Connect with us

தினபலன்

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்! (26/02/2020)

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன்

26-Feb-20

புதன்கிழமை

மேஷம்:
இன்று வீண் செலவுகள் கவுரவ குறைச்சல் ஏற்படலாம். மிகவும் கவனம் தேவை. தாய் தந்தையின் உடல் நிலையிலும் கவனம் செலுத்துவது நல்லது. தொழில் வியாபாரத்தில் மெத்தனப் போக்கு காணப்பட்டாலும் தேவையான பணவரத்தும் இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9


ரிஷபம்:
இன்று புதிய முயற்சிகளில் தாமதமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சல் காரியங்களில் இழுபறி என்ற நிலையை காண்பீர்கள். பேச்சை குறைத்து செயலில்  ஈடுபடுவது நன்மையை தரும். குடும்பத்தில் சுமூகமான நிலை காணப்படும். ஆனாலும் மனதில் குடும்பம் தொடர்பான கவலை, பிள்ளைகள் பற்றிய கவலை இருந்து வரும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

மிதுனம்:
இன்று தொல்லைகள் குறையும். வீண் செலவுகள் உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. இனிமையான பேச்சின் மூலம் சிக்கலான காரியங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். உங்கள் திறமையை கண்டு அடுத்தவர்கள் வியப்பார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5


கடகம்:
இன்று திடீர் கோபம் வரும். அதை கட்டுப்படுத்துவது நல்லது. அலைச்சலை தவிர்ப்பதன் மூலம் களைப்பு ஏற்படாமல் தடுத்து கொள்ள முடியும். வேளை தவறி உணவு உண்ணாமல் பார்த்துக் கொள்வது நல்லது. பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9


சிம்மம்:
இன்று தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதுரியமாக செயல்பட்டு முன்னேற்றம் காண்பார்கள். ஆனால் வேலை செய்பவர்களிடம் கோபப்படாமல் தட்டி கொடுத்து வேலை வாங்குவது நன்மையை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவார்கள். ஆனால் கடுமையான பணியின் காரணமாக சோர்வு உண்டாகலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 4, 6


கன்னி:
இன்று குடும்ப விஷயங்களில் ஆர்வம் காண்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் கவனம் செல்லும். பிள்ளைகள் முன்னேற்றத்திற்காக பாடுபடுவீர்கள். திடீர் என்று கோபம் உண்டாவதை தவிர்ப்பது நல்லது. திறமையை கண்டு மற்றவர்கள் பாராட்டுவார்கள். எதிர்பார்த்த பணவரத்து இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5


துலாம்:
இன்று கோபத்தை குறைத்து நிதானத்தை கடைபிடிப்பது முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்கலாம். ஆடை, அலங்கார பொருட்கள் வாங்கும் எண்ணம் தோன்றும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் சூழ்நிலை ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6


விருச்சிகம்:
இன்று பணவரத்து கூடும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். நீண்ட தூர தகவல் கள் நல்ல தகவல்களாக வரும். முயற்சி களில் சாதகமான பலன் கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்துசேரும். திருப்திகரமான லாபம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6


தனுசு:
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கப்பெறுவார்கள். அத்துடன் பணம் வரத்தும் திருப்திகரமாக இருக்கும். கடினமான பணிகளை கூட எளிதாக முடிக்கும் ஆற்றல் வரும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9


மகரம்:
இன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன்மனைவிக்கி டையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். குழந்தைகள் முன்னேற்றத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். அவர்களால் பெருமை சேரும். புதிய நண்பர்கள் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். தந்தையின் உடல் நிலையில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9


கும்பம்:
இன்று நீண்ட தூரத்தில் இருந்து வரும் தகவல்கள் மன திருப்தியை தருவதாக இருக்கும். முயற்சிகளில் சாதகமான பலன் பெறுவீர்கள். பணவரத்து கூடும். செல்வம் சேரும். செயல்திறன் கூடும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9


மீனம்:
இன்று வாக்கு வன்மையால் எதையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். எதிர்ப்புகள் விலகும். உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் சாதகமாக நடந்து முடியும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 1, 5

தினபலன்

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (06/06/2020)

Published

on

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன்

06-06-2020 

சனிக்கிழமை

மேஷம்:

இன்று எதிர்பார்த்தபடி பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன்  வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகள் உங்களது  கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம். பிள்ளைகள் பற்றிய கவலைகள் நீங்கும். உறவினர்  மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

ரிஷபம்:

இன்று அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். பெண்கள் தொழில் மேன்மை பெறுவார்கள். நிறைவான பொருளாதாரம் பெறுவார்கள். திருமண வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் பெண்களுக்கு சரியான வரன் அமையும். பிள்ளைகள் முன்னேற்றத்திற்காக பாடுபடுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 9, 3

மிதுனம்:

இன்று போட்டிகள் குறையும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள். காரிய தடையால் மனகுழப்பம், டென்ஷன் உண்டாகலாம். பணவரத்து இருக்கும். மாணவர்கள் யாரிடமும் வாக்குவாதம் செய்யாமல் அனுசரித்து செல்வது நல்லது. மிகவும் கவனமாக பாடங் களை படிப்பது வெற்றிக்கு உதவும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்:  4, 6

கடகம்:

இன்று தடை தாமதம், வீண் அலைச்சல் இருக்கும். கவனமாக செயல்படுவது நல்லது. எல்லோரும் உங்களிடம் அன்புடன் நடந்து கொள்வீர்கள். திடபுத்தியும், பலவழிகளில் உழைத்து சம்பாதிக்கும் திறமையும் மேலோங்கும். மாணவர்களுக்கு சாமர்த்தியமான செயல்களால் மற்றவர் மனதில் இடம் பிடிப்பீர்கள்பாடங்களில் கவனம் செலுத்துவது  அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 5, 6

சிம்மம்:

இன்று பணவரத்து எதிர்பார்த்ததை விட கூடுதலாக வரும். பேச்சின் இனிமை சாதூர்யத்தால் எடுத்த காரியத்தை திறம்பட செய்து முடிப்பீர்கள். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. அக்கம்பக்கத்தினரிடம் சில்லறை சண்டைகள் உண்டாகலாம். அரசாங்கம் தொடர்பான விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும். கடினமான வேலைகள் கூட சுலபமாக முடியும்.   

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 3, 7

கன்னி:

இன்று பணவரத்து அதிகரிக்கும். தெளிவான முடிவு எடுப்பதன் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். எதையும் சமாளிக்கும் மனநிலை ஏற்படும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சிறு தடங்கல்கள் உண்டாகலாம். பார்ட்னர் மூலம் நன்மை உண்டாகும். நிதி உதவி எதிர்பார்த்தபடி  கிடைக்கும். 

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை

அதிர்ஷ்ட எண்: 1, 7

துலாம்:

இன்று பலவகைகளிலும் நன்மை உண்டாகும். இழுபறியாக இருந்த சில வேலைகள் சாதகமாக நடந்து முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைத்து அலுவலக பணிகளை முடிக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வதன் மூலம் நல்லபலன் கிடைக்கும். 

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 4, 5

விருச்சிகம்:

இன்று பிள்ளைகள் உங்களது கருத்துக்களை கேட்டு அதன்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியை தரும் சாமர்த்தியமான பேச்சின் மூலமும் சூழ்நிலையை புரிந்து கொண்டு நடப்பதன் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் திறமை அதிகரிக்கும். விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும். ஆசிரியர் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்: 5

தனுசு:

இன்று நல்லது கெட்டதை ஆராய்ந்து செய்வது நல்லது. பயன் தராத முயற்சிகளை தவிர்ப்பது நன்மை தரும். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. காரிய தடை தாமதம் அலைச்சல் இருக்கும். மாணவர்கள் கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றமடைய கூடுதலாக நேரம் எடுத்துக்கொண்டு கவனத்தை சிதற விடாமல் படிப்பது அவசியம். 

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 2, 3

மகரம்:

இன்று தேவையான நிதியுதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. தேவையான சரக்குகளை வாங்குவீர்கள் காரிய தடைகள் விலகி அனுகூலமான பலன் உண்டாகும். கல்வியில் தேர்ச்சி கிடைக்கும். எதிர்ப்புகள் நீங்கும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்ததை விட அதிகரிப்பது மனமகிழ்ச்சியை தரும். 

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

கும்பம்:

இன்று வீண் செலவுகளை தவிர்ப்பது நன்மை தரும். எந்த ஒரு வேலையையும் செய்யும் முன் அதில் உள்ள நல்லது எதிரிகளால் இருந்து வந்த பிரச்சனை தீரும். நண்பர்கள் மூலம் தேவையான உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பயணங்கள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். இனிமையான பேச்சின்மூலம் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள். 

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

மீனம்:

இன்று தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்வது பற்றிய ஆலோசனையில் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக பணி தொடர்பான அலைச்சல் இருக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். குடும்பத்தில் உங்களது பேச்சுக்கு எதிர்பேச்சு பேசியவர்கள் அடங்கி விடுவார்கள். 

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

Continue Reading

தினபலன்

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (05/06/2020)

Published

on

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன்

 

05-06-2020 

வெள்ளிக்கிழமை

மேஷம்:

இன்று பணவரத்து இருக்கும். இடமாற்றம்,வெளியூர் பயணங்கள், அலைச்சல் ஆகியவை இருக்கும். தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். அரசு தொடர்பான  காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். அலுவலகத்தில் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வது நன்மையைத் தரும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

ரிஷபம்:

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கட்டளை இடுகின்ற பதவி கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்கிறவர்களுக்கு வேலை கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். மாணவர்களுக்கு கல்வியில்  நினைத்ததை விட கூடுதல் பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். மனம் தளராது செயல்பட்டால் வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

மிதுனம்:

இன்று எதிலும் கவனமாக இருப்பது நல்லது. யாரிடமும் எதிர்த்து பேசி விரோதத்தை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நன்மை தரும். தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சலும், பண விரயமும் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரிவு நீங்கி ஒன்று சேர்வார்கள். பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய எண்ணம் மேலோங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

கடகம்:

இன்று மனதில் உறுதி பிறக்கும்.. எதிர்பாலினத்தாரால் நன்மை உண்டாகும் எந்த செயலையும் தைரியமாக செய்து முடிப்பீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகும். எதிர்பாராத திடீர் செலவுகள் வீண் அலைச்சல் உண்டாகலாம். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கஷ்டமான பாடங்களையும் மனம் துவளாமல் படிப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

சிம்மம்:

இன்று எடுத்த முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிசுமை குறைந்து காணப்படும். குடும்ப பிரச்சனை தீரும். காரிய தடை விலகும். மனதில் வியாபாரம் பற்றிய கவலை ஏற்படும். சோர்வில்லாமல் எப்போதும் உற்சாகமாக காணப்படுவீர்கள். உல்லாச பயணங்கள் செல்ல நேரலாம். நற்பெயரும்  புகழும் உண்டாகும். 

அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9 

கன்னி:

இன்று ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு இருக்கும்.  வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்களை சந்திக்க நேரலாம். எப்படிப்பட்ட பிரச்சனை வந்தாலும் சமாளித்துவிடும் திறமை இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்து அவர்களது நன்மதிப்பை பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

துலாம்:

இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வியாபார வளர்ச்சிக்காக துணிச்சலுடன் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு  முன்னேற வாய்ப்புகள் வந்து சேரும். வாழ்க்கை துணையின் ஆதரவுடன் எதிலும் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். நிலுவையில் இருந்த பணம் கிடைக்கும். 

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

விருச்சிகம்:

இன்று சக ஊழியர்கள், மேல் அதிகாரிகளின் ஆதரவுடன் பணிகளை திறமையாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே  நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்கும். பெண்களுக்கு இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும். செயல் திறமை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

தனுசு:

இன்று மனவருத்தத்துடன் சென்ற உறவினர்கள் வருத்தம் நீங்கி மீண்டும் வந்து சேருவார்கள். பயணங்கள் செல்ல நேரிடும். எந்த பிரச்சனை வந்தாலும் அதை சமாளிக்கும் திறமை உண்டாகும். அடுத்தவர்களின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். கணவன்மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும்

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 4, 6 

மகரம்:

இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். புதிய பதவிகள் கிடைக்கும்எதிலும் கவனமாக இருப்பது நல்லது. காரிய தடை தாமதம் நீங்கும். குடும்பத்தில் இருக்கும் குழப்பம் நீங்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். விளையாட்டு போட்டிகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

கும்பம்:

இன்று எந்த ஒரு காரியத்திலும் லாபநஷ்டம் பார்ப்பீர்கள். விருப்பத்திற்கு மாறாக காரியங்கள் நடக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தெளிவாக சிந்தித்து எதனையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.  மனகுழப்பம் உண்டாகலாம். பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. அடுத்தவருடன் சில்லறை சண்டைகள் ஏற்படலாம். 

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

மீனம்:

இன்று வயிறு தொடர்பான  நோய் ஏற்படலாம். பணவரத்து இருக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், உற்சாகமும் காணப்படும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த  பிரச்சனைகள் தீரும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

Continue Reading

தினபலன்

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (04/06/2020)

Published

on

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன்

04-06-2020 

வியாழக்கிழமை

மேஷம்:

இன்று காரியங்களில் ஏற்பட்ட தடை நீங்கி திருப்தியாக நடந்து முடியும். சாதூரியமான பேச்சின் மூலம் பிரச்சனைகள் தீரும். பணவரத்து திருப்தி தரும். குடும்ப நிம்மதி குறையக்கூடும். கணவன், மனைவிக்கிடையே மனம் வருந்தும்படியான நிலை ஏற்படும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் இருந்த போட்டிகள் குறையும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

ரிஷபம்:

இன்று எல்லா நன்மைகளும் உண்டாகும். கவலைகள் நீங்கும். மனோ தைரியம் கூடும். தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் கைகொடுக்கும். பணதேவை அதிகரிக்கும். வீண்செலவு மனஅமைதி பாதித்தல் ஆகியவை இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த வேலையை செய்யும் முன்பும் அதுபற்றி அதிகம் யோசிப்பார்கள். சிலருக்கு புதிய வேலையும் கிடைக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

மிதுனம்:

இன்று விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாய்க்கு ருசியாக உணவு உண்பீர்கள். காரிய தாமதம், உடல் சோர்வு, வீண்பகை போன்றவை ஏற்படலாம்  உங்களை கண்டு அடுத்தவர் பொறாமை படக்கூடும். குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியை தரும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

கடகம்:

இன்று தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களுக்காக அலைய வேண்டி இருக்கும்.  வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து பேசுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை கிடைக்க பெறுவார்கள். பெண்களுக்கு முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்களை செய்து முடிப்பதில் திறமை வெளிப்படும் பணவரத்து கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

சிம்மம்:

இன்று தொழிலாளிகள் தொழிலில் ஏற்பட்ட நிலுவை கடன்கள் அடைக்க வாய்ப்புகள் ஏற்படும். தொழிலுக்கு புதிய சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்களால் டென்ஷன் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே  கோபமான பேச்சை விடுத்து அமைதியாக எதையும் எடுத்து சொல்வது நல்லது. பிள்ளைகளின் நலனுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 1, 5

கன்னி:

இன்று மன அமைதி பாதிக்கும் படியான சூழ்நிலை இருக்கும். திடீர் செலவு உண்டாகும். மற்றவர்கள் செய்கைகளால் மனவருத்தம் உண்டாகலாம். நீண்டநாள் இழுபறியாக இருந்து வந்த பிரச்சனை முடிவுக்கு வரும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். மாணவர்கள்  பாடங்களை மிகவும் கவனமாக படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற உதவும். சக மாணவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 5, 6

துலாம்:

இன்று இடையூறுகள் விலகும். தர்மகுணமும், இரக்க சிந்தனையும் மேலோங்கும். எல்லாவற்றிலும் லாபம் கிடைக்கும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்வதன் மூலம் நன்மதிப்பு பெறுவீர்கள். வியாபாரம் எதிர்பார்த்த அளவு வேகமாக நடக்காவிட்டாலும் லாபம் குறையாமல் இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

விருச்சிகம்:

இன்று முயற்சிகள் வெற்றி பெறும். எதையும் ஆராய்ந்து முடிவுகளை எடுப்பது நல்லது. வேகத்தை குறைத்து விவேகமுடன் செயல்படுவது நன்மை தரும். உங்களுடன் கருத்து வேற்றுமை ஏற்பட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் உங்களை நாடி வருவார்கள். தொழில் வியாபாரம்  தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த லாபம் வரும்.  

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 2, 9

தனுசு:

இன்று எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் கவனத்துடன் வைப்பது நல்லது. பணவரத்து அதிகமாகும். பெரியோர்களிடம் பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது நல்லது. புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை சிரமமின்றி செய்து முடிப்பார்கள். பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். 

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 9, 3

மகரம்:

இன்று எதிர்ப்புகள் விலகும். எல்லா நன்மைகளும் உண்டாகும். பயணம் மூலம் நன்மை கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே சுமுக உறவு இருக்கும். பிள்ளைகளுக்கு தேவையான ஆடை அணிகலன்கள் வாங்கி கொடுப்பீர்கள். கருத்து வேற்றுமையால் பிரிந்து சென்றவர்கள் மனம் மாறி மீண்டும் திரும்பி வருவார்கள். பணவரத்து திருப்தி தரும். காரிய அனுகூலம் உண்டாகும. 

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்:  4, 6

கும்பம்:

இன்று செய்யும் காரியங்களால் பெருமை ஏற்படும். காரிய தடைகள் அவ்வப்போது இருந்தாலும் பணவரத்து அதிகரிக்கும். புத்தி சாதூரியம் கூடும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவு கூடும். கல்வியில் முன்னேற வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு பாடங்களை படிப்பீர்கள். எதிர்ப்புகள் அகலும். ஆடை ஆபரணத்தையும் அலங்காரத்தையும் விரும்புவீர்கள். 

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 5, 6

மீனம்:

இன்று தேவையான உதவிகள் கிடைக்கும். பணம் சம்பாதிக்கும் திறமை அதிகமாகும்.    எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். புத்திசாதூரியத்தால் எதையும் செய்து முடிக்க முடியும். காரிய அனுகூலம் உண்டாகும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். துணிச்சலுடன் செயல்பட்டு எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். 

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 3, 7

Continue Reading




வேலை வாய்ப்பு7 months ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா11 months ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா9 months ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு10 months ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா11 months ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலை வாய்ப்பு9 months ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

வேலை வாய்ப்பு10 months ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு1 month ago

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

சினிமா செய்திகள்2 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வீடியோ செய்திகள்3 months ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு

வீடியோ செய்திகள்3 months ago

சாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு

வீடியோ செய்திகள்3 months ago

கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? – சிறப்பு தொகுப்பு

வீடியோ செய்திகள்3 months ago

கோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi

வீடியோ செய்திகள்3 months ago

லாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு

வீடியோ செய்திகள்3 months ago

நானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி

வீடியோ செய்திகள்3 months ago

ரஜினி குறித்து பேச ரூ 5 லட்சம் தரவேண்டும் – சரத்குமார்

வீடியோ செய்திகள்3 months ago

கொரானா வைரசை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக சீனா அறிவிப்பு

வீடியோ செய்திகள்3 months ago

எண்ணெய் கிணற்றில் விழுந்த நாய்க்குட்டி..தலைகீழாக தொங்கி நாய்க்குட்டியை காப்பாற்றிய சிறுவன்.

வீடியோ செய்திகள்3 months ago

கட்சி ஆரம்பிச்சிடலாமா? : வடிவேலு சரவெடி

Trending

%d bloggers like this: