Connect with us

மாத பலன்

உங்கள் ராசிக்கான 2020 ஏப்ரல் மாத பலன்கள்!

Published

on

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction

ஏப்ரல் மாத பலன்கள்

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

கிரகநிலை:

குடும்ப ஸ்தானத்தில்  சுக்ரன் – தைரிய ஸ்தானத்தில் சந்திரன், ராஹூ –  பாக்கிய ஸ்தானத்தில் கேது, சனி – தொழில் ஸ்தானத்தில் செவ்வாய்,   குரு (அதி. சா) – லாப ஸ்தானத்தில் புதன் – அயன, சயன, போக ஸ்தானத்தில்  சூர்யன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  

பலன்:

எதையும் சமாளித்து குறுகிய காலத்தில் முன்னுக்கு வரும் திறன் உடைய மேஷ ராசியினரே நீங்கள் ரத்த சம்பந்தமான உறவுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பவர். இந்த மாதம் ராசியாதிபதி செவ்வாய் சுகஸ்தானத்தில் இருக்கிறார். எதையும் சமாளிக்கும் திறமை உண்டாகும். அடுத்தவர்களது செய்கை உங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தலாம். எனவே நிதானமாக இருப்பது நல்லது. சொந்த காரியங்களில் தாமதம் ஏற்படலாம். சின்ன விஷயங்களால் மன நிறைவை அடைவீர்கள். எதிர்பாலினரிடம் பழகும் போது கவனம் தேவை.  

தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். மருந்து, ரசாயனம் போன்ற தொழில்களில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான காரியங்களில் ஈடுபடும் போது அவசரப்படாமல் நிதானமாக செயல்படுவது காரிய வெற்றியை உண்டாக்கும். எளிதில் மற்றவர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்பட வாய்ப்பு உண்டு.

குடும்பஸ்தானத்தை குரு பார்க்கிறார். குடும்பம் தொடர்பான கவலைகள் மறையும். குடும்ப செலவை சமாளிக்க  பணவரத்து இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனதில் ஆன்மீக எண்ணங்கள் ஏற்படும். வாழ்க்கை துணை மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் கூடும்.

பெண்களுக்கு அடுத்தவர்கள் செயல்கள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம். எனவே  நிதானமாக செயல்படுவது நன்மையை தரும். எந்த பிரச்சனையையும் சமாளிக்கும் திறமை கூடும். 

கலைத்துறையினருக்கு நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். தேவையான  பொருள்களை வாங்குவீர்கள். நீண்ட நாட்களாக செய்ய நினைத்த ஒரு காரியத்தை செய்து முடிப்பீர்கள். மதிப்பும், மரியாதையும் வரும்.

அரசியல் துறையினருக்கு மனஸ்தாபம் நீங்கும். நண்பர்களிடையே சுமூக உறவு இருக்க விட்டு கொடுத்து செல்வது நல்லது. வாழ்வில் முன்னேற அக்கறை காட்டுவீர்கள். மனத்துணிவு அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி  திருப்திகரமாக இருக்கும். 

மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டி குறையும். எதையும் அவசரப்படாமல் நிதானமாக செய்வது நல்லது.

அஸ்வினி:

இந்த மாதம் எதிலும் கவனமாக இருப்பது நல்லது.  காரியங்களில் தடை தாமதம் உண்டாகும். எதிலும் தலையிடாமல் ஒதுங்கி சென்றாலும் மற்றவர்கள் வலிய வந்து  உங்களையும் இழுப்பார்கள். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

பரணி:

இந்த மாதம் தொழில் வியாபாரம் மந்தமாக காணப்படும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், வேலை பளுவும் ஏற்படலாம்.

கார்த்திகை:

இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்களுடன்  அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே விட்டுக் கொடுத்து செல்வது நன்மை தரும். பிள்ளைகளுக்காக அலைய வேண்டி இருக்கும். குடும்பத்திற்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மற்றவர்களின் பேச்சை கேட்டு எதிலும் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. பண தேவை உண்டாகும்.

பரிகாரம்: கந்த சஷ்டி கவசம் சொல்லி முருகனை வணங்க பிரச்சனைகள் குறையும். மனதில் அமைதி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்; 

சந்திராஷ்டம தினங்கள்: 11, 12

அதிர்ஷ்ட தினங்கள்: 5, 6

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)

கிரகநிலை:

ராசியில்  சுக்ரன் – குடும்ப ஸ்தானத்தில் சந்திரன்,  ராஹூ – அஷ்டம ஸ்தானத்தில் கேது, சனி – பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய்,   குரு (அதி. சா) – தொழில் ஸ்தானத்தில் புதன் – லாப ஸ்தானத்தில் சூர்யன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

எதையும் திட்டமிட்டு செய்து முடிக்க கூடிய திறமை உடைய ரிஷப ராசியினரே நீங்கள் நேரத்தை கண் போன்று மதிப்பவர். இந்த மாதம் ராசிநாதன் சுக்கிரன் தைரியஸ்தானத்தில் இருப்பதன் மூலம் நீண்ட நாட்களாக தடைபட்ட காரியத்தை செய்து முடிப்பீர்கள். ராசியாதிபதி சுக்கிரனுடன் குரு பகவான் திரிகோணப்படி சம்பந்தம் பெறுவதன் மூலம் அதிர்ஷ்டம் உண்டாகும். விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இருந்தாலும் கொள்கைக்காக  பாடுபடுவீர்கள். அதிகம் பேசுவதை தவிர்ப்பது நல்லது. அடுத்தவர் சொல்வதை நம்பும் முன் அதைப்பற்றி ஆலோசனை செய்வது நல்லது.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் ஒரே குறிக்கோளுடன் இருப்பதை விட்டு வாடிக்கையாளர் தேவை அறிந்து செயல்படுவது முன்னேற்றத்திற்கு உதவும். பணவரத்து அதிகரிக்கும். அரசாங்கத்தின் மூலம் உதவிகளைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் துணிச்சலாக வேலைகளை செய்து  வெற்றி பெறுவார்கள். சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளால் நன்மையும் உண்டாகும். எதிர்பார்த்த பதவி உயர்வில் பெறுவதில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். 

குடும்பாதிபதி புதன் ஆட்சியாக இருப்பதால் கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை குறைந்து நெருக்கம் அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் ஆதரவு இருக்கும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். அதனால்  நன்மையும் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.  

பெண்களுக்கு அதிகம் பேசுவதை தவிர்த்து செயலில் வேகம் காட்டுவது நல்லது. அடுத்தவர் கூறுவதை செய்யும் முன்பு அது பற்றி ஆலோசனை செய்வது நல்லது. 

கலைத்துறையினருக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். எதிர்பாராத செலவு உண்டாகும். சொத்து மனை சம்பந்தமான காரியங்களில் தடை, தாமதம் ஏற்படலாம். வீண்பயம் ஏற்படும். ஏற்கனவே செய்த காரியங்களுக்கான பலனை அடைய வேண்டி இருக்கும். 

அரசியல் துறையினருக்கு சிலர் வீட்டை விட்டு வெளியில் சென்று தங்க நேரிடலாம். வீண் வழக்கு விவகாரங்கள் வரலாம் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. வெளிநாட்டு பயண வாய்ப்புகள் வரலாம். சிலர் வெளியூர் பயணம் செல்வார்கள். எதிர்பாலினத்தாருடன் பழகும் போது கவனம் தேவை. 

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய கூடுதல் கவனத்துடன் படிப்பீர்கள். ஆசிரியர், சக மாணவர் மத்தியில் நன்மதிப்பு உண்டாகும்.

கார்த்திகை:

இந்த மாதம் பொருள்வரத்து அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மற்றவர் களால் கைவிடப்பட்ட காரியத்தை செய்து முடிப்பீர்கள். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் அனுகூலமாக நடந்து முடியும்.

ரோகினி:

இந்த மாதம் தொழில் வியாபாரத்திற்கு தேவையான பண உதவி கிடைக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய ஆர்டர்கள்  கிடைப்பதில் சாதகமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு விருப்பமில்லாத இடமாற்றம் உண்டாகலாம்.

மிருகசீரிஷம்:

இந்த மாதம் குடும்பத்தில் இருந்த சண்டைகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். திருமணம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள்  கைகூடும். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. பிள்ளைகள் மகிழ்ச்சியாக காணப்படுவார்கள்.

பரிகாரம்: கனகதாரா ஸ்தோத்திரம் பாராயணம் செய்து வர பணத் தட்டுப்பாடு நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன், வெள்ளி;

சந்திராஷ்டம தினங்கள்: 13, 14, 15

அதிர்ஷ்ட தினங்கள்: 7, 8

———————————————————————————-

மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

கிரகநிலை:

ராசியில்  சந்திரன், ராஹூ –  களத்திர ஸ்தானத்தில்   கேது, சனி – அஷ்டம ஸ்தானத்தில்  செவ்வாய், குரு (அதி. சா) – பாக்கிய ஸ்தானத்தில்  புதன் – தொழில் ஸ்தானத்தில் சூர்யன் – அயன, சயன, போக ஸ்தானத்தில்  சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

அனுபவத்தையும், திறமையையும் கொண்டு காரியங்களை திறம்பட செய்யும்  மிதுன ராசியினரே நீங்கள் எந்த சூழ்நிலையிலும் விவேகத்தை கை விடாதவர்.  இந்த மாதம் ராசியாதிபதி புதன் ஆட்சியாக சஞ்சாரம் செய்கிறார். கடித போக்குவரத்து சாதகமான பலன் தரும். அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. மனதில் தைரியம் உண்டாகும். வீண் வாக்குவாதங்களால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்வது நல்லது. வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். தடைபட்டிருந்த கல்வியை தொடர்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். 

தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதூரியமான பேச்சின் மூலம் தங்களது வியாபாரத்தை லாபகரமாக செய்வார்கள். தேவையான பண உதவியும் கிடைக்கும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிக உழைப்பும் அதற்கேற்ற பலனும் உண்டாகும். எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நன்மை தரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணியிட மாற்றம் கிடைக்கும்.

குடும்பத்தில் கலகலப்பு உண்டாகும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.  குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும். அக்கம்பக்கத்தினரிடமும் உறவினர்கள், நண்பர்களிடம் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். 

பெண்களுக்கு மனதில் தைரியம் உண்டாகும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. வீண்வாக்குவாதத்தை விட்டு நிதானமாக பேசுவது நன்மை தரும். 

கலைத்துறையினருக்கு மனதில் தெம்பு உண்டாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். புத்தி சாதூர்யத்தால் எல்லாவற்றையும் சமாளித்து வெற்றி காண்பீர்கள். 

அரசியல் துறையினருக்கு வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. மேலிடத்திற்கு நீங்கள் சொல்வதை கேட்டு நடக்கவில்லையே என்ற எண்ணம் ஏற்பட்டு நீங்கும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும்.

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கூடுதல் உழைப்பு தேவைப்படும். எதிர்பார்ப்புகளை குறைத்து இருப்பதை வைத்து முன்னேற முயற்சிப்பது நல்லது.

மிருகசீரிஷம்:

இந்த மாதம் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த பணவரத்து வந்து சேரும். தோழிகள் மூலம் உதவிகள் கிடைக்கும். சுக்கிரன் சஞ்சாரம் மூலம் பணவரத்து அதிகரித்தாலும் கைக்கு கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

திருவாதிரை:

இந்த மாதம் எந்த  ஒருவேலையை செய்யும் போதும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. வீடு, வாகனம் மூலம் செலவுகள் ஏற்படலாம். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். ராசியில் ராகு சஞ்சாரத்தால் புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

புனர்பூசம்:

இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் புத்திசாதூரியத்தால் முன்னேற்றம் காண்பீர்கள்.  சரக்குகளை அனுப்பும் போது கூடுதல் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிர்பந்தமாக இடமாற்றம் அல்லது பணிமாற்றம் இருக்கலாம். உழைப்பு அதிகரிக்கும்.

பரிகாரம்:  புதன்கிழமையில் நவகிரகத்தில் புதனை நெய்தீபம் ஏற்றி வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். கல்வியில் வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன்

சந்திராஷ்டம தினங்கள்: 16, 17

அதிர்ஷ்ட தினங்கள்: 9, 10

————————————————————————————

கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

கிரகநிலை:

ரண, ருண ஸ்தானத்தில்  கேது, சனி – களத்திர ஸ்தானத்தில்  செவ்வாய், குரு (அதி. சா) – அஷ்டம ஸ்தானத்தில்  புதன் – பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன் – லாப ஸ்தானத்தில்  சுக்ரன் – அயன, சயன, போக ஸ்தானத்தில் சந்திரன், ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

எதையும் ஆழமாக யோசித்து திறமையுடன் செய்து முடிக்கும் கடக ராசியினரே நீங்கள் குடும்பத்தினரின் மீது அதிக பாசம் வைத்திருப்பவர்கள். இந்த மாதம் பணவரத்து திருப்திகரமாக இருக்கும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை  வெற்றிகரமாக செய்வீர்கள். ஆனால் தாமதமான பலனே கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக வந்து சேரும். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனமாக இருப்பது நல்லது. தைரியம் அதிகரிக்கும். 

தொழில் ஸ்தானாதிபதி செவ்வாய் ராசியில் இருக்கிறார். தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு வேகமாக இல்லாவிட்டாலும் நிதானமாக இருக்கும். பணவரத்து வரும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. நீண்ட நாட்களாக தொழிலில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதையும் ஆலோசித்து செய்வது நன்மை தரும். மேல் அதிகாரிகள் கூறுவதற்கு மாற்று கருத்துக்களை கூறாமல் இருப்பது நல்லது. சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். 

குடும்பத்தில் கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன்  நிதானமாக பேசுவது குடும்ப அமைதியை தரும். நண்பர்கள், உறவினர்கள் விலகி செல்வது போல் இருக்கும். விட்டு பிடிப்பது நல்லது. குழந்தைகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவீர்கள்.

பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். மாற்று கருத்துக்களை மற்றவர்களிடம் கூறாமல் இருப்பது நன்மை தரும்.

கலைத்துறையினருக்கு நீங்கள் மற்றவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதில் தயங்க மாட்டீர்கள். பேச்சுத் திறமை அதிகரிக்கும். எதிர் பாலினத்தவரிடம் பழகும்போது கவனம் தேவை. நண்பர்கள் மூலம் வீண் அலைச்சல் குறையும்.  

அரசியல் துறையினருக்கு வீண் அலைச்சல் வேலைப்பளு இருக்கும். மனம் மகிழும் காரியங்கள் நடக்கும். பேச்சு திறமையால் காரியங்களை சாதகமாக செய்து முடிப்பீர்கள். பயணங்கள் செல்ல நேரலாம். 

மாணவர்களுக்கு எதையும் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசித்து செய்வது நன்மை தரும். கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள்.

புனர்பூசம்:

இந்த மாதம் குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் குறையும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வதன்மூலம் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக பாடுபடுவீர்கள். உறவினர் மூலம் உதவிகள் கிடைக்கும்.

பூசம்:

இந்த மாதம் எந்த ஒரு வேலையை செய்யும் போதும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. செலவு அதிகரிக்கும். எந்த காரியத்தை செய்தாலும் தடை தாமதம் ஏற்படலாம். ராசியாதிபதி சனியும் செவ்வாயும் பரிவர்த்தனை பெற்று சஞ்சாரம் செய்வதால் பணவரத்து குறையும். உடல் சோர்வு ஏற்படும். 

ஆயில்யம்:

இந்த மாதம் வீண் பிரச்சனைகள் தலைதூக்கும். நண்பர்கள் உறவினர்களுடன் மனவருத்தம் உண்டாகலாம். பயணங்கள் செல்ல நேரிடும். கூட்டு தொழில் அல்லது வியாபாரம்  செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் உண்டாகும். வேலை பளு கூடும்.

பரிகாரம்: அம்மனுக்கு பூஜை செய்து விரதம் இருப்பது கஷ்டங்களை போக்கும். மன குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 18, 19

அதிர்ஷ்ட தினங்கள்: 11, 12

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

கிரகநிலை:

பஞ்சம ஸ்தானத்தில்   கேது, சனி – ரண, ருண ஸ்தானத்தில் செவ்வாய்,  குரு (அதி. சா) – களத்திர ஸ்தானத்தில் புதன் –  அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன் – தொழில் ஸ்தானத்தில்  சுக்ரன் – லாப ஸ்தானத்தில் சந்திரன், ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன. 

பலன்:

பிறரின் நட்பை பயன்படுத்தி எதையும் செய்து முடிக்கும் சிம்மராசியினரே உங்களிடம் ஆளக்கூடிய திறமை இருக்கும். இந்த மாதம் ராசிநாதன் சூரியன் விரையஸ்தானத்தில் இருக்கிறார். பின்பாதியில் ராசிக்கு ஆட்சியாக வருகிறார். வீண் அலைச்சல் குறையும். சிக்கல்கள் தீரும். எண்ணிய காரியம் கைகூடும் குறிக்கோள் நிறைவேறும். சுணங்கிக் கிடந்த காரியங்கள் வேகம் பெறும். சமூகத்தில் அந்தஸ்து உண்டாகும்.  

தொழில் வியாபாரத்தில் மாற்றம் செய்ய எண்ணுவீர்கள். சிலர் புதிய தொழில் தொடங்க முற்படுவார்கள். அவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது.  வாடிக்கையாளர்களின் தேவைகளை சமாளித்து விடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் உண்டாகும். குறிக்கோளை அடைவது லட்சியமாக கொண்டு செயல்படுவீர்கள். புதிய தொடர்புகள் மூலம் லாபம் கிடைக்கும். 

குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த வாக்குவாதங்கள் அகலும். வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு வெளியே  தங்க நேரிடலாம். சுபச்செலவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உஷ்ணம் சம்பந்தமான நோய் உண்டாகலாம். அடுத்தவரை பார்த்து எதையும் செய்ய தோன்றலாம். அதனை விட்டு விடுவது நல்லது.

பெண்களுக்கு எண்ணிய காரியம் கை கூடும். வீண் அலைச்சல் குறையும் சிக்கலான பிரச்சனைகளில் நல்ல முடிவு கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு வீண்வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. காரிய தாமதம் ஏற்பட்டாலும் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த காரியங்கள் தடைகளின்றி முடியும். எதிர்ப்புகள் மறையும். 

அரசியல் துறையினருக்கு பகை பாராட்டியவர்கள் பகையை மறந்து நட்பு கரம் நீட்டுவார்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். மனஉறுதி அதிகரிக்கும். சொத்துக்களை அடைவதில் தடைகள் ஏற்படும். 

மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் மதிப்பெண் பெற எண்ணுங்கள். அதற்கான முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும்.

மகம்:

இந்த மாதம் குடும்பத்தில் அடுத்தவர்களால் ஏதேனும் குழப்பம் உண்டாகலாம்.  கணவன், மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளுக்காக  செலவு செய்யவேண்டி இருக்கும். தீ, ஆயுதங்களை கையாளும் போது கவனம் தேவை. வாகனங்கள் ஓட்டும் போது எச்சரிக்கையாக இருப்பதும் நல்லது. 

பூரம்:

இந்த மாதம் உறவினர்களிடம் பேசும் போது கவனமாக பேசுவது நல்லது.  பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படலாம். பெரியோர் சொல்படி நடப்பது வெற்றிக்கு உதவும். சுக்கிரன் சஞ்சாரம் மூலம் பணவரத்து அதிகரிக்கும்.  கடன் பிரச்சனை தீரும். 

உத்திரம்:

இந்த மாதம் தகராறு, வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும்.  நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும்.  கவுரவம் அதிகரிக்கும். மறைமுக நோய் ஏற்படலாம் கவனம் தேவை.

பரிகாரம்: தினமும் கோதுமை தூளை காகத்திற்கு வைக்க பிரச்சனைகள் குறையும். தடைபட்ட காரியங்களில் தடை நீங்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 20, 21, 22

அதிர்ஷ்ட தினங்கள்: 13, 14, 15

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

கிரகநிலை:

சுக  ஸ்தானத்தில்   கேது, சனி – பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய்,  குரு (அதி. சா) – ரண, ருண ஸ்தானத்தில் புதன்  – களத்திர ஸ்தானத்தில் சூர்யன் – பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் –  தொழில் ஸ்தானத்தில் சந்திரன், ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன. 

பலன்:

வாழ்க்கையில் சந்திக்கும் கஷ்ட நஷ்டங்களை  அனுபவமாக எடுத்துக் கொள்ளும் திறமை உடைய கன்னி ராசியினரே நீங்கள் உழைப்பினால் வாழ்க்கையில் சாதிப்பவர்கள்.  இந்த மாதம் ராசிநாதன் புதன் தொழில் ஸ்தானத்தில் ஆட்சியாக இருக்கிறார். எதிர்ப்புகள் விலகும். தொல்லைகள் தீரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வீண் கவலைகள் ஏற்பட்டு நீங்கும். கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது.  பணவரத்து தாமதப்படும். வீண் ஆசைகள் உண்டாகலாம் கவனம் தேவை.

தொழில் வியாபாரத்தில் வேகம் குறைந்தாலும் திருப்திகரமாக நடக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் கவனமுடன் செயல்படுவது நல்லது.  எதிர்பார்த்த ஆர்டர்கள், சரக்குகள் வருவதிலும் தாமதம் உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மற்றவர்களின் ஆலோசனையை கேட்டு செயல்படுவதை தவிர்ப்பது நல்லது. மேல் அதிகாரிகள் மூலம் நன்மை உண்டாகும்.

குடும்பாதிபதி சுக்கிரன் லாப ஸ்தானத்தில் இருக்கிறார். குடும்பத்தில் இருந்த  பிரச்சனைகள் குறையும். எதிர்பார்த்த காரியங்கள் நடக்கும். கணவன், மனைவிக்கிடையே  இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் கவனமும், அனுசரணையும் இருப்பது நல்லது. உறவினர், நண்பர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கி நெருக்கம் ஏற்படும்.

பெண்களுக்கு வீண் கவலைகள் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்கள் ஆலோசனைகளை ஏற்கும் முன்  அது பற்றி பரிசீலிப்பது நல்லது.

கலைத்துறையினருக்கு உயர்நிலையில் உள்ளவர்களுடன் மனவருத்தம் ஏற்படும்படியான சூழ்நிலை வரும். வாகனங்கள் மூலம் செலவு உண்டாகலாம். எதிர்பார்த்த பண வரவு இருக்கும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கலாம். 

அரசியல் துறையினருக்கு திறமையான செயல்பாட்டால் பாராட்டு கிடைக்கும். விரும்பத்தகாத வாக்குவாதங்கள் ஏற்படலாம். எல்லா வித வசதிகளும் உண்டாகும். தேடிப்போனதும் தானாகவே வந்து சேரும். அறிவுத்திறன் அதிகரிக்கும்.

மாணவர்களுக்கு எதிலும் நல்லது கெட்டதை யோசித்து அதன் பின்பு அந்த காரியத்தில் ஈடுபடுவது நன்மை தரும். கல்வியில் கூடுதல் கவனம் தேவை.

உத்திரம்:

இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். பண பிரச்சனை தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு குறையும். முயற்சிகள் காலதாமதமாக பலன் கொடுக்கும். எதை பற்றியும்  கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள்.

ஹஸ்தம்:

இந்த மாதம் குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். திருமண காரியங்கள் கைகூடும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளிகுறையும். பிள்ளைகள்  உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியை தரும். எதிர்ப்புகள் விலகும். தடைபட்ட காரியம் நடந்து முடியும். பணவரத்து திருப்தி தரும். 

சித்திரை:

இந்த மாதம் எதை பற்றியும் கவலைப்படாமல் காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். வாக்கு வன்மையால்  காரிய அனுகூலம் உண்டாகும். ஆனால் மனதில் ஏதாவது சஞ்சலம் இருந்து கொண்டே இருக்கும். திடீர் பணதேவை ஏற்படலாம்.  தேவையான நேரத்தில் மற்றவர்களின் உதவி கிடைக்கும். புதிய சொத்து வாங்குவதில் கவனம் செல்லும்.

பரிகாரம்: புதன்கிழமையில் பெருமாளை வணங்கி 9 ஏழைகளுக்கு புளியஞ்சாதம் அன்னதானம் வழங்க மனத்தெளிவு உண்டாகும். அறிவுத் திறன் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 23, 24

அதிர்ஷ்ட தினங்கள்: 16, 17

—————————————————————————————

துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம்  பாதம்)

கிரகநிலை:

தைரிய ஸ்தானத்தில்  கேது, சனி – சுக ஸ்தானத்தில்  செவ்வாய், குரு (அதி. சா) – பஞ்சம ஸ்தானத்தில்  புதன் – ரண, ருண ஸ்தானத்தில் சூர்யன் – அஷ்டம  ஸ்தானத்தில் சந்திரன், சுக்ரன் – பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ  என கிரகங்கள் வலம் வருகின்றன.  

பலன்:

வாழ்க்கையில் முன்னேற எதிர் நீச்சல் போடவும், தயங்காத துலா ராசியினரே நீங்கள் அனைவரையும் சரிசமமாக மதிப்பவர்கள். இந்த மாதம் ராசிநாதன் சுக்கிரன் தொழில் ஸ்தானத்தில் இருக்கிறார்.  சுகஸ்தானத்தை நேரடியாக பார்க்கிறார். வீண் அலைச்சல் இருந்தாலும் பணவரவு நன்றாக இருக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைப்பதில் இருந்து வந்த தாமதம் நீங்கும். மனதில் தெளிவு உண்டாகும். ஆக்கபூர்வமாக எதையும் செய்யும் எண்ணம் தோன்றும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. 

தொழில் ஸ்தானத்தை ராசிநாதன் சுக்கிரன் அலங்கரிக்கிறார். தொழில் வியாபாரம் தொடர்பான கடிதப் போக்குவரத்தால் அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரம் விரிவுபடுத்துவது தொடர்பான திட்டங்கள் தோன்றும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணங்களால் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகள் கூறுவதை மறுத்து பேசாமல் அனுசரித்து செல்வது நன்மையை தரும். சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். மேலிடத்துடன் இருந்து வந்த கசப்புணர்வு நீங்கும்.

குடும்ப ஸ்தானத்தில் குரு சஞ்சரிக்கிறார். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். தெளிவான முடிவுகள் மூலம் நன்மை உண்டாகும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து எதையும் மனம்விட்டு பேசி செய்வது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். குடும்ப வருமானம் அதிகரிக்கும். குடும்பத்திற்கு தேவையான வசதிகளைப் பெருக்குவீர்கள். 

பெண்களுக்கு எதிலும் ஆக்கபூர்வமாக செய்து வெற்றி காண்பீர்கள். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும்.

கலைத்துறையினருக்கு நெருக்கமானவர்களுடன் இனிமையாகப் பேசி பொழுதை கழிப்பீர்கள். தொழில் சிறப்பான முன்னேற்றம் பெறும். மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். 

அரசியல் துறையினருக்கு சிறப்பாக பணிபுரிந்து பாராட்டு பெறுவார்கள். பயணங்களால் மகிழ்ச்சியும், ஆதாயமும் கிடைக்கும். நிலம், வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புகள் கை கூடி வரும். நீதிமன்ற வழக்குகளிலிருந்து விடுபடுவீர்கள். வேதாந்த விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும்.

மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கூறுவதை கேட்டு அதன்படி நடப்பதும்,  பாடங்களில் இருக்கும் சந்தேகங்களை உடனுக்குடன் கேட்டு தெரிந்து கொள்வதும் வெற்றிக்கு உதவும்.

சித்திரை:

இந்த மாதம் தொழில் வியாபாரம் முன்னேற்றமடைய  தேவையான உதவிகள் கிடைக்கும். திறமையான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள்  சொல்வதை செய்வதன் மூலம் நன்மை கிடைக்க பெறுவார்கள்.

ஸ்வாதி:

இந்த மாதம் குடும்பத்தில் அமைதி ஏற்படும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் மனம்விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகள் பற்றிய கவலை நீங்கும். அவர்களுக்கு தேவையான பொருட்கள் வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். 

விசாகம்:

இந்த மாதம் புதிதாக செய்யும் காரியங்களில் கவனம் தேவை. இனிமையான வார்த்தைகளால் பேசுவதன் மூலம் மற்றவர் மத்தியில் மதிப்பு கூடும். செலவு அதிகரிக்கும். அடுத்தவர் மூலம் மனசங்கடம் உண்டாகும். வாகனங்கள் பயன்படுத்தும் போது கவனம் தேவை.  சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். 

பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் விரதம் இருந்து சுக்கிரபகவானை வணங்கி மொச்சை சுண்டல் நைவேத்தியம் செய்ய செல்வம் சேரும். வாழ்க்கை துணையின் ஆதரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். 

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 25, 26, 27

அதிர்ஷ்ட தினங்கள்: 18, 19

—————————————————————————————

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

கிரகநிலை:

தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  கேது, சனி – தைரிய ஸ்தானத்தில் செவ்வாய்,  குரு (அதி. சா) – சுக ஸ்தானத்தில் புதன் – பஞ்சம ஸ்தானத்தில்  சூர்யன் – களத்திர ஸ்தானத்தில் சுக்ரன் – அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன்,  ராஹு என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

விறுவிறுப்பாக எதையும் செய்யும் திறன் படைத்த விருச்சிக ராசியினரே உங்கள் பேச்சில் வேகம் இருக்கும். இந்த மாதம் ராசியில் குரு சஞ்சரிக்கிறார். எல்லாவிதத்திலும் நன்மை உண்டாகும்.  ராதியாதிபதி செவ்வாய் சஞ்சாரம் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் இருப்பது மனோ தைரியத்தை தரும். எதையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். அந்நிய நபர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. எதிர்ப்புகள் நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள்  அதிக உழைப்பின் மூலம் லாபம் கிடைக்க பெறுவார்கள். பொருளாதாரம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் சாதகமாக பலன் தரும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த பூசல்கள் அகலும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையையும் கூடுதல் உழைப்பின் மூலம் செய்து முடிக்க வேண்டி இருக்கும். எதிர்பார்த்த பணியிட மாற்றம் – பதவி உயர்வு தங்களைத் தேடி வரும்.

குடும்ப ஸ்தானத்தில் சனி கேது இருக்கிறார். குடும்பத்தில் இருந்த  பிரச்சனைகள் நீங்கும். எதிர்பார்த்த தகவல் நல்ல தகவலாக இருக்கும். கணவன், மனைவி இருவரும் எந்த ஒரு முடிவையும் நிதானமாக யோசித்து எடுப்பது நன்மை தரும். அவசரத்தை தவிர்ப்பது நல்லது. சகோதரர் வழியில் உதவியை எதிர்பார்க்கலாம். உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

பெண்களுக்கு எதிர்ப்புகள் நீங்கும். நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு பாராட்டுகள் வரும். வெளிநாடு பயணங்களும் இனிதே அமையும். எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். நண்பர்களிடையே உறவுநிலை சிறக்க விட்டுக் கொடுத்தல் அவசியமாகிறது. கூட்டுத்தொழிலில் அதிகம் அக்கறை தேவை.

அரசியல் துறையினருக்கு நீண்ட நாளாக இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். எந்த விஷயத்திலும் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. திடீர்ச் செலவுகள் ஏற்படும். சிக்கன நடவடிக்கை அவசியம் தேவை. உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து அயராது பாடுபடுபவர்கள் அதிகப் பயன் பெறுவார்கள். 

மாணவர்களுக்கு கூடுதலாக நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். தேவையான உதவிகள் கிடைக்கும்.

விசாகம்:

இந்த மாதம் நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கை தரம் உயரும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தநிலை நீங்கும். உங்களது பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது  கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அடுத்தவரை நம்பி பொறுப்புக்களை ஒப்படைப்பதை தவிர்ப்பது நல்லது.

அனுஷம்:

இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்களின் ஒத்துழைப்பால் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையில் இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளிடம்  அன்பாக நடந்து கொள்வீர்கள். அடுத்தவருக்கு உதவி செய்யும் போது கவனம் தேவை. வீண் மன சங்கடம் ஏற்படலாம். பணவரத்து திருப்தி தரும். 

கேட்டை:

இந்த மாதம் முயற்சிகள் சாதகமான பலன் தரும்.  பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். எதிர்ப்புகள் விலகும். புதிய நண்பர்கள் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். மரியாதை கூடும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும்.  தன்னம்பிக்கையுடன் செயலாற்றுவீர்கள்.

பரிகாரம்: செவ்வாய் கிழமையில் விரதம் இருந்து மாலையில் சிவன், நவகிரகங்களை வணங்கி செவ்வாய் பகவானுக்கு தீபம் ஏற்றி வழிபட்டு வர எதிர்ப்புகள் விலகும். பிரச்சனைகளில் சுமூக முடிவு உண்டாகும். தைரியம் கூடும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 1, 2, 28, 29

அதிர்ஷ்ட தினங்கள்: 20, 21, 22

———————————————————————————–

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

கிரகநிலை:

ராசியில்    கேது, சனி – தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய்,  குரு (அதி. சா) – தைரிய ஸ்தானத்தில் புதன் – சுக ஸ்தானத்தில்  சூர்யன் – ரண, ருண ஸ்தானத்தில் சுக்ரன் – களத்திர ஸ்தானத்தில் சந்திரன், ராஹு என கிரகங்கள் வலம் வருகின்றன. 

பலன்:

திறமையையே மூலதமான வைத்து வாழ்வில் உயர்ந்த நிலைக்கு செல்லும் தனுசு ராசியினரே நீங்கள் ஒழுக்கமாக வாழ வேண்டும் என விரும்புபவர்கள். இந்த மாதம் ராசியில் சனி கேது சஞ்சரிக்கிறார். வாக்கு வன்மையால் எதையும் சாதகமாக செய்து முடிப்பீர்கள். திறமை அதிகரிக்கும். திட்டமிட்டபடி செயலாற்றுவதில் கவனம் செலுத்துவீர்கள். ராசியாதிபதி குரு விரைய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வது பலவித நற்பலன்களை அளிக்கும். பாக்கியஸ்தானத்தில் இருக்கும் ராகுவின் சஞ்சாரம் எதையும் துணிச்சலாக எதிலும் ஈடுபடச் செய்யும். வாகனங்களில் செல்லும்போதும் பயணங்களின்போதும் எச்சரிக்கை தேவை.

தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதுரியமான பேச்சினால் எதிலும் லாபம் காண்பார்கள். வர்த்தக திறமை அதிகரிக்கும். பணவரத்தும் திருப்திகரமாக இருக்கும். தொழில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையால் முன்னேற்றமடைவார்கள். இழுபறியாக இருந்த வேலையை துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். நீண்ட நாட்களாக வராமல் இருந்து வந்த பணம் கைக்கு வந்து சேரும்.

குடும்ப ஸ்தானத்தை சூரியன், செவ்வாய், சுக்கிரன் பார்க்கிறார்கள். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளிடம் கனிவுடன் பேசுவது நல்லது. விருந்தினர் வருகை இருக்கும். குடும்ப பிரச்சனைகளில் சாதகமான முடிவே உண்டாகும்.

பெண்களுக்கு துணிச்சலாக எதிலும் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். வாகனங்களில் செல்லும் போதும் பயணங்களின் போதும் கவனம் தேவை.

கலைத்துறையினருக்கு பயணத்தால் அனுகூலம் உண்டு. அதிக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பொருள் வரவில் குறைவு ஏற்பட வாய்ப்பு இல்லை. எந்த நேரத்திலும் கோபம் கலந்த வார்த்தைகளை உதிர்க்காமல் இருப்பது நன்று.

அரசியல் துறையினருக்கு உறுதியும், துணிவும் நிறைந்திருக்கும். பிரபலங்களின் நட்பும், ஆதரவும் கிடைக்கும். அண்டை அயலாருடன் இருக்கும் மனக்கசப்புகள் நீங்கி உற்சாகம் பிறக்கும். 

மாணவர்களுக்கு திறமையால் முன்னேற்றம் உண்டாகும். கஷ்டமான பாடங்களையும் துணிச்சலாக படித்து முடிப்பீர்கள். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

மூலம்:
இந்த மாதம் தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். தேவையான பண உதவியும் கிடைக்கும். கடன் தொல்லை குறையும். தொழில் போட்டிகள் நீங்கும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

பூராடம்:

இந்த மாதம் குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும். 

உத்திராடம்:

இந்த மாதம் மனோ தைரியம் கூடும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றி காண்பீர்கள். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். மனதில் நம்பிக்கை உண்டாகும்.  உங்களுக்கு துணிச்சலான சில முடிவுகளை எடுப்பதன் மூலம் நன்மைகளைப் பெறுவீர்கள். மனதில் மகிழ்ச்சியான எண்ணங்கள் வரும். 

பரிகாரம்: சிவபெருமானை தினமும் 11 முறை வலம் வந்து வணங்க குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். பண கஷ்டம் குறையும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்

சந்திராஷ்டம தினங்கள்: 3, 4, 30

அதிர்ஷ்ட தினங்கள்: 23, 24

————————————————————————————

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

கிரகநிலை:

ராசியில் செவ்வாய்,  குரு (அதி. சா) – தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  புதன் – தைரிய ஸ்தானத்தில் சூர்யன் – பஞ்சம ஸ்தானத்தில்  சுக்ரன் – ரண, ருண ஸ்தானத்தில் சந்திரன், ராஹூ – அயன, சயன,  போக ஸ்தானத்தில் கேது, சனி என கிரகங்கள் வலம் வருகின்றன. 

பலன்:

பக்குவமாக எடுத்து சொல்லி எதிரில் இருப்பவர்களை திருப்தியடையச் செய்யும் குணமுடைய மகர ராசியினரே உங்களிடம் வாதத்திறமை இருக்கும்.  இந்த மாதம் ராசியாதிபதி சனி விரைய ஸ்தானத்தில் இருந்தாலும் சுக்கிரன் சஞ்சாரம் பெற்றிருப்பது பல வழிகளிலும் ஏற்பட்ட தொல்லைகள் குறையும். ஆனால் எந்த ஒரு வேலையிலும் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்து வதும் நல்லது. திடீர் இடமாற்றம் ஏற்பட்டாலும் அதன் மூலம் சாதகம் உண்டாகலாம். வீண் செலவுகள் கவுரவ குறைச்சல் ஏற்படலாம். மிகவும் கவனம் தேவை. தாய் தந்தையின் உடல் நிலையிலும் கவனம் செலுத்துவது நல்லது.

தொழில் வியாபாரத்தில் மெத்தன போக்கு காணப்பட்டாலும் குரு பார்வையால் தேவையான பணவரத்து இருக்கும். புதிய முயற்சிகளில் தாமதமான நிலை காணப்படும். நீண்ட நாட்களாக முடங்கிக் கிடந்த காரியங்கள் வேகம் பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சல் காரியங்களில் இழுபறி என்ற நிலையை காண்பீர்கள். பேச்சை குறைத்து செயலில் ஈடுபடுவது நன்மையை தரும். சக ஊழியர்கள் ஆதரவுடன் எடுத்துக் கொண்ட காரியங்கள் சுமூகமாக முடியும். 

குடும்பத்தில் சுமூகமான நிலை காணப்படும். ஆனாலும் மனதில் குடும்பம் தொடர்பான கவலை, பிள்ளைகள் பற்றிய கவலை இருந்து வரும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. வாக்குவாதத்தை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

பெண்களுக்கு தொல்லைகள் குறையும். வீண் செலவுகள் உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

கலைத்துறையினருக்கு உங்கள் கடமைகளைச் சரிவர செய்தால் நன்மைகள் அதிகமாக கிடைக்கும். அறிவாற்றலும் செயல்திறமையும் கூடும். பொருளாதாரத்தில் அபிவிருத்தி காணலாம். உழைப்பு வீண் போகாது.

அரசியல் துறையினருக்கு நற்பெயர் கிட்டும். சுகம் பெருகும். மகிழ்ச்சி கூடும். பொருள் வரவு அதிகரிக்கும். பழைய பாக்கிகள் எளிதில் வசூலாகும். புகழ் தேடி வரும். ஒரு பெரிய புள்ளியின் அனுகூலம் கிடைக்கப் பெறுவீர்கள்.

மாணவர்களுக்கு கல்வியில் மெத்தன போக்கு ஏற்படாமல் தீவிர கவனத்துடன் பாடங்களை படிப்பது வெற்றிக்கு வழி வகுக்கும்.

உத்திராடம்:

இந்த மாதம் திடீரென்று அவசர முடிவை எடுக்க வேண்டியிருக்கும். கோபத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் நட்பு, உறவினர்களிடம் சுமூகமான நிலை நீடிக்கும். உல்லாச பயணம் செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கும். வாகனங்கள் வாங்குவதில் இருந்த தடை நீங்கும். 

திருவோணம்:

இந்த மாதம் மனை, வீடு வாங்க எடுக்கும் முயற்சிகள் சற்று தாமதமாக நடக்கும். எதிலும் நிதானத்தை கடைப்பிடிப்பது நன்மை தரும். திருமண முயற்சிகள் கைகூடும். தடைபட்ட பணவரத்து தடை நீங்கி கைக்கு வந்து சேரும். குழந்தைகள் பற்றிய மனக்கவலை நீங்கும். கணவன்- மனைவிக்கிடையே இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். தந்தை வழியில் இருந்து வந்த பிரச்சனைகள்  சரியாகும். 

அவிட்டம்:

இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோக மாற்றம் உண்டாகலாம். சொத்துக்கள் மூலம் கிடைக்க வேண்டியவை இழுபறியாக இருக்கும். கடன் பிரச்சனை தீரும். எதிர்ப்புகள் அகலும், தொழில் வியாபாரம் தொடர்பான போட்டிகளும் நீங்கும். 

பரிகாரம்: ஊனமுற்றவர்களுக்கு தொண்டு செய்வதும் பிரதோஷ காலத்தில் சிவனை வழிபடுவதும் கஷ்டங்களை நீக்கி வீண் விரயத்தை குறைக்கும். காரியத்தடை நீங்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 5, 6

அதிர்ஷ்ட தினங்கள்: 25, 26, 27

————————————————————————————

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதம்)

கிரகநிலை:

ராசியில் புதன் –  தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  சூர்யன் – சுக ஸ்தானத்தில் சுக்ரன் –  பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன், ராஹூ – லாப ஸ்தானத்தில்  கேது, சனி – அயன, சயன, போக ஸ்தானத்தில் செவ்வாய், குரு (அதி. சா)  என கிரகங்கள் வலம் வருகின்றன. 

பலன்:

வீரத்தை விட விவேகமே சிறந்தது என்பதை மனதில் கொண்டு எதையும் சாதிக்கும் திறன் உடைய கும்ப ராசியினரே நீங்கள் வெள்ளை மனம் கொண்டவர்கள். இந்த மாதம் இனிமையான பேச்சின் மூலம் சிக்கலான காரியங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். உங்கள் திறமையை கண்டு அடுத்தவர்கள் வியப்பார்கள். ஆனால் ராசியை செவ்வாய் பார்ப்பதால் திடீர் கோபம் வரும். அதை கட்டுப்படுத்துவது நல்லது. அலைச்சலை தவிர்ப்பதன் மூலம் களைப்பு ஏற்படாமல் தடுத்து கொள்ள முடியும். வேளை தவறி உணவு உண்ணாமல் பார்த்துக் கொள்வது நல்லது. பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும்.

தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதுரியமாக செயல்பட்டு முன்னேற்றம் காண்பார்கள். ஆனால் வேலை செய்பவர்களிடம் கோபப்படாமல் தட்டி கொடுத்து வேலை வாங்குவது நன்மையை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவார்கள். ஆனால் கடுமையான பணியின் காரணமாக சோர்வு உண்டாகலாம். கவனம் தேவை. எடுத்து கொண்ட பணிகளில் இருந்து வந்த தொய்வு நீங்கும். 

குடும்ப ஸ்தானத்தை குரு பார்க்கிறார். குடும்ப விஷயங்களில் ஆர்வம் காண்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் கவனம் செல்லும். பிள்ளைகள் முன்னேற்றத்திற்காக பாடுபடுவீர்கள். உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

பெண்களுக்கு திடீர் என்று கோபம் உண்டாவதை தவிர்ப்பது நல்லது. திறமையை கண்டு மற்றவர்கள் பாராட்டுவார்கள். எதிர்பார்த்த பணவரத்து இருக்கும்.

கலைத்துறையினருக்கு லாபங்கள் பெருகும். தடைபட்ட புதிய கடன்கள் இனி ஏற்படாது. இருக்கும் கடன் சுமையும் குறையும். வெளிநாடு செல்லும் திட்டம் வெற்றி பெறும். சம்பளம் உயரும். சிக்கல்கள் தோன்றினாலும் அதை வெற்றி கொள்ளும் திறன் உண்டாகும். 

அரசியல் துறையினர் செயல்களை செம்மையுற திருத்தமாக செய்வீர்கள். சூரியன் பத்தாமிடத்தில் உலா வருகிறார். உங்களுக்கு அற்புதமான நல்ல பலன்கள் கிட்டும். வசதிகள் ஓங்கும். புதிய சொத்துகள் சேரும். வெற்றிகளை சுவைக்கலாம்.

மாணவர்களுக்கு கோபத்தை குறைத்து நிதானத்தை கடைபிடிப்பது முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். பாடங்களை நன்கு படித்து பாராட்டு பெறுவீர்கள்.

அவிட்டம்:

இந்த மாதம் செலவு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில்  செல்லும் போதும் ஆயுதங்களை கையாளும் போதும் கூடுதல் கவனம் தேவை. சூரியன் சஞ்சாரத்தால் முன் கோபம் ஏற்பட்டு அதனால் வீண் தகராறு ஏற்படலாம். நிதானமாக செயல்படுவது நல்லது.

சதயம்:

இந்த மாதம் தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற சூழ்நிலைகள் ஏதுவாக இருக்கும். செலவை  குறைப்பதன் மூலம் பணத் தட்டுப்பாடு குறையலாம். பேச்சில் கடுமையை காட்டாமல் இருப்பது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி புரியும் இடங்களில் எச்சரிக்கையுடன்  இருப்பது நல்லது. மேலிடத்தின் மூலமாக நடக்க வேண்டிய காரியங்களில் தாமதம் ஏற்படலாம். 

பூரட்டாதி:

இந்த மாதம் குடும்பத்தில் குதூகலமான சுப பலன்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே பந்த பாசம் அதிகரிக்கும். குழந்தைகளின் மூலம் மனம் மகிழும்படியான சூழ்நிலை உருவாகும். நண்பர்கள் உறவினர்களுடன் கவனமாக பேசி பழகுவது நல்லது.

பரிகாரம்: ஆஞ்சனேய கவசத்தை படித்து வருவதுடன் அநாதை இல்லங்களுக்கு சென்று தொண்டு செய்து வர மன குழப்பங்கள் நீங்கும். தைரியம் உண்டாகும். தடைபட்ட காரியங்கள்  நன்கு நடந்து முடியும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 7, 8

அதிர்ஷ்ட தினங்கள்: 1, 2, 28, 29

—————————————————————————————

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

கிரகநிலை:

ராசியில்  சூர்யன் – தைரிய ஸ்தானத்தில் சுக்ரன் –  சுக ஸ்தானத்தில் சந்திரன், ராஹூ – தொழில்  ஸ்தானத்தில் கேது, சனி – லாப ஸ்தானத்தில் செவ்வாய்,  குரு (அதி. சா) – அயன, சயன, போக ஸ்தானத்தில் புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாமல் சாமர்த்தியமாக செயல்பட்டு எதிலும் வெற்றிபெறும் மீன ராசியினரே நீங்கள்  மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற குறிக்கோளுடன் வாழ்பவர். இந்த மாதம் மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்கலாம். ஆடை, அலங்கார பொருட்கள் வாங்கும் எண்ணம் தோன்றும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் சூழ்நிலை ஏற்படும். ராசியாதிபதி குரு ராசியைப் பார்ப்பதால் பணவரத்து கூடும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். நீண்ட தூர தகவல்கள் நல்ல தகவல்களாக வரும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். திருப்திகரமான லாபம் கிடைக்கும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த பிரச்ச்னைகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கப் பெறுவார்கள். அத்துடன் பணவரத்தும் திருப்திகரமாக இருக்கும். கடினமான பணிகளை கூட எளிதாக முடிக்கும் ஆற்றல் வரும். சக ஊழியர்கள் மூலம் நீங்கள் எடுத்த காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள்.

குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். குழந்தைகள் முன்னேற்றத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். அவர்களால் பெருமை சேரும். புதிய நண்பர்கள் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். தந்தையின் உடல் நிலையில் கவனம் தேவை. சுபச் செலவுகள் ஏற்படும். 

பெண்களுக்கு நீண்ட தூரத்தில் இருந்து வரும் தகவல்கள் மன திருப்தியை தருவதாக இருக்கும். முயற்சிகளில் சாதகமான பலன் பெறுவீர்கள். பணவரத்து கூடும்.

கலைத்துறையினருக்கு செலவினங்கள் குறையும். வீண் வாக்குவாதம் வேண்டாம். நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். தேவையற்ற வீண் விவாதங்களில் ஏடுபட வேண்டாம்.

அரசியல்துறையினருக்கு பொதுவாக தொல்லைகளும் பிரிவினையும் நீங்கி ஒற்றுமையும் உயர்வும் ஏற்படும். தைரியம் கூடும். வாழ்நாள் முழுவதும் ஏற்படவிருக்கும் கஷ்டங்களை அறியாமல் தவறான முடிவுகளில் இறங்க வேண்டாம். 

மாணவர்களுக்கு திறமையாக எதையும் செய்து பாராட்டு பெறுவீர்கள். கல்வியில் முன்னேற்றத்திற்கு எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும்.

பூரட்டாதி:

இந்த மாதம் மனதில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். முன்கோபத்தை குறைப்பது நன்மையை தரும். கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது வேலையை கண்டு மற்றவர்கள் பொறாமைப்படுவார்கள்.  கடன் பிரச்சனை தீரும். செல்வநிலை உயரும்.

உத்திரட்டாதி:

இந்த மாதம் நீண்ட நாட்களாக இருந்து வந்த இறுக்கமான நிலை மாறும். மேலிடத்திற்கும் உங்களுக்கும் கருத்து வேற்றுமை உண்டாகலாம் கவனம் தேவை. பண விஷயத்தில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேரலாம். செவ்வாய் சஞ்சாரம் நல்ல பலன்களையே தரும். 

ரேவதி:

இந்த மாதம் எதிர்பார்த்த பணம் வந்து சேரும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேரிடும். சாதூர்யமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். சூரியன் சஞ்சாரம் மூலம் திடீர் உடல்நலக்கோளாறு ஏற்படும். 

பரிகாரம்: வியாழக்கிழமையில் குரு பகவானுக்கு நெய்தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து 9 ஏழைகளுக்கு தயிர் சாதம் அன்னதானமாக வழங்க செல்வம் சேரும். செயல்திறன் கூடும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 9, 10

அதிர்ஷ்ட தினங்கள்: 3, 4, 30

——————————————————————————–

 

மாத பலன்

உங்கள் ராசிக்கான நவம்பர் 2020 மாத பலன்கள்!

Published

on

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction

15-11-2020 அன்று இரவு 8.12 மணிக்கு செவ்வாய் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

 

மேஷம்:(அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

கிரகநிலை:

ராசியில் சந்திரன் – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராஹூ  – ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன், சுக்ரன் – களத்திர ஸ்தானத்தில் சூர்யன் – அஷ்டம ஸ்தானத்தில் கேது – பாக்கிய ஸ்தானத்தில் குரு, சனி  – அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய்(வ)  என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றங்கள்:

04-11-2020 அன்று பகல் 11.07 மணிக்கு புதன் பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

15-11-2020 அன்று இரவு 9.48 மணிக்கு குரு பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

16-11-2020 அன்று பகல் 2.42 மணிக்கு சூர்ய பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

17-11-2020 அன்று இரவு 8.09 மணிக்கு சுக்கிர பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

25-11-2020 அன்று காலை 8.39 மணிக்கு புதன் பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

 

எதையும் திட்டமிட்டு செய்து முடிக்க கூடிய திறமை உடைய மேஷ ராசி அன்பர்களே இந்த மாதம் வீண் மனக் கவலை நீங்கும். பணவரத்து இருக்கும். முயற்சிகளில் இருந்த தடை நீங்கும். இடம் விட்டு வெளியில் தங்க நேரிடும்.

குடும்பத்திற்காக ஓயாது உழைக்க வேண்டி இருக்கும். தக்க சமயத்தில் அனைவரின் பாராட்டுகளையும் பெறுவீர்கள். சுமூகமான முடிவுகள் அனைத்து விசயங்களிலும் எட்டப்படும். உடன் பிறந்தோர் உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். தூரத்திலிருந்து வரும் செய்திகள் உங்கள் மனதிற்கு இனிமையாகத் தோன்றும். திருமண விசயங்கள் கை கூடி வரும். எதிர்பார்க்கும் அளவிற்கு வரன்கள் கிடைக்கும்.

 

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் போட்டியை  சந்திக்க வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களிடம் கடுமையான பேச்சை தவிர்ப்பது நல்லது.  லாபம் எதிர்பார்த்ததை விட குறையலாம். பழைய பாக்கிகள் வசூலாகும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும்.

 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பான  பலன்  கிடைக்க பெறுவார்கள். புதிய பொறுப்புகள் சேரும். வேலை தேடியவர்களுக்கு  வேலை கிடைக்கும். தேவையற்ற வீண் வாக்குவாதம் ஏற்படும். மற்றவர்களிடம்  அனுசரித்து செல்வது நன்மை தரும். நண்பர்களிடம் பகை ஏற்படலாம். பிடிவாதத்தை விட்டு விடுவது  காரிய வெற்றிக்கு உதவும். வீண் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக நேரிடலாம்.

 

கலைத்துறையினருக்கு வாகனங்களை ஓட்டி செல்லும் போது கவனம் தேவை. தங்கள் உடைமைகளை கவனமாக பாதுகாத்துக் கொள்வது அவசியம். தனிமையாக இருக்க நினைப்பீர்கள்.

 

அரசியலில் உள்ளவர்களுக்கு மற்றவர்களால் மனகஷ்டம் ஏற்படும்.  அடுத்தவர்கள் கடமைக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது.  எந்த ஒரு காரியமும் மந்தமாக நடக்கும்.

பெண்களுக்கு மனதில் துணிச்சல் அதிகரிக்கும். திட்டமிட்டபடி செய லாற்றி காரிய அனுகூலம் பெறுவீர்கள். உடல்நலனைப் பொறுத்தவரை பசியின்மை ஏற்படலாம்.

 

மாணவர்களுக்கு கல்வியை பற்றிய கவலை உண்டாகும். தடையை தாண்டி முன்னேற முயற்சிப்பீர்கள்.

 

அஸ்வினி:

 

இந்த மாதம் உறவினர்கள் வகையில் தவிர்க்கமுடியாத சுபச் செலவுகளை சுமக்க நேரும். முக்கியமான பயணமும், முக்கிய பிரமுகர்களின் சந்திப்பும் உண்டாகும். அது உங்கள் எதிர்காலத்துக்கு நல்ல அஸ்திவாரமாக இருக்கும். சிலர் கூட்டு முயற்சிகளில் லாபம் தேடலாம். சிலர் குடும்பத்தினரோடு கூட்டுச் சேர்ந்து தொழில் செய்து லாபம் பார்க்கலாம்.

பரணி:

 

இந்த மாதம் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தொழில், வேலை, உத்தியோகம் ஆகியவற்றில் வெற்றி அடையலாம். சேமிப்பும் அடையலாம். உங்கள் உழைப்பும் நம்பிக்கையும் உங்களுக்கு முழுமையான பலனையும் திருப்தியையும் தரும். எதிர்ப்பும் இடையூறும் ஒருபுறம் இருந்தாலும், உங்களின் தன்னம்பிக்கையாலும் தைரியத்தாலும் அவற்றைப் போராடி எதிர்த்துநின்று வெற்றிகொள்வீர்கள்.

கார்த்திகை 1ம் பாதம்:

 

இந்த மாதம் கடமைகளைக் செய்வீர்கள். பொருளாதாரத்தில் பிரச்சினை இருக்காது என்றாலும், வைத்தியச் செலவும் அல்லது வீண்விரயச் செலவும் தவிர்க்க முடியாததாக இருக்கும். அதனால் சிலசமயம் விரக்தி ஏற்படலாம்.  மனதில் ஆறுதலும் நம்பிக்கையும் உண்டாகும். தொழில், வியாபாரம், உத்தியோகத்தில் பிரச்சனை இருக்காது.

பரிகாரம்: துர்க்கை அம்மனை அர்ச்சனை செய்து வழிபடுவது எல்லாபிரச்சனைகளையும் தீர்க்கும். காரிய  தடை அகலும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி;

சந்திராஷ்டம தினங்கள்: 16, 17

அதிர்ஷ்ட தினங்கள்: 9, 10

 

ரிஷபம்: (கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)

 

கிரகநிலை:

ராசியில்  ராஹூ – பஞ்சம  ஸ்தானத்தில் புதன், சுக்ரன் – ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன் – களத்திர ஸ்தானத்தில் கேது – அஷ்டம ஸ்தானத்தில் குரு, சனி –  லாப ஸ்தானத்தில் செவ்வாய்(வ) – அயன சயன போக ஸ்தானத்தில் சந்திரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றங்கள்:

04-11-2020 அன்று பகல் 11.07 மணிக்கு புதன் பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

15-11-2020 அன்று இரவு 9.48 மணிக்கு குரு பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

16-11-2020 அன்று பகல் 2.42 மணிக்கு சூர்ய பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

17-11-2020 அன்று இரவு 8.09 மணிக்கு சுக்கிர பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

25-11-2020 அன்று காலை 8.39 மணிக்கு புதன் பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

 

எந்த ஒரு காரியத்தையும் நிதானமாக செய்து முடிக்கும் ரிஷப ராசியினரே இந்த மாதம் தடங்கல்கள் அகலும். திட்டமிட்டபடி  காரியங்கள் நடந்து முடியும். வீண் வாக்குவாதங்களை நீங்கும். எந்த காரியத்திலும் எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். தன வாக்கு வாகன லாபம் ஏற்படும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.

குடும்ப நிம்மதி குறையக்கூடும். கணவன், மனைவிக்கிடையே மனம் வருந்தும்படியான நிலை ஏற்படும். வீடு வாகனங்களுக்கான செலவு கூடும். பிள்ளைகளுக்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். ஆனாலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் உணவுக் கட்டுப்பாட்டை அனுசரிப்பது நல்லது.

தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் போட்டிகளை சந்திக்க வேண்டி இருக்கும். பார்ட்னர்களுடன் சுமூகமாக செல்வது நல்லது. பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். வியாபாரம் எதிர்பார்த்த அளவு வேகமாக நடக்காவிட்டாலும் லாபம் குறையாமல் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதப்படும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக  பணிகளை  மேற்கொள்வது நல்லது. எந்த இக்கட்டான சூழ்நிலையையும் மன உறுதியுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள். எதிர்ப்புகள் நீங்கும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனை குறையும். எந்த ஒரு காரியமும் சாதகமாக முடியும். விருப்பமானவர்களுடன் சந்திப்பு  ஏற்படும்.

 

கலைத்துறையினருக்கு வாழ்க்கையில்  முன்னேற்றம் உண்டாகும். வராது என்று நினைத்த பொருள் வந்து சேரலாம். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

 

அரசியல்துறையினருக்கு எதிர்பார்த்த பதவிகளை அடைவீர்கள். மேலிடத்தின் மூலம் உங்கள் காரியங்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்படும்.

 

பெண்களுக்கு அடுத்தவர்கள் பொறுப்புகளை ஏற்காமல் தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத செலவுகள் வரலாம். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். ஆன்மீக பயணம் செல்வதில் விருப்பம் உண்டாகும்.

 

மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். ஆர்வமுடன் பாடங்களை படிப்பீர்கள்.

 

கார்த்திகை 2, 3, 4 பாதம்:

இந்த மாதம் கடந்தகாலத்தில் உங்களை விட்டுச் சென்றவர்கள் விரும்பிவந்து சேரர்வார்கள். உறவு பலப்படும். தொலைபேசித் தொடர்பு மூலமாக சிலர் புதிய தொழில் ஒப்பந்தங்களை ஏற்படுத்தி லாபம் தேடும் முயற்சியில் ஈடுபடலாம். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. சுபநிகழ்ச்சிகள் இடம்பெறும்.

ரோகிணி:

இந்த மாதம் சில அத்தியாவசிய தேவைகளுக்கு செலவு செய்ய பணப்பற்றாக் குறையை சந்திக்கலாம். ஒரு பிரச்சினை முடிந்ததும் இன்னொரு பிரச்சினை உருவாகலாம். ஆனாலும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் பிரச்சினைகள் எவ்வளவு இருந்தாலும் தோல்வியும் தொய்வும் இல்லாமல் சமாளித்து ஜெயிக்கலாம்.

மிருக சிரீஷம் 1, 2, பாதம்:

இந்த மாதம் எடுத்த காரியங்களில் உடனே வெற்றி ஏற்படும். சில காரியங்களில் தாமதமாக வெற்றி ஏற்படும். உங்கள் விடாமுயற்சிதான் உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். பழகும் நண்பர்களை எடைபோட முடியாது. வெளுத்தது எல்லாம் பால் என்று நம்பும் உங்கள் பெருந்தன்மையை கொஞ்சம் ஒதுக்கி வைக்கவும்.

பரிகாரம்:  ஸ்ரீமஹாவிஷ்ணுவை வணங்குவதால்  வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி

 

சந்திராஷ்டம தினங்கள்: 18, 19

அதிர்ஷ்ட தினங்கள்: 11, 12, 13

 

மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்  திருவாதிரை,  புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

 

கிரகநிலை:

சுக ஸ்தானத்தில் புதன், சுக்ரன் – பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன் – ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது – களத்திர ஸ்தானத்தில் குரு, சனி – தொழில் ஸ்தானத்தில்  செவ்வாய்(வ) – லாப ஸ்தானத்தில் சந்திரன் – அயன சயன போக ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றங்கள்:

04-11-2020 அன்று பகல் 11.07 மணிக்கு புதன் பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

15-11-2020 அன்று இரவு 9.48 மணிக்கு குரு பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

16-11-2020 அன்று பகல் 2.42 மணிக்கு சூர்ய பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

17-11-2020 அன்று இரவு 8.09 மணிக்கு சுக்கிர பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

25-11-2020 அன்று காலை 8.39 மணிக்கு புதன் பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

 

எதிலும் திடமான முடிவை எடுக்கும் மிதுன ராசியினரே இந்த மாதம் சின்ன விஷயத்துக் கூட கோபம் வரலாம் நிதானமாக இருப்பது நன்மை தரும். பணவரவு இருக்கும். வேற்று மொழி பேசும் நபரால்  நன்மை உண்டாகும். புத்தி சாதுரியத்தால்  எதையும் சமாளிப்பீர்கள்.  வீண் அலைச்சல் ஏற்படும். நீங்கள் நினைப்பது படி மற்றவர்கள் நடந்து கொள்ளாததால் டென்ஷன் ஏற்படலாம்.

தொழில், வியாபாரம் தொடர்பான பயணங்கள் அதனால் அலைச்சல்  ஏற்படலாம். வியாபார  விரிவாக்கம் தொடர்பான  பணிகளில் இடையூறுகள் ஏற்படலாம். பழைய பாக்கிகள் வசூலில் தாமதமான நிலை காணப்படும்.

உத்தியோகத்தில்  இருப்பவர்களுக்கு வேலை சுமை அதிகரிப்பதுடன் அலைச்சலும் அதனால் சோர்வும் உண்டாகும்.

குடும்பத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலை நீங்கும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் வருமானம் வரும். சொன்ன சொல்லை எப்பாடு பட்டாவது காப்பாற்றுவீர்கள். ஒரு சில பணி காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவது மூலமும் விருந்தினர் வருகையாலும் செலவு உண்டாகும்.

கலைத்துறையினருக்கு தொழில் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். சக கலைஞர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நன்மை தரும். கோபத்தை குறைத்து தன்மையாக பேசுவதால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத செலவு இருக்கும்.

அரசியல் துறையினருக்கு தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. எல்லாவகையிலும்  நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய தூண்டும். பிரிந்து சென்றவர்களை மீண்டும்  சந்திக்க நேரலாம்.

பெண்களுக்கு திடீர் கோபங்கள் உண்டாகலாம். நிதானமாக இருப்பது நல்லது. புத்திசாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள்.

மாணவர்களுக்கு திறமையாக செயல்பட்டு கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். கூடுதல் நேரம் படிக்க வேண்டி இருக்கும்.

 

மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்:

இந்த மாதம் சில காரியங்கள் எதிர்மறையாக நடக்கும். நீங்கள் இதுவரை எதிர்பார்த்த காரியங்கள் எல்லாம் இழுபறியாக நிறைவேறாமல் இருந்தாலும், ஏதோவொரு வகையில் எப்படியும் நடந்துவிடும் என்று நம்பிக்கை இருக்கும்.

திருவாதிரை:

இந்த மாதம் மனிதர்களின் வார்த்தைகளை நம்புவதா வேண்டாமா என்று சமயத்தில் சந்தேகம் ஏற்படலாம். வாழ்க்கையில் பிடிப்பும் ஆர்வமும் இல்லாமல் சலிப்பை உண்டாக்கினாலும், இனிப்பும் கசப்பும் மாறிமாறி இன்றைய பலன்கள் இருக்கும்.

 

புனர்பூசம் 1, 2, 3 பாதம்:

இந்த மாதம் குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சனைகள் மறையும். சிலருக்கு திருமணம் மற்றும் சுபநிகழ்ச்சிகள் நடப்பதில் தாமதம் ஏற்படும். யாருக்கும் வாக்கு கொடுக்கும் முன் ஆலோசனைகள் செய்து கொள்ளவும்.

பரிகாரம்: நவகிரகங்களை வணங்கி புதனுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவது மன அமைதியை தரும்.  பொருளாதாரம் உயரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி

 

சந்திராஷ்டம தினங்கள்: 20, 21

அதிர்ஷ்ட தினங்கள்: 14, 15

 

கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

கிரகநிலை:

தைரிய  ஸ்தானத்தில் புதன், சுக்ரன் – சுக ஸ்தானத்தில் சூர்யன் – பஞ்சம ஸ்தானத்தில் கேது – ரண, ருண ஸ்தானத்தில்  குரு, சனி – பாக்கிய ஸ்தானத்தில்  செவ்வாய்(வ) – தொழில் ஸ்தானத்தில் சந்திரன் – லாப ஸ்தானத்தில்  ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றங்கள்:

04-11-2020 அன்று பகல் 11.07 மணிக்கு புதன் பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

15-11-2020 அன்று இரவு 9.48 மணிக்கு குரு பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

16-11-2020 அன்று பகல் 2.42 மணிக்கு சூர்ய பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

17-11-2020 அன்று இரவு 8.09 மணிக்கு சுக்கிர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

25-11-2020 அன்று காலை 8.39 மணிக்கு புதன் பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

 

எதையும் ஆழமாக யோசித்து திறமையுடன் செய்து முடிக்கும்  கடக ராசி அன்பர்களே  இந்த மாதம் வீண் வாக்குவாதங்கள் அகலும். மனதில் உற்சாகம் ஏற்படும். ஆனாலும் வீண் பகை உண்டாகலாம்.  நண்பர்களிடம் இருந்து பிரிய வேண்டி இருக்கும். கவுரவ பங்கம் ஏற்படாமல் கவனமாக செயல்படுவது நல்லது.

குடும்பத்தில் அமைதி குறையலாம். கணவன், மனைவிக்கிடையே திடீர் மனஸ்தாபம் ஏற்படலாம். பிள்ளைகள் கல்விக்கான செலவு அதிகரிக்கும். அத்துடன் தேவையானவற்றையும் வாங்கி தருவீர்கள். குடும்பத்தில் இருப்பவர்கள் எதையும் வெளிக்காட்டாமல் உங்களுடன் இன்முகம்  கொடுத்து பேசுவார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த வருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள்.

தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்த்த லாபம் தாமதப்படும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தடைகள் உண்டாகலாம். வீண் அலைச்சலும், பண விரயமும் இருக்கும்.  புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகும். மனதில் வியாபாரம் பற்றிய கவலை ஏற்படும்.

 

கலைத்துறையினருக்கு தொழில் தொடர்பான நெருக்கடிகளை சந்திக்க வேண்டி வரும். புது ஒப்பந்தங்கள் தொடர்பான காரியங்கள் சாதகமாக முடியும். புதிய பொறுப்புகள் சுமையாக வரும். நிதானம் தேவை.

 

அரசியலில் உள்ளவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். பயணங்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். ஆனாலும் எதிலும் எச்சரிக்கையாக பேசுவது நல்லது.

 

பெண்களுக்கு எந்த ஒரு காரியத்தையும் செய்யும் முன் தீர ஆலோசனை செய்வது நல்லது. எதிலும் கவனம் தேவை.

 

மாணவர்களுக்கு இருசக்கர வாகனங்களை பயன்படுத்தும் போது கவனம் தேவை. பாடங்களை கவனமாக படிப்பது நல்லது.

 

புனர் பூசம் 4ம் பாதம்:

இந்த மாதம் பொருட்களை களவு கொடுக்க நேரிடலாம். உங்களின் உடமைகள் மீது கண்ணும், கருத்துமாக இருக்க வேண்டும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அறிமுகம் இல்லாதவர்களின் வீட்டில் எதையும் உட்கொள்ள வேண்டாம்.

பூசம்:

இந்த மாதம் நீங்கள் அமைதியாக இருந்தாலும் வீண் சண்டைகள் மற்றும் வீணான குழப்பங்கள் உங்களைத் தேடி வர வாய்ப்பு இருக்கிறது. தகுந்த வரன் கிடைத்து திருமணம ஏற்பாடு இனிதே நடந்தேறும். வீடு, நிலம் மற்றும் வாகனங்கள் வாங்கலாம்.

ஆயில்யம்:

இந்த மாதம் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். ஆனாலும் கவனமுடன் நடந்து கொள்ளுங்கள். போட்டித் தேர்வுகள் சாதகமாக அமையும். சிலர் கல்வி பயில வெளியூர்க்கு செல்ல வேண்டி வரும்.

பரிகாரம்: திங்கள் கிழமைகளில் அம்மனுக்கு விரதம் அனுஷ்டிப்பது கஷ்டங்களை போக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள்

சந்திராஷ்டம தினங்கள்: 22, 23, 24

அதிர்ஷ்ட தினங்கள்: 16, 17

 

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் 1ம் பாதம்)

கிரகநிலை:

தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில் புதன், சுக்ரன் – தைரிய ஸ்தானத்தில் சூர்யன் – சுகஸ்தானத்தில் கேது – பஞ்சம ஸ்தானத்தில்  குரு, சனி – அஷ்டம ஸ்தானத்தில்  செவ்வாய்(வ) – பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் – தொழில் ஸ்தானத்தில்  ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றங்கள்:

04-11-2020 அன்று பகல் 11.07 மணிக்கு புதன் பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

15-11-2020 அன்று இரவு 9.48 மணிக்கு குரு பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

16-11-2020 அன்று பகல் 2.42 மணிக்கு சூர்ய பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

17-11-2020 அன்று இரவு 8.09 மணிக்கு சுக்கிர பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

25-11-2020 அன்று காலை 8.39 மணிக்கு புதன் பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

 

பிறரின் நட்பை பயன்படுத்தி எதையும் செய்து முடிக்கும் சிம்ம ராசி அன்பர்களே இந்த மாதம் எல்லா வகையிலும் நன்மை உண்டாக்கும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்து மதிப்பு கிடைக்க பெறுவீர்கள். உடல் உழைப்பு அதிகரிக்கும். குறிக்கோளற்ற பயணங்கள் உண்டாகும். விழிப்புடன் இருப்பது நல்லது. சுப செலவுகள் உண்டாகும். கையிருப்பு கரையும். ஆன்மீக யாத்திரைகள் சென்று வருவீர்கள்.

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். கணவன், மனைவிக் கிடையே நெருக்கம் உண்டாகும். பிள்ளைகளின் செயல்கள் சந்தோஷத்தை தரும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி திருப்தியடைவீர்கள். எண்ணியபடி செயல்களை செய்து காரிய வெற்றி காண்பீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும்.  விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். திருமண முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

 

தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை காணப்படும். வியாபார நிமித்தமாக  பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். போட்டிகள் குறையும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் தடுமாற்றம் உண்டாகும். எந்த வேலையை முதலில் கவனிப்பது என்று குழப்பம் வரும்.

 

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குறிக்கோளற்ற வீண் அலைச்சல், கூடுதல் உழைப்பும் இருக்கும். சக ஊழியர்களுடன்  சாமர்த்தியமாக பழகி காரிய அனுகூலம் அடைவீர்கள். அலுவலக விவகாரங்களில் சாமர்த்தியமாக நடந்து கொண்டு எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். மேலிடத்தில்  மனம் விட்டு பேசுவது கருத்து வேற்றுமை  ஏற்படாமல் தடுக்கும்.

 

கலைத்துறையினருக்கு எதிர்பாராத செலவுகள் உண்டாகும். காரியதாமதம் ஏற்படும். வீண்கவலை இருக்கும். ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முன் நன்றாக ஆலோசனை நடத்தவும்.

 

அரசியலில் உள்ளவர்களுக்கு மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். தனலாபம் அதிகரிக்கும். சிறப்பான  பலன்  கிடைக்க பெறுவீர்கள். புதிய பொறுப்புகள் சேரும்

 

பெண்களுக்கு திட்டமிட்டப்படி எதையும் செய்து முடிப்பீர்கள். மனோதிடம் கூடும். உடல்நலனைப் பொறுத்தமட்டில் காய்ச்சல் தலைவலி ஏற்படும். மருத்துவ செலவு அதிகரிக்கும். கவனம் தேவை.

 

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். சக மாணவர்களுடன் நல்லுறவு காணப்படும்..

 

மகம்:

இந்த மாதம் நல்ல பெயர் வாங்குவீர்கள். மூலதனத்திற்குத் தேவையான பணம் வந்து குவியும். எதிரிகள் வகையில் சற்று கவனமுடன் செயல்படவும். அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளவும்.

பூரம்:

இந்த மாதம் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். பிறமொழி பேசுபவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த காரியங்கள் உங்களுக்கு சாதகாமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நிகழும். வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும். வெளிநாட்டிலிருந்து நல்ல தகவலகள் வந்து சேரும்.

 

உத்திரம் 1ம் பாதம்:

இந்த மாதம் அலைச்சல் இருக்கும். சிலர் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் திண்டாட வேண்டிய நிலை ஏற்படலாம். உங்கள் குழந்தைகளால் சிற்சில பிரச்சனைகள் வரலாம். அதற்காக உங்களின் குழந்தைகள் மேல் ஆத்திரம் கொள்ள வேண்டாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் வரும் கஷ்டங்களை தாங்கிக் கொள்ளுங்கள்.

பரிகாரம்: அருகில் இருக்கும் சிவன் ஆலயத்திற்கு சென்று வணங்கி அர்ச்சனை செய்ய எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். மனோ பலம் கூடும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்

 

சந்திராஷ்டம தினங்கள்: 25, 26

அதிர்ஷ்ட தினங்கள்: 18, 19

 

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

கிரகநிலை:

ராசியில் புதன், சுக்ரன் – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன் – தைரிய ஸ்தானத்தில் கேது – சுக  ஸ்தானத்தில்  குரு, சனி – களத்திர ஸ்தானத்தில்  செவ்வாய்(வ) – அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன்- பாக்கிய ஸ்தானத்தில்  ராஹூ  என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றங்கள்:

04-11-2020 அன்று பகல் 11.07 மணிக்கு புதன் பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

15-11-2020 அன்று இரவு 9.48 மணிக்கு குரு பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

16-11-2020 அன்று பகல் 2.42 மணிக்கு சூர்ய பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

17-11-2020 அன்று இரவு 8.09 மணிக்கு சுக்கிர பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

25-11-2020 அன்று காலை 8.39 மணிக்கு புதன் பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

 

புத்தி கூர்மையுடன் செயல்பட்டு எந்த சிக்கலையும் தீர்க்கும் கன்னி ராசி அன்பர்களே இந்த மாதம் காரிய அனுகூலம் உண்டாகும். மனோதிடம் அதிகரிக்கும். பயன் தரும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். செல்வம் சேரும். வாகனம் வாங்க எடுத்த முயற்சி கைகூடும். பயணங்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

குடும்பத்தில் அமைதி குறையலாம். நிதானமாக பேசி பழகுவது நல்லது. கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நன்மை தரும். பிள்ளைகள் மீது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொருட்களை பாதுகாப்பாக வைப்பது அவசியம்.

தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். லாபம் அதிகாரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும். வியாபார வளர்ச்சி பற்றிய சிந்தனை எழும். அரசாங்கத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

 

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி தேடிவரும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். கூடுதல் பணி காரணமாக உடல்சோர்வு உண்டாகலாம். சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

 

கலைத்துறையினருக்கு கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான  முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும்.

 

அரசியல் மற்றும் பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு மேலிடத்தை அனுசரித்து செல்வது நல்லது.  பழைய பாக்கிகளை  வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். எடுத்த வேலையை செய்து முடிப்பதற்குள் பல தடங்கல்கள் உண்டாகும்.

 

பெண்களுக்கு திறமையான பேச்சின் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். காரிய தடைகள் நீங்கும். மனதில் இருந்த சோர்வு நீங்கி உற்சாகம்  உண்டாகும். எதிர்பார்த்த தகவல் சாதகமாக வரும். உடல்நிலையைப் பொறுத்தவரை இருந்து வந்த மருத்துவ செலவுகள் குறையும். மறைவிடங்கள் சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம். சோம்பல் அதிகமாகலாம்.

 

மாணவர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். பெற்றோர் சொல்படி கேட்டு நடப்பீர்கள்.

 

உத்திரம் 2, 3, 4 பாதம்:

இந்த மாதம் தம்பதிகளிடையே அன்பும் பாசமும் அதிகரிக்கும். கருத்துக்களை பரிமாறும் முன் பொறுமை மற்றும் நிதானம் அவசியம் என்பதை உணருங்கள். திருமணமாகாமல் அதற்குண்டான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு திருமணம் இனிதே நடந்தேறும். புதிதாக வீடு, மனை வாங்க வேண்டும் என்று யோசனை செய்தவர்களின் எண்ணம் ஈடேறும்.

 

அஸ்தம்:

இந்த மாதம் மிகவும் விரும்பிய நண்பர்களை விட்டுப் பிரிய வேண்டிய நிலை வரலாம். உங்களின் பொருட்களை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ளவும். தூக்கம் இல்லாமல் தவிக்கும் நிலையில் உள்ளவர்களுக்கு யோகா போன்ற பயிற்சிகளை செய்வது நன்மையைத் தரும்.

சித்திரை 1, 2, பாதம்:

இந்த மாதம் தாய்மாமனிடம் கருத்து மோதல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமான உழைப்பினை கொடுக்க வேண்டி வரலாம். வேலையில் கவனமுடன் செல்வது நல்லது.

பரிகாரம்: புதன்கிழமைதோறும் ஐயப்பன் கோவிலுக்கு சென்று வர எல்லா நன்மைகளும் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:  புதன், வியாழன்;

சந்திராஷ்டம தினங்கள்: 1, 27, 28, 29

அதிர்ஷ்ட தினங்கள்: 20, 21

 

துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம்  பாதம்)

கிரகநிலை:

ராசியில் சூர்யன் – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது – தைரிய ஸ்தானத்தில் குரு, சனி – ரண ருண ரோக ஸ்தானத்தில்  செவ்வாய்(வ) – களத்திர ஸ்தானத்தில் சந்திரன் –  அஷ்டம ஸ்தானத்தில் ராஹூ – அயன சயன போக  ஸ்தானத்தில் புதன், சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றங்கள்:

04-11-2020 அன்று பகல் 11.07 மணிக்கு புதன் பகவான் ராசிக்கு மாறுகிறார்.

15-11-2020 அன்று இரவு 9.48 மணிக்கு குரு பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

16-11-2020 அன்று பகல் 2.42 மணிக்கு சூர்ய பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

17-11-2020 அன்று இரவு 8.09 மணிக்கு சுக்கிர பகவான் ராசிக்கு மாறுகிறார்.

25-11-2020 அன்று காலை 8.39 மணிக்கு புதன் பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

 

பலன்:

 

அடுத்தவரை அனுசரித்து செல்வதில் கெட்டிக்காரர்களான துலா ராசி அன்பர்களே இந்த மாதம் தன்னம்பிக்கை வளரும். பணவரவு திருப்தி தரும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும். வாக்கு வன்மை அதிகரிக்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். ஆனாலும் தேவையற்ற வீண் பேச்சுகளை தவிர்ப்பது நல்லது.  அறிவுத்திறன் அதிகரிக்கும். பெயருக்கும், புகழுக்கும் பங்கம் வரலாம்.

குடும்பத்தில் நிம்மதி குறையும்படியான ஏதாவது சம்பவங்கள் நடக்கலாம். கணவன், மனைவிக்கிடையே மன வருத்தம் ஏற்படலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. நண்பர்கள் உறவினர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது. தாய், தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உடல்நலனைப் பொறுத்தமட்டில் உடற்சோர்வு மன சோர்வு வரலாம்.

 

தொழில் வியாபாரத்தில் திடீர் தடைகள் ஏற்பட்டு நீங்கும். வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பங்குதாரர்களுடன் இருந்து வந்த நீண்ட நாள் பிரச்சனைகள் ஒரு சுமூக முடிவிற்கு வரும்.  உங்கள் வியாபாரத்தை விருத்தி செய்து கொள்வீர்கள்.

 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமான பணிகளை செய்யவேண்டி இருக்கும். வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்கு செல்லலாமா என்று கூட தோன்றலாம். மனம் தளராமல் இருப்பது நல்லது. வாகனம், வீடு ஆகியவற்றால் செலவு ஏற்படும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. தடங்கல்கள், கூடுதல் உழைப்பு ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும்.

 

கலைத்துறையினருக்கு மனத்துணிவு அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி  திருப்திகரமாக இருக்கும். காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும்.

 

அரசியலில் உள்ளவர்களுக்கு கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது.  மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனம் தேவை.

 

பெண்களுக்கு வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. காரியங்களை  செய்து முடிப்பதில் கடினமான நிலை காணப்படும்.

 

மாணவர்களுக்கு  கல்வியில் முன்னேற்றமடைய கடின உழைப்பு தேவை. எல்லோரிடமும் அனுசரித்து செல்வது நல்லது. விளையாட்டில் ஆர்வம் உண்டாகும். பாடங்களை கவனமாக படிப்பது முன்னேற்றத்துக்கு உதவும்.

 

சித்திரை 3, 4 பாதம்:

இந்த மாதம் எல்லா நன்மைகளையும் தடையின்றி அடைவீர்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். இதுவரை தொந்தரவு கொடுத்துவந்த நோய் விலகும். அதனால் ஏற்பட்ட மனபாரம் குறையும். வரக்கூடிய உபரி வருவாயால் கடன் அடைபடும். தொழிலதிபர்கள் எதிர்பார்த்தபடி வரவுகள் வந்துசேரும்.

 

சுவாதி:

இந்த மாதம் புதிய ஒப்பந்தங்கள் கைகொடுக்கும். தொழிலதிபர்கள் பங்குதாரர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். கணவன்- மனைவி ஒற்றுமை சுமுகமாக இருக்கும். மனைவி வழியில் வரவேண்டிய சொத்துகள் கிடைக்கும். வியாபாரிகள் எந்தக் கொள்முதலையும் தயக்கமின்றிச் செய்யலாம். வியாபாரம் பெருகும். போட்டியாளர்கள் விலகிச்செல்வார்கள்.

விசாகம் 1, 2, 3ம்  பாதம்:

இந்த மாதம் ஊழியர்களுக்கு வரவேண்டியவை அனைத்தும் வந்துசேரும். கேட்ட இடத்திற்கு மாறுதல் கிட்டும். மகான்களின் சந்திப்பு ஏற்படும். தங்கள் பிள்ளைகளுக்கு வரன் தேடும் பெற்றோர்களுக்கு நல்ல சம்பந்தம் வந்துசேரும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் நல்ல வாய்ப்புகளைப் பெற்றுத்தரும். உங்களை ஒதுக்கியவர்களே உங்களைத் தேடிவருவார்கள்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் சப்தகன்னியரை அர்ச்சனை செய்து வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும். செல்வம்  சேரும். செல்வாக்கு உயரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 2, 3, 4, 30

அதிர்ஷ்ட தினங்கள்: 22, 23, 24

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

கிரகநிலை:

ராசியில் கேது – தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் குரு, சனி – பஞ்சம ஸ்தானத்தில்  செவ்வாய்(வ) – ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன் – களத்திர ஸ்தானத்தில் ராஹு – லாப   ஸ்தானத்தில் புதன், சுக்ரன் – அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றங்கள்:

04-11-2020 அன்று பகல் 11.07 மணிக்கு புதன் பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

15-11-2020 அன்று இரவு 9.48 மணிக்கு குரு பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

16-11-2020 அன்று பகல் 2.42 மணிக்கு சூர்ய பகவான் ராசிக்கு மாறுகிறார்.

17-11-2020 அன்று இரவு 8.09 மணிக்கு சுக்கிர பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

25-11-2020 அன்று காலை 8.39 மணிக்கு புதன் பகவான் ராசிக்கு மாறுகிறார்.

பலன்:

 

விறுவிறுப்பாக எதையும் செய்யும் திறன் படைத்த விருச்சிக ராசி அன்பர்களே இந்த மாதம் வீண் செலவுகள் குறையும். பணவரத்து அதிகரிக்கும். காரியங்களில் இருந்து வந்த தாமதம் அகலும்.  மிகவும் வேண்டியவரை பிரிய நேரிடும். கண்மூடித்தனமாக எதையும் செய்யாமல் யோசித்து செய்வது நல்லது. இருக்கும் இடத்தை விட்டு வெளியேற வேண்டி இருக்கும்.

குடும்பத்தில் காணாமல் போன சந்தோஷம் மீண்டும் வரும். கணவன் மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும்.  பிள்ளைகள்  வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். வராது என்று நினைத்த பொருள் வந்து சேரலாம். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த கருத்து மோதல்கள் மறையும்.

தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கலாம். ஆர்டர்கள் மற்றும் பொருட்கள் சப்ளை செய்வதில் கவனம் தேவை. பணவரத்து  தாமதப்படலாம்.

 

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு உண்டாகும். வேலைப்பளு குறையும். திடீர் நெருக்கடிகள் ஏற்படலாம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.  பயனற்ற பயணங்கள் உண்டாகலாம்.

 

கலைத்துறையினருக்கு கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான  முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும்.

 

அரசியலில் இருப்பவர்களுக்கு இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். இருப்பினும் நற்பெயர் கிடைக்கும்.

 

பெண்களுக்கு எந்த முயற்சியிலும்  சாதகமான  பலன் கிடைப்பதில் தாமதமாகும். மனகவலை ஏற்படலாம். உடல்நலனைப் பொறுத்தமட்டில் உஷ்ண சம்பந்தமான நோய் உண்டாகலாம்.

 

மாணவர்களுக்கு  கல்விக்காக செலவு உண்டாகும். கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும். வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம்.

 

விசாகம் 4ம் பாதம்:

 

இந்த மாதம் நீண்ட நாட்களாக தொல்லை கொடுத்துவந்த நோய் மருந்துக்கு கட்டுப்பட்டு விடும். அரசுப்பணியில் உள்ளவர்கள் உடன் பணிபுரிகின்றவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.  உடன்பிறந்த சகோதரர்கள் ஒன்றுசேர்வார்கள். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் வந்து சேரும்.

அனுஷம்:

இந்த மாதம் பொதுக் காரியத்தில் உள்ளவர்கள் சமூகத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் பெறுவார்கள். குடும்பத்தில் இருந்துவந்த சண்டை நீங்கி தம்பதியர் ஒன்று சேர்வார்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நினைத்தபடி பணவரவுகளைப் பெறலாம். தொழிலதிபர்கள் அதிக உற்பத்தியையும், லாபத்தையும் பெறுவார்கள்.

கேட்டை:

இந்த மாதம் பொறுமையுடன் செயல்பட வேண்டிய மாதம். வியாபாரிகள் மறைமுக போட்டிகளால் நெருக்கடிகளைச் சந்திக்கலாம். கவனமாகச் செயல்பட்டால் லாபம் பெறலாம். இதுவரை குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்த பிள்ளைகள் வந்துசேர்வார்கள். அயல்நாட்டில் இருந்து நல்ல செய்திகள் வந்துசேரும். தந்தை, மகன் உறவு சுமுகமாகும்.

 

பரிகாரம்:  வேல்மாறல் வகுப்பு பாராயணம் செய்து முருகனை வழிபடுவது காரிய தடைகளை நீக்கும். எதிர்ப்புகள்  நீங்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி;

 

சந்திராஷ்டம தினங்கள்: 5, 6

அதிர்ஷ்ட தினங்கள்: 25, 26

தனுசு (மூலம், பூராடம்,  உத்திராடம் 1ம் பாதம்)

கிரகநிலை:

ராசியில்  குரு, சனி – சுக ஸ்தானத்தில்  செவ்வாய்(வ) – பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன் – ரண ருண ரோக ஸ்தானத்தில்  ராஹு – தொழில்  ஸ்தானத்தில் புதன், சுக்ரன் – லாப ஸ்தானத்தில் சூர்யன் – அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றங்கள்:

04-11-2020 அன்று பகல் 11.07 மணிக்கு புதன் பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

15-11-2020 அன்று இரவு 9.48 மணிக்கு குரு பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

16-11-2020 அன்று பகல் 2.42 மணிக்கு சூர்ய பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

17-11-2020 அன்று இரவு 8.09 மணிக்கு சுக்கிர பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

25-11-2020 அன்று காலை 8.39 மணிக்கு புதன் பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

 

அமைதியுடனும் சாந்தமாக பேசும் குணமும் உடைய தனசு ராசி அன்பர்களே இந்த மாதம் எதிர்ப்புகள் விலகும். எல்லா நன்மைகளும் உண்டாகும். பயணம் மூலம் நன்மை கிடைக்கும். செய்யும் காரியங்களால் பெருமை ஏற்படும்.  பணவரத்து அதிகரிக்கும். புத்தி சாதூரியம் கூடும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

குடும்பத்தில் ஏதாவது சிறு சிறு சண்டைகள் ஏற்படலாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகள் பற்றிய கவலை உண்டாகும். சகோதரர்கள், தகப்பனாரிடம் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம்.

தொழில் வியாபார சிக்கல்கள் நீங்கி நன்கு நடைபெறும். கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்ய முயற்சி மேற்கொள்வீர்கள்.

 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். மேலிடத்திலிருந்து உங்களுக்கு பொறுப்புகளை அதிகரிக்கலாம். பணி நிமித்தமாக வெளியூர் சென்று தங்க வேண்டி வரலாம்.

 

கலைத்துறையினருக்கு கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான  முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும்.

 

அரசியலில் உள்ளவர்களுக்கு வீண் பேச்சை குறைப்பது நல்லது. எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகலாம்.

 

பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. சேமிப்புகள் செய்யும் முன் தகுந்த ஆலோசனை பெறவும்.

 

மாணவர்களுக்கு மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது அவசியம். வீண் விவகாரங்களை விட்டு விலகுவது நல்லது. உடல்நலனைப் பொறுத்தமட்டில் ஜலதோஷ தொந்தரவு ஏற்படலாம். தலையில் நீ கோர்த்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ளவும்.

 

மூலம்:

இந்த மாதம் வெளிநாடு செல்லும் திட்டம் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கல் செய்வோர் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய மாதம். சமூகத்தில் நல்ல அந்தஸ்தைப் பெறுவீர்கள். பிள்ளைகள் பாராட்டைப் பெற்று பெற்றோர்களுக்கு மகிழ்ச்சி தருவார்கள். இதுவரை தொல்லை கொடுத்துவந்த எதிரிகள் விலகிச் செல்வார்கள்.

பூராடம்:

இந்த மாதம் காரியங்கள் அனைத்தும் கைகூடும். உங்கள் செயல்பாடுகள் மற்றவர்களைக் கவரும். உல்லாசப் பயணங்களில் நாட்டம் செல்லும். மனஅடக்கம் பெற தியானம் செய்யுங்கள். படிப்பில் நாட்டம் கூடும். பெற்றோர்கள், பிள்ளைகள் விரும்பியதை  வாங்கிக்கொடுப்பார்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் வந்துசேரும். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்திகள் வரும்.

 

உத்திராடம் 1ம் பாதம்:

இந்த மாதம் கல்வியில் புதிய மாற்றம் உருவாகும். அரசாங்க அனுகூலம் ஏற்படும். வாகனங்களைப் பிரயோகப்படுத்தும் போது மிகவும் கவனம் தேவை. செய்யும் உத்தியோகத்தில் இடமாற்றமோ அல்லது பணி நிரந்தரமோ ஏற்படலாம்.

பரிகாரம்: வியாழக்கிழமையில் மஞ்சள் நிற மலர் சாற்றி தட்சிணாமூர்த்தியை வழிபடுவது கடன் பிரச்சனையை தீர்க்கும். செல்வம்  சேரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி;

சந்திராஷ்டம தினங்கள்: 7, 8

அதிர்ஷ்ட தினங்கள்: 1, 27, 28, 29

 

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

கிரகநிலை:

தைரிய ஸ்தானத்தில்  செவ்வாய்(வ) – சுக ஸ்தானத்தில் சந்திரன் –  பஞ்சம  ஸ்தானத்தில்  ராஹூ – பாக்கிய  ஸ்தானத்தில் புதன், சுக்ரன் – தொழில் ஸ்தானத்தில் சூர்யன் – லாப ஸ்தானத்தில் கேது – அயன, சயன,  போக ஸ்தானத்தில் குரு, சனி என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றங்கள்:

04-11-2020 அன்று பகல் 11.07 மணிக்கு புதன் பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

15-11-2020 அன்று இரவு 9.48 மணிக்கு குரு பகவான் ராசிக்கு மாறுகிறார்.

16-11-2020 அன்று பகல் 2.42 மணிக்கு சூர்ய பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

17-11-2020 அன்று இரவு 8.09 மணிக்கு சுக்கிர பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

25-11-2020 அன்று காலை 8.39 மணிக்கு புதன் பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

 

நியாயம், நேர்மை, இதுதான் வாழ்க்கை  என்று எண்ணும் மகர ராசி அன்பர்களே இந்த மாதம் காரிய தடை ஏற்படலாம். மனதில் ஏதாவது குழப்பம் ஏற்பட்டு நீங்கும். சாமர்த்தியமான பேச்சு கை கொடுக்கும். பணவரத்து திருப்தியாக இருக்கும். நீண்ட நாட்களாக இழுத்து வந்த வீண் பிரச்சனைகள் நீங்கும். மரியாதை அந்தஸ்து உயரும். வெளிநாட்டு பயணங்கள் கைகூடும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வீட்டிற்கு தேவையான  பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே  நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் சந்தோஷம் உண்டாகும்.

 

தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். தேங்கி இருந்த சரக்குகள் விற்பனையாகும். எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். சரக்குகளை அனுப்பும் போது கவனம் தேவை.

 

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். அலுவலக பணிகளை கூடுதல் கவனமுடன்  செய்வது நல்லது.

 

கலைத்துறையினருக்கு வெளிநாடு வாய்ப்புகள் வந்து சேரும். எதிர்பார்த்த தனவரவு கிட்டும். உங்களின் திறமை பளிச்சிடும்.

 

அரசியலில் உள்ளவர்களுக்கு கூடுதல் பணி சுமையை ஏற்க வேண்டி இருக்கும். காரியங்கள் தாமதமாக நடந்தாலும் வெற்றிகரமாக நடக்கும். எதிர்பார்த்த கடன் வசதி கிடைக்கும். புதிய பதவிகள் வரும்.

 

பெண்களுக்கு புத்திசாதூரியம் அதிகரிக்கும் எதிர்பார்த்த பணம் வந்து சேரலாம். பிரச்சனைகள் குறையும். குடும்பத்தில் இருப்பவர்களின் செய்கைகள்  உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கும். பிள்ளைகளுடன்  அனுசரித்துச் செல்வது நல்லது.

 

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்ற மடைய முழு முயற்சியுடன் படிப்பீர்கள். சக மாணவர்கள் மத்தியில் மதிப்பு உயரும்.

 

உத்திராடம் 2, 3, 4 பாதம்:

 

இந்த மாதம் ஊழியர்கள் நினைத்த இடத்திற்கு மாறுதல் பெறுவார்கள். தங்க நகை வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். அதேநேரம் பணியாளர்களிடம் கவனமாக இருக்கவேண்டும். வியாபாரிகள் நல்ல நிலையை அடைவார்கள். வேலைதேடும் இளைஞர்களுக்கு எதிர்பார்த்தபடி வேலைவாய்ப்புகள் வந்துசேரும்.

திருவோணம்:

 

இந்த மாதம் பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மதிப்பு மரியாதை சிறப்படையும். செல்வாக்கு ஓங்கும். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். தம்பதிகளிடையே அன்பு மேலோங்கும். பிரிந்த குடும்பம் ஒன்றுசேரும்.

அவிட்டம் 1,2 பாதம்:

 

இந்த மாதம் பொதுவாக நற்பலன்கள் கூடுதலாக கிடைக்கும். எதிலும் சிறிதளவு ஆதாயம் ஏற்படும். முன்விரோதம் காரணமாக சில சங்கடங்கள் உருவாகலாம், என்றாலும் அவற்றை சமாளிக்கும் வழிகள் உங்களுக்கு புலப்படும். இயந்திரங்களைப் பிரயோகிக்கும் பணியாளர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். தெய்வப்பணி, தருமப்பணி போன்ற நற்காரியங்களில் ஈடுபடவும் வாய்ப்புகள் உண்டு.

பரிகாரம்: சனிக்கிழமையில் ஆஞ்சநேயரை வழிபடுவது கஷ்டங்களை போக்கும். மனதில் தைரியம் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்

 

சந்திராஷ்டம தினங்கள்: 9, 10

அதிர்ஷ்ட தினங்கள்: 2, 3, 4, 30

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதம்)

கிரகநிலை:

தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில்  செவ்வாய்(வ) – தைரிய ஸ்தானத்தில் சந்திரன் –  சுக ஸ்தானத்தில்  ராஹூ  – அஷ்டம  ஸ்தானத்தில் புதன், சுக்ரன் – பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன் – தொழில் ஸ்தானத்தில் கேது – லாப ஸ்தானத்தில் குரு, சனி என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றங்கள்:

04-11-2020 அன்று பகல் 11.07 மணிக்கு புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

15-11-2020 அன்று இரவு 9.48 மணிக்கு குரு பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

16-11-2020 அன்று பகல் 2.42 மணிக்கு சூர்ய பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

17-11-2020 அன்று இரவு 8.09 மணிக்கு சுக்கிர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

25-11-2020 அன்று காலை 8.39 மணிக்கு புதன் பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

 

உழைப்பதற்கு அஞ்சாத கும்பராசியினரே இந்த மாதம் தேவையான உதவிகள் கிடைக்கும்.  பணவரத்து அதிகரிக்கும். வீண் அலைச்சல் ஏற்படும்.  உழைப்பு அதிகரிக்கும். பயணங்களால் வீண் செலவு உண்டாகும்.

குடும்பத்தில் சந்தோஷமான  சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே  மகிழ்ச்சி நீடிக்கும் உறவு பலப்படும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்க பெறுவீர்கள். அவர்களது கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.  வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும். உடல்நலனைப் பொறுத்தவரை நீர் சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம்.

 

தொழில் வியாபாரத்தில் தேவையற்ற இடர்பாடுகள் ஏற்படலாம். பார்ட்னர்களை அனுசரித்து செல்வது நல்லது. கடன் கொடுக்கும்போது கவனம் தேவை. வாகன வசதி உண்டாகும். அடுத்தவர்களிடம் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். நீண்ட தூர தகவல்கள் நல்லவையாக இருக்கும். எதிலும் நிதானம் தேவை. புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதப்படும்.

 

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்கு புதிய பதவி கூடுதல் பொறுப்புகள் கிடைக்கலாம். கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். அலுவலகத்தில் அடுத்தவர்களால் திடீர் பிரச்சனை தலை தூக்கலாம். உங்களது கருத்துக்கு மாற்று கருத்து உண்டாகலாம்.

 

கலைத்துறையினருக்கு கவனமாக பேசுவது நல்லது.  வீண்பழி உண்டாகலாம். வேலைகளில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கலாம்.

 

அரசியலில் உள்ளவர்களுக்கு கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது.  மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனம் தேவை.

 

பெண்களுக்கு சமையல் செய்யும்போது கவனம் தேவை. எதிலும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது. உடலநலனைப் பொறுத்தமட்டில் தீ, ஆயுதங்களை கையாளும் போது கவனம் தேவை.

 

மாணவர்களுக்கு பாடங்களை படிப்பது வேகம் பெறும். கல்வியில் வெற்றி பெறுவீர்கள்.

 

அவிட்டம் 3, 4 பாதம்:

இந்த மாதம் தொழிலில் சிக்கல்கள் உருவாகாது என்றாலும் சிற்சில வாக்குவாதங்கள் இருக்கும். எதிலும் அளவோடு ஈடுபட்டு வந்தால் தொல்லைகள் இராது. அடுத்தவர்களுடைய விவகாரங்களில் வீணாக தலையிட வேண்டாம். பகைவர்கள் பணிந்து போகவும் வாய்ப்புகள் உண்டு.

சதயம்:

இந்த மாதம் திருமணத்திற்கு வரன் தேடுவோர் வரக்கூடிய வரன்களை நன்றாக ஆராய்ந்து முடிவுக்கு வரவேண்டும். தொழிலதிபர்கள் வெளிநாட்டு ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். லாபம் பெருகும். வியாபாரிகள் போட்டியின்றி வியாபாரம் செய்து லாபத்தைப் பெறுவார்கள்.

பூரட்டாதி 1, 2, 3  பாதம்:

இந்த மாதம் பிரிந்துசென்ற தம்பதியினர் ஒன்றுசேர்வார்கள். குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் வருவாய் உண்டு. மருத்துவத் தொழில்புரிவோருக்கு அதிக வருவாய் வரும் மாதம். சோதனைகள் வெற்றியாக மாறும்.

பரிகாரம்: சனிக்கிழமைதோறும் சிவனை வணங்கி நல்லெண்ணெய் தீபம் ஏற்றி  வழிபடுவது துன்பங்களை போக்கும். மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்

 

சந்திராஷ்டம தினங்கள்: 11, 12, 13

அதிர்ஷ்ட தினங்கள்: 5, 6

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

கிரகநிலை:

ராசியில்  செவ்வாய்(வ) – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன்  – தைரிய ஸ்தானத்தில்  ராஹூ – களத்திர  ஸ்தானத்தில் புதன், சுக்ரன் – அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன் – பாக்கிய ஸ்தானத்தில் கேது – தொழில்  ஸ்தானத்தில் குரு, சனி என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றங்கள்:

04-11-2020 அன்று பகல் 11.07 மணிக்கு புதன் பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

15-11-2020 அன்று இரவு 9.48 மணிக்கு குரு பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

16-11-2020 அன்று பகல் 2.42 மணிக்கு சூர்ய பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

17-11-2020 அன்று இரவு 8.09 மணிக்கு சுக்கிர பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

25-11-2020 அன்று காலை 8.39 மணிக்கு புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

 

எந்த ஒரு காரியத்தையும் முன்னின்று செய்ய ஆசைப்படும் மீன ராசி அன்பர்களே இந்த மாதம் பல வகையிலும் நற்பலன்களை அள்ளித் தரும். தெய்வபக்தி அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும்.  மனதில் சுய நம்பிக்கை அதிகரிக்கும். எதிலும் கவனமாக பேசுவது நல்லது. மனம் அமைதி பெறும்.

குடும்பத்தில் கலகலப்பு அதிகரிக்கும். வெறுப்பு கோபம் அகலும். கணவன், மனைவிக்கிடையே  கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள்  சொல்வதை  கேட்டு நிதானமாக பேசுவது நல்லது. பேச்சின் இனிமை சாதுர்யம் இவற்றால் எடுத்த காரியங்கள் சாதகமாக முடிய உதவும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.

 

தொழில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் உண்டாகும். லாபம் குறையக்கூடும். பயணம் மூலம் சாதகம் கிடைக்கும். கடித போக்குவரத்து நன்மை தரும். வியாபாரம் தொடர்பான நெருக்கடிகளை சந்திக்க வேண்டிவரும். புதுவியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக முடியும்.

 

உத்தியோகத்தில் இருப்பவர்கள்  திறமையான  பேச்சால் வெற்றி பெறுவார்கள். வாகன  யோகம் உண்டாகும். எந்த ஒரு காரியத்திலும் சரியான முடிவுக்கு வர முடியாமல் தடுமாற்றம் உண்டாகும். மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாத நிலை உண்டாகி அவர்களுடன்  பகை ஏற்படலாம். சாமர்த்தியமாக எதையும் சமாளிக்கும் துணிச்சல் வரும். பணவரத்து திருப்தி தரும். எதிர்ப்புகள் குறையும்.

 

கலைத்துறையினருக்கு வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது. சக கலைஞர்களிடம் அனுசரித்து போவது நன்மைதரும்.

 

அரசியலில் உள்ளவர்களுக்கு கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது.  மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனம் தேவை.

 

பெண்களுக்கு எதிர்பார்த்த காரியங்கள் நடந்து முடியும். செலவு அதிகாரிக்கும். பயணம் செல்ல நேரலாம். மற்றவர்களுக்காக பொறுப்புக்களை ஏற்பதை தவிர்ப்பது நல்லது.

 

மாணவர்களுக்கு கவன தடுமாற்றம் ஏற்படாமல் பாடங்களை படிப்பது நல்லது. பொறுப்புகள் கூடும்.

 

பூரட்டாதி 4ம் பாதம்:

இந்த மாதம் தொழிலாளர்கள் ஓய்வில்லாமல் உழைக்க நேரும். அதற்கேற்றவாறு கூடுதல் வருமானமும் வரும். தொழிலதிபர்கள் நினைத்தபடி உற்பத்தி கூடும். புதிய ஒப்பந்தங்கள் வரும். லாபம் பெருகும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். உடல்நிலையில் இருந்துவந்த சிரமங்கள் முற்றிலும் நீங்கும்.

உத்திரட்டாதி:

இந்த மாதம் உங்கள் நிலைமை மாறும். நீங்கள் விரும்பியதை கேட்டு பெற்றுக் கொள்ளலாம். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். கன்சல்டன்சி துறைகளில் வேலை செய்பவர்கள் தகுந்த முன்னேற்றம் கிடைக்கும். பள்ளி, கல்லூரிகளில் பணிபுரிபவர்களும் நற்பலன்கள் கிடைக்கப் பெறுவார்கள். பதவி உயர்வு கிடைக்கும்.

ரேவதி:

இந்த மாதம் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.  தொழில், வேலை, உத்தியோகம் ஆகியவற்றில் வெற்றி அடையலாம்.  சேமிப்பும் அடையலாம். உங்கள் உழைப்பும் நம்பிக்கையும் உங்களுக்கு முழுமையான பலனையும் திருப்தியையும் தரும். எதிர்ப்பும் இடையூறும் ஒருபுறம் இருந்தாலும், உங்களின் தன்னம்பிக்கையாலும் தைரியத்தாலும் அவற்றைப் போராடி எதிர்த்துநின்று வெற்றிகொள்வீர்கள்.

பரிகாரம்: நவக்கிரக குருவிற்கு வியாழக்கிழமையில் மூக்கடலை நிவேதனம் செய்து வணங்குவதும்

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 14, 15

அதிர்ஷ்ட தினங்கள்: 7, 8

Continue Reading

மாத பலன்

உங்கள் ராசிக்கான அக்டோபர் 2020 மாத பலன்கள்!

Published

on

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction

அக்டோபர் மாத பலன்கள்

21-10-2020 அன்று காலை 3.42 மணிக்கு புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

**************************************************************************************

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

கிரக நிலை:

ராசியில் செவ்வாய்(வ) – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராஹூ – பஞ்சம ஸ்தானத்தில் சுக்ரன்   – ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன் – களத்திர ஸ்தானத்தில் புதன்(வ) – அஷ்டம ஸ்தானத்தில் கேது – பாக்கிய ஸ்தானத்தில் குரு, சனி – அயன சயன போக ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  

கிரகமாற்றங்கள்:

08-10-2020 அன்று பகல் 11.50 மணிக்கு புதன் பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

17-10-2020 அன்று மாலை 4.56 மணிக்கு சூர்ய பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

23-10-2020 அன்று மாலை 6.15 மணிக்கு சுக்கிர பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

26-10-2020 அன்று காலை 8.19 மணிக்கு செவ்வாய் பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

வாழ்க்கைத் துணையின் ஆதரவோடு காரியங்களை செய்யும் மேஷ ராசி அன்பர்களே, இந்த மாதம் எல்லா காரியங்களும் முன்னேற்றமாக நடக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.  புதிய தொடர்புகளை ஏற்படுத்தும். திறமை வெளிப்படும். பல வகையிலும் முன்னேற்றம் உண்டாகும்.  சொத்து தொடர்பான விஷயங்களில் இழுபறியான நிலை காணப்படும். இடமாற்றம் உண்டாகும். சுப செலவுகள் ஏற்படும்.

தொழில், வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும். புதிய ஆர்டர்கள் வருவதில் இருந்த தடைகள் விலகும். தேவையான பணவசதி கிடைக்கும். 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். புதிய பொறுப்புகளும் அதனால் வருமானமும் இருக்கும். எதிர்ப்புகள் அகலும்.

குடும்பத்தில் வாழ்க்கை துணையின் ஆலோசனை உங்கள் முன்னேற்றத்திற்கு உதவும். எதிர்பாராமல் ஏற்படும் குடும்ப செலவை சமாளிக்க தேவையான பண உதவியும் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான வசதிகள் கிடைக்கும். நண்பர்கள், உறவினர்கள் மூலம் தேவையான உதவிகளும் கிடைக்க பெறுவீர்கள். 

பெண்களுக்கு திறமையான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும்.

கலைத்துறையினர் உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பார்கள். புதிய பதவி அல்லது பொறுப்புகள்  கிடைக்கும். சாதகமாக பயன்படுத்தி முன்னேறுவீர்கள். குடும்பத்துடன் விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும். 

அரசியல்துறையினருக்கு உங்கள் புத்திக்கூர்மை உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும். போட்டிகளையும், பொறாமைகளையும் சந்தித்தாலும் பொறுமையுடன் செயல்பட்டு அவற்றைச் சமாளிப்பீர்கள். உங்களின் சமயோஜித புத்தியால் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்வீர்கள்.

மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். மனமகிழ்ச்சி உண்டாகும். சிறப்பாக செயல்படுவீர்கள்

அஸ்வினி:

இந்த மாதம்  நீங்கள் உங்கள் குடும்பத்தின் முக்கியத்துவத்தை உணருவீர்கள். குடும்ப மகிழ்ச்சிக்காக உங்கள் மனதை மாற்றிக் கொள்ள முற்படுவீர்கள். இழந்த பெருமையை மீட்டுக் கொள்ளும் புத்திசாதுர்யம் உங்களுக்கு உண்டு. ஆனால் வீட்டில் உங்கள் நிம்மதி குறையும் நிலை காணப்படும்.

பரணி: 

இந்த மாதம் தொழில் செய்யும் இடம் மற்றும் வியாபார தலங்களில் உற்சாகமான சூழ்நிலை இருக்கும். எனினும் நிதானத்தைக் கடைபிடிப்பது அவசியம். வார்த்தைகளை கோர்த்துப் போட்டு பேசுவது நன்மை தரும்.  பொருள்களை களவு போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

கார்த்திகை 1ம் பாதம்:

இந்த மாதம் உடல் ஆரோக்யம்   ஓரளவு சீராக இருந்தாலும் அவ்வப்போது வயிறு சம்பந்தமான கோளாறுகளுக்கு ஆட்பட நேரிடலாம். மேலும் சிலருக்கு பித்தப்பை தொடர்பாக   மருத்துவச் செலவுகளும் ஏற்படும். உங்களின் பேச்சினால் பகையை சந்திக்க நேரிடும். 

பரிகாரம்: செவ்வாய்கிழமைதோறும் விரதம் இருந்து முருகனை கந்தசஷ்டி படித்து வழிபடுவது எல்லா நன்மைகளையும் தரும். அலைச்சலை தவிர்க்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்

சந்திராஷ்டம தினங்கள்: 19, 20, 21

அதிர்ஷ்ட தினங்கள்: 13, 14

 

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)

கிரக நிலை:

ராசியில்  ராஹூ – சுகஸ்தானத்தில் சுக்ரன் – பஞ்சம  ஸ்தானத்தில் சூர்யன் – ரண ருண ரோக ஸ்தானத்தில்  புதன்(வ) – களத்திர ஸ்தானத்தில் கேது – அஷ்டம ஸ்தானத்தில் குரு, சனி – லாப ஸ்தானத்தில் சந்திரன் – விரைய ஸ்தானத்தில் செவ்வாய்(வ)   என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றங்கள்:

08-10-2020 அன்று பகல் 11.50 மணிக்கு புதன் பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

17-10-2020 அன்று மாலை 4.56 மணிக்கு சூர்ய பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

23-10-2020 அன்று மாலை 6.15 மணிக்கு சுக்கிர பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

26-10-2020 அன்று காலை 8.19 மணிக்கு செவ்வாய் பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

வீண் விவாதங்களை தவிர்க்க நினைக்கும் ரிஷப ராசி அன்பர்களே, இந்த மாதம் உங்களின் சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியவெற்றி உண்டாகும். எந்த ஒரு வேலையிலும் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். உங்களுடன் பக்கபலமாக ஒருவர் இருந்து தேவையான உதவிகளைச் செய்வார். நண்பர்கள் மூலம் புதிய வசதிகள் கிடைக்க பெறுவீர்கள்.

தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். பலவகை முன்னேற்றங்களும் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். தேவையான பண உதவியும் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதையும் சாதிக்கும் திறமையும் சாமர்த்தியமும் உண்டாகும்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குழந்தைகளின் முன்னேற்றத்தில் ஆர்வம் காட்டுவது நல்லது. நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் கூறும் கருத்துகளுக்கு எதிர்த்து பேசுவதை விட்டுவிட்டு நிதானமாக உங்கள் கருத்தை சொல்வது நன்மை தரும். 

பெண்களுக்கு கடன் பிரச்சனைகள் குறையும். புதிய எண்ணங்கள் உண்டாகும். புது நபர்களின் நட்பும் கிடைக்கலாம்.

கலைத்துறையினர் உக்திகளைக் கையாண்டு தொழிலில் முன்னேறுவீர்கள். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். உதவிகளின் மூலம் வெற்றி காண்பீர்கள். மிகவும் நன்றாகவே இருக்கும்.

அரசியல்துறையினருக்கு இருந்த குழப்பம் நீங்கும். மனவருத்தம்  நீங்கும். தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. வெளியூர் பயணங்கள் மனதிற்கு மகிழ்ச்சி தரும். கவலை வேண்டாம். கடன் விவகாரங்களில் யோசித்து செயல்படுவது நல்லது.

மாணவர்களுக்கு திறமையாக செயல்பட்டு பாராட்டுகள் கிடைக்க பெறுவீர்கள். கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.

கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்:

இந்த மாதம் முக்கியமான   விஷயங்களில் அனுபவஸ்தர்களின் ஆலோசனைகள், அறிவுரைகளைக் கேட்டு முடிவெடுப்பீர்கள். நண்பர்களுக்கும், கூட்டாளிகளுக்கும்   உங்களால் இயன்ற உதவிகளைச் செய்வீர்கள். உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களின் தவறுகளை உடனடியாகச் சுட்டிக்காட்டி திருத்துவீர்கள்.

ரோகிணி:

இந்த மாதம் சுதந்திரமாகப் பணியாற்றி வெற்றிவாகை சூடுவீர்கள். புதிய பதவிகளும் பொறுப்புகளும் உங்களைத் தேடி வரும். ஆக்கபூர்வமான யோசனைகள் தோன்றும்.   குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்த உறவினர்கள் மறுபடியும் ஒன்று சேர்வார்கள். வருமானம் படிப்படியாக உயரும். 

மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்:

இந்த மாதம் பழைய கடன்களைத்   திருப்பிச் செலுத்துவீர்கள். கடினமான உழைப்பை மேற்கொள்வீர்கள். உங்களின் போட்டியாளர்களை திடமான நம்பிக்கையுடன்   வெற்றிகொள்வீர்கள். நூதனத் தொழிலில் ஈடுபட்டு வெற்றிவாகை சூடுவீர்கள். உங்களின் செயல்களில் வேகத்துடன், விவேகத்தையும்   கூட்டிக்கொள்வீர்கள்.

பரிகாரம்: பவுர்ணமியில் மகாலட்சுமியை பூஜை செய்து வழிபட பண தட்டுப்பாடு நீங்கும். குழப்பங்கள் தீரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி; 

சந்திராஷ்டம தினங்கள்: 22, 23

அதிர்ஷ்ட தினங்கள்: 15, 16

மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்)

கிரக நிலை:

தைரிய ஸ்தானத்தில் சுக்ரன்  – சுக ஸ்தானத்தில் சூர்யன் –  பஞ்சம ஸ்தானத்தில் புதன்(வ) – ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது – களத்திர ஸ்தானத்தில் குரு, சனி – தொழில் ஸ்தானத்தில் சந்திரன் – லாப ஸ்தானத்தில்  செவ்வாய்(வ) – அயன சயன போக ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றங்கள்:

08-10-2020 அன்று பகல் 11.50 மணிக்கு புதன் பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

17-10-2020 அன்று மாலை 4.56 மணிக்கு சூர்ய பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

23-10-2020 அன்று மாலை 6.15 மணிக்கு சுக்கிர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

26-10-2020 அன்று காலை 8.19 மணிக்கு செவ்வாய் பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

அதிக பாராட்டுகளை பெறப் போகும் மிதுன ராசி அன்பர்களே, இந்த மாதம் அறிவு திறன் கூடும். இனிமையான பேச்சின் மூலம் பலரது உதவிகள் கிடைக்க பெறுவீர்கள்.  அரசு தொடர்பான பணிகளில் சாதகமான போக்கு காணப்படும். எதிர்ப்புகள் அகலும். உங்கள் செயல்களுக்கு இருந்த தடை நீங்கும். 

தொழில், வியாபாரம் எதிர்பார்த்தபடி நடக்கும். கூட்டு தொழிலில் இருப்பவர்கள் கவனமாக எதையும் செய்வது நன்மையை தரும். தேவையான பண உதவியும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படலாம் முடிவில் எதிர்பார்த்தபடி காரியம் முடியும். சக ஊழியர்கள் ஆதரவும் இருக்கும். 

குடும்பத்தில் தீடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கிடையே எதையும் பேசி தெளிவுபடுத்திக் கொள்வது நன்மை தரும். குழந்தைகளுக்கான பொருட்களை வாங்குவீர்கள்.

பெண்களுக்கு அடுத்தவர்கள் பேச்சை கேட்டு எதிலும் ஈடுபடாமல் இருப்பது நன்மை தரும். வீண் அலைச்சலும், செலவும் உண்டாகலாம் கவனம் தேவை.

கலைத்துறையினர் மிகப் பெரிய உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். மேலிடத்திலிருந்து உங்களுக்கு சந்தோஷமான செய்திகள் வந்து சேரும். வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.

அரசியல்துறையினருக்கு உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். மனதிற்க்கு சந்தோஷமான காரியங்கள் நடக்கும். லாபம் அதிகரிக்கும். பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புகழ் கிடைக்கும். பங்குதாரர்கள் மூலம் சில தொந்தரவுகள் நேரிடலாம். 

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற ஆசிரியர்களின் ஆலோசனையை கேட்டு பயன் பெறுவது நல்லது. முயற்சிகள் வெற்றி பெறும்.

மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்: 

இந்த மாதம் உங்களுக்கென்று ஒரு தனி பாணியை வகுத்துக்கொள்வீர்கள். உங்களுக்கு எதிராக தொடரப்பட்டிருந்த அவதூறு   வழக்குகளை சம்பந்தப்பட்டவர்களே திரும்பப் பெறுவார்கள். பெரியோரை மதித்து அனுசரித்து நடந்துகொள்ளுங்கள். புதிய தொழில் நுட்பங்களை அறிந்துகொள்வீர்கள்.   

திருவாதிரை:

இந்த மாதம் சிலருக்கு விருது, பட்டம் பெறும் யோகம் கிடைக்கும். நுணுக்கமான விஷயங்களையும் சரியாகப் புரிந்துகொள்ளும் ஆற்றல் உண்டாகும். புதிய   சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள். நகைச்சுவையுடன் பேசி பிறரைக் கவர்வீர்கள். 

புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்:

இந்த மாதம் எந்த ஒரு காரியத்தையும் துணிவுடன் செய்து அதிக நன்மை அடைவீர்கள்.   போட்டி பந்தயங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் நல்ல பெயர் வாங்குவீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற   சுபகாரியங்கள் நடக்கும். உங்களின் தெய்வ பலத்தால் சோர்வடையாமல் பணியாற்றுவீர்கள். 

பரிகாரம்: சனிக்கிழமைகளில் பெருமாளை வணங்கி வர கடன் பிரச்சனை தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி;  

சந்திராஷ்டம தினங்கள்: 24, 25

அதிர்ஷ்ட தினங்கள்: 17, 18

 

கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

கிரக நிலை:

தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன் – தைரிய  ஸ்தானத்தில் சூர்யன் – சுக ஸ்தானத்தில்  புதன்(வ) – பஞ்சம ஸ்தானத்தில் கேது – ரண, ருண ஸ்தானத்தில்  குரு, சனி – பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் – தொழில் ஸ்தானத்தில்  செவ்வாய்(வ) – லாப ஸ்தானத்தில்  ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றங்கள்:

08-10-2020 அன்று பகல் 11.50 மணிக்கு புதன் பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

17-10-2020 அன்று மாலை 4.56 மணிக்கு சூர்ய பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

23-10-2020 அன்று மாலை 6.15 மணிக்கு சுக்கிர பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

26-10-2020 அன்று காலை 8.19 மணிக்கு செவ்வாய் பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

செய்யும் செயலில் வேகம் நிறைந்த கடக ராசி அன்பர்களே, இந்த மாதம் வீண் அலைச்சல் காரிய தடை ஆகியவை அகலும்.  அலைச்சல் ஏற்பட்டாலும் எடுத்த முயற்சி கைகூடும். தேவையான வசதிகள்  உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி  இருக்கும்.  சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். உடல் சோர்வும், மன குழப்பமும் நீங்கும். செலவு கட்டுக்குள் இருக்கும்.

தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்கும். வங்கியில் இருப்பு கூடும். வாங்கிய கடனை திருப்பி செலுத்தி மன நிம்மதி அடைவீர்கள். தொழில் தொடர்பான பயணங்கள் வெற்றி கிடைக்கும். செயல் திறமை மூலம் கடினமான பணியையும் சிறப்பாக செய்து முடித்து மேல் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்க பெறுவீர்கள். அதிகாரம் செய்யும் பதவிகள் தேடிவரும்.

குடும்பத்துடன் புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே  நெருக்கம் அதிகரிக்கும். வாழ்க்கை  துணையின்  மூலம் ஆதாயம் உண்டாகும். தந்தை வழி உறவினர்களுடன் இருந்து வந்த மனக்கிலேசம் அகலும். ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும். உங்களது பொருட்களின் மீது கவனம் தேவை. சாதுரியமான செயல்களால் லாபம் உண்டாகும்.

பெண்களுக்கு இழுபறியாக இருந்த காரியங்கள் முடிவுக்குவரும். புதிய தொடர்புகளால் லாபம் கிடைக்க பெறுவீர்கள். இடமாற்றம் ஏற்படலாம்.

கலைத்துறையினர் கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். பயணங்கள் நெல்ல நேரிடலாம். மனதிருப்தியுடன் செயலாற்றுவீர்கள். புத்திசாதூரியம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் மதிப்பு கூடும்.

அரசியல்துறையினருக்கு மனகவலை குறையும். எல்லா வகையிலும் சாதகமான பலன் கிடைக்க பெறுவீர்கள். திடீர் செலவு உண்டாகலாம். திட்டமிட்டபடி செல்ல முடியாமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். எந்த காரியத்தையும் யோசித்து செய்வது நன்மை தரும்.

மாணவர்கள் வீண் விவாதங்களை தவிர்த்து கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது முன்னேற்றத்திற்கு உதவும்.

புனர் பூசம் 4ம் பாதம்:

இந்த மாதம் எவருக்கும் உங்கள் பெயரில் பணம்   வாங்கித் தர வேண்டாம். மேலும் அவசியமான பயணங்களையே மேற்கொள்ளவும். புதிய நண்பர்களை ஓரளவுக்கு மேல் நம்ப வேண்டாம்.   பொதுக்காரியங்களில் ஈடுபட மனம் விழையும். சமுதாயத்தில் உயர்ந்தவர்களுடன் இணக்கமாகப் பழகுவீர்கள். 

பூசம்: 

இந்த மாதம் புதிய வீடு,  மனை ஆகியவற்றை வாங்கும் போது கவனம் தேவை. ஒருமுறைக்கு இருமுறை விசாரித்து வாங்குவது நல்லது. நண்பர்கள், உறவினர்கள்  அன்னியோன்னியமாக இருப்பர். 

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகமாக உழைக்க  வேண்டியிருக்கும். சற்று முயற்சி எடுத்தால் பதவி உயர்வு கிடைக்கும்.

ஆயில்யம்:

இந்த மாதம். எதிர்பார்திருந்த பணி இடமாற்றம் உங்களை வந்து சேரும்.  உறவினர்கள், நண்பர்கள் மூலம்   தக்க தருணத்தில் உதவிகள் கிடைக்கும்.  பிள்ளைகள் வழியில் எதிர்பார்த்த நன்மைகள் உண்டாகும். அவர்களின் ஆதரவும் கிடைக்கும்.   

பரிகாரம்: சிவன் கோயிலுக்கு  சென்று சிவன், அம்பாளை நெய் தீபம் ஏற்றி வழிபடுவது மன குழப்பத்தை நீக்கும். தெளிவான முடிவுகள் எடுக்க உதவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள், வியாழன்; 

சந்திராஷ்டம தினங்கள்: 26, 27, 

அதிர்ஷ்ட தினங்கள்: 19, 20, 21

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

கிரக நிலை:

ராசியில் சுக்ரன்  – தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில் சூர்யன் – தைரிய ஸ்தானத்தில்  புதன்(வ) – சுகஸ்தானத்தில் கேது – பஞ்சம ஸ்தானத்தில்  குரு, சனி – அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் – பாக்கிய ஸ்தானத்தில்  செவ்வாய்(வ) – தொழில் ஸ்தானத்தில்  ராஹூ  என கிரகங்கள் வலம் வருகின்றன. 

கிரகமாற்றங்கள்:

08-10-2020 அன்று பகல் 11.50 மணிக்கு புதன் பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

17-10-2020 அன்று மாலை 4.56 மணிக்கு சூர்ய பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

23-10-2020 அன்று மாலை 6.15 மணிக்கு சுக்கிர பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

26-10-2020 அன்று காலை 8.19 மணிக்கு செவ்வாய் பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

கஷ்டமில்லா சுக வாழ்க்கை வாழ ஆசைப்படும் சிம்ம ராசி அன்பர்களே, இந்த மாதம் எந்த ஒரு சின்ன விஷயம் கூட லாபமாக நடந்து முடியும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அதனால் கவுரவம் உண்டாகும். பூமி, வாகனம் மூலம் ஆதாயம் உண்டாகும். பண வரத்து கூடும்.

தொழில் மூலம் உண்டாகும் செலவுகள் குறையும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். ஆனால் அவர்களிடம் திறமையாக பேசி தக்க வைத்துக் கொள்வது நல்லது. வியாபாரம் தொழில் போன்றவற்றை விரிவாக்கம் செய்ய புது திட்டங்களை பற்றி ஆலோசனை செய்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். புது தொழிலில் முதலீடு  செய்யும் போது கவனம் தேவை.

குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் உண்டாகும். சுபகாரியம் நடக்கும். திருமண முயற்சி மேற்கொண்டவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே சந்தோஷம் நிலவும். கஷ்டமில்லா சுக வாழ்க்கை இருக்கும். உறவினர்கள் நண்பர்கள் ஆதரவும் கிடைக்கும். நெடுநாளைய சங்கடம் தீரும்.

பெண்களுக்கு எல்லாவற்றிலும் லாபம் கிடைக்கும். மரியாதை அந்தஸ்து கூடும். எதிர்ப்புகள் விலகும். மன மகிழ்ச்சி உண்டாகும்.

கலைத்துறையினருக்கு எல்லா காரியங்களிலும் அதிக கவனம் உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும். தன்னம்பிக்கை ஏற்படும். வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி வரும். 

அரசியல்துறையினருக்கு எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடித்து விடுவீர்கள். வீண் செலவு உண்டாக்கும். வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம்.  திட்டமிடுவதில் பின்னடைவு ஏற்படும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். பெரியோர் நேசம் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும். ஆன்மீக தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள். சக மாணவர்கள் ஆதரவும் இருக்கும்.

மகம்:

இந்த மாதம் உடல் நலத்தையும், மனவளத்தையும்  பெருக்கிக்கொள்வீர்கள். பொதுவாழ்வில் இருப்பவர்கள் திறமைசாலிகளை தங்கள்  அருகில் வைத்துக் கொண்டு காரியமாற்றி   நலமடைவார்கள். வழக்கு விவகாரங்களில் நிதானமாகவும், விட்டுக்கொடுத்தும் நடந்துகொண்டு வெற்றி  பெறுவீர்கள்.

பூரம்: 

இந்த மாதம் மேலதிகாரிகளின் அனுசரனை இருந்துவரும். வியாபாரிகள் சிறப்பான முன்னேற்றைப் பெறலாம். லாபம் அதிகரிக்கும். உங்கள் வியாபாரத்தை  விரிவாக்கம் செய்வீர்கள். எதிரிகளை வீழ்த்துவதற்குண்டான பாதைகளை வகுத்துக் கொள்வீர்கள். 

உத்திரம் 1ம் பாதம்:

இந்த மாதம்  குடும்பத்தில் உங்கள் அணுகுமுறை இருக்கும். குடும்பத்தாருடன் விருந்து, கேளிக்கைகளில் கலந்துகொண்டு   மகிழ்வீர்கள். சகோதர, சகோதரிகளிடம்  விட்டுக் கொடுத்துப் பழகவும். அவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிட்டு மாட்டிக் கொள்ள   நேரிடலாம். அசையாச்சொத்துக்களை நல்ல  விலைக்கு விற்று லாபமடையும் . 

பரிகாரம்: பிரதோஷ காலத்தில் சிவனை வணங்குவதன் மூலம் எல்லா நன்மைகளும் உண்டாகும். தடைகள் நீங்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய்; 

சந்திராஷ்டம தினங்கள்: 1, 2, 3, 28, 29, 30

அதிர்ஷ்ட தினங்கள்: 22, 23

 

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்)

கிரக நிலை:

ராசியில் சூர்யன் – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில்  புதன்(வ) – தைரிய ஸ்தானத்தில் கேது – சுக  ஸ்தானத்தில்  குரு, சனி – களத்திர ஸ்தானத்தில் சந்திரன் – அஷ்டம ஸ்தானத்தில்  செவ்வாய்(வ) – பாக்கிய ஸ்தானத்தில்  ராஹூ – விரைய ஸ்தானத்தில் சுக்ரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. 

கிரகமாற்றங்கள்:

08-10-2020 அன்று பகல் 11.50 மணிக்கு புதன் பகவான் ராசிக்கு மாறுகிறார்.

17-10-2020 அன்று மாலை 4.56 மணிக்கு சூர்ய பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

23-10-2020 அன்று மாலை 6.15 மணிக்கு சுக்கிர பகவான் ராசிக்கு மாறுகிறார்.

26-10-2020 அன்று காலை 8.19 மணிக்கு செவ்வாய் பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

சங்கடங்களைக் களைய நினைக்கும் கன்னி ராசி அன்பர்களே, இந்த மாதம் எதிர்பார்த்த காரியங்கள் மனதுக்கு திருப்தி அளிக்கும் விதத்தில் நடந்து முடியும். கடன் சுமை குறையும். எதிர்ப்புகள்  அகலும். எதையும் ஒரு முறைக்கு பலமுறை  யோசித்து செய்ய தோன்றும். யாருக்காவது உத்திரவாதம் தரும்போது கவனமாக  இருப்பது நல்லது. சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும்.

தொழில், வியாபாரம் தொடர்பாக கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். உழைத்த உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும். பயணங்கள் செல்ல நேரிடலாம். தொழில், வியாபாரம் பற்றிய விஷயங்களில் நேரடி கவனம் தேவை. தேவையான பணம் தக்க நேரத்தில் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக எதையும் செய்வது நல்லது. வீண் அலைச்சல் வேலை பளு ஆகியவை இருக்கும். உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும்.

குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை தோன்றி மறையும். ஆனாலும் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளுக்காக பாடுபட வேண்டி இருக்கும். ஒரு நல்ல குறிக்கோளுக்காக புண்ணிய பயணம் செய்ய வேண்டி இருக்கும். ஆடம்பர பொருட்கள், வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதன் மூலம் செலவு உண்டாகும்

பெண்களுக்கு எதிலும் தயக்கமோ, பயமோ இல்லாமல் ஈடுபட்டு சிறப்பாக செய்வீர்கள். பெரியவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

கலைத்துறையினர் வாக்கு வன்மையால் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகலாம்.  புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். பயணங்கள்  செல்ல நேரலாம். புத்தி சாதூரியத்தால் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பார்கள்.

அரசியல்துறையினருக்கு காரிய அனுகூலம் ஏற்படும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கக் கூடும். புதிய நபர்களின்  நட்பு கிடைக்கும். கவனமாக செயல்படுவது நல்லது.

மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் மதிப்பெண் கிடைக்க எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். ஆசிரியர்களின் பாராட்டும் கிடைக்கும்., 

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்:

இந்த மாதம்  எடுத்த காரியம் கைகூடும்.  பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். மதிப்பும் மரியாதையும் சிறப்பாக இருக்கும். உங்கள் மீதான அவப்பெயர் மறைந்து செல்வாக்கு  மேம்படும்.  உங்கள் சொல்லுக்குப் பிறர் மரியாதை கொடுப்பர். வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

அஸ்தம்: 

இந்த மாதம்  குடும்ப பிரச்சனை கட்டுக்குள் அடங்கி இருக்கும்.  தேவையான இடங்களில் நீங்கள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. தேவைகள் ஒவ்வொன்றாகப் பூர்த்தியாகும். நீண்ட நாட்களாக வாங்க  நினைத்த பொருளை வாங்கலாம். வருமானம் நன்றாக  இருப்பதால் புதிய வீடு, வாகனம் வாங்க முற்படுவீர்கள்.

சித்திரை 1, 2, பாதங்கள்:

இந்த மாதம் யாரிடமும் கோபப் பட்டு பேச வேண்டாம். பிறர் சாதாரணமாக அறிவுரை கூறினால் கூட அது உங்களுக்கு கோபத்தை வரவழைக்கும். அத்தகைய குணத்தை விட்டொழியுங்கள். தியானம் செய்யுங்கள். மனதிற்கு நிம்மதி கிடைக்கும். 

பரிகாரம்: விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்து வர எதிர்ப்புகள் அகலும். செல்வம் சேரும். மன நிம்மதி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி; 

சந்திராஷ்டம தினங்கள்: 4, 5, 31

அதிர்ஷ்ட தினங்கள்: 24, 25

 

துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்)

கிரக நிலை:

ராசியில் புதன்(வ) – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது – தைரிய ஸ்தானத்தில் குரு, சனி – ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன் –  களத்திர ஸ்தானத்தில்  செவ்வாய்(வ) –  அஷ்டம ஸ்தானத்தில் ராஹூ – லாப ஸ்தானத்தில் சுக்ரன் – அயன சயன போக  ஸ்தானத்தில் சூர்யன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  

கிரகமாற்றங்கள்:

08-10-2020 அன்று பகல் 11.50 மணிக்கு புதன் பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

17-10-2020 அன்று மாலை 4.56 மணிக்கு சூர்ய பகவான் ராசிக்கு மாறுகிறார்.

23-10-2020 அன்று மாலை 6.15 மணிக்கு சுக்கிர பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

26-10-2020 அன்று காலை 8.19 மணிக்கு செவ்வாய் பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

வாழ்க்கைத் துணைக்காக செலவு செய்யத் துடிக்கும் துலா ராசி அன்பர்களே,இந்த மாதம் உங்களுக்கு நன்மை செய்யும் வகையில் இருக்கிறது. நீண்ட நாட்களாக இருந்து வந்த வீண் மனக்கவலை நீங்கும். எந்த ஒரு காரியத்திலும் எதிர்பார்த்த வெற்றி தாமதமாக கிடைக்கும். ஒதுங்கி இருந்தால் கூட வலுக்கட்டாயமாக எதிலாவது ஈடுபட சுற்றமும், நட்பும் தூண்டுவார்கள். கவனமாக அதை தவிர்ப்பது நல்லது. வீண் அலைச்சல் செலவு ஏற்படலாம். பயணங்களின் போது  எச்சரிக்கை தேவை.

தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் தாமதபோக்கு காணப்படும். செலவும் அதிகரிக்கும் தேவையான பணவசதி கிடைக்கும். விரிவாக்கம் தொடர்பான முயற்சிகள் இழுபறியான நிலையில் இருந்து பின்னர் முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணம் செல்ல வேண்டி இருக்கும் சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் தாமதப்படலாம். எந்த ஒரு விஷயத்திலும் ஈடுபடும் முன்பு தயக்கம் ஏற்பட்டு பின்னர் தெளிவு உண்டாகும்.

குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் தாமதப்படும் வாழ்க்கை துணைக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையில் அன்பு அதிகரிக்கும். சிற்றின்ப செலவுகள் கூடும். அக்கம், பக்கத்தினரிடம் கவனமாக பேசுவதும் வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நல்லது. 

பெண்களுக்கு அறிவு திறமை அதிகரிக்கும். இனிமையான பேச்சின் மூலம் எதிலும் வெற்றி கிடைக்கும். தேவையான பண உதவியும் எதிர் பார்க்கலாம்.

கலைத்துறையினருக்கு வாகனங்களை உபயோகப்படுத்தும் போது கவனம் தேவை. பிரச்சனைகள் மற்றும் விவகாரங்களில் தீர ஆலோசனைகளை செய்து பக்குவமான அணுகுமுறையை கையாள்வது அவசியம். பணவரத்து அதிகரிக்கும். காரிய தடங்கல்கள் ஏற்படலாம். மனதில் ஏதாவது ஒரு கவலை உண்டாகும்.

அரசியல்துறையினருக்கு  கவனம் தேவை. லாபம் உண்டாகும். கடின உழைப்பு உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். சிறு சிக்கல்கள் ஏற்பட்டு மறையும். கவனத்துடன் செயல்பட்டால் சிக்கல்களைத் தவரிக்கலாம். சின்னச் சின்ன செலவுகளை சந்திக்க நேரிடலாம். உழைப்பிற்கான ஊதியம் சற்று குறைவாக கிடைக்கலாம். மன தைரியத்தால் வெற்றி காண்பீர்கள்.

மாணவர்களுக்கு உயர் கல்வி பற்றிய எண்ணம் அதிகரிக்கும். கூடுதல் மதிப்பெண் பெற படிப்பில் வேகம் காட்டுவீர்கள்.. 

சித்திரை 3, 4 பாதங்கள்:

இந்த மாதம் பொருளாதார நிலை திருப்தி கரமாக இருக்கும். முக்கிய விஷயங்களை பற்றி பேசலாமா வேண்டாமா என்ற குழப்பமே நீண்ட நேரமாக இருந்து தொல்லையில் ஆழ்த்தும்.  தொழில் ரீதியான படிப்புகளை தொடரலாம். உடல் நலனில் கவனம் தேவை. சக ஊழியர்கள் ஆதரவாக நடந்து கொள்வார்கள்.  உள்ளது உள்ளபடி பேசுவதற்கு முற்படுவீர்கள். சில நேரங்களில் குடும்பத்தாருடன் மனக் கசப்பு உருவாகலாம்.

சுவாதி:

இந்த மாதம் தங்களது அஜாக்கிரதையால் பொருள்கள் களவு போகக் கூடும். புதிதாக வாகனம் வாங்கவேண்டுமென்ற எண்ணமிருப்பின் அதை தள்ளிப் போடுவது நன்மையாகும். வருமானத்தில் குறைவு வராது.  பணம் பல வழிகளில் வந்து பையை நிரப்பும். முன்னோர்கள் வழிபாடு செய்யுங்கள். நன்மையை பெற அதிகமாக உழைப்பீரக்ள். மாணவர்கள் தாங்கள் விரும்பிய படிப்பை மேற்கொள்வீர்கள்

விசாகம் 1, 2, 3 பாதங்கள்:

இந்த மாதம் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். வேலை பார்த்து வரும் பெண்களுக்கு அலுவலகத்தில் பெருமை சேரும். சகோதர, சகோரதரிகளிடம் வேற்றுமை பார்க்காமல் இருந்தாலும் அவர்கள் தவறாக புரிந்து கொள்வார்கள். உங்களை வெற்றிபாதைக்கு உங்கள் மீது நம்பிக்கை வைத்த பெரியோர் அழைத்துச் செல்வர். 

பரிகாரம்: சுமங்கலி பூஜை செய்து சுக்கிர பகவானுக்கு அர்ச்சனை செய்ய குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். பொருள் சேர்க்கை உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 6, 7, 8

அதிர்ஷ்ட தினங்கள்: 26, 27, 

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

கிரக நிலை:

ராசியில் கேது – தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் குரு, சனி – பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன் – ரண ருண ரோக ஸ்தானத்தில்  செவ்வாய்(வ) – களத்திர ஸ்தானத்தில் ராஹு – தொழில் ஸ்தானத்தில் சுக்ரன்  – லாப   ஸ்தானத்தில் சூர்யன் – விரைய ஸ்தானத்தில் புதன்(வ) என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றங்கள்:

08-10-2020 அன்று பகல் 11.50 மணிக்கு புதன் பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

17-10-2020 அன்று மாலை 4.56 மணிக்கு சூர்ய பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

23-10-2020 அன்று மாலை 6.15 மணிக்கு சுக்கிர பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

26-10-2020 அன்று காலை 8.19 மணிக்கு செவ்வாய் பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இடமாற்றத்தை விரும்பும் விருச்சிக ராசி அன்பர்களே, இந்த மாதம் சுணங்கி கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பெறுவதோடு மட்டுமல்லாமல் மனதில் புது திட்டங்கள் உருவாகும். புதிய தொடர்புகளால் நன்மை உண்டாகும். வீண் பகை, மன சஞ்சலம், தேவையற்ற செலவு ஆகியன அகலும். மன சஞ்சலம் தீரும். பகைகள் தொல்லை தராமல் இருக்கும்.

தொழில், வியாபாரம் செய்பவர்கள் தங்களது திறமையை வெளிபடுத்தி வியாபாரம் செய்ய வேண்டி இருக்கும். நீண்ட நாட்களாக  இழுபறியாக இருந்த ஆர்டர் வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூல் தாமதமாக இருந்தாலும் பணம்  வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கலாம்.  வேலை தொடர்பாக வெளியூரில் தங்க நேரிடலாம்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபமாக பேசும் சூழ்நிலை ஏற்படும். கவனமாக இருப்பது நல்லது. மனைவி குழந்தைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. வயிறு தொடர்பான நோய் வந்து நீங்கும்.

பெண்களுக்கு சில முக்கியமான காரியங்களை கூடுதலாக கவனம் செலுத்துவதன் மூலமும் அதிக உழைப்பினாலும் செய்து முடிப்பீர்கள். வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.

கலைத்துறையினர் எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பாராமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். அதனால் வெளியூர் பயணங்களைத் தள்ளிப்போடுவது நல்லது. உடல்நலத்தில் கவனம் தேவை. 

அரசியல்துறையினருக்கு முன்னேற்றம் கிடைக்கும். தாங்கள் மேன்மையடைந்திட புதிய வாய்ப்புகள் வந்து சேரும். வெளிநாடு வாய்ப்புகள் வரலாம். வாய்ப்புகள் குவியும். வீண் அலைச்சல் ஏற்படலாம். வாழ்க்கையில் முன்னேற்றம் காணப்படும்.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய கூடுதல் நேரம் ஒதுக்கி படிப்பது நல்லது. கல்வி தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கும்..

விசாகம் 4ம் பாதம்:

இந்த மாதம்  சந்தோசத்திற்கு குறைவிருக்காது. சூழல்கள் அனைத்தும் உங்களுக்கு சாதமாகவே இருக்கும். பணிக்குச் செல்லும் ஊழியர்கள் தங்களின் உடமைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளவும். கணவன் – மனைவியரிடையே பரஸ்பர அன்னியோன்யம் நிலவும். வேலை பார்க்கும் இடத்தில் தங்களுக்கு நற்பெயர் கிடைக்கும். வேலை நிமித்தமாக வெளியூர் செல்ல நேரலாம்.

அனுஷம்:

இந்த மாதம்  ஆலய தரிசனம் மனதை ஒருநிலைப் படுத்தும். இது நாள் தடைப்பட்டிருந்த ஒரு நல்ல விஷயம் உங்களுக்கு வெற்றிகரமாக அமையும். பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அதை உங்கள் சாமர்த்தியத்தால் வெற்றியாக மாற்றி விடுவீர்கள். மனதிற்கு மகிழ்ச்சிதரக்கூடிய செய்தி ஒன்று வரும்.

கேட்டை:

இந்த மாதம் சுபகாரியங்கள் நடத்துவது பற்றிய பேச்சுவார்த்தை நிகழும். சிலருக்கு ஆண் வாரிசு உண்டாகக் கூடிய வாய்ப்புள்ளது. பழைய கடன்கள் சிறிது சிறிதாக அடைபடத் தொடங்கும். நடக்கக்கூடிய நிகழ்வுகள் உங்களுக்கு உற்சாகத்தைத் தரும். நீங்கள் நிதானத்தை கடைப்பிடித்து எதையும் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று செய்ய வேண்டாம்.

பரிகாரம்: செவ்வாய் கிழமை விரதம் இருந்து நவகிரகத்தில் செவ்வாய் பகவானுக்கு தீபம் ஏற்றி வழிபட எல்லா நன்மையும் உண்டாகும். உடல் ஆரோக்கியம் கூடும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி; 

சந்திராஷ்டம தினங்கள்: 9, 10

அதிர்ஷ்ட தினங்கள்: 1, 2, 3, 28, 29, 30

 

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

கிரக நிலை:

ராசியில்  குரு, சனி – சுக ஸ்தானத்தில் சந்திரன் – பஞ்சம ஸ்தானத்தில்  செவ்வாய்(வ) – ரண ருண ரோக ஸ்தானத்தில்  ராஹு – பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன்  –   தொழில்  ஸ்தானத்தில் சூர்யன் –  லாப ஸ்தானத்தில் புதன்(வ)- அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. 

கிரகமாற்றங்கள்:

08-10-2020 அன்று பகல் 11.50 மணிக்கு புதன் பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

17-10-2020 அன்று மாலை 4.56 மணிக்கு சூர்ய பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

23-10-2020 அன்று மாலை 6.15 மணிக்கு சுக்கிர பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

26-10-2020 அன்று காலை 8.19 மணிக்கு செவ்வாய் பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

அடுத்தவர் ஆலோசனைகளை கேட்டு நடந்து கொள்ளும் தனுசு ராசி அன்பர்களே, இந்த மாதம் தைரியமாக எதையும் செய்ய தோன்றும். உங்களது செயல்களால் உங்களுக்கு  மற்றவர்களிடம் இருந்து பாராட்டு கிடைக்கும். விருந்து, கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். எதிலும் தயக்கமோ, பயமோ இல்லாமல் ஈடுபடுவீர்கள். தந்தை மூலம் உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் வருமானம் இருக்கும். சகோதரர்களுக்குள் ஒற்றுமை குறையும்.

தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். தேவையான சரக்குகள் கையிருப்பில் இருக்கும். புது நபர்கள் கூறும் வியாபாரம் தொடர்பான விஷயங்களில் முடிவு எடுக்கும் போது கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவிகள், அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கும். உங்களது பணி திறமையால் மேல் அதிகாரிகள் திருப்தி அடைவார்கள்.

குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். கணவன், மனைவி இருவரும் மனம் விட்டு பேசுவது நல்லது. குடும்ப விஷயங்களை  அடுத்தவரிடம் கூறி ஆலோசனை கேட்பதை தவிர்ப்பது நன்மை தரும். குழந்தைகள் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர், நண்பர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது.

பெண்களுக்கு உடல் சோர்வும் திடீர் கவலைகளும் ஏற்பட்டு நீங்கும். பணவரத்து திருப்தி தரும். மதிப்பும், மரியாதையும் கூடும்.

கலைத்துறையினர் பொறுப்புகள் அதிகரிக்கும்.எதையும் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். விருந்து கேளிக்கைகளில் பங்கு கொள்வீர்கள். கடன் பிரச்சனை குறையும். வீண் அலைச்சல் வீண் பயம் குறையும். அடுத்தவர் செய்யும் இடையூறுகளையும் உங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் சாமர்த்தியத்தைப் பெறுவீர்கள்.

அரசியல்துறையினர் படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள். வருமானம் நன்றாக இருக்கும். செலவும் அதிகமாகும். தொண்டர்களால் நன்மை அடைவீர்கள். புதிய வாகனங்களை வாங்கும் வாய்ப்பும் கிடைக்கும். வாழ்க்கையில் மேன்மை அடைய கூடுதல் கவனத்துடன் உழைப்பது அவசியம். 

மாணவர்களுக்கு கல்விக்கான செலவு உண்டாகும். திறமை வெளிப்படும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். அதன் மூலம் நன்மை ஏற்படும்.

மூலம்:

இந்த மாதம்  அமைதியாக இருக்க தியானம் மேற்கொள்ளுங்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமாக அமைந்து கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியும். அரசியல்வாதிகளின் பெயர், புகழ் உயரக்கூடிய காலமாக இருக்கும். மாண்புமிகு பதவிகள் தேடிவரும். மக்களின் ஆதரவும் பெருகும். மறைமுக வருவாய்கள் பெருகும். 

பூராடம்: 

இந்த மாதம் குடும்பத்தில் ஒற்றுமையும், லட்சுமி கடாட்சமான நிலையும் உண்டாகும். உற்றார்- உறவினர்களின் வருகை மகிழ்ச்சி அளிக்கும். பிரிந்தவர்கள்கூட ஒன்றுகூடி மகிழ்வார்கள். பொருளாதாரநிலை மிகச்சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கொடுக்கல்-வாங்கலிலும் நல்ல லாபம் கிடைக்கும். 

உத்திராடம் 1ம் பாதம்:

இந்த மாதம் இன்று சிலருக்கு வீடு, மனை, வண்டி, வாகனம் போன்றவற்றை வாங்கக்கூடிய யோகம் ஏற்படும். நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேறி மன நிம்மதியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தும். உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு யாவும் கிடைக்கப்பெறும். 

பரிகாரம்: திருவாசகம் படித்து வர எல்லா பிரச்சனைகளும் தீரும். மனதில் அமைதி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி; 

சந்திராஷ்டம தினங்கள்: 11, 12

அதிர்ஷ்ட தினங்கள்: 4, 5, 31

 

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள் திருவோணம் அவிட்டம் 1,2 பாதங்கள்)

கிரக நிலை:

தைரிய ஸ்தானத்தில் சந்திரன் – சுக ஸ்தானத்தில்  செவ்வாய்(வ) –  பஞ்சம  ஸ்தானத்தில்  ராஹூ – அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன்  – பாக்கிய  ஸ்தானத்தில் சூர்யன் – தொழில் ஸ்தானத்தில் புதன்(வ) – லாப ஸ்தானத்தில் கேது – அயன, சயன,  போக ஸ்தானத்தில் குரு, சனி என கிரகங்கள் வலம் வருகின்றன. 

கிரகமாற்றங்கள்:

08-10-2020 அன்று பகல் 11.50 மணிக்கு புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

17-10-2020 அன்று மாலை 4.56 மணிக்கு சூர்ய பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

23-10-2020 அன்று மாலை 6.15 மணிக்கு சுக்கிர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

26-10-2020 அன்று காலை 8.19 மணிக்கு செவ்வாய் பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

ஆன்மீக நாட்டங்களை கொண்ட மகர ராசி அன்பர்களே, இந்த மாதம் சுபகாரியங்களில் இருந்து வந்த தடங்கல்கள் நீங்கும்.  எதையும் ஒரு முறைக்கு பலமுறை ஆலோசித்து செய்வது நல்லது, மனம் நிலை கொள்ளாமல் ஏதாவது சிந்தித்து கொண்டே இருக்கும். புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது.   பணவரத்து அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் பெறும்.

தொழில், வியாபாரத்தில் இருந்து வந்த மந்த நிலை மாறும். வருமானம் வந்து சேரும். புதிய முயற்சிகள்  காலதாமதமாக முடியும். வாடிக்கையாளர்களிடம்  வாக்கு வாதத்தை  தவிர்த்து அனுசரித்து பேசுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணியை  கவனிக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகளிடமும் சக பணியாளர்களிடமும் அனுசரித்து செல்வது நல்லது.

குடும்பத்தில் அமைதி ஏற்பட குடும்ப உறுப்பினர்களிடம் நிதானமாக பேசுவதும் வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நல்லது. விருந்தினர்கள் வருகையும் அதனால் செலவும் உண்டாகலாம். வழக்குகளை தள்ளி போடுவதும் பேசி தீர்த்துக் கொள்வதும் நல்லது. ஆயுதம், தீ ஆகியவற்றில் கவனம் தேவை.

பெண்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். அடுத்தவரை பற்றி எந்த பேச்சும் பேசாமல் இருப்பது நல்லது.

கலைத்துறையினருக்கு இருந்த பிரச்சனைகள் நீங்கும். காரிய அனுகூலம் உண்டாகும். மனதில்  ஏதாவது கவலை இருந்து வரும். இஷ்ட தெய்வத்தை வழிபட கவலை குறையும். ஆன்மீக நாட்டத்தை அதிகரித்துக் கொள்வதன் மூலம் மன நிம்மதி ஏற்படும். 

அரசியல்துறையினருக்கு வேலைகள் உடனே முடியாமல் இழுபறியாக இருக்கும். வெளிநபர்களால் ஏதாவது குழப்பம் ஏற்படலாம். சொந்த விஷயங்களுக்கு அடுத்தவர் ஆலோசனைகளை கேட்பதை தவிர்ப்பது நல்லது.   

மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். பாடங்களை படிக்கும் போது அதில் கவனத்துடன் படிப்பது நல்லது.

உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்:

இந்த மாதம் நிலுவையில் இருந்த சம்பள பாக்கிகளும் கைக்குக் கிடைக்கும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் உங்களுக்கு மேன்மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தும். நெருங்கியவர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் நிலவினாலும் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள்.

திருவோணம்:

இந்த மாதம் மாணவர்கள் கல்வியில் பல சாதனைகளைப் படைப்பார்கள். அரசுவழியில் பல உதவிகளும் தேடிவரும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவும் பெருகும். பொருளாதாரமும் மேம்படும். குடும்பத்தில் ஒற்றுமைக்குறைவுகள், தேவையற்ற வாக்குவாதங்கள் போன்றவற்றால் மன நிம்மதி குறையக்கூடிய சூழ்நிலைகளே நிலவும். 

அவிட்டம் 1,2 பாதங்கள்:

இந்த மாதம் நீங்கள் எதிலும் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. நண்பர்களே விரோதிகளாக மாறுவார்கள். பணவிஷயத்தில் பிறருக்கு முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்த்துவிடுவது உத்தமம். திருமண சுபகாரிய முயற்சிகளிலும் எதிர்பார்த்த சாதகப்பலனை அடைவதில் காலதாமதம் உண்டாகும்.   

பரிகாரம்: சனிக்கிழமைகளில் விநாயக பெருமாளை தீபம் ஏற்றி வழிபட்டு வர காரிய தடைகள் நீங்கும். எதிலும் நன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி; 

சந்திராஷ்டம தினங்கள்: 13, 14

அதிர்ஷ்ட தினங்கள்: 6, 7, 8

 

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதங்கள்)

கிரக நிலை:

தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் – தைரிய ஸ்தானத்தில்  செவ்வாய்(வ) –  சுக ஸ்தானத்தில்  ராஹூ – களத்திர ஸ்தானத்தில் சுக்ரன்  – அஷ்டம  ஸ்தானத்தில் சூர்யன் – பாக்கிய ஸ்தானத்தில்  புதன்(வ) – தொழில் ஸ்தானத்தில் கேது – லாப ஸ்தானத்தில் குரு, சனி  என கிரகங்கள் வலம் வருகின்றன. 

கிரகமாற்றங்கள்:

08-10-2020 அன்று பகல் 11.50 மணிக்கு புதன் பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

17-10-2020 அன்று மாலை 4.56 மணிக்கு சூர்ய பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

23-10-2020 அன்று மாலை 6.15 மணிக்கு சுக்கிர பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

26-10-2020 அன்று காலை 8.19 மணிக்கு செவ்வாய் பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

அதிக போட்டி பொறாமைகளை சந்திக்க  காத்திருக்கும் கும்ப ராசி அன்பர்களே, இந்த மாதம் எதிர்பார்த்த  காரியங்களை  வெற்றிகரமாக செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வாக்கு நாணயம் உண்டாகும். முக்கிய நபர்கள் நட்பு கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். அடுத்தவரை பற்றி எந்த பேச்சும் பேசாமல் இருப்பது நல்லது.

தொழில், வியாபாரத்தில் முழு கவனத்தையும் செலுத்துவீர்கள். எதிர்பார்த்த  பணம் கைக்கு வந்து சேரும். அரசாங்கம் மூலமாக நடக்க வேண்டிய காரியங்களும் நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தடங்கலின்றி எதையும் செய்து முடிப்பார்கள். பணி தொடர்பான பயணங்கள் இருக்கும்.

குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். பூமி மூலம் லாபம் கிடைக்கும் சகோதரர்களால் நன்மை உண்டாகும். வாழ்க்கை துணைக்கு தேவையான வசதிகள் செய்து தருவீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.  எல்லா வகையிலும் நன்மையையும் மகிழ்ச்சியையும் தரும்.

பெண்களுக்கு அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் போது கவனம் தேவை. எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது.

கலைத்துறையினர் அதீத கவனத்துடன் செயல்படுவது உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் வெற்றியைத் தேடித்தரும். எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும். சிலருக்கு நெடுநாளைய ஆசைகள் நிறைவேறும். லட்சியங்கள் கைகூடும். மனதிற்கு நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும். நிதானம் தேவை.

அரசியல்துறையினருக்கு பாராட்டு கிடைக்கும். மனகவலை ஏற்படும். உடல் சோர்வு உண்டாகும். ஆன்மீக நாட்டமும், மன தைரியமும் உங்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும். கட்சியில் முன்னேற்றம் காண புதிய திட்டங்களை தீட்டுவீர்கள்.

மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் நேரடியாக கவனம் செலுத்துவது நல்லது. பாடங்களில் சந்தேகங்களை  உடனுக்குடன் போக்கிக் கொள்ள ஆசிரியர் உதவி கிடைக்கும்.

அவிட்டம் 3, 4 பாதங்கள்:

இந்த மாதம் உடல்நிலையும் சிறப்பாக அமையும் என்று கூறமுடியாது. உத்தியோகஸ்தர்களும் அடிக்கடி விடுப்பு எடுக்கக்கூடிய சூழ்நிலைகளுக்கு ஆளாவார்கள். எதிர்பாராத இடமாற்றங்கள் வீணான அலைச்சல்களை ஏற்படுத்திவிடும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் அதிக போட்டி பொறாமைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். 

சதயம்:

இந்த மாதம் மாணவர்கள் கண்டிப்பாக கல்வியில் அதிக கவனம் செலுத்துவதே நல்லது. தேவையற்ற பொழுதுபோக்குகளைத் தவிர்த்தால் ஓரளவுக்கு முன்னேறமுடியும். எதிலும் சற்று சிந்தித்துச் செயல்படுவது நல்லது.  உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும்.  

பூரட்டாதி 1, 2, 3  பாதங்கள்:

இந்த மாதம் பண வரவுகள் சிறப்பாக இருந்தாலும் அதற்கேற்ற செலவுகளும் இருக்கும். நெருங்கியவர்களைச் சற்று அனுசரித்துச் சென்றால் அனுகூலமான பலனை அடைவீர்கள். கொடுக்கல்-வாங்கலில் மட்டும் பெரிய தொகை ஈடுபடுத்துவதைச் சிறிது காலத்திற்குத் தள்ளிவைப்பது நல்லது. 

பரிகாரம்: சனிக்கிழமையில் ஆஞ்சனேயரை வழிபட்டு வருவதால் மனதில் துணிச்சல் உண்டாகும். எதிலும் வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்; 

சந்திராஷ்டம தினங்கள்: 15, 16

அதிர்ஷ்ட தினங்கள்: 9, 10

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

கிரக நிலை:

ராசியில் சந்திரன் – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில்  செவ்வாய்(வ)  – தைரிய ஸ்தானத்தில்  ராஹூ – ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்ரன்  – களத்திர  ஸ்தானத்தில் சூர்யன் – அஷ்டம ஸ்தானத்தில்  புதன்(வ) – பாக்கிய ஸ்தானத்தில் கேது – தொழில்  ஸ்தானத்தில் குரு, சனி என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றங்கள்:

08-10-2020 அன்று பகல் 11.50 மணிக்கு புதன் பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

17-10-2020 அன்று மாலை 4.56 மணிக்கு சூர்ய பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

23-10-2020 அன்று மாலை 6.15 மணிக்கு சுக்கிர பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

26-10-2020 அன்று காலை 8.19 மணிக்கு செவ்வாய் பகவான் ராசிக்கு மாறுகிறார்.

பலன்:

வாக்கு நாணயங்களில் கவனமாக இருக்கும் மீன ராசி அன்பர்களே, இந்த மாதம்  கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வாக்கு நாணயம் உண்டாகும். நன்பர்களின் நட்பு கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். அடுத்தவரை பற்றி எந்த பேச்சும் பேசாமல் இருப்பது நல்லது.

தொழிலில்  பணம் கைக்கு வந்து சேரும். பணி தொடர்பான பயணங்கள் இருக்கும். நண்பர்கள் முலமாக செய்து வந்த காரியங்கள் அனைத்து சுலபமாக வெற்றி பெறும். தொழிலில் கவனமாக செயல்படவேண்டியது அவசியம்.

குடும்பத்தில் சகோதரர்களால் நன்மை உண்டாகும். கணவனுக்கு தேவையான வசதிகள் செய்து தருவீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.  எல்லா வகையிலும் போராடி வாழ்கையை வெல்லவேண்டும் என்ற ஆர்வம் ஏற்படும்.

பெண்களுக்கு சதா எதையாவது யோசித்துக் கொண்டே இருப்பீர்கள். எந்த காரியத்திலும் முடிவு எடுக்கும்  முன்பு தீர ஆலோசிப்பது நல்லது.

கலைத்துறையினருக்கு காரணமில்லாமல் மனதில் தைரியம் குறையும். பண வரவுக்குக் குறைவு ஏற்படாது. உங்களின் தன்னம்பிக்கை உயரும். வாழ்க்கையில் முன்னேற வேகம் காட்டுவது நல்லது. மன குழப்பம் நீங்கும். தீவிர உழைப்பும், அதிக முயற்சிகளுடன் காரியங்களில் ஈடுபடுவீர்கள். மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும்.

அரசியல்துறையினர் மனதிருப்தியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பயணம் செல்ல நேரலாம். மனதிற்க்கு பிடித்தவர்களை சந்திக்க நேரிடலாம். பெரியவர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். உடனிருப்பவர்களுடன் எச்சரிக்கையாகப் பழகுவது நல்லது. ரகசியங்களை கையாளுவதில் கவனம் தேவை.

மாணவர்களுக்கு கல்வியில் கடினமான உழைப்பும் எண்ணம் கவனத்தை சிதராமல் படிப்பில் கவனத்தை செலுத்தி படிக்கவேண்டும் என்ற ஆர்வமும் வேண்டும்.

பூரட்டாதி 4ம் பாதம்:

இந்த மாதம் உத்தியோகத்தில் எதிர்பாராத பதவி உதவிகள் கிடைத்தாலும் பொறுப்புகளும் சற்று அதிகரிக்கவே செய்யும். புத்திரவழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் சாதகமான நற்பலனைப் பெறுவார்கள். எதிர்பார்க்கும் கடனுதவிகள் கிடைக்கப்பெற்று தொழிலை அபிவிருத்திச் செய்யமுடியும். 

உத்திரட்டாதி:

இந்த மாதம் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும். எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றல் உண்டாவதால் ஏற்றமிகு பலனைப் பெறுவீர்கள். பணவரவுகள் சுமாராகவே இருக்கும்.

ரேவதி:

இந்த மாதம் குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் உண்டாகும். உடல் ஆரோக்கியமும் அற்புதமாக அமைந்து பலமும், வளமும் அதிகரிக்கும். பணவரவுகள் தாராளமாக அமைவதால் குடும்பத்தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உற்றார்- உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும்.

பரிகாரம்: குல தெய்வத்தை பூஜை செய்து வணங்க எல்லா காரியமும் வெற்றியாக முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்; 

சந்திராஷ்டம தினங்கள்: 17, 18

அதிர்ஷ்ட தினங்கள்: 11, 12

 

Continue Reading

மாத பலன்

உங்கள் ராசிக்கான செப்டம்பர் 2020 மாத பலன்கள்!

Published

on

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction

09-09-2020 அன்று  காலை 10.06 மணிக்கு குரு வக்ர நிவர்த்தி அடைகிறார்.      

14-09-2020 அன்று  பகல் 3.18 மணிக்கு சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.      

16-09-2020 அன்று  இரவு 8.06 மணிக்கு செவ்வாய் பகவான் வக்ர ஆரம்பம்    

30-09-2020 அன்று காலை 3.41 மணிக்கு புதன் பகவான் வக்ர ஆரம்பம்   

*******************************************************************************************************************************

மேஷம்:

கிரக நிலை:

ராசியில் செவ்வாய் – தைரிய ஸ்தானத்தில் ராஹூ – சுக ஸ்தானத்தில் சுக்ரன்   – பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன் – ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன் – பாக்கிய ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ) – லாப ஸ்தானத்தில் சந்திரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.  

கிரகமாற்றங்கள்:

01-09-2020 அன்று  பகல் 2.16 மணிக்கு ராகு பகவான் தன ஸ்தானத்திற்கும், கேது பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கும் மாறுகிறார். 

17-09-2020 அன்று  காலை 5.41 மணிக்கு சூர்ய பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.    

21-09-2020 அன்று  பகல் 2.58 மணிக்கு புதன் பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.    

28-09-2020 அன்று  காலை 6.27 மணிக்கு சுக்கிர பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.    

பலன்:

பேச்சில் அதிக வேகம் உடைய மேஷராசியினரே,  நீங்கள் எல்லோராலும் நேசிக்கப்படுவீர்கள். இந்த மாதம் எதிலும்  எச்சரிக்கையாக இருப்பது நன்மை தரும். அதனால் எந்த ஒரு வேலைபற்றியும் அதிகம் யோசிப்பதை தவிர்ப்பது நல்லது. திடீர் பணதேவை உண்டாகலாம்வெளியூரில் இருந்து வரும் கடிதங்கள் மூலம் மகிழ்ச்சி ஏற்படும்.

குடும்பத்தில் இருந்த இறுக்கமான நிலை மாறும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். கவனம் தேவை. பிள்ளைகள் விஷயத்தில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. நண்பர்கள், உறவினர்களிடம் பக்குவமாக பேசுவது நன்மை தரும்.

தொழில் வியாபாரம் சீராக இருக்கும். புதிய கிளைகள் தொடங்குவது போன்ற விரிவாக்க பணிகளை தள்ளி போடுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகள் மூலம் அனுகூலம் ஏற்பட்டாலும்,சக ஊழியர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது அவசியம்.

அரசியல்வாதிகள் கட்சித் தலைமையின் ஆணையை மீறி தனி ஆவர்த்தனம் காட்ட வேண்டாம். தொகுதி மக்களிடம் நெருங்கி பழகுவது அவசியம். அவர்களின் குறைகளை பொறுமையாக கேட்டு செயல்படுத்துவதன் மூலம் மக்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.

கலைத்துறையினருக்கு வெளிநாட்டு புது நிறுவனங்கள் உங்களுக்கு வாய்ப்பளிக்கும். அயராத உழைப்பால் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். பிரபலங்களுடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும். அதை சாதகமாக பயன்படுத்திக் கொள்வது அவசியம்.

பெண்களுக்கு மனக்கவலை உண்டாகும். வீண் அலைச்சலும் அதனால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாமலும் போகலாம். எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது.

மாணவர்களுக்கு பாடங்கள் படிக்க வேண்டுமே என்ற கவலை குறையும்சக மாணவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்

அஸ்வினி:  

இந்த மாதம் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.  தொழில், வேலை, உத்தியோகம் ஆகியவற்றில் வெற்றி அடையலாம்.  சேமிப்பும் அதிகரிக்கும். உங்கள் உழைப்பும் நம்பிக்கையும் உங்களுக்கு முழுமையான பலனையும் திருப்தியையும் தரும். எதிர்ப்பும் இடையூறும் ஒருபுறம் இருந்தாலும், உங்களின் தன்னம்பிக்கையாலும் தைரியத்தாலும் அவற்றைப் போராடி எதிர்த்து நின்று வெற்றி கொள்வீர்கள்.

பரணி:  

இந்த மாதம் கடமைகளைக் காப்பாற்றுவீர்கள். பொருளாதாரத்தில் பிரச்சினை இருக்காது என்றாலும், வைத்தியச் செலவும் அல்லது வீண்விரயச் செலவும் தவிர்க்க முடியாததாக இருக்கும். அதனால் சில சமயம் விரக்தி ஏற்படலாம்.  ஜாதக தசாபுக்தியை அனுசரித்து தேவையான பரிகாரங்களைச் செய்து கொள்வதால், மனதில் ஆறுதலும் நம்பிக்கையும் உண்டாகும். தொழில், வியாபாரம், உத்தியோகத்தில் பிரச்சனை இருக்காது.

கிருத்திகை:

இந்த மாதம் கடந்த காலத்தில் உங்களை விட்டுச் சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள். உறவு பலப்படும். தொலைபேசித் தொடர்பு மூலமாக சிலர் புதிய தொழில் ஒப்பந்தங்களை ஏற்படுத்தி லாபம் தேடும் முயற்சியில் ஈடுபடலாம். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. சுபநிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் ஈடுபடுவீர்கள். நண்பர்களின் வார்த்தைகள் உத்வேகம் அளிப்பதாக இருக்கும்.

பரிகாரம்: தினமும் கந்தர் அனுபூதி சொல்லி வர மனக்குறைகள் அனைத்தும் தீரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன், வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 22, 23

அதிர்ஷ்ட தினங்கள்: 16, 17

*******************************************************************************************

ரிஷபம்:

கிரக நிலை:

குடும்ப ஸ்தானத்தில்  ராஹூ – தைரிய ஸ்தானத்தில் சுக்ரன் – சுக ஸ்தானத்தில்  சூர்யன் – பஞ்சம  ஸ்தானத்தில் புதன் – அஷ்டம ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ) – தொழில் ஸ்தானத்தில் சந்திரன் –  விரைய ஸ்தானத்தில் செவ்வாய்   என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றங்கள்:

01-09-2020 அன்று  பகல் 2.16 மணிக்கு ராகு பகவான் ராசிக்கும், கேது பகவான் களத்திர ஸ்தானத்திற்கும், மாறுகிறார். 

17-09-2020 அன்று  காலை 5.41 மணிக்கு சூர்ய பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.    

21-09-2020 அன்று  பகல் 2.58 மணிக்கு புதன் பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.    

28-09-2020 அன்று  காலை 6.27 மணிக்கு சுக்கிர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.    

பலன்:

மனதில் நினைத்ததை நினைத்தபடியே முடிக்கும் வரை போராடும் குணமுடைய ரிஷபராசியினரே, இந்த மாதம் கோபத்தை குறைத்து கவனமாக செயல்படுவது நல்லது. அடுத்தவரின் செயல்கள் உங்கள் கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம் அனுசரித்து செல்வது நன்மை தரும். பொறுமையுடன் செல்வதன் மூலம் சில காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள்.

குடும்பத்தில் இருந்த இறுக்கம் நீங்கி மனம் மகிழ்ச்சியடையும் விதமாக சம்பவங்கள் நடக்கலாம். உறவினர் மூலம் தேவையான உதவியும் கிடைக் கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். வழக்குகளை தள்ளிப் போடுவது நல்லது.

தொழில் வியாபாரம் சுமாராக இருந்தாலும் லாபம் கிடைக்கும். வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசி தக்க வைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும் வேலை பளுவால் மனசலிப்பும் உண்டாகும். திடமான மனதுடன் செயல்பட்டால் சில நல்ல பலன்களை அடைவீர்கள்.

அரசியல்வாதிகள் எதிர்ப்புகளையும் மீறி முன்னேறுவர். சகாக்கள் மத்தியில் ஆதரவு பெருகும். வீண், வறட்டு கௌரவத்துக்காக சேமிப்புகளை கரைத்துக் கொள்ள வேண்டாம். முக்கிய முடிவுகள் எடுக்கும் போது கவனமுடன் செயலடுவது அவசியம்.

கலைத்துறையினரின் படைப்புத் திறன் வளரும். பொது நிகழ்ச்சிக்கு தலைமை தாங்குமளவுக்குப் பிரபலமாவார்கள். நல்ல வாய்ப்புகள் வரும். உங்கள் முன்னேற்றத்திற்கு பாதை வகுக்கும் காலமாக இருக்கும்.

பெண்களுக்கு மனதிருப்தியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பயணம் செல்ல நேரலாம்.

மாணவர்களுக்கு பாடங்கள் படிப்பது எதிர்பார்த்தது போல் எளிமையாக இல்லாமல் கடினமாக இருக்கலாம். கூடுதல் முயற்சி வெற்றிக்கு உதவும்.

கிருத்திகை 2,3,4 ஆம் பாதங்கள்: 

இந்த மாதம் சில அத்தியாவசிய தேவைகளுக்கு செலவு செய்ய பணப்பற்றாக் குறையை சந்திக்கலாம். ஒரு பிரச்சினை முடிந்ததும் இன்னொரு பிரச்சினை உருவாகலாம். ஆனாலும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் பிரச்சினைகள் எவ்வளவு இருந்தாலும் தோல்வியும் தொய்வும் இல்லாமல் சமாளித்து ஜெயிக்கலாம். கவலை வேண்டாம். நிதானத்தைக் கடைபிடிப்பது அவசியம்.

ரோகிணி:  

இந்த மாதம் எடுத்த காரியங்களில் உடனே வெற்றி ஏற்படும். சில காரியங்களில் தாமதமாக வெற்றி ஏற்படும். உங்கள் விடாமுயற்சிதான் உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். பழகும் நண்பர்களை எடை போட முடியாது. வெளுத்தது எல்லாம் பால் என்று நம்பும் உங்கள் பெருந்தன்மையை கொஞ்சம் ஒதுக்கி வைக்கவும். எதையும் தீர ஆலோசித்து முடிவு எடுக்கவும்.

மிருகசீரிஷம் 1,2 ஆம் பாதங்கள்:  

இந்த மாதம் சில காரியங்கள் எதிர்மறையாக நடக்கும். நீங்கள் இதுவரை எதிர்பார்த்த காரியங்கள் எல்லாம் இழுபறியாக நிறைவேறாமல் இருந்தாலும், ஏதோவொரு வகையில் எப்படியும் நடந்துவிடும் என்று நம்பிக்கை இருக்கும். அந்த நம்பிக்கை வீண்போகாது. முழு முயற்சியுடன் ஈடுபட்டால் நீங்கள் நினைத்தது நடக்கும். விருந்து உபசாரங்களில் கலந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும். 

பரிகாரம்: மஹாலட்சுமியை வணங்க பணப்பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி

சந்திராஷ்டம தினங்கள்: 24, 25

அதிர்ஷ்ட தினங்கள்: 18, 19

*******************************************************************************************

மிதுனம்:

கிரக நிலை:

ராசியில்  ராஹூ – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன்  – தைரிய ஸ்தானத்தில்  சூர்யன் – சுக ஸ்தானத்தில் புதன் – களத்திர ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ) – பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் – லாப ஸ்தானத்தில்  செவ்வாய் என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றங்கள்:

01-09-2020 அன்று  பகல் 2.16 மணிக்கு ராகு பகவான் விரைய ஸ்தானத்திற்கும், கேது பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திற்கும், மாறுகிறார். 

17-09-2020 அன்று  காலை 5.41 மணிக்கு சூர்ய பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.    

21-09-2020 அன்று  பகல் 2.58 மணிக்கு புதன் பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.    

28-09-2020 அன்று  காலை 6.27 மணிக்கு சுக்கிர பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.    

பலன்:

இருந்த இடத்தில் இருந்தே காரியங்களை சாதிக்கும் திறனுடைய மிதுன ராசியினரே, இந்த மாதம் மனதில் இருந்த கவலை நீங்கி தைரியம் உண்டாகும். எதிலும் லாபத்தை பார்க்க முடியும். எல்லா நன்மையும் உண்டாகி உடல் ஆரோக்கியம் பெறும். வாக்கு வன்மையால் எந்த காரியத்தையும் சுலபமாக செய்து முடிப்பீர்கள்.

குடும்பத்தில் இருந்த கஷ்டங்கள் நீங்கும். குதூகலம் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். தொல்லைகள் நீங்கும்.

தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக் கும். எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் செலவும் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், வேலை பளுவும் ஏற்படலாம்.

அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களால் ஆதாயம் ஏற்படும். மக்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். மேலிடத்திலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும்.

கலைத்துறையினருக்கு பணவரத்து இருக்கும். வராமல் இழுபறியாக இருந்த பணம் வந்து சேரும். வேலைப்பளு காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும்.

பெண்களுக்கு மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் உண்டாகும். அடுத்தவர்களிடம் பழகும் போது கவனம்தேவை.

மாணவர்களுக்கு புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்கள் மூலம் கல்வியில் முன்னேற்றம் காண உதவி கிடைக்கும்.

மிருகசீரிஷம் 3,4 ஆம் பாதங்கள்:  

இந்த மாதம் பழகும் மனிதர்களின் வார்த்தைகளை நம்புவதா வேண்டாமா என்று சமயத்தில் சந்தேகம் ஏற்படலாம். எந்த விசயத்திலும் பிடிப்பும் ஆர்வமும் இல்லாமல் சலிப்பை உண்டாக்கினாலும், மனதில் ஏதோ ஒரு உணர்வு உங்களை வழி நடத்திச் செல்லும். புதிய வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அதற்கான அழைப்பு வரலாம். தீடீரென வரும் வாய்ப்புகள் மனதிற்கு சற்று மகிழ்ச்சியைத் தரும். 

திருவாதிரை:  

இந்த மாதம் குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சனைகள் மறையும். சிலருக்கு திருமணம் மற்றும் சுபநிகழ்ச்சிகள் நடப்பதில் தாமதம் ஏற்படும். யாருக்கும் வாக்கு கொடுக்கும் முன் ஆலோசனைகள் செய்து கொள்ளவும். திடீர் செலவுகள் உங்களை வருத்தத்தை ஏற்படச் செய்யும். உறவினர்கள் இல்லத்திற்கு வந்து செல்வார்கள். குல தெய்வ பிரார்த்தனை நடைபெறும். 

புனர்பூசம் 1,2,3 ம் பாதங்கள்: 

இந்த மாதம் பொருட்களை களவு கொடுக்க நேரிடலாம். உங்களின் உடமைகள் மீது கண்ணும், கருத்துமாக இருக்க வேண்டும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அறிமுகம் இல்லாதவர்களின் வீட்டில் எதையும் உட்கொள்ள வேண்டாம். வேலை விசயமாக வெளியூர் செல்ல நேரலாம். அது உங்கள் எதிர்காலத்திற்கு ஏற்றதாக அமையும். உடன் பிறந்தவர்கள் உற்ற துணையாக இருப்பார்கள். 

பரிகாரம்: சக்கரத்தாழ்வாரை 11 முறை வலம் வந்து அர்ச்சிக்க நினைத்தது நடக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், சனி

சந்திராஷ்டம தினங்கள்: 26, 27, 28

அதிர்ஷ்ட தினங்கள்: 20, 21

******************************************************************************************

கடகம்:

கிரக நிலை:

ராசியில் சுக்ரன் – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில்  சூர்யன் – தைரிய  ஸ்தானத்தில் புதன் – ரண, ருண ஸ்தானத்தில்  கேது, குரு (வ), சனி (வ) – அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் – தொழில் ஸ்தானத்தில்  செவ்வாய் – அயன, சயன, போக ஸ்தானத்தில்  ராஹூ  என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றங்கள்:

01-09-2020 அன்று  பகல் 2.16 மணிக்கு ராகு பகவான் லாப ஸ்தானத்திற்கும், கேது பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கும், மாறுகிறார். 

17-09-2020 அன்று  காலை 5.41 மணிக்கு சூர்ய பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.    

21-09-2020 அன்று  பகல் 2.58 மணிக்கு புதன் பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.    

28-09-2020 அன்று  காலை 6.27 மணிக்கு சுக்கிர பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.    

பலன்:

பணவரவை அதிகம் எதிர்பார்த்துக் காத்திருக்கும் கடக ராசியினரே இந்த மாதம் புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு மனதிருப்தியடைவீர்கள். எல்லாவற்றிலும் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். புத்தி தெளிவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் பெறும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். .

குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் குறையும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வதன்மூலம் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக பாடுபடுவீர்கள். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். மனகுழப்பம் நீங்கும். பணவரத்தை அதிகப்படுத்தும். குல தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றி வழிபடுவீர்கள்.

தொழில் வியாபாரம் திருப்தி தரும். தொழிலில் முன்னேற்றம் காண வாய்ப்புகள் வந்து சேரும். நிதானமாக பேசுவதன் மூலம் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். புதிய தொழில் துவங்குவதற்கான ஏற்பாடுகள் நல்ல படியாக நடந்தேறும். புதிய ஆர்டர்களும் வந்து சேரும். 

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்பட்டாலும் எடுத்த வேலையை  எப்பாடுபட்டாவது செய்து விடுவீர்கள். புதிய வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு சாதகமான பலன்தரும். சக பணியாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

அரசியல் துறையினருக்கு சாதகமாக இருந்தாலும் புத்திக்கூர்மையுடன் செயல்களை ஆராய்ந்து செய்வது நன்மை பயக்கும். மேலிடத்திற்கும் உங்களுக்கும் தேவையற்ற வாக்குவாதம்  வரலாம். 

கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும். கிடைக்கும் வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம். உடனிருப்பவர்களை ஆலோசித்து காரியங்களை  முன்னெடுப்பது உங்கள் வெற்றிக்குத் தடை வராமல் காக்கும்.

பெண்களுக்கு மனதில் திடீர் கவலை ஏற்பட்டு நீங்கும். பயணங்களின் போதும் வாகனங்களை பயன்படுத்தும் போதும் கவனம் தேவை.

மாணவர்களுக்கு மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கல்வியில் திருப்தி உண்டாகும்.

புனர்பூசம் 4 ஆம் பாதம்: 

இந்த மாதம் நீங்கள் அமைதியாக இருந்தாலும் வீண் சண்டைகள் மற்றும் வீணான குழப்பங்கள் உங்களைத் தேடி வர வாய்ப்பு இருக்கிறது. தகுந்த வரன் கிடைத்து திருமணம ஏற்பாடு இனிதே நடந்தேறும். வீடு, நிலம் மற்றும் வாகனங்கள் வாங்கலாம். உடன் பிறந்தவர்களிடம் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். சிலர் இன்பச் சுற்றுலா சென்று வருவீர்கள்.

பூசம்:

இந்த மாதம் குடும்பத்தில் உள்ளவர்களை திருப்தி படுத்த நீங்கள் மிகவும் உற்சாகமாக செயல் படுவீர்கள். தூரத்து உறவினர்கள் உங்களுக்கு உதவி புரிவார்கள். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். ஆனாலும் கவனமுடன் நடந்து கொள்ளுங்கள். போட்டித் தேர்வுகள் சாதகமாக அமையும். சிலர் கல்வி பயில வெளியூர்க்கு செல்ல வேண்டி வரும். உடல் நலத்திலும் அக்கறையுடன் செயல்படுங்கள்.

ஆயில்யம்

இந்த மாதம் நல்ல பெயர் வாங்குவீர்கள். மூலதனத்திற்குத் தேவையான பணம் வந்து குவியும். அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளவும். எதிரிகள் வகையில் சற்று கவனமுடன் செயல்படவும். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு ஆதாயம் உண்டு. வேலைப்பளுவால் உடல் அசதி ஏற்பட்டு மறையும். நேர்மையாக நடந்து கொண்டு மற்றவர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். 

பரிகாரம்: பிரதோஷத்தன்று நந்தி பகவானுக்கு பாலாபிஷேகத்திற்கு பால் வாங்கி கொடுங்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 1, 2, 3, 29, 30

அதிர்ஷ்ட தினங்கள்: 22, 23

*******************************************************************************************

சிம்மம்:

கிரக நிலை:

ராசியில் சூர்யன் – தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில் புதன் – பஞ்சம ஸ்தானத்தில்  கேது, குரு (வ), சனி (வ) – களத்திர ஸ்தானத்தில் சந்திரன் – பாக்கிய ஸ்தானத்தில்  செவ்வாய் – லாப ஸ்தானத்தில்  ராஹூ – விரைய ஸ்தானத்தில் சுக்ரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. 

கிரகமாற்றங்கள்:

01-09-2020 அன்று  பகல் 2.16 மணிக்கு ராகு பகவான் தொழில் ஸ்தானத்திற்கும், கேது பகவான் சுக ஸ்தானத்திற்கும், மாறுகிறார். 

17-09-2020 அன்று  காலை 5.41 மணிக்கு சூர்ய பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.    

21-09-2020 அன்று  பகல் 2.58 மணிக்கு புதன் பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.    

28-09-2020 அன்று  காலை 6.27 மணிக்கு சுக்கிர பகவான் ராசிக்கு மாறுகிறார்.    

பலன்:

தந்தையின் மீது அதிகப் பற்றும் பாசமும் கொண்ட சிம்ம ராசியினரே , நீங்கள் வசீகர பேச்சாற்றல் கொண்டவர். இந்த மாதம் எல்லா வகையிலும் நல்ல பலன்கள் உண்டாகும். எதிர்பாராத  சம்பவங்களால் இழுபறியாக நின்ற காரியங்கள் நல்ல முடிவுக்கு வரும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம்.  

குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் தீரும்கணவன், மனைவிக்கிடையில் இருந்த இடைவெளி குறையும். மறைமுக எதிர்ப்புகள்  நீங்கும். பிள்ளைகளிடம் அன்பு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மனதில் உற்சாகத்தை  தரும்.   குடும்ப நிகழ்ச்சிகளில் அவ்வப்போது  ஏதாவது தடங்கல் ஏற்பட்டு நீங்கும்.

தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். வியாபார செலவுகள் அதிகரிக்கும்சிறு தொழிலாளர்கள் கூட நன்மை அதிகம் அடைவார்கள். தந்தையார் தொழிலில் ஈடுபட்டவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும். உத்தியோகம் தொடர்பான இடமாற்றம் உண்டாகலாம். கேட்ட பதவி உயர்வு கிட்டும். வெளிநாடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல முன்னேற்றம் காணப்படும்

அரசியல்வாதிகளுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். எதிர்க்கட்சியினர் உதவுவார்கள். மறைமுக போட்டிகள் இருக்கும். தொண்டர்களின் உதவியுடன் செயலாற்றுவீர்கள்.

கலைத்துறையினரின் படைப்புகளுக்கு மதிப்பு, மரியாதை கூடும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். உங்கள் உழைப்பினை தொடர்ந்து செய்வதன் மூலம் வெற்றியை உங்கள் பக்கம் தக்க வைத்துக் கொள்ளலாம்.

பெண்களுக்கு மனம் மகிழும்படியான காரியங்கள் நடக்கும். ஆன்மிக நாட்டம் ஏற்படும்.

மாணவர்களுக்கு மனதில் இருந்த வீண் பயம் அகலும். கல்வியில் வெற்றி பெற பாடுபடுவீர்கள்.

மகம்:

இந்த மாதம் கலைத்துறைகளைச் சார்ந்த துறைகளில் ஈடுபட்டு இருப்பவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். பிறமொழி பேசுபவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் உற்சாகம் பிறக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமைகள் நீங்கப் பெறுவீர்கள். கண் உபாதைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது மருத்துவரிடம் சென்று ஆலோசனை எடுத்துக் கொள்ளுங்கள்.

பூரம்:

இந்த மாதம் உங்கள் நிலைமை மாறும். நீங்கள் விரும்பியதை கேட்டு பெற்றுக் கொள்ளலாம். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். கன்சல்டன்சி துறைகளில் வேலை செய்பவர்கள் தகுந்த முன்னேற்றம் கிடைக்கும். பள்ளி, கல்லூரிகளில் பணிபுரிபவர்களும் நற்பலன்கள் கிடைக்கப் பெறுவார்கள். பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் அமைதியும், சந்தோஷமும் குடி கொண்டிருக்கும்.

உத்திரம் 1 ம் பாதம்:

இந்த மாதம் அலைச்சல் இருக்கும். சிலர் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் திண்டாட வேண்டிய நிலை ஏற்படலாம். உங்கள் குழந்தைகளால் சிற்சில பிரச்சனைகள் வரலாம். அதற்காக உங்களின் குழந்தைகள் மேல் ஆத்திரம் கொள்ள வேண்டாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் வரும் கஷ்டங்களை தாங்கிக் கொள்ளுங்கள். சிக்கனத்தை கடைபிடியுங்கள் எதிர்காலத்திற்கு உதவும். 

பரிகாரம்: நமசிவாய மந்திரத்தை மனதார சொல்லி வாருங்கள். நிம்மதி கிட்டும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 4, 5, 

அதிர்ஷ்ட தினங்கள்: 24, 25

*******************************************************************************************

கன்னி:

கிரக நிலை:

ராசியில் புதன் – சுக  ஸ்தானத்தில்  கேது, குரு (வ), சனி (வ) – ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன் –  அஷ்டம ஸ்தானத்தில்  செவ்வாய் – தொழில்  ஸ்தானத்தில்  ராஹூ – லாப ஸ்தானத்தில் சுக்ரன்  – விரைய ஸ்தானத்தில்  சூர்யன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. 

கிரகமாற்றங்கள்:

01-09-2020 அன்று  பகல் 2.16 மணிக்கு ராகு பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கும், கேது பகவான் தைரிய ஸ்தானத்திற்கும், மாறுகிறார். 

17-09-2020 அன்று  காலை 5.41 மணிக்கு சூர்ய பகவான் ராசிக்கு மாறுகிறார்.    

21-09-2020 அன்று  பகல் 2.58 மணிக்கு புதன் பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.    

28-09-2020 அன்று  காலை 6.27 மணிக்கு சுக்கிர பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.    

பலன்:

எதிர்பார்க்கும் இடத்தில் இருந்து உதவிகளைப் பெறப் போகும் கன்னி ராசியினரே இந்த மாதம் எதிர்பார்த்த நல்ல பலன்களை தரும். திறமையான பேச்சின் மூலம் காரியங்களை சாதிப்பீர்கள். எதிர்த்து செயல்பட்டவர்கள்  விலகிச் சென்று விடுவார்கள். தெய்வ பிரார்த்தனை மனதுக்கு நிம்மதியையும், ஆறுதலையும் தரும். பணவரத்து கூடும்

குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி எல்லோரும் உங்களது வார்த்தைக்கு மதிப்பு தருவார்கள். ஆனால் யாரிடமும் நிதானமாக பேசுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே சகஜநிலை நீடிக்கும்பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். சுபநிகழ்ச்சிகளுக்கு செல்லக் கூடிய வாய்ப்பு வரும்.

தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடந்தாலும்  எதிர்பார்த்த லாபம் குறைய லாம். வியாபாரம் தொடர்பான பணம் பரிவர்த்தனையில் கவனம் தேவை. அரசாங்க காரியங்கள் அனைத்தும் சாதகமான பலன்  தரும்

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும். எடுத்த காரியத்தை வெற்றியுடன் செய்து முடிப் பீர்கள். எண்ணிய எண்ணப்படி எல்லாம் நடக்கும். கேட்ட இடத்தில் இருந்து உதவிகள் தாராளமாக கிடைக்கும்.

கலைத்துறையினர்களுக்கு சிறு முயற்சியிலேயே வாய்ப்புகள் கிடைத்து வருமானமும் அதிகரித்து காணப்படும். இயக்குனர்கள் புதுமுக நடிகர் நடிகைகளை வைத்து படம் இயக்குவதற்கு சாதகமாக கிரகநிலைகள் அமைந்துள்ளன. 

அரசியல் துறையினர் கட்சியில் முக்கிய பொறுப்பு ஒன்று  நீங்கள் எதிர்பார்க்கலாம். அதைக் கண்டு சிலர் பொறாமை பட நேரிடும். பழைய வாகனத்தை கொடுத்துவிட்டு புது வாகனம் வாங்க வாய்ப்பு உள்ளது. 

பெண்களுக்கு வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பொருள் வரத்து கூடும். பயணம் செல்ல நேரலாம்.

மாணவர்களுக்கு மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது முன்னேற்றத்திற்கு உதவும்.

உத்திரம் 2, 3, 4ம் பாதங்கள்:

இந்த மாதம் அன்பும் பாசமும் அதிகரிக்கும். கருத்துக்களை பரிமாறும் முன் பொறுமை மற்றும் நிதானம் அவசியம் என்பதை உணருங்கள். திருமணமாகாமல் அதற்குண்டான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு திருமணம் இனிதே நடந்தேறும். புதிதாக வீடு, மனை வாங்க வேண்டும் என்று யோசனை செய்தவர்களின் எண்ணம் ஈடேறும்.  

ஹஸ்தம்: 

இந்த மாதம் மிகவும் விரும்பிய நண்பர்களை விட்டுப் பிரிய வேண்டிய நிலை வரலாம். உங்களின் பொருட்களை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ளவும். தூக்கம் இல்லாமல் தவிக்கும் நிலையில் உள்ளவர்களுக்கு யோகா போன்ற பயிற்சிகளை செய்வது நன்மையைத் தரும். எண்ணிய எண்ணமெல்லாம் நிறைவேறும். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நன்மையைத் தரும்.

சித்திரை 1, 2ம் பாதங்கள்:

இந்த மாதம் தாய்மாமனிடம் கருத்து மோதல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமான உழைப்பினை கொடுக்க வேண்டி வரலாம். வேலையில் கவனமுடன் செல்வது நல்லது. தீடீரென நீங்கள் எடுக்கும் முடிவுகள் அடுத்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். எதிர்பார்த்த வங்கி உதவிகள் கிடைக்கும்.

பரிகாரம்: ஐயப்பனின் சரண கோஷத்தை சொல்லி வழிபட வெற்றிகள் குவியும். 

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், சனி

சந்திராஷ்டம தினங்கள்: 6, 7, 8

அதிர்ஷ்ட தினங்கள்: 26, 27, 28

*******************************************************************************************

துலாம்:

கிரக நிலை:

தைரிய ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ) – பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன் –  களத்திர ஸ்தானத்தில்  செவ்வாய் –  பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ – தொழில் ஸ்தானத்தில் சுக்ரன்  – லாப ஸ்தானத்தில்  சூர்யன்   – அயன சயன போக  ஸ்தானத்தில் புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  

கிரகமாற்றங்கள்:

01-09-2020 அன்று  பகல் 2.16 மணிக்கு ராகு பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கும், கேது பகவான் தன ஸ்தானத்திற்கும், மாறுகிறார். 

17-09-2020 அன்று  காலை 5.41 மணிக்கு சூர்ய பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.    

21-09-2020 அன்று  பகல் 2.58 மணிக்கு புதன் பகவான் ராசிக்கு மாறுகிறார்.    

28-09-2020 அன்று  காலை 6.27 மணிக்கு சுக்கிர பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.    

பலன்:

நியாயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் துலாராசியினரே  இந்த மாதம் எடுத்த காரியம் கைகூடும். விரோதிகளும் நண்பர்களாவார்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். பண வரத்து திருப்தி தரும், கடன் விவகாரங் களில் எச்சரிக்கை தேவை.

குடும்பத்தில் இருந்த சண்டைகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். திருமணம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள்  கைகூடும். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. பிள்ளைகள் மகிழ்ச்சியாக காணப்படுவார்கள்.

தொழில் வியாபாரம் திருப்தியாக நடக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வாடிக்கையாளர்கள்  மத்தியில் மதிப்பு கூடும். பங்குதாரர்கள் உங்களுக்கு மிகவும் உறுதுணையாக இருப்பார்கள். தேவையான வங்கிக் கடன்கள் கிடைக்கும்.  

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு குறையும். முயற்சிகள் காலதாமதமாக பலன் கொடுக்கும். எதை பற்றியும்  கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வு உங்களைத் தேடி வரும். 

அரசியல் துறையினருக்கு தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. எல்லாவகையிலும்  நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய தூண்டும். பிரிந்து சென்றவர்களை மீண்டும்  சந்திக்க நேரலாம். 

கலைத்துறையினருக்கு தொழில் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். சக கலைஞர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நன்மை தரும். கோபத்தை குறைத்து தன்மையாக பேசுவதால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத செலவு இருக்கும். 

பெண்களுக்கு விடா முயற்சியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பணவரத்து திருப்திதரும்.

மாணவர்களுக்கு முயற்சிகள் சாதகமான பலன் தரும். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். திறமை வெளிப்படும்

சித்திரை 3, 4ம் பாதங்கள்:

இந்த மாதம் எல்லா நன்மைகளையும் தடையின்றி அடைவீர்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். இதுவரை தொந்தரவு கொடுத்துவந்த நோய் விலகும். அதனால் ஏற்பட்ட மனபாரம் குறையும். வரக்கூடிய உபரி வருவாயால் கடன் அடைபடும். தொழிலதிபர்களுக்கு எதிர்பார்த்தபடி வரவுகள் வந்துசேரும். பணியாளர்கள் வழியில் எந்த வித பிரச்சனைகளும் வராது. 

ஸ்வாதி:

இந்த மாதம் புதிய ஒப்பந்தங்கள் கைகொடுக்கும். தொழிலதிபர்கள் பங்குதாரர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். கணவன்- மனைவி ஒற்றுமை சுமுகமாக இருக்கும். மனைவி வழியில் வரவேண்டிய சொத்துகள் கிடைக்கும். வியாபாரிகள் எந்தக் கொள்முதலையும் தயக்கமின்றிச் செய்யலாம். வியாபாரம் பெருகும். போட்டியாளர்கள் விலகிச்செல்வார்கள். 

விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்:

இந்த மாதம் ஊழியர்களுக்கு வரவேண்டியவை அனைத்தும் வந்துசேரும். கேட்ட இடத்திற்கு மாறுதல் கிட்டும். மகான்களின் சந்திப்பு ஏற்படும். தங்கள் பிள்ளைகளுக்கு வரன் தேடும் பெற்றோர்களுக்கு நல்ல சம்பந்தம் வந்துசேரும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் நல்ல வாய்ப்புகளைப் பெற்றுத்தரும். உங்களை ஒதுக்கியவர்களே உங்களைத் தேடிவருவார்கள்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி வழிபாடு செய்து வர வருமானம் பெருகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி

சந்திராஷ்டம தினங்கள்: 9, 10

அதிர்ஷ்ட தினங்கள்: 1, 2, 3, 29, 30

*******************************************************************************************

விருச்சிகம்:

கிரக நிலை:

 தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ) – சுகஸ்தானத்தில் சந்திரன் – ரண ருண ரோக ஸ்தானத்தில்  செவ்வாய் – அஷ்டம  ஸ்தானத்தில் ராஹு – பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன்  – தொழில் ஸ்தானத்தில்  சூர்யன் – லாப   ஸ்தானத்தில் புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றங்கள்:

01-09-2020 அன்று  பகல் 2.16 மணிக்கு ராகு பகவான் களத்திர ஸ்தானத்திற்கும், கேது பகவான் ராசிக்கும், மாறுகிறார். 

17-09-2020 அன்று  காலை 5.41 மணிக்கு சூர்ய பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.    

21-09-2020 அன்று  பகல் 2.58 மணிக்கு புதன் பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.    

28-09-2020 அன்று  காலை 6.27 மணிக்கு சுக்கிர பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.    

பலன்:

நியாயத்தின் பக்கம் நிற்கும் விருச்சிக ராசியினரே,  நீங்கள் அநியாயத்தை எதிர்க்கும் குணமுடையவர். இந்த மாதம் பேச்சு திறமையால் காரிய வெற்றிகள் உண்டாகும். போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சின்ன விஷயங்களால் மன நிறைவு உண்டாகும்

குடும்பத்தில் இருந்த டென்ஷன் குறைந்து சந்தோஷமான நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே  மகிழ்ச்சியான உறவு நிலவும். பிள்ளைகளின் நடத்தை மனதுக்கு  நிம்மதியை தரும். மற்றவர்களால் அமைதியின்மை உண்டாகலாம். அடுத்தவர் பேச்சை கேட்பதை குறைப்பது நல்லது. தேவையில்லாத விசயங்களில் தலையிட வேண்டாம்.

தொழில் வியாபாரம் தொடர்பாக அலைச்சல் உண்டாகும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். பணவரத்து திருப்தி தரும். வாடிக்கையாளர்களிடம் கணிவுடன் பேசுவதன் மூலம் உங்கள் லாபத்தை அதிகரிக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிசுமை குறைந்து காணப்படுவார்கள். வேலை திறமைக்கு பாராட்டு கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு நிலுவையில் உள்ள காரியங்கள் சிறப்பாக முடிய வழி பிறக்கும். வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். இரவு பகலாக உழைக்க வேண்டி இருக்கும். நீண்ட தூர பயணங்கள் செல்ல நேரலாம். அனைத்தும் உங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்.

அரசியல்வாதிகள் மக்கள் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மக்கள் பிரச்சனைகளைத் தீர்த்து அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். நீங்கள் எதிர்பாராதவர்கள் கூட உங்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுவார்கள்.

பெண்களுக்கு வீண் பேச்சுக்களை குறைத்து செயலில் கவனம் செலுத்துவது நல்லது. பணவரத்து திருப்தி தரும். கோபத்தை குறைப்பது நல்லது.

மாணவர்களுக்கு வீண் அலைச்சலை குறைத்துக் கொண்டு கல்வியில் கவனம் செலுத்துவது நன்மை தரும்.  

விசாகம் 4ம் பாதம்:

இந்த மாதம் ஓய்வில்லாமல் உழைக்க நேரும். அதற்கேற்றவாறு கூடுதல் வருமானமும் வரும். தொழிலதிபர்கள் நினைத்தபடி உற்பத்தி கூடும். புதிய ஒப்பந்தங்கள் வரும். லாபம் பெருகும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். உடல்நிலையில் இருந்துவந்த சிரமங்கள் முற்றிலும் நீங்கும்.

அனுஷம்:

இந்த மாதம் நீண்ட நாட்களாக தொல்லை கொடுத்துவந்த நோய் மருந்துக்கு கட்டுப்பட்டு விடும். அரசுப்பணியில் உள்ளவர்கள் உடன் பணிபுரிகின்றவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.  உடன்பிறந்த சகோதரர்கள் ஒன்றுசேர்வார்கள். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் வந்து சேரும்.

கேட்டை:

இந்த மாதம் வெளிநாடு செல்லும் திட்டம் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கல் செய்வோர் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய நாள். சமூகத்தில் நல்ல அந்தஸ்தைப் பெறுவீர்கள். பிள்ளைகள் பாராட்டைப் பெற்று பெற்றோர்களுக்கு மகிழ்ச்சி தருவார்கள். இதுவரை தொல்லை கொடுத்துவந்த எதிரிகள் விலகிச் செல்வார்கள். 

பரிகாரம்: தினமும் முருகனுக்கு அரளி மலர்களை அர்ப்பணிக்க வாழ்வில் மகிழ்ச்சி பெருகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன்

சந்திராஷ்டம தினங்கள்: 11, 12, 13

அதிர்ஷ்ட தினங்கள்: 4, 5, 

*******************************************************************************************

தனுசு:

கிரக நிலை:

ராசியில்  கேது, குரு (வ), சனி (வ) – தைரிய ஸ்தானத்தில் சந்திரன் – பஞ்சம ஸ்தானத்தில்  செவ்வாய் – களத்திர ஸ்தானத்தில்  ராஹு – அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன்  – பாக்கிய ஸ்தானத்தில்  சூர்யன் –   தொழில்  ஸ்தானத்தில் புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன. 

கிரகமாற்றங்கள்:

01-09-2020 அன்று  பகல் 2.16 மணிக்கு ராகு பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திற்கும், கேது பகவான் விரைய ஸ்தானத்திற்கும், மாறுகிறார். 

17-09-2020 அன்று  காலை 5.41 மணிக்கு சூர்ய பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.    

21-09-2020 அன்று  பகல் 2.58 மணிக்கு புதன் பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.    

28-09-2020 அன்று  காலை 6.27 மணிக்கு சுக்கிர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.    

பலன்:

உயர்தரமான எண்ணங்களையும், உயர்ந்த திட்டங்களையும் உடைய தனுசு ராசியினரே,  இந்த மாதம் நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த ஒரு காரியத்தில் சாதகமான பலன் கிடைக்கும். மற்றவர்களுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள். பேச்சினால் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் நீங்கி பிரிந்தவர்கள் மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். பணவரத்து அதிகரிக்கும். மனதில் புதுதெம்பும் உற்சாகமும் தோன்றும். எதிர்பாரத உதவியால் நன்மை ஏற்படும்.

குடும்பத்தில் இருந்த டென்ஷன் நீங்கும் கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். நண்பர்களால் தேவையான உதவி கிடைக்கும். குடும்பத்துடன் வெளியில் சென்று வருவீர்கள்.

தொழில் வியாபாரம் தொடர்பாக அலைச்சல் ஏற்படும். வாடிக்கையாளர் களுக்கு சரக்குகளை அனுப்பும் போது பாதுகாப்பாக அனுப்புவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மனதிருப்தி காண்பார்கள். அலுவலகம் தொடர்பான பணிகள் சாதகமாக நடக்கும்

கலைத்துறையினர் நடிகர்கள் நடிகைகள் இயக்குனர்கள் ஆகியோர் படப் பிடிப்புகளின் காரணமாக வெளிநாடு சென்று வருவதற்கு வாய்ப்புள்ளது. அதனால் தங்களது வாழ்வாதாரம்  உயரும். மனதில் தெளிவும், நம்பிக்கையும் ஏற்படும்.

அரசியல் துறையினர் சிலருக்கு மனதில் கவலைகள் ஏற்படக்கூடும். அதற்கு முக்கிய காரணம் மன உளைச்சலே ஆகும்.  கவலை வேண்டாம் உங்கள் பக்கம் நியாயம் இருக்கும் வரை நீங்களே வெற்றியாளர்கள். மனதில் புது தைரியம் பிறக்கும்.

பெண்களுக்கு வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது  நல்லது. எதிலும் நிதானம் தேவை. பொருள் சேர்க்கை உண்டாகும்

மாணவர்களுக்கு  ஆசிரியர்  சொல்படி பாடங்களை படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற்று வெற்றி பெற உதவும்.

மூலம்:

இந்த மாதம் பொதுக் காரியத்தில் உள்ளவர்கள் சமூகத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் பெறுவார்கள். குடும்பத்தில் இருந்துவந்த சண்டை நீங்கி தம்பதியர் ஒன்று சேர்வார்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நினைத்தபடி பணவரவுகளைப் பெறலாம். தொழிலதிபர்கள் அதிக உற்பத்தியையும், லாபத்தையும் பெறுவார்கள்.

பூராடம்:

இந்த மாதம் பொறுமையுடன் செயல்பட வேண்டும். வியாபாரிகள் மறைமுக போட்டிகளால் நெருக்கடிகளைச் சந்திக்கலாம். கவனமாகச் செயல்பட்டால் லாபம் பெறலாம். இதுவரை குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்த பிள்ளைகள் வந்துசேர்வார்கள். அயல்நாட்டில் இருந்து நல்ல செய்திகள் வந்துசேரும். தந்தை, மகன் உறவு சுமுகமாகும்.

உத்திராடம் 1ம் பாதம்:

இந்த மாதம் ஊழியர்கள் நினைத்த இடத்திற்கு மாறுதல் பெறுவார்கள். தங்க நகை வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். அதேநேரம் பணியாளர்களிடம் கவனமாக இருக்கவேண்டும். வியாபாரிகள் நல்ல நிலையை அடைவார்கள். வேலைதேடும் இளைஞர்களுக்கு எதிர்பார்த்தபடி வேலைவாய்ப்புகள் வந்துசேரும். சிலர் இடமாற்றமும் அடைய வாய்ப்பு உண்டு.

பரிகாரம்: ராகவேந்திரரை தரிசித்து வர மனதில் நிம்மதி பிறக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், சனி

சந்திராஷ்டம தினங்கள்: 14, 15

அதிர்ஷ்ட தினங்கள்: 6, 7, 8

*******************************************************************************************

மகரம்:

கிரக நிலை:

தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் – சுக ஸ்தானத்தில்  செவ்வாய் –  ரண, ருண  ஸ்தானத்தில்  ராஹூ – களத்திர ஸ்தானத்தில் சுக்ரன்  – அஷ்டம ஸ்தானத்தில்  சூர்யன் –  பாக்கிய  ஸ்தானத்தில் புதன் – அயன, சயன,  போக ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ) என கிரகங்கள் வலம் வருகின்றன. 

கிரகமாற்றங்கள்:

01-09-2020 அன்று  பகல் 2.16 மணிக்கு ராகு பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கும், கேது பகவான் லாப ஸ்தானத்திற்கும், மாறுகிறார். 

17-09-2020 அன்று  காலை 5.41 மணிக்கு சூர்ய பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.    

21-09-2020 அன்று  பகல் 2.58 மணிக்கு புதன் பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.    

28-09-2020 அன்று  காலை 6.27 மணிக்கு சுக்கிர பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.    

பலன்:

எத்தனை தடைவந்தாலும் எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் பின்வாங்காத மகர ராசியினரே, இந்த மாதம் எல்லாவகையிலும் நல்லதே நடக்கும். அனுகூலமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். எதிர்ப்புகள் விலகும்நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். விரும்பிய காரியங்களை செய்து சாதகமான பலன் கிடைக்க பெறுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்

குடும்பத்தில் இருந்த பிரச்சனை தீரும். ஆனால் வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பம் சம்பந்தப்பட்ட காரியங்கள் சரிவர நடக்காமல் தடைதாமதம் ஏற்படலாம். பிள்ளைகள் நலனுக்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

தொழில் வியாபாரம் தொடர்பாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரம் தொடர்பானவழக்கு விவகாரங்களை தள்ளி போடுவது நல்லது. எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் பணத்தேவை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமுடன் இருப்பது நல்லது.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் பிரச்சினைகள் ஏதும் ஏற்படாது. வருமானம் போதுமென்ற அளவிற்கு இருக்கும். சிலர் பழைய வாகனத்தை கொடுத்து விட்டு புதிய வாகனம்  வாங்குவீர்கள்.

அரசியல் துறையினருக்கு  கட்சி பணிகளின் காரணமாக கடின உழைப்பு ஏற்படக்கூடும். இரவு பகல் பாராது இவ்வாரம் உழைக்க வேண்டியிருக்கும் கட்சிக்காக நீங்கள் எதுவும் செலவு  செய்திருந்தால் அதை கட்சி நிர்வாகம் தங்களிடம் கொடுத்து விடும்.

பெண்களுக்கு வீண்செலவு குறையும். பயணங்கள் செல்ல நேரிடலாம். திறமையான செயல்கள் மூலம் எடுத்த காரியம் சாதகமாக நடந்து முடியும்

மாணவர்களுக்கு  கல்வியில் கவனம் செலுத்துவது நல்லதுபெரியோர் சொல்படி நடப்பது வெற்றிக்கு உதவும்.

உத்திராடம்: 2, 3, 4ம் பாதங்கள்:

இந்த மாதம் திருமணத்திற்கு வரன் தேடுவோர் வரக்கூடிய வரன்களை நன்றாக ஆராய்ந்து முடிவுக்கு வரவேண்டும். கவலை வேண்டாம். மனதிற்கு பிடித்த வரன் அமைய வாய்ப்புகள் அதிகம் உள்ள்து. தொழிலதிபர்கள் வெளிநாட்டு ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். லாபம் பெருகும். வியாபாரிகள் போட்டியின்றி வியாபாரம் செய்து லாபத்தைப் பெறுவார்கள். 

திருவோணம்:

இந்த மாதம் பிரிந்துசென்ற தம்பதியினர் ஒன்று சேர்வார்கள். நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் வருவாய் உண்டு. மருத்துவத் தொழில்புரிவோருக்கு அதிக வருவாய் வரும். சோதனைகள் வெற்றியாக மாறும். பொது நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். மருத்துவச் செலவுகள் வந்து போகும். அரசால் ஆதாயம் உண்டு. 

அவிட்டம் 1, 2 ம் பாதங்கள்:

இந்த மாதம் காரியங்கள் அனைத்தும் கைகூடும். உங்கள் செயல்பாடுகள் மற்றவர்களைக் கவரும். உல்லாசப் பயணங்களில் நாட்டம் செல்லும். மனஅடக்கம் பெற தியானம் செய்யுங்கள். படிப்பில் நாட்டம் கூடும். பெற்றோர்கள், பிள்ளைகள் விரும்பியதை  வாங்கிக்கொடுப்பார்கள். செலவுகளும், அலைச்சலும் கூடும். மனதில் கொஞ்சம் கலக்கமும், ஏமாற்றமும் ஏற்படும். ஜாமீன் கையெழுத்திடுவதைத் தவிர்க்கவும். கடன் அடைப்பீர்கள். புது வேலை அமையும். அதிக வட்டிக்கடனை அடைப்பீர்கள்.

பரிகாரம்: தினமும் காகத்திற்கு சாதம் வைப்பதன் மூலம் முன்னோர்களின் ஆசியுடன் பல வெற்றிகளை பார்க்க முடியும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், சனி

சந்திராஷ்டம தினங்கள்: 16, 17

அதிர்ஷ்ட தினங்கள்: 9, 10

*******************************************************************************************

கும்பம்:

கிரக நிலை:

ராசியில் சந்திரன் – தைரிய ஸ்தானத்தில்  செவ்வாய் –  பஞ்சம ஸ்தானத்தில்  ராஹூ – ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்ரன்  – களத்திர ஸ்தானத்தில்  சூர்யன் – அஷ்டம  ஸ்தானத்தில் புதன் – லாப ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ) என கிரகங்கள் வலம் வருகின்றன. 

கிரகமாற்றங்கள்:

01-09-2020 அன்று  பகல் 2.16 மணிக்கு ராகு பகவான் சுக ஸ்தானத்திற்கும், கேது பகவான் தொழில் ஸ்தானத்திற்கும், மாறுகிறார். 

17-09-2020 அன்று  காலை 5.41 மணிக்கு சூர்ய பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.    

21-09-2020 அன்று  பகல் 2.58 மணிக்கு புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.    

28-09-2020 அன்று  காலை 6.27 மணிக்கு சுக்கிர பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.    

பலன்:

எவ்வளவு வேலை என்றாலும் சளைக்காமல் அதை செய்து முடிக்கும் ஆற்றல் பெற்ற கும்ப ராசியினரே, இந்த மாதம் எல்லா காரியங்களும் சுமூகமாக நடந்து முடியும். மனத்துணிவு உண்டாகும். எதையும் வேகமாக செய்து முடிப்பீர்கள். செலவு அதிகரிக்கும். தடை தாமதம் விலகும். மற்றவர்கள் விஷயத்தில் கவனம் செலுத்துவதை தவிர்ப்பது நல்லது.

குடும்பத்தில் இருந்த மன வருத்தங்கள் மாறி சுமூகமான நிலை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். திருமண முயற்சி கைகூடும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.

தொழில் வியாபாரம் தொடர்பாக பயணங் கள் சென்று வரவேண்டி இருக்கும். வியாபாரம் தொடர்பான செலவு கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமுடன் பணியாற்றுவது நல்லதுபுதிய வேலைக்கு செய்யும் முயற்சிகள் பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். கொடுத்த வேலைகளை நேரத்தில் செய்வது உகந்தது.

அரசியல் துறையினர் கட்சிக்காக இவ்வளவு நாட்கள்  கஷ்டப்பட்டு வந்தோம் என்று எதை நினைத்து நீங்கள் வருத்தப்பட்டீர்களோ அதற்கான தீர்வு இப்போது  கிடைக்கும் இருப்பினும்  சக தொண்டர்களிடம் சற்று கவனமாக இருப்பது அவசியம்.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் எந்த தடங்கலும் தாமதமும் இருக்காது. சக கலைஞர்கள் தங்கள் சொந்த பிரச்சனையில் தலையிடுவது கோபத்தை ஏற்படுத்தும். பணவரவில்  தாமதம் இருந்தாலும் கண்டிப்பாக கிடைத்து விடும்.

பெண்களுக்கு அடுத்தவருக்கு உதவி செய்யும் போது கவனம் தேவை. வீண் மன சங்கடம் ஏற்படலாம். பணவரத்து திருப்தி தரும்

மாணவர்களுக்கு  கல்வியில் திருப்தியான நிலை காணப்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

அவிட்டம் 3, 4ம் பாதங்கள்:

இந்த மாதம் புதிய மாற்றம் உருவாகும். அரசாங்க அனுகூலம் ஏற்படும். வாகனங்களைப் பிரயோகப்படுத்தும் போது மிகவும் கவனம் தேவை. செய்யும் உத்தியோகத்தில் இடமாற்றமோ அல்லது பணி நிரந்தரமோ ஏற்படலாம். அலைச்சல் ஏற்படலாம். அடிக்கடி கனவுகள் வரக்கூடும். எதிர்பார்த்த நல்ல செயல்கள் நடக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். கடன் பிரச்சனைகள் தொல்லை தராமல் இருக்கும். 

சதயம்:

இந்த மாதம் பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மதிப்பு மரியாதை சிறப்படையும். செல்வாக்கு ஓங்கும். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். தம்பதிகளிடையே அன்பு மேலோங்கும். பிரிந்த குடும்பம் ஒன்றுசேரும். எதிர்பார்த்த பணவசதி கிடைக்கும்.  உங்களது செயல்களுக்கு இருந்த எதிர்ப்புகள் நீங்கும். வழக்கு விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும்.

பூரட்டாதி 1, 2, 3 ம் பாதங்கள்:

இந்த மாதம் பொதுவாக நற்பலன்கள் கூடுதலாக கிடைக்கும். எதிலும் சிறிதளவு ஆதாயம் ஏற்படும். முன்விரோதம் காரணமாக சில சங்கடங்கள் உருவாகலாம், என்றாலும் அவற்றை சமாளிக்கும் வழிகள் உங்களுக்கு புலப்படும். இயந்திரங்களைப் பிரயோகிக்கும் பணியாளர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். எதிர்பார்த்த பணவரத்து இருந்தாலும் வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும். போட்டிகள் தொல்லை தராமல் இருக்கும். 

பரிகாரம்: சிவன் கோவிலுக்குச் சென்று வருவது மனதில் தெளிவை உண்டாக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி

சந்திராஷ்டம தினங்கள்: 18, 19

அதிர்ஷ்ட தினங்கள்: 11, 12, 13

*******************************************************************************************

மீனம்:

கிரக நிலை:

தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில்  செவ்வாய்  – சுக ஸ்தானத்தில்  ராஹூ – பஞ்சம ஸ்தானத்தில் சுக்ரன்  – ரண ருண ரோக ஸ்தானத்தில்  சூர்யன் – களத்திர  ஸ்தானத்தில் புதன் – தொழில்  ஸ்தானத்தில் கேது, குரு (வ), சனி (வ) – விரைய ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றங்கள்:

01-09-2020 அன்று  பகல் 2.16 மணிக்கு ராகு பகவான் தைரிய ஸ்தானத்திற்கும், கேது பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கும், மாறுகிறார். 

17-09-2020 அன்று  காலை 5.41 மணிக்கு சூர்ய பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.    

21-09-2020 அன்று  பகல் 2.58 மணிக்கு புதன் பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.    

28-09-2020 அன்று  காலை 6.27 மணிக்கு சுக்கிர பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.    

பலன்:

எச்சரிக்கையுடன் எதிலும் ஈடுபடும் மீன ராசியினரே, நீங்கள் அவசரமாக எதையும் செய்யும் தயங்காத குணமும் உடையர்கள். இந்த மாதம்   உடல் சோர்வு உண்டாகலாம்வீண் கவலை, வீண் வாக்குவாதங்கள் ஆகியவை ஏற்படும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.

குடும்பத்தில் இருந்து பிரிந்து சென்ற நபர் மீண்டும் வந்து போவார்கள். அதனால் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கை துணைக்காக செலவு செய்ய நேரிடும். கோபத்தை குறைத்து இனிமை யாக பேசுவதன் மூலம் குடும்பத்தில் அமைதி உண்டாகும். வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கலாம்.

தொழில் வியாபாரம் தொடர்பான காரி யங்களில் இழுபறியான நிலை காணப் படும். வீண் அலைச்சல் எதிர்பாராத செலவும் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார் கள். நிலுவையில் உள்ள தொகை வந்து சேரும். சிலருக்கு வேலை மாற்றம் உண்டாகும்.

கலைத்துறையினர் சூட்டிங் ஸ்பாட்டில் நடிக்கும் போது சக கலைஞர்களுடன் மோதல் போக்கு ஏற்பட உள்ளது. அத்தருணத்தில் கோபத்தை கட்டுப் படுத்தி கொள்ளுங்கள் மற்றபடி  வாய்ப்புகள் கிடைப்பதில் பிரச்சினைகள் இருக்காது.

அரசியல் துறையினருக்கு கட்சியில் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்படக்கூடும் மேலிடத்தின் ஆதரவு தங்களுக்கு இருப்பதால் பாதிப்பு எதுவும் ஏற்படாது. தொண்டர்களை அனுசரித்து நடந்து  கொள்ளுங்கள்.

பெண்களுக்கு அடுத்தவர் பேசுவதை காதில் வாங்காமல் தவிர்ப்பது நல்லது. நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த பிரச்சனைகள் குறையும். மனதில் எதிர்காலம் பற்றிய சிந்தனை உண்டாகும்.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண்பதில் ஆர்வம் உண்டாகும். மனதில் உற்சாகம் ஏற்படும்.

பூரட்டாதி 4-ம் பாதம்:

இந்த மாதம் தொழிலில் சிக்கல்கள் உருவாகாது என்றாலும் சிற்சில வாக்குவாதங்கள் இருக்கும். எதிலும் அளவோடு ஈடுபட்டு வந்தால் தொல்லைகள் இராது. அடுத்தவர்களுடைய விவகாரங்களில் வீணாக தலையிட வேண்டாம். பகைவர்கள் பணிந்து போகவும் வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிசுமை குறைந்து காணப்படுவார்கள். வேலை திறமைக்கு பாராட்டு கிடைக்கும்.

உத்திரட்டாதி:

இந்த மாதம் விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர், நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும்.யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். இதுவரை இருந்து வந்த நோய் நீங்கும். அவர்களது நலனில் அக்கறை காட்டுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம்.

ரேவதி:

இந்த மாதம் பொதுவாக அன்றாடப் பணிகளை கவனித்துக் கொண்டு மிகவும் நிதானமாக இருக்க வேண்டும். பெரியோர் சொல்படி நடந்து கொண்டால் தொல்லைகளைத் தவிர்க்கலாம். பலவிதமான சூழ்நிலைகளில் உங்களுடைய சாதுர்யத்தால் சமாளிப்பீர்கள். பிள்ளைகளிடம் கவனமாக எதையும் எடுத்து சொல்வது நல்லது. பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனை தீரும். பெண்களது காரியங்களுக்கு இருந்த எதிர்ப்புகள் விலகும். பணவரத்து திருப்தி தரும். மனகுழப்பம் நீங்கும். 

பரிகாரம்: சித்தர் கோவில்களுக்குச் சென்று வர மனக்குறைகள் அகலும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்

சந்திராஷ்டம தினங்கள்: 20, 21

அதிர்ஷ்ட தினங்கள்: 14, 15

*******************************************************************************************

Continue Reading




தமிழ்நாடு24 mins ago

நிவர் புயல் எங்கு, எப்போது கரையை கடக்கும்.. வெதர்மேன் சொல்வது என்ன?

தமிழ்நாடு2 hours ago

நிரம்பி வரும் செம்பரம்பாக்கம் ஏரி.. இன்று இரவு தண்ணீர் திறக்க வாய்ப்பு!

சினிமா செய்திகள்2 hours ago

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் அடுத்த படம் என்ன தெரியுமா?

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்10 hours ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (25/11/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்10 hours ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (25/11/2020)

தினபலன்10 hours ago

இன்றைய தினபலன் | நல்ல நேரம் (25/11/2020)

தமிழ்நாடு17 hours ago

புயல் எச்சரிக்கை கூண்டு என்றால் என்ன? 11 எண் வரையிலான கூண்டுகளுக்குமான விளக்கம் என்ன?

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil
தினபலன்1 day ago

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (24/11/2020)

தினபலன்1 day ago

இன்றைய தினபலன் | நல்ல நேரம் (24/11/2020)

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today
தமிழ் பஞ்சாங்கம்1 day ago

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (24/11/2020)

வேலை வாய்ப்பு1 year ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா1 year ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா1 year ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு1 year ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா1 year ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

சினிமா செய்திகள்2 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு7 months ago

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

வீடியோ1 week ago

சசி குமாரின் ‘எம்.ஜி.ஆர்.மகன்’ ட்ரெய்லர்!

வீடியோ2 weeks ago

வாத்தி யாரு? விஜய்யின் ‘மாஸ்டர்’ டீசர்!

வீடியோ2 weeks ago

சன் டிவியில் தீபாவளிக்கு நேரடியாக ரிலீஸ் ஆகும் ‘நாங்க ரொம்ப பிஸி’ டிரெய்லர்!

வீடியோ3 weeks ago

மீண்டும் ‘விக்ரம்’.. #கமல்ஹாசன்232 பட தலைப்பை அறிவித்த படக்குழு!

வீடியோ4 weeks ago

ஜீவா, அருள்நிதி சேர்ந்து கலக்கும்‘களத்தில் சந்திப்போம்’ பட டீசர்!

வீடியோ4 weeks ago

சிம்புவின் ‘ஈஸ்வரன்’ ஸ்லிம்மாக மிரட்டும் போஸ்டர்!

வீடியோ4 weeks ago

ஏர் ஓட்டுபவனும் ஏரோபிளைனில் போவான்.. சூரரைப் போற்று திரைப்பட டிரெய்லர்!

கிரிக்கெட்3 months ago

பந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சினிமா செய்திகள்3 months ago

தேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ!

வீடியோ செய்திகள்3 months ago

காதலை வித்தியாசமாகத் தெரிவிக்க தீ மூட்டிக்கொண்ட காதலன்! (வீடியோ உள்ளே)

Trending

%d bloggers like this: