருக்கும். ஆர்டர்கள் பெறுவதில் தாமதம் ஏற்பட்டு நீங்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற வாய்ப்புகள் வரும். புதிய வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கலாம்.

பெண்களுக்கு கருத்து வேற்றுமையால் பிரிந்து சென்றவர்கள் கருத்து வேற்றுமை நீங்கி மீண்டும் நட்பு பாராட்டுவாக்ரள். மனதில் புது தெம்பும் உற்சாகமும் அதிகரிக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் மெத்தன போக்கு காணப்படும். மிகவும் கவனமாக படிப்பது கல்வியில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.

பரிகாரம்:  லட்சுமி நரசிம்ம பெருமாளை வணங்கி வர எதிர்ப்புகள் நீங்கும். தொழிற்போட்டிகள் குறையும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்

 

**********************************************

கன்னி:

சின்ன விஷயத்தையும் பெரிதாக நினைத்து குழம்பிக் கொள்ளும் அதே நேரத்தில் பிரச்சனையை சமாளிக்கும் திறமை பெற்ற கன்னி ராசி அன்பர்களே இந்த வாரம் எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. சுலபமாக முடிந்துவிடும் என்று நினைக்கும் காரியம் கூட சற்று தாமதமாகலாம். மனதில் இருந்த கவலை நீங்கி நிம்மதி கிடைக்கும். அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கலாம். வெளியூர் பயணம் அதன் மூலம் அலைச்சல் உண்டாகலாம்.  

குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளை தட்டி கொடுத்து எதையும் செய்ய  சொல்வது நல்லது. உங்கள் கருத்துகளுக்கு மதிப்பில்லாமல் போகலாம்.

தொழில், வியாபாரம் தொடர்பாக புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். அதனால் நன்மை உண்டாகும். உங்கள் கீழ் பணியாற்றுபவர்கள் சிறப்பாக பணிபுரிந்து உங்கள் நிலையை உயரச் செய்வார்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக வேலையாக முக்கிய நபர்களை சந்திக்க வேண்டி இருக்கும். கொடுத்த கடனை திருப்பி வாங்க முயல்வீர்கள்.

பெண்களுக்கு வீண் மனக்கவலை உண்டாகலாம். காரியங்களில் தடை தாமதம், வீண் செலவு ஏற்படலாம்.

மாணவர்களுக்கு பாடங்களில் இருந்த சந்தேகம் நீங்கும். உற்சாகமாக படிப்பீர்கள். சக மாணவர்களிடம் பழகும்போது கவனம் தேவை.

பரிகாரம்: ஆதிபராசக்தி அன்னையை தரிசித்து வருவதுஉடல் ஆரோக்கியத்தை தரும். எதிர்பார்த்த காரியம் தாமதமாக முடியும். ஆனால் நல்ல பலனை தரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன்

 

**********************************************

துலாம்:

எந்த காரியத்திலும் வேகத்தைக் காட்டி காலத்தில் முடிக்கும் துலா ராசி அன்பர்களே உங்களுக்கு தெய்வீக  ஈடுபாடு இருக்கும். இந்த வாரம் வாக்கு வன்மையால் ஆதாயம் உண்டாகும். தைரியம் அதிகரிக்கும். எல்லா விதத்திலும் நன்மை உண்டாகும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். காரிய வெற்றி ஏற்படும். பணவரத்து கூடும். எதிர்பாலினத்தாருடன் பழகும்போது கவனம் தேவை. எதிர்ப்புகள் குறையும்.

குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களது ஆலோசனை  கேட்டு நடப்பது மனதுக்கு திருப்தி தரும். கணவன் மனைவிக்கிடையே  மனம் விட்டு பேசுவதால் வருத்தங்கள் நீங்கும். பிள்ளைகளின் செயல்பாடுகள் மனதுக்கு திருப்தி தருவதாக இருக்கும். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு வரும்.

தொழில், வியாபாரம் தொடர்பான பயணங்கள் அதனால் அலைச்சல்  ஏற்படலாம். வியாபார விரிவாக்கம் தொடர்பான பணிகளில் இடையூறுகள் ஏற்படலாம். பழைய பாக்கிகள் வசூலில் தாமதமான நிலை காணப்படும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு வகையில் அலைச்சல், கூடுதல் செலவை சந்திப்பார்கள். வேறு ஒருவர் செய்த செயலுக்கு வீண் பழி ஏற்க வேண்டி இருக்கும். எனவே கவனம் தேவை.

பெண்கள் எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட தாமதமாகலாம்.

மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் ஆர்வம் உண்டாகும். கல்வியில் தேர்ச்சி பெறவும் கூடுதல் மதிப்பெண் பெறவும் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும்.

பரிகாரம்: குல தெய்வத்தை வணங்க குடும்ப பிரச்சனை, தொழிற்பிரச்சனை கல்வியில் தடை போன்றவை விலகும். எதிலும் நன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி

 

**********************************************

விருச்சிகம்:

எந்த ஒரு வேலையிலும் ஈடுபடும் முன்பு அதனால் ஏற்படும் நல்லது கெட்டது பற்றி ஆராய்ந்த பின்னரே அதை செய்யும் விருச்சிக ராசி அன்பர்களே இந்த வாரம். வீண் அலைச்சல் குறையும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடங்கல் ஏற்பட்டு நீங்கும். தேவையற்ற மனக்கவலை உண்டாகும். வழக்கு விவகாரங்களில் தாமதமான போக்கு காணப்படும். நிர்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரலாம்.

குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.  கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். ஆனால் மனதில் ஏதாவது குறை இருக்கும் வெளிக்காட்ட  மாட்டீர்கள். பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். உறவினர்கள் வருகை இருக்கும்.

தொழில், வியாபாரம் தொடர்பான பிரயாணங்கள் வெற்றியைத் தரும்.  புதிய உத்வேகத்துடன் தொழிலாளர்கள் வேலை செய்வார்கள். உன்னதமான நிலையை அடையப் பெறுவீர்கள். 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாதுரியமான பேச்சால் மேல் அதிகாரிகளின் கட்டளைகளை நிறைவேற்றி பாராட்டு பெறுவார்கள். நீண்ட நாட்களாக நின்ற பதவி உயர்வு உங்களை தேடி வரலாம்.

பெண்கள் எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவதும் நன்மை தரும்.

மாணவர்கள் எந்த வேலை செய்தாலும் கவனமாக செய்வது நல்லது. பாடம் தொடர்பான சந்தேகங்களை உடனுக்குடன் கேட்டு படிப்பது நல்லது.

பரிகாரம்: சதுர்த்தியன்று விநாயகரை வணங்க பிரச்சனைகள் குறையும். மனதில் அமைதி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்

 

**********************************************

தனுசு:

உழைப்புக்கு அஞ்சாத தனுசு ராசி அன்பர்களே நீங்கள் நேர்மைக்காக பாடுபடுவீர்கள். இந்த வாரம் மங்கள காரியங்கள் இருந்து வந்த தடைகள் அகலும். பணவரத்து சீராக இருக்கும். வேலை பளு காரணமாக நேரம் தவறி உணவு உண்ண வேண்டி இருக்கும். வயிறு தொடர்பான கோளாறுகள் ஏற்பட்டு நீங்கும். அக்கம்பக்கத்தின ரிடம் சில்லறை சண்டைகள் ஏற்பட்டு சரியாகும். கவுரவம் பாதிக்கும்படியான சூழ்நிலை வரலாம்.

குடும்பத்தில் உறவினருடன் கருத்து வேறுபாடு உண்டாகலாம். வீட்டில் உள்ள பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. சொத்து விவகாரங்களில் கவனம் தேவை.

தொழில், வியாபாரம் போட்டிகள் நீங்கி நன்கு நடக்கும். உங்களது வியாபாரத்திற்கு பக்கபலமாக ஒருவரது உதவி கிடைக்கும். முக்கிய பொறுப்புகளில்  இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக எதையும் செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள். கவுரவம் கூடும். நிலுவை தொகை வந்து சேரும். பதவி உயர்வு கிடைக்கலாம்.

பெண்கள் திறமையான பேச்சின்மூலம் எதையும் வெற்றிகரமாக செய்து முடித்து ஆதாயம் அடைவீர்கள். எதிர்ப்புகள் குறையும். பணவரத்து கூடும்.

மாணவர்கள் கல்வியில் மட்டும் கவனம் செலுத்துவது வெற்றிக்கு உதவும். சகமாணவர், நண்பர்கள் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்: நவகிரகத்தில் குருபகவானை முல்லை மலர்சூடி வணங்க  எல்லா நன்மைகளும் உண்டாகும். செல்வநிலை உயரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், சனி

 

**********************************************

மகரம்:

யாருக்கும் அஞ்சாமல் நேர்மையாக செயலாற்றும் மகர ராசி அன்பர்களே இந்த வாரம் தடைபட்ட காரியங்களில் இருந்த தடை நீங்கி நன்றாக நடந்து முடியும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சிக்கல் தீரும். எதிர்த்து செயல்பட்டவர்கள் விலகி சென்று விடுவார்கள். நோய்  நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பொருளாதார நிலை உயரும். 

குடும்பத்தில் எதிர்பாராத திடீர் செலவு ஏற்படலாம். கணவன் மனைவிக்கிடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகளிடம் பக்குவமாக நடந்து கொள்வது நன்மை தரும். உறவினர்கள் நண்பர்கள் வருகை இருக்கும்.

தொழில், வியாபாரம் முன்னேற்ற பாதையில் சென்றாலும் மனதிருப்தியளிக்காத நிலை காணப்படும். வியாபாரம் தொடர்பான காரியங்களில் முழுகவனம் செலுத்துவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் நன்மை தரலாம். அவர்களிடம் பொறுப்புகள் கொடுப்பதில் கூடுதல் கவனம் தேவை.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த இடத்திற்கு வேலை மாற்றம் கிடைக்கும். அரசு பணிகளில் கையெழுத்திடும் போது கவனமாக இருக்கவும்.

பெண்கள் நன்மை தீமை பற்றிய கவலை இல்லாமல் எதையும் செய்ய முற்படுவீர்கள். நட்பு வட்டத்தில் நிதானமாக பழகுவது நல்லது.

மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற திட்டமிட்டு பாடங்களை படிப்பதும் தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பதும் நல்லது

பரிகாரம்: நவகிரகத்தில் ராகுவிற்கு நாகபுஷ்ப மலர் சாற்றி நெய் தீபம் ஏற்றி வர எல்லா கஷ்டங்களும் நீங்கும். பொருளாதார மேம்பாடு உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, சனி

 

**********************************************

கும்பம்:

மற்றவர்கள் ஒப்படைத்த வேலையை பொறுப்போடு செய்து முடிக்கும் குணம் உடைய கும்ப ராசி அன்பர்களே இந்த வாரம் .எதையும் சமாளிக்கும் திறமை உண்டாகும். அடுத்தவர்களது செய்கை உங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தலாம். எனவே நிதானமாக இருப்பது நல்லது.  சொந்த காரியங்களில் தாமதம் ஏற்படலாம். சின்ன விஷயங்களால் மன நிறைவை அடைவீர்கள். எதிர்பாலினரிடம் பழகும் போது கவனம் தேவை.

குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும். உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த மனகிலேசங்கள் மறைந்து ஒற்றுமை ஓங்கும். பிள்ளைகளிடம் பாசம் அதிகரிக்கும். பெற்றோகள் – உறவினர்களின் அரவணைப்பு அதிகமாகும்.

தொழில், வியாபாரம் முன்னேற்றம் காணப்படும். தொழில் தொடர்பான காரியங்கள் வெற்றி பெறும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலிப்பது வேகம் பிடிக்கும். வியாபாரம் தொடர்பான  பிரச்சனைகளில் சாதகமான நிலையே உண்டாகும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்பு கிடைக்க பெறுவார்கள். சக பணியாளர்கள் மூலம் நன்மை உண்டாகும். அலுவலகம் மூலம் வாகனம் கிடைக்கலாம். என்றோ செய்த ஒரு வேலைக்கு இப்போது பாராட்டு கிடைக்கலாம்.

பெண்கள் யாரையும் எதிர்த்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நன்மை தரும். வீண் மனக்கவலை, காரிய தாமதம் உண்டாகலாம் கவனம் தேவை.

மாணவர்கள் பாதியில் நிறுத்திய கல்வி தொடர்பான விஷயங்களை மீண்டும் தொடர்வீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

பரிகாரம்: நாகதேவதையை வணங்க எல்லா பிரச்சனைகளும் தீரும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், சனி

 

**********************************************

மீனம்:

எதையும் சமாளித்து குறுகிய காலத்தில் முன்னுக்கு வரும் திறன் கேதுவை அதிபதிக் கொண்ட மீன ராசி அன்பர்களே இந்த வாரம் மற்றவர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சனை வராமல் தடுக்கலாம். சிறிய விஷயத்துக்கு கூட கோபம் வரலாம். கட்டுப்படுத்துவது நன்மை தரும். திடீர் பண தேவை உண்டாகலாம்.

குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். மனவருத்தத்துடன் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள். கவனமாக செயல்படுவது நல்லது. கணவன் மனைவிக்கிடையே சந்தோஷம் நீடிக்கும். பிள்ளைகளுக்கு தேவையான  ஆடை அணிகலன்களை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள்.

புதிய ஆர்டர் விஷயமாக தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு  இருப்பவர்கள் வெளியூர் செல்ல நேரிடும். பழைய பாக்கிகள் வசூலிப்பதில் வேகம்  காண்பீர்கள். புதிய கிளைகள் தொடங்க நினைப்பவர்கள் அதற்கான முயற்சியை தள்ளி போடுவது நல்லது

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை  செய்து முடித்து நன்மை பெறுவீர்கள்.

பெண்கள் வலிய சென்று உதவுவதன் மூலம் வீண் பழி ஏற்படலாம். கவனம் தேவை. கோபத்தை தவிர்ப்பது நல்லது.

மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. பாடங்களை படிப்பதில் கூடுதல் கவனமும், ஆசிரியர்களிடத்தில் பேசும்போது நிதானமும் தேவை.

பரிகாரம்: விநாயக பெருமானுக்கு அருகம்புல் மாலை சாற்றி அர்ச்சனை செய்து வர குடும்ப கஷ்டங்கள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் மேன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி

 

**********************************************

Continue Reading




பல்சுவை3 hours ago

பீதியைக் கிளப்பும் கொரோனா வைரஸ்.. ஆண்களே எச்சரிக்கையாக இருங்கள்!

சினிமா செய்திகள்4 hours ago

கொரோனா முன்னெச்சரிக்கை.. வீட்டில் முடக்கப்பட்ட கமல் ஹாசன், ஸ்ருதி ஹாசன், அக்‌ஷரா ஹாசன்!

இந்தியா5 hours ago

கொரோனா அச்சுறுத்தல்.. வீட்டையே மாற்றிய முதல்வர்!

சினிமா செய்திகள்6 hours ago

இயற்கை முறையில் சோப்பு தயாரிக்கும் ஸ்ருதி ஹாசன்!

வணிகம்6 hours ago

#Breaking: எஸ்பிஐ வங்கி அதிரடி அறிவிப்பு.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!

இந்தியா7 hours ago

அரசு அதிகாரிகளை வெளுத்துக் கட்டிய காவல்துறையினர்!

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam
தமிழ் பஞ்சாங்கம்7 hours ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (28/03/2020)

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்15 hours ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (28/03/2020)

இந்தியா17 hours ago

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்.. நீட் தேர்வு ஒத்திவைப்பு!

தமிழ்நாடு17 hours ago

அதிர்ச்சி.. மார்ச் 29 முதல் காய்கறி கடைகள், பெட்ரோல் நிலையங்கள், ஹோட்டல் நேரம் குறைப்பு!

வேலை வாய்ப்பு5 months ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா8 months ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா7 months ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு7 months ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா9 months ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா1 year ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலை வாய்ப்பு7 months ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலை வாய்ப்பு8 months ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

சினிமா செய்திகள்1 year ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

தமிழ்நாடு8 months ago

கனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி!

வீடியோ செய்திகள்2 weeks ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு

வீடியோ செய்திகள்2 weeks ago

சாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு

வீடியோ செய்திகள்2 weeks ago

கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? – சிறப்பு தொகுப்பு

வீடியோ செய்திகள்2 weeks ago

கோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi

வீடியோ செய்திகள்2 weeks ago

லாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு

வீடியோ செய்திகள்2 weeks ago

நானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி

வீடியோ செய்திகள்2 weeks ago

ரஜினி குறித்து பேச ரூ 5 லட்சம் தரவேண்டும் – சரத்குமார்

வீடியோ செய்திகள்2 weeks ago

கொரானா வைரசை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக சீனா அறிவிப்பு

வீடியோ செய்திகள்2 weeks ago

எண்ணெய் கிணற்றில் விழுந்த நாய்க்குட்டி..தலைகீழாக தொங்கி நாய்க்குட்டியை காப்பாற்றிய சிறுவன்.

வீடியோ செய்திகள்2 weeks ago

கட்சி ஆரம்பிச்சிடலாமா? : வடிவேலு சரவெடி

Trending