Connect with us

வார பலன்

உங்கள் ராசிக்கான இந்த வாரபலன்கள் (ஆகஸ்ட் 3 முதல் 9 வரை)

Published

on

weekly prediction, வாரபலன், weekly horoscope

வார பலன்

மேஷம்:

எப்போதும் எதை பற்றியாவது சிந்தித்துக் கொண்டே இருக்கும் மேஷ ராசி அன்பர்களே, உங்கள் மீது மற்றவர்கள் கோபப்படமுடியாத அளவு நடந்து கொள்வீர்கள்.  இந்த வாரம் மனக்கவலை குறையும். பணவரவு இருக்கும்.  பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். வீண்பழி நீங்கும். சில்லறை சண்டைகள் சரியாகும்.

தொழில் வியாபாரம் சற்று மந்தமாக காணப்பட்டாலும் பணம் வருவது தடைபடாது. பார்ட்னர்கள் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு இருந்தாலும் சக ஊழியர்கள் ஒத்துழைப்பால் அது குறையும்.

குடும்பத்தில் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த ஊடல் நீங்கும். பிள்ளைகள் எதிர்காலம் பற்றி சிந்தனை மேலோங்கும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.

பெண்களுக்கு அக்கம்பக்கத்தினருடன்  இருந்து வந்த மனவருத்தம் நீங்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். பணவரவு திருப்தி தரும்.

மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை குறையும். ஆர்வமுடன் பாடங்களை படிப்பீர்கள்.

பரிகாரம்: குலதெய்வத்தை பூஜித்து வணங்க குடும்ப பிரச்சனை தீரும். கடன் கட்டுக்குள் இருக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்

************************************************************************************************

ரிஷபம்:

எந்தநேரத்தில் எதை பேச வேண்டும் என்பதை நன்கு உணர்ந்த ரிஷப ராசி அன்பர்களே, நீங்கள் உலக அனுபவம் பெற்றவர். இந்த வாரம் பயணம் செல்ல நேரிடலாம். காரிய அனுகூலம் உண்டாகும்.  மற்றவர்களுக்கு உதவ முன்வருவீர்கள். வாழ்க்கை துணை மூலம் லாபம் கிடைக்கும்.  மனதில் இருந்த சஞ்சலம் நீங்கி மகிழ்ச்சியும், நிம்மதியும் கிடைக்க பெறுவீர்கள். உங்கள் மீது குற்றம் சொல்ல நினைப்பவர்கள் அதனை விட்டுவிடுவார்கள்.

தொழில் வியாபாரத்தில் சுமாரான முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த கடன் வசதி கிடைப்பதில் சாதகமான பலன் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சற்று கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது.  குடும்பத்தில் நிம்மதியும், சுகமும் உண்டாகும். மனவருத்ததில் விட்டு சென்ற உறவினர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். கணவன், மனைவிக்கிடையில் சுமுகமான உறவு இருக்கும். பிள்ளைகள், கல்வியில் மேன்மை அடைய தீவிரமாக செயல்படுவீர்கள்.

பெண்களுக்கு மறைமுகமாக உங்களை குறை சொல்லியவர்கள் தங்கள் தவறை உணர்வார்கள். காரிய அனுகூலத்தால் மனமகிழ்ச்சி ஏற்படும். 

மாணவர்களுக்கு கல்வியில் திருப்தியான நிலை காணப்படும். வாகனங்களை பயன்படுத்தும் போது கவனம் தேவை. 

பரிகாரம்:  மகாலட்சுமியை பூஜிக்க பணபிரச்சனை நீங்கும். மனநிம்மதி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி

************************************************************************************************

மிதுனம்:

நல்லது கெட்டது என்று இரண்டையுமே சந்திக்க தயங்காத மிதுன ராசி அன்பர்களே, நீங்கள் முயற்சியில் வெற்றியை குறிக்கோளாக கொள்வீர்கள். இந்த வாரம் விருப்பங்கள் நிறைவேறும். மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்லும் போது கவனம் தேவை. எதிர்பாலினரால் லாபம் கிடைக்கும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடலாம்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கோபத்தை குறைத்து வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் முன்னேற்றம் காண முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். பதவி உயர்வு நிலுவை தொகை வருவதில் தாமதம் ஏற்படும்.

குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை தலைதூக்கும். கணவன், மனைவிக்கிடையே  வாக்குவாதங்கள்  உண்டாகலாம். பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே விட்டுபிடிப்பது நல்லது.

பெண்கள் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மைதரும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பது பற்றிய மனசஞ்சலம் ஏற்பட்டு நீங்கும்.

மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண கடுமையாக படிக்க வேண்டி இருக்கும்.

பரிகாரம்: உத்திரமேரூர் ஸ்ரீசுந்தர வரதராஜப் பெருமாளை தரிசித்து அர்ச்சனை செய்து வழிபட குழப்பம் நீங்கி மனநிம்மதி கிடைக்கும். சொத்து பிரச்சனை தீரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி

 

************************************************************************************************

கடகம்:

எடுத்த காரியத்தை எப்பாடுபட்டாவது வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்ற குறிக்கோளை உடைய கடக ராசி அன்பர்களே, நீங்கள் சுறுசுறுப்பானவர். இந்த வாரம் செயல்திறன் மூலம் பாராட்டு கிடைக்கும். வாழ்க்கையில் திடீர் திருப்பங்கள் ஏற்படலாம். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். உடல்நலபாதிப்பு உண்டாகலாம். உஷ்ண சம்பந்தமான நோய் வரலாம். பண பற்றாக்குறை ஏற்படலாம்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கூடுதலான லாபம் கிடைக்க பாடுபடுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அரசு அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளிடம்  கவனமாக நடந்து கொள்வது நன்மை தரும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்கள்  அலைய வேண்டி இருக்கலாம்.

குடும்பத்தில் கூடுதல் செலவு உண்டாகும். வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. பிள்ளைகளின் நலனுக்காக பாடுபடவேண்டியிருக்கும். கணவன் மனைவிக்கிடையே கோபமான வார்த்தைகளை தவிர்ப்பது நல்லது.  

பெண்களுக்கு பணதேவை உண்டாகும். செயல்திறன் வெளிப்படும். புதிய முயற்சிகள்  அலைச்சலை தரும். 

மாணவர்கள் கல்விக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். விளையாட்டில்  திறமை வெளிப்படும். ஆசிரியர்கள் வழிகாட்டுதல்படி நடப்பது நன்மைதரும். 

பரிகாரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மனை வணங்கிவர எல்லா காரியங்களும் நன்மையாக நடக்கும். மனதிருப்தி கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்

************************************************************************************************

சிம்மம்:

வாழ்க்கையில் சோதனைகளையும் தடைகளையும்  தாண்டி வெற்றி நடைபோடும் சிம்ம ராசி அன்பர்களே, இந்த வாரம் காரிய தடைதாமதம் ஏற்படலாம் கவனமாக செயல்படுவது நல்லது. பயணங்கள் ஏற்படும். மனகுழப்பம் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். மற்றவர்களிடம் கெட்ட பெயர் வாங்க நேரலாம். பொருள்களை கவனமாக  பாதுகாத்துக் கொள்வது நல்லது. ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.  

தொழில் வியாபாரத்தில் லாபம் குறையும் நிலை உண்டாகலாம். திட்ட மிட்டு செயல்படுவது நன்மைதரும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் அலைச்சலை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை மேற்கொள்வது அவசியம். உழைப்பு அதிகமாகும்.

குடும்பத்தில் திடீர் பிரச்சனை ஏற்பட்டு பின்னர் சரியாகும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம்.  குழந்தைகள் பற்றிய கவலை அதிகரிக்கும். 

பெண்கள் எந்த ஒரு  சிக்கலான பிரச்சனைகளிலும் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனம் தேவை.

மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண திட்டமிட்டு படிப்பது நல்லது.

பரிகாரம்:  விருத்தாசலத்தில் உள்ள விருத்தகிரீஸ்வரரை வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். தொழில் போட்டிகள் குறையும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி

************************************************************************************************

கன்னி:

சிக்கனம் வீட்டை காக்கும் சேமிப்பு நாட்டை காக்கும் என்ற சொல்லுக்கு ஏற்ப சிக்கனமாக இருக்க முயலும் கன்னி ராசி அன்பர்களே, இந்த வாரம் சாமர்த்தியமான பேச்சின் மூலம் எதையும் செய்து முடிப்பீர்கள். நற்பலன்கள் உண்டாகும். வீண் அலைச்சல் உண்டாகும். அடுத்தவர் செயல்களுக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது. 

தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு குறையும். 

குடும்பத்தில் இருப்பவர்களின் நலனில் அக்கறைகாட்ட வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையே மறைமுக மனவருத்தம் இருக்கும். ஏதாவது ஒரு காரணமாக வாக்குவாதம் ஏற்படலாம். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வது நல்லது.  

பெண்களுக்கு காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். பயணம் செல்ல நேரலாம். 

மாணவர்கள் பாடங்களை ஒருமுறைக்கு  பலமுறை மனதில் வாங்கி படிப்பது வெற்றிக்கு  உதவும். அலைச்சல், காரிய தடை, மனகுழப்பம் ஏற்படலாம். கவனம் தேவை.

பரிகாரம்:  ஸ்ரீபெரும்புதூருக்கு அருகே  உள்ள மணிமங்கலம் ஸ்ரீராஜகோபால பெருமாளை தரிசித்து வணங்கிவர எதிர்பார்த்த காரிய நன்மைகள் உண்டாகும். செல்வம் சேரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், சனி

************************************************************************************************

துலாம்:

கற்பனை கோட்டை கட்டினாலும் அதிலேயே சஞ்சரிக்காமல் சமயத்திற்கு தக்கவாறு செயல்படும் புத்திசாலிதனம் நிறைந்த துலா ராசி அன்பர்களே, இந்த வாரம் எதிர்ப்புகள் விலகும். பயணத்தின்  மூலம் லாபம் உண்டாகும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். விரும்பிய பொருள்களை வாங்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் கிடைக்கும்.

தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த இழுபறியான  நிலை நீங்கி சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிலுவை தொகை  வந்து சேரலாம். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும்.

குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி சகஜமான நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே  இருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படலாம்.

பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நீண்டதூர தகவல்கள் சாதகமானதாக இருக்கும். 

மாணவர்களுக்கு பாடங்கள் எளிதாக புரியும். படிப்புக்கு ஏற்ற வெற்றி கிடைக்கும்.

பரிகாரம்: அருகிலுள்ள முருகன் கோவிலுக்குச் சென்று வர மன அமைதி கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி

************************************************************************************************

விருச்சிகம்:

எதை செய்தாலும் அதில் லாபம்  இருக்க வேண்டும் என்ற  கொள்கை உடைய விருச்சிக ராசி அன்பர்களே, நீங்கள் பார்த்தால் பசு, பாய்ந்தால் புலி போன்றவர். இந்த வாரம் காரிய அனுகூலம் உண்டாகும். புதிய நபர்களின்  நட்பு ஏற்படும்.  உடல் சோர்வு ஏற்பட்டு நீங்கும். சில்லறை பிரச்சனையை சமாளிக்க  வேண்டி இருக்கும். பணம் இருந்தும் உரிய நேரத்தில் கைக்கு கிடைக்காமல் தாமதமாக வரும்.

தொழில் வியாபாரம் சீராக நடக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள்.  பார்ட்னர்களை அனுசரித்து செல்வது நன்மைதரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமான பேச்சின் மூலம் அலுவலக வேலைகளை  செய்து முடிப்பீர்கள்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே கோபமான பேச்சு தலைதூக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலை ஏற்படும்.

பெண்கள் எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. அடுத்தவர் கூறுவதை யோசித்து பார்த்து அதன் பிறகு அந்த காரியத்தில்  ஈடுபடுவது நன்மை தரும்.

மாணவர்களுக்கு கல்வியில் சீரான நிலை காணப்படும். நட்பு வட்டம் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது.

பரிகாரம்:  கந்தர் சஷ்டி கவசத்தை தினமும் படித்து வர குழப்பங்கள் நீங்கும். எதிர்ப்புகள் அகலும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்

************************************************************************************************

தனுசு:

தொலை நோக்கு பார்வையும் உயர்ந்த  எண்ணங்களும் உடைய தனுசு ராசி அன்பர்களே, நீங்கள் எதிலும் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். இந்த வாரம் ஏதாவது ஒரு கவலை மனதில் இருக்கும். எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. மற்றவர்கள் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. பணவரத்து தாமதமாகும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்கு பாடுபட வேண்டி இருக்கும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் எதிலும்  எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செயல்படாமல் ஆலோசித்து  செயல்படுவது வெற்றிக்கு உதவும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் பக்குவமாக  செயல்படுவது நல்லது.

குடும்பத்தில் உங்களது வார்த்தைக்கு மதிப்பு இருக்கும். கணவன், மனைவிக்கிடையே  சகஜநிலை காணப்படும்.  பிள்ளைகள் மூலம் நன்மை உண்டாகும்.

பெண்கள் எந்த ஒரு வேலையில் ஈடுபட்டாலும் எச்சரிக்கையுடன்  செயல்படுவது நல்லது.  அடுத்தவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதை தவிர்ப்பது நல்லது. 

மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சக மாணவர்களுடன் நிதானமாக பழகுவது நன்மை தரும்.

பரிகாரம்: வடலூர்  ராமலிங்க சுவாமிகளை  வணங்கி ஜோதி தரிசனம் செய்வது மன அமைதியை தரும். எதிலும் முன்னேற்றம் உண்டாகும். 

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், சனி

************************************************************************************************

மகரம்:

சொல்லாற்றல் செயலாற்றல் இரண்டும் ஒருங்கே பெற்ற மகரம் ராசி அன்பர்களே, நீங்கள் வைராக்கியம் மிக்கவர். இந்த வாரம் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணவரத்து எதிர்பார்த்த படி இருக்கும். உங்களது பேச்சை  மற்றவர்கள்  தவறாக புரிந்து கொள்வார்கள்.  எந்த ஒரு காரியமும் இழுப்பறியாக இருந்து  முடிவில் சாதகமான பலன்தரும்.  வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம்.

தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும்.

குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். ஆனால் மனதில் குடும்ப கவலை உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே  இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகள் உங்களது பேச்சை கேட்டு நடப்பது திருப்தி தரும்.

பெண்களுக்கு காரியங்கள் செய்து முடிப்பதில் மெத்தன போக்கு காணப்படும். எதிர்பாராத திருப்பமும் உண்டாகும். 

மாணவர்களுக்கு முன்பு படித்தது இப்போது கை கொடுக்கும். பொறுப்புகள் கூடும்.  எச்சரிக்கையாக பேசுவது நல்லது. 

பரிகாரம்: கருமாரியம்மனை வணங்கி வர காரிய தடை நீங்கும். குடும்ப பிரச்சனை தீரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி

************************************************************************************************

கும்பம்:

திட்டமிட்டு செயல்பட்டு எதிலும் வெற்றி பெறும் கும்ப ராசி அன்பர்களே, நீங்கள் செய்தொழிலில் முன்னேற்றம் காண கடுமையாக உழைப்பவர். இந்த வாரம் காரியதாமதம் ஏற்படக்கூடும். வீண் பிரச்சனைகள் ஏற்படும். அடுத்தவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காமல் இருப்பது நன்மை தரும்.   ஏற்கனவே  பாதியில் நின்ற பணிகள் நடக்கும். விருப்பத்திற்கு மாறாக சில காரியங்கள் நடக்கலாம்.

தொழில் வியாபாரத்தில் தொய்வு காணப்படும். விட்ட இடத்தை பிடிக்க பாடுபட வேண்டி இருக்கும்.   உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு வீண் அலைச்சல் இருக்கும். 

குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு விஷயத்திற்காக  வாக்குவாதம் செய்து அமைதியை குறைப்பார்கள்.  கணவன், மனைவிக்கிடையே  கருத்து வேற்றுமை உண்டாகலாம். கவனம் தேவை.  பிள்ளைகளிடம் அன்பாக பேசி பழகுவது நல்லது.

பெண்கள் பாதியில் நின்ற காரியங்களை விரைவாக செய்து முடிப்பீர்கள்.  

மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற நீண்ட நேரம் ஒதுக்கி பாடங்களை   படிக்க வேண்டி வரும்.  

பரிகாரம்:  ஸ்ரீ ஆஞ்சநேய பகவானை வெண்ணெய் சாற்றி வழிபட்டு வர கடினமான பணிகளும் எளிதாகும். மனோ தைரியம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், சனி

************************************************************************************************

மீனம்:

முன்யோசனை இல்லாமல் எதிலும் ஈடுபட்டாலும் சிக்கலில் மாட்டாமல் நழுவிவிடும் சாமர்த்தியம் மிக்க மீன ராசி அன்பர்களே, நீங்கள்  கேளிக்கையில் ஈடுபாடு உடையவர். இந்த வாரம் பல யோகங்கள் உண்டாகும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் வேகம் காட்டுவீர்கள். புத்திசாதூரியத்தால் எந்த தடைகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். எந்த ஒரு பிரச்சனையையும் துணிச்சலுடன் எதிர்கொள்வீர்கள்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கண்மூடிதனமாக எதையும் செய்யாமல் விழிப்புடன் இருப்பது லாபம் அதிகரிக்க செய்யும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேன்மை அடைவார்கள்.

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். குடும்பத்தினருடன் விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள்.

கணவன், மனைவிக்கிடையே இதமான உறவு காணப்படும்.  பிள்ளைகள் மூலம் நன்மை உண்டாகும் அவர்களது செயல்களால் பெருமை கிடைக்கும். 

பெண்கள் எந்த ஒரு வேலையையும் விரைவாகவும், திறமையாகவும் செய்து முடிப்பீர்கள்.

மாணவர்களுக்கு கல்வியில் மேன்மை உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். விழிப்புடன் செயல்படுவது நல்லது. 

பரிகாரம்: ஸ்ரீராகவேந்திரரை பூஜித்து வணங்க எல்லா காரியங்களும் அனுகூலமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வாழ்க்கையில் முன்னேற்றம் காணப்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்

************************************************************************************************

 

வார பலன்

உங்கள் ராசிக்கான இந்த வாரபலன்கள் (செப்டம்பர் 21 முதல் 27 வரை)

Published

on

weekly prediction, வாரபலன், weekly horoscope

மேஷம்:

பிறருக்காக நன்மைகள் செய்யத் தயாராக இருக்கும் மேஷ ராசி அன்பர்களே, இந்த வாரம் உடனிருப்பவர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

குடும்பத்தில் வேறொருவர் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்வது  குடும்ப நிம்மதிக்கு வழிவகுக்கும். சிலரது பேச்சுகள் விதாண்டவாதமாக இருக்கும். விட்டுக் கொடுத்து செல்வதால் பிரச்சினைகளை முற்றிலுமாக தவிர்க்கலாம்.

தொழில் வியாபாரம் செய்வோர் ஏற்றத்துடன் தொழிலை நடத்துவீர்கள். நிலுவையில் உள்ள பழைய பாக்கிகள் வந்து சேரும். தொழிலை விரிவு படுத்துவதற்கான முயற்சிகள் பங்குதாரர்கள் உதவியுடன் சிறப்பாக நடைபெறும். சிக்கன நடவடிக்கைகளை கையாளுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் வெளிநாடு செல்ல முயற்சி செய்பவர்கள் இப்போது அதற்கான நேரம் தான். உங்களின் கனவு இப்போது நனவாகும். உங்கள் மேலதிகாரியின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

பெண்கள் வேலைக்குச் செல்லும் போது மிக கவனமுடன் சென்று வரவும். பணிச்சுமை அதிகமாக இருக்கும்.

மாணவர்கள் சகமாணவர்களுடன் பழகும் போது கவனமாக இருக்கவும். பிறர் பழிக்கு நீங்கள் ஆளாக நேரலாம். 

பரிகாரம்: தினமும் கந்த சஷ்டி கவசம் சொல்லி வந்தால புது உற்சாகம் பிறக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், திங்கள்

************************************************************************

ரிஷபம்:

உன்னத நிகழ்வுகளை சந்திக்கக் தயாராகும் ரிஷப ராசி அன்பர்களே, இந்த வாரம் வெளியூர் பயணங்களும் அதன் மூலம் லாபமும் கிடைக்கப் பெறுவீர்கள்.

குடும்ப செலவுகளில் வீண் செலவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. குடும்ப பொறுப்புகளின் காரணமாக கடின உழைப்பு ஏற்படக் கூடும். அதனால் உடற்சோர்வும், அசதியும் ஏற்படும். தூரத்திலிருந்து வரும் செய்திகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

தொழிலில் இருந்த சுணக்க நிலை மாறும். உங்களுக்காக உழைப்பவர்கள் இருக்கும் வரையில் உங்களை யாராலும் அசைக்க முடியாது. சிலர் வதந்திகள் மூலம் உங்களை ஏமாற்ற நினைப்பார்கள் ஆனால் நீங்கள் சுதாரிப்பாக இருப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு அனுகூலம் உண்டாகும். வெளியூர் பிரயாணம் ஒன்றை மேற்கொள்ள நேரிடும். சிக்கல்கள் பிறரால் ஏற்பட்டாலும் அதை எளிதில் சமாளித்து விடும் தைரியம் உண்டாகும். புதிய வண்டி வாகனம் வாங்குவதற்கு யோகம் உண்டாகும்.

பெண்களுக்கு உயர்வான வாரம் என்றே சொல்ல வேண்டும். சிலருக்கு உடல்நலனில் அக்கறை செலுத்த வேண்டி வரலாம்.

மாணவ மணிகள் விளையாட்டுகள், போட்டிகளில் கலந்து கொள்வதன் மூலம் சான்றிதழ் மற்றும் பரிசுப் பொருட்களைப் பெறுவீர்கள்.

பரிகாரம்: மஹாலட்சுமி ஸ்தோத்திரம் சொல்லி வர மனம் ஒரு நிலைப்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, வியாழன்

************************************************************************

மிதுனம்:

வாழ்க்கையில் உன்னத நிகழ்வுகளை சந்திக்கத் தயாராகும் மிதுன ராசி அன்பர்களே, இந்த வாரம் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்வர்.

குடும்பத்தில் பிதுர் ராஜ்ஜிய சொத்துகளால் ஏற்பட்ட பிரிவினை முடிவுக்கு வரும். குடும்ப உறுப்பினர்கள் விட்டுக் கொடுத்து போவதால் இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.அனைவரும் ஒன்றாக சுற்றுலா சென்று வருவீர்கள்.

தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். சென்ற வாரத்தை விட இந்த வாரம் அதிக லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. முக்கிய நிறுவனங்களின் பங்களிப்பு இருப்பதால் வியாபாரம் பன்மடங்காக அதிகரிக்க வாய்ப்புள்ளது. தொழில் நிமித்தமாக வெளியூர் செல்ல நேரிடலாம்.

உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல பாராட்டுகள் கிடைக்கப் பெறுவீர்கள். வெளிநாடுகளுக்கு செல்ல முனைவோருக்கான தருணம் வந்துவிட்டது. கடல் கடந்து செல்ல வேண்டி வரலாம்.வேலைப்பளுவால் உடல் அசதி ஏற்படும். நேரத்திற்கு உணவருந்த முடியாமல் போகலாம்.

பெண்கள் ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். சேமிப்பதில் மிக கவனமாக இருப்பது நல்லது.

மாணவர்கள் நண்பர்களுடன் செல்லும் போது கவனமாக இருக்கவும். பெற்றோர் துணையாக இருப்பார்கள்.

பரிகாரம்: விஷ்ணு மந்திரங்களை ஜபித்து வர வாழ்வில் வளம் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், செவ்வாய்

************************************************************************

கடகம்:

நிறைவான மனத்துடன் இருக்கும் கடக ராசி அன்பர்களே, இந்த வாரம் உங்கள் வாழ்வின் முன்னேற்றத்திற்கான வழிகள் பிறக்கும்.

குடும்பத்தாருக்கு தேவையான உதவிகளை நீங்கள் முன்னின்று செய்து முடிப்பீர்கள்.  குடும்பத்தின் நிதிநிலைமை சரியாக இருப்பதால் தேவையான அனைத்து வசதிகளும் தானாகவே வந்து சேரும். வரன் தேடும் முயற்சிகளில் ஈடுபடுவீர்களேயானால் அதில் வெற்றி நிச்சயம்.

தொழில் பங்குதாரர்களிடமிருந்து பிரச்சினைகள் முடிவுக்கு வரும். தொழில் முனைவோர் கேட்ட இடங்களிலிருந்து நிதி உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். போட்டிகள் இருந்தாலும் அதைச் சமாளித்து இலாபத்தை ஈட்டுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு அனுகூலம் உண்டாகலாம். மேலதிகாரிகளின் கிடுக்குப்பிடியில் சிக்கி தவிப்பீர்கள். சக வேலையாட்களால் பிரச்சினை ஏற்பட்டால் விட்டுக் கொடுத்து போவது நல்லது. கோபத்தை குறைத்துக் கொள்வது உங்களை பிரச்சினைகளிலிருந்து காப்பாற்றும்.

பெண்மணிகள் குடும்ப நிர்வாகத்தை கவனிப்பதில் சிக்கல்கள் இருந்தாலும் அதை திறம்படச் செய்து முடிப்பீர்கள்.

மாணவ மணிகளுக்கு சந்தோஷமான வாரம். நண்பர்களுடன் இன்பச்சுற்றுலா சென்று வருவீர்கள்

பரிகாரம்: அபிராமி அந்தாதி படித்து வர வாழ்வில் நிம்மதி கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், ஞாயிறு

************************************************************************

சிம்மம்:

உள்ளத்தில் சில ரகசியங்களை வைத்துக் கொண்டிருக்கும் சிம்ம ராசி அன்பர்களே, இந்த வாரம் பொருளாதாரத்தில் சிறந்து விளங்குவீர்கள்.

குடும்பத்தில் தூரத்திலிருந்து வரும் செய்திகள் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். நீண்ட நாளைய உறவு ஒன்று இல்லம் தேடி வரும். வீடு, நிலம் போன்றவைகளில் பணத்தை முதலீடு செய்து நல்ல லாபத்தை பெறலாம். மொத்தத்தில் பிரச்சினையில்லா வாரம்.

தொழிலில் இருந்த இடையூறுகளைக் களைவீர்கள். முக்கிய நபர்களை சந்திப்பதை சற்று தள்ளிப்போடுங்கள். உங்களுக்கு சாதகமாகவே உங்களது தொழில் பங்குதாரர் செயல்படுவார். தொழிலாளர்களின் எண்ணங்களை நிறைவேற்றி மகிழ்வீர்கள். 

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். சிலருக்கு அதில் உங்கள் மேல் பொறாமையும், விரோதமும் ஏற்பட வாய்ப்புண்டு. பழைய கடன்கள் வசூலாகும். அதனால் உங்களுக்கு மனநிம்மதி உண்டாகும். பத்திர விசயத்தில் கவனம் தேவை.

பெண்மணிகள் வரவுக்கு ஏற்ற செலவு செய்வது நன்மையைத் தரும். சிலருக்கு கோபம் அதிகமாக வரும்.

மாணவமணிகள் போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்: சிவபெருமான் முன் அமர்ந்து வணங்க மனம் ஒருநிலைப்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, சனி

************************************************************************

கன்னி:

சின்ன சின்ன விசயங்களுக்காக வருத்தப்பட்டுக் கொண்டிருக்கும்  கன்னி ராசி அன்பர்களே, இந்த வாரம் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சகோதர சகோதரிகளுடன் கருத்து வேறுபாடு வரலாம். 

குடும்பத்தில் தெய்வீக காரியங்கள் அதிகரிக்கும். அதற்கான செலவுகளும் இருக்கும். பிள்ளைகள் உங்களுடன் சேர்ந்து சில நற்காரியங்களைச் செய்வார்கள். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடிவரும். சிரத்தை எடுத்து செய்தால் நல்ல முறையில் திருமணம் நடந்தேறும்.

தொழிலாளர்கள் ஏதாவது பிரச்சினை இருக்குமாயின் அதை முன்னின்று தீர்த்து வைத்து தொழிலை செவ்வனே நடத்திவிடுவீர்கள். வியாபாரத்தில் அபிவிருத்தி ஏற்படும். புதிய முயற்சிகளை மேற்கொள்வதன் மூலம் சிறந்த முன்னேற்றம் ஏற்படும்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவார்கள். மேலதிகாரிகளின் சில வேலைகளை நீங்கள் முன்னின்று செய்ய வேண்டியதிருக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும். உடன் பணிபுரிபவர்களுடன் வெளியூர் பயணம் சென்று வருவீர்கள்.

பெண்கள் உணர்வுப்பூர்வமான முடிவுகளை தள்ளிப்போடுவது நல்லது. குழந்தைகள்  விசயத்தில்  மகிழ்ச்சியை எதிர்பார்க்கலாம்.

மாணவர்கள் படிப்பில் கவனத்தை செலுத்துவது நல்லது. பொழுது போக்கு, வேடிக்கை நிகழ்ச்சிகளில் கவனத்தை சிதற விடாமல் இருப்பது நல்லது.

பரிகாரம்: துளசி மாடத்திற்கு விளக்கேற்றி வர செல்வம் சேரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், செவ்வாய்

************************************************************************

துலாம்:

சங்கடங்களை மனதில் புதைத்துக் கொண்டிருக்கும் துலா ராசி அன்பர்களே, இந்த வாரம் மற்றவர்களைப் பற்றி புரிந்து கொள்ள பல சூழ்நிலைகள் உருவாகும்.

குடும்பத்தில் கணவன் – மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். ஒருவருக்கொருவர் புரிந்து நடந்து கொள்வர். மாமியார் – மருமகள் உறவு கற்கண்டாய் தித்திக்கும். அதனால் இல்லத்தில் மகிழ்ச்சியே.

தொழில்-வியாபாரம் ஏற்றம் தரும் வகையில் இருக்கும். வரவேண்டிய பணம் உங்களைத் தேடி வரும். கவலை வேண்டாம். தேக்கி வைத்துள்ள பொருட்களை விற்பனை செய்ய முற்படுவது நல்லது. நல்ல வாடிக்கையாளர்கள் கிடைக்கும் சமயமாக இது இருக்கிறது.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் இருந்து வந்த பனிச்சுமை குறையும். சக பணியாளர்களிடமிருந்து வந்த கருத்து வேறுபாடு குறையும். வேலை விஷயமாக வெளியூர் வெளிமாநிலங்களுக்கு சென்று வர வேண்டி வரும்.

பெண்கள் சுயமாக முடிவுகளை எடுக்க வேண்டாம். பெரியோர் பேச்சு கேட்டு நடப்பது சிறந்தது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

மாணவர்கள் பெற்றோர்களிடம் நல்ல பாராட்டைப் பெறுவார்கள். கல்வி அல்லாது பிற துறைகளிலும் சாதிப்பீர்கள்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வழிபட மனதில் இருக்கும் சங்கடங்கள் நீங்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, வியாழன்

************************************************************************

விருச்சிகம்: 

அனைவரின் விருப்பங்களை நிறைவேற்றத் துடிக்கும் விருச்சிக ராசி அன்பர்களே, இந்த வாரம் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். அதிக ஆன்மீகப் பயணங்கள் மேற்கொள்வீர்கள்.

குடும்பத்தில் கணவன் – மனைவிக்கிடையே சுமூகமான உறவு இருக்கும். சிறுவர்களால் ஒரு சில பிரச்சனைகள் தலை தூக்கலாம். அவற்றை பதட்டம் இல்லாமல் சரி செய்ய முயலுங்கள். குடும்பத்துடன் ஆலயங்களுக்குச் சென்று வருவீர்கள்.

தொழில் – வியாபாரம் திருப்திகரமாக இருக்கும். புதிய முயற்சிகலில் இறங்குவதற்கு கிரக நிலைகள் சாதகமாக உள்ளன. வங்கி  மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து உதவிகள் எளிதில் கிடைக்கும். சிறு வியாபாரிகள் அதிக லாபத்தை எதிர்பார்க்கலாம்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு சற்று அதிகமாக இருக்கும். எனினும் சளைக்காமல் கொடுத்த வேலைகளை சிறப்பாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். சக பணியாளர்கள் உதவுவார்கள்.

பெண்களுக்கு வெளியூர் செல்ல வேண்டி வரலாம். நீண்ட நாட்களாக தேடிய பொருள் ஒன்று கிடைக்கும். விஷேஷங்களுக்குச் சென்று வருவீர்கள்.

மாணவர்கள் தேவையில்லாமல் வெளியில் சுற்றுவதை தவிர்ப்பது நல்லது. கல்வியில் உங்கள் கவனத்தை திருப்புவதன் மூலம் உங்கள் மதிப்பு உயரும்.

பரிகாரம்: சுப்பிரமணியருக்கு அரளிமாலை போட்டு வழிபடுங்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், திங்கள்

************************************************************************

தனுசு:

விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளும் தனுசு ராசி அன்பர்களே,  இந்த வாரம் அதிகாரத்திற்கு கட்டுப்பட்டு வேலை செய்வீர்கள். ரகசியங்களை காப்பாற்றுவீர்கள்.

குடும்பம் சுமூகமான சூழ்நிலையில் இருக்கும். வீடு தேடி வந்து உங்களுக்கு நல்வாக்கு சொல்வார்கள். வயிறு சம்மந்தமான பிரச்சினைகள் சிலருக்கு வரலாம். மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது. புதிய நண்பர்கள் கிடைப்பார்கல்.

தொழிலில் சக பங்குதாரர்களால் இருந்து வந்த பிரச்சினை முடிவுக்கு வரும். உங்கள் பேச்சுக்கு அவர்கள் முக்கியத்துவம் கொடுத்து தொழிலை விரிவுபடுத்துவது பற்றி பேச்சை தொடங்குவார்கள் நன்மையில் முடியும்.

உத்தியோகத்தில் மேலிடத்தில் நற்பெயர் கிடைக்கும். நிலுவையில் இருந்த சலுகைகள் கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது. சில வாய்ப்புகள் உங்களுக்கு தட்டிப்போனதற்கு காரணமாக இருந்தவர்கள் இப்போது உங்களுக்கு நன்மை செய்வார்கள்.

பெண்கள் அமைதியாக இருக்க வேண்டியது அவசியம். குடும்ப நிர்வாகம் செய்வதில் பிரச்சினை வராது.

மாணவர்களுக்கு பொறுமையும் நிதானமும் தேவை. ஆசிரியரின் கவனம் உங்கள் மேல் இருக்கும்

பரிகாரம்: சிவன் ஆலயத்திற்குச் சென்று வந்தால் தொழிலில் முன்னேற்றம் இருக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், புதன்

************************************************************************

மகரம்:

தீவிரமாக உழைக்கத் துடிக்கும் மகர ராசி அன்பர்களே, இந்த வாரம் வெளியூர் பயணங்கள் உங்களின் வெற்றிக்கு வழிகாட்டுதலாக இருக்கும்.

குடும்பத்தில் வருமானத்திற்கு குறைவிருக்காது. தொலைபேசி மூலமாகவோ அல்லது கடிதம் மூலமாகவோ ஒரு நற்செய்தியை எதிர்பார்க்கலாம். சிலருக்கு மனநிம்மதி இல்லாமல் தூக்கம் வராமல் தவிப்பீர்கள். மொத்ததில் நன்மையும், தீமையும் கலந்தே இருக்கும்.

தொழிலில் தடைப்பட்டிருந்த நிறுவனங்களிலிருந்து வர வேண்டிய வாய்ப்புகள் சிறந்த முறையில் வந்து சேரும். வருமானமும் அதிகரித்து காணப்படும். எதிர்பார்த்த லாபம் கிடைப்பதால் புதிய முயற்சிகளை இவ்வாரம் தாராளமாக செய்யலாம்.

உத்தியோகத்தில் சந்தோஷமான வாரமிது. உங்களை தேடி புதிய வாய்ப்புகள் துரிதமாக வரும். வெளி நாடுகளில் வேலை புரிவோர் தாயகத்திற்கு திரும்புவதற்கு முயற்சி செய்தால் இப்போது அது உங்களுக்கு பலிதமாகும். அதில் பிரச்சினைகல் எதுவும் ஏற்படாது.

பெண்மணிகள் கவனமாக இருக்க வேண்டிய வாரம் தான். மாமியார் மருமகள் வாக்கு வாதத்தை தவிர்க்கவும்.

மாணவ மணிகள் சிறந்த மதிப்பெண்களை எதிர்பார்க்கலாம். மேற்படிப்புக்கு முயற்சி செய்பவர்கள் அதற்கான முயற்சியை இப்போது மேற்கொள்ளலாம்.

பரிகாரம்: வராகி அம்மனுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பது அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: சனி, வெள்ளி

************************************************************************

கும்பம்:

சீரான வாழ்க்கையை விரும்பும்  கும்ப ராசி அன்பர்களே,  இந்த வாரம் கல்வித் துறையில் சிறந்து விளங்குவீர்கள். சிலர் பெரிய சாதனைகளும் செய்வீர்கள்.

குடும்பத்தில் அனைவரும் ஒற்றுமையாக இருக்கும்படியான சூழ்நிலை அமையும். ராசியில் சனி இருந்தாலும் பெரிய தீமைகள் ஒன்றும் நடப்பதற்கு வாய்ப்பில்லை. கணவன் மனைவிக்கிடையே நல்ல ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் வழியில் இருந்த மனக்கவலை தீரும். வீடு, வாகனம் போன்றவைகளில் இருந்த இழுபறி நிலை மாறும்.

தொழில் – வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறைந்து உங்கள் விற்பனை அமோகமாக இருக்கும். வாடிக்கையாளர்கள் விரும்பி உங்கள் பொருட்களை வாங்கி மகிழ்வார்கள். பண விஷயங்களை நீங்கள் உங்கள் நேரடி பார்வையில் வைத்துக் கொள்வது அவசியம்.

உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். வேலை நிமித்தமாக வெளியூர்களுக்கு சென்று வர நேரலாம். உடன் பணிபுரிபவர்களால் சற்று தொல்லைகள் வரலாம்.அதனால் அந்த வேலையை நீங்கள் இழுத்து போட்டுக் கொண்டு செய்வீர்கள்.

பெண்கள் அண்டை அயலாருடன் பழகும் போது வார்த்தைகளில் நிதானம் தேவை. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகப் பணிகளால் ஒய்வில்லாமல் உழைக்க வேண்டி வரலாம்.

மாணவர்களுக்கு மேற்கல்வி பயில வேண்டுமென்ற விருப்பமிருப்பின் அதற்கான முயற்சிகளை இப்போது செய்யலாம். கடின உழைப்பின் மூலமாக நல்ல மதிப் பெண்களை பெறமுடியும். 

பரிகாரம்: முருகனுக்கு நெய் விளக்கேற்றி வழிபட குடும்ப பிரச்சனைகள் அகலும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: சனி, வியாழன்

************************************************************************

மீனம்:

கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் மீன ராசி அன்பர்களே, இந்த வாரம் மனதிற்கு நிம்மதியான காலகட்டமாக இருக்கும்.

குடும்பத்தில் பொருளாதார நிலை திருப்தி கரமாக இருக்கும்.  ஆரோக்கியத்தில் சிறுசிறு உபாதைகள் ஏற்பட்டு பின்பு சரியாகும். உங்களிடம் கடன் வாங்கியிருந்தவர்கள் சரியான நேரத்தில் திருப்பி தராததால் மனச் சங்கடம் ஏற்படக்கூடும்.

தொழில் ரீதியான பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். பங்குதாரர்களிடமிருந்து மனக்கசப்பு நீங்கி தொழிலை விரிவுபடுத்துவதற்கான திட்டத்தை செயல் படுத்துவீர்கள். தேவையான பண உதவிகள் கிடைப்பதால் செழிப்பாக தொழில் நடைபெறும்.

உத்தியோகஸ்தர்கள் புகழ்ச்சிக்கு இடம் கொடுக்க வேண்டாம். சக ஊழியர்கள் நீங்கள் செய்யும் ஒவ்வொரு விசயத்திலும் எதில் குறை கண்டு பிடிக்கலாம் என்று காத்துக் கொண்டிருப்பார்கள் அதனால் கவனமுடன் பணியாற்றுங்கள். செல்வாக்கு உயரும்.

பெண்கள் வேலைக்குச் செல்பவர்களாக இருந்தால் மேலதிகாரிகளின் நற்பெயரைப் பெறுவீர்கள். முயற்சிகளை தொடர்ந்து செய்து வாருங்கள்.

மாணவ மணிகள் அதிக மதிப்பெண் பெறுவதற்கு இரவு பகல் பாராமல் படித்து வருவீர்கள். அதற்கேற்ப பலனும் கிடைக்கும்.

பரிகாரம்: சித்தர்களின் ஜீவ சமாதியை வழிபட மனம் ஒருநிலைப்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், புதன்

************************************************************************

 

Continue Reading

வார பலன்

உங்கள் ராசிக்கான இந்த வார பலன்கள் (செப்டம்பர் 14 முதல் 20 வரை )

Published

on

weekly prediction, வாரபலன், weekly horoscope

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

திறமையின் மீது அதிகம் நம்பிக்கை கொண்டுள்ள மேஷ ராசி அன்பர்களே, இந்த வாரம் மற்றவர்களுடன் பகை ஏற்படலாம். முடங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பிடிக்கும். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் உங்களுக்கு கை கொடுப்பார்கள்.

தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு வேகமாக நடக்காவிட்டாலும் லாபம் குறையாமல் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதப்படும். பங்குதாரர்களுடன் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நல்லது. திறமையான செயல்பாட்டால் பாராட்டு கிடைக்கும்.

குடும்பத்தில் எதிர்பாராத விருந்தினர் வருகையால் விரும்பத்தகாத வாக்குவாதங்கள் ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வது நல்லது. குழந்தைகள் பற்றிய கவலை உண்டாகும். அவர்களுக்காக பாடுபடுவீர்கள். 

பெண்களுக்கு பணத்தேவை பூர்த்தியாகும். நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். 

மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். சக  மாணவர்களின் ஒத்துழைப்பு மனதிருப்தியை தரும். 

பரிகாரம்: துர்க்கை அம்மனை தரிசனம் செய்து தீபம் ஏற்றி வர காரிய தடைகள்  நீங்கும். தொழில் வியாபாரம் சிறக்கும். 

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன்

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதம்,  ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)

உயரிய சிந்தனையுடன் செயல்படும் ரிஷப ராசி அன்பர்களே, இந்த வாரம் எடுத்துக் கொண்ட முயற்சிகளில் காரிய தடை தாமதம் ஏற்படலாம். உஷ்ண சம்பந்தமான நோய் ஏற்படும்.  வீண்பயம் ஏற்படும். ஏற்கனவே செய்த காரியங்களுக்கான பலனை அடைய வேண்டி இருக்கும். சிலர் வீட்டை விட்டு வெளியில் சென்று தங்க நேரிடலாம். வீண் வழக்கு விவகாரங்கள் வரலாம். எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. வெளிநாட்டு பயண வாய்ப்புகள் வரலாம்.

தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். பார்ட்னர்களுடன் சேர்ந்து தொழில் செய்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. கடன் தொல்லை தலைதூக்கலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு, வீண் அலைச்சல் குறையும். எதிர்பார்த்த அதிகாரம் அந்தஸ்து கிடைக்கும். சாமர்த்தியமான பேச்சால் எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள்.

குடும்ப விவகாரங்களில் சாமர்த்தியமாக நடந்து கொண்டு எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே  மனம்விட்டு பேசுவது கருத்து வேற்றுமை ஏற்படாமல் தடுக்கும். பிள்ளைகளிடம் கோபமாக பேசாமல் அன்பாக பேசுவது நல்லது. வாகன வசதி உண்டாகும்.

பெண்களுக்கு எந்த இக்கட்டான சூழ்நிலையையும் மனஉறுதியுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள். எதிர்ப்புகள் நீங்கும். 

மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை ஏற்படும். டென்ஷனை குறைத்து பாடங்களில் கவனம் செலுத்தி படிப்பது நல்லது. 

பரிகாரம்:  ஸ்ரீரங்கநாதரை தரிசித்து வர பாவங்கள் நீங்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் காணப்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி

மிதுனம் (மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

எப்பொழுதும் மனதைரியத்துடன் போராடும் மிதுன ராசி அன்பர்களே, இந்த வாரம் மற்றவர்களின் உதவியால் காரிய அனுகூலம் உண்டாகும். பகைகளில் வெற்றி கிடைக்கும். பணவரத்து தாராளமாக இருக்கும். கையிருப்பு கூடும். இதுவரை இருந்த தொல்லைகள் நீங்கும். நீண்ட தூரப் பயணங்களால் லாபம் உண்டாகும்.  மனதில் தைரியம் பிறக்கும். வாக்கு வன்மை ஆதாயத்தை பெற்று தரும். உயர்மட்ட பதவியில் உள்ளவர்களின் உதவி கிடைக்கும்.

தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் கூடுதல் செலவை சந்திக்க நேரிடும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது வேகமாகும். தேவையான பணஉதவி கிடைக்கலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் உழைப்புக்கு ஏற்ற பலனை அடைவார்கள். நிலுவையில் உள்ள பணம் வரும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

குடும்பத்தில் அமைதி நிலவ குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வது நல்லது.  கணவன், மனைவிக்கிடையே மனவருத்தம் உண்டாகலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவது நல்லது.  வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.   

பெண்களுக்கு உங்களது முயற்சிகளுக்கு இருந்த முட்டுகட்டைகள் அகலும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கையில் காசு புரளும்.

மாணவர்களுக்கு கல்வி பற்றிய பயம் நீங்கும். எதிர்காலம் பற்றிய திட்டம் தோன்றும். ஆசிரியர்களின் உதவி கிடைக்கும்.

பரிகாரம்: ஸ்ரீநரசிம்மரை தீபம் ஏற்றி தரிசித்து வர கடன் பிரச்சனை குறையும். வீண் அலைச்சல் மனோபயம் குறையும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்

கடகம் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

கிரகங்களை அதிகம் நம்பும் கடக ராசி அன்பர்களே, இந்த வாரம் நண்பர்கள், உறவினர்களுடன் வீண்பகை உண்டாகலாம் கவனமாக பேசுவது நல்லது. காய்ச்சல், சிரங்கு போன்ற நோய்கள் உண்டாகலாம். பணவரத்து அதிகரிக்கும். காரியங்கள் தாமதமாக நடந்தாலும் வெற்றிகரமாக நடக்கும்.

தொழில் வியாபாரம் தொடர்பான நெருக்கடிகளை சந்திக்க வேண்டி வரும். எந்த நெருக்கடிகளையும் சமாளிக்கும் தெம்பு வரும். புதுவியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக முடியும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

குடும்பத்தில் இருப்பவர்களின் செய்கைகள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கும். கணவன், மனைவிக்கிடையே  கருத்து வேற்றுமை ஏற்படும். சிற்றின்ப சுகம் குறையும்.பிள்ளைகளுடன்  அனுசரித்து செல்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போதும் பயணங்களின் போதும் கூடுதல் கவனம் தேவை. நண்பர்கள் உறவினர்களிடம் சிறு மனத்தாங்கல்கள் வரலாம்.

பெண்களுக்கு அடுத்தவர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். நீண்ட தூர தகவல்கள் நல்லவையாக இருக்கும். எதிலும் நிதானம் தேவை. 

மாணவர்களுக்கு பதற்றம் கொள்ளாமல் நிதானமாக பாடங்களை  படிப்பது நல்லது. சகமாணவர்களால் அனுகூலம் உண்டாகும். 

பரிகாரம்: ஸ்ரீகாளியம்மனை வணங்க அடுத்தவர்களால் ஏற்படும் கெடுதல்கள் நீங்கும். மனதில் அமைதி பிறக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய்

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

சில  காரியங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கும்  சிம்ம ராசி அன்பர்களே, இந்த வாரம் எந்த ஒரு காரியத்திலும் சரியான முடிவுக்கு வர முடியாமல் இருந்த தடுமாற்றம் நீங்கும். அதே வேளையில் மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாத நிலை உண்டாகி அவர்களுடன் பகை ஏற்படலாம். சாமர்த்தியமாக எதையும் சமாளிக்கும் துணிச்சல் வரும். பணவரத்து திருப்தி தரும். எதிர்ப்புகள் குறையும்.

தொழில், வியாபாரம் சற்று நிதானமாக நடக்கும் எதிர்பார்த்த லாபம் இருந்தாலும் தொழில் தொடர்பான செலவும் கூடும். சரக்குகளை வாங்கும்போது கவனித்து வாங்குவதும் பாதுகாப்பாக வைப்பதும் நல்லது.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றமான பலன்  காண்பார்கள். புதிய வேலை பற்றிய சிந்தனை அதிகரிக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கலாம்.

குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்பட்டாலும் மனதில் இறுக்கம் இருக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். அதேநேரத்தில் வாக்குவாதமும் ஏற்படும். பிள்ளைகள் மூலம் செலவு இருக்கும்.  அவர்களது முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பீர்கள்

பெண்களுக்கு கோபத்தை குறைத்து நிதானமாக பேசுவது பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. செலவுகள் கூடும்.

மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் அலட்சியம் காட்டாமல் இருப்பது நல்லது. விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும்போது கவனம் தேவை.

பரிகாரம்:  சிவபெருமானையும், நந்தீஸ்வரரையும் வணங்க எல்லா பிரச்சனைகளும் தீரும். நன்மை ஏற்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள்

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

தேவையில்லாத செலவுகளை ஒத்திப் போடும் கன்னி ராசி அன்பர்களே, இந்த வாரம் தடைபட்டிருந்த பணவரத்து வந்து சேரும். உடல் ஆரோக்கியம் சீராகும். அதிக கோபத்தால் வீண்பகை உண்டாகலாம். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி செல்வது நல்லது. ஆடம்பர செலவுகள் ஏற்படும். வாகனம் மூலம் செலவு உண்டாகலாம். பயணசுகம் கிடைக்கும்.

தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் தடுமாற்றம் உண்டாகும். எந்த வேலையை முதலில் கவனிப்பது என்று குழப்பம் வரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை, இடமாற்றம், அலைச்சல் போன்றவை இருக்கக்கூடும். தடைபட்டிருந்த பணம் கைக்கு வந்து சேரும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த ஊடல்கள் நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் பெருமை சேர்ப்பார்கள். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் குடும்பத்தினருடன் கலந்து கொள்வீர்கள்.

பெண்களுக்கு  பயணங்கள் செல்ல நேரலாம். உறவினர்களிடம் வீண்வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. காரிய தாமதம் ஏற்பட்டாலும் சாதகமான பலன் கிடைக்கும். 

மாணவர்களுக்கு  நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும், அன்றைய பாடங்களை அன்றைய தினமே படித்து விடுவது வெற்றிக்கு வழிவகுக்கும். 

பரிகாரம்:  பெருமாளை வணங்கிவர வாழ்வு வளம் பெறும். மாணவர்களுக்கு தேர்வு பயம் நீங்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்

துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம்  பாதம்)

சீரிய வளர்ச்சியைக் காணும் துலா ராசி அன்பர்களே, இந்த வாரம் எடுத்த முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பணவரத்து அதிகரிக்கும். மற்றவர்கள் செய்ய தயங்கும் வேலையை  செய்து முடித்து பாராட்டு கிடைக்க பெறுவீர்கள். எண்ணியபடி செயல்களை செய்து காரிய வெற்றி காண்பீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். திருமண முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கலாம். புதிய வாடிக்கையாளர்கள் தொடர்பு உண்டாகும். பழைய சிக்கல்கள் தீர்வதில் தாமதம் ஏற்படும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் டென்ஷனுடன் காணப்படுவார்கள்.  நீண்ட நாட்களாக இருந்து வந்த மனக்கிலேசங்களில் தெளிவான நிலை ஏற்படும்.

குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும்.  அதே நேரத்தில் அவர்களால் செலவும் வரும்.

பெண்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். மற்றவர் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. 

மாணவர்களுக்கு  கல்வி தொடர்பான விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. கூடுதல் கவனத்துடன் பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். 

பரிகாரம்: மகாலட்சுமியை வழிபட்டு வர பொன்பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

சீரான முறையில் வாழ்க்கையை வாழ விரும்பும் விருச்சிக ராசி அன்பர்களே, இந்த வாரம் குறிக்கோளற்ற வீண் அலைச்சல் உண்டாகலாம். தைரியம் அதிகரிக்கும். ஜீரண கோளாறுகள்  ஏற்படலாம். உடல்சோர்வு உண்டாகும். பணம் பலவழிகளிலும் செலவாகும். காரியதாமதம் ஏற்படும். அடுத்தவர்களுக்காக  எந்த உத்தரவாதமும் கொடுக்காமல் இருப்பது நல்லது. வீண் மனக்கவலை நீங்கும். வாகனங்களில் செல்லும்போது கவனம் அவசியம். நண்பர்கள் மூலம் கிடைக்க வேண்டிய உதவிகள் தாமதப்படும். 

தொழில் வியாபாரம் திட்டமிட்டபடி சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் தடங்கல்கள், கூடுதல் உழைப்பு ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். பணி நிமித்தமாக பயணம் செல்ல வேண்டி வரலாம்.

குடும்பத்தில் திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வதும் நல்லது. சகோதரர்களுடன் கருத்து வேற்றுமை உண்டாகலாம். எச்சரிக்கை தேவை. 

பெண்களுக்கு  எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். பணவரத்து திருப்தி தரும். 

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண எடுக்கும் முயற்சிகள் கைகூடும். எதிர்கால கல்வி பற்றிய சிந்தனை மேலோங்கும். 

பரிகாரம்: வள்ளி தேவசேனா சமேதராக உள்ள முருக பெருமானை அர்ச்சனை செய்து வணங்க எல்லா துன்பங்களும் நீங்கி வாழ்வில் இன்பம்  உண்டாகும். 

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன்

தனுசு (மூலம், பூராடம்,  உத்திராடம் 1ம் பாதம்)

உடன் பிறந்தவர்களுக்காக செலவு செய்யக் காத்திருக்கும் தனுசு ராசி அன்பர்களே, இந்த வாரம் திடீர் கோபம், வேகம் இருக்கலாம். வாக்குவாதம் ஏற்படும். மற்றவர்களிடம்  அனுசரித்து செல்வது நன்மை தரும். நண்பர்களிடம் பகை ஏற்படலாம். பிடிவாதத்தை விட்டு விடுவது காரிய வெற்றிக்கு உதவும். வீண் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக நேரிடலாம். எதிலும் திருப்தி இல்லாத மனநிலை இருக்கும். பயணம் மூலம் சாதகம் கிடைக்கும். கடித போக்குவரத்து நன்மை தரும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சற்று விழிப்புடன் இருப்பது நல்லது. பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும்போது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.எதிர்பார்த்த பணம் கைக்குவர தாமதம் ஆகலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் சுமையாக வரும். நிதானம் தேவை. சக ஊழியர்களுடன்  சாமர்த்தியமாக பழகி காரிய அனுகூலம் அடைவீர்கள்.

குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக் கிடையே இருந்த குழப்பங்கள் நீங்கும். பிள்ளைகள் கல்வியில் அக்கறை காண்பிப்பீர்கள். நண்பர்கள் உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

பெண்களுக்கு திட்டமிட்டு செய்தாலும் காரியங்களில் தடை ஏற்படும். எதிர்பாராத செலவு உண்டாகும். 

மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்கள் தாமதமாக நடக்கும். புதிய நட்புகள் கிடைக்கும். 

பரிகாரம்: சித்தர்களை வணங்கி வர போட்டிகள் குறையும். மனம் தெளிவடையும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம்,  திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

உயரிய வாழ்க்கை வாழ ஆசைப்படும் மகர ராசி அன்பர்களே, இந்த வாரம் கஷ்டம் நீங்கி சுகம் உண்டாகும். பணவரத்து கூடும்.  எதிர்ப்புகள் மறையும். பகை பாராட்டியவர்கள் பகையை மறந்து நட்புக் கரம் நீட்டுவார்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். எதையும் செய்து முடிக்கும்  சாமர்த்தியம் உண்டாகும்.

தொழில் வியாபாரம் சீராக நடக்கும். பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் வேகம் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில்  ஏற்பட்ட சிக்கல்கள் தீரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும். பதவி உயர்வு கிடைக்கலாம். 

குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபப்படாமல் நிதானமாக பேசி அனுசரித்து செல்வது நல்லது. சகோதரர் வகையில் உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள்.

பெண்களுக்கு எதிலும் தேவையற்ற வீண் கவலை உண்டாகும். பயணங்கள் செல்ல நேரிடலாம். கடன் விஷயங்களில் கவனம் தேவை. 

மாணவர்களுக்கு  மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது அவசியம். சக மாணவர்களுடன் நிதானமாக பழகுவது நல்லது. 

பரிகாரம்: ஆஞ்சநேயரை வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். மன குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும். 

அதிர்ஷ்ட கிழமைகள்: சனி, ஞாயிறு

 

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதம்)

சில்லரை விசயங்களுக்காக கோபித்துக் கொள்ளும் கும்ப ராசி அன்பர்களே, இந்த வாரம் மன உறுதி அதிகரிக்கும். சொத்துக்களை அடைவதில் இருந்த தடைகள் நீங்கும். உயர்நிலையில் உள்ளவர்களுடன் இருந்து வந்த மனவருத்தம் நீங்கும். உடல் ஆரோக்கியம் மேலோங்கும்.

தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருந்தாலும் முடிவில் லாபம் கிடைக்கும். எதிர்பார்த்த கடன் வசதி கிடைக்கும். புதிய ஆர்டர்கள் வரும். தொழில் வியாபாரத்திற்கு புதியதாக இடம் வாங்குவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலைச்சலையும், வேலை பளுவையும் சந்திக்க நேரிடும். சிலருக்கு இட மாற்றம் உண்டாகலாம்.

குடும்பத்தில் இருப்பவர்கள் சொல்வதை சாதாரணமாக எடுத்துக் கொள்வது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் மனஅமைதி கிடைக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். அவர்கள் எதிர்காலம் பற்றிய சிந்தனை எழும்.

பெண்கள் அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்யும்போது கவனமாக இருப்பது நல்லது. செலவு அதிகரிக்கும். வீண் கவலை உண்டாகலாம்.

மாணவர்கள் கல்வி பற்றிய கவலையை தவிர்த்து கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்லது. வீண் அலைச்சல் இருக்கும்.

பரிகாரம்: அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று பைரவருக்கு விளக்கு ஏற்றி வழிபட நன்று. கடன் தொல்லை அகலும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: சனி, திங்கள் 

 

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

கடினமாக உழைக்கத் தயாராகும் மீன ராசி அன்பர்களே, இந்த வாரம் பணவரத்து மனமகிழ்ச்சியை தரும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனை குறையும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். எந்த ஒரு காரியமும் சாதகமாக முடியும். விருப்பமானவர்களுடன் சந்திப்பு ஏற்படும். வாக்கு வன்மையால் நன்மையை தரும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

தொழில் வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும். வியாபார வளர்ச்சி பற்றிய சிந்தனை எழும், எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணி காரணமாக உடல்சோர்வு உண்டாகலாம். சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

குடும்பத்தில் இருப்பவர்கள் எதையும் வெளிக்காட்டாமல் உங்களுடன் இன்முகம் கொடுத்து பேசுவார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த வருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள். அக்கம்பக்கத்தினரிடம் அனுசரித்து செல்வது நல்லது.

பெண்களுக்கு ஆடை, ஆபரணங்கள் வாங்கும் எண்ணம் அதிகரிக்கும். நிதானமாக பேசி மற்றவர்களிடம் அனுசரித்து செல்வது காரிய வெற்றிக்கு உதவும்.

மாணவர்களுக்கு கல்விக்கு தேவையான உபகரணங்கள், புத்தகங்கள் வாங்குவீர்கள். கூடுதலாக நேரம் ஒதுக்கி பாடங்களை படிக்க வேண்டி இருக்கும்.

பரிகாரம்: தினமும் வீட்டில் பஞ்சமுக தீபம் ஏற்றி தரிசித்து வர மன அமைதி கிடைக்கும். காரிய அனுகூலம் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், சனி  

*************************************************

Continue Reading

வார பலன்

உங்கள் ராசிக்கான இந்த வார பலன்கள் (செப்டம்பர் 7 முதல் 13 வரை)

Published

on

weekly prediction, வாரபலன், weekly horoscope

மேஷம்:

எந்த பிரச்சனையானாலும் எளிதில் வெளியே வரும் மனதுடைய மேஷ ராசி அன்பர்களே இந்த வாரம் விருப்பங்கள் கைகூடும். பயன்தரும் காரியங்களில் ஈடுபடுவீர்கள்.  காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனதில் தைரியம் உண்டாகும். பண வரத்து குறையும். வாழ்க்கை துணையின் உடல்நலத்தில் கவனம் தேவை.

தொழில் வியாபாரத்தில் வேகம் அதிகரிக்கும்.  எதிர்பார்த்தபடி பொருட்களை அனுப்புவதில் இருந்த தாமதம் நீங்கும்.  பார்ட்னர்களிடம் இருந்து வந்த மனக்கிலேசல்கள் மாறும். 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் திடீர் பயணத்தை சந்திக்க நேரலாம். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது  நல்லது.  புதிய வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு தக்க பலன் கிடைக்கும்.   எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும்.

குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். ஆனாலும் கவனமாக எல்லோரிடமும் அனுசரித்து செல்வது நல்லது. கணவன்,  மனைவி ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து செல்வது நன்மை தரும். பிள்ளைகளிடம் கவனமாக இருப்பதும் அன்பாக  பேசுவதும் நல்லது. நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

பெண்களுக்கு மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் உண்டாகும். அடுத்தவர்களிடம் பழகும் போது கவனம்தேவை.

மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் திடீர் தடை, தாமதம் ஏற்படலாம். மற்றவர்களை அனுசரித்து  செல்வது நல்லது. பெரியோர், ஆசிரியர் அரவணைப்பு இருக்கும்.

பரிகாரம்:  ஆதிபராசக்தியை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். மனநிம்மதி கிடைக்கும். 

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்

****************************************************************************************************************************************************

ரிஷபம்:

தனக்கு வேண்டியவை எப்படியாவது நிறைவேற்றிக்கொள்ளும் ரிஷப ராசி அன்பர்களே இந்த வாரம் தேவையற்ற மன சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சனை வராமல் தடுக்கலாம். சிறிய விஷயத்துக்கு கூட கோபம் வரலாம். கட்டுப்படுத்துவது நன்மை தரும். திடீர் பண தேவை உண்டாகலாம்.

தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். போட்டிகள் குறையும். எதிர்பார்த்த  ஆர்டர் வரும். பணவரத்து  திருப்தி தரும். கடன் பிரச்சனை கட்டுக்குள் இருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களின் உழைப்புக்கு ஏற்ற நல்ல பலன் கிடைக்கும். மேல் அதிகாரிகள் ஒத்துழைப்பும்  இருக்கும்.

குடும்பத்தில் உங்களுக்கு எதிராக பிரச்சனையை உண்டாக்கியவர்கள் தானாகவே அடங்கி விடுவார்கள். வீட்டில் சுப  காரியம் நடக்கும். திருமண காரியங்களில் சாதகமான போக்க காணப்படும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். மதிப்பு  கூடும்.

பெண்கள் எந்த ஒரு சின்ன வேலைக்காகவும் மிகவும் பாடுபட வேண்டி இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக  கிடைக்கும் பயணங்களின் போது கவனம் தேவை.

மாணவர்கள் சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டு படிப்பது நல்லது. வகுப்பில் கவனத்தை சிதற விடாமல்  பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும்.

பரிகாரம்: ஸ்ரீரங்கநாதரை வணங்கி வர துன்பங்கள் விலகி இன்பங்கள் தேடி வரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி.

**************************************************************************************************************************************************

மிதுனம்:

எதையும் தைரியமாக சந்திக்கும் மிதுன ராசி அன்பர்களே இந்த வாரம் திடீரென்று கோபம் வரும். ஏதாவது ஒரு வகையில் அடுத்தவரிடம் வீண் பேச்சு கேட்க நேரலாம் கவனம் தேவை. மற்றவர்கள் செய்கைகளால் மனவருத்தம் உண்டாகலாம்.நீண்டநாள் இழுபறியாக இருந்து வந்த பிரச்சனை முடிவுக்கு வரும்.

தொழில் வியாபாரம்  தொடர்பான  போட்டிகள் நீங்கும். மனதில் உற்சாகம் உண்டாகும். புதிய  ஆர்டர்கள்  பிடிப்பதில்  வேகம் காட்டுவீர்கள். பொருளாதார உயர்வு உண்டாகும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களும் உற்சாகமாக காணப்படுவார்கள். சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும். மறைமுக  எதிர்ப்புகள் விலகும். அரசாங்க ரீதியிலான காரியங்கள் மிகச்சிறப்பாக இருக்கும்.

குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த மனக்கசப்பு மாறும்.  குழந்தைகளின்  நலனில் அக்கறை காட்டுவதன் மூலம் அவர்களிடம் நன்மதிப்பை பெறுவீர்கள்.   மனநிம்மதி   உண்டாகும். உறவினர்கள் வருகை இருக்கும். தாய்வழி உறவினர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும்.

பெண்கள் எந்த ஒரு செயலையும் மிகவும் அக்கறையுடன் செய்து முடிப்பீர்கள். மற்றவர்களுடன் இருந்த தகராறுகள்  தீரும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பதில் வேகம் காட்டுவீர்கள். எதிலும் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். 

பரிகாரம்: அருகில் இருக்கும் அம்மன் ஆலயத்திற்குச் சென்று 11 முறை வலம் வந்து வணங்கி வர குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நீண்ட நாள் பிரச்சனை தீரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், சனி.

****************************************************************************************************************************************************

கடகம்:

தனிமையை அதிகமாக விரும்பும் கடக ராசி அன்பர்களே நீங்கள் எதிர்ப்பவர்களை தக்க சமயத்தில் வெற்றி கொள்வீர்கள்.  இந்த வாரம் மனதில் புதிய உற்சாகம் உண்டாகும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கெட்ட கனவுகள் தோன்றலாம். நட்பாக இருந்தவர்கள் பிரிந்து செல்லலாம்.

தொழில் வியாபாரத்தில் நெருக்கடியான சூழ்நிலை  ஏற்பட்டாலும் அதை சமாளித்து முன்னேறுவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளில் அலட்சியம் காட்டாமல் செயல்படுவது நல்லது.

குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை காணப்பட்டாலும் குடும்ப உறுப்பினர்களுக்காக மருத்துவ செலவு செய்ய வேண்டி  இருக்கலாம். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பிள்ளை களை  அவர்களின்  போக்கிலேயே விட்டு பிடிப்பது நன்மை தரும்.

பெண்கள் மற்றவர்களால் ஏற்படும்  தொல்லைகளில் சிக்காமல் இருக்க கவனமாக  செயல்படுவது நல்லது.

மாணவர்களுக்கு கல்வியில் மெத்தன போக்கு காணப்படும். மிகவும் கவனமாக படிப்பது கல்வியில் முன்னேற்றத்தை  ஏற்படுத்தும்.

பரிகாரம்: அருகில் இருக்கும் சிவன் ஆலயத்திற்குச் சென்று வில்வ அர்ச்சனை செய்து வணங்க எல்லா தொல்லைகளும் நீங்கும். எதிர்பார்த்த காரியம் நன்றாக நடக்கும்

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், சனி

.****************************************************************************************************************************************************

சிம்மம்:

அனைவரிடமும் கவனமாக பேசக்கூடிய  சிம்ம ராசி அன்பர்களே நீங்கள் ஊக்கமுடன் உழைக்க தயங்காதவர்கள். இந்த வாரம் எதிர்பாராத செல்வ சேர்க்கை உண்டாகும். அதே நேரத்தில் மனதில் வீண்கவலையும் ஏற்படலாம். எதிலும் ஒரு வேகம் உண்டாகும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடும் போது கவனம் தேவை. உல்லாச பயணங்கள் செல்ல நேரலாம் எதிலும் அளவுக்கு மீறாமல் இருப்பது நல்லது. ஆடம்பர பொருட்கள் சேரும். 

தொழில் வியாபாரம் மிதமாக இருக்கும். எதிர்பார்த்த பணவரத்து தாமதப்பட்டாலும் கைக்கு வந்து சேரும். தொழில்,  வியாபாரம் பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும். 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமான பணிகளை செய்ய வேண்டி இருக்கும். உங்களது பேச்சு திறமையால்  மேலிடத்தில் இருப்பவர்களிடம் நல்ல பெயர் பெறுவீர்கள். சக ஊழியர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. 

குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை ஏதாவது குறை கூறுவார்கள். அனுசரித்து செல்வது நன்மை தரும். கணவன்  மனைவிக்கிடையே தேவையில்லாத விஷயத்தால் மன வருத்தம் ஏற்படலாம் கவனம் தேவை. குழந்தைகளின்  ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவீர்கள்.

பெண்களது செயல்களுக்கு பக்கபலமாக யாராவது இருப்பார்கள். திறமையான பேச்சின் மூலம் எதிலும் வெற்றி  காண்பீர்கள். செலவுகளை குறைப்பது நன்மை தரும்.

மாணவர்கள் கல்வியில் வெற்றிபெற கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். எல்லோரிடமும் அனுசரித்து செல்வது  நல்லது.

பரிகாரம்: அருகில் இருக்கும் காவல்தெய்வத்தை வணங்க மனதில் இருந்த குழப்பம் நீங்கி நிம்மதி உண்டாகும். கடன் பிரச்சனை தீரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி

****************************************************************************************************************************************************

கன்னி:

நிர்வாகத்தில் நியாமாக நட்ந்துகொள்ளும் கன்னி  ராசி அன்பர்களே நீங்கள் அவசரப்படாமல்  நிதானமாக எதையும் செய்தால் வெற்றி நிச்சயம். இந்த வாரம் மனதில் நம்பிக்கை உண்டாகும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். பேச்சின் இனிமையால் காரிய வெற்றி உண்டாகும். எதிலும் தாமதமான போக்கு காணப்படும். எதிர்ப்புகள் விலகும்.

தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கல் ஏற்பட்டு பின்னர் சரியாகும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு  அனுப்பும்போது கவனம் தேவை.

உத்தியோகத்தில் சரியாக முடிக்க வேண்டுமே என்ற கவலை உண்டாகும். சக ஊழியர்களிடம் கவனமாக பேசுவது  நல்லது.

குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் பழி ஏற்பட வாய்ப்பு உண்டு. எதிர்பாராத செலவு உண்டாகும். கணவன்,  மனைவிக்கிடையே சிறு சிறு மனஸ்தாபங்கள் வரலாம்.  பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் தேவை.  ஆயுதங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை.

பெண்கள் தேவையற்ற சில காரியங்களை செய்ய வேண்டி இருந்தாலும் அதன் மூலம் நன்மை உண்டாகும். பணவரத்து  திருப்தி தரும். தேவையான உதவி கிடைக்கும். 

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண வேண்டும் என்ற ஆர்வம் உண்டாகும். விளையாட்டு போட்டிகளில்  திறமை வெளிப்படும்.

பரிகாரம்: கோபூஜை செய்து பசுவை வணங்க குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபிட்சம் உண்டாகும். 

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன்,சனி

****************************************************************************************************************************************************

துலாம்:

அத்தியாவசிய செலவுகளை மட்டும் செய்ய நினைக்கும் துலா ராசி அன்பர்களே இந்த வாரம் பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். சுபகாரியங்கள் திட்டமிட்டபடி நடக்கும். நெருக்கமானவர்களுடன் பேசி மகிழ்வீர்கள். வாகனங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். 

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் ஆக்கபூர்வமான செயல் களை மேற்கொண்டு வியாபாரத்தில்  முன்னேற்றம் காண்பார்கள். தொழில் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடலாம். வியாபாரத்திற்கென்று புதிதாக இடம்  வாங்குவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் கூறிய பணிகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வருமானம்  திருப்திகரமாக இருக்கும். 

குடும்பத்தில் நிம்மதி காணப்படும். கணவன் மனைவிக்கிடையே சகஜநிலை நீடிக்கும். குடும்பத்திற்கு தேவையான  பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் செயல்திறன் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

பெண்களுக்கு மனதில் திடீர் கவலை ஏற்பட்டு நீங்கும். பயணங்களின் போதும் வாகனங்களை பயன்படுத்தும் போதும்  கவனம் தேவை.

மாணவர்கள் கல்வியில் முன்னேற திட்டமிட்டு செயல்படுவீர்கள். எதிலும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நன்மை  தரும்.

பரிகாரம்: ஆறுமுகனை வணங்க எதிர்ப்புகள் நீங்கும். கஷ்டங்கள் குறையும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்

****************************************************************************************************************************************************

விருச்சிகம்:

மனிதர்களின் குணங்களுக்கு தகுந்தார் போல் அவர்களிடம் வளைந்துக்கொடுத்து போகும் விருச்சிக ராசி அன்பர்களே நீங்கள் இறை நம்பிக்கை அதிகம் உடையவர்கள். இந்த வாரம் வாக்கு வன்மையால் எல்லா நன்மைகளும் கிடைக்க பெறுவீர்கள்பணவரவு மன திருப்தியை தரும். புதிய நபர்களின் அறிமுகம் அவர்களது நட்பும் கிடைக்க பெறுவீர்கள். நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும்.  வாகனங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பணியாளர்கள் மூலம் நன்மை கிடைக்க பெறுவார்கள். லாபம் கூடும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் பரபரப்பு நீங்கி அமைதியாக பணிகளை கவனிப்பார்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு  கிடைக்கும். 

குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த சங்கடங்கள் தீரும். பிள்ளைகள்  கல்வி பற்றிய கவலை நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க முற்படுவீர்கள்.

பெண்களுக்கு எடுத்த காரியத்தை எப்படியும் முடித்து விட வேண்டும் என்பதில் மன உறுதி காணப்படும். கொடுக்கல்,  வாங்கல் விவகாரங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது  நல்லது.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மனகுழப்பம் நீங்கி படிப்பில் கவனம்  செலுத்துவீர்கள். 

பரிகாரம்: குருபகவானை வணங்க எல்லா கஷ்டங்களும் நீங்கி சுகம் உண்டாகும். கல்வியில் தேர்ச்சி கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி

****************************************************************************************************************************************************

தனுசு:

பகைவரானாலும் அவர்களுக்கு தகுந்த மரியாதை அளிக்கும் தனுசு ராசி அன்பர்களே இந்த வாரம் பணவரத்து திருப்திகரமாக இருக்கும். வாக்கு வன்மை ஏற்படும்.  விருந்து கேளிக்கை  நிகழ்ச்சியில்  கலந்து கொள்வீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பலவகை யோகம் உண்டாகும். புண்ணிய ஸ்தலங்களை தரிசிக்கும் எண்ணம் ஏற்படும். சிலர் யாத்திரை செல்வார்கள். அடுத்தவர்கள் உதவி கிடைக்கும்.

தொழில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதையும் சாதிக்கும் திறமை உண்டாகும். எதிர்பார்த்த முன்னேற்றம்  காணப்படும். சரக்குகளை கையாளும் போது கவனம் தேவை.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். வேலைகளை செய்து முடிப்பதில்  அக்கறை காட்டுவீர்கள். புதிய பதவி கிடைக்கலாம். மேலிடத்தின் மூலம் அனுகூலம் கிடைக்கும். 

குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் கூடுதல் வருமானம் கிடைக்க பெறலாம்.  கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை காணப்படும். பிள்ளைகள் உங்கள் சொல்படி கேட்டு நடப்பது மன மகிழ்ச்சியை  தரும். நினைத்ததை நடத்தி முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். சொத்துப் பிரச்சினை தீர்வு பெறும்.

பெண்கள் எந்த காரியத்தை செய்து முடிப்பதிலும் வேகத்தை காண்பீர்கள். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை  தவிர்ப்பது நல்லது.

மாணவர்களுக்கு எதிர்கால கல்வி பற்றிய எண்ணம் மேலோங்கும். அது தொடர்பான பணிகளில் ஈடுபடுவீர்கள்.

பரிகாரம்: ஆஞ்சநேயரை வெற்றிலை மாலை போட்டு வணங்க எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும். மனதில் தைரியம் கூடும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி

****************************************************************************************************************************************************

மகரம்:

தெளிவான சிந்தனைகள் கொண்ட  மகர ராசி அன்பர்களே இந்த வாரம்தடைபட்ட காரியங்களில் இருந்த தடை நீங்கி நன்றாக நடந்து முடியும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சிக்கல் தீரும். எதிர்த்து செயல்பட்டவர்கள் விலகி சென்று விடுவார்கள். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பொருளாதார நிலை உயரும். 

தொழில் வியாபாரத்தில் திடீர் சிக்கல் ஏற்பட்டு சரியாகும். பணவரத்து தடைபட்டாலும் வந்துசேரும்.  வியாபார  பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கும் போது கவனம் தேவை.

உத்தியோகஸ்தர்கள் அலுவலக பொறுப்புகளை கவனமாக செய்வது நல்லது.  இயந்திரங்களில் பணி புரிபவர்கள்  ஆயுதங்களை கையாள்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது செயல்படுவது அவசியம்.

குடும்பத்தில் இருப்பவர்களது பேச்சுக்கு எதிர்த்து பேசுவதை தவிர்ப்பது நன்மை தரும். கணவன், மனைவிக் கிடையே  வீண்வாக்குவாதங்கள் ஏற்படலாம். பிள்ளைகளிடம் அன்பாக பழகுவது நல்லது.

பெண்களுக்கு கோபம், படபடப்பு குறையும். மற்றவர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். திடீர் செலவு  உண்டாகலாம். 

மாணவர்களுக்கு உயர்கல்வி படிப்பவர்களுக்கு திடீர் பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். வாகனங்கள் மூலம் செலவு  உண்டாகும்

பரிகாரம்: சனி பகவானுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி வணங்க உடல் ஆரோக்கியம் பெறும். கடன் பிரச்சனை தீரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி

****************************************************************************************************************************************************

கும்பம்:

அறிவு நிறைந்திருந்தாலும் கூச்சம் இருக்கும் கும்ப ராசி அன்பர்களே இந்த வாரம் பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த பண வரவு கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் சமூகத்தில் அந்தஸ்தும், மரியாதையும் கிடைக்க பெறுவீர்கள். 

தொழில் வியாபாரததில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நிதி நிலைமை சீர்படும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பட்ட  சிரமங்கள் குறையும். 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பளு குறைந்து காணப்படுவார்கள். எதிர்பார்த்த இடத்திற்கு மாற்றம்  கிடைக்கலாம்.

குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இறுக்கமான சூழ்நிலை நீங்கி மகிழ்ச்சி  உண்டாகும். பிள்ளைகள் மூலம் இருந்த மன வருத்தம் நீங்கி அவர்களுடன் சந்தோஷமாக வெளியே சென்று வருவீர்கள்.

பெண்களுக்கு எல்லா காரியங்களும் அனுகூலமாக நடக்கும். மனக் கவலை நீங்கி நிம்மதி உண்டாகும்.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண முழு மூச்சுடன் செயல்படுவீர்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.

பரிகாரம்: சித்தர்களை வணங்கி வர எல்லா காரியங்களும் நல்லபடியாக நடக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி.

****************************************************************************************************************

மீனம்:

குடும்பத்தாரின் மீது பற்றுள்ளவராக இருக்கும் மீன ராசி அன்பர்களே, நீங்கள் விட்டுக்கொடுத்து வாழ்வதன் மூலம் சிறப்பான பலன்களை பெறுவீர்கள். இந்த வாரம் செலவு அதிகரிக்கும். சாதகமான பலன் வரும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில்  செல்லும் போதும் ஆயுதங்களை கையாளும் போதும் கூடுதல் கவனம் தேவை. எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது.

தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். வாக்கு வன்மையால் லாபம் கிடைக்க பெறுவீர்கள். புதிய ஆடர்  தொடர்பாக பயணங்கள் செல்ல நேரலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சக ஊழியர்களுடன் எளிதில் கருத்து வேற்றுமை  உண்டாகலாம் கவனம் தேவை. அலுவலகத்தில் உங்களுக்கான அங்கீகாரம் அதிகரிக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்களுக்காக உழைக்க வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை ஏற்படும்.  குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வீட்டில் உள்ளவர்களுடன் இருந்து வந்த மோதல்கள்  குறையும். 

பெண்களுக்கு கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். திறமையுடன் செயல்பட்டு பாராட்டு  பெறுவீர்கள்.

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற எடுத்த முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சாதுரியமான பேச்சால்  நன்மை கிடைக்க பெறுவீர்கள். 

பரிகாரம்: செவ்வாய், துர்க்கை அம்மனை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். வீண் அலைச்சல் குறையும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன்,சனி

 

**********************************************************************************************************

 

Continue Reading
வேலை வாய்ப்பு16 hours ago

கடலூர் அரசு விடுதியில் வேலைவாய்ப்பு!

வேலை வாய்ப்பு17 hours ago

புதுக்கோட்டைச் சிறைச்சாலை பார்ஸ்டல் பள்ளியில் வேலைவாய்ப்பு!

வேலை வாய்ப்பு17 hours ago

அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு!

பல்சுவை18 hours ago

தினமும் நெல்லிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா!

சினிமா செய்திகள்19 hours ago

ஓடிடியில் ஒருமுறை படம் பார்க்க ரூ.199 கட்டணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

வேலை வாய்ப்பு19 hours ago

சென்னை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

டிவி19 hours ago

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிதாக இணையும் நடிகை!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்1 day ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (23/09/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்1 day ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (23/09/2020)

கேலரி2 days ago

அக்‌ஷரா கவுடா – க்யூட் & ஹாட் பிக்ஸ்!

வேலை வாய்ப்பு11 months ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா1 year ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா1 year ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு1 year ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா1 year ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

சினிமா செய்திகள்2 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

தமிழ்நாடு5 months ago

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

கிரிக்கெட்2 weeks ago

பந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சினிமா செய்திகள்3 weeks ago

தேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ!

வீடியோ செய்திகள்1 month ago

காதலை வித்தியாசமாகத் தெரிவிக்க தீ மூட்டிக்கொண்ட காதலன்! (வீடியோ உள்ளே)

வீடியோ2 months ago

சூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்!

வீடியோ செய்திகள்6 months ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு

வீடியோ செய்திகள்6 months ago

சாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு

வீடியோ செய்திகள்6 months ago

கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? – சிறப்பு தொகுப்பு

வீடியோ செய்திகள்6 months ago

கோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi

வீடியோ செய்திகள்6 months ago

லாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு

வீடியோ செய்திகள்6 months ago

நானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி

Trending

%d bloggers like this: