Connect with us

தமிழ் பஞ்சாங்கம்

காரடையான் நோன்பு

Published

on

காரடையான் நோன்பு

 

மாசிக் கயிறு பாசி படியும் என்பார்கள். அதாவது, காரடையான் நோன்பு இருந்து அணிந்துகொள்கிற மஞ்சள் கயிறானது, பாசி படிகிற அளவுக்குப் பழையதானாலும் கூட, கழுத்திலேயே நிலைத்திருக்கும் என்பது ஐதீகம்.

 

அற்ப ஆயுள் கொண்ட தன் கணவனின் உயிரைப் பறித்துச் சென்ற எமனிடம் வாதாடி, கணவனை உயிர்பிழைக்க வைத்து, தன் மாங்கல்ய பாக்கியத்தை நிலைநிறுத்திக் கொண்டாள் ஒரு பெண்.அவளைப் போற்றும் விதமாகவும், தங்களது கணவர்களுக்கு அதுபோன்ற இடையூறுகள் வராமல் இருக்கவும் ஒவ்வொரு பெண்களும் அனுஷ்டிக்கும் விரதமே ‘காரடையான் நோன்பு’ ஆகும்.

 

மாசி மாதம் முடிந்து, பங்குனி மாதம் தொடங்கும் வேளையில் இந்த விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. மாசி மாத கடைசி நாள் இரவு ஆரம்பித்து, பங்குனி முதல் நாள் காலையில் இந்த விரதத்தை முடிப்பார்கள். இந்த நோன்பை ‘காமாட்சி நோன்பு’, ‘கேதார கவுரி விரதம்’, ‘சாவித்திரி விரதம்’ என்றும் சொல்வார்கள்.

 

சத்தியவான் சாவித்திரி கதை:

மந்திர தேசத்து மன்னன் அசுவபதியின் மகள் சாவித்திரி, வீரத்தில் சிறந்தவள். இவள் ஒருநாள் வேட்டைக்குச் செல்லும்போது, தியானத்திலிருந்த சாளுவ தேசத்து இளவரசன் சத்தியவானைப் பார்த்தாள். அவனது தந்தை ஒரு போரில் நாட்டை இழந்து விட்டார். அதனால், காட்டில் மகனுடன் வசித்தார்.

பார்வையற்ற பெற்றோரைச் சத்தியவான், அன்புடன் கவனித்துக் கொண்டான். அவனையே திருமணம் செய்வதென்று முடிவு செய்தாள் சாவித்திரி. மந்திர தேசத்திற்கு வந்த நாரதர், சாவித்திரியின் தந்தையிடம் இன்னும் ஓராண்டுக் காலத்தில் சத்தியவான் இறந்து விடுவான் என்றும், அதனால் சாவித்திரியை அவனுக்குத் திருமணம் செய்து கொடுக்க வேண்டாம் என்றும் எச்சரித்தார். ஆனால், சாவித்திரி விடாப்பிடியாகச் சத்தியவானையே திருமணம் செய்து கொண்டாள்.

எமனிடம் சண்டை:

கணவனையும், பார்வையற்ற மாமனார், மாமியாரையும் அவள் அன்புடன் கவனித்துக் கொண்டாள். அரண்மனைவாசியான அவள் காட்டில் பல சிரமங்களை அனுபவித்தாலும், பொறுமையுடன் ஏற்றுக் கொண்டாள். சத்தியவானின் ஆயுள் முடியும் நாள் வந்தது. அன்று அவள் கணவனைப் பிரியவே இல்லை. அவர்கள் காட்டில் பழம் பறித்துக் கொண்டிருந்தனர். திடீரென சத்தியவான், மயங்கி விழுந்து இறந்தான். அவனது உயிரை எமதர்மராஜா, எடுத்துச் சென்றார். சாவித்திரி எமனைப் பின்தொடர்ந்தாள்.

தலை சிறந்த கற்புக்கரசி என்பதாலும், கணவன் இறப்பான் என்று தெரிந்தும், தைரியத்துடன் அவனைத் திருமணம் செய்து கொண்டதாலும், பார்வையற்ற முதியவர்களுக்குத் தளராத சேவை செய்தவள் என்பதாலும் அவளுக்குக் காட்சி தந்த எமதர்மர், அவளைத் திரும்பிப் போகச் சொன்னார்.

அவரிடம், நான் என் கணவருடன் வாழ விரும்புகிறேன். நான் பதிவிரதை என்பது உண்மையானால், அவரது உயிரைத் திருப்பித்தர வேண்டும், எனக் கேட்டாள். சாவித்திரியின் புத்திசாலித்தனம் இறப்புக்குப் பிறகு யாருக்கும் வாழ்வு கிடையாது என மறுத்த எமதருமர், அதற்குப் பதிலாக வேறு எந்த வரம் கேட்டாலும் தருவதாகக் கூறினார்.

சாவித்திரி சமயோசிதமாக,என் மாமனார், மாமியாருக்கு மீண்டும் பார்வை வேண்டும். ஆண் வாரிசு இல்லாத என் தந்தைக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும். எனக்கு நூறு குழந்தைகள் வேண்டும், என்றாள்.

சற்றும் யோசிக்காத எமதருமன் அந்த வரங்களைக் கொடுத்து விட்டார். எனக்கு நூறு குழந்தைகள் பிறக்க வேண்டுமென்றால், என் கணவன் உயிருடன் இருந்தாக வேண்டுமே! அவரது உயிரைத் திரும்பக் கொடுங்கள், என யாசித்தாள் சாவித்திரி. எமதர்மராஜா அவளது அறிவின் திறனை வியந்து, சத்தியவானை அங்கேயே விட்டுச் சென்றார்.

விரத முறை :

காரடையான நோன்பு விரத முறை விரதம் இருக்கும் நாளில் பெண்கள் அதிகாலையில் நீராடி, பூஜையறையைச் சுத்தம் செய்ய வேண்டும். ஒரு கலசத்தின் மேல் தேங்காய், மாவிலை வைக்க வேண்டும். கலசத்திற்குச் சந்தனம், குங்குமம், மஞ்சள் பூசி, அதன் மேல் மஞ்சள் கயிற்றைக் கட்ட வேண்டும். அருகில் இஷ்ட அம்பாள் படம் வைத்து, அவளைக் காமாட்சியாக அல்லது சாவித்திரியாகக் கருதி வழிபட வேண்டும். அம்மனுக்கு கார் அரிசியும் காராமணியும் கலந்து செய்த அடையும், உருகாத வெண்ணெய்யும் நிவேதனம் செய்வார்கள். நோன்புச் சரட்டில் மலரைக் கட்டி பூஜையில் வைத்து கழுத்தில் கட்டிக் கொள்வார்கள்.

உருகாத வெண்ணையும் ஓர் அடையும் நோற்று உனக்கு நான் வைத்தேன்,எந்நாளும் என் கணவர் என்னை விட்டு நீங்காத அருள் தருவாய்”  என்று அம்மனை நோக்கி வேண்டி நமஸ்கரிக்கவும்.

பூஜை நேரம் :

இந்த ஆண்டு காரடையான் நோன்பு 15.3.2019 வெள்ளி அதிகாலை 4 மணி – 5:30க்குள் பூஜை செய்ய நல்ல நேரமாகும். பூஜை முடிந்த பின்னர் எருமை மாட்டிற்குத் தீவனம் அளிக்க வேண்டும்.

Advertisement

தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (23/10/2020)

Published

on

அக்டோபர் 23 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

சரத்ருது

ஐப்பசி 07

வெள்ளிக்கிழமை

ஸப்தமி பகல் மணி 12.53 வரை பின்னர் அஷ்டமி

பூராடம் காலை மணி 7.15 வரை பின்னர் உத்தராடம்

ஸுகர்மம் நாமயோகம்

வணிஜை கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 22.49

அகசு: 29.16

நேத்ரம்: 1

ஜூவன்: 1/2

துலா லக்ன இருப்பு: 4.07

சூர்ய உதயம்: 6.07

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்வெல்லம்

 

குறிப்பு

இன்று கீழ் நோக்கு நாள்.

அருப்புக்கோட்டை ஸ்ரீசெளடாம்பிகையம்மன் சிறப்பு அலங்காரம்.

மதுரை ஸ்ரீநவநீதகிருஷ்ண ஸ்வாமி சிறப்பு அலங்காரம் பவனி.

குலசேகரப்பட்டிணம் ஸ்ரீமுத்தாரம்மன் சிறப்பு அலங்காரம் கொலு தர்பார்.

திருக்கோஷ்டியூர் ஸ்ரீசெளமிய நாராயண பெருமாள் ஊஞ்சல்.

திதி:அஷ்டமி.

சந்திராஷ்டமம்:மிருகசீரிஷம்.

Continue Reading

தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (22/10/2020)

Published

on

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today

அக்டோபர் 22 – 2020
சார்வரி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
ஐப்பசி 06
வியாழக்கிழமை
ஷஷ்டி பகல் மணி 1.55 வரை பின்னர் ஸப்தமி
மூலம் காலை மணி 7.43 வரை பின்னர் பூராடம்
அதிகண்டம் நாமயோகம்
தைதுலம் கரணம்
சித்த யோகம்

தியாஜ்ஜியம்: 27.33
அகசு: 29.17
நேத்ரம்: 1
ஜூவன்: 1/2
துலா லக்ன இருப்பு: 4.18
சூர்ய உதயம்: 6.06

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00
எமகண்டம்: காலை 6.00 – 7.30
குளிகை: காலை 9.00 – 10.30
சூலம்: தெற்கு
பரிகாரம்: நல்லெண்ணெய்

குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்.
ஷஷ்டி விரதம்.
கரிநாள்.
மதுரை ஸ்ரீமீனாக்ஷியம்மன் கொலு மண்டபத்தில் சிறப்பு அலங்காரம்.
குலசேகரப்பட்டிணம் ஸ்ரீமுத்தாரம்மன் சிறப்பு அலங்காரத்துடன் கொலு தர்பார் காக்ஷி.
திருக்கோஷ்டியூர் ஸ்ரீசெளமிய நாராயண பெருமாள் உற்சவாரம்பம்.

திதி:திதித்துவயம்.
சந்திராஷ்டமம்:ரோகிணி.

Continue Reading

தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (21/10/2020)

Published

on

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today

அக்டோபர் 21 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

சரத்ருது

ஐப்பசி 05

புதன்கிழமை

பஞ்சமி மாலை மணி 3.21 வரை பின்னர் ஷஷ்டி

கேட்டை காலை மணி 8.35 வரை பின்னர் மூலம்

சோபனம் நாமயோகம்

பாலவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 25.28

அகசு: 29.19

நேத்ரம்: 1

ஜூவன்: 1/2

துலா லக்ன இருப்பு: 4.28

சூர்ய உதயம்: 6.06

 

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30

எமகண்டம்: காலை 7.30 – 9.00

குளிகை: காலை 10.30 – 12.00

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்பு

இன்று சம நோக்கு நாள்.

உபாங்கலலிதா கெளரிவிரதம்.

சரஸ்வதி ஆவாஹணம்.

மதுரை ஸ்ரீவீரராகவ பெருமாள் சிறப்பு அலங்காரம்.

குலசேகரப்பட்டிணம் ஸ்ரீமுத்தாரம்மன் சிறப்பு அலங்காரம்.

கொலு தர்பார்.

திருவனந்தபுரம்,திருவட்டாறு ஸ்ரீசிவபெருமான் பவனி.

 

திதி:பஞ்சமி.

சந்திராஷ்டமம்:கார்த்திகை.

Continue Reading
வேலை வாய்ப்பு29 mins ago

சிவகங்கை மாவட்ட குழந்தைகள் நலக்குழுவில் வேலைவாய்ப்பு!

உலகம்2 hours ago

அமெரிக்காவில் கொரோனாவுக்கு எதிராக சிகிச்சை வழங்க அனுமதிக்கப்பட்ட முதல் மருந்து இதுதான்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்13 hours ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (23/10/2020)

தமிழ் பஞ்சாங்கம்14 hours ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (23/10/2020)

தினபலன்14 hours ago

இன்றைய தினபலன் | நல்ல நேரம் (23/10/2020)

சினிமா செய்திகள்20 hours ago

சூரரைப்போற்று படம் அக்டோபர் 30 அமேசான் பிரைமில் வெளியாகுமா?

வேலை வாய்ப்பு22 hours ago

புவி விஞ்ஞானி தேர்வு மையத்தில் வேலைவாய்ப்பு!

வேலை வாய்ப்பு22 hours ago

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலை வாய்ப்பு22 hours ago

கப்பல் தளத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்23 hours ago

அதிர்ச்சி.. காற்று மாசு காரணமாக இறந்த 1.16 லட்சம் குழந்தைகள்!

வேலை வாய்ப்பு12 months ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா1 year ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா1 year ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு1 year ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா1 year ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

சினிமா செய்திகள்2 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு6 months ago

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

கிரிக்கெட்1 month ago

பந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சினிமா செய்திகள்2 months ago

தேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ!

வீடியோ செய்திகள்2 months ago

காதலை வித்தியாசமாகத் தெரிவிக்க தீ மூட்டிக்கொண்ட காதலன்! (வீடியோ உள்ளே)

வீடியோ3 months ago

சூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்!

வீடியோ செய்திகள்7 months ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு

வீடியோ செய்திகள்7 months ago

சாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு

வீடியோ செய்திகள்7 months ago

கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? – சிறப்பு தொகுப்பு

வீடியோ செய்திகள்7 months ago

கோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi

வீடியோ செய்திகள்7 months ago

லாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு

வீடியோ செய்திகள்7 months ago

நானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி

Trending

%d bloggers like this: