Connect with us

மாத பலன்

இந்த மாதம் உங்களுக்கு எப்படி இருக்கும்? ஏப்ரல் மாத பலன்!

Published

on

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

வாழ்க்கையில் மாற்றத்தை எதிர் பார்த்து காத்திருக்கும் மேஷ ராசி அன்பர்களே இந்த மாதம் நன்மையை அளிக்கும் அமைப்பாகும். எதையும் உடனடியாக நம்பாமல் ஆராய்ந்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். மருத்துவம் சார்ந்த செலவுகள் நேரலாம். சுபநிகழ்ச்சிகளில் இருந்த தடைகள் அனைத்தும் அகலும். மற்றவர்களுக்காக நீங்கள் எடுக்க கூடிய முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும்.

குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை அகலும். பிள்ளைகள் உங்கள் ஆலோசனையை செவி மடுத்து கேட்பார்கள். அவர்களுக்காக நீங்கள் எடுக்கக் கூடிய முயற்சிகள் பலிதமாகும். உறவினர்கள், நண்பர்களிடம் கவனமாக பழகுவது நல்லது.

தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும்.

பெண்களுக்கு இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். கவுரவம் உயரும். மற்றவர்களிடம் நன்மதிப்பு உண்டாகும்.

மாணவர்களுக்கு கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நன்மை தரும். கவனமாக அடுத்தவர்களிடம் பழகுவது நல்லது.

கலைத்துறையினருக்கு எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. கஷ்டம் தீரும். பேச்சின் இனிமையால் காரியம் கைகூடும். சுப பலன்களை தரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.

அரசியல் துறையினருக்கு மனதிருப்தியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பயணம் செல்ல நேரலாம். மனதிற்க்குப் பிடித்தவர்களை சந்திக்க நேரிடலாம். பெரியவர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். உடனிருப்பவர்களுடன் எச்சரிக்கையாகப் பழகுவது நல்லது. ரகசியங்களை கையாளுவதில் கவனம் தேவை.

அஸ்வினி:

இந்த மாதம் குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன்மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். குழந்தைகள் முன்னேற்றத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். அவர்களால் பெருமை சேரும். புதிய நண்பர்கள் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். பெண்களுக்கு வீண் அலைச்சல் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் ஏற்படும். வாக்குவன்மையால் அனுகூலம் உண்டாகும்.

பரணி:

இந்த மாதம் தந்தையின் உடல் நிலையில் கவனம் தேவை. நீண்ட தூரத்தில் இருந்து வரும் தகவல்கள் மன திருப்தியை தருவதாக இருக்கும். முயற்சிகளில் சாதகமான பலன் பெறுவீர்கள். பணவரத்து கூடும். மாணவர்கள் திறமையாக எதையும் செய்து பாராட்டு பெறுவீர்கள். கல்வியில் முன்னேற்றத்திற்கு எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். பழைய பாக்கிகள் சிறிது தாமதத்திற்கு பின் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும்.

கார்த்திகை 1ம் பாதம்:

இந்த மாதம் செயல்திறன் கூடும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். அறிவுதிறன் அதிகரிக்கும். உங்களது பேச்சு மற்றவரை மயக்குவது போல் இருக்கும். சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவீர்கள். ஆரோக்கியம் சம்பந்தமான வீண் மனக்கவலை உண்டாகும். எதிர்பாராத செலவு ஏற்படும். விட்டு சென்ற நண்பர் மீண்டும் வந்து சேர்வார். அதனால் மகிழ்ச்சி உண்டாகும்.

பரிகாரம்: துர்க்கை அம்மனை செவ்வாய்கிழமை அன்று பூஜித்து வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். மன துயரம் நீங்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 22, 23

அதிர்ஷ்ட தினங்கள்: 15, 16

*******************************************************************************************************************************************************************************

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)

மகிழ்ச்சி அளிக்கக் கூடிய விசயங்களை மட்டுமே செய்ய விரும்பும் ரிஷப ராசியினரே இந்த மாதம் சிற்றின்ப செலவு அதிகரிக்கும். மனதில் இருந்து வந்த கலக்கம் நீங்கும். காரணமே இல்லாமல் வீண் பழி சுமக்க நேரிடும். ஒதுங்கி சென்றாலும் வலிய வந்து சிலர் சண்டை போடலாம் கவனமாக இருப்பது நல்லது. கண் சம்பந்தமான கோளாறுகள் ஏற்படலாம். வேளை தவறி உணவு உண்ணும்படி நேரலாம்.

குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். திருமண முயற்சிகள் சாதகமான பலன் தரும். சிலருக்கு புத்திரபாக்கியம் உண்டாகும். வாய்க்கு ருசியான உணவு உண்பீர்கள். கணவன் மனைவி ஒருவரது பேச்சை மற்றவர் கேட்பதன் மூலம் நன்மை உண்டாகும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நட்பு ரீதியில் நிதானத்தைக் கடைபிடிப்பது நன்மையைத் தரும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னருடன் அனுசரித்து செல்வது நல்லது. வியாபார போட்டிகள் குறையும். எல்லா துறைகளிலும் லாபம் கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமுடன் பணியாற்றுவது நல்லது. புதிய வேலைக்கு செய்யும் முயற்சிகள் பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். கொடுத்த வேலைகளை நேரத்தில் செய்வது உகந்தது.

பெண்களுக்கு உங்களது பொருள்களை கவனமாக பாதுகாத்துக்கொள்வது நல்லது. வீண்பிரச்சனைகளில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவது நன்மைதரும்.

மாணவர்களுக்கு தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். எதிர்ப்புகள் விலகும்.

கலைத்துறையினருக்கு எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடித்து விடுவீர்கள். வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திட்டமிடுவதில் பின்னடைவு ஏற்படும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். பெரியோர் நேசம் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும். ஆன்மீக தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும்.

அரசியல் துறையினருக்கு நிதானமாக பேசுவது நன்மை தரும். பணவரத்து திருப்தி தரும். எதிர்பார்த்த தகவல்கள் வரும். மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும்படியான காரியங்கள் நடக்கும்.

கார்த்திகை 2, 3, 4 பாதம்:

இந்த மாதம் தொழில் வியாபாரம் முன்னேற்றம் காணும். தொழில் வளர்ச்சிக்காக சில திட்டங்களை செயல்படுத்த முடிவெடுப்பீர்கள். பணவரத்து திருப்தி தரும். வியாபார ஸ்தலத்திற்காக புதியதாக இடம் வாங்குவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு செயல்திறமை கூடும். பயணங்களும் செல்ல நேரிடலாம். பணி நிமித்தமாக அலைய வேண்டியதிருக்கும். யாருக்கும் வாக்கு கொடுக்கும் முன் ஆலோசனைகள் செய்து கொள்ளவும்.

ரோகிணி:

இந்த மாதம் குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். சுற்றத்தினர் வருகை இருக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு கூடும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். குடும்ப வருமானம் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் நண்பர்கள் மூலம் ஆதாயம் பெறுவீர்கள். தொழில், வியாபாரம் முன்னேற்றப் பாதையில் செல்லும், சிறப்பாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கை ஏற்படும். எதிர்பார்த்த பண உதவியும் கிடைக்க பெறும்.

மிருக சிரீஷம் 1, 2, பாதம்:

இந்த மாதம் அறிவுத்திறன் அதிகரிக்கும். இனிமையான வார்த்தைகளால் சிக்கலான காரியத்தை கூட எளிதாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து இருக்கும். எடுத்த முடிவை செயல்படுத்தும் முன் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசிப்பது நல்லது. எந்த ஒரு காரியத்திலும் அவசர முடிவு எடுக்க தூண்டும். வேலை தேடி கொண்டு இருப்பவர்களுக்கு உத்தியோக வாய்ப்புகள் வரும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும்.

பரிகாரம்: மல்லிகை மலரை அர்ப்பணித்து ஆண்டாளை வழிபட கடன் பிரச்சனை தீரும். செல்வநிலை உயரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 24, 25

அதிர்ஷ்ட தினங்கள்: 17, 18, 19

*******************************************************************************************************************************************************************************

மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

வித்தியாசமான மன நிலையுடன் காட்சி தரும் மிதுன ராசி அன்பர்களே இந்த மாதம் மிக அற்புதமான பலன்களைப் பெறக்கூடிய வகையில் இருக்கிறீர்கள். பணம் சம்பாதிக்கும் திறமை அதிகமாகும். தடை பட்டு வந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. அடுத்தவர் செயல்கள் உங்கள் கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம். அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளிடம் கனிவாக நடந்து கொள்வது நல்லது.

தொழிலில் மரியாதையும், அந்தஸ்தும் அதிகரிக்கும். கடினமான முயற்சிகள் கூட எளிமையாக செய்ய முடியும். தொழில் வியாபாரத்தில் இருந்த பண தட்டுப்பாடு நீங்கும். வசூலாக வேண்டிய கடன்பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் தொடர்பான பயணங்களினால் லாபம் கிடைக்க பெறுவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் நேர்மையாக சிறப்பாக பணிகளை செய்து மேல் அதிகாரிகளிடம் பாராட்டுக்கள் கிடைக்க பெறுவார்கள். உயர் பதவிகளும் கிடைக்க கூடும். சக பணியாளர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

பெண்களுக்கு எந்த ஒரு முடிவையும் எடுக்கும்போது ஒருமுறைக்கு பலமுறை யோசிப்பதுநல்லது. மற்றவர்களிடம் பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது நல்லது.

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற முழுமூச்சாக பாடுபடுவீர்கள். புதிய நட்பு கிடைப்பதுடன் அவர்களது ஆலோசனையும் வெற்றிக்கு உதவும். ஆனால் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

கலைத்துறையினருக்கு சகஜநிலை காணப்படும். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். சக கலைஞர்களுடன் இருந்து வந்த இடைவெளி குறையும். ஆன்மீக பயணம் செல்லும் நிலை உருவாகும். மற்றவர்கள் ஆலோசனை கேட்டு உங்களை நாடி வருவார்கள். உங்களை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள்.

அரசியல்துறையினருக்கு மேலிடத்தில் இருப்பவர்களிடம் இருந்து மனம் நோகும்படியான வார்த்தைகள் வெளிப்படலாம். அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும். பதவிகள் பற்றிய கவலை உண்டாகும். நிதானமாக செய்யும் செயல்கள் வெற்றியை தரும்.

மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்:

இந்த மாதம் வீண் வாக்குவாதங்களால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. வீண் அலைச்சலுக்கு பிறகே எந்த ஒரு காரியமும் நடந்து முடியும். வேலை தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் தாமதமாக வந்து சேரும். எந்த பிரச்சனையும் எதிர்கொள்ளும் தைரியம் உண்டாகும். மனதை கவலை கொள்ளச் செய்த பிரச்சனைகளில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்பட்டு சாதகமான பலன் கிடைக்க பெறலாம்.

திருவாதிரை:

இந்த மாதம் மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சில திட்டங்களை ஆலோசிப்பீர்கள். குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும். எதிர்பார்த்த பணம் கிடைக்கலாம். நீண்ட நாட்களாக முயற்சி செய்த காரியங்கள் வெற்றியை தரும். பெண்களுக்கு எந்த ஒரு விவகாரத்தையும் எதிர் கொள்ளும் மன வலிமை உண்டாகும். எதிலும் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது.

புனர்பூசம் 1, 2, 3 பாதம்:

இந்த மாதம் வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். திடீர் செலவு ஏற்படும். சிலருக்கு மருத்துவ செலவு ஏற்படும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும். தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். கடன் விவகாரங்களில் கவனம் தேவை. தொழில் தொடர்பான காரியங்கள் தாமதமாக நடக்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான சிக்கல்கள் குறையும். எதிர்பார்த்த மதிப்பெண் பெற அதிக நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது நல்லது.

பரிகாரம்: பெருமாளை துளசி மாலை சாற்றி வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். காரிய அனுகூலம் ஏற்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன்

சந்திராஷ்டம தினங்கள்: 1, 26, 27, 28

அதிர்ஷ்ட தினங்கள்: 20, 21

*******************************************************************************************************************************************************************************

கடகம் (புனர் பூசம் 4ம் பாதம்,பூசம், ஆயில்யம்)

பாசத்தால் அனைவரையும் கட்டிப்போடும் கடக ராசி அன்பர்களே இந்த மாதம் நன்மைகள் கிடைக்கும். காரியதடை தாமதம் நீங்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் பலிதமாகும். வழக்கு விவகாரங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். எதிர்ப்புகள் விலகும். பொருளாதாரம் உயரும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். தாமதமான காரியங்கள் வேகம் பிடிக்கும். வீண்கவலை விலகும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும்.

குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் உங்களுக்கு மனவருத்தத்தை தருவதாக இருக்கலாம். கவனமாக கையாள்வது நல்லது. பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நன்மையை தரும். கணவன், மனைவிக்கிடையே திடீர் மனவருத்தம் அடையும்படியான சூழ்நிலை வரலாம் கவனம் தேவை.

தொழில் வியாபாரத்தில் வேகமான போக்கு காணப்படும். சரக்குகளை அனுப்பும் போதும் பாதுகாத்து வைக்கும் போதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. கிடப்பில் இருந்த கடன்கள் பைசலாகும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி புதிய பொறுப்புகள் ஏற்படலாம். மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை செய்து முடித்து அவர்களின் நன்மதிப்புக்கு ஆளாவீர்கள். பணி சார்ந்த விஷயமாக குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலை வரலாம்.

பெண்களுக்கு தேவையான உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தடைபட்ட காரியங்கள் சாதகமாக முடியும். பணவரத்து அதிகரிக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும்.

கலைத்துறையினருக்கு விருப்பங்கள் கைகூடும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். மனம் மகிழும்படியான காரியங்கள் நடக்கும். வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள். நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.

அரசியல்துறையினருக்கு எந்த ஒரு விஷயத்திலும் வேகம் காட்டினாலும் அதே நேரத்தில் அதில் உள்ள நன்மை தீமைகள் பற்றி ஆலோசித்து முடிவு எடுப்பது அவசியமாகிறது. காரிய அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்தபடி எதுவும் நடக்காமல் இழுபறியாக இருக்கும்.

புனர் பூசம் 4ம் பாதம்:

இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயந்து வேலை செய்ய வேண்டி இருக்கும். உழைப்பு அதிகரிக்கும். உங்கள் உழைப்பிற்கான அங்கீகாரம் இல்லாமல் போகலாம். குடும்பத்தில் உறவினருடன் கருத்து வேறுபாடு உண்டாகலாம். வீட்டில் உள்ள பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். ஆனாலும் கவனமுடன் நடந்து கொள்ளுங்கள். போட்டித் தேர்வுகள் சாதகமாக அமையும். சிலர் கல்வி பயில வெளியூர்க்கு செல்ல வேண்டி வரும்.

பூசம்:

இந்த மாதம் சொத்து விவகாரங்களில் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையில் இடைவெளி குறையும். பிள்ளைகள் நலனில் கவனம் செலுத்துவீர்கள். உறவினர்கள் நண்பர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். எதிர்பாராத செலவு உண்டாகும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். சுய நம்பிக்கை அதிகரிக்கும். புக்தி தெளிவு உண்டாகும். எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடிக்க தேவையான உதவிகள் கிடைக்கும்.

ஆயில்யம்:

இந்த மாதம் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடுகள் நடக்கும். திடீர் செலவுகள் ஏற்படலாம். வெளிவட்டார பழக்க வழக்கங்களை குறைத்துக் கொள்வது நல்லது. ஆயுதம், நெருப்பு இவற்றை கையாளும் போதும் வாகனங்களில் செல்லும் போதும் கவனம் தேவை. எந்த காரியத்திலும் அவசர முடிவு எடுக்காமல் இருப்பதும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நல்லது. குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகளை தலை தூக்கச் செய்யும். எனவே சாதுரியமாக பேசி எதையும் சமாளிப்பது நல்லது.

பரிகாரம்: அம்மனுக்கு ஐந்து முக தீபம் ஏற்றி பூஜித்து வணங்க துன்பங்கள் நீங்கும். காரிய வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 2, 3, 29, 30

அதிர்ஷ்ட தினங்கள்: 22, 23

*******************************************************************************************************************************************************************************

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

எந்த சூழ்நிலையையும் தனக்கு சாதகமாக்கிக் கொள்ளத் தெரிந்த சிம்ம ராசி அன்பர்களே இந்த மாதம் பலவகைகளிலும் நன்மை உண்டாகும். இழுபறியாக இருந்த சில வேலைகள் சாதகமாக நடந்து முடியும். பணவரத்து அதிகரிக்கும். தெளிவான முடிவு எடுப்பதன் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். அரசாங்கம் தொடர்பான விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும். கடினமான வேலைகள் கூட சுலபமாக முடியும்.

குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். கணவன் மனைவி இருந்த மந்த நிலை மாறும். பிள்ளைகள் விஷயத்தில் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் பலிதமாகும். உறவினர்கள் வருகை இருக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். உங்கள் சொல்லுக்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.

தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்பட்டாலும் வந்து சேர்வதில் எந்த தடைகளும் இருக்காது. எந்த ஒரு வேலையையும் அதிக முயற்சி செய்து முடிக்க வேண்டி இருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல் திறமை வெளிப்படும். சுதந்திரமாக செயல்படும் வாய்ப்பு கிடைக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும். மேலிடத்தில் இருந்து வந்த கருத்து மோதல்கள் அகலும்.

பெண்களுக்கு அடுத்தவர்களின் வேலைக்காக வீணாக அலைய நேரிடும். மனோ தைரியம் அதிகரிக்கும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.

மாணவர்களுக்கு புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்கள் மூலம் கல்வியில் முன்னேற்றம் காண உதவி கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு இழுபறி நிலை மாறி மன மகிழும்படியாக எல்லாம் நடந்து முடியும். தொழில் மந்தமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் இருக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. பணவரத்து இருக்கும். பணிகள் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம்.

அரசியல் துறையினருக்கு எதிர்பார்த்த பண உதவி கிடைக்கலாம். மேலிடத்தை அனுசரித்து செல்வது நல்லது. பணிகள் நிறைவடைய அலைய வேண்டி இருக்கும். புதிய பொறுப்புகள் சிலருக்கு கிடைக்கலாம்.

மகம்:

இந்த மாதம் திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடிப்பீர்கள். பணவரத்து தாமதப்பட்டாலும் கையில் இருப்பு இருக்கும். முக்கியமான பணிகள் தாமதமாக நடக்கும். மாணவர்களுக்கு கல்விக்கான பணிகளில் தாமதம் உண்டாகும். உழைப்பு அதிகரிக்கும். பொதுவான காரியங்களில் ஈடுபடும் போது கவனமாக இருப்பது நல்லது. வாகனங்களை பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

பூரம்:

இந்த மாதம் எதிர் பார்த்த காரிய அனுகூலம் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பிரச்சனை தீரும். கடின உழைப்பால் வளர்ச்சி அடைவீர்கள். பேச்சை கட்டுப்படுத்திக் கொள்வது நன்மை தரும். எதைப் பேசினாலும் வார்த்தைகளில் நிதானத்தைக் கடைபிடிப்பது நன்மை தரும். நீங்கள் அமைதியாக இருந்தாலும் வீண் சண்டைகள் மற்றும் வீணான குழப்பங்கள் உங்களைத் தேடி வர வாய்ப்பு இருக்கிறது.

உத்திரம் 1ம் பாதம்:

இந்த மாதம் ராஜாங்க ரீதியிலான காரியங்கள் கை கொடுக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். பொருள் சேர்க்கை உண்டாகும். சிற்றின்ப செலவுகள் அதிகரிக்கும். நண்பர்களுக்கு உதவிகள் செய்வீர்கள். பணவரத்து திருப்திதரும். வீண்பழி ஏற்படலாம். தகுந்த வரன் கிடைத்து திருமணம ஏற்பாடு இனிதே நடந்தேறும். வீடு, நிலம் மற்றும் வாகனங்கள் வாங்கலாம்.

பரிகாரம்: தினமும் பைரவரை வணங்க எல்லா பிரச்சனைகளும் சுமூகமாக முடியும். குடும்பத்தில் அமைதி ஏற்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள்

சந்திராஷ்டம தினங்கள்: 4, 5, 6

அதிர்ஷ்ட தினங்கள்: 24, 25

*******************************************************************************************************************************************************************************

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

இனிமையான வார்த்தைகளால அனைவரையும் கவர்ந்து இழுக்கும் கன்னி ராசி அன்பர்களே இந்த மாதம் பொறுமையுடன் இருந்து காரியங்களை சாதிப்பதில் வல்லவர். இந்த மாதம் நல்ல பலன்களைப் பெற இயலும். எதிலும் முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். உழைப்பு வீணாகும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திடீர் செலவு உண்டாகும். அடுத்தவருக்கு எவ்வளவு நல்லது செய்தாலும் அது எடுபடாமல் போகலாம். அதே நேரத்தில் பொருள் வரத்து அதிகரிக்கும். வாகனம், பூமி மூலம் லாபம் கிடைக்கும்.

குடும்பத்தில் இருந்த பிரச்சனை குறையும். கணவன், மனைவி இருவரும் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து திருப்தியடைவீர்கள். அடுத்தவர்களுக்காக எந்த பொறுப்பையும் ஏற்காமல் இருப்பது நல்லது. நண்பர்கள் உறவினர்களிடம் இருந்து வந்த பிரச்சனைகள் அகலும்.

தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத தடங்கல்கள் வரலாம். பணவரத்து இருந்தாலும் தேவை அதிகரிக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்க பெறுவீர்கள். அவர்களால் நன்மையும் உண்டாகும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் பணியாற்றுவதால் உடல் சோர்வடைய நேரலாம். வேலை செய்யும் இடத்திலும் மேல் அதிகாரிகளிடமும் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பார்த்த பணி உயர்வு கிட்டும்.

பெண்களுக்கு சேமிக்கும் பழக்கம் அதிகரிக்கும். மற்றவர்களால் பிரயோஜனம் உண்டாகும்.

மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் நீங்கி முன்னேற்றம் காண்பீர்கள். பெற்றோர், ஆசிரியர் பாராட்டும் கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு திறமைக்கேற்ற கதாபாத்திரங்கள் கிடைக்கப்பெற்று ரசிகர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். இதுவரை நிலுவையிலிருந்த பணத்தொகைகளும் கைக்கு கிடைக்கும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வு யாவும் சிறப்பாக அமையும்.

அரசியல் துறையினருக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கூடுதல் கவனத்துடன் செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எல்லாவகையிலும் நல்லதே நடக்கும். அனுகூலமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும்.

உத்திரம் 2, 3, 4 பாதம்:

இந்த மாதம் தொழில் வியாபாரம் மெத்தனமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவது ஆறுதல் தரும். வியாபாரம் தொடர்பான காரியங்களில் கூடுதல் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம். உடல் ஆரோக்கியம் மனதில் உற்சாகத்தை தரும். கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகளுக்காக பாடுபடுவீர்கள்.

அஸ்தம்:

இந்த மாதம் அலுவலகத்தில் யாரைப் பற்றியும் புறம் கூறாமல் இருப்பது நன்மை தரும். உங்களுடைய பொருட்களை கவனமாக வைத்துக் கொள்வது அவசியம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். நல்ல பெயர் வாங்குவீர்கள். மூலதனத்திற்குத் தேவையான பணம் வந்து குவியும். எதிரிகள் வகையில் சற்று கவனமுடன் செயல்படவும். அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளவும்.

சித்திரை 1, 2, பாதம்:

இந்த மாதம் தட்டி கொடுத்து எதையும் செய்ய சொல்வது நல்லது. உங்கள் கருத்துகளுக்கு மதிப்பில்லாமல் போகலாம். பணவரத்து திருப்தி தரும். வீண் பேச்சை குறைப்பது நன்மை தரும். வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி சென்று விடுவது நல்லது. மற்றவர்களுக்கு உதவும் போது கவனமாக இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் சற்று கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். போட்டிகள் நீங்கும். வரவேண்டிய பழைய பாக்கிகள் வசூலாகும்.

பரிகாரம்: ஐயப்பனை வணங்கி வர எல்லா பிரச்சனைகளும் தீரும். மன நிம்மதி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 7, 8

அதிர்ஷ்ட தினங்கள்: 1, 26, 27, 28

*******************************************************************************************************************************************************************************

துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)

சிக்கலான சமயத்திலும் துரிதமாக முடிவெடுக்கத் தெரிந்த துலா ராசி அன்பர்களே இந்த மாதம் பலவகைகளிலும் நன்மை உண்டாகும். இழுபறியாக இருந்த சில வேலைகள் சாதகமாக நடந்து முடியும். பணவரத்து அதிகரிக்கும். தெளிவான முடிவு எடுப்பதன் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். அரசாங்கம் தொடர்பான விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும். கடினமான வேலைகள் கூட சுலபமாக முடியும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியான சுபகாரியங்கள் கொண்டாட்டங்கள் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி கிடைக்க பெறுவீர்கள். பெரியோர் மூலம் அனுகூலம் உண்டாகும். சகோதரர்களிடம் கவனமாக பேசுவது நல்லது. உறவினர்கள் ஆதரவு இருக்கும்.

தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த பின்தங்கிய நிலை மாறும். எதிர்பார்த்த ஆர்டர்கள் வந்து சேரும். வியாபார போட்டிகள் தடை தாமதங்கள் நீங்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற வேகத்தில் பணிபுரிவார்கள். சிலருக்கு புதிய பதவி அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்க பெறுவார்கள்.

பெண்களுக்கு வீண் பேச்சுக்களை குறைத்து செயலில் கவனம் செலுத்துவது நல்லது. பணவரத்து திருப்திதரும். கோபத்தை குறைப்பது நல்லது.

மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் முடிவு எடுக்கும் போது தீர ஆலோசித்து செயல்படுவது நல்லது. புதிய முயற்சிகளில் தாமதம் ஏற்படலாம்.

கலைத்துறையினருக்கு பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இலக்கியத் துறைகளில் உள்ளவர்களுக்கு புகழ் கிடைக்கும். சக கலைஞர்கள் மூலம் சில தொந்தரவுகள் நேரிடலாம். கலைப் பொருட்கள் விற்பனைத் தொழில் செய்வோருக்கு லாபம் அதிகரிக்கும்.

அரசியல் துறையினருக்கு அதீத கவனத்துடன் செயல்படுவது உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் வெற்றியைத் தேடித்தரும். எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும். சிலருக்கு நெடுநாளைய ஆசைகள் நிறைவேறும். லட்சியங்கள் கைகூடும். மனதிற்கு நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும். நிதானம் தேவை.

சித்திரை 3, 4 பாதம்:

இந்த மாதம் மனதில் மகிழ்ச்சி உண்டாகும்படியான நிகழ்ச்சிகள் நடக்கும். கடின உழைப்புக்குபின் முன்னேற்றம் அடைவார்கள். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் வந்து சேரும். மேலிடத்தை திருப்தி செய்ய கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். திறமையான செயல்கள் மூலம் பாராட்டு கிடைக்கும். எதிர்பாராத சம்பவங்களால் இழுபறியாக நின்ற காரியங்கள் நல்ல முடிவுக்கு வரும்.

சுவாதி:

இந்த மாதம் மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய அதிக கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்லது. போட்டிகள் விலகும். மனோ தைரியம் அதிகரிக்கும். எதிர்ப்புகளையும், தடைகளையும் எதிர்த்து வீர நடை போடுவீர்கள். பணவரத்து அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும் எதை பற்றியும் கவலைப்படாமல் நினைத்த காரியத்தை செய்வதில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.

விசாகம் 1, 2, 3ம் பாதம்:

இந்த மாதம் மனதில் உற்சாகம் பிறக்கும். தடைபட்ட காரியங்களில் தடை நீங்கி சாதகமான பலன்தரும். எதிலும் தயக்கம் காட்டமாட்டீர்கள். நீண்ட நாட்களாக தடைபட்ட காரியங்கள் வேகமெடுக்கும். கண்மூடித்தனமாக எதிலும் ஈடுபடாமல் யோசித்து செய்வது நல்லது. கலைத்துறைகளைச் சார்ந்த துறைகளில் ஈடுபட்டு இருப்பவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். பிறமொழி பேசுபவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

பரிகாரம்: மாரியம்மனை வணங்கி வர எதிர்ப்புகள் விலகும். காரிய வெற்றி உண்டாகும். மனமகிழ்ச்சி கூடும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 9, 10

அதிர்ஷ்ட தினங்கள்: 2, 3, 29, 30

*******************************************************************************************************************************************************************************

விருச்சிகம்

(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

வாக்கு வன்மையால் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விருச்சிக ராசி அன்பர்களே இந்த மாதம் நல்ல பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். முயற்சிகள் வெற்றி பெறும். எதையும் ஆராய்ந்து முடிவுகளை எடுப்பது நல்லது. வேகத்தை குறைத்து விவேகமுடன் செயல்படுவது நன்மை தரும். எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் கவனத்துடன் வைப்பது நல்லது. பணவரத்து அதிகமாகும். பெரியோர்களிடம் பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது நல்லது.

குடும்பத்தை விட்டு வெளியே சென்று தங்க நேரிடலாம். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும். விருந்தினர்கள் வருகை இருக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். திருமண முயற்சிகள் சாதகமான பலன் தரும். பிள்ளைகளுடன் சந்தோஷமாக பொழுதை கழிப்பீர்கள்.

தொழில் வியாபாரத்தில் திடீர் போட்டி இருக்கும். வீண் வார்த்தைகளை பேசுவதை தவிர்ப்பது நல்லது. வாடிக்கையாளர்கள் மன நிறைவடைவதற்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

உத்தியோகத்தில் கூடுதல் பணிச்சுமையை ஏற்க வேண்டி இருக்கும். மேலதிகாரிகளிடம் உங்களது கருத்துக்களை தெரிவிக்கும்போது கவனமாக பேசுவது நல்லது. பணி நிமித்தமாக பயணங்கள் ஏற்படலாம்.

பெண்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை செய்து முடிப்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. பணவரத்து திருப்திகரமாக இருக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் காண்பீர்கள். மற்றவர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.

கலைத்துறையினருக்கு உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள். புதிய பதவி அல்லது பொறுப்புகள் கிடைக்கும். சாதகமாக பயன்படுத்தி முன்னேறுவீர்கள். விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும்.

அரசியல் துறையினருக்கு பெயர், புகழ், கௌரவம் யாவும் தேடி வரும். மக்களின் ஆதரவைப் பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. உங்கள் பேச்சிற்கு மதிப்பும், மரியாதையும் உயரும்.

விசாகம் 4ம் பாதம்:

இந்த மாதம் எந்த ஒரு விஷயத்தையும் தக்க ஆலோசனையுடன் செய்வது நன்மையைத் தரும். தொழில் வியாபாரம் தொய்வு நீங்கி சூடுபிடிக்கும். வாடிக்கையாளர்களின் வரவு கண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். நிதி பிரச்சனை நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதையும் குழப்பத்துடனேயே செய்ய நேரிடும். பெண்களுக்கு இழுபறியாக இருந்த பிரச்சனைகள் சாதகமான முடிவு பெறும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும்.

அனுஷம்:

இந்த மாதம் சக ஊழியர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி நிம்மதியும் சந்தோஷமும் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல் சந்தோஷத்தை தரும். பயணங்கள் செல்லும் போது கவனம் தேவை. மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் பெற அதிகமாக படிக்க வேண்டி இருக்கும். கல்வி தொடர்பான பிரச்சனைகள் குறையும். தேவையான உதவி கிடைக்கும்.

கேட்டை:

இந்த மாதம் சகோதரர்களிடம் கருத்து வேற்றுமை உண்டாகலாம். எதிலும் தயக்கம் காட்டாமல் துணிச்சலாக காரியங்களை செய்து முடிப்பீர்கள். மனதில் துணிச்சல் ஏற்படும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். முக்கியமான வேலைகளில் தாமதம் உண்டாகும். வீண் பிரச்சனைகளை கண்டால் ஒதுங்கி சென்று விடுவது நல்லது. சிலர் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் திண்டாட வேண்டிய நிலை ஏற்படலாம். உங்கள் குழந்தைகளால் சிற்சில பிரச்சனைகள் வரலாம்.

பரிகாரம்: குலதெய்வத்தை வணங்க எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 11, 12,

அதிர்ஷ்ட தினங்கள்: 4,5, 6

*******************************************************************************************************************************************************************************

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

தன் மனதுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதன் படி காரியங்களை நடத்தும் தனுசு ராசி அன்பர்களே இந்த மாதம் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. திடீரென்று கோபம் வரும். ஏதாவது ஒரு வகையில் அடுத்தவரிடம் வீண் பேச்சு கேட்க நேரலாம் கவனம் தேவை. மற்றவர்கள் செய்கைகளால் மனவருத்தம் உண்டாகலாம். நீண்டநாள் இழுபறியாக இருந்து வந்த பிரச்சனை முடிவுக்கு வரும்.

குடும்பத்தில் ஏதாவது வேண்டாத பிரச்சனை தலை தூக்கலாம். உறவினர்கள் நண்பர்கள் பிள்ளைகள் என்று யாரிடமும் வீண் சண்டையை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். அனுசரித்து செல்வது நல்லது. தாய் வழி உறவினர்களுடன் சஞ்சலம் ஏற்படலாம். சொத்து சார்ந்த விஷயங்கள் அனுகூலம் தரும்.

தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். வாக்கு வன்மையால் புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்க பெறுவீர்கள். தடைபட்ட ஆர்டர்கள் வந்து சேரும். அரசாங்க ரீதியில் இருந்து வந்த தேக்க நிலை மாறும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. செய்யும் வேலை பற்றி மனதில் திருப்தியற்ற எண்ணம் உண்டாகும்.

பெண்களுக்கு வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பொருள் வரத்து கூடும். பயணம் செல்ல நேரலாம்.

மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை விலகும். விளையாட்டு போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். விடுமுறையில் மகிழ்ச்சியான பொழுது போக்கில் ஈடுபடுவீர்கள்.

கலைத்துறையினருக்கு தொழில் வாக்கு வன்மையால் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகலாம். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பணிகள் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம். புத்தி சாதூரியத்தால் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

அரசியல் துறையினருக்கு தங்கள் இருப்பை மேலிடத்தில் சொல்வதற்கு ஏற்ற காலகட்டம். புதிய யுக்திகளைக் கையாண்டு அசத்துவீர்கள். முன்னேற்றம் கிடைக்கும். தாங்கள் மேன்மையடைந்திட புதிய வாய்ப்புகள் வந்து சேரும். வெளிநாடு வாய்ப்புகள் வரலாம்.

மூலம்:

இந்த மாதம் முன்னேற்றம் காண கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். எதிர்பார்த்த சில தகவல்கள் தாமதமாக வரும். உடன் இருப்பவர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. ஒரு சில காரியங்களில் அவசரமாக முடிவு எடுப்பதை தவிர்ப்பது நன்மை தரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் வரும் கஷ்டங்களை தாங்கிக் கொள்ளுங்கள். முன்னேற தேவையான உதவிகள் கிடைக்கும்.

பூராடம்:

இந்த மாதம் முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர் மூலம் உதவியும் கிடைக்கும். வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்க பாடுபட்டு படிப்பீர்கள். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். உங்களது எண்ணப்படியே எதையும் செய்து முடிக்கும் சூழ்நிலை ஏற்படும். மற்றவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் நாட்டம் செல்லும். கவுரவம் அந்தஸ்து உயரும்.

உத்திராடம் 1ம் பாதம்:

இந்த மாதம் வீண் பிரச்சனையால் மனக்குழப்பம் ஏற்படலாம். பயணங்களில் தடங்கல் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடைகள் ஏற்படலாம். வழக்குகள் சம்பந்தமான விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கை அவசியம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது திறமையால் அலுவலக பணியை சிறப்பாக செய்வார்கள். புதிய தொடர்புகள் மகிழ்ச்சியை தருவதாக இருக்கும்.

பரிகாரம்: சித்தர்களை வணங்கி வர கஷ்டங்கள் தீரும். வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பீர்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்

சந்திராஷ்டம தினங்கள்: 13, 14

அதிர்ஷ்ட தினங்கள்: 7, 8

*******************************************************************************************************************************************************************************

மகரம்

(உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

இன்பமான சூழ்நிலையையே அதிகம் விரும்பும் மகர ராசியினரே இந்த மாதம் எடுத்து கொண்ட காரியங்களில் தாமதமான போக்கு காணப்படும். உங்கள் வார்த்தைக்கு வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். உங்கள் பேச்சு வெறும் பேச்சு போல் மற்றவர்கள் நினைப்பார்கள். அதனால் அளவுடன் பேசுவது நல்லது. உங்களது உடமைகளை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் குறையும். குழந்தைகளின் எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள். விருந்தினர் வருகை இருக்கும்.

தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் நீங்கும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். வாடிக்கையாளர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பது நன்மை தரும். வியாபார ஸ்தலத்திற்காக புதியதாக இடம் வாங்குவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு மேல் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவார்கள். பிடித்தமான இடத்திற்கு வேலை மாற்றம் உண்டாகும். சக ஊழியர்கள் நட்புடன் பழகுவார்கள்.

பெண்களுக்கு மனக்கவலை உண்டாகும். வீண் அலைச்சலும் அதனால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாமலும் போகலாம். எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது.

மாணவர்களுக்கு உடல் சோர்வு உண்டாகலாம். வீண் அலைச்சலை தவிர்த்து படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது.

கலைத்துறையினருக்கு கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. பயணங்கள் நெல்ல நேரிடலாம். மனதிருப்தியுடன் செயலாற்றுவீர்கள். புத்திசாதூரியம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் மதிப்பு கூடும்.

அரசியல் துறையினருக்கு பாராட்டு கிடைக்கும். மனகவலை ஏற்படும். உடல்சோர்வு உண்டாகும். ஆன்மீக நாட்டமும், மன தைரியமும் உங்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும். தொழில் முன்னேற்றம் காண புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்க கூடிய சூழ்நிலை காணப்படும்.

உத்திராடம் 2, 3, 4 பாதம்:

இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வேகம் இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் இருந்த தடை தாமதம் நீங்கும். போட்டிகள் சமாளிக்கும் திறமை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணி சுமை ஏற்படும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். மனைவி குழந்தைகளுடன் சந்தோஷமாக பொழுதை கழிப்பீர்கள். ஆன்மீக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.

திருவோணம்:

இந்த மாதம் சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளிடம் இருந்து வந்த மனக்கசப்பு மாறும். குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும். உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த மனகிலேசங்கள் மறைந்து ஒற்றுமை ஓங்கும். பிள்ளைகளிடம் பாசம் அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வாகன லாபம் ஏற்படும். தகப்பனாருடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வெளிதொடர்புகளில் எச்சரிக்கை தேவை.

அவிட்டம் 1,2 பாதம்:

இந்த மாதம் பெற்றோகள் உறவினர்களின் அரவணைப்பு அதிகமாகும். பயணங்களில் எதிர்பாராத தடங்கல் உண்டாகலாம். யோசித்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன்தரும். புதிய ஆர்டர் விஷயமாக வெளியூர் செல்ல நேரிடும். பழைய பாக்கிகள் வசூலிப்பதில் வேகம் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமான உழைப்பினை கொடுக்க வேண்டி வரலாம். வேலையில் கவனமுடன் செல்வது நல்லது.

பரிகாரம்: சனி பகவானை சனிக்கிழமையில் நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபடுவது கவலையை போக்கும். வீண் அலைச்சல் குறையும். வேலைபளு நீங்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்

சந்திராஷ்டம தினங்கள்: 15, 16

அதிர்ஷ்ட தினங்கள்: 9, 10

*******************************************************************************************************************************************************************************

கும்பம்

(அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்)

விநோதமான காரியங்களைக் கூட சுலபமாக யோசிக்கும் திறனுடைய கும்பராசியினரே இந்த மாதம் எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். புத்திசாதூரியத்தால் எதையும் செய்து முடிக்க முடியும். அனுபவபூர்வமான அறிவுத்திறன் கை கொடுக்கும். பணவரத்து தாமதப்படும். மற்றவர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மைதரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும்.

குடும்பத்தில் அமைதி குறைவது போல் தோன்றும் சகோதரர்கள் வழியில் ஏதாவது பிரச்சனை தலைதூக்கலாம் கவனம் தேவை. பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். விருப்பமான நபரை சந்தித்து மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையில் அன்பு அதிகரிக்கும்.

தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். பல தடைகளை தாண்டி செயல்படுவீர்கள். வேகம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக கிடப்பில் போட்டிருந்த காரியங்களை செவ்வனே செய்வீர்கள். எதிர்பார்த்த லாபம் வரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஆர்டர்கள் கைக்கு வந்து சேரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை குறையும். வர வேண்டிய பணம் வந்து சேரும்.

பெண்களுக்கு அனுபவபூர்வமான அறிவைக்கொண்டு எதையும் சாதிப்பீர்கள். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மை தரும்.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக செல்வது நல்லது.

கலைத்துறையினருக்கு ஒப்பந்தங்கள் எடுப்பதில் கவனம் தேவை. லாபம் உண்டாகும். கடின உழைப்பு உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். சிறு சிக்கல்கள் ஏற்பட்டு மறையும். கவனத்துடன் செயல்பட்டால் சிக்கல்களைத் தவரிக்கலாம். சின்னச் சின்ன செலவுகளை சந்திக்க நேரிடலாம். உழைப்பிற்கான ஊதியம் சற்று குறைவாக கிடைக்கலாம். மன தைரியத்தால் வெற்றி காண்பீர்கள்.

அரசியல் துறையினருக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். உற்சாகமாக எதையும் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். விருந்து கேளிக்கைகளில் பங்கு கொள்வீர்கள். கடன் பிரச்சனை குறையும். வீண் அலைச்சல் வீண் பயம் குறையும். அடுத்தவர் செய்யும் இடையூறுகளையும் உங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் சாமர்த்தியத்தைப் பெறுவீர்கள்.

அவிட்டம் 3, 4 பாதம்:

இந்த மாதம் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட நினைப்பவர்கள் அதற்கான ஆலோசனைகளில் ஈடுபடுவது நல்லது. வேலையாக முக்கிய நபர்களை சந்திக்க வேண்டி இருக்கும். கொடுத்த கடனை திருப்பி வாங்க முயல்வீர்கள். வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனமாக பேசுவது நல்லது. தாய்மாமனிடம் கருத்து மோதல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

சதயம்:

இந்த மாதம் நண்பர்களிடம் முக்கிய விஷயங்களை ஆலோசனை செய்வதையும், அடுத்தவர் பற்றி பேசுவதையும் தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைப்பதில் தடை ஏற்படலாம். கவனமாக படிப்பது நல்லது. மனகஷ்டம் நீங்கும். எல்லா நன்மைகளும் உண்டாகும். பெண்களுக்கு எண்ணப்படி காரியங்களை செய்து முடிக்க சூழ்நிலை ஏற்படும். செலவுகளை குறைக்க திட்டமிடுவது நல்லது. கவுரவம் உயரும்.

பூரட்டாதி 1, 2, 3 பாதம்:

இந்த மாதம் எதிலும் முன்னேற்றம் காணப்படும். விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர். முக்கிய நபரின் அறிமுகமும், உதவியும் கிடைக்கும். நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். மரியாதை கூடும். திட்டமிட்ட காரியங்கள் நன்றாக நடந்து முடியும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்தபடி சிறப்பாக நடக்கும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை கூடும். துணிச்சலாக எதிலும் ஈடுபடுவீர்கள். வீண் செலவுகள் உண்டாகும்.

பரிகாரம்: பெருமாளை தரிசித்து வணங்கி வர எதிர்பார்த்த காரிய அனுகூலம் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் சீர்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்

சந்திராஷ்டம தினங்கள்: 17, 18, 19

அதிர்ஷ்ட தினங்கள்: 11, 12

*******************************************************************************************************************************************************************************

மீனம்

(பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

வீண் வாக்கு வாதங்களை அறவே விரும்பாத மீன ராசியினரே இந்த மாதம் விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். பயணங்கள் பல இருந்தாலும் அதன் மூலம் நன்மைகளைப் பெறுவீர்கள். சுபச்செலவு அதிகரிக்கும். சகோதரர்கள் மூலம் நன்மை உண்டாகும். மனோதைரியம் கூடும். புதிய நட்பு கிடைக்கும். சமூகத்தில் உயர்ந்தவர்களின் நட்பும் அதம் மூலம் ஆதாயமும் கிடைக்கப் பெறுவீர்கள்.

குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். எல்லா வகையிலும் நன்மை ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கி மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். பிள்ளைகள் நீங்கள் கூறியதை கேட்டு அதன்படி நடப்பது ஆறுதலை தரும். நண்பர்கள் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சுமூகமாக நடந்து முடியும்.

தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். பணியாட்கள் மூலம் நன்மை ஏற்படும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களிடம் நன் மதிப்பை பெறுவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதை பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றுவார்கள். வேலை பார்க்கும் இடத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். மேலதிகாரிகளுடன் இணக்கமான சூழ்நிலை நிலவும்.

பெண்களுக்கு எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். தடைகள் விலகும். பணவரத்து திருப்திதரும்.

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றிபெற தடைகளை தாண்டி படிக்க வேண்டி இருக்கும். பெரியோரின் ஆலோசனைபடி செயல்படுவது நல்லது.

கலைத்துறையினருக்கு ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். மனோ தைரியம் அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும். தொழில் திருப்திகரமாக நடக்கும். தொழில் தொடர்பான விஷயங்கள் அனுகூலமாக நடக்கும். முன்னேற்றம் காண்பார்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.

அரசியல் துறையினருக்கு சந்தோஷமான நிலை காணப்படும். மேலிடத்தில் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

பூரட்டாதி 4ம் பாதம்:

இந்த மாதம் பணவரத்தும் அதிகரிக்கும். பழைய கடன்களை திருப்பி செலுத்தக் கூடிய நிலை உருவாகும். நீண்ட நாட்களாக இருந்து வந்த ராஜாங்க ரீதியிலான சிரமங்களிலிருந்து விடுபடுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் நிலை மேம்படும். அரசாங்க அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் தங்களது தொழில் விரிவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

உத்திரட்டாதி:

இந்த மாதம் வேடிக்கை வினோத நிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் சென்று கலந்து கொள்ள நேரிடும். சிலருக்கு திருமணம் கைகூடும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் ஏற்படும். பிள்ளைகளால் நன்மை கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருளை வாங்கி மகிழ்வீர்கள். வாகனத்தை ஓட்டும் போது கவனம் தேவை. தேவையான பண உதவியும் கிடைக்க பெறுவீர்கள். ஆனால் போட்டிகள் பற்றிய கவலைகள் தோன்றும். சமாளிக்க முயல்வீர்கள்.

ரேவதி:

இந்த மாதம் எதிர்பார்த்த தகவல்கள் தாமதமாக வரும். கூட இருப்பவர்களிடம் எந்த விஷயத்தையும் சொல்லும் போது கவனம் தேவை. பொருளாதாரம் உயரும். எதிர்ப்புகள் விலகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் தீரும். பல வகையான யோகங்கள் ஏற்படும். மன குழப்பம் நீங்கும். மாணவர்களுக்கு பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களை அவ்வப்போது போக்கிக் கொள்வது நல்லது. திட்டமிட்டு செயலாற்றுவது முனனேற்றத்திற்கு உதவும்.

பரிகாரம்: விநாயக பெருமானை தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும். மனகஷ்டம் தீரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 20, 21

அதிர்ஷ்ட தினங்கள்: 13, 14

*******************************************************************************************************************************************************************************

மாத பலன்

உங்கள் ராசிக்கான 2019 அக்டோபர் மாத பலன்கள்!

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction

மேஷம் (அஸ்வினி, பரணி,  கார்த்திகை 1ம் பாதம்)

கிரகநிலை:

தைரிய ஸ்தானத்தில் ராஹூ –   ரண, ருண ஸ்தானத்தில்  சூர்யன்,  சுக்ரன், செவ்வாய் –  களத்திர ஸ்தானத்தில் புதன், சந்திரன்  –  அஷ்டம ஸ்தானத்தில் குரு – பாக்கிய ஸ்தானத்தில் சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றங்கள்:

05-10-19 அன்று மாலை06.20 மணிக்கு  சுக்கிர பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

18-10-19 அன்று காலை 10:44 மணிக்கு சூரிய பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

29-10-19 அன்று காலை 3.49 மணிக்கு குரு பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

29-10-19 அன்று இரவு 7.22 மணிக்கு சுக்கிர பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

தீவிரமாக முயற்சி செய்து காரியத்தை நடத்தும் மேஷ ராசியினரே, இந்த மாதம் முயற்சிகள் அனைத்தும் வேகம் பெறும்.  எதையும்  சரியாக கணித்துச் சொல்வதில் வல்லவராக இருப்பீர்கள். பணவரத்து உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும். சேமிப்பும் அதிகமாகும். மற்றவர்களுக்காக உதவி செய்யும் போது  அவர்களின் தேவை அறிந்து செய்வது நல்லது. உடல் சோர்வும் ஏற்படலாம். கவனம் தேவை.

குடும்பத்தில் இதுவரை இருந்த கருத்து வேறுபாடுகள் மாறும். உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும். கணவன் – மனைவி இடையே இருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்க பெறுவீர்கள். மனதில் மகிழ்ச்சி உண்டாகும். உடல்நலத்தைப் பொறுத்தவரை மூட்டு சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம். உடற்பயிற்சியால் அதனை தவிர்க்கலாம். கவனம் தேவை.

தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். பணவரத்து எதிர்பார்த்த அளவு கிடைத்து தேவை பூர்த்தியாகும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் கண்முன் தோன்றும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு குறைவால் மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். சக ஊழியர்கள் ஆதரவுடன் எடுத்துக் கொண்ட காரியங்கள் சுமூகமாக முடியும்.

கலைத்துறையினருக்கு வாக்கு வன்மையால் சில வாய்ப்புகள் கிடைக்கும். பழைய பாக்கிகள் வசூலாகலாம். துறையில் உயர்ந்தவர்களிடம் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பணிகள் தொடர்பான பயணங்கள்  செல்ல நேரலாம். புத்தி சாதூரியத்தால் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

அரசியல் துறையினர் எடுக்கக் கூடிய ஒப்பந்தகளை நன்றாக ஆராய்ந்து முடிவுக்கு வரவேண்டும். வெளிநாட்டு ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். லாபம் பெருகும். மேலிடத்தின் கனிவான பார்வை கிடைக்கப் பெறுவீர்கள்.

பெண்களுக்கு காரியங்களில் முன்னேற்றம் இருக்கும். மற்றவர்களிடம் தேவையில்லாத வாக்கு வாதத்தில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது.

மாணவர்களுக்கு பாடங்கள் படிப்பதில் மெத்தனம் காணப்படும். கல்வியில் வேகம் காட்டுவது வெற்றிக்கு நல்லது.

அஸ்வினி:

இந்த மாதம் குழந்தைகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். மாற்று கருத்துக்களை மற்றவர்களிடம் கூறாமல் இருப்பது நன்மை தரும். மாணவர்கள் எதையும் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசித்து செய்வது நன்மை தரும். கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். குடும்ப விஷயங்களில் சரியான முடிவுக்கு வர முடியாத தடுமாற்றம் ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். உறவினர்களுடன் பேசும்போது கவனமாக பேசுவது நல்லது.

பரணி:

இந்த மாதம் புதிய முயற்சிகளை தள்ளி போடுவதும் கவனமாக காரியங்களை செய்வதும் நல்லது. மன குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும். வீண் அலைச்சல் குறையும். சிக்கல்கள் தீரும். எண்ணிய காரியம் கைகூடும் குறிக்கோள் நிறைவேறும். குடும்ப உறவினர்களால் வீண் அலைச்சல் உண்டாகலாம் கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக தங்களது வேலைகளை செய்வது நல்லது.

கார்த்திகை 1ம் பாதம்:

இந்த மாதம் சமூகத்தில் அந்தஸ்து உண்டாகும்.  தொழில் வியாபாரத்தில் மாற்றம் செய்ய எண்ணுவீர்கள். சிலர் புதிய தொழில் தொடங்க முற்படுவார்கள். கவனமாக செயல்படுவது நல்லது.  வாடிக்கையாளர்களின் தேவைகளை சமாளித்து விடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் உண்டாகும். பெண்களுக்கு எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுப்பதில் தாமதம் உண்டாகும். மன வலிமை அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.

பரிகாரம்: முருகனை வணங்கி வர பல நாட்களாக இழுபறியான காரியம் வெற்றிகரமாக முடியும். மனக்கவலை நீங்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு – புதன்

சந்திராஷ்டம தினங்கள்: 3, 4, 30, 31

அதிர்ஷ்ட தினங்கள்:  24, 25

————————————————————-

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதம்,  ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)

கிரகநிலை:

குடும்ப ஸ்தானத்தில் ராஹூ –  பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன்,  சுக்ரன் , செவ்வாய்   –  ரண, ருண ஸ்தானத்தில் புதன், சந்திரன்  – களத்திர ஸ்தானத்தில் குரு – அஷ்டம ஸ்தானத்தில் சனி, கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றங்கள்:

05-10-19 அன்று மாலை06.20 மணிக்கு  சுக்கிர பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

18-10-19 அன்று காலை 10:44 மணிக்கு சூரிய பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

29-10-19 அன்று காலை 3.49 மணிக்கு குரு பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

29-10-19 அன்று இரவு 7.22 மணிக்கு சுக்கிர பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

புகழுடன் வாழ வேண்டும் என்று ஆசைப்படும் ரிஷபராசியினரே, இந்த மாதம் மனதில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு தீர்வுகள் கிடைக்கும். லாபம் கிடைக்கும். உங்கள் தீவிர முயற்சியால் எதுவும் சாதகமாக நடக்கும். நல்ல சிந்தனை உண்டாகும். அறிவுதிறன் அதிகரிக்கும். உங்களின் கருத்துக்கள் தவறாக புரிந்து கொள்ளப்படும். எனவே பேசும் போது கவனமுடன் இருக்கவும்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதைக் கழிப்பீர்கள். குடும்பத்தில் சிலர் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பிள்ளைகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நன்மை தரும். உடல்நலனில் அக்கறை செலுத்துவது நல்லது. உடல் சூட்டை சீராக வைத்துக்கொள்வதால் பெரிய நோய்களில் இருந்து தப்பிக்கலாம்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வாடிக்கையாளர் தேவை அறிந்து செயல்படுவது முன்னேற்றத்திற்கு உதவும். அரசாங்கத்தின் மூலம் உதவிகளைப் பெறுவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும். உத்தியோகம் தொடர்பான இடமாற்றம் உண்டாகலாம்.

கலைத்துறைகளைச் சார்ந்த துறைகளில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு சில சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். சக நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

அரசியல்துறையினர் கடுமையாக உழைத்து சில வேலைகளை முடிப்பீர்கள். நண்பர்களுடன் தேவையில்லாத வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். யாருக்கும் ஜாமின் கொடுக்க வேண்டாம். வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும்.

பெண்களுக்கு எதிலும் நல்லது கெட்டதை  நிர்ணயிக்கும் திறமை அதிகரிக்கும்.  அடுத்தவர் பிரச்சனை தீர்க்க உதவி செய்வதை  தவிர்ப்பது நல்லது.

மாணவர்களுக்கு  மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது நல்லது. அடுத்தவரை  நம்பி காரியங்களை செய்வதை தவிர்ப்பது நன்மை தரும்.

கார்த்திகை 2, 3, 4 பாதம்:

இந்த மாதம் குறிக்கோளை அடைவது லட்சியமாக கொண்டு செயல்படுவீர்கள். புதிய தொடர்புகள் மூலம் லாபம் கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே திடீர் வாக்குவாதங்கள் உண்டாகலாம். வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு வெளியே  தங்க நேரிடலாம். வீண்செலவுகள்  ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே  நெருக்கம் அதிகரிக்க மனம் விட்டுபேசுவது நன்மை தரும்.

ரோகிணி:

இந்த மாதம் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உஷ்ணம் சம்பந்தமான நோய் உண்டாகலாம். அடுத்தவரை பார்த்து எதையும் செய்ய தோன்றலாம். அதனை விட்டு விடுவது நல்லது. எண்ணிய காரியம் கை கூடும். வீண் அலைச்சல் குறையும் சிக்கலான பிரச்சனைகளில் நல்ல முடிவு கிடைக்கும். தொழில், வியாபாரம் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். சில நேரங்களில் முக்கிய முடிவு எடுப்பதில் தயக்கம் காட்டுவீர்கள்.

மிருக சிரீஷம் 1, 2, பாதம்:

இந்த மாதம் மாணவர்கள் கல்வியில் கூடுதல் மதிப்பெண் பெற எண்ணுங்கள். அதற்கான முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். காரியங்களில் தடை தாமதம் ஏற்பட வாய்ப்பு உண்டு. புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. எதிலும் கவனம் தேவை. வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வதன்மூலம் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையுடன் செயல்பட்டு நிர்வாகத்தினரால் பாராட்டு கிடைக்க பெறுவார்கள்.

பரிகாரம்:  வெள்ளி தோறும் அம்மனை வழிபட்டு வர எல்லா காரியங்களும் நல்லபடியாக நடக்கும் மனகவலை நீங்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன் – வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 5, 6

அதிர்ஷ்ட தினங்கள்:  26, 27

—————————————

மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

கிரகநிலை:

ராசியில்  ராஹூ –   சுக ஸ்தானத்தில்  சூர்யன்,  சுக்ரன், செவ்வாய் – பஞ்சம ஸ்தானத்தில் புதன், சந்திரன்  –  ரண, ருண ஸ்தானத்தில் குரு  – களத்திர ஸ்தானத்தில் சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றங்கள்:

05-10-19 அன்று மாலை06.20 மணிக்கு  சுக்கிர பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

18-10-19 அன்று காலை 10:44 மணிக்கு சூரிய பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

29-10-19 அன்று காலை 3.49 மணிக்கு குரு பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

29-10-19 அன்று இரவு 7.22 மணிக்கு சுக்கிர பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

விவேகத்துடன் நடந்து கொள்ள ஆசைப்படும் மிதுன ராசியினரே, இந்த மாதம் உங்களின் பணதேவை பூர்த்தியாகும். அடுத்தவர்களுக்கு உதவி செய்ய போய் எதிலும் மாட்டிக்கொள்ளாமல் இருப்பது நல்லது. பயணங்கள் மூலம் சில முக்கிய நபர்களைச் சந்திக்க வேண்டி இருக்கும்.  திடீர் மன குழப்பம் ஏற்படும். முக்கிய முடிவு எடுப்பதில் தடுமாற்றம் உண்டாகும்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் சிலருக்கு கருத்து வேற்றுமைகள் உண்டாகலாம். எனவே தேவையில்லாமல் வார்த்தைகளை விட வேண்டாம். நெருக்கடியான  நேரத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். பிள்ளைகள் விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.

தொழில் வியாபாரத்தில்  மெத்தனப் போக்கு காணப்பட்டாலும் பணவரத்து சுமாராக இருக்கும். சரக்குகளை கவனமாக கையாள்வது நல்லது.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி புதிய பொறுப்புகள் ஏற்படலாம். மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை செய்து முடித்து அவர்களின் நன்மதிப்புக்கு ஆளாவீர்கள்.

கலைத்துறையினருக்கு திறமைக்கேற்ற வேலைகள் கிடைக்கப்பெற்று ரசிகர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். இதுவரை நிலுவையிலிருந்த பணத்தொகைகளும் கைக்கு கிடைக்கும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வு யாவும் சிறப்பாக அமையும்.

அரசியல் துறையினருக்கு பெயர், புகழ், கௌரவம் யாவும் தேடி வரும். மக்களின் ஆதரவைப் பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. உங்கள் பேச்சிற்கு மதிப்பும், மரியாதையும் உயரும்.

பெண்களுக்கு  தடைபட்ட காரியங்கள் நடந்து முடியும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பணவரத்து குறையலாம்.

மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். ஆசிரியர்கள் பாராட்டு வார்கள். சக மாணவர் மத்தியில் மதிப்பு கூடும்.

.மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்:

இந்த மாதம் எதிர்ப்புகள்  விலகும். தொல்லைகள் தீரும். வீண்கவலைகள்  ஏற்பட்டு நீங்கும். கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது. பணவரத்து தாமதப்படும். வீண் ஆசைகள் உண்டாகலாம் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் வேகம் குறைந்தாலும் திருப்திகரமாக நடக்கும். உறவினர்கள் வருகை இருக்கும். அவர்களிடம் நிதானமாக பேசுவது நன்மை தரும்.  பிள்ளைகளிடம் கோபம் காட்டாமல் அன்பாக பேசுவது நல்லது. மகிழ்ச்சி உண்டாகும்.

திருவாதிரை:

இந்த மாதம் உறவினர், நண்பர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கி நெருக்கம் ஏற்படும். எதிர்பார்த்த ஆர்டர்கள், சரக்குகள்  வருவதிலும் தாமதம் உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மற்றவர்களின் ஆலோசனையை கேட்டு  செயல்படுவதை  தவிர்ப்பது நல்லது.  மேல் அதிகாரிகள் மூலம் நன்மை உண்டாகும். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத குறுக்கீடுகள் ஏற்பட்டு பின்னர் விலகும். வியாபாரம் தொடர்பான பிரச்சனைகளை கையாளும் போது கவனம் தேவை.

புனர்பூசம் 1, 2, 3 பாதம்:

இந்த மாதம் குடும்பத்தில் இருந்த  பிரச்சனைகள் குறையும். எதிர்பார்த்த காரியங்கள் நடக்கும். கணவன், மனைவிக்கிடையே  இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் கவனமும், அனுசரணையும் இருப்பது நல்லது. கூட்டு தொழில் செய்பவர்கள் கவனமுடன் செயல்படுவது நல்லது. பெண்களுக்கு வீண் அலைச்சல் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் ஏற்படும். வாகனங்கள் மூலம்  லாபம் கிடைக்கும். சரக்குகளை வெளியூர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை.

பரிகாரம்: பெருமாளை வணங்க முன் ஜென்ம பாவம் நீங்கும். குடும்பம் சுபிட்சமடையும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன் – வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 7, 8, 9

அதிர்ஷ்ட தினங்கள்:  1, 2, 28, 29

—————————————

 

கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

கிரகநிலை:

தைரிய, வீர்ய ஸ்தானத்தில்  சூர்யன்,  சுக்ரன், செவ்வாய்  – சுக ஸ்தானத்தில்  புதன், சந்திரன் –  பஞ்சம ஸ்தானத்தில் குரு – ரண ருண ஸ்தானத்தில் சனி , கேது –  அயன சயன போக ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றங்கள்:

05-10-19 அன்று மாலை06.20 மணிக்கு  சுக்கிர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

18-10-19 அன்று காலை 10:44 மணிக்கு சூரிய பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

29-10-19 அன்று காலை 3.49 மணிக்கு குரு பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

29-10-19 அன்று இரவு 7.22 மணிக்கு சுக்கிர பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

உடனிருப்பவர்களுடன் எப்போதும் கவனமாக பழகும் கடகராசியினரே, இந்த மாதம் எதிர்பார்த்த செல்வ சேர்க்கை உண்டாகும். உங்கள் வாக்குவன்மையால் சில காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். பணப் பிரச்சனை தீரும். நண்பர்கள் மூலம்  உதவிகள் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும்.

குடும்பத்தில் அன்பு அதிகரிக்கும். மனம் நெகிழும் படியான சூழல் உருவாகும். மதிப்பும், மரியாதையும் கூடும். தம்பதிகளுக்கிடையில் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் உங்களது சொல்படி நடப்பது மனதுக்கு இதம் அளிக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உடல்நலனைப் பொறுத்தவரை மறைவிடங்களில் இருந்த வந்த பிரச்சனைகளில் முன்னேற்றம் காணப்படும்.

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு பழைய பாக்கிகள் வசூல் ஆவதில் இருந்த தடைகள் விலகும். உங்களுக்குப் போட்டியாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிக நேரம் உழைக்க நேரிடும். சிலர் வீட்டை விட்டு வெளியே தங்க நேரிடலாம். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதற்குள் பல தடைகளை சந்திக்க வேண்டி இருக்கும்.

கலைத்துறையினருக்கு சக கலைஞர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சிலருக்கு புகழும் பாராட்டுகளும் கிடைக்கும். சக கலைஞர்கள் மூலம் சில வாய்ப்புகளும் கிடைக்கலாம். வேலையில் லாபம் அதிகரிக்கும்.

அரசியல்துறையினர் வாக்கு கொடுக்கும் போது கவனமாக இருப்பது நல்லது. பணவரத்து திருப்தி தரும். எதிர்பார்த்த தகவல்கள் வரும். வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும். பயணங்கள் மூலம் லாபம் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும்படியான காரியங்கள் நடக்கும்.

பெண்கள் சிக்கலான விஷயங்களை கூட சுமுகமாக முடித்து விடுவீர்கள். மனதடுமாற்றம் இல்லாமல் நிதானமாக செயல்படுவது நன்மை தரும்.

மாணவர்களுக்கு  கல்வியில் நாட்டம் உண்டாகும். போட்டிகள் நீங்கும். சக மாணவர்களுடன்  இருந்த மனகசப்பு மாறும்.

புனர் பூசம் 4ம் பாதம்:

இந்த மாதம் வீண் கவலைகள் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்கள் ஆலோசனைகளை ஏற்குமுன்  அதுபற்றி பரிசீலிப்பது நல்லது. எதிலும் நல்லது கெட்டதை யோசித்து அதன் பின்பு அந்த காரியத்தில் ஈடுபடுவது நன்மை தரும். மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தை மாற்றலாமா என்ற எண்ணம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்க பெறுவார்கள்.

பூசம்:

இந்த மாதம் வாழ்க்கையில் முன்னேற எதிர்நீச்சல் போடவும். வீண் அலைச்சல் ஏற்படும். முயற்சிகளில் வெற்றி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். மனதில் தெளிவு உண்டாகும். ஆக்கபூர்வமாக எதையும் செய்யும் எண்ணம் தோன்றும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. பணம் வரும் வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தொழில், வேலை, உத்தியோகம் ஆகியவற்றில் வெற்றி அடையலாம். சேமிப்பும் அடையலாம்.

ஆயில்யம்:

இந்த மாதம் தொழில் வியாபாரம் தொடர்பான கடிதப் போக்குவரத்தால் அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரம் விரிவுபடுத்துவது தொடர்பான திட்டங்கள் தோன்றும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணங்களால் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். குடும்ப உறுப்பினர்களுக்கு தேவையான துணி போன்றவைகளை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேற்றுமை குறையும்.

பரிகாரம்: அன்னை பரமேஸ்வரியை வணங்க பிரச்சனைகள் சுமுகமாக முடியும். மனக்குறை நீங்கும்.

அதிர்ஷ்டகிழமைகள்: திங்கள் – புதன்

சந்திராஷ்டம தினங்கள்: 10, 11

அதிர்ஷ்ட தினங்கள்:  3, 4, 30, 31

————————————————————–

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

கிரகநிலை:

குடும்ப ஸ்தானத்தில் சூர்யன்,  சுக்ரன், செவ்வாய் – தைரிய ஸ்தானத்தில்  புதன், சந்திரன்  –  சுக  ஸ்தானத்தில்  குரு –  பஞ்சம ஸ்தானத்தில்  சனி , கேது –  லாப ஸ்தானத்தில்  ராஹூ   என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றங்கள்:

05-10-19 அன்று மாலை06.20 மணிக்கு  சுக்கிர பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

18-10-19 அன்று காலை 10:44 மணிக்கு சூரிய பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

29-10-19 அன்று காலை 3.49 மணிக்கு குரு பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

29-10-19 அன்று இரவு 7.22 மணிக்கு சுக்கிர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு வாழத் துடிக்கும் சிம்மராசியினரே, இந்த மாதம் உங்களின் காரியங்களில் இருந்த தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். வெளியூர் செல்லும் போது சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டி வரும். சில நேரங்களில் நிர்பந்தத்தின் பேரில் விருப்பமில்லாத வேலை செய்ய நேரலாம்.

குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து சில காரியங்களை நடத்தி வெற்றி காண்பீர்கள். தம்பதிகளிடையே  மனம் விட்டு பேசுவதன் மூலம் நன்மைகள் உண்டாகும். பிள்ளைகளிடம் அன்புடன்  நடந்து கொள்வது நல்ல பலன் தரும். உடல் உபாதைகள் குறையும். உங்களின் நோய்களில் இருந்து விடுதலை கிடைக்கும்.

தொழில் வியாபாரம் தொடர்பான சிக்கல்கள் தீரும்.  சாதுரியமாக செயல்பட்டு முன்னேற்றம் காண்பார்கள். ஆனால் வேலை செய்பவர்களிடம் கோபப்படாமல் தட்டி கொடுத்து வேலை வாங்குவது நன்மையை தரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களின் திறைமையை கண்டறிய மேலிடம் சில சோதனைகளைத் தருவார்கள். அதில் கவனமுடன் செயல்பட்டு வெற்றியும் பெறுவீர்கள். மேல் அதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும்.

கலைத்துறையினர் பொறுமையுடன் செயல்பட வேண்டும். மறைமுக போட்டிகளால் நெருக்கடிகளைச் சந்திக்கலாம். கவனமாகச் செயல்பட்டால் லாபம் பெறலாம். அயல்நாட்டில் இருந்து நல்ல செய்திகள் வந்துசேரும்.

அரசியல் துறையினருக்கு அலைச்சல் இருக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற உங்களால் முடிந்த நடவடிக்கைகளை எடுப்பீர்கள். உங்களுக்கு எதிரானவர்கள் உங்களின் பலத்தைப் புரிந்து கொண்டு விலகி விடுவார்கள்.

பெண்கள் புத்திசாலித்தனமாக செயல்பட்டு வாழ்க்கையில் முன்னேறுவீர்கள். வாக்குறுதிகள் கொடுக்கும் போது கவனம் தேவை.  விருந்து நிகழ்ச்சியில் பங்கு பெறுவீர்கள். சந்தோஷங்கள் கிடைக்கும்.

மாணவர்களுக்கு  கல்வியில் இருந்த  தடைகள் நீங்கும். புத்தகம் நோட்டுகளை இரவல் கொடுக்கும் போது கவனம் தேவை.

மகம்:

இந்த மாதம் மேல் அதிகாரிகள் கூறுவதை மறுத்து பேசாமல் அனுசரித்து செல்வது நன்மையை தரும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். தெளிவான முடிவுகள் மூலம் நன்மை உண்டாகும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து எதையும் மனம்விட்டு பேசி செய்வது நல்லது. பெண்களுக்கு எந்த ஒரு வேலையையும் மனதிருப்தியுடன் செய்வீர்கள். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். பணவரத்து கூடும்.

பூரம்:

இந்த மாதம் பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். குடும்ப வருமானம் அதிகரிக்கும். எதிலும் ஆக்கபூர்வமாக செய்து வெற்றி காண்பீர்கள். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும். மாணவர்கள் ஆசிரியர்கள் கூறுவதை கேட்டு அதன்படி நடப்பதும், பாடங்களில் இருக்கும் சந்தேகங்களை உடனுக்குடன் கேட்டு தெரிந்து கொள்வதும் வெற்றிக்கு உதவும். தொழில், வியாபாரத்தில்  வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும்.

உத்திரம் 1ம் பாதம்:

இந்த மாதம் செல்வம் சேரும். வாழ்க்கை துணையின் ஆதரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். மனோ தைரியம் உண்டாகும். எதையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து  திருப்திகரமாக இருக்கும். அந்நிய நபர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. உங்களை பற்றி யாராவது வீண் அவதூறு பேசினால் கண்டுகொள்ளாமல் ஒதுங்கி விடுவது நல்லது. விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ருசியான உணவை உண்பீர்கள்.

பரிகாரம்: நந்தீஸ்வரரையும், சிவபெருமானையும் வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். எதிர்பார்த்த காரியங்கள் திருப்திகரமாக நடக்கும்.

அதிர்ஷ்டகிழமைகள்: வெள்ளி – சனி

சந்திராஷ்டம தினங்கள்: 12, 13, 14

அதிர்ஷ்ட தினங்கள்:  5, 6

—————————————

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

கிரகநிலை:

ராசியில் சூர்யன்,  சுக்ரன் , செவ்வாய்   – தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  புதன், சந்திரன்  – தைரிய ஸ்தானத்தில்  குரு –  சுக  ஸ்தானத்தில்  சனி , கேது – தொழில்  ஸ்தானத்தில்  ராஹூ  என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றங்கள்:

05-10-19 அன்று மாலை06.20 மணிக்கு  சுக்கிர பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

18-10-19 அன்று காலை 10:44 மணிக்கு சூரிய பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

29-10-19 அன்று காலை 3.49 மணிக்கு குரு பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

29-10-19 அன்று இரவு 7.22 மணிக்கு சுக்கிர பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

உங்களை எதிர்த்து நிற்பவருக்கும் அன்பைத் தரும் திறன் கொண்ட கன்னி ராசியினரே,  இந்த மாதம் உங்கள் கடமைகளைச் சரிவர செய்தால் நன்மைகள் அதிகமாக கிடைக்கும்.  பணவரத்து அதிகரிக்கும். அறிவாற்றலும் செயல்திறமையும் கூடும் பயணங்களும் அவற்றால் நன்மைகளும் உண்டாகும். சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபடுவீர்கள். பொருள் வரவு அதிகரிக்கும். பழைய பாக்கிகள் எளிதில் வசூலாகும்.

குடும்பத்தில் சிறு சிறு வாக்குவாதங்கள்  உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். பிள்ளைகளின் படிப்பில் அக்கறை காட்டுவது நல்லது. விலகும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். மனதில் நிம்மதி உண்டாகும். உடல்நலத்தைப் பொறுத்த வரை சிறு சிறு தொந்தரவுகள் ஏற்பட்டாலும், வெகு விரைவில் குணமாகும் சூழல் உள்ளது.

தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். நீண்ட நாட்களாக பெரிய ஆர்டர் ஒன்று கிடைக்கப் பெறுவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவார்கள். மேல் அதிகாரிகள் உங்கள் செயல்களில் குறை காணாமல் இருப்பதற்கு கவனமாக இருப்பது நல்லது.

கலைத்துறையினர் நேரம் பார்க்காமல் உழைக்க வேண்டி இருக்கும். அதற்கேற்றவாறு கூடுதல் வருமானமும் வரும். புதிய ஒப்பந்தங்கள் வரும். லாபம் பெருகும். பழைய பாக்கிகள் வசூலாகும். உடல்நிலையில் இருந்துவந்த சிரமங்கள் முற்றிலும் நீங்கும்.

அரசியல் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். எந்த முயற்சியையும் முழு முயற்சியுடன் செய்வதன் மூலம் வெற்றி காண்பீர்கள். நட்பு வட்டம் பெருகும். உதவி என்று வருபவர்களுக்கு  தயங்காமல் உதவிகளை செய்வீர்கள்.

பெண்களுக்கு நல்ல சிந்தனை ஏற்படும். மனோ பலம் அதிகரிக்கும். சாதூரியமான பேச்சால் எளிதாக எதையும் செய்து முடிப்பீர்கள்.

மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். மற்றவர் பாராட்டும் கிடைக்கும்.

உத்திரம் 2, 3, 4 பாதம்:

இந்த மாதம் எதிர்ப்புகள் விலகி உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் அதிக உழைப்பின் மூலம்  லாபம் கிடைக்க பெறுவார்கள். பொருளாதாரம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் சாதகமாக பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையையும் கூடுதல் உழைப்பின் மூலம் செய்து முடிக்க வேண்டி இருக்கும். மனதில் ஆறுதலும் நம்பிக்கையும் உண்டாகும்.

அஸ்தம்:

இந்த மாதம் குடும்பத்தில் இருந்த  பிரச்சனைகள் நீங்கும். எதிர்பார்த்த தகவல் நல்ல தகவலாக இருக்கும். கணவன், மனைவி இருவரும் எந்த ஒரு முடிவையும் நிதானமாக யோசித்து எடுப்பது நன்மை தரும். சகோதரர் வழியில் உதவியை எதிர்பார்க்கலாம். தொலைபேசித் தொடர்பு மூலமாக சிலர் புதிய தொழில் ஒப்பந்தங்களை ஏற்படுத்தி லாபம் தேடும் முயற்சியில் ஈடுபடலாம். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. சுபநிகழ்ச்சிகள் இடம்பெறும்.

சித்திரை 1, 2, பாதம்:

இந்த மாதம் எதிர்ப்புகள் நீங்கும். நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். மாணவர்கள் கூடுதலாக நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். பொருளாதாரத்தில் பிரச்சினை இருக்காது என்றாலும், வைத்தியச் செலவும் அல்லது வீண்விரயச் செலவும் தவிர்க்க முடியாததாக இருக்கும். கடந்தகாலத்தில் உங்களை விட்டுச் சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள். உறவு பலப்படும்.

பரிகாரம்: ஸ்ரீசாஸ்தாவை வணங்கி வர சகல தோஷங்களும் நிவர்த்தி ஆகும். இழந்த சொத்து மீண்டும் கைக்கு வந்து சேரும்.

அதிர்ஷ்டகிழமைகள்: செவ்வாய் – சனி

சந்திராஷ்டம தினங்கள்: 15, 16

அதிர்ஷ்ட தினங்கள்:  7, 8, 9

—————————————

துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம்  பாதம்)

கிரகநிலை:

ராசியில்  – புதன், சந்திரன்  – தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  குரு – தைரிய ஸ்தானத்தில்  சனி , கேது – பாக்கிய ஸ்தானத்தில்  ராஹூ –  அயன, சயன, போக ஸ்தானத்தில் சூர்யன்,  சுக்ரன் , செவ்வாய்   என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றங்கள்:

05-10-19 அன்று மாலை06.20 மணிக்கு  சுக்கிர பகவான் ராசிக்கு மாறுகிறார்.

18-10-19 அன்று காலை 10:44 மணிக்கு சூரிய பகவான் ராசிக்கு மாறுகிறார்.

29-10-19 அன்று காலை 3.49 மணிக்கு குரு பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

29-10-19 அன்று இரவு 7.22 மணிக்கு சுக்கிர பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

உயர்வான எண்ணங்களை மனதில் கொண்டுள்ள துலா ராசியினரே, இந்த மாதம் எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். தடைபட்ட  பணம் வந்து சேரும். பயணங்கள் உண்டாகும். அதனால் நன்மையும் ஏற்படும். உங்களது செயல்கள் மற்றவர்களை கவரும் விதத்தில் இருக்கும். ஆனால் மனதில்  ஏதாவது கவலை இருந்து கொண்டிருக்கும். மற்றவர்கள் மூலம் உதவிகள்  கிடைக்க பெறுவீர்கள்.

குடும்பத்தில் சுமூகமான சூழ்நிலை காணப்படும். தம்பதிகளிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். குழந்தைகள் மூலம் மனநிம்மதி கிடைக்கும். உறவினர்கள், நண்பர்களிடம் இருந்த மனகசப்பு மாறும்.  உடல் நலம் சீராக இருக்கும். நோயில் அவதிப்பட்டவர்களுக்கு முன்னேற்றம் இருக்கும்.

தொழில் வியாபாரத்தில் இருந்த தொல்லைகள் குறையும். வீண் செலவுகள் உண்டாகலாம். எனினும் லாபம் அதிகரிக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். இரவு பகல் பாராமல் வேலை செய்ய வேண்டி வரலாம்.

கலைத்துறையினர் வீண் சண்டைகள் மற்றும் வீணான குழப்பங்களில் தேவையில்லாமல் தலையிட வேண்டாம். உங்கள் காரியங்களில் மட்டும் எண்ணத்தைச் செலுத்தவும்.. வீடு, நிலம் மற்றும் வாகனங்கள் வாங்கலாம்.

அரசியல் துறையினருக்கு சமூகத்தில் செல்வாக்கு உயரும். மேலிடத்துடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் நீங்கும். உங்களின் தொகுதி செலவுக்குத் தேவையான பணம் கிடைக்கும். லாபத்தையும் பெறுவார்கள்.

பெண்கள் திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடித்து மன நிம்மதி அடைவீர்கள். பணவரத்து அதிகரிக்கும். மற்றவர்கள் மேல் இருந்த கோபம் குறையும். உடல்நலனில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குளிர்ச்சியான உணவுகளை தவிர்ப்பது நல்லது.

மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண  திட்டமிட்டு படித்து வெற்றி பெறுவீர்கள். மன மகிழ்ச்சி ஏற்படும் சம்பவங்கள் நிகழும்.

சித்திரை 3, 4 பாதம்:

இந்த மாதம் எதிர்ப்புகள் விலகும். பிரச்சனைகளில் சுமூக முடிவு உண்டாகும். தைரியம் கூடும். திறமையையே மூலதமான வைத்து வாழ்வில் உயர்ந்த நிலைக்கு வருவீர்கள். வாக்கு வன்மையால் எதையும் சாதகமாக செய்து முடிப்பீர்கள். திறமை அதிகரிக்கும். அவசரத்தை தவிர்ப்பது நல்லது. கடமைகளைக் காப்பாற்றுவீர்கள். அதனால் சிலசமயம் விரக்தி ஏற்படலாம். தொழில், வியாபாரம், உத்தியோகத்தில் பிரச்சனை இருக்காது.

சுவாதி:

இந்த மாதம் திட்ட மிட்டபடி செயலாற்றுவதில் கவனம் செலுத்துவீர்கள். துணிச்சலாக எதிலும் ஈடுபடுவீர்கள். வாகனங்களில் செல்லும்போதும் பயணங்களின்போதும் எச்சரிக்கை தேவை. தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதுரியமான பேச்சினால் எதிலும் லாபம் காண்பார்கள். தேவையான உதவிகள் கிடைக்கும். எந்த ஒரு  வேலையும் மன திருப்தியுடன் செய்வீர்கள். புத்தி சாதுரியமும், வாக்குவன்மையும் அதிகரிக்கும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.

விசாகம் 1, 2, 3ம்  பாதம்:

இந்த மாதம் வர்த்தக திறமை அதிகரிக்கும். பணவரத்தும் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையால் முன்னேற்றமடைவார்கள். இழுபறியாக இருந்த வேலையை துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சி உண்டாகும். விளையாட்டு மற்றும்  போட்டிகள் சாதகமாக  பலன் தரும். சகமாணவர்களின் ஒத்துழைப்பும் இருக்கும். குடும்ப பிரச்சனைகளில் சாதகமான முடிவே உண்டாகும்.

பரிகாரம்: ”ஓம் ஸ்ரீமாத்ரே நம:” என 11 முறை சொல்லி மகாலட்சுமியை வணங்க கடன் பிரச்சனை தீரும். பணவரத்து அதிகரிக்கும்.

அதிர்ஷ்டகிழமைகள்: புதன் – வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 17, 18

அதிர்ஷ்ட தினங்கள்:  10, 11

—————————————

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

கிரகநிலை:

ராசியில்  குரு – தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  சனி , கேது –   அஷ்டம  ஸ்தானத்தில் ராஹு-  லாப ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன், செவ்வாய்  – அயன, சயன, போக ஸ்தானத்தில் புதன், சந்திரன்   என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றங்கள்:

05-10-19 அன்று மாலை06.20 மணிக்கு  சுக்கிர பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

18-10-19 அன்று காலை 10:44 மணிக்கு சூரிய பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

29-10-19 அன்று காலை 3.49 மணிக்கு குரு பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

29-10-19 அன்று இரவு 7.22 மணிக்கு சுக்கிர பகவான் ராசிக்கு மாறுகிறார்.

பலன்:

சிக்கனமாக இருக்க ஆசைப்படும் விருச்சிக ராசியினரே, இந்த மாதம்  மனதில் ஒரு தெளிவு பிறக்கும். ஆனால் அடுத்தவர்களுக்கு உதவி செய்ய போய் வில்லங்கம் ஏற்படலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உங்களைச் சுற்றி உள்ளவர்களை அடையாளம் கண்டு கொள்வீர்கள். புதிய நபர்கள் எதிர்பாலினத்தவர் ஆகியோருடன் பேசும் போது கவனமாக பேசி பழகுவது நல்லது. விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் தவிர்ப்பது நன்மை தரும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியான சுபகாரியங்கள் கொண்டாட்டங்கள் இருக்கும். கணவன், மனைவிக்கிடையே ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நன்மை தரும்.  குழந்தைகள் எதிர்கால நலன்பற்றி சிந்திப்பீர்கள். உங்களது உடமைகளை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது.

தொழில் வியாபாரத்தில் பண விவகாரங்களில் கவனம் தேவை. ஆர்டர்கள் கிடைப்பது திட்டமிட்டபடி இல்லை என்றாலும் மதிப்புள்ளதாக அமையும். கவலை வேண்டாம். வேலையாட்களிடம் கண்டிப்புடன் நடந்து கொள்வது அவசியம்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலிடத்தில் பாராட்டு பெறும் வகையில் வேலையில் ஈடுபடுவீர்கள்.

கலைத்துறையினருக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த மாற்றம் கிடைக்கும். அரசாங்க அனுகூலம் ஏற்படும். வாகனங்களைப் பிரயோகப்படுத்தும் போது மிகவும் கவனம் தேவை. வெளியூர் வெளிநாடு செல்ல வேண்டி வரலாம்.

அரசியல் துறையினருக்கு மேலிடத்துடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். அவர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். இதனால் மனதில் நிம்மதி உண்டாகும்.  நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி கிடைக்கும்.

பெண்கள் எதிலும் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருப்பது நல்லது. மனதடுமாற்றம் உண்டாகலாம். செலவு கூடும்.

மாணவர்கள் கல்விக்கு தேவையான புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்குவது பற்றிய கவலை நீங்கும். படிப்பில் ஆர்வம் உண்டாகும்.

விசாகம் 4ம் பாதம்:

இந்த மாதம் குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளிடம் கனிவுடன் பேசுவது நல்லது. விருந்தினர் வருகை இருக்கும். பணவரத்தை அதிகப்படுத்தும். உங்கள் உழைப்பும் நம்பிக்கையும் உங்களுக்கு முழுமையான பலனையும் திருப்தியையும் தரும். எதிர்ப்பும் இடையூறும் ஒருபுறம் இருந்தாலும், உங்களின் தன்னம்பிக்கையாலும் தைரியத்தாலும் அவற்றைப் போராடி எதிர்த்துநின்று வெற்றிகொள்வீர்கள்.

அனுஷம்:

இந்த மாதம் துணிச்சலாக எதிலும் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். வாகனங்களில் செல்லும்போதும் பயணங்களின் போதும் கவனம் தேவை. மாணவர்களுக்கு திறமையால் முன்னேற்றம் உண்டாகும். கஷ்டமான பாடங்களையும் துணிச்சலாக படித்து முடிப்பீர்கள். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. பூர்வீக சொத்துக்கள் மூலம் வரும் வருமானம் தாமதப்படும். திருமணம் தொடர்பான முயற்சிகளில் சாதகமான நிலை இருக்கும்.

கேட்டை:

இந்த மாதம் குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். பண கஷ்டம் குறையும். பக்குவமாக எடுத்து சொல்லி எதிரில் இருப்பவர்களை திருப்தியடையச் செய்வீர்கள். பல வழிகளிலும் ஏற்பட்ட தொல்லைகள் குறையும். ஆனால் எந்த ஒரு வேலையிலும் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. அலுவலகம் தொடர்பான பணிகள் தாமதப்படும்.

பரிகாரம்: செவ்வாய்கிழமை தோறும் முருகனை வணங்க குடும்ப  பிரச்சனைகள் தீரும். மனகவலை அகலும்.

அதிர்ஷ்டகிழமைகள்: திங்கள் – வியாழன்

சந்திராஷ்டம தினங்கள்: 19, 20, 21

அதிர்ஷ்ட தினங்கள்:  12, 13, 14

—————————————

தனுசு (மூலம், பூராடம்,  உத்திராடம் 1ம் பாதம்)

கிரகநிலை:

ராசியில்  சனி , கேது –   களத்திர ஸ்தானத்தில் ராஹு-   தொழில் ஸ்தானத்தில் சூர்யன்,  சுக்ரன் , செவ்வாய் – லாப ஸ்தானத்தில்  புதன், சந்திரன்  – அயன, சயன, போக ஸ்தானத்தில் குரு  என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றங்கள்:

05-10-19 அன்று மாலை06.20 மணிக்கு  சுக்கிர பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

18-10-19 அன்று காலை 10:44 மணிக்கு சூரிய பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

29-10-19 அன்று காலை 3.49 மணிக்கு குரு பகவான் ராசிக்கு மாறுகிறார்.

29-10-19 அன்று இரவு 7.22 மணிக்கு சுக்கிர பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

அனைவரின் நலனிலும் அக்கறை கொண்டுள்ள தனுசு ராசியினரே, இந்த மாதம் எவருக்கும் அவசரப்பட்டு வாக்கு கொடுக்க வேண்டாம். காரிய தடைகள் நீங்கும். வீண் பேச்சுக்களை குறைத்து செயலில் கவனம் செலுத்துவது நல்லது. பணவரத்து திருப்தி தரும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். குடும்பத்துடன் வெளியூர் அல்லது ஆன்மீக தலங்களுக்குச் சென்று வருவீர்கள். எல்லோரையும் அனுசரித்து செல்வது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே  மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகளிடம் அன்பாக பழகுவது நன்மை தரும். உறவினர் வகையில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். உடல்நலத்தைப் பொறுத்தவரை உஷ்ணம் சம்பந்தமான தொந்தரவுகள் வரலாம். கவனமுடன் இருக்கவும்.

தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். அவர்களை தக்க வைத்துக் கொள்ள புதிய யுக்திகளைக் கையாளுவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீண்ட நாட்களாக இருந்த இழுபறியான காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

கலைத்துறையினருக்கு மனதில் தைரியம் உண்டாகும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. வீண்வாக்குவாதத்தை விட்டு நிதானமாக பேசுவது நன்மை தரும். புதிதாக வீடு, மனை வாங்க வேண்டும் என்று யோசனை செய்தவர்களின் எண்ணம் ஈடேறும்.

அரசியல் துறையினருக்கு மேலிடத்தில் பாராட்டுகளைப் பெறுவீர்கள். புதிய உக்திகளைக் கையாண்டு மேலிடத்தின் கவனத்தை ஈர்ப்பீர்கள். அதனால் முன்னேற்றம் கிடைக்கும். தாங்கள் மேன்மையடைந்திட புதிய வாய்ப்புகள் வந்து சேரும். வெளிநாடு வாய்ப்புகள் வரலாம்.

பெண்களுக்கு எந்த காரியத்திலும் நெருக்கடியான நிலை உண்டாகும். வீண் அலைச்சல் ஏற்படும். பணவரத்து திருப்தி தரும். உடல்நலத்தைப் பொறுத்தவரை இரத்தம் சம்பந்தமான தொந்தரவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

மாணவர்கள்  கல்வியில் வெற்றி பெற திட்டமிட்டு படிக்க முற்படுவீர்கள். சக மாணவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

மூலம்:

இந்த மாதம் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. திடீர் இடமாற்றம் ஏற்பட்டாலும் அதன் மூலம் சாதகம் உண்டாகலாம். வீண் செலவுகள் கவுரவ குறைச்சல் ஏற்படலாம். மிகவும் கவனம் தேவை. தாய் தந்தையின் உடல் நிலையிலும் கவனம் செலுத்துவது நல்லது. கடுமையான முயற்சிகள் மேற்கொள்வது குறையும். வீண் வாக்குவாதங்களை  தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத  செலவு உண்டாகும். உடற்சோர்வு உண்டாகலாம்.

பூராடம்:

இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் மெத்தன போக்கு காணப்பட்டாலும் தேவையான பணவரத்தும் இருக்கும். புதிய முயற்சிகளில் தாமதமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சல் காரியங்களில் இழுபறி என்ற நிலையை காண்பீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்த்து சாதாரணமாக பேசுவது நல்லது. வாழ்க்கை துணையுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும்.

உத்திராடம் 1ம் பாதம்:

இந்த மாதம் பேச்சை குறைத்து செயலில்  ஈடுபடுவது நன்மையை தரும். குடும்பத்தில் சுமூகமான நிலை காணப்படும். ஆனாலும் மனதில் குடும்பம் தொடர்பான கவலை, பிள்ளைகள் பற்றிய கவலை இருந்து வரும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்கள், உறவினர்கள் வருகை இருக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். பண உதவி வந்து சேரும். எதிலும் கவனம் தேவை.

பரிகாரம்: விநாயகரை அருகம்புல் மாலை போட்டு வணங்க எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள்.

அதிர்ஷ்டகிழமைகள்: வியாழன் – சனி

சந்திராஷ்டம தினங்கள்: 22, 23

அதிர்ஷ்ட தினங்கள்:  15, 16

—————————————

 

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம்,  திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

கிரகநிலை:

ரண, ருண , ஸ்தானத்தில் ராஹூ –  பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன்,   சுக்ரன், செவ்வாய் –  தொழில் ஸ்தானத்தில் புதன், சந்திரன்  –  லாப ஸ்தானத்தில்  குரு – அயன, சயன,  போக ஸ்தானத்தில் சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றங்கள்:

05-10-19 அன்று மாலை06.20 மணிக்கு  சுக்கிர பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

18-10-19 அன்று காலை 10:44 மணிக்கு சூரிய பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

29-10-19 அன்று காலை 3.49 மணிக்கு குரு பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

29-10-19 அன்று இரவு 7.22 மணிக்கு சுக்கிர பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

தெளிவான சிந்தனை இருந்தும் முடிவு எடுக்க முடியாமல் தவிக்கும் மகர ராசியினரே இந்த மாதம் உங்கள் திறமையை கண்டு மற்றவர்கள் பாராட்டுவார்கள். திட்டமிட்டு செயலாற்றுவதில் பின்னடைவு ஏற்படலாம். பக்தியில் நாட்டம் அதிகரிக்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் சில்லறை சண்டைகள் உண்டாகலாம். பயணங்களில் தடங்கல் ஏற்படலாம். தடைபட்ட புதிய கடன்கள் இனி ஏற்படாது. இருக்கும் கடன் சுமையும் குறையும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். பொருள் வரவு அதிகரிக்கும். தம்பதிகளிடையே  நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் பெருமை சேரும். உல்லாச பயணங்கள் செல்ல நேரலாம். மனவருத்தம் நீங்கி நெருக்கம் ஏற்படும்.

தொழில் வியாபாரம் தொடர்பாக வெளியூர் செல்ல வேண்டி இருக்கும். உங்களுக்கு வர வேண்டிய பணம் தாமதமில்லாமல் வந்து சேரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உண்டு. மேல் அதிகாரிகள் கூறிய படி காரியங்களை செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள்.

கலைத் துறையினர் எல்லா நன்மைகளையும் தடையின்றி அடைவீர்கள். இதுவரை தொந்தரவு கொடுத்துவந்த நோய் விலகும். அதனால் ஏற்பட்ட மனபாரம் குறையும். வரக்கூடிய உபரி வருவாயால் கடன் அடைபடும்.

அரசியல்துறையினர் மூலதனத்திற்குத் தேவையான பணம் வந்து குவியும். சக நண்பர்கள் வகையில் சற்று கவனமுடன் செயல்படவும். மேலிடத்தின் கருத்துக்களை நீங்களே முன்னின்று கேட்டு செய்வதன் மூலம் பல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

பெண்களுக்கு பண தேவை அதிகரிக்கும். எதிலும் உடனடியாக முடிவு எடுக்க வேண்டாம். தீர ஆலோசித்து முடிவெடுப்பது நல்லது. வேலை பளு அதிகரிக்கும். உடல்நலம் சீராக இருக்கும். உடலில் அதிக உஷ்ணம் வராமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

மாணவர்களுக்கு அதிக நேரம் பாடங்களை படித்து கவனத்தில் வைத்துக் கொள்வது நல்லது.

உத்திராடம் 2, 3, 4 பாதம்:

இந்த மாதம் தொல்லைகள் குறையும். வீண் செலவுகள் உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் மெத்தன போக்கு ஏற்படாமல் தீவிர கவனத்துடன் பாடங்களை படிப்பது வெற்றிக்கு வழி வகுக்கும். பெண்களுக்கு வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கடும் முயற்சிகள் பலன் தரும். செலவு அதிகரிக்கும். வாக்கு வன்மையால் காரிய அனுகூலம் ஏற்படும்.

திருவோணம்:

இந்த மாதம் காரியத்தடை நீங்கும். இனிமையான பேச்சின் மூலம் சிக்கலான காரியங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். உங்கள் திறமையை கண்டு அடுத்தவர்கள் வியப்பார்கள். திடீர் கோபம் வரும். அதை கட்டுப்படுத்துவது நல்லது. அலைச்சலை தவிர்ப்பதன் மூலம் களைப்பு ஏற்படாமல் தடுத்து கொள்ள முடியும். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் எதிர்பாராத தடை ஏற்பட்டு நீங்கும். பணவரத்து அதிகரிக்கும்.

அவிட்டம் 1,2 பாதம்:

இந்த மாதம் வேளை தவறி உணவு உண்ணாமல் பார்த்துக்கொள்வது நல்லது. பண வரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதுரியமாக செயல்பட்டு முன்னேற்றம் காண்பார்கள். ஆனால் வேலை செய்பவர்களிடம் கோபப்படாமல் தட்டி கொடுத்து வேலை வாங்குவது நன்மையை தரும்.  ஒரு பிரச்சினை முடிந்ததும் இன்னொரு பிரச்சினை உருவாகலாம். ஆனாலும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

பரிகாரம்: ஸ்ரீநரசிம்ஹ ஸ்வாமியை வணங்க உடல் ஆரோக்கியம் பெறும். மனக்கவலை நீங்கும்.

அதிர்ஷ்டகிழமைகள்: செவ்வாய் – வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 24, 25

அதிர்ஷ்ட தினங்கள்:  17, 18

—————————————

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதம்)

கிரகநிலை:

பஞ்சம ஸ்தானத்தில்   ராஹூ –  அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன்,  சுக்ரன், செவ்வாய் – பாக்கிய ஸ்தானத்தில்  புதன், சந்திரன்  – தொழில் ஸ்தானத்தில் குரு – லாப ஸ்தானத்தில் சனி , கேது   என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றங்கள்:

05-10-19 அன்று மாலை06.20 மணிக்கு  சுக்கிர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

18-10-19 அன்று காலை 10:44 மணிக்கு சூரிய பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

29-10-19 அன்று காலை 3.49 மணிக்கு குரு பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

29-10-19 அன்று இரவு 7.22 மணிக்கு சுக்கிர பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

நியாயத்திற்காக குரல் கொடுக்கும் கும்ப ராசியினரே, இந்த மாதம் மனதில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். எதைச் செய்தால் முன்னேறலாம் என்று யோசிக்கத் தோன்றும். நிதானமாக சிந்தனை செய்தும், பெரியவர்களின் ஆலோசனை கேட்டும் செயல்பட்டால் பல முக்கிய முடிவுகளையும், புதிய முதலீடுகளையும் செய்ய வழி பிறக்கும். உங்களின் இந்த பொன்னான காலகட்டத்தை நிதானமாக கையாளுவது நல்லது. சிறந்ததாகவும் அமையும்.

குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். குடும்ப உறுப்பினருக்காக விருப்பம் இல்லாத காரியத்தில் தலையிட வேண்டி இருக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். இதனால் சிலர் ஆன்மீக சுற்றுலா சென்று வருவீர்கள். உடல்நலம் சீராக இருந்தாலும் இரத்தம் சம்பந்தமான பிரச்சனைகள் வராமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

தொழில் வியாபாரத்தை விரிவாக்கம் செய்வதற்கான முயற்சிகள் வெற்றிகரமாக முடியும். வியாபார விரிவாக்கம் செய்வது பற்றி அனுபவசாலிகளிடம் ஆலோசனை மேற்கொள்வீர்கள். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் காரிய அனுகூலம் கிடைக்க பெறுவார்கள். புத்திசாதூரியத்தால் காரிய நன்மை பெறுவார்கள்.

கலைத்துறையினர் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் வருவாய் உண்டு. சோதனைகள் வெற்றியாக மாறும். உங்கள் செயல்பாடுகள் மற்றவர்களைக் கவரும். உல்லாசப் பயணங்களில் நாட்டம் செல்லும்.

அரசியல் துறையினருக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மதிப்பு மரியாதை சிறப்படையும். செல்வாக்கு ஓங்கும். நட்பு வட்டாரத்தில் குதூகலம் ஏற்படும்.

பெண்களது செயல்களுக்கு மற்றவர்களிடம் இருந்து பாராட்டு கிடைக்கும். நண்பர்கள் மூலம் சாதகமான பலன்கள் உண்டாகும்.

மாணவர்களுக்கு பாடங்களை படிக்க வேண்டிய கட்டாயம் உண்டாகும். ஆசிரியர் மற்றும் சக மாணவர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது.

அவிட்டம் 3, 4 பாதம்:

இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவார்கள். ஆனால் கடுமையான பணியின் காரணமாக சோர்வு உண்டாகலாம். கவனம் தேவை. குடும்ப விஷயங்களில் ஆர்வம் காண்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் செலுத்துவீர்கள். மேற்படிப்பு படிக்கும் ஆர்வம் உண்டாகும். கல்விக்கு தேவையான உதவிகள் கிடைக்கும்.

சதயம்:

இந்த மாதம் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் கவனம் செல்லும். பிள்ளைகள் முன்னேற்றத்திற்காக பாடுபடுவீர்கள். திடீர் என்று கோபம் உண்டாவதை தவிர்ப்பது நல்லது. திறமையை கண்டு மற்றவர்கள் பாராட்டுவார்கள். எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். சில அத்தியாவசிய தேவைகளுக்கு செலவு செய்ய பணப்பற்றாக் குறையை சந்திக்கலாம். உங்கள் பிரச்சினைகள் எவ்வளவு இருந்தாலும் தோல்வியும் தொய்வும் இல்லாமல் சமாளித்து ஜெயிக்கலாம்.

பூரட்டாதி 1, 2, 3  பாதம்:

இந்த மாதம் கோபத்தை குறைத்து நிதானத்தை கடைபிடிப்பது முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். மாணவர்கள் பாடங்களை நன்கு படித்து பாராட்டு பெறுவீர்கள். மன குழப்பங்கள் நீங்கும். தைரியம் உண்டாகும். தடைபட்ட காரியங்கள்  நன்கு நடந்து முடியும். எடுத்த காரியங்களில் உடனே வெற்றி ஏற்படும். சில காரியங்களில் தாமதமாக வெற்றி ஏற்படும். உங்கள் விடாமுயற்சிதான் உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும்.

பரிகாரம்: சனி பகவானை நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வணங்க எல்லா காரியங்களும் வெற்றிபெறும். துன்பங்கள் விலகும்.

அதிர்ஷ்டகிழமைகள்: புதன் – வியாழன்

சந்திராஷ்டம தினங்கள்: 26, 27

அதிர்ஷ்ட தினங்கள்:  19, 20, 21

—————————————

மீனம். (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

கிரகநிலை:

சுக ஸ்தானத்தில்   ராஹூ  –  களத்திர ஸ்தானத்தில் சூர்யன்,  சுக்ரன், செவ்வாய் – அஷ்டம ஸ்தானத்தில் புதன், சந்திரன்  – பாக்கிய ஸ்தானத்தில் குரு – தொழில்  ஸ்தானத்தில் சனி , கேது   என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றங்கள்:

05-10-19 அன்று மாலை06.20 மணிக்கு  சுக்கிர பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

18-10-19 அன்று காலை 10:44 மணிக்கு சூரிய பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

29-10-19 அன்று காலை 3.49 மணிக்கு குரு பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

29-10-19 அன்று இரவு 7.22 மணிக்கு சுக்கிர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

அனைவரிடமும் நட்புடன் பழகும் மீன ராசியினரே, இந்த மாதம் எதையும் சமாளிக்கும் திறமை உண்டாகும். எல்லாவற்றிலும் நெருக்கடி நிலை காணப்படும். சொந்த காரியங்களில் தாமதம் ஏற்படலாம். சின்ன விஷயங்களால் மன நிறைவை அடைவீர்கள். எதிர்பாலினரிடம் பழகும் போது கவனம் தேவை.

குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். தம்பதிகளிடையே  விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கு அதிகரிக்கும். பிள்ளைகள் எதிர்காலத்திற்காக சில பணிகளை மேற்கொள்வீர்கள். உடல்நலத்தில் எந்தவித பாதிப்பும் இருக்காது. ஏற்கனவே இருக்கும் நோய்களில் இருந்தும் முன்னேற்றம் இருக்கும்.

தொழில், வியாபாரம் முன்னேற்றப்பாதையில் செல்லும். பழைய பாக்கிகள் வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள். ஆர்டர்கள் கிடைப்பதில் இருந்த தாமதம் இப்போது விலகும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலான பணிகளை கவனிக்க  வேண்டி இருக்கும். வேலை மாறுதல் பற்றிய எண்ணம் உண்டாகும்.

கலைத்துறையினருக்கு தொழிலில் பிரச்சனைகள் உருவாகாது என்றாலும் சிற்சில வாக்குவாதங்கள் இருக்கும். எதிலும் நிதானத்துடன் நடந்து கொண்டால் தொல்லைகள் இராது. அடுத்தவர்களுடைய விவகாரங்களில் வீணாக தலையிட வேண்டாம். பகைவர்கள் பணிந்து போகவும் வாய்ப்புகள் உண்டு.

அரசியல்துறையினருக்கு மனதில் தெம்பு உண்டாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். தொகுதி வேலையில் கவனமுடன் செல்வது நல்லது.

பெண்களுக்கு கொடுக்கல் வாங்கலில் இருந்த சிக்கல்கள் தீரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். இழுபறியாக இருந்த காரியம் நன்கு நடந்து முடியும்.

மாணவர்களுக்கு புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்களுடன் சேர்ந்து கல்வியில் வெற்றி பெற நன்கு படிப்பீர்கள்.

பூரட்டாதி 4ம் பாதம்:

இந்த மாதம் சாமர்த்தியமாக செயல்பட்டு எதிலும் வெற்றிபெறுவீர்கள். மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்கலாம். ஆடை, அலங்கார பொருட்கள் வாங்கும் எண்ணம் தோன்றும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் சூழ்நிலை ஏற்படும். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத போட்டிகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் அதிக முதலீடு  செய்யும் முன் யோசிப்பது நல்லது. கடன் விஷயங்களில் கவனம் தேவை.

உத்திரட்டாதி:

இந்த மாதம் பணவரத்து கூடும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். நீண்ட தூர தகவல்கள் நல்ல தகவல்களாக வரும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். குடும்பத்தில் திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். விருந்தினர்கள் வருகையால் செலவு கூடும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வது நல்லது.

ரேவதி:

இந்த மாதம் எதிர்பார்த்த பணம் கைக்கு வந்துசேரும். திருப்திகரமான லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கப்பெறுவார்கள். அத்துடன் பணம் வரத்தும் திருப்திகரமாக இருக்கும். கடினமான பணிகளை கூட எளிதாக முடிக்கும் ஆற்றல் வரும். வாகனங்களில் செல்லும் போதும், நெடுந்தூர பயணங்களின் போதும் கவனமாக இருப்பது நல்லது.

பரிகாரம்: வியாழக்கிழமையில் நவக்கிரகங்களை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். மன குழப்பம் நீங்கும்.

அதிர்ஷ்டகிழமைகள்: ஞாயிறு – புதன்

சந்திராஷ்டம தினங்கள்: 1, 2,  28, 29

அதிர்ஷ்ட தினங்கள்:  22, 23

————————————————————–

Continue Reading

மாத பலன்

உங்கள் ராசிக்கான செப்டம்பர் 2019 மாத ராசிபலன்கள்!

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction

மேஷம்:

கிரகநிலை:

தைரிய ஸ்தானத்தில்  ராஹூ – பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய், புதன், சுக்ரன் – ரண ருண ஸ்தானத்தில்  சந்திரன் – அஷ்டம ஸ்தானத்தில் குரு – பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

சொன்ன சொல்லை காப்பாற்ற துடிக்கும் மேஷ ராசி அன்பர்களே, இந்த மாதம் பேச்சை கட்டுப்படுத்திக் கொள்வது நன்மை தரும். எதைப் பேசினாலும் வார்த்தைகளில் நிதானத்தைக் கடைபிடிப்பது நன்மை தரும். ராஜாங்க ரீதியிலான காரியங்கள் கை கொடுக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். பொருள் சேர்க்கை உண்டாகும். சிற்றின்ப செலவுகள் அதிகரிக்கும். நண்பர்களுக்கு உதவிகள்  செய்வீர்கள். பணவரத்து திருப்திதரும். வீண்பழி ஏற்படலாம்.

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். வீட்டில் திருமணம் போன்ற  சுபகாரியங்கள் நடக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். உறவினர்கள் மூலம் உங்களின் செயல்பாடுகளுக்கு ஆதரவு அதிகரிக்கும்.

தொழில் வியாபாரம் எதிர்பார்த்தபடி சிறப்பாக நடக்கும். பணவரத்தும் அதிகரிக்கும். பழைய கடன்களை திருப்பி செலுத்தக் கூடிய நிலை உருவாகும். நீண்ட நாட்களாக இருந்து வந்த ராஜாங்க ரீதியிலான சிரமங்களிலிருந்து விடுபடுவீர்கள்.  

உத்தியோகஸ்தர்கள் நிலை மேம்படும். அரசாங்க அனுகூலம் ஏற்படும். மேலதிகாரிகளின் பாராட்டும், ஒத்துழைப்பும் உங்களுக்கு கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் வருவாய் உண்டு. சோதனைகள் வெற்றியாக மாறும். உங்கள் செயல்பாடுகள் மற்றவர்களைக் கவரும். உல்லாசப் பயணங்களில் நாட்டம் செல்லும்.

அரசியல்துறையினருக்கு மேலிடத்தில் இருப்பவர்களிடம் இருந்து மனம் நோகும்படியான வார்த்தைகள் வெளிப்படலாம்.  அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும். பதவிகள் பற்றிய கவலை உண்டாகும். நிதானமாக செய்யும் செயல்கள் வெற்றியை தரும்.

பெண்களுக்கு எதிர்பாராத செலவு உண்டாகும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடுகள் நடக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்ற மடைய அதிக கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்லது.

அஸ்வினி:

இந்த மாதம் கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். குடும்ப விஷயங்களில் சரியான முடிவுக்கு வர முடியாத தடுமாற்றம் ஏற்படலாம். உறவினர்களுடன் பேசும்போது கவனமாக பேசுவது நல்லது.

பரணி:

இந்த மாதம் வாகனங்களில் செல்லும்போதும் பயணங்களின்போதும் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் லாபம் கிடைக்கும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும்.

கார்த்திகை:

இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதையும் செய்து முடிப்பதில் துணிச்சல் உண்டாகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். எதிர்பாரத இடமாற்றம் ஏற்படலாம். எதிர்பாலினத்தாருடன் பழகும்போது கவனம் தேவை. எதிர்ப்புகள் குறையும்.

பரிகாரம்: முருகனுக்கு அரளிப்பூ அர்ப்பணித்து பிராத்தனை செய்து வழிபட்டு வர எல்லா கஷ்டங்களும் நீங்கும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு – செவ்வாய் – வியாழன்

சந்திராஷ்டம தினங்கள்: 5, 6, 7

அதிர்ஷ்ட தினங்கள்: 26, 27, 28

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ரிஷபம்: 

கிரகநிலை:

குடும்ப ஸ்தானத்தில்  ராஹூ – சுக ஸ்தானத்தில்  சூர்யன், செவ்வாய், புதன், சுக்ரன் – பஞ்சம ஸ்தானத்தில்  சந்திரன் – களத்திர ஸ்தானத்தில் குரு – அஷ்டம ஸ்தானத்தில் சனி (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

மற்றவர்கள் செய்யும் செயலுக்கு திருப்தி அடையாத ரிஷப ராசி அன்பர்களே, இந்த மாதம் எதிலும் சாதகமான நிலை காணப்படும். எல்லா நன்மைகளும் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். வாக்கு வன்மை ஏற்படும். உங்கள் பேச்சுக்கு மற்றவர்கள் செவி சாய்ப்பார்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொலைதூரத்தில் இருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும்.

குடும்பத்தில் கணவன் மனைவி அனுசரித்து செல்வதன்மூலம் அமைதி ஏற்படும்.  விருந்தினர்கள் வருகை இருக்கும். உறவினர்கள், நண்பர்களிடம் கோபத்தை காண்பிக்காமல் பேசுவது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதமாகலாம்.

தொழில் வியாபாரம் மெத்தனமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவது ஆறுதல் தரும்.  வியாபாரம் தொடர்பான காரியங்களில் கூடுதல் கவனம் தேவை. 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். அலுவலகத்தில் யாரைப் பற்றியும் புறம் கூறாமல் இருப்பது நன்மை தரும். உங்களுடைய பொருட்களை கவனமாக வைத்துக் கொள்வது அவசியம்.

கலைத்துறையினருக்கு தொழிலில் சிக்கல்கள் உருவாகாது என்றாலும் சிற்சில வாக்குவாதங்கள் இருக்கும். எதிலும் அளவோடு ஈடுபட்டு வந்தால் தொல்லைகள் இராது. அடுத்தவர்களுடைய விவகாரங்களில் வீணாக தலையிட வேண்டாம். பகைவர்கள் பணிந்து போகவும் வாய்ப்புகள் உண்டு.

அரசியல்துறையினருக்கு  இனிமையான செய்திகள் தேடி வரும். நீண்ட நாளாக எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். புதிய நண்பர்களால் தேவையில்லாத பிரச்சனைகள் உண்டாகும் வாய்ப்புகள் இருப்பதால் கவனமுடன் இருப்பது நல்லது. 

பெண்களுக்கு எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுப்பதில் தாமதம் உண்டாகும். கவனமாக வேலைகளை செய்வது நல்லது. பணவரத்து தாமதமாகலாம்.

மாணவர்கள் சோம்பேறித்தனத்தை விட்டுவிட்டு பாடங்களை நன்கு படிப்பது வெற்றிக்கு வழிவகுக்கும்.

கார்த்திகை:

இந்த மாதம் எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். வீண் அலைச்சல் உண்டாகும். வாக்கு வன்மையால் ஆதாயம் உண்டாகும். தைரியம் அதிகரிக்கும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். காரிய வெற்றி ஏற்படும். பணவரத்து கூடும். 

ரோகினி:

இந்த மாதம் கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்க மனம் விட்டுபேசுவது நன்மை தரும். உறவினர்கள் வருகை  இருக்கும். அவர்களிடம் நிதானமாக பேசுவது நன்மை தரும். பிள்ளைகளிடம் கோபம் காட்டாமல் அன்பாக பேசுவது நல்லது. மகிழ்ச்சி உண்டாகும்.

மிருகசீரிஷம்:

இந்த மாதம் வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வதன்மூலம் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையுடன் செயல்பட்டு நிர்வாகத்தினரால் பாராட்டு கிடைக்க பெறுவார்கள். 

பரிகாரம்: ஸ்ரீசரபேஸ்வரரை ஞாயிற்றுக்கிழமைகளில் தீபம் ஏற்றி வழிபட்டு வர எல்லா தடங்கல்களும் நீங்கும். காரிய வெற்றி ஏற்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு – செவ்வாய் – வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 8, 9,

அதிர்ஷ்ட தினங்கள்: 1, 2, 29, 30

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மிதுனம்: 

கிரகநிலை:

ராசியில் ராஹூ – தைரிய ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய், புதன், சுக்ரன் – சுக ஸ்தானத்தில் சந்திரன் – ரண ருண ஸ்தானத்தில் குரு – களத்திர ஸ்தானத்தில் சனி (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

எந்தக் காரியத்திலும் ஆர்வமாக செயல்படும் மிதுன ராசி அன்பர்களே, இந்த மாதம் அறிவுத்திறன் அதிகரிக்கும். உங்களது பேச்சு மற்றவரை மயக்குவதுபோல் இருக்கும். ருசியான உணவை உண்டு மகிழ்வீர்கள். மனநிம்மதி கிடைக்கும். சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவீர்கள்.

குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். சுற்றத்தினர் வருகை இருக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு கூடும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். குடும்ப வருமானம் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் – நண்பர்கள் மூலம் ஆதாயம் பெறுவீர்கள்.

தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத குறுக்கீடுகள் ஏற்பட்டு பின்னர் விலகும். வியாபாரம் தொடர்பான பிரச்சனைகளை கையாளும் போது கவனம் தேவை. பாக்கிகள் வசூலாவது தாமதமாகும். 

உத்யோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக தங்களது வேலைகளை செய்வது நல்லது. யாரிடமும் கோபமும், வெறுப்பையும் காண்பிக்காமல் இருப்பது நல்லது.

கலைத்துறையினருக்கு மிகவும் அனுகூலமான காலமிது. வாய்ப்புகள் குவியும். புத்திசாதுர்யத்துடன் கையாள்வதால் லாபமான காலமாக அமையக்கூடிய வாய்ப்பு உண்டு.

அரசியல்துறையினருக்கு  மேலிடத்திலிருந்து சந்தோஷமான செய்தி வரும். தொண்டர்கள் உங்கள் சொல்படி நடந்து கொள்வது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். 

பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருளை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தோர் உறுதுணையாக இருப்பார்கள்.

மாணவர்களுக்கு கல்வியில் திறமை அதிகரிக்கும். உங்களது செயல்களுக்கு பாராட்டு கிடைக்கும். மனதில் தைரியம் கூடும்.

மிருகசீரிஷம்:

இந்த மாதம் தொழில், வியாபாரம் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். சில நேரங்களில் முக்கிய முடிவு எடுப்பதில் தயக்கம் காட்டுவீர்கள். நெருக்கடியான சமயத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பது தாமதப்படும்.

திருவாதிரை:

இந்த மாதம் எதிர்ப்புகள் அகலும். தெளிவான மனநிலை இருக்கும். எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு சாதகமான பலன் பெறுவீர்கள். செயல்திறன் அதிகரிக்கும் . ஆனால் உங்களுக்கு எதிராக சிலர் செயல்படும் சூழ்நிலை இருப்பதால் கவனம் தேவை.

புனர்பூசம்:

இந்த மாதம்  எந்த ஒரு காரியத்தை செய்யும் முன்பும் அதை எப்படி செய்வது என்ற மன தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நன்மை தரும். எதிர்காலம் பற்றி முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள்.

பரிகாரம்: புதன்கிழமைகளில் பெருமாளை வணங்குவதும் வயதானவர்களுக்கு உதவிகள் செய்வதும் எல்லா நன்மைகளையும் தரும். செல்வ சேர்க்கை உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் – புதன்

சந்திராஷ்டம தினங்கள்: 10, 11, 

அதிர்ஷ்ட தினங்கள்: 3, 4

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கடகம்:

கிரகநிலை:

குடும்ப ஸ்தானத்தில்  சூர்யன், செவ்வாய், புதன், சுக்ரன் – தைரிய ஸ்தானத்தில்  சந்திரன் – பஞ்சம ஸ்தானத்தில் குரு – ரண ருண ஸ்தானத்தில் சனி (வ), கேது – அயன சயன போக ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

எதிர்பார்த்திருந்த வாய்ப்புகளை பெறப் போகும் கடக ராசி அன்பர்களே, இந்த மாதம் மனதில் உற்சாகம் பிறக்கும். தடைபட்ட காரியங்களில் தடை நீங்கி சாதகமான பலன் கிடைக்கும். எதிலும் தயக்கம் காட்டமாட்டீர்கள். நீண்ட நாட்களாக தடைபட்ட காரியங்கள் வேகமெடுக்கும். கண்மூடித்தனமாக எதிலும் ஈடுபடாமல் யோசித்து செய்வது நல்லது. எந்த ஒரு விஷயத்தையும் தக்க ஆலோசனையுடன் செய்வது நன்மையைத் தரும்.

குடும்பத்தில் சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். உறவினர் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் தாமதம் ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே  மனம் வருந்தும்படியான சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகள் நீங்கள் சொல்வதை காதில் வாங்காதவர்போல் இருப்பார்கள். எனவே எல்லோரையும் அனுசரித்து செல்வதால் நன்மை உண்டாகும். வீட்டில் சுபநிகழ்ச்சிகளுக்கான வேலைகளைத் தொடங்குவீர்கள். புதியதாக மனை வாகனம் வாங்குவதற்கு அனுகூலமாக கைக்கு பணம் வந்து சேரும்.

தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். லாபம் கூடும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரம், தொழில் தொடர்பான கடிதபோக்கு சாதகமான பலன் தரும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள். பணியாளர்கள் மூலம் நன்மை உண்டாகும். 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக எதையும் செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள். கவுரவம் கூடும். நிலுவை தொகை வந்து சேரும். பதவி உயர்வு கிடைக்கலாம்.

கலைத்துறையினருக்கு  உடனிருப்பவர்களுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டு நீங்கும். வாக்குவாதங்களைத் தவிர்த்து சாதுர்யமாக கையாள்வது நல்லது. வரவேண்டிய பணம் வந்து சேரும்.

அரசியல்துறையினருக்கு  நீண்ட நாட்களாக வரவேண்டி இருந்த பணம் வந்து சேரும். உங்கள் பணிகளில் பல குறுக்கீடுகள் வந்தாலும் அதை சாமர்த்தியாமாக சமாளித்து வெற்றி காண்பீர்கள்.

பெண்கள் வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். தொலை தூர தகவல்கள் நல்ல தகவல்களாக வரும். எதிர்பார்த்த பணம் வரும் வாய்ப்பு உள்ளது.

மாணவர்கள் கல்வியில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்க பாடுபட்டு படிப்பீர்கள்.

புனர்பூசம்:

இந்த மாதம்  அடுத்தவர் யோசனைகளை கேட்டு தடுமாற்றம் அடையாமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் நடைபெறும் சில விஷயங்கள் உங்கள் கோபத்தை தூண்டலாம். எனவே வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் மிகவும் கவனமாக பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும்.

பூசம்:

இந்த மாதம்  வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் இருந்த பழைய பகைகள் மாறும். எதிலும்  மிகவும் கவனமாக ஈடுபடுவது நன்மை தரும். திட்டமிட்டு செயல்படுவது வெற்றிக்கு உதவும். பணவரத்து அதிகரிக்கும். அதே நேரத்தில் செலவும் கூடும்.  

ஆயில்யம்:

இந்த மாதம் எதிர்பார்த்த உதவிகள்  கிடைக்கும். மனத்துணிச்சல் உண்டாகும்.  அதனால் எதை பற்றியும் முன்பின் யோசிக்காமல் செயல்களில் இறங்கி விடுவீர்கள். தேவையற்ற இடமாற்றம் உண்டாகலாம்.

பரிகாரம்: மாரியம்மனை திங்கட்கிழமைகளில் தீபம் ஏற்றி வணங்கி வர கஷ்டங்கள் தீரும். மனநிம்மதி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு – திங்கள் – வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 12, 13, 14

அதிர்ஷ்ட தினங்கள்: 5, 6, 7

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சிம்மம்:

கிரகநிலை:

ராசியில்  சூர்யன், செவ்வாய், புதன், சுக்ரன் –  தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் –  சுக ஸ்தானத்தில் குரு – பஞ்சம ஸ்தானத்தில் சனி (வ), கேது – லாப ஸ்தானத்தில்  ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன. 

பலன்:

எச்சரிக்கையுடன் காரியங்களை செய்து முடிக்கும் சிம்ம ராசி அன்பர்களே, இந்த மாதம் வீண் பிரச்சனையால் மனக்குழப்பம் ஏற்படலாம். பயணங்களில் தடங்கல் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடைகள் ஏற்படலாம். வழக்குகள் சம்பந்தமான விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கை அவசியம்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளை தட்டி கொடுத்து எதையும் செய்ய  சொல்வது நல்லது. உங்கள் கருத்துகளுக்கு மதிப்பில்லாமல் போகலாம்.

தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வேகம் இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் இருந்த தடை தாமதம் நீங்கும். போட்டிகள் சமாளிக்கும் திறமை உண்டாகும். 

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணி சுமை ஏற்படும். சக ஊழியர்கள், மேல் அதிகாரிகளிடம் இருந்து வந்த மனக்கசப்பு மாறும். தேங்கி இருந்த பண வரவு சீராகும்.

கலைத்துறையினர் இரவு பகலாக உழைக்க வேண்டி இருக்கும். அடுத்தவர் வேலையையும் தானே செய்யும் நிலை உருவாகும். எனினும் உதவிகள் கிடைக்கும். வரவேண்டிய பணம் இழுபறியாக இருந்தாலும் வந்து சேரும்.

அரசியல்துறையினருக்கு  முன்னேற்றத்தில் தடைகள் இருக்கும். பொறுமையாக கையாள்வதன் மூலம் பெரிய பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். மிகவும் பொறுமையாக செயல்பட வேண்டியது அவசியம்.

பெண்களுக்கு பயணங்களில் எதிர்பாராத தடங்கல் உண்டாகலாம். யோசித்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன்தரும். பிள்ளைகள் மீது கவனம் தேவை.

மாணவர்களுக்கு கல்வியில்  மந்தமான நிலை மாற கூடுதல் கவனத்துடன்  பாடங்களை படிப்பது நன்மை தரும்.

மகம்:

இந்த மாதம் குடும்பத்தில் சுகமும், நிம்மதியும் இருக்கும். குடும்பத்திற்கு  அதிகப்படியான வருமானமும் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே சகஜ நிலை காணப்படும். குழந்தைகள்  திறமையை கண்டு அவர்களை பாராட்டுவீர்கள். 

பூரம்:

இந்த மாதம் உறவினர் வருகை இருக்கும். யாரிடம் பேசும் போதும்  நிதானமாக பேசுவது நன்மை தரும். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி அவற்றை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்கள் லாபம் தருவதாக இருக்கும்.

உத்திரம் – 1:

இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள்  மேல் அதிகாரிகள் கொடுத்த வேலைகளை கவனமாக செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள். செயல் திறமை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தைரியம் ஏற்படும்.

பரிகாரம்:  ஞாயிற்றுக்கிழமைதோறூம் சிவனை வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு – செவ்வாய் – வியாழன்

சந்திராஷ்டம தினங்கள்: 15, 16,

அதிர்ஷ்ட தினங்கள்: 8, 9

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கன்னி:

கிரகநிலை:

ராசியில்  சந்திரன் – தைரிய ஸ்தானத்தில்  குரு – சுக ஸ்தானத்தில் சனி (வ), கேது – தொழில் ஸ்தானத்தில்   ராஹூ – அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய், புதன், சுக்ரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

எடுத்த காரியங்களை திட்டமிட்டு நடத்தும் கன்னி ராசி அன்பர்களே, இந்த மாதம் எதிலும் முன்னேற்றம் காணப்படும். விரும்பிய  பொருள்களை வாங்கி மகிழ்வீர். முக்கிய நபரின் அறிமுகமும், உதவியும் கிடைக்கும். நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். மரியாதை கூடும். திட்டமிட்ட காரியங்கள் நன்றாக நடந்து முடியும்.

குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி நிம்மதியும் சந்தோஷமும் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல் சந்தோஷத்தை தரும். பயணங்கள் செல்லும் போது கவனம் தேவை. சகோதரர்களிடம்  கருத்து வேற்றுமை உண்டாகலாம்.

தொழில் வியாபாரம் முன்னேற்றம் காணும். தொழில் வளர்ச்சிக்காக சில திட்டங்களை செயல்படுத்த முடிவெடுப்பீர்கள். பணவரத்து திருப்தி தரும். வியாபார ஸ்தலத்திற்காக புதியதாக இடம் வாங்குவீர்கள். 

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு செயல்திறமை கூடும். வெளியூர் பயணங்களும் செல்ல நேரிடலாம். பணி நிமித்தமாக அலைய வேண்டியதிருக்கும். 

கலைத்துறையினருக்கு சில அத்தியாவசிய தேவைகளுக்கு செலவு செய்ய பணப்பற்றாக் குறையை சந்திக்கலாம். ஒரு பிரச்சினை முடிந்ததும் இன்னொரு பிரச்சினை உருவாகலாம்.

அரசியல்துறையினருக்கு  மனம் மகிழும்படியான சுழ்நிலை உருவாகும். வெளியூர் செல்ல நேரிடும். கட்சிப்பணிகள் மிக துரிதமாக நடப்பதற்கான சூழல் உருவாகும்.

பெண்களுக்கு வீண் மனக்கவலை உண்டாகலாம். காரியங்களில் தடை தாமதம், வீண் செலவு ஏற்படலாம்.

மாணவர்கள் கல்வியில் மட்டும் கவனம் செலுத்துவது வெற்றிக்கு உதவும். சகமாணவர், நண்பர்கள் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.

உத்திரம்:

இந்த மாதம்  போட்டிகளில் பங்கு பெற ஆர்வம் உண்டாகும்.  மனகுழப்பம் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். ஆனால் மற்றவர்களிடம் பழகும் போது கவனமாக இருப்பது நல்லது. சமூகத்தில் கவுரவம் அந்தஸ்து அதிகரிக்கும்.

ஹஸ்தம்:

இந்த மாதம் குடும்பத்தில் உற்சாகம் இருக்கும். மற்றவர்கள்  உங்களை அனுசரித்து செல்வார்கள். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சியான நிலை காணப்படும். பிள்ளைகள்  துணையால் மருத்துவ செலவு ஏற்படலாம்.

சித்திரை:

இந்த மாதம் பேச்சின் இனிமை சாதூரியத்தால் எளிதில் காரியங்கள் கைகூடும். எதிர்காலத்துக்கு உதவக்கூடிய விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். தொழில் வியாபாரம்  சிறப்படையும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள். வியாபார வளர்ச்சிக்கு இருந்த தடைகள் நீங்கும்.

பரிகாரம்: பெருமாளை தீபம் ஏற்றி வணங்க எதிர் பார்த்த காரிய அனுகூலம் கிடைக்கும்.  உத்தியோகம் தொடர்பான பிரச்சனை தீரும்..

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு – புதன் – வியாழன்

சந்திராஷ்டம தினங்கள்: 17, 18, 19

அதிர்ஷ்ட தினங்கள்: 10, 11

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

துலாம்:

கிரகநிலை:

தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  குரு – தைரிய ஸ்தானத்தில் சனி (வ), கேது –  பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ – லாப ஸ்தானத்தில்  சூர்யன், செவ்வாய், புதன், சுக்ரன் – அயன சயன போக ஸ்தானத்தில்  சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

அனுகூலங்களை அதிகமாக பெறப்போகும் துலாராசி அன்பர்களே, இந்த மாதம் நீண்ட நாட்களாக முயற்சி செய்த காரியங்கள் வெற்றியை தரும். வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். திடீர் செலவு ஏற்படும். சிலருக்கு மருத்துவ செலவு ஏற்படும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும்.

குடும்பத்தில் உறவினருடன் கருத்து வேறுபாடு உண்டாகலாம். வீட்டில் உள்ள பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. சொத்து விவகாரங்களில் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையில் இடைவெளி குறையும். பிள்ளைகள் நலனில் கவனம் செலுத்துவீர்கள். உறவினர்கள் – நண்பர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.

தொழில் வியாபாரம் நல்ல நிலைக்கு உயரும். போட்டிகள் நீங்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தேவையான நிதியுதவி கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். நிலுவையில் உள்ள பணம் வந்து சேரும். நிர்வாக திறமை வெளிப்படும். மேலிடத்தில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும்

கலைத்துறையினருக்கு மிகவும் அனுகூலமான காலமிது. வாய்ப்புகள் குவியும். புத்திசாதுர்யத்துடன் கையாள்வதால் லாபமான காலமாக அமையக்கூடிய வாய்ப்பு உண்டு

அரசியல்துறையினருக்கு  உற்சாகமான காலமாக அமையும். கட்சிப் பணிகளுக்காக கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். நேரத்தை வீணாக்காமல் உபயோகப்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம்.

பெண்களுக்கு  அறிவுத்திறன் அதிகரிக்கும். இனிமையான வார்த்தைகளால் சிக்கலான காரியத்தை கூட எளிதாக செய்து முடிப்பீர்கள்.

மாணவர்களுக்கு கல்வியில்  வெற்றிபெற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும்.

சித்திரை:

இந்த மாதம்  பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் பதவிஉயர்வு உண்டாகும். நீண்ட தூர பயணங்களால் காரிய அனுகூலம்  உண்டாகும். சக பணியாளர்கள் மூலம் உதவியும் கிடைக்க பெறுவீர்கள்.

ஸ்வாதி:

இந்த மாதம் தொழிலில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பகைகள் விலகும். அடுத்தவர்களால் இருந்த பிரச்சனைகள் சரியாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். தர்மசிந்தனை அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள்.

விசாகம்:

இந்த மாதம் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் இருந்த தகராறுகள் நீங்கும். நீங்கள் செய்யும் காரியங்களுக்கு எல்லா தரப்பினரிடம் இருந்தும்  ஆதரவு கிடைக்கும். நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள்.

பரிகாரம்: ஆதிபராசக்திக்கு வேப்பிலை மாலை அணிவித்து தீபம் ஏற்றி வணங்க போட்டிகள் விலகும். மனோ தைரியம் அதிகரிக்கும்

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் – வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 20, 21, 

அதிர்ஷ்ட தினங்கள்: 12, 13, 14

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

விருச்சிகம்:

கிரகநிலை:

ராசியில்  குரு, தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  சனி (வ), கேது – அஷ்டம ஸ்தானத்தில் ராஹு-  தொழில் ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய், புதன், சுக்ரன் – லாப ஸ்தானத்தில்  சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

கருத்து வேற்றுமை நீங்கப் பெறும் விருச்சிக ராசி அன்பர்களே, இந்த மாதம் எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுப்பது தாமதமாகும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பதும் நல்லது. பணவரத்து எதிர்பார்த்த நேரத்தை விட தாமதமாக வந்து சேரும். ஆனால் பூர்வீக சொத்துக்களில் இருந்து பிரச்சனைகள் தீரும்.

குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.  வாகனம் வாங்கும் அல்லது புதுப்பிக்கும் பணியில் ஈடுபடுவீர்கள். பயணம் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும்.

தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். கடன் விவகாரங்களில் கவனம் தேவை. தொழில் தொடர்பான காரியங்கள் தாமதமாக நடக்கும். புதுத் தொழில் பற்றி ஆலோசிக்கலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயந்து வேலை செய்ய வேண்டி இருக்கும். உழைப்பு அதிகரிக்கும். உங்கள் உழைப்பிற்கான அங்கீகாரம் இல்லாமல் போகலாம்.

கலைத்துறையினருக்கு மகிழ்ச்சியான காலகட்டம். பணவரவு இருக்கும். வாய்ப்புகள் தேடிவரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த வாய்ப்புகளும் சிலருக்கு கிடைக்கும். 

அரசியல் துறையினருக்கு நிலவி வந்த பிரச்சனைகள் மறையும். யாருக்கும் வாக்கு கொடுக்கும் முன் ஆலோசனைகள் செய்து கொள்ளவும்.

பெண்கள் எதிலும் தயக்கம் காட்டாமல் துணிச்சலாக காரியங்களை செய்து முடிப்பீர்கள். அக்கம் பக்கத்தாரிடம் கவனமாக பழகவும்.

மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. பாடங்களை படிப்பதில் கூடுதல் கவனமும், ஆசிரியர்களிடத்தில் பேசும்போது நிதானமும் தேவை.

விசாகம்:

இந்த மாதம் உத்தியோகம் தொடர்பான பிரச்சனைகள்  நீங்கும். திறமை வெளிப் படும். சக ஊழியர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள்  நிர்வாக திறமை வெளிப்படும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எழுத்து தொழிலில் இருப்பவர்கள் முன்னேற்றம் அடைவார்கள். 

அனுஷம்:

இந்த மாதம் குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும்.  திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தை சாதகமான பலன் தரும். கணவன், மனைவிக்கிடையே சந்தோஷம் நிலவும்.  பிள்ளைகளுக்காக செய்யும் பணிகள் திருப்தி தரும்.  

கேட்டை:

இந்த மாதம்  மரியாதையும், கவுரவமும் அதிகரிக்கும். எல்லாதரப்பினரிடம் இருந்தும்  ஆதரவு கிடைக்கும். நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் தலை நிமிர்ந்து நடப்பார்கள். தொழில் வியாபாரம் முன்னேற்றமடையும்.

பரிகாரம்:  நடராஜர் பெருமானை வணங்கி வர எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். .

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் – புதன் – வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 22, 23,

அதிர்ஷ்ட தினங்கள்: 15, 16

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தனுசு:

கிரகநிலை:

ராசியில்  சனி (வ), கேது – களத்திர ஸ்தானத்தில்  ராஹூ – பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய், புதன், சுக்ரன் –  தொழில் ஸ்தானத்தில் சந்திரன் – அயன சயன போக ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

பிரச்சினைகள் ஏற்பட்டு பின்பு சரியாகும் தனுசு ராசி அன்பர்களே, இந்த மாதம் நீங்கள் மற்றவர் மத்தியில் உயர்ந்து நிற்பீர்கள். தைரியம் அதிகரிக்கும். சகோதரர்கள் வகையில் மிக நல்ல பலனை எதிர்பார்க்கலாம். நினைத்த வசதிகள் கிடைக்கும். எதிலும் லாபம் கிடைக்கும். மனதெம்பு உண்டாகும். வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் கை கூடும். வாக்கு வன்மையால் காரியம் கைகூடும். ஆன்மிக எண்ணம் உண்டாகும்.

குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும். உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த மனகிலேசங்கள் மறைந்து ஒற்றுமை ஓங்கும். பிள்ளைகளிடம் பாசம் அதிகரிக்கும். பெற்றோகள் – உறவினர்களின் அரவணைப்பு அதிகமாகும்.

தொழில் வியாபாரம் மெத்தனமாக காணப்பட்டாலும் பணவரவு இருக்கும். புதிய வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசி வியாபாரம் செய்வது நல்லது. போட்டிகளை கண்டு கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது. 

உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், டென்ஷனும் ஏற்பட்டு நீங்கும். வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. தீடீர் பயணங்கள் ஏற்படலாம்.

கலைத்துறையினருக்கு சோதனைகள் மிகுந்த காலமாக இருக்கும். வாய்ப்புகள் இருந்தாலும் உடல்நலம் ஒத்துழைக்காமல் போகலாம். சிறு பிரச்சனையாக இருந்தாலும் கவனமுடன் இருப்பது நல்லது

அரசியல்துறையினருக்கு எதிர்பார்த்த பண உதவி கிடைக்கலாம். மேலிடத்தை அனுசரித்து செல்வது நல்லது. பணிகள் நிறைவடைய அலைய வேண்டி இருக்கும். புதிய பொறுப்புகள் சிலருக்கு கிடைக்கலாம்.

பெண்களுக்கு மனோதைரியம் கூடும். சாமர்த்தியமான பேச்சால் எடுத்த காரியம் வெற்றிபெறும். எடுத்த விசயங்கள் அனைத்திலும் முன்னேற்றம் உண்டாகும்.

மாணவர்களுக்கு கல்விநிலை உயரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மற்றவர்களிடம் பாராட்டுகள் கிடைக்கும்.

மூலம்:

இந்த மாதம் போட்டிகள் குறையும். தொழில் தொடர்பான தகராறுகள் நீங்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்க பெறுவீர்கள். கடன் பிரச்சனை தீரும். கணவன், மனைவிக்கிடையே  மனம்விட்டு பேசுவதன் மூலம் கருத்து வேற்றுமை வருவதை தவிர்க்கலாம். பிள்ளைகளிம் அனுசரணையாக நடந்து கொள்வது நன்மை தரும்.

பூராடம்:

இந்த மாதம்  குடும்பத்திற்கு தேவையான  பொருட்கள் வாங்குவதன் மூலம் செலவு உண்டாகும். சகோதரர்கள் மூலம் உதவி கிடைக்கும். உறவினர்கள் வருகை இருக்கும் அதே நேரத்தில் அவர்களுடன் வாக்குவாதம் செய்வதை  தவிர்ப்பது நல்லது.  

உத்திராடம்: 

இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள்  எந்த ஒரு வேலையையும் செய்து முடிப்பதில் வேகம் காட்டுவார்கள். சக ஊழியர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். குலதெய்வத்தை வணங்குவதில் ஏற்பட்ட தடை, தாமதங்கள் விலகும்.

பரிகாரம்:  பைரவருக்கு அர்ச்சனை செய்து வணங்க மனகஷ்டம் நீங்கும். எல்லா நன்மைகளும் உண்டாகும். 

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் – வியாழன் – வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 24, 25

அதிர்ஷ்ட தினங்கள்: 17, 18, 19

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மகரம்:

கிரகநிலை:

ரண ருண ஸ்தானத்தில்  ராஹூ – அஷ்டம ஸ்தானத்தில்  சூர்யன், செவ்வாய், புதன், சுக்ரன் – பாக்கிய ஸ்தானத்தில்  சந்திரன் – லாப ஸ்தானத்தில் குரு – அயன சயன போக ஸ்தானத்தில்   சனி (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

உழைப்பு அதிகமாக இருக்கும் மகர ராசி அன்பர்களே, இந்த மாதம் வீண் செலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகலாம். காரியங்கள் முடிவதில் தாமதபோக்கு காணப்படும். தேவையற்ற மன சஞ்சலம் உண்டாகலாம். யாரையும் நேருக்கு நேர் எதிர்க்காமல் அனுசரித்து செல்வது நன்மைதரும். கெட்ட கனவுகள் தோன்றலாம். வயிறு தொடர்பான நோய்கள் ஏற்பட்டு நீங்கும்.

குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும்.  வேடிக்கை வினோத நிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் சென்று கலந்து கொள்ள நேரிடும். சிலருக்கு திருமணம் கைகூடும்.  கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் ஏற்படும். பிள்ளைகளால் நன்மை கிடைக்கும்.

தொழில், வியாபாரம் சுமாராக நடக்கும் பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் இருக்கும். ஆர்டர்கள் பெறுவதில் தாமதம் ஏற்பட்டு நீங்கும். 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை  செய்து முடித்து நன்மை பெறுவீர்கள். கேட்ட பண உதவி கிடைக்கப் பெறுவீர்கள்.

கலைத்துறையினர் கடுமையாக உழைப்பின் மூலம் முன்னேற வேண்டி இருக்கும். நண்பர்களின் உதவியால் நன்மைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது நல்லது.

அரசியல் துறையினருக்கு தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. எல்லாவகையிலும்  நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய தூண்டும். பிரிந்து சென்றவர்களை மீண்டும்  சந்திக்க நேரலாம்.

பெண்களுக்கு பணவரத்து திருப்தி தரும். வீண் பேச்சை குறைப்பது நன்மை தரும். தேவையான பொருட்களை வாங்கி குவிப்பீர்கள்.

மாணவர்களுக்கு கல்விக்கான பணிகளில் தாமதம் உண்டாகும். உழைப்பு அதிகரிக்கும்.

உத்திராடம்:

இந்த மாதம் தொழிலதிபர்கள் தொழிலை விரிவு செய்வார்கள். எதிர்பார்த்த பணவரவுகள் வந்துசேரும். வியாபாரிகள் சிலர் வெளிநாட்டில் கிளைகள் தொடங்குவார்கள்.  கலைத்துறையினருக்கு முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு மதிப்பு உயரும்.

திருவோணம்:

இந்த மாதம் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வாகன சேர்க்கை ஏற்படும். சகோதரர்கள் மத்தியில் ஒற்றுமை கூடும். சொத்துப் பிரச்சினையில் நல்ல முடிவு வரும். வழக்குகள் சாதகமாகும்.  திருமணம் நடத்துவதில் ஏற்பட்ட தடை, தாமதங்கள் நீங்கும். வேலைசெய்யும் பிள்ளைகள் குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்வார்கள்.

அவிட்டம்:

இந்த மாதம் உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வுகள் வந்துசேரும். தொழிலதிபர்கள் தொழிலை அபிவிருத்தி செய்வார்கள். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். பிள்ளைகள் பெற்றோர்களால் பாராட்டப்படுவார்கள். நீண்டகாலமாக இருந்துவந்த சொத்துப் பிரச்சினைகள் நல்ல தீர்வுக்கு வரும்.

பரிகாரம்: துர்க்கை அம்மனை வணங்க எல்லா நலனும் உண்டாகும். எதிர்ப்புகள் நீங்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் – வியாழன் – வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 26, 27, 28

அதிர்ஷ்ட தினங்கள்: 20, 21

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கும்பம்:

கிரகநிலை:

பஞ்சம ஸ்தானத்தில்  ராஹூ – களத்திர ஸ்தானத்தில்  சூர்யன், செவ்வாய், புதன், சுக்ரன் – அஷ்டம ஸ்தானத்தில்   சந்திரன் – தொழில் ஸ்தானத்தில் குரு – லாப ஸ்தானத்தில் சனி (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

லாபகரமான சூழ்நிலையை சந்திக்கப் போகும்  கும்ப ராசி அன்பர்களே, இந்த மாதம் வெளியூர் பயணவாய்ப்புகள் உண்டாகலாம். சோம்பலும் சோர்வும் உண்டாகலாம். மனதில் தேவையற்ற எண்ணங்கள் ஏற்படும். ஆனாலும் உங்களுக்கு இருக்கும் தன்னம்பிக்கையால் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்வீர்கள். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். திடீர் செலவு உண்டாகலாம். காரியங்களில் தடைதாமதம் ஏற்படும்.

குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் தொல்லைகள்  ஏற்படலாம். தாய் வழி உறவினர்களிடம் வீண் மனஸ்தாபம் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே  கருத்து வேற்றுமை வரலாம். பிள்ளைகள் மேல் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. 

தொழில் வியாபாரம் எதிர்பார்த்தபடி நடக்காமல் சற்று மந்தமாக  காணப்படும். பணவரத்து தாமதமாகும். யோசித்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும்.

 உத்தியோகத்தில் இருப்பவர்கள்  உழைப்பு அதிகமாகும். முயற்சிகள் பயன்தராமல் போகலாம். சாதாரணமாக செய்யக்கூடிய காரியங்களைக் கூட அதிகமாக முயற்சிகள் எடுத்து செய்ய வேண்டியதிருக்கும்.

கலைத்துறையினருக்கு பொறுமையுடன் செயல்பட வேண்டும். மறைமுக போட்டிகளால் நெருக்கடிகளைச் சந்திக்கலாம். கவனமாகச் செயல்பட்டால் லாபம் பெறலாம். அயல்நாட்டில் இருந்து நல்ல செய்திகள் வந்துசேரும்.

அரசியல்வாதிகள் வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும். மேலிடத்திலிருந்து முக்கிய பொறுப்புகள் உங்கள் கையில் வரும். சந்தோஷமான செய்தி வந்து சேரும்.

பெண்கள் யாரையும் எதிர்த்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நன்மை தரும். வீண் மனக்கவலை, காரிய தாமதம் உண்டாகலாம் கவனம் தேவை.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சில திட்டங்களை ஆலோசிப்பீர்கள்.

அவிட்டம்:

இந்த மாதம் அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் வந்துசேரும். புதிய வீடுகட்டும் எண்ணம் நிறைவேறும். உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்தபடி வருமானம் கிடைக்கும். குடும்பத்தேவைகளைப் பூர்த்திசெய்வீர்கள்.

ஸதயம்:

இந்த மாதம் பிள்ளைகளுக்கு நல்ல வரன் அமையும். பிரிந்து வாழ்ந்த தம்பதியர்கள் ஒன்றுசேர்வார்கள். வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். எதிர்பார்த்த அரசு வேலை வந்துசேரும். ஒருசிலர் எதிர்பார்த்துக் காத்திருக்கும் பதவி உயர்வும், விரும்பிய இடத்துக்கு மாறுதலும் வந்துசேரும். 

பூரட்டாதி:

இந்த மாதம் பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். தொழிலதிபர்கள் தொழிலை விரிவு செய்து, புதிய பங்குதாரர்களையும் பெறுவார்கள். அரசு ஊழியர்களின் வேலைப் பளு குறையும். உங்களுக்கு நன்மைகள் தரும் நாளாக இருக்கும். தொட்ட காரியம் அனைத்திலும் நன்மைகளைப் பெறுவீர்கள். நல்ல வருவாயையும் அடைவீர்கள். 

பரிகாரம்:  விநாயகர் அகவல் சொல்லி விநாயகரை வணங்க நோய் நீங்கும். மனகுழப்பம் தீரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன் – வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 1, 2, 29, 30

அதிர்ஷ்ட தினங்கள்: 22, 23

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மீனம்:

கிரகநிலை:

சுக ஸ்தானத்தில் ராஹூ – ரண ருண ஸ்தானத்தில்   சூர்யன், செவ்வாய், புதன், சுக்ரன் – களத்திர ஸ்தானத்தில்  சந்திரன் – பாக்கிய ஸ்தானத்தில் குரு – தொழில் ஸ்தானத்தில்   சனி (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

மனம் மகிழும் படியான சூழ்நிலையில் இருக்கும் மீன ராசி அன்பர்களே, இந்த மாதம் எதையும் சாதிக்கும் திறமை அதிகமாகும். நினைத்த காரியத்தை நினைத்தபடி நடத்தி முடிக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். தேவையற்ற மனகவலை உண்டாகும். வீண் ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நலம் தரும்.

குடும்பத்தில் அமைதி குறையலாம். நிதானமாக பேசி பழகுவது நல்லது. கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நன்மை தரும். பிள்ளைகள் மீது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொருட்களை பாதுகாப்பாக வைப்பது அவசியம்.

தொழிலில் இருந்து வந்த நிதி பிரச்சனை நீங்கும். வியாபாரம் தொய்வு நீங்கி சூடுபிடிக்கும். வாடிக்கையாளர்களின் வரவு கண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். தொழிலாளர்கள் உங்கள் மீது திருப்தி அடைவார்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள்  எதையும் குழப்பத்துடனேயே செய்ய நேரிடும். சக ஊழியர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உங்களை சிலர் காட்டிக் கொடுக்க நினைப்பர்.

கலைத்துறையினருக்கு நீண்டநாட்களாக இருந்த மன அழுத்தம் நீங்கும்படியான சூழல் உருவாகும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு இருக்கும். எனினும் கவனமுடன் செயல்படுவது நன்மை தரும்.

அரசியல் துறையினருக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கூடுதல் கவனத்துடன் செய்யும் காரியங்கள்  சாதகமான பலன் தரும். மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது.எல்லாவகையிலும் நல்லதே நடக்கும். கிரகங்கள் உங்களுக்கு அனுகூலமான பலனைத் தரும். பணவரத்து அதிகரிக்கும்.

பெண்களுக்கு நினைத்த காரியத்தை செய்து முடிக்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீண் மனக்கவலை உண்டாகும்.

மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைப்பதில் தடை ஏற்படலாம். கவனமாக படிப்பது நல்லது.

பூரட்டாதி:

இந்த மாதம் குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். தம்பதிகளிடையே இணக்கம் கூடும். வீட்டில் தடைப்பட்டுவந்த சுபகாரியங்கள் இனிதே நடக்கும். பிள்ளைகளுக்கு திருமண வரன்கள் கை கூடி வரும். தாய்மாமன் வழியில் அனுகூலம் ஏற்படும்.

உத்திரட்டாதி:

இந்த மாதம் வீண் சச்சரவுகள் வர வாய்ப்புண்டு. குழந்தை பாக்கியம் கிட்டும். பிள்ளைகள் வீட்டின் நிலையை அறிந்து நடப்பார்கள். பெற்றோர் உடல்நலனில் கவனம் தேவை. உழைப்பதற்குண்டான வாய்ப்புகள் நிறைய கிடைக்கும். தனியார் பணியில் இருப்பவர்கள் அதிகமான வேலைப் பளுவை சந்திப்பார்கள்.

ரேவதி:

இந்த மாதம் பங்குதாரர்களிடம் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். புதிதாக தொழில் தொடங்க போட்ட திட்டம் தள்ளிப்போகும். குடும்பத்தினரிடம் அமைதியாக செல்லவேண்டும். இளைஞர்கள் தகுதிக்கேற்ப புதிய பதவிகளை அடைவார்கள். 

பரிகாரம்: நவகிரகத்தில் குருபகவானை முல்லை மலர்சூடி வணங்க  எல்லா நன்மைகளும் உண்டாகும். செல்வநிலை உயரும்..

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு – புதன் – வியாழன்

சந்திராஷ்டம தினங்கள்: 3, 4

அதிர்ஷ்ட தினங்கள்: 24, 25

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Continue Reading

மாத பலன்

உங்கள் ராசிக்கான ஆகஸ்ட் 2019 மாத ராசிபலன்கள்!

Published

on

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

கிரக நிலை:

தைரிய வீரிய ஸ்தானத்தில் புதன்,  ராஹூ – சுகஸ்தானத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய், சுக்கிரன்  – அஷ்டம ஸ்தானத்தில்  குரு (வ)  – பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

அதிக புத்தி சாதுர்யத்துடன் இருக்கும் மேஷ ராசி அன்பர்களே, இந்த மாதம்  நண்பர்களுடன் சேர்ந்து செய்யும் காரியம் சாதகமான பலன் தரும். திட்டமிட்டு செய்யும் பயணங்கள் வெற்றி பெறும். செலவு செய்வது பற்றி யோசனை செய்து தேவையென்றால் மட்டுமே செய்வீர்கள்.

தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்கள்  கூடுதல் முயற்சிக்கு பிறகு எதிர்பார்த்தபடி  நடந்து முடியும். பயணங்கள் செல்ல நேரிடலாம். புத்தியை உபயோகித்து வியாபாரத்தில் புதுமையை செய்வது பற்றிய ஆலோசனையில் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பிடித்தமான இடத்திற்கு வேலை மாற்றம் கிடைக்கலாம்.

குடும்பத்தில் மனைவி குழந்தைகளுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு  நீங்கும். உறவினர்கள் நண்பர்கள் உதவ முன்வந்தாலும்  உதவி தாமதமாக கிடைக்கும்.  சகோதரர்களால் மனவருத்தம் உண்டாகும்படியான சம்பவம் நேரலாம் கவனம் தேவை.

கலைத்துறையினருக்கு நீண்டநாட்களாக இருந்த மன அழுத்தம் நீங்கும்படியான சூழல் உருவாகும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு இருக்கும். எனினும் கவனமுடன் செயல்படுவது நன்மை தரும்

அரசியல்வாதிகளுக்கு  மனம் மகிழும்படியான சுழ்நிலை உருவாகும். வெளியூர் செல்ல நேரிடும். கட்சிப்பணிகள் மிக துரிதமாக நடப்பதற்கான சூழல் உருவாகும்.

பெண்களுக்கு மனதில் மகிழ்ச்சி உண்டாகும்படியான சூழ்நிலை உண்டாகும். வெளியூர் பயணம் செல்ல நேரலாம். ஆன்மீகத்தில் அதிக நாட்டம் ஏற்படும். ஆன்மீக ஸ்தலங்கள் சென்று வருவீர்கள்

மாணவர்கள் எதையும் அவசரமாக செய்யாமல் யோசித்து செயல்படுவது நல்லது. கல்வியை பற்றிய கவலை குறையும்

அச்வினி:

இந்த மாதம் எதிர்பார்க்கும் கடனுதவிகள் தாமதப்படுவதால் தொழிலை அபிவிருத்திச் செய்ய முடியாத நிலைகள் ஏற்படும். திருமண சுபகாரிய முயற்சிகளை சில காலம் தள்ளிவைப்பது நல்லது. கலைஞர்களுக்கு வாய்ப்புகள் தேடிவந்தாலும் பணவரவில் சில தடைகளும் நிலவும்.

பரணி:

இந்த மாதம் கணவன்- மனைவி ஒற்றுமை பலப்படும். பொன், பொருள், ஆடை, ஆபரணம் சேரும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளில் செய்ய நினைக்கும் காரியங்களில் சாதகமான பலனை அடைவார்கள். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் தொழிலை நல்லமுறையில் அபிவிருத்திச் செய்யமுடியும்.

கார்த்திகை 1 – ம் பாதம்:

இந்த மாதம் பெரிய ஆர்டர்களும் கிடைக்கப்பெற்று உங்களின் தகுதியும், தரமும் உயரும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகையை எளிதில் ஈடுபடுத்தமுடியும். பெரிய மனிதர்களின் நட்பும் ஆதரவும் உங்களின் லாபத்தை அதிகரிக்கும்.

பரிகாரம்:  செவ்வாய் தோறும் முருகனை அர்ச்சனை செய்து வணங்கி வழிபட மனக்கவலை தீரும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்

அதிர்ஷ்ட கிழமைகள்: பச்சை, மஞ்சள்

சந்திராஷ்டம தினங்கள்: 9, 10

அதிர்ஷ்ட தினங்கள்: 3, 4, 30, 31

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)

கிரக நிலை:

தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன்,  ராஹூ – தைரிய வீரிய ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய், சுக்கிரன்  – களத்திர ஸ்தானத்தில்  குரு (வ)  – அஷ்டம ஸ்தானத்தில் சனி (வ), கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

புதிய ஆர்டர்களைப் பெறப் போகும் ரிஷப ராசி அன்பர்களே, இந்த மாதம் எதையும் ஆராய்ந்து பார்த்த பிறகே அதை செய்ய முற்படுவீர்கள். தொட்ட காரியம் வெற்றியில் முடிந்தாலும் சற்று கால தாமதம் ஆகலாம். பணவரத்து கூடும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.

தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்கள்  சாதகமாக நடந்து முடிய திறமையாக செயல்படுவீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள். எதிலும் அவசரப்படாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஏற்கனவே  செய்த திறமையான பணிகளுக்கு  உரிய நற்பலனை பெறுவார்கள்.

குடும்பத்தில் இருப்பவர்களிடம் தன்மையாக பேசி பழகுவது நல்லது. தகப்பனாருடன் வீண் தகராறு ஏற்படலாம். கவனம் தேவை. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் பேசி செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். குழந்தைகளுடன் நிதானமாக பேசி அவர்களுக்கு எதையும் புரிய வைப்பது நல்லது. அவர்களது முன்னேற்றத்துக்காக பாடுபடுவீர்கள்.

கலைத்துறையினருக்கு சோதனைகள் மிகுந்த காலமாக இருக்கும். வாய்ப்புகள் இருந்தாலும் உடல்நலம் ஒத்துழைக்காமல் போகலாம். கவனமுடன் செயல்படுவது நல்லது. சிறு பிரச்சனையாக இருந்தாலும் கவனமுடன் இருப்பது நல்லது.

அரசியல்வாதிகளுக்கு சிறு சிறு பிரச்சனைகள் வந்து போகும். முன்னேற்றத்தில் தடைகள் இருக்கும். பொறுமையாக கையாள்வதன் மூலம் பெரிய பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். மிகவும் பொறுமையாக செயல்பட வேண்டிய காலகட்டமிது.

பெண்கள் அடுத்தவர் பேசுவதை காதில் வாங்காமல் தவிர்ப்பது நல்லது. நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த பிரச்சனைகள் குறையும். மனதில் எதிர்காலம் பற்றிய சிந்தனை உண்டாகும்

மாணவர்களுக்கு எதிர்காலம் பற்றிய திட்டங்கள் மனதில் தோன்றும். கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள்.

கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்:

இந்த மாதம் உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பும், மரியாதையும் இருக்கும். மக்களின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். வெளியூர், வெளிநாடு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின்னே அனுகூலப்பலனை அடையமுடியும்.

ரோகிணி:

இந்த மாதம் சாதகமான அமைப்பு என்று கூறமுடியாது. தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். அசையா சொத்துகளால் வீண்விரயங்கள் ஏற்படும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வு பாதிப்படையும். எதையும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள்.

மிருகசீர்ஷம்:

இந்த மாதம் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறையும். உற்றார்- உறவினர்கள் மற்றும் நண்பர்களால் தேவையற்ற பிரச்சினைகளைச் சந்திப்பீர்கள். நீங்கள் நல்லதாக நினைத்துச் செய்யும் காரியங்களும் சில நேரங்களில் உங்களுக்கே தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் நவகிரகத்தில் சுக்கிரனுக்கு தீபம் ஏற்றி பூஜை செய்ய பணவரத்து கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஆரஞ்சு, மஞ்சள்

சந்திராஷ்டம தினங்கள்: 11, 12, 13

அதிர்ஷ்ட தினங்கள்: 5, 6

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

கிரக நிலை:

ராசியில் புதன்,  ராஹூ – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய், சுக்கிரன் – ரண ருண ரோக ஸ்தானத்தில்  குரு (வ)  – களத்திர ஸ்தானத்தில் சனி (வ), கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

கவலைகளை பொடிப்பொடியாக்கும் மிதுன ராசி அன்பர்களே, இந்த மாதம்  சிற்சில பிரச்சனை உண்டாகும். நீங்கள் நல்லதாக பேசினாலும் எதிரில் உள்ளவர்கள் அதை தவறான கண்ணோட்டத்துடனேயே பார்ப்பார்கள்.  மற்றவர்களின் செயல்களால் மனஅமைதி கெடவும்  வாய்ப்பு உண்டு.  பணவரவு ஏற்படும். நீண்ட நாட் களாக இருந்து வந்த பிரச்சனை தீரும்.

தொழில் வியாபாரம் வேகம் பிடிக்கும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். தொழில் வியாபாரம் பற்றி மனதில் இருந்த கவலை நீங்கி தைரியம் உண்டாகும். உத்தியோகத்தில்  இருப்பவர்கள் அலுவலகத்தில் கொடுத்த வேலையை சிறப்பாக  செய்து முடிப்பார்கள்.  அலுவலக வேலையாக வெளியூர் செல்ல நேரலாம்.

குடும்பத்தில் இருப்பவர்களால் கூடுதல் வருமானம் கிடைக்கும். முக்கிய நபர்களின் அறிமுகத்தால் நன்மை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே சுமூகமான நிலை காணப்படும். பிள்ளைகளுக்காக கூடுதல் நேரம் செலவு செய்ய வேண்டி இருக்கும்

கலைத்துறையினருக்கு மிகவும் அனுகூலமான காலமிது. வாய்ப்புகள் குவியும். புத்திசாதுர்யத்துடன் கையாள்வதால் லாபமான காலமாக அமையக்கூடிய வாய்ப்பு உண்டு.

அரசியல் துறையினருக்கு சாதகமான  செயல்களை ஆராய்ந்து செய்வது நன்மை பயக்கும். மேலிடத்தின் பார்வை  அதிகரிக்கும்  அமையும்.

பெண்கள் எந்த ஒரு செயலை செய்யும் முன்பும் அதில் இருக்கும் நல்லது கெட்டதை ஆராய்ந்து பார்த்த பின் அதில் ஈடுபடுவது நல்லது. பணவரத்து திருப்தி தரும்.

மாணவர்கள் சக மாணவர்கள், நண்பர்களிடம் அதிகம் பேசி பழகுவதை தவிர்ப்பது நல்லது.  பாடங்களில் கூடுதல் கவனத்துடன் படிப்பது நன்மை தரும்.

மிருகசீர்ஷம் 3,4 பாதங்கள்:

இந்த மாதம் தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் விலகி புதிய வாய்ப்புகள் தேடிவரும். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடுகளால் அபிவிருத்தியைப் பெருக்கிக்கொள்ள முடியும். பயணங்களால் அனுகூலம் இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்குத் தடைப்பட்ட பதவி உயர்வுகள் கிடைக்கும்.

திருவாதிரை:

இந்த மாதம் உடன்பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகளால் வேலைப்பளு குறையும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். வெளியூர், வெளிநாடு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெறுவதால் பணவரவுகளும் தேவைக்கேற்றபடி இருக்கும்.

புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்:

இந்த மாதம் குடும்பத்தேவைகளைப் பூர்த்தி செய்துவிடமுடியும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமானநிலை இருக்கும் என்றாலும் முடிந்தவரை பெரிய தொகையைப் பிறருக்குக் கடனாகக் கொடுப்பதைத் தவிர்த்துவிடுவது நல்லது.

பரிகாரம்: சனிக்கிழமையில் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்து வெங்கடாஜலபதியை வணங்க பிரச்சனைகள் தீரும். பண கஷ்டம் தீரும்..

அதிர்ஷ்ட கிழமைகள்: பச்சை, வெள்ளை

சந்திராஷ்டம தினங்கள்: 14, 15,

அதிர்ஷ்ட தினங்கள்: 7, 8

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்):

கிரக நிலை:

ராசியில் சூரியன், சந்திரன், செவ்வாய், சுக்கிரன் – பஞ்சம ஸ்தானத்தில்  குரு (வ)  – ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ), கேது – விரைய ஸ்தானத்தில் புதன்,  ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

வாழ்க்கையில் முக்கிய முடிவுகளை எடுக்கும் கடக ராசி அன்பர்களே, இந்த மாதம் எதிலும் கவனமாக இருப்பது நன்மை தரும்.  பணவரத்தை அதிகப்படுத்தும். பேச்சின் இனிமை சாதூரியம் இவற்றால் எடுத்த காரியம் கைகூடும். புண்ணிய காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். தந்தையுடன் அனுசரித்து செல்வது நல்லது. பூர்வீக சொத்துக்கள் மூலம் வரவேண்டிய லாபம் தாமதப்படும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வாக்குவன்மையால் எளிதாக தங்களது தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்க பெறுவார்கள். பிரச்சனைகளை பேசியே தீர்த்து விடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர் கள் பதவி உயர்வு கூடுதல் பொறுப்பு கிடைக்க பெறுவார்கள். எதிலும் திட்ட மிட்டு செயலாற்றுவதால் மேல் அதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கும்

குடும்பத்தில் வாக்குவாதத்தையும், கோபத்தையும் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கை துணையுடன்  அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. விருந்தினர்கள் வந்து செல்வார்கள்..

கலைத்துறையினருக்கு மிகவும் நன்மை பயக்கும் காலமாக இது அமையும். தொடர் பணிகளால் களைப்படைவீர்கள். என்னும் ஓய்வு எடுக்க நேரம் இல்லாமல் உழைக்க வேண்டி இருக்கும். வாழ்க்கையின் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு இனிமையான செய்திகள் தேடி வரும். நீண்ட நாளாக எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். புதிய நண்பர்களால் தேவையில்லாத பிரச்சனைகள் உண்டாகும் வாய்ப்புகள் இருப்பதால் கவனமுடன் இருப்பது நல்லது

பெண்கள் எந்த ஒரு காரியத்தை யும் செய்து முடிக்க கூடுதல்நேரம் உழைக்க வேண்டி இருக்கும். பணவரத்து எதிர் பார்த்தபடி இருக்கும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

மாணவர்களுக்கு பாடங்கள் படிப்பது மனதில் மகிழ்ச்சியை உண்டாக்கும். தேர் வில் அதிக மதிப்பெண் குறிக்கோளுடன்  செயல்படுவீர்கள்..

புனர்பூசம் 4 – ம் பாதம்:

இந்த மாதம் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவச் செலவுகளை உண்டாக்கும். குடும்பத்தில் உள்ளவர்களும் அடிக்கடி உடல்நிலை பாதிப்புகளை எதிர்கொள்வார்கள். தூக்கமின்மை, உடல்நிலையில் சோர்வு, ஞாபக மறதி, மந்தமான நிலைகள் ஏற்படும்.

பூசம்:

இந்த மாதம் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும். பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்தால் மனஉளைச்சல்கள் ஏற்படாமல் இருக்கும். பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.

ஆயில்யம்:

இந்த மாதம் குடும்பத்தில் சிறுசிறு வாக்குவாதங்கள் உண்டாகி ஒற்றுமைக் குறைவுகளை ஏற்படுத்தும். சுபகாரிய முயற்சிகள் சில தடைகளுக்குப்பின் கைகூடும். பொருளாதாரநிலை ஓரளவுக்கு திருப்தியளிப்பதாக இருந்தாலும் வரவுக்குமீறிய செலவுகளையும் எதிர்கொள்ள நேரிடும்.

பரிகாரம்: பௌர்ணமி விரதமிருந்து அம்மனை வழிபட்டு வர வெற்றி உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஊதா, வெள்ளை

சந்திராஷ்டம தினங்கள்: 16, 17, 18

அதிர்ஷ்ட தினங்கள்: 9, 10

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

கிரக நிலை:

சுகஸ்தானத்தில்  குரு (வ)  – பஞ்சம ஸ்தானத்தில் சனி (வ), கேது – லாப ஸ்தானத்தில் புதன்,  ராஹூ – விரைய ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய், சுக்கிரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

கூடுதலாக உழைக்க காத்திருக்கும் சிம்ம ராசி அன்பர்களே, இந்த மாதம் புத்தி கூர்மையுடன் எதையும் செய்வீர்கள். எதிர்காலம் தொடர்பான திட்டங்கள் மனதில் தோன் றும். எதையும் முன்னேற்பாட்டுடன் செய்வீர்கள். விவேகம் உண்டாகும்.

தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் இருக்கும். வாடிக்கையாளர்களிடம் சாமர்த்தியமாக பேசுவதன் மூலம் வியாபாரம் வளர்ச்சி பெறும்.  அடுத்தவர்கள் கூறும் ஆலோசனைகளை ஏற்கும் போது கவனம் தேவை. அவற்றை ஆராய்ந்து பார்த்து செய்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு  வேலை கிடைக்கலாம்.

குடும்பத்தில் ஏதாவது ஒரு விஷயம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்படும். கணவன், மனைவி அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்கள் உறவினர்களுடன் மனஸ்தாபம் உண்டாகலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது. குடும்பத்துடன் ஆன்மீக பயணங்கள் சென்று வருவீர்கள்

கலைத்துறையினருக்கு மகிழ்ச்சியான காலகட்டம். பணவரவு இருக்கும். வாய்ப்புகள் தேடிவரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த வாய்ப்புகளும் சிலருக்கு கிடைக்கும்.

அரசியல்வாதிகள் வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும். மேலிடத்திலிருந்து முக்கிய பொறுப்புகள் உங்கள் கையில் வரும். சந்தோஷமான செய்தி வந்து சேரும்.

பெண்கள் புத்தி கூர்மையுடன் செயல்பட்டு காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது.

மாணவர்களுக்கு கல்வியை பற்றிய பயம் நீங்கும். குழப்பம் இல்லாத தெளிவான மனதுடன் பாடங்களை படித்து வெற்றி பெறுவீர்கள்.

மகம்:

இந்த மாதம் உற்றார்- உறவினர்களின் வருகையால் சில மனசஞ்சலங்கள் உண்டாகும். முயற்சிகள் அனைத்திலும் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பது நல்லது.

பூரம்:

இந்த மாதம் எதிர்பார்க்கும் லாபத்தை அடையமுடியாது. கொடுக்கல்-வாங்கலிலும் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியாமல்போகும். கடன் தொகைகளை வசூலிப்பதில் தடைகள் உண்டாகும். வம்பு வழக்குகள் சாதகமாக இருக்கும். எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது.

உத்திரம் 1ம்- பாதம்:

இந்த மாதம் தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்திச்செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. கையிலிருக்கும் ஆர்டர்களைக்கூட முடித்துக்கொடுப்பதில் சிக்கல்கள் ஏற்படும். அரசுவழிகளில் எதிர்பார்க்கும் உதவிகள் தடைகளுக்குப்பின் கிடைக்கும்.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமையில் சிவனை வில்வ அர்ச்சனை செய்து வணங்க மனதில் தைரியம் பிறக்கும். காரிய வெற்றி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: நீலம், பிரவுன்

சந்திராஷ்டம தினங்கள்: 19, 20,

அதிர்ஷ்ட தினங்கள்: 11, 12, 13

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

கிரக நிலை:

தைரிய வீரிய ஸ்தானத்தில்  குரு (வ)  – சுகஸ்தானத்தில் சனி (வ), கேது – தொழில் ஸ்தானத்தில் புதன்,  ராஹூ – லாப ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய், சுக்கிரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

உடல் நிலையில் தொய்வை சந்திக்க காத்திருக்கும் கன்னி ராசி அன்பர்களே, இந்த மாதம் எந்த ஒரு காரியமும் வெற்றியடைவதுடன் லாபகரமாகவும் இருக்கும். பணவரத்து அதிகரிக்கும். செயல் திறன் மேலோங்கும். இழுபறியாக இருந்த ஒரு சில விஷயங்கள் நல்ல முடிவுக்கு வரும். வீடு, வாகனங்கள் வாங்கும் நிலை உருவாகும்.

தொழில், வியாபாரம் முன்னேற்றம் காணப்படும். விவசாயம், ரியல்எஸ்டேட் தொழில் லாபம் தரும். வியாபார வளர்ச்சிக்கு புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிலுவையில் உள்ள பணம் கைக்கு கிடைக்கும். பயணங்களால் லாபம் கிடைக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்வது அமைதியை தரும். கணவன், மனைவி இருவரும் சேர்ந்து எடுக்கும் முடிவுகளால் குடும்ப விஷயங்கள் சாதகமாக நடக்கும். பிள்ளை களால் பெருமை சேரும்.

கலைத்துறையினருக்கு பணவரவு ஏற்ற இறக்கமாக இருக்கும். எடுத்த முடிவை செயல்படுத்தும் முன் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசிப்பது நல்லது. எந்த ஒரு காரியத்திலும் அவசர முடிவு எடுக்க தூண்டும்.

அரசியல்வாதிகளுக்கு லாபமான காலமாக அமையும். பண வரவு திருப்தி தரும். எதிர்பார்த்த செய்தி உங்களுக்கு வந்து சேரும். சிலர் மேலிடத்தின் நேரடி அங்கீகாரத்தைப் பெறுவர்.

பெண்கள் உங்களது செயல்களுக்கு மற்றவர்களின் ஆதரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மாணவர்கள் மற்றவர்களை அனுசரித்து செல்வது நன்மைதரும். விளையாட்டுகளில் கவனம் செலுத்துவதுடன் கல்வியிலும்  கூடுதல் கவனம் நன்மை தரும்.

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்:

இந்த மாதம் கூட்டாளிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல், டென்ஷனைக் குறைத்துக்கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் உழைப்பிற்கான முழுப்பலனை அடையமுடியும். அதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும்.

ஹஸ்தம்:

இந்த மாதம் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைக்கப்பெற்றாலும் சில நேரங்களில் அதிகநேரம் உழைக்க வேண்டியிருக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் அலைச்சலை ஏற்படுத்துவதுடன் குடும்பத்தைவிட்டும் பிரியநேரிடும். உடன்பணிபுரிபவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும்.

சித்திரை 1, 2 பாதங்கள்:

இந்த மாதம் புதிய வேலை வாய்ப்புகள் தகுதிக்கேற்றபடி அமையும். பெண்கள் குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை நீடிக்கும். கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடுகள், வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் உண்டாகாது. உடல்நிலையில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றி மறையும்.

பரிகாரம்: நவகிரக புத பகவானுக்கு பச்சைபயிறு படைத்து வணங்கி வர மனதில் தைரியம் உண்டாகும்.  எதிர்ப்புகள் அகலும். எதிலும் வெற்றி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: பச்சை, நீலம்

சந்திராஷ்டம தினங்கள்: 21, 22

அதிர்ஷ்ட தினங்கள்: 14, 15

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம்  பாதம்)

கிரக நிலை:

தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில்  குரு (வ)  – தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ), கேது –  பாக்கிய ஸ்தானத்தில் புதன்,  ராஹூ – தொழில் ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய், சுக்கிரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

உறவினர் வருகையை விரும்பும் துலா ராசி அன்பர்களே, இந்த மாதம் பல்வேறு நன்மைகள் உண்டாகும். கடினமான பணிகளையும் செய்து முடிக்கும் துணிச்சல் ஏற்படும். காரிய வெற்றியால் மனதில் சந்தோஷம் உண்டாகும். இருக்கும் இடத்தை விட்டு வெளியில் சென்று தங்க நேரிடும்.

தொழில் வியாபாரம் தொடர்பாக அலைச்சல் உண்டாகும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். பணவரத்து திருப்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் சொல்லியபடி நடப்பது நன்மை தரும். சிலர் புதிய வேலைக்கு முயற்சி செய்வார்கள். அது கிடைப்பது தாமதமாகலாம்.

குடும்பத்தில் சுமூகமான சூழ்நிலை காணப்படும். வாழ்க்கை துணை உங்களுக்கு பல விதத்திலும் உதவிகள் செய்வார். உறவினர் வருகை இருக்கும். அவர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. அனுபவ பூர்வமான அறிவு திறனை உபயோகித்து எதிலும் வெற்றி காண்பீர்கள்

கலைத்துறையினருக்கு  உடனிருப்பவர்களுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டு நீங்கும். வாக்குவாதங்களைத் தவிர்த்து சாதுர்யமாக கையாள்வது நல்லது. வரவேண்டிய பணம் வந்து சேரும்

அரசியல்வாதிகளுக்கு உற்சாகமான காலமாக அமையும். கட்சிப் பணிகளுக்காக கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். அதற்கான பலனும் பெறுவீர்கள். நேரத்தை வீணாக்காமல் உபயோகப் படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம்

பெண்களுக்கு பணவரத்து அதிகரிக்கும். எந்த ஒரு காரியமும் லாபகரமாய் நடந்து முடியும். செயல் திறன் கூடும்.

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற நண்பர்களின் உதவி கிடைக்கும். வீண் செலவை குறைப்பது நல்லது

பரிகாரம்: வைஷ்ணவி தேவியை வழி பட்டு வர நோய் நீங்கி உடல் ஆரோக்கி யம் உண்டாகும். பணவரத்து கூடும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: பிரவுன், வெள்ளை

சித்திரை3, 4 பாதங்கள்:

இந்த மாதம் அசையா சொத்துகளாலும், வண்டி, வாகனங்களாலும் வீண்செலவுகள் ஏற்படும். உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. புத்திரவழியில் சிறுசிறு மன சஞ்சலங்கள் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாகவே இருக்கும்.

ஸ்வாதி:

இந்த மாதம் தேவையற்ற செலவுகளைக் குறைத்துக் கொண்டால் கடன்கள் உண்டாவதைத் தவிர்க்கலாம். அரசியல்வாதிகள் மக்களின் ஆதரவைப்பெற அவர்களின் தேவை அறிந்து செயல்படுவது உத்தமம்.  உடனிருப்பவர்கள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். எந்தவொரு காரியத்திலும் வெற்றி கிட்டும்.

விசாகம் 1, 2 ,3 பாதங்கள்:

இந்த மாதம் சிறப்பாக இருக்கும். நவீன முறைகளைக் கையாண்டு தொழிலைப் பெருக்கமுடியும் என்றாலும் வேலைக்குத் தக்கசமயத்திற்கு ஆட்கள் கிடைக்கமாட்டார்கள். இதனால் தொழிலில் சுணக்கம் ஏற்படும். அரசுவழியில் எதிர்பாராத மானிய உதவிகள் கிடைக்கும்.

பரிகாரம்: வைஷ்ணவி தேவியை வழி பட்டு வர நோய் நீங்கி உடல் ஆரோக்கி யம் உண்டாகும். பணவரத்து கூடும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: பிரவுன், வெள்ளை

சந்திராஷ்டம தினங்கள்: 23, 24, 25

அதிர்ஷ்ட தினங்கள்: 16, 17, 18

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

கிரக நிலை:

ராசியில்  குரு (வ)  – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ), கேது – அஷ்டம ஸ்தானத்தில் புதன்,  ராஹூ – பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய், சுக்கிரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இரவு, பகலாக உழைக்க காத்திருக்கும்  விருச்சிக ராசி அன்பர்களே, இந்த மாதம் பணவரத்து அதிகரிக்கும். அறிவு திறமை வெளிப்படும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு உண்டாகும். அடுத்தவர்களின் குற்றச்சாட்டுக்கு ஆளாகநேரிடலாம் கவனம் தேவை. அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும்.

தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பங்குதாரர்களுடன் ஆலோசனை செய்து வியாபாரத்தை  மேற்கொள்வது கூடுதல் லாபம் கிடைக்க   வழிசெய்யும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக பணியாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து முக்கிய முடிவுகள் எடுப்பது நன்மை தருவதாக இருக்கும்.

குடும்பத்தில் தாய்வழி உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்க பெறும். கணவன், மனைவிக்கிடையே  நெருக்கம் அதிகரிக்கும். உயர்ந்த ஆடை ஆபரணங் கள் சேரும். நல்லது கெட்டது அறிந்து செயல்பட்டு நன்மை கிடைக்க பெறுவீர்கள். பணவசதி கூடும். குழந்தைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். அவர்களிடம் அன்பு அதிகரிக்கும்.

கலைத்துறையினருக்கு நிலுவையில் உள்ள காரியங்கள் சிறப்பாக முடிய வழி பிறக்கும். வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். இரவு பகலாக உழைக்க வேண்டி இருக்கும்.

அரசியல்வாதிகளுக்கு நீண்ட நாட்களாக வரவேண்டி இருந்த பணம் வந்து சேரும். உங்கள் பணிகளில் பல குறுக்கீடுகள் வந்தாலும் அதை சாமர்த்தியாமாக சமாளித்து வெற்றி காண்பீர்கள்

பெண்கள் மனதடுமாற்றம் இல்லாமல் எதையும் செய்வது நல்லது. தேவையான உதவிகள் கிடைப்பது தாமதப் படும். வீண் அலைச்சல் உண்டாகலாம்.

மாணவர்கள் பாடங்களை மனநிறைவுடன் படிப்பீர்கள். கூடுதல் மதிப்பெண் பெற மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியடையும்.

விசாகம் 4 – ம் பாதம்:

இந்த மாதம் கெடுபிடிகள் அதிகரிப்பதால் கிடுக்குப் பிடியான சூழ்நிலைகள் உண்டாகும். கலைஞர்கள் எதிர்பார்க்கும் வாய்ப்புகள் தடையின்றிக் கிட்டும். வரவேண்டிய பணத்தொகைகளும் எதிர்பார்த்தபடி வந்து சேரும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்புகளும் அதன்மூலம் அனுகூலமான பலன்களும் உண்டாகும்.

அனுஷம்:

இந்த மாதம் சக கலைஞர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். கடன்கள் குறையும். மாணவ-மாணவியர் கல்வியில் நல்ல முன்னேற்றமுடன் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெறமுடியும். அடிக்கடி ஞாபகமறதி ஏற்படும் என்றாலும் பெரிய கெடுதி இல்லை.

கேட்டை:

இந்த மாதம் தேவையற்ற பொழுதுபோக்குகளையும், நண்பர்களின் சகவாசத்தையும் தவிர்ப்பது நல்லது. வண்டி வாகனங்களில் பயணம் செய்யும்போது வேகத்தைக் குறைத்துக்கொள்வது சிறப்பு.  இக்காலங்களில் உடல்நிலையில் சிறுசிறு மருத்துவச்செலவுகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது.

பரிகாரம்: காசி விசாலாட்சியை வழிபட  எதிர்ப்புகள்  அகலும். காரிய தடை நீங்கும்

அதிர்ஷ்ட கிழமைகள்: நீலம், சிவப்பு

சந்திராஷ்டம தினங்கள்: 26, 27,

அதிர்ஷ்ட தினங்கள்: 19, 20

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

கிரக நிலை:

ராசியில் சனி (வ), கேது – களத்திர  ஸ்தானத்தில் புதன்,  ராஹூ – அஷ்டம ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய், சுக்கிரன் – விரைய ஸ்தானத்தில்  குரு (வ)  என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

உங்கள் மனதில் உள்ள ஆதங்கங்களை வெளிப்படுத்தும் தனுசு ராசி அன்பர்களே, இந்த மாதம் மனதில் தெளிவு உண்டாகும். ஆக்க பூர்வமான யோசனைகள் தோன்றும். கடித போக்குவரத்து அனுகூலமான பலனை தரும். பயணம் லாபகரமாக இருக்கும்.

தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இழுபறியான நிலை காணப் படும். வீண் அலைச்சல் எதிர்பாராத செலவும் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகாரிகள் கூறிய வேலையை  செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். சகஊழியர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே தேவையற்ற மனவருத்தம் உண்டாகலாம் கவனம் தேவை. மருத்துவம் தொடர்பான செலவும் ஏற்படலாம். ஆயுதம், நெருப்பு ஆகியவற்றை கையாளும்போது கவனமாக இருப்பது நல்லது.

கலைத்துறையினர் இரவு பகலாக உழைக்க வேண்டி இருக்கும். அடுத்தவர் வேலையையும் தானே செய்யும் நிலை உருவாகும். எனினும் உதவிகள் கிடைக்கும். வரவேண்டிய பணம் இழுபறியாக இருந்தாலும் வந்து சேரும்

அரசியல்வாதிகள் தொகுதி மக்களை சந்திப்பீர்கள். மக்கள் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மக்கள் பிரச்சனைகளைத் தீர்த்து அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்..

பெண்கள் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எதையும் புத்திசாதுரியத்தை பயன் படுத்தி சமாளிப்பீர்கள்.

மாணவர்களுக்கு பாடங்கள் படிப்பதில் ஆர்வம் உண்டாகும். ஆசிரியர்களின் ஆதரவுடன் படித்து தேர்வில் வெற்றி பெறுவீர்கள்.

பரிகாரம்: ஸ்ரீரமண மகரிஷியை வணங்கி வருவது மன அமைதியை தருவதுடன் எல்லா நன்மைகளையும் தரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: மஞ்சள், ஊதா

மூலம்:

இந்த மாதம் குடும்பத்தில் விட்டுக்கொடுத்து நடந்து கொள்வதால் நிம்மதியும், ஒற்றுமையும் உண்டாகும். பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். முயற்சிகளில் சில தடைகளை சந்தித்தாலும் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறிவிடுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும்.

பூராடம்:

இந்த மாதம் கொடுக்கல்- வாங்கலில் பிறரைநம்பி முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்க்கவும். . தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைப் பெறமுடியும் என்றாலும் கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் மிகவும் அனுசரித்துச்செல்ல வேண்டி இருக்கும்.

உத்திராடம் 1- ம் பாதம்:

இந்த மாதம் உத்தியோகஸ்தர்களுக்குக் கௌரவமான பதவி உயர்வுகள் உண்டாகும். வேலைப்பளு சற்றே அதிகரித்துக் காணப்படும். தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிக்கும். உடல்நிலையில் பாதிப்புகள் உண்டாகும். உற்றார்-உறவினர்களிடையே வீண் கருத்துவேறுபாடுகளும், முயற்சிகளில் தடைகளும் உண்டாகும்.

பரிகாரம்: ஸ்ரீரமண மகரிஷியை வணங்கி வருவது மன அமைதியை தருவதுடன் எல்லா நன்மைகளையும் தரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: மஞ்சள், ஊதா

சந்திராஷ்டம தினங்கள்: 1, 2, 28, 29

அதிர்ஷ்ட தினங்கள்: 21, 22

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

கிரக நிலை:

ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன்,  ராஹூ – களத்திர ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய், சுக்கிரன் – லாப ஸ்தானத்தில்  குரு (வ)  – விரைய ஸ்தானத்தில் சனி (வ), கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

செலவுகளை அதிகமாக சந்திக்கும் மகர ராசி அன்பர்களே, இந்த மாதம் செலவு கூடும். வாகனங்களால் செலவு உண்டாகும். மனதில் வீண் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். நெருக்கடியான சந்தர்ப்பத்தில் உதவிகள் கிடைப்பது கடினமாக இருக்கும். எந்த காரியங்களில் ஈடுபட்டாலும்  மன தடுமாற்றம் இல்லாமல் இருப்பது நல்லது.

தொழில் வியாபாரம் தொடர்பாக பயணங்கள் சென்று வரவேண்டி இருக்கும். வியாபாரம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திப்பார்கள். குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகலாம் கவனம் தேவை.

குடும்பத்தில் வாக்கு வாதங்கள் உண்டாகும் சூழ்நிலை காணப்படுவதால் வாழ்க்கை துணையையும் குழந்தைகளிடமும் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்திற்காக கூடுதலாக உழைக்க வேண்டியது இருக்கும்.

கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும். கிடைக்கும் வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம். உடனிருப்பவர்களை ஆலோசித்து காரியங்களை முன்னெடுப்பது உங்கள் வெற்றிக்குத் தடை வராமல் காக்கும்.

அரசியல் துறையினருக்கு சாதகமான காலகட்டமாக இருந்தாலும் புத்திக்கூர்மையுடன் செயல்களை ஆராய்ந்து செய்வது நன்மை பயக்கும். மேலிடத்தின் பார்வை உங்கள் மீது அதிகரிக்கும் காலமாக அமையும்

பெண்களுக்கு மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். பயணங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.

மாணவர்கள் கவன தடுமாற்றம் இல்லாமல் பாடங்களை படிப்பது நன்மை தரும். சக மாணவர்களிடம் எச்சரிக்கை யாக பழகுவது நல்லது

பரிகாரம்: சனி பகவானை தீபம் ஏற்றி வணங்கி வழிபட உடல் ஆரோக்யம் பெறும். கஷ்டங்கள் குறையும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: சிவப்பு, கருநீலம்

உத்திராடம்2, 3, 4 பாதங்கள்:

இந்த மாதம் தேவையற்ற பயணங்களைக் குறைத்துக்கொள்வதால் அலைச்சல்கள் குறையும். மாணவர்கள் தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தைத் தவிர்ப்பது நல்லது. நினைத்த காரியங்களை நிறைவேற்றமுடியாது.

திருவோணம்:

இந்த மாதம் பணவரவுகளிலும் தடை ஏற்படுவதால் குடும்பத்தில் நெருக்கடிகள் அதிகரிக்கும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். எந்தவொரு காரியத்திலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்துச் செயல்படுவது நல்லது. பணவிஷயங்களில் பிறரைநம்பி வாக்குறுதி கொடுப்பதைத் தவிர்க்கவும்.

அவிட்டம் 1, 2 பாதங்கள்:

இந்த மாதம் சோதனையான காலமாகும். எனவே பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. மாணவர்கள் எதிலும் சுறுசுறுப்பு இல்லாது இருப்பார்கள். பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். எதிலும் முன்னேற்றம் கொடுக்கும். கடன் பிரச்சினைகள் சற்று ஓங்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.

பரிகாரம்: சனி பகவானை தீபம் ஏற்றி வணங்கி வழிபட உடல் ஆரோக்யம் பெறும். கஷ்டங்கள் குறையும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: சிவப்பு, கருநீலம்

சந்திராஷ்டம தினங்கள்: 3, 4, 30, 31

அதிர்ஷ்ட தினங்கள்: 23, 24, 25

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதம்)

கிரக நிலை:

பஞ்சம ஸ்தானத்தில் புதன்,  ராஹூ – ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய், சுக்கிரன் – தொழில் ஸ்தானத்தில்  குரு (வ)  – லாப ஸ்தானத்தில் சனி (வ), கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

குடும்பத்தில் மகிழ்ச்சியைப் பெறப் போகும் கும்ப ராசி அன்பர்களே, இந்த மாதம் தொழில் தொடர்பான விஷயங்களில் தீர ஆலோசித்து ஒரு முடிவுக்கு வருவீர்கள். பலராலும் செய்ய முடியாத காரியங்களை வெற்றிகரமாக முடிக்கும் நிலை வரலாம். பணவரத்து திருப்தி தரும்.

தொழில் முன்னேற்றம் காணப்படும். புதுவியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும்.  கடித போக்குவரத்து மூலம் தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். சாமர்த்தியமாக வாடிக்கையாளர்களுடன் பேசி அவர்களை தக்க வைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர் காலம் பற்றிய திட்டங்களை வகுப்பார்கள். பணவரத்தும் இருக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குடும்பத்திற்கு  தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். நீண்ட நாட்களாக வாங்க  நினைத்த ஆடை, ஆபரணம் வாங்க நேரிடும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் விருந்து நிகழ்ச்சிகளுக்கு சென்று வருவீர்கள். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும்.

கலைத்துறையினர் சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது உங்களுக்கு எதிர்காலத்தில் ஏற்பட இருக்கும் பிரச்சனைகளை தவிர்க்க வழிவகை செய்யும். புது ஒப்பந்தம் கையெழுத்திடும் போதும் ஒன்றுக்கு இரண்டு முறை ஆலோசித்து செய்வது நல்லது.

அரசியல்வாதிகள் கவனமுடன் செயல்பட்டால் மேலிடத்தின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். உங்களிடம் உதவி கேட்டு வருபவர்களை உதாசீனப் படுத்தாதீர்கள். பின்னாளில் அதுவே உங்களுக்கு பெரிய பிரச்சனையாக உருவெடுக்கும். கவனம் தேவை

பெண்கள் மற்றவர்கள் உதவியுடன் செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது.

மாணவர்கள் சக மாணவர்களுடன் பழகும்போது கவனம் தேவை. கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது நல்லது.

பரிகாரம்: மாரியம்மனை தீபம் ஏற்றி வழிபட எல்லா துன்பங்களும் நீங்கும். காரிய வெற்றி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஆரஞ்சு, வெளிர்நீலம்

அவிட்டம்3, 4 பாதங்கள்:

இந்த மாதம் நெருங்கியவர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள் என்றாலும் உங்களைச் சுற்றியிருக்கும் கூட்டத்தை முழுவதும் நம்பிவிடாமல் மிகவும் கவனமாக செயல்படுவது நல்லது. கொடுக்கல்-வாங்கல் சரளமான நிலையில் நடைபெறும். பெரிய மனிதர்களின் ஆதரவுகள் தக்க சமயத்தில் அமையும்.

ஸதயம்:

இந்த மாதம் திருமண சுபகாரியங்கள்கூட கைகூடும். பொன், பொருள், ஆடை, ஆபரணம் சேரும். முயற்சிகள் அனைத்திலும் வெற்றியினைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உயரதிகாரிகளின் கெடுபிடிகள் குறையும். உடனிருப்பவர்களின் ஆதரவுகளால் வேலைப்பளுவையும் குறைத்துக்கொள்ள முடியும்.

பூரட்டாதி1, 2, 3 பாதங்கள்:

இந்த மாதம் தொழில், வியாபாரம் செய்பவர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவுகளால் அபிவிருத்தியைப் பெருக்கிக்கொள்ள முடியும். அரசியல்வாதிகளுக்குக் கௌரவமான பதவிகள் கிடைக்கும்.

பரிகாரம்: மாரியம்மனை தீபம் ஏற்றி வழிபட எல்லா துன்பங்களும் நீங்கும். காரிய வெற்றி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஆரஞ்சு, வெளிர்நீலம்

சந்திராஷ்டம தினங்கள்: 5, 6

அதிர்ஷ்ட தினங்கள்: 26, 27

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

கிரக நிலை:

சுகஸ்தானத்தில் புதன்,  ராஹூ – பஞ்சம ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய், சுக்கிரன் – பாக்கிய ஸ்தானத்தில்  குரு (வ)  – தொழில் ஸ்தானத்தில் சனி (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

மற்றவர்களை மனம் நோகாமல் பார்த்துக் கொள்ளும் மீன ராசி அன்பர்களே, இந்த மாதம் மற்றவர்களின் ஆதரவு கிடைக்கும். புத்தி சாதுர்யத்தை பயன்படுத்தி காரியங்களை  வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். செயல்திறன் அதிகரிக்கும். ஆனால் பயணங்களின்போதும் உடல் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை.

தொழில், வியாபாரம் மிகவும் சிறப்பாக நடைபெறும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். வியாபாரம் மற்றும் தொழிலை விரிவுபடுத்துவது பற்றி திட்டங்களை செயல்படுத்துவீர்கள். பயணங்கள் சாதகமான பலனை தரும். உத்தியோகஸ்தர்கள் முன்னேற்றம் காண்பார்கள். வேலை பற்றிய கவலை நீங்கும். நிர்வாகத்தின் ஆதரவும் இருக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு இருக்கும்.  கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் குறையும்.  பிள்ளைகளின் மீது கவனம் தேவை. வாகனங்களால் செலவு இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் உடல் நிலையில் கவனம் தேவை.

கலைத்துறையினர் கடுமையாக உழைப்பின் மூலம் முன்னேற வேண்டி இருக்கும். நண்பர்களின் உதவியால் நன்மைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது நல்லது.

அரசியல்வாதிகளுக்கு மேலிடத்திலிருந்து சந்தோஷமான செய்தி வரும். தொண்டர்கள் உங்கள் சொல்படி நடந்து கொள்வது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்

பெண்கள் எடுத்த காரியத்தை செய்து முடிக்க காலதாமதம் ஏற்படும். திட்டமிட்டு செயல்படுவது முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும்

மாணவர்களுக்கு தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற எடுக்கும் முயற்சிகள் கைகூடும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது.

பூரட்டாதி 4 – ம் பாதம்:

இந்த மாதம் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார்கள். தொழில், வியாபாரம் செய்பவர்கள் நல்ல முன்னேற்றத்தை அடைய முடியும். தொழிலாளர்களின் ஆதரவு அமோகமாக இருக்கும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய  வற்றால் நல்ல மேன்மை உண்டாகும்.

உத்திரட்டாதி:

இந்த மாதம் கொடுக்கல்- வாங்கலும் சரளமான நிலையில் நடைபெறும். பெரிய தொகையைக்கூட எளிதில் ஈடுபடுத்தி லாபம் காணமுடியும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். எதிர்பாராத பணவரவுகளால் உங்களின் வாழ்க்கைத்தரம் உயரும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும்.

ரேவதி:

இந்த மாதம் பொன், பொருள் சேரும். மங்களகரமான சுபகாரியங்களுக்கான முயற்சிகளில்கூட அனுகூலப்பலனை அடையமுடியும். புத்திரவழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். உற்றார்-உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வியாழக் கிழமையில் நெய்தீபம் ஏற்றி வழிபடுவது வெற்றிக்கு உதவும். கடன் பிரச்சனை குறையும். கல்வியில் வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: பச்சை, மஞ்சள்

சந்திராஷ்டம தினங்கள்: 7, 8

அதிர்ஷ்ட தினங்கள்: 1, 2, 28, 29

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Continue Reading




வேலை வாய்ப்பு6 hours ago

திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தியில் வேலை!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்16 hours ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (14/10/2019)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam
தமிழ் பஞ்சாங்கம்16 hours ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (14/10/2019)

இந்தியா1 day ago

வாகனத்தில் லிஃப்ட் கொடுப்பது குற்றமா? என்ன சொல்கிறது மோட்டர் வாகன சட்டம்!

வணிகம்1 day ago

ரூ.120 கோடி வசூல் செய்த திரைப்படங்கள்; இந்தியாவில் பொருளாதாரம் மந்த நிலையில்லை: மத்திய அமைச்சர்

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam
தமிழ் பஞ்சாங்கம்1 day ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (13/10/2019)

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்1 day ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (13/10/2019)

weekly prediction, வாரபலன்
வார பலன்2 days ago

உங்கள் ராசிக்கான இந்த வார பலன்கள் (அக்டோபர் 13 முதல் 19 வரை )

சினிமா2 days ago

பிகில் ட்ரெயிலர் வெளியானது… கதை என்னவாக இருக்கும்… விஜய் என்ன செய்திருக்கிறார்…

சினிமா2 days ago

வில் ஸ்மித்தின் ‘ஜெமினி மேன்’ விமர்சனம்… உங்களிடம் இதையா நாங்கள் எதிர்பார்த்தோம் ஆங் லீ…

சினிமா3 months ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா2 months ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

இந்தியா3 months ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

தமிழ்நாடு2 months ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

வேலை வாய்ப்பு1 month ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலை வாய்ப்பு2 months ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு3 months ago

கனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி!

சினிமா செய்திகள்2 months ago

நடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு!

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam
தமிழ் பஞ்சாங்கம்3 months ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் | நல்ல நேரம் (05/ஜூலை/2019)

சினிமா2 months ago

பிக்பாஸ் கலவரம்: மரியாதையில்லாமல் பேசிய அபிராமியை சேரை தூக்கி அடிக்க பாய்ந்த முகின்!

Uncategorized2 days ago

பெரிசு தனியா சிக்கிடுச்சு, செஞ்சிடலாமா? ‘பிகில் டிரெய்லர்’ வெறித்தனம்!!!

வீடியோ5 days ago

ஒரே நாளில் 26 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்ற கைதி டிரெய்லர்!

வீடியோ2 weeks ago

விஜய் சேதுபதி, சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள சைரா டிரெயலர்-2!

வீடியோ4 weeks ago

பிகில் ‘உனக்காக’ பாடல்!

வீடியோ1 month ago

பிகில் – வெறித்தனம் பாடல்!

Sangathamizhan Official Teaser | Vijay Sethupathi, Raashi Khanna | Vivek-Mervin | Vijay Chandar
வீடியோ2 months ago

சுதந்திர தின விழா சிறப்பாக வெளியாகியுள்ள விஜய்சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ டீசர்!

வீடியோ3 months ago

நேர்கொண்ட பார்வை படத்தின் ‘காலம்’ லிரிக்கல் வீடியோ ரிலீஸ்!

வீடியோ4 months ago

அண்ட் தி ஆஸ்கர் கோஸ் டூ டிரைலர் ரிலீஸ்!

வீடியோ4 months ago

தனுஷுடன் மோதும் விஜய்சேதுபதி!

வீடியோ4 months ago

கட்டுப்படுத்த முடியாத கோபத்தில் விக்ரமின் மகன் துருவ்… ‘ஆதித்யா வர்மா’ டீசர் ரிலீஸ்!

Trending