Connect with us

தினபலன்

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (10/04/2020)

Published

on

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil

10 April 2020 

வெள்ளிக்கிழமை

மேஷம்:

இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சிறிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும்.தடைகளை  தாண்டி முன்னேறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த பணியை முதலில் முடிப்பது போன்ற குழப்பத்திற்கு ஆளாக வேண்டி இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

 

ரிஷபம்:

இன்று குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் பிரச்சனை குழப்பம் போன்றவை ஏற்பட்டு  பின்னர் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை தோன்றலாம். பிள்ளைகளிடம் பேசும்போது எச்சரிக்கை தேவை. உறவினர்களிடம் எந்த உறுதியையும் தராமல் இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

 

மிதுனம்:

இன்று அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் சங்கடமான சூழ்நிலை உண்டாகும். சமாளித்து முன்னேறும் திறமை இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற வேண்டும் என்று பாடுபடுவீர்கள். போட்டிகள் சாதகமான பலன் தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

 

கடகம்:

இன்று எதிர்பாலினத்தாரிடம் பழகும்போது மிகவும எச்சரிக்கை தேவை. எந்த காரியத்தை செய்தாலும் அதில் வேகத்தை காட்டாமல் மெத்தனமாகவே செய்ய தோன்றும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு தொழில் தொடர்பான வீண் அலைச்சல் உண்டாகும். பணவரத்து தாமதப்பட்டாலும் வந்து சேரும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

 

சிம்மம்:

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை தொடர்பான கவலை உண்டாகும். சக ஊழியர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. குடும்ப விஷயமாக அலைய வேண்டி இருக்கும்.  கணவன் மனைவிக்கிடையே இருக்கும் நெருக்கம் குறையும். தாய், தந்தையரின் உடல்நலத்தில் கவனம் தேவை. எதிலும் உற்சாகம் குறைந்து சோம்பல் ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7

 

கன்னி:

இன்று எடுத்த வேலையை சிறப்பாக செய்து முடித்து நற்பெயர் பெறுவீர்கள். அதே நேரத்தில் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மாணவர்கள் கவனத்தை சிதறவிடாமல் மிகவும் நன்கு கவனித்து பாடங்களை படிப்பது நல்லது. சக மாணவர்களுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

 

துலாம்:

இன்று வாக்கு வன்மையால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத திடீர் செலவு உண்டாகலாம். அடுத்தவர் கூறுவதை தவறாக புரிந்து கொண்டு பின்னர் வருத்தப்படும் சூழ்நிலை ஏற்படலாம். கடவுள் பக்தி  அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கல், சொத்து வாங்குவது ஆகியவற்றில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

 

விருச்சிகம்:

இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி நீங்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு  அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுக பிரச்சனைகள் தீரும். தொடங்கிய வேலையை திட்டமிட்டபடி செய்ய முடியாமல் இழுபறியாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

 

தனுசு:

இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் நீங்கள் கூறுவதை ஏற்காமல் தங்களது விருப்பப்படி எதையும் செய்வார்கள். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை இருக்கும். பிள்ளைகளுக்காக  செலவு செய்ய வேண்டி இருக்கும். பெண்கள் அடுத்தவர் கூறும் கருத்துக்களை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் அதில் உள்ள நல்லது கெட்டதை யோசிப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

 

மகரம்:

இன்று பண விவகாரங்களில் கவனம் தேவை. மாணவர்கள் எதையும் நன்கு யோசித்து பின்னர் செய்வது நன்மை தரும். நிதானமாக ஆழ்ந்த கவனத்துடன்  பாடங்களை படிப்பது நல்லது. பணகஷ்டம் நீங்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

 

கும்பம்:

இன்று மனதெளிவு உண்டாகும். எந்த காரியத்தையும்  செய்து முடிக்கும் திறமை அதிகரிக்கும். வயிற்று கோளாறு உண்டாகலாம். பணவரத்து கூடும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும்.  ஆன்மீக நாட்டம் தெய்வ பக்தி அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

 

மீனம்:

இன்று தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். ஏற்றுமதி சிறக்கும்.  எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். பழைய பாக்கி வசூலாகும். உத்தியோகத்தில்  இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். மேல் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

தினபலன்

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (04/12/2020)

Published

on

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil

04-12-2020

வெள்ளிக்கிழமை

மேஷம்

இன்று சிறுசிறு உஷ்ண சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரலாம். தூக்கத்தைக் கட்டுப்படுத்தாதீர்கள். எந்த பிரச்சனையாக  இருந்தாலும் உடனே மருத்துவரை அணுகவும். குடுமப வாழ்வில் பொறுமை தேவை.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6

ரிஷபம்:

இன்று எடுத்த காரியத்தில் உறுதியாக இருங்கள். வீண் பேச்சு கூடவே கூடாது. வியாபார ரீதியாக  போட்டிகள் வரலாம். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரிக்கும். வம்பு வழக்கு கூடவே கூடாது. மனக்குழப்பம் ஏற்பட்டால் அருகிலிருக்கும் கோவிலுக்கு சென்று வரவும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

மிதுனம்:

இன்று பெற்றோரது ஒத்துழைப்பு கிடைக்கும். வெளிவட்டடரத்தில் மதிப்பு, மரியாதை  உயரும். எந்த மனிதரையும் விமர்சனம் வெளியில் வைத்து விமர்சனம் செய்ய வேண்டாம். அரசு விஷயாதிகளில்  நிதானத்தையும், பொறுமையையும் கடைபிடிக்கவும். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். பிரியமானவர்களிடம்  அடிக்கடி உரையாடுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

கடகம்:

இன்று சொத்து சிக்கல்களில் பெரியோர்களின் ஆலோசனைகளைக் கேளுங்கள். தாய் மற்றும் தாய்  வழி உறவினர்களிடம் சிறுசிறு சலசலப்பு ஏற்பட்டு சரியாகும். அலைச்சகள் நிறைந்த பயணங்கள் நிரம்ப இருக்கும்.  பணத்தட்டுப்பாடு குறையும். தியானம் யோகா போன்றவற்றில் மனம் செலுத்துங்கள். முடிந்த வரை இரவு நேர  பயணங்களை தவிருங்கள். தடைபட்டிருந்த கட்டிட வேலைகள் முடிவடையும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6

சிம்மம்:

இன்று சுபகாரியங்களில் கலந்து  கொள்வீர்கள். வியாபாரம் மற்றும் உத்தியோகத்தில் சந்தர்பம் அறிந்து செயல்படுங்கள். கொடுக்கலில் வாங்கலில் கவனம்  தேவை. கடன் கொடுக்கவும் வாங்கவும் கூடவே கூடாது. பங்குதாரர்களை அனுசரித்து போகவும். நம்பிக்கைக்கு  உரியவர்களிடம் ஆலோசனைகள் பெற்று காரியங்களில் இறங்கவும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு  கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 5, 9

கன்னி:

இன்று சம்பளம் உயரும். இடமாறுதல் கிடைக்கும். அடுத்தவர்கள் விஷயத்தில் மூக்கை நுழைக்காதீர்கள்.  மணமாகாதவர்களுக்கு மணமாகும். சுபச்செலவுகள் இருக்கும். குழந்ததயில்லாதவர்களுக்கு பாக்கியம் கிட்டும். வீடு,  வாகனம், மனை ஆகியவற்றை வாங்கும் போது கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை

அதிர்ஷ்ட எண்: 5, 6

துலாம்:

இன்று மேற்படிப்பு விஷயமாக வெளிநாடு செல்வோர் மிகுந்த  கவனமாக செயல்படவும். முடிந்தவரை வெளியில் சாப்பிடுவதை தவிர்க்கவும். மாணவமணிகளுக்கு உயர்கல்வி  கிடைக்கும். நினைத்த மதிப்பெண்களை கொஞ்சம் முயற்சி செய்தால் அள்ளலாம். கலைஞர்கள் விருதுகள் பெறுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 2, 9

விருச்சிகம்:

இன்று குடும்பத்தில் நல்ல செய்திகள் தேடி வரும். குறிப்பாக குடும்ப விஷயம் சம்பந்தமாக தூரத்திலிருந்து செய்திகள் வரும். வெளிநாடுகளில் வசிக்கும் பிள்ளைகள் தாய்நாடு வரலாம். தேவையற்ற வீண் விவாதங்களில் மூக்கை நுழைத்து வம்பை வாங்க வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 4, 6

தனுசு:

இன்று குடும்பத்தில் சமீப காலமாக இழுத்து கொண்டிருந்த ஒரு பிரச்சனை முடிவுக்கு வந்து சேரும். வாகனத்தை ஓட்டும்போதோ பயணிக்கும்போதோ கவனம் தேவை. எந்த விஷயங்களிலும் மந்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம். உங்கள் மேல் அக்கறை காட்டுபவர்களிடத்தில் அன்பு செலுத்துங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 2, 9

மகரம்:

இன்று எதிர்பாராத வகையில் திடீரென்று செலவுகள் வரலாம். மனதைப் பக்குவப்படுத்தி செல்வுகளை திட்டமிட்டால் சிறிது சேமிக்கலாம். புதிய தொழில் வாய்ப்புக்கு இன்றைய நாளில் ஆலோசனைகள் மேற்கொள்வீர்கள். வீட்டிலுள்ள பெரியவர்கள் உடல் நலனில் அக்கறை காட்டவும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 9, 3

கும்பம்:

இன்று பிரச்சனைகளில் முடிந்தவரை நீங்களே விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. அதனால் உங்களுக்கு மேன்மை ஏற்படும். புதிய தொழில் முயற்சிகளில் தேர்ந்தெடுத்து இறங்குவதற்கு மிகச் சரியான நாளாகும். சிலருக்கு துஷ்ட சகவாசத்தால் துன்பங்கள் நேரிடலாம்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்:  4, 6

மீனம்:

இன்று இரவுப் பயணத்தை முடிந்த வரை தவிர்க்கப் பாருங்கள். வீட்டிலும், வெளியிலும் உங்கள் வாதத்திறமையால் எதுவும் சாதிக்கலாம். மிகவும் அமைதியாக இருந்து காரியத்தை முடித்துக் கொள்வீ்ர்கள். நீங்கள் முக்கியமான நபர் ஒருவரை இன்று சந்தித்து லாபம் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 5, 6

Continue Reading

தினபலன்

இன்றைய தினபலன் | நல்ல நேரம் (04/12/2020)

Published

on

மேஷம் – நலம்
ரிஷபம் – ஏமாற்றம்
மிதுனம் – பாராட்டு
கடகம் – நன்மை
சிம்மம் – வரவு

கன்னி – ஜெயம்
துலாம் – யோகம்

விருச்சி – முயற்சி
தனுசு – வெற்றி
மகரம் – ஆக்கம்

கும்பம் – அசதி

மீனம் – உதவி
நல்ல நேரம் காலை: 09.15 – 10.15

நல்ல நேரம் மாலை: 04.45 – 05.45

கொளரி நல்ல நேரம் காலை: 12.15 – 01.15
கொளரி நல்ல நேரம் மாலை: 06.30 07.30

ராகு காலம் : 10.30 – 12.00

எமகண்டம் காலை: 03.00 – 04.30

குளிகை காலை: 03.00 – 04.30

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

Continue Reading

தினபலன்

இன்றைய தினபலன் | நல்ல நேரம் (03/12/2020)

Published

on

மேஷம் – வெற்றி

ரிஷபம் – நிம்மதி
மிதுனம் – புகழ்

கடகம் – பயம்

சிம்மம் – அமைதி

கன்னி – சினம்
துலாம் – மகிழ்ச்சி

விருச்சி – கவனம்
தனுசு – ஆக்கம்
மகரம் – எதிர்ப்பு

கும்பம் – ஜெயம்

மீனம் – பக்தி

நல்ல நேரம் காலை: 10.45 – 11.45

நல்ல நேரம் மாலை: 12.15 – 01.15

கொளரி நல்ல நேரம் காலை: –
கொளரி நல்ல நேரம் மாலை: 06.30 – 7.30

ராகு காலம் : 01.30 – 03.00

எமகண்டம் காலை: 06.00 – 07.30

குளிகை காலை: 09.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: தைலம்

Continue Reading




வேலை வாய்ப்பு7 mins ago

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலை வாய்ப்பு27 mins ago

தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலை வாய்ப்பு56 mins ago

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலை வாய்ப்பு2 hours ago

நாடு முழுவதும் வேலைவாய்ப்பு!

வேலை வாய்ப்பு2 hours ago

டிகிரி படித்தவர்களுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு!

சினிமா செய்திகள்2 hours ago

மாஸ்டர் திரைப்பட ட்ரெயலர் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

வேலை வாய்ப்பு2 hours ago

ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

சினிமா செய்திகள்2 hours ago

சிம்புவின் ரசிகனாக நடிக்கும் பிரபல ஹீரோ!

வேலை வாய்ப்பு3 hours ago

கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் வேலைவாய்ப்பு!

சினிமா செய்திகள்3 hours ago

அரசியல் கட்சி தொடங்கும் முடிவிலிருந்து எஸ்.ஏ.சி பின்வாங்கியதற்கு இவர்தான் காரணம்!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா1 year ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா1 year ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு1 year ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா1 year ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா2 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

சினிமா செய்திகள்2 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

வேலை வாய்ப்பு1 year ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

தமிழ்நாடு7 months ago

பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்!

வைரல் செய்திகள்7 days ago

மனிதர்களைப் போல ‘டீ’ வாங்கி குடிக்கும் யானை.. வைரல் வீடியோ!

வீடியோ3 weeks ago

சசி குமாரின் ‘எம்.ஜி.ஆர்.மகன்’ ட்ரெய்லர்!

வீடியோ3 weeks ago

வாத்தி யாரு? விஜய்யின் ‘மாஸ்டர்’ டீசர்!

வீடியோ4 weeks ago

சன் டிவியில் தீபாவளிக்கு நேரடியாக ரிலீஸ் ஆகும் ‘நாங்க ரொம்ப பிஸி’ டிரெய்லர்!

வீடியோ4 weeks ago

மீண்டும் ‘விக்ரம்’.. #கமல்ஹாசன்232 பட தலைப்பை அறிவித்த படக்குழு!

வீடியோ1 month ago

ஜீவா, அருள்நிதி சேர்ந்து கலக்கும்‘களத்தில் சந்திப்போம்’ பட டீசர்!

வீடியோ1 month ago

சிம்புவின் ‘ஈஸ்வரன்’ ஸ்லிம்மாக மிரட்டும் போஸ்டர்!

வீடியோ1 month ago

ஏர் ஓட்டுபவனும் ஏரோபிளைனில் போவான்.. சூரரைப் போற்று திரைப்பட டிரெய்லர்!

கிரிக்கெட்3 months ago

பந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சினிமா செய்திகள்3 months ago

தேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ!

Trending

%d bloggers like this: